Monday, September 19, 2011

பூமியைத் தேடி... (பாகம் 4)






மாதவனிடம் இன்னும் ஒரு ஐடியா இருந்தது. ஆனால் அதை செயல்படுத்தும் அளவுக்கு தொழில்நுட்பம் இருக்காது என்று நினைத்தார். ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில் எல்லா வாய்ப்புகளையும் முயற்சி செய்துவிடுவது நல்லது என்று அதையும் க்ரெய்ட்டனிடம் சொல்லத் தொடங்கினார்.

”நாம் மல்டிப்பிள் அட்டாக் முறையை முயற்சி செய்து பார்க்கலாம் க்ரெய்ட்டன். அதாவது ஒரே நேரத்தில் மூன்று திசைகளில் இருந்து அக்கல்லை குறிப்பிட்ட இடங்களில் தாக்கலாம். அப்போது அது சுக்குநூறாய் உடைந்துவிடக்கூடும். ஆனால் தாக்குதல் டைமிங்கும், பொசிசனும் மிகத்தூல்லியமாக இருக்க வேண்டும். மேலும் சிமுலேசன் மூலமாக கல்லை எந்தெந்த இடங்களில் தாக்க வேண்டும் என்றும் கண்டறிய வேண்டும். அது மிகக் கடினமானது. ஆனால் இதற்கு அதிகபட்சமாக 35-40 குண்டுகள் வரை இருந்தாலே போதும்”

”இந்த ஐடியா நன்றாக இருக்கு மாதவன், எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு இதையாவது செயல்படுத்தி பார்க்கலாமே? நீங்கள் இதற்கான வேலையை உடனே ஆரம்பிங்க, உங்களுக்கு இது சம்பந்தமா வேறு உதவிகள் தேவையா?”

”எனக்கு அந்த கல்லின் அடர்த்தி, மற்றும் டிஸ்ட்ரிபியூசன் பத்திய விபரங்கள் உடனே வேணும்”

”ஓகே மாதவன், ஏற்கனவே இந்த வேலையை ஆரம்பிச்சுட்டாங்க, அதை துரிதப்படுத்த சொல்றேன். நீங்க நேரடியா அவங்ககிட்டயே விபரங்கள் வாங்கிக்குங்க. அப்புறம் இரவு ஜனாதிபதியுடனான மீட்டிங்ல பேசுறதுக்கு இதைப் பத்தி இன்னும் விபரங்கள் சேகரிச்சுக்குங்க”

எல்லாரும் மீட்டிங் அறையில் இருந்து அவரவர் இடங்களுக்கு திரும்பினார்கள். அதற்கிடையில் மற்ற நாடுகளிலும் போதுமான குண்டுகள் இல்லையென்ற தகவல் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வந்தது, இருந்தாலும், மாற்றுத் திட்டம் தயாராகிக் கொண்டிருந்ததால், அந்தச் செய்தியை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஜனாதிபதியுடன் இரவு மீட்டிங் மிக நீண்ட விவாதத்திற்குப் பின் முடிந்தது

அந்த விண்கல்லை மூன்று பக்கம் இருந்தும் தாக்க வேண்டும் என்று முடிவானது. மாதவன் சிமுலேசன் செய்து கொடுத்தவுடன் குண்டுகள் தாங்கிய ராக்கெட்டுகளை ஏவலாம் என்று திட்டமிடப்பட்டது. குண்டுகள் பொருத்தப்பட்ட ராக்கெட்டுகளை தயார் செய்து ஏவும் பொறுப்பை லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வகம் ஏற்றுக் கொண்டது. செவ்வாய் கிரகத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வரும் மார்ஸ் லேப்ஸ் சோதனைக் கூடத்திற்கு இதனை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டதுமாதவன் தனது சகாக்களுடன் சிமுலேசனில் மிகத்தீவிரமாக மூழ்கினார்

நாம் அப்படியே லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வகத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அங்கு இத்திட்டத்தின் ஆணிவேராகிய ராக்கெட் சிஸ்டங்களை துறையின் தலைவராக இருப்பவர் கணேஷ் என்ற இந்தியர். அவரே செவ்வாய் கிரகத்தில் சென்று இறங்கிய முதல் ராக்கெட்டின் வடிவமைப்பு டீமிற்கு தலைமைப் பொறியாளராக இருந்தவர். இப்போதும் அவர் செவ்வாயில் இருந்து இயங்கி வரும் மார்ஸ் லேபின் கோ-ஆர்டினேட்டராக இருந்து வருகிறார்

இந்த புதிய விண்கல் பிரச்சனை அவரை மிகவும் பாதித்து இருந்தது. எதையாவது செய்து பூமியை காப்பாற்றிவிடலாம் என்று தீவிர யோசனையில் இருந்தவரை விண்கல் மீது தாக்குதல் நடத்தும் அணியில் பங்கேற்க அழைத்தார்கள். மிகுந்த உத்வேகத்துடன் மீட்டிங்கிலும் கலந்து கொண்டவரை மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முடிவுகள் கலவரப்படுத்தின.

விண்கல் மீது நடப்பத்தப்பட இருக்கும் மும்முனைத்தாக்குதல் திட்டத்திற்கு மிகுந்த துல்லியமான ராக்கெட்டுகள் தேவை. ராக்கெட்டின் பாதையில் அனுமதிக்க கூடிய அளவு பிழை எவ்வளவு இருக்கலாம் என்று இன்னும் முடிவாகவில்லை, மாதவன் தலைமையில் சிமுலேசன் டீம் அதை இன்னும் சில நாட்களில் கணக்கிட்டுவிடுவார்கள். அது இப்போதைய ராக்கெட்டுகளின் திறனைவிட மிக அதிகமாக இருந்துவிடுமோ என கணேஷ் அஞ்சினார்.

மாதவனிடம் இருந்து சிமுலேசன் கணக்கீடுகள் லாஸ் அலமாஸ் வந்து சேர்ந்ததுஎதிர்பார்த்தது போலவே தாக்குதலுக்கு மிக அதிகமான துல்லியம் தேவையாக இருந்தது. இப்போது என்ன செய்வது....?

(தொடரும்...)

40 comments:

rajamelaiyur said...

நான்தான் first

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சுவாரஸ்யம்...
தொடரட்டும்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சீக்கீறம் எதையாவது செஞ்சி பூமியை காப்பாத்துங்கப்பா....

Mohamed Faaique said...

ஒரு சின்ன ஐடியா...

நம்ம விஜயகாந்த்`அயும் இந்த டீமுல சேர்த்துக்கலாமே.....

பதிவு அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>>>நாம் அப்படியே லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வகத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.


சீரியஸ் சயின்ஸ் ஃபிக்‌ஷனில் வாசகனை சகஜமாக்கும் அழகிய யுக்தி

குறையொன்றுமில்லை. said...

சீரியஸ் சயன்ஸ் பிக்‌ஷனில் நல்ல பரபரப்பு. அந்த பரபர்ப்பு நம்மிடம் உண்டாகிரது படிக்கும்போதே. அடுத்து என்ன, என்னானு எதிர்பார்க்க வைக்கரீங்க.

மர்மயோகி said...

நிஜமாகவே இது சீரியஸ் கதைதானா?
எனவே சீரியஸ் பின்னூட்டம்.
இன்னும் உலகை காப்பவன் அமெரிக்ககாரன்தான் என்ற அடிமை புத்தி நம்மிடம் இருந்து விலக வில்லை..
இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் அவர்களும் அமெரிக்கனிடம் வேலை செய்வதாகக் கூரிக்கொல்வதிலும் பெருமையடைகிறோம்..(இதுதான் நமது தமிழர்களின் மனநிலை)
ஏன் இந்த கதை இந்தியாவில் நடைபெறுவதாக காட்டினால் என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மர்மயோகி said...
நிஜமாகவே இது சீரியஸ் கதைதானா?
எனவே சீரியஸ் பின்னூட்டம்.
இன்னும் உலகை காப்பவன் அமெரிக்ககாரன்தான் என்ற அடிமை புத்தி நம்மிடம் இருந்து விலக வில்லை..
இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் அவர்களும் அமெரிக்கனிடம் வேலை செய்வதாகக் கூரிக்கொல்வதிலும் பெருமையடைகிறோம்..(இதுதான் நமது தமிழர்களின் மனநிலை)
ஏன் இந்த கதை இந்தியாவில் நடைபெறுவதாக காட்டினால் என்ன?
///////

நண்பரே இது கற்பனைக் கதையாக இருந்தாலும் யதார்த்தத்தில் நடப்பது போன்று சொல்ல முயற்சித்துள்ளேன். அவ்வளவுதான். இது சீரியஸ் கதையா என்று கேட்பதில் இருந்தே உங்கள் நோக்கம் புரிகிறது. வருந்துகிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////"என் ராஜபாட்டை"- ராஜா said...
நான்தான் first
/////

வாங்க ராஜா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////# கவிதை வீதி # சௌந்தர் said...
சுவாரஸ்யம்...
தொடரட்டும்....
/////

நன்றி சௌந்தர்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Mohamed Faaique said...
ஒரு சின்ன ஐடியா...

நம்ம விஜயகாந்த்`அயும் இந்த டீமுல சேர்த்துக்கலாமே.....

பதிவு அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்
///////

ஹஹ்ஹா அப்புறம் விஜயகாந்த் வசனமே பத்து பாகம் வந்துடும் பரவால்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
>>>நாம் அப்படியே லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வகத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.


சீரியஸ் சயின்ஸ் ஃபிக்‌ஷனில் வாசகனை சகஜமாக்கும் அழகிய யுக்தி
/////

வாங்க சிபி......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Lakshmi said...
சீரியஸ் சயன்ஸ் பிக்‌ஷனில் நல்ல பரபரப்பு. அந்த பரபர்ப்பு நம்மிடம் உண்டாகிரது படிக்கும்போதே. அடுத்து என்ன, என்னானு எதிர்பார்க்க வைக்கரீங்க.//////

நன்றிங்க, தொடர்ந்து படிங்க.....

வெளங்காதவன்™ said...

உள்ளேன் ஐயா!

மாதவன் மேலயும், கணேசு மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு...

அப்புடி அவிங்களால முடிலைனா எனக்கு ஒரு டிக்கெட் போடுங்க....

நான் வேணும்னா ஒரு எட்டு போயிப் பாக்குறேன்...

#கமான்.... ஸ்டில் ஐயாம் இன் சீட் கார்னர்....

வெளங்காதவன்™ said...

இன்னிக்கு டைமிங் மிஸ்ஸிங் யுவர் ஆனர்!

K said...

ம்.... கதையில் மற்றுமொரு இந்தியரா? அருமை! ராக்கெட்டுகள் செலுத்தும், பாதையினை துல்லியமாக கணித்துவிடுவார் என்றே எதிர்பார்க்கிறேன்!

பார்க்கலாம்!

K said...

நிஜமாகவே இது சீரியஸ் கதைதானா?
எனவே சீரியஸ் பின்னூட்டம்.
இன்னும் உலகை காப்பவன் அமெரிக்ககாரன்தான் என்ற அடிமை புத்தி நம்மிடம் இருந்து விலக வில்லை..
இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் அவர்களும் அமெரிக்கனிடம் வேலை செய்வதாகக் கூரிக்கொல்வதிலும் பெருமையடைகிறோம்..(இதுதான் நமது தமிழர்களின் மனநிலை)
ஏன் இந்த கதை இந்தியாவில் நடைபெறுவதாக காட்டினால் என்ன? ////////

இதில் என்ன அடிமைப் புத்தி இருக்கிறது? மேலும் இங்கு வந்து இந்திய தேசியத்தை வலியுறுத்த, நீங்கள் முயல்வது ஆச்சரியமாக இருக்கிறது! உங்கள் ப்ளாக்கில் நீங்கள் அப்படி எதுவும் எழுதுவதில்லையே!

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா போகுது வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

கதை அருமையா போவதால் கும்ம மனசில்லை ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

Mohamed Faaique said...
ஒரு சின்ன ஐடியா...

நம்ம விஜயகாந்த்`அயும் இந்த டீமுல சேர்த்துக்கலாமே.....//


அவ்வவ்வ்வ்வ், பன்னிகுட்டி தற்கொலைன்னு நியூஸ் வரணுமா...??

வைகை said...

பன்முனை தாக்குதல் என்பதை வெவேறு நாடுகளில் இருந்து செய்தால் இன்னும் சரியான ரிசல்ட் கிடைக்காதா? உதாரணமாக சீனா..இந்தியா?

வெளங்காதவன்™ said...

///பன்முனை தாக்குதல் என்பதை வெவேறு நாடுகளில் இருந்து செய்தால் இன்னும் சரியான ரிசல்ட் கிடைக்காதா? உதாரணமாக சீனா..இந்தியா?///

அண்ணே! இது விண்வெளியில இருந்து தாக்குறது....

Madhavan Srinivasagopalan said...

// நிஜமாகவே இது சீரியஸ் கதைதானா?
எனவே சீரியஸ் பின்னூட்டம்.
இன்னும் உலகை காப்பவன் அமெரிக்ககாரன்தான் என்ற அடிமை புத்தி நம்மிடம் இருந்து விலக வில்லை..
இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் அவர்களும் அமெரிக்கனிடம் வேலை செய்வதாகக் கூரிக்கொல்வதிலும் பெருமையடைகிறோம்..(இதுதான் நமது தமிழர்களின் மனநிலை)
ஏன் இந்த கதை இந்தியாவில் நடைபெறுவதாக காட்டினால் என்ன? //

இதுதான் நம்ம பிராப்ளம்..
உண்மை கசக்கும்.. அத நமக்கு ஏத்துக்கிற பக்குவம் இல்லை.

அம்பது வருஷத்துக்கு முன்னாடி அமெரிக்க என்ன ரிசெர்ச் செஞ்சதோ அத இன்னைக்கு கூட நாமா செய்ய ஆரம்பிக்கல..

அதலாம் விடுங்க.. அங்க விஞஞானத்துல இப்படி முன்னேறி இருக்குறதுக்கு..
திறமை உள்ள ஆளு எந்த நாடா / இனமா இருந்தாலும் அவங்கள சேத்துக்கறாங்க..
இங்க.. திறமைக்கு அந்தளவுக்கு மதிப்பு இருக்கா..
மறந்துடாதீங்க.. இங்க ஒட்டு தான் முக்கியம்.. 'இட ஒதுக்கீடு' படிப்புல, வேலையில கூட..

எஸ்.கே said...

கதை கொஞ்சம் ஸ்லோவா போற மாதிரி தெரிஞ்சாலும் உண்மையாலுமே இந்த மாதிரி ஒரு விண்வெளி விசயங்கள் செயல்படுத்தும் முன் எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டியிருக்கும்னு புரியுது!

RAMA RAVI (RAMVI) said...

என்னதான் அமெரிக்காவில் ஆராய்ச்சிகள் நடந்தாலும் அதனை செயல் படுத்துவது இந்தியர்கள் தான்.
நல்ல சுவரசியமான கதை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கதை அருமை. பாட்டு பைட்டு சூப்பர்

நிரூபன் said...

அடடா....தாக்குதல் எப்போது நடக்கப் போகின்றது,

ராக்கெட் வேகம் எப்படி இருக்கும் எனும் கேள்விகளை மனதினுள் தந்து இப் பாகத்தினை நிறைவேற்றியிருக்கிறீங்க.


அடுத்த பாகத்தில் மீட் பண்றேன்.

NaSo said...

அடுத்த பாகத்தை எதிர்நோக்கி!

செங்கோவி said...

ஆஹா..மும்முனைத் தாக்குதலா..சூப்பர்.

செங்கோவி said...

அண்ணே, அந்த டீமில் தயவுசெய்து ஒரு பெண்ணைச் சேர்க்கவும்..

செங்கோவி said...

பின்னூட்டத்திலயும் மும்முனைத் தாக்க்தலா...ரைட்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பின்னூட்டமளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...!

Anonymous said...

தொடருக...வாழ்த்துக்கள்...

மாணவன் said...

அடுத்த பாகத்தை எதிர்நோக்கி! :)

மர்மயோகி said...

அன்பர்கள்
திரு பன்னிக்குட்டி ராமசாமி
திரு ஐடியா மணி
திரு Madhavan srinivasagopalan

இது நிஜாவே சீரியஸ் கதைதான என்று கேட்டதை நீங்க தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்..
வழக்கம் போல் இதுவும் ஒரு நகைச்சுவை பதிவுதான் என்று நானும் தினமும் படித்து பார்க்கும்போது, இது அந்த வகை இல்லை என்பதால் அப்படி கேட்டிருந்தேன்.
இன்னும் இதில் நான் தேசியத்தை வலியுறுத்த வரவில்லை
ஹாலிவுட்டில் படம் எடுப்பவன் உலகில் எந்த நாட்டில் பிரச்சினை என்றாலும் அமெரிக்ககாரன்தான் தீர்த்து வைப்பதாக புனைவான்.
அதே மாதிரி ஏன் நாமும் இருக்கவேண்டும்
எப்போதும் ஏன் இந்தியன் அமெரிக்கனிடம் வேலை செய்வது போல கற்பனை செய்யவேண்டும்?
கதை என்பதே கற்பனைதான்,, அதில் என்ன எதார்த்தம் வேண்டிக்கிடக்கிறது..
இந்தியாவில் இது போன்ற விஞ்ஞானிகள் இல்லை என்று நண்பர் Madhavan srinivasagopalan என்று சொல்வது வருத்தமளிக்கிறது.
இதைப்பற்றித்தான் "ஏன் எதற்கு எப்படி ?" என்றதொரு கேள்விபதில் பகுதியில் எழுத்தாளர் சுஜாதாவிடம் கேட்கப்பட்ட கேள்வி "எல்லா விஞ்ஞானிகளும் அமெரிக்காவில்தான் இருகிறார்களா? இந்தியாவில் அப்படி யாரும் இல்லையா?" என்று..
அதற்க்கு சுஜாதாவின் பதில் " ஏன் இல்லை..ஆனால் அவர்களும் அமெரிக்காவில்தான் இருக்கிறார்கள்"


இருந்தாலும் கதை சுவராசியமாகவே உள்ளது...:)

K.s.s.Rajh said...

பாஸ்...நலல் சுவாரஸ்யமாக போகுது.....அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்...

M.R said...

தொடர் நன்றாக போகிறது நண்பரே

விஷயம் தெரிந்து வருகிறேன் .பகிர்வுக்கு நன்றி ,தொடர்கிறேன்

Unknown said...

பதிவு அருமை

இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

Unknown said...

பதிவு அருமை

இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

Madhavan Srinivasagopalan said...

இந்தியாவில் இது போன்ற விஞ்ஞானிகள் இல்லை என்று நண்பர் Madhavan srinivasagopalan என்று சொல்வது வருத்தமளிக்கிறது.
இதைப்பற்றித்தான் "ஏன் எதற்கு எப்படி ?" என்றதொரு கேள்விபதில் பகுதியில் எழுத்தாளர் சுஜாதாவிடம் // கேட்கப்பட்ட கேள்வி "எல்லா விஞ்ஞானிகளும் அமெரிக்காவில்தான் இருகிறார்களா? இந்தியாவில் அப்படி யாரும் இல்லையா?" என்று..
அதற்க்கு சுஜாதாவின் பதில் " ஏன் இல்லை..ஆனால் அவர்களும் அமெரிக்காவில்தான் இருக்கிறார்கள்" //

இதத்தான் நானும் சொல்கிறேன்.

இங்கு திறமை உள்ளவர்களுக்கு அளிக்கப் பட வேண்டிய அங்கீகாரம் அளிக்கப் படுவதில்லை.
எங்கு பார்த்தாலும் இட ஒதுக்கீடு..... எப்படி விளங்கும் ?
-- இது எனது ஆதங்கமும் கூட.