Showing posts with label வெறும்பய - கும்மி. Show all posts
Showing posts with label வெறும்பய - கும்மி. Show all posts

Sunday, December 26, 2010

ஆழிப்பேரலை..


அழகாய் அமைதியாய் ஆவலுடன்
ரசித்திருந்த அலைகடல் அன்று
ஆழிப்பேரலையால் அல்லோலப்பட்டிருந்தது..

மணலுடனும் சிப்பிகளுடனும்
உறவாடிக்கொண்டிருந்த சின்னஞ்சிறுசுகள்
சிதிலமடைந்து சிதறிக்கிடக்க கண்டேன்

அடக்கம் செய்ய ஆளில்லாமல்
அனாதை பிணங்களாய் ஆயிரமாயிரம்
அண்ணன் தம்பிகள்.

சிணுங்கலுடன் தழுவிச் சென்றிருக்கிறாய்
எங்கள் கால்களை இன்று
பேரிரைச்சலுடன் வந்து
அள்ளி சென்றிருக்கிறாய்
ஆயிரம் அன்னை தந்தைகளை

இனி இழப்பதற்கும் உறவுகளில்லை
இறப்பதற்கும் உயிர்களில்லை- நீ
விளையாட்டாய் விளையாடிச்செல்ல
இனி ஏதும் பொம்மைகள் இல்லை!


இனி ஒரு உலகம் செய்தால்!
இதனையும் மனதில் கொண்டு
தவறில்லா தலைமுறை வேண்டும்!
யாரேனும் கடவுள் இருந்தால்- இந்த
வரம் மட்டும் எங்களுக்கு வேண்டும்!

**********


லட்சோப லட்சம் மனித உயிர்களை அனுமதி என்று எடுத்துச் சென்ற கடலதாய் அதை உரிமையில் செய்தாள் என்று விடுவதா? இல்லை இழந்து போன எம் மக்களின் உயிர் போன அவலம் நினைத்து அழுவதா?

வாழ்க்கையை கொடுத்தவளும் அவளே? வாழ்வை பறித்தவளும் அவளே?

இனி ஒரு கொடுமை இப்படி வேண்டாம் தாயே என்று கடலன்னையிடம் இறைஞ்சி.....உயிர் துறந்த அத்தனை உற்வுகளுக்கும்.......எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகிறோம்!

Saturday, December 11, 2010

கும்மிகளின் சங்கமம்....!



எண்ணமும் எழுத்துக்களும் வெவ்வேறாயினும்
கண்டதும் கேட்டதும் இல்லையென்றாலும்
உன்னை நானறியாமல் போனாலும்
என்னை நீ அறியாமல் போனாலும்
கும்மியால் நீயும் நானும்
ஓரினமே...