என்னடா கதையா என்று ஓடிவிட வேண்டாம்... இந்த கதையும் உங்கள் புத்திசாலி தனத்துக்கு நாங்கள் விடபோகும் சின்ன சவால்தான்! இந்தக்கதை ஹன்ட் ஃபார் ஹின்ட் போட்டிக்காக உருவாக்கப்பட்டது! ஆனால் தமிழ் தெரியாத நண்பர்களும் விளையாட வசதியாக விவாதத்தின் போது இதை எடுத்துவிட்டோம். அப்போது இந்த கதையில் நான்கு லாஜிக் தவறுகள் வைக்கப்பட்டு நான்கு விடைகளையும் கொடுத்தால் அடுத்த லெவலுக்கு போவதாக ப்ளான் செய்தோம்.. ஆனால் இப்போது தனியாக போடுவதால் இன்னும் இரண்டு லாஜிக் தவறுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் ஆறு தவறுகள் உள்ளன! அதை முடிந்தால் அல்லது முயன்று கண்டுபிடியுங்கள்!
மார்கழி மாதம் ஞாயிறு... அதிகாலை ஐந்து மணி... மெல்ல எனக்கு விழிப்பு தட்டியது! வெங்கடேச சுப்ரபாதம் காற்றில் தவழ்ந்து வந்து குளிர் காற்றோடு போட்டி போட்டு காதுக்குள் சென்றது! எங்க ஊர் சிவன் கோவிலில் இருந்துதான் வருகிறது.. இந்த மார்கழி வந்தாலே இப்படித்தான்.. ஐந்து மணிக்கு மேல் தூங்க முடியாது. இந்த அதிகாலையிலும் சமையலறையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது..அக்காவாகத்தான் இருக்கும்! அவளுக்கு மார்கழி என்றில்லை...வருடத்தில் எல்லா மாதமும் இப்படிதான் அதிகாலைலே எழுந்து விடுவாள்..ஏனென்றால் மாமா ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார் வேலைக்கு! அம்மாவும் அப்பாவும் போனதிலிருந்து அக்காதான் எனக்கு எல்லாமே.. எனக்காகத்தான் மாமாவையும் பையனையும் கூட்டி வந்து இந்த வீட்டிலே இருந்து விட்டாள்!
இப்பொழுது சுப்ரபாதத்திற்கு போட்டியாக அவளது புலம்பலும் நான் விரும்பாமலே என் காதுக்குள் சென்றது...கழுத வயசாகுது... ஒரு வேலைக்கு போறதில்லை.. திங்க வேண்டியது...பக்கத்துக்கு வீட்டு பரமேசோட ஊர் சுத்த வேண்டியது... ராத்திரி வரை எங்கயாவது வெட்டி ஞாயம் பேசிட்டு இழுத்து போர்த்திட்டு தூங்க வேண்டியது.. இப்பிடி இருந்தா உனக்கு எப்பிடி பொண்ணு பார்த்து எப்ப கல்யாண பண்ணி.. க்கும்ம்... அதுக்கெல்லாம் கொடுப்பன வேணும். .. என்று அக்கா தொடர்ந்ததை வலுக்கட்டாயமாக காதுக்குள் நுழைவதை தடுத்து விட்டு குளிக்க சென்றேன்!
குளித்து விட்டு..அக்காவிடம் சொல்லி விட்டு பால் வாங்க கிளம்பினேன்.. பக்கத்தில்தான்! இந்த அதிகாலை நடை எனக்கு பழகிவிட்டது.. வீட்டை விட்டு வெளியில் வந்தேன்.. மாமா அந்த அதிகாலையிலும் அவரது பஜாஜ் விக்டரை துடைத்து கொண்டிருந்தார்! ஒரு சின்ன புன்னகையை அவருக்கு இலவசமாக கொடுத்துவிட்டு நடக்க துவங்கினேன்.. ஊருணியை கடக்கும்போது கவனித்தேன்.. நான் நேற்று இரவு மொட்டாக பார்த்த தாமரைஎல்லாம் அழகாக மலர்ந்து என்னை பார்த்து சிரித்தது.. அப்பிடியே ரசித்துவிட்டு அதை கடந்தேன்...ஒவ்வொரு வீட்டு வாசலிலும்.. பெண்கள் அதிகாலை ஈரக்கூந்தளோடு கோலம் போட்டு கொண்டிருந்தனர்.. அதில் டியூசன் வகுப்பில் எனக்கு பரிச்சயமான பெண்கள் என்னை பார்த்து புன்னகைத்தனர்! அதை வாங்கி ரசித்துக்கொண்டே டீக்கடை நோக்கி சென்றேன்.. எனது ஒவ்வொரு காலையும் இப்பிடித்தான் நகரும்.. அதிகாலை நடை.. ஒரு டீ.. ஒரு தம்மு.. அதன் சுகமே தனி!
மார்கழி மாதம் ஞாயிறு... அதிகாலை ஐந்து மணி... மெல்ல எனக்கு விழிப்பு தட்டியது! வெங்கடேச சுப்ரபாதம் காற்றில் தவழ்ந்து வந்து குளிர் காற்றோடு போட்டி போட்டு காதுக்குள் சென்றது! எங்க ஊர் சிவன் கோவிலில் இருந்துதான் வருகிறது.. இந்த மார்கழி வந்தாலே இப்படித்தான்.. ஐந்து மணிக்கு மேல் தூங்க முடியாது. இந்த அதிகாலையிலும் சமையலறையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது..அக்காவாகத்தான் இருக்கும்! அவளுக்கு மார்கழி என்றில்லை...வருடத்தில் எல்லா மாதமும் இப்படிதான் அதிகாலைலே எழுந்து விடுவாள்..ஏனென்றால் மாமா ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார் வேலைக்கு! அம்மாவும் அப்பாவும் போனதிலிருந்து அக்காதான் எனக்கு எல்லாமே.. எனக்காகத்தான் மாமாவையும் பையனையும் கூட்டி வந்து இந்த வீட்டிலே இருந்து விட்டாள்!
இப்பொழுது சுப்ரபாதத்திற்கு போட்டியாக அவளது புலம்பலும் நான் விரும்பாமலே என் காதுக்குள் சென்றது...கழுத வயசாகுது... ஒரு வேலைக்கு போறதில்லை.. திங்க வேண்டியது...பக்கத்துக்கு வீட்டு பரமேசோட ஊர் சுத்த வேண்டியது... ராத்திரி வரை எங்கயாவது வெட்டி ஞாயம் பேசிட்டு இழுத்து போர்த்திட்டு தூங்க வேண்டியது.. இப்பிடி இருந்தா உனக்கு எப்பிடி பொண்ணு பார்த்து எப்ப கல்யாண பண்ணி.. க்கும்ம்... அதுக்கெல்லாம் கொடுப்பன வேணும்.
குளித்து விட்டு..அக்காவிடம் சொல்லி விட்டு பால் வாங்க கிளம்பினேன்.. பக்கத்தில்தான்! இந்த அதிகாலை நடை எனக்கு பழகிவிட்டது.. வீட்டை விட்டு வெளியில் வந்தேன்.. மாமா அந்த அதிகாலையிலும் அவரது பஜாஜ் விக்டரை துடைத்து கொண்டிருந்தார்! ஒரு சின்ன புன்னகையை அவருக்கு இலவசமாக கொடுத்துவிட்டு நடக்க துவங்கினேன்.. ஊருணியை கடக்கும்போது கவனித்தேன்.. நான் நேற்று இரவு மொட்டாக பார்த்த தாமரைஎல்லாம்
தம்மடிக்கும்போதுதான் ஞாபகம் வந்தது..பரமேஷ் சொன்ன கம்பெனிக்கு இன்னிக்கு அப்ளிகேசன் அனுப்பவேண்டும்... மாமாவிடம் கொஞ்சம் பணம் வாங்கி வைக்கணும்.. என்று நினைத்தபடியே பால் வாங்கி கொண்டு விரைவாக வீடு செல்ல நடந்தேன்.. ஆனால் வழியெங்கும் பார்த்த பெண்களின் புன்னகை என்னை மெது நடை போடவைத்தது! வீட்டில் பாலை அக்காவிடம் கொடுத்துவிட்டு மாமாவிடம் மெதுவாக தலை சொறிந்தேன்.. மாமா... ஒரு அப்ளிகேசன் அனுப்பனும்ம்ம்... உனக்கு இதே பொழப்பா போச்சுடா?.. ஒரு வேலை தேடிக்க துப்பில்லை.. காசு மட்டும் வக்கனையா கேளு..என்று அர்ச்சனை செய்தபடி நூறு ரூபாய் கொடுத்தார்!
வாங்கும்போதுதான் ஞாபகம் வந் தது.. இன்னும் ஒருவாரத்தில் தீபாவளி.. இன்னும் புது துணிகூட எடுக்கவில்லை... ஏதாவது வழி செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண் டேன்!கொஞ்ச நேரம் டிவி..புத்தகம்... விஜய் நியூஸ் என்று ஒன்பது மணி வரை நேரத்தை கடத்தி விட்டு போஸ்ட் ஆபிஸ் சென்றேன்.. நிரப்பிய அப்ளிகேஷனை பதிவு தபாலில் அனுப்பி விட்டு நண்பனின் டியூசன் செண்டர் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. பாடம் நடத்த! பிறகு? என்ன செய்வது நாற்பத்தைந்து வயதாகி விட்டது.. இன்னும் வேலை கிடைக்க வில்லை..அதனால் கல்யாணமும் ஆகல... கடைசி வரை என் தலையில் இப்படிதான் எழுதியிருக்கு போல என்று விதியை நொந்துகொண்டு நடந்தேன்..வழியில் தென்பட்ட பெண்களுக்கு புன்னகைத்தபடியே!
சரி.. கதையை படித்தாகிவிட்டதா? கேள்விக்கு வருவோம்.. இந்த கதையில் ஆறு(6) லாஜிக் மீறல்கள் உள்ளன.. அது என்ன என்ன என்று கமென்ட்டில் சொல்லுங்கள்..உங்கள் புத்திசாலி தனத்தை இலவசமாக சோதித்துக்கொள்ளுங்கள் :))
முழுமையான விடை வரும்வரை விடைகள் மட்டறுக்கப்படும்.. :))









