Thursday, June 30, 2011

பன்னிகுட்டியின் பய(ங்கர)டேட்டா!

ஆல்...அல்லக்கைஸ் வணக்கம்ங்.... ஆங்..படிங்கோ ..

புனைபெயர்                                               : பன்னிகுட்டி ராமசாமி
நிஜ பெயர்                                                  : பன்னிகுட்டியேதானா?
  
தொழில்                                                      : கக்கா....ச்சீ......பேரிச்சம் பழத்துக்கு கொட்டை எடுப்பது!
உபதொழில்                                              : கண்ட நேரத்திலும் கமென்ட் போடுவது!
தலைவர்                                                    : பவர் ஸ்டார் சீனிவாசன்
  
துணைத்தலைவர்                                : டாகுடர் விஜய், டீஆர், வில்பர்
சற்குனராஜ்!
  
பொழுதுபோக்கு                                    : ஒட்டகம் மேய்க்க டெரருக்கு உதவுவது  
துணைப்பொழுதுபோக்கு                 : கேடிவியில் டாகூட்டர் படங்களை பார்ப்பது
மேலும் பொழுதுபோக்கு                  : கக்கா போவது பற்றி பதிவு எழுதுவது  
வயது                                                           : சரியா கண்டுபிடிக்க முடியல.. ஆனா சின்ன வயசுல காந்தி பேசின மீட்டிங்கை நேர்ல  பாத்து இருக்காராம்
பலம்                                                            : இன்னும் மூஞ்சிய காட்டாமல்இருப்பது! ( நல்லவேள காட்டல! )
  
  ஜோதிலெட்சிமிக்கு இந்த லுக் போதுமா?

பலவீனம்                                                   : ஜோதி லெட்சிமியும் பின்னே நமீதாவும்!
  
சமீபத்திய சாதனை                            : கொடைக்கானலில் கும்மாளமிட்டது!
  
நீண்டகால சாதனை                          : தனக்கு அறுவதாம் கல்யாணம் ஆகிவிட்டதை இன்னும் மறைப்பது!
  
சமீபத்திய எரிச்சல்                              : சமீபத்தில் சென்னை வந்தபோதுகூட நமீதாவை பார்க்க(??!!) முடியாமல் போனது!
நீண்டகால எரிச்சல்                            : கல்யாணம் ஆனதில் இருந்துஒரே மனைவிதானாம்!
  
நண்பர்கள்                                                  : பவர் ஸ்டாரின் படம் பார்ப்பவர்கள்!
  
எதிரிகள்                                                     : வயதைக்காட்டும் கண்ணாடிமட்டும்!


இந்தவயசுல எனக்கு இது தேவையா?


ஆசை                                                         : அப்துல் கலாம் " போல நம்ம போலீஸ் புகழ் பெற வேண்டும் என்பது ( கலாம்க்கு கடைசி  வரை கல்யாணமே ஆகலை.. அதே மாதிரி..நம்ம போலீஸ்க்கும்.. ஹி., ஹி....! )
நிராசை                                                      :  கடைசி வரை அந்த சொப்பன சுந்தரியை யார் வச்சிருந்தான்னு தெரியாம போனது!
  
நம்பிக்கை                                                :  இம்சை பாபுவுக்கு போல் தனக்கும் பார்ட் 2 அமையும் என்று!
  
பயம்                                                            : அப்படி அமைந்தால் பார்ட் 1 -ஐ எப்படி சமாளிப்பது என்று!
  
லட்சியம்                                                  : கனவுக்குகன்னி ஜோதிலட்சிமிக்கு கோவில் கட்டுவது!
  
இதுவரை மறந்தது                             : தனக்கு வயதாகி கொண்டிருப்பதை!
இனி மறக்க வேண்டியது                : தன் ஒரு இளைஞன் என்று நினைப்பதை!
  
விரும்புவது                                             : அது ரொம்ப பெருசு... ச்சீ.. நான் லிஸ்ட்டை சொன்னேன்.. ஹி., ஹி., ஹி..!
  
அடங்...கொன்னியா...டோட்டல் டேமேஜ்!

விரும்பாதது                                            : இதுவரை அவரைப்பற்றி  சொன்ன ரகசியத்தை எல்லாம் ஆஆ...ன்னு வாய் பொழந்து படிப்பதை!
         டெரர் கும்மிக்காக - வைகை
         உதவி  - வெங்கட்  

Wednesday, June 29, 2011

அனுஷ்காவா..? தமன்னாவா..?


( இன்னிக்கு நம்மளவிட்டா.. கலாய்க்க
வேற ஆள் சிக்கலையோ..?!! )

இன்னிக்கு நம்ம
டெரர் கும்மி நண்பர் அருண்.,
தன்னோட 32வது Birthday-ஐ
15வது தடவையா கொண்டாடுறாரு..!

அவர் Birthday-க்காக.. ஸ்பெஷலா..
அருணை வாரி., வாரி புகழ்ந்து
ஒரு கவிதை..

அழகாய் சிரிப்பவனும் நீதான்..,
அசடு வழிய நிற்பவனும் நீதான்..,

அமைதியான ஆழ்கடலும் நீதான்..,
ஆர்பரித்தால் சுனாமியும் நீதான்..,

கை தூக்கி விடுபவனும் நீதான்..,
காலை வாரி விடுபவனும் நீதான்..,

டயட்டில் இருப்பவனும் நீதான்..,
டயர்ட் ஆகாமல் உண்பவனும் நீதான்..,

தத்துவங்கள் தெளிப்பவனும் நீதான்..,
தத்துபித்தென்று உளறுபவனும் நீதான்..,

தோள் கொடுப்பதில் கர்ணன் நீதான்.,
போட்டு கொடுப்பதில் புரூட்டஸ் நீதான்..

அவ்ளோ தான்..


( வாவ்..! கவித., கவித..! )

சாரி அருண்.. என்னால Continuous-ஆ
ரெண்டு வரி பொய் பேச முடியாது..!

டிஸ்கி : நேத்து நைட்.. அருண் எனக்கு
போன் பண்ணி.."  நாளைக்கு எனக்கு
Birthday.. என்னை வாழ்த்தி ஒரு பதிவு
போடுங்கன்னு " கெஞ்சி., கதறி அழுதாரு..

இவரு சிரிச்சாவே.. அந்த கொடுமையை
நாடு தாங்காது.. இதுல அழுதா..?!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்..!

ரமேஷ் போட்டோவை Close-Up-ல
பாத்து பயந்து போன குழந்தை மாதிரி
நானும் அப்ப பயந்துட்டேன்..

அதான் வேற வழியில்லாம..
என் பிரண்டுக்கு எழுதி வெச்சிருந்த
Birthday கவிதையை உல்டா பண்ணி
இவருக்கு போட வேண்டியதா போச்சு..!!

பின்ன, இவரை மனசுல நினைச்ச உடனே
அப்படியே கவிதை அருவி மாதிரி
கொட்டறதுக்கு இவரென்ன அனுஷ்காவா.?
தமன்னாவா..?

( அப்பாடி.. தலைப்புக்கு சம்பந்தமா
ஒரு லைன் எழுதியச்சு..! )

பதிவை உல்டா பண்ணி கமெண்ட்
போடறவர் தானே இவரு..!

இவருக்கு இந்த உல்டா கவிதையே
Too Much..!

மேலும் இவரை வேறு வழியில்லாமல்
வாழ்த்துவோர்..

மனைவி : Mrs.காயத்ரி அருண்.,
பேத்தி : ஷம்ஹிதா
மற்றும்..
உயிர் ( வாங்கும் ) டெரர் கும்மி நண்பர்கள்..

Last But Not Least.....

டெரர் கும்மியின் செல்லப்பிள்ளை
செல்வாவுக்கும் இன்னிக்கு தான்
பிறந்த நாள்..!!

" இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
செல்வா..! "

இப்படிக்கு
டெரர் கும்மி நண்பர்கள்,
மற்றும்
அனுஷ்கா & தமன்னா..


டெரர் கும்மிக்காக...
வெங்கட்

Tuesday, June 28, 2011

டெரர் கும்மி அவார்ட்ஸ் பார்ட் -2

நமக்கு நா(ம)மே திட்டத்தின் கீழ் டெரர் கும்மி குழுமம் வழங்கி வரும் அவார்டுகளின் வரிசையில் இது இரண்டாம் பாகம்.....!பதிவ போடு நிக்காம ஓடு விருது
Photobucket

தமிழ்ப்பதிவர்ன்ன பேர்ல ஹீப்ரு மொழில பதிவு போட்டு சும்மா எட்டிப்பார்க்க வந்தவைங்களையும் தலைதெறிக்க ஓடவைக்கும் தேவா அவர்களுக்கு இந்த விருதை ஓடிக்கொண்டே வழங்குகிறோம்.எவனா இருந்தாலும் வெட்டுவேன் விருது


அன்னை முதல் ஐயா வரை, அம்மா முதல் சும்மா வரை யாரையும் விட்டுவைக்காமல் வெட்டி கிழிச்சு துவைச்சி காயப்போடும் பட்டாபட்டி அவர்களுக்கு இந்த விருதை பம்மிக் கொண்டே வழங்குகிறோம்.


தோசைய சுட்டுப்பாரு விருது


உண்மை சுடுமாம், அப்போ பொய் குளுகுளுன்னு இருக்குமோ? நெருப்புதான் சுடும், ஆனால் உண்மையும் சுடும்னு சொல்லி எல்லாரையும் தோசை சுடுவது போல் சுட்டுத்தள்ளிக் கொண்டிருக்கும் வைகைக்கு இந்த விருதை வழங்குகிறோம்.
வருத்தப்படாத வாலிபர் விருதுசங்கத்து ஆளு யாரு, கலாய்க்கிற ஆளு யாருன்னே தெரியாம சங்கம் வெச்சி அடிவாங்கிட்டு இருக்கும் வெங்கட்டிற்கு வருத்தப்படாத வாலிபர் விருதை வருத்தத்துடன் வழங்குகிறோம்.


பதுங்கி வாழு பதிவபோடு விருது


பதிவு பக்கமும் போரம் பக்கமும் வராம பதுங்கி இருந்துகிட்டு. அப்பப்ப வந்து தமிழன் மேல ஸ்ரீலங்காகாரன் குண்டு போட்ற மாதிரி  பதிவ மட்டும்  போட்டு ஓடிப்போகும் மங்குனி அமைச்சருக்கு இந்த விருதை குண்டுகட்டா வழங்குறோம்!புதுமாப்பிள்ளையான பூச்சாண்டி விருது


கொலைவெறி கவிதையா எழுதி நம்மகிட்ட புரியலயான்னு வேற கேள்வி கேட்டு பூச்சாண்டி காமிச்சிகிட்டு இருந்துபுட்டு  இந்த வருடம் புதுசா கல்லாணம் கட்டிகிட்ட  கலியுகம் தினேஷ்க்கு இந்த விருத அளிக்கிறோம்.. வீட்டுகார அம்மாகிட்ட கவிதைய காமிச்சிராம.. பாவம் பயந்துருவாங்க!

தோழிமார் தோழன் எங்க சோழன் விருதுஊரே தூங்குனாலும் நடு ராத்திரி தோழிக்காக பஸ் விட்டு நம்ம பல்சை எகிரவைக்கும் நம்ம நாகராஜசோழன்MLA க்கு இந்த விருதை பஸ்ல லிங்க் கொடுத்து கொடுக்கிறோம்!


Monday, June 27, 2011

பதிவுலகில் சிரிப்பு போலீஸ்... ஒரு பய(ங்கர)டேட்டா!
அப்பாடா, நம்மளைப்பத்தியும் நல்லாத்தான் எழுதி இருக்காய்ங்க போல...!பெயர்:                                                             : சிரிப்பு போலீஸ்


புனைப்பெயர்:                                            : ரமேஷ்


தொழில்:                                                       : ப்ளாக் ஓனர்


உபதொழில்:                                               : டேமேஜர் என்று சொல்லி தூங்குவது 


தலைவர்:                                                     : டாகுடரு கேப்டன்


துணைத்தலைவர்:                                 : டாகுடர் விஜய், டீஆர், பவர்ஸ்டார் சீனி 


பொழுதுபோக்கு:                                     : சாப்பிடுதல் (ஓசியில்)


துணைப்பொழுதுபோக்கு:                 : சாப்புடுறதுக்கு ரிவர்சு


மேலும் பொழுதுபோக்கு:                  : துணிதுவைத்தல்


வயது:                                                           : கல்யாணத்திற்குத்தயார் (10 வருசமாய்)


பலம்:                                                            : ப்ளாகில் கமெண்ட்ஸ் போடுவது


பலவீனம்:                                                   : பதிவும் எழுதுவது


எலேய் நானும் பதிவர்தான்னு சொன்னா நம்பனும்.....
சமீபத்திய சாதனை:                              : பதிவு எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி இருப்பது


நீண்டகால சாதனை:                            : ராஜ் வீடியோவிஷன் வைத்துள்ள 
அத்தனை படங்களையும் பார்த்து முடித்தது


சமீபத்திய எரிச்சல்:                               : டெரருக்காக காலைல இருந்தே சாப்பிடாம வெயிட் பண்ணியும் ஓசிச்சாப்பாட்டை மிஸ் பண்ணியது


நீண்டகால எரிச்சல்:                             : கேப்டனுக்கு இன்னும் ஆஸ்கார் விருது 
கிடைக்காதது


நண்பர்கள்:                                                  : சாப்பாடு வாங்கிக் கொடுப்பவர்கள்


எதிரிகள்:                                                      : சமீபத்தில் திருமணம் ஆனவர்கள்


ஆசை:                                                            : என்றும் 16


நிராசை:                                                        : பிரபல பதிவர் ஆகுதல் 

இன்னுமாடா என்னைய நம்புறீங்க?நம்பிக்கை:                                                  : என்னைக்காவது எப்படியாவது 
கல்யாணம் நடந்துடும்!


பயம்:                                                              : என்றும் தனிக்கட்டை? ( என்னைக்கு நடக்கும்?)


லட்சியம்:                                                     : அழகான பொண்ணை திருமணம் செய்வது 


இதுவரை மறந்தது:                                : கண்ணாடியில் தன்னை பார்க்க 


இனி மறக்க வேண்டியது:                   : கல்யாணம் ஆகும் என்று நம்புவதை 


விரும்புவது:                                               : பதிவுலக கனவுக்கண்ணனாக 


விரும்பாதது:                                              : இன்னுமா கல்யாணம் ஆகலேன்னு கேட்பதைமீ... டோட்டல் டேமேஜ்..................

Friday, June 24, 2011

கொல்றானே! கொல்றானே!!


அருண்: செல்வா, உன் சொந்த ஊர் எது?

செல்வா: எனக்கு சொந்தமா ஒரு தெரு கூட இல்லைண்ணா

அருண்: டேய் @#$@#, காலைல நீ எந்த ஊருல இருந்துடா வந்தே?

செல்வா: நான் காளைல வரலைண்ணா...பஸ்ல வந்தேன்

அருண்: கொல்றானே... சரி நீ எந்த ஊருக்கு சாயந்திரம் போவே...

செல்வா: எங்க வீடு இருக்கற ஊருக்குண்ணா...

அருண்: அந்த ஊருதான் எங்கடா இருக்கு?

செல்வா: எங்க வீடு இருக்குதுல்ல அங்கதான் இருக்கு...

அருண்: சரி விடு, அந்த ஊர் பேரு என்ன?

செல்வா: இதை மொதல்லயே தெளிவா கேட்டு இருக்கலாம்ல... கோபி...

அருண்: அது யாரு? உங்க அண்ணணா?

செல்வா: இல்லைண்ணா... கோபிசெட்டிபாளையம்.

அருண்: அடப்பாவி அங்கதாண்டா நான் 4 வருஷத்துக்கு முன்னாடி வேலை செஞ்சேன்

செல்வா: என்னன்னா இப்படி சொல்லுறீங்க... அப்போ எனக்கு ஒரு போன் பண்ணி இருக்காலாம்ல...

அருண்: அப்போ உன்னையோ உன் போன் நம்பரோ தெரியாதே..

செல்வா: அப்படியா... இந்தாங்க நோட் பண்ணிக்கோங்க....9900012345... மறக்காம கோபிக்கு போய் போன் பண்ணுங்க...

அருண்: டேய் நான் இப்போ அங்க இல்லை...

செல்வா: அதனால என்ன 4 வருஷத்துக்கு முன்னாடி இருந்தீங்கல்ல...அப்போ போன் பண்ணுங்க

அருண்: @#$@% #%^#$^#

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

Thursday, June 23, 2011

Hero-ன்னா.. அது நம்ம சிரிப்பு போலீஸ் தான்..!

(நன்றி S.K)


நம்ம ரமேஷை Hero-ஆ வெச்சு
ஒரு தமிழ்படம் எடுத்தே தீருவேன்னு
பிரபல டைரக்டர் ஒருத்தர் ஒத்தை
கால்ல நிக்கறாரு..!

வெயிட்.. வெயிட்.. யாரும்
அவசரப்படக்கூடாது..

சாணி அடிக்கறதா இருந்தாலும்.,
காறி துப்பறதா இருந்தாலும்
எல்லாம் படம் ரிலீஸ் ஆனப்புறம்
தான்.. என்ன ஓ.கேவா..?!!

ஆமா நான் தெரியாம தான் கேக்குறேன்..
நம்ம ரமேஷ்க்கு என்ன குறைச்சல்..?

என்ன டாக்குடர் சீனிவாசனை விட
கொஞ்சம் அழகு கம்மி..!
அவ்ளோ தானே..?! இதுக்கு போயி..

( " லத்திகா " புகழ்.. " பவர் ஸ்டார் "
டாக்குடர் சீனிவாசன் )

சரி.. இப்ப மேட்டர்க்கு வருவோம்..

அந்த டைரக்டரு முதல்ல கதையை
என்கிட்ட தான் சொன்னாரு..

அந்த கதை என்னான்னா..

அது ஒரு வித்தியாசமான லவ்
ஸ்டோரி...

ஹீரோ... நம்ம ரமேஷ்..

நம்ம ரமேஷ் ஹீரோயினை
லவ் பண்றாப்ல..

அந்த புள்ள ரொம்ப உஷாரு..
அவங்க வில்லனை லவ் பண்றாங்க..

அந்த பாழாப்போன வில்லன்
நம்ம ஹீரோயினோட அக்காவை
லவ் பண்றான்..

அந்த ஹீரோயினோட அக்காவோ
நம்ம ரமேஷோட அண்ணனை
லுக் விடுது..

ஆனா நம்ம ரமேஷோட அண்ணன்
வில்லனோட  அக்காவுக்கு ரூட் விடறாரு..

அந்த வில்லனோட அக்காவோ
ஹீரோயினோட அண்ணன் மேல
உசுரா இருக்கு..

ஹீரோயினோட அண்ணனோ
வில்லனோட தங்கச்சியை
சின்சியரா லவ் பண்றாரு..

ஆனா அந்த வில்லனோட தங்கச்சி
நம்ம ரமேஷோட தம்பியை கட்டிக்க
ஆசைப்படுது..

ஆனா ரமேஷ் தம்பிக்கு
ஹீரோயினோட தங்கச்சி மேல
ஒரு கண்ணு..

ஹீரோயினோட தங்கச்சிச்சிக்கோ 
வில்லனோட  தம்பியை தான்
பிடிக்குது.. 

ஆனா அந்த பையனோ சாமியாரா
போயிடறான்..

இதான் அந்த கதை..

டிஸ்கி : யார் யாரையோ லவ் பண்ணினாலும்.,
ஒரு பொண்ணு கூட ரமேஷை லவ்
பண்ணலைங்கறது தான் இந்த கதையில
ஹைலைட்..

டைரக்டருடன் ஒரு மினி பேட்டி :

" என்ன கண்றாவி கதை சார் இது..? "

" இது ரமேஷை மனசுல வெச்சி தயார்
பண்ணின கதை..! "

( ம்ம்..அப்ப அது அப்படி தான் இருக்கும் )

" ஹீரோயின் யார் சார்..? "

" ' கோ ' பட கார்த்திகா..! "

" உங்க படத்துக்கும் " கோ " மாதிரி 
சின்னதா., பொருத்தமா ஒரு டைட்டில்
சொல்லட்டுமா சார்..? "

" சின்னதாவா..? எங்கே சொல்லுங்க...?! "

" த்தூ..! "

( படத்துல இருந்து உங்களுக்காக
ஒரு ஸ்பெஷல் ஸ்டில்..)( நன்றி " சேலம் தேவா " )

Wednesday, June 22, 2011

சின்னஞ்சிறு செல்வா.....!

நாம இன்னைக்கு செல்வாவோட சின்ன வயசு அனுபவங்களை பார்க்கப்போறோம்! ரெடியா?


செல்வா அவங்கப்பாவோட வாட்சை உடைச்சிட்டாரு ஆனா உண்மையை ஒத்துக்கவே இல்ல. அதனால செல்வாவுக்கு புரிய வைக்கனும்னு கதை சொன்னாரு, “செல்வா, ஜார்ஜ் வாஷிங்டன் அவர் அப்பாவோட மரத்தை வெட்டிட்டாரு, ஆனா அந்த உண்மையை ஒத்துகிட்டாரு. அவங்கப்பாவும் அவரை தண்டிக்கலை.. ஏன் தெரியுதா?”
“ஆங்…அவர் கையில இன்னுமும் கோடாலி இருக்குல்ல!!”

செல்வா அவங்க வீட்டு சுவத்துல படம் வரைஞ்சுகிட்டு இருந்தார். அவங்கம்மா கோபமா ”டேய் என்னடா சுவத்துலயா வரைவாய்?”னு கோபமா கேட்டாங்க.
அதுக்கு செல்வா கேட்டார், “அம்மா நீதானே இது டிராயிங் ரூமுன்னு சொன்னேன்”

டீச்சர்: செல்வா உன் உடம்பில எத்தனை எலும்புங்க இருக்கு?
செல்வா: 208
டீச்சர்: தப்பு, 207தான்.
செல்வா: ஆமா டீச்சர், ஆனா நான் மத்தியானம் லஞ்ச்ல ஒரு கோழிக் காலை முழுங்கிட்டேன்.

அப்பா எனக்கு ஐஸ்கிரீம் வேணும்
செல்வா குளிர்காலத்துல அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாதுப்பா
அப்படின்னா நான் அதை சூடு பண்ணி சாப்பிடறேன்

செல்வா என்ன ஹோம்வொர்க் உங்கப்பா கையெழுத்துல இருக்கு?
நான் எங்கப்பா பேனா யூஸ் பண்ணேன் மிஸ்

”டேய் விஜய் சனிக்கிழமை எங்க வீட்ல பார்ட்டி இருக்கு அதுக்கு வருவியா?”
”வரேண்டா செல்வா உங்க வீட்டு அட்ரஸ் சொல்லு”
”நம்பர் 5 காமராஜர் வீதி- அங்க வந்து கதவை தலையால தட்டு”
”ஏண்டா என் கையில தட்டுனா என்ன?”
”டேய் நீ என்ன வெறுங்கையோடவா வரபோற?”
”!!!”

"ஏண்டா நேத்து ஸ்கூலுக்கு வரலை"
"கை உடைஞ்சிடுச்சு சார்"
"எப்படிடா கை உடைஞ்சது"
"டாக்டர் பிரிஸ்கிரிஸ்ப்சனை ஃபாலோ பண்ண சொன்னார் அதை செஞ்சேன் சார்"
"அப்புறம் ஏண்டா கை உடைஞ்சது"
"பிரிஸ்கிரிஸ்ப்சனை ஜன்னல் வழியா பறந்துச்சு அதை ஃபாலோ பண்ணேன்."

டீச்சர்: அக்பர் எவ்வளவு காலம் ஆட்சி செய்தார்?
செல்வா: 14ஆம் பக்கத்தில இருந்து 25ஆம் பக்கம் வரைக்கும் சார்!

“டேய் செல்வா அது என்ன நாய்டா?”
”அது போலீஸ் நாய்”
“பார்த்தா அப்படி தெரியலியே”
”அது ரகசிய போலீஸ்”

”டேய் நான் நேத்து அஞ்சு ஈயை சாவடிச்சேன் அதுல 3 ஆம்பள ஈ, 2 பொம்பள ஈ”
”எப்படி ஆம்பள ஈ பொம்பள ஈன்னு கண்டுபுடிச்சே?”
“அது ரொம்ப ஈஸி. 3 ஈ சேவிங் மிஷின் மேல உட்கார்ந்து இருந்தது, 2 லிப்ஸ்டிக் மேல உட்கார்ந்து இருந்தது”

கணக்கு கிளாஸ்ல செல்வா பாடத்தை கவனிக்காம இருந்தார். உடனே டீச்சர் கோபமாகி, “செல்வா! 4, 9, 16, 25 –ன்னா என்ன?
செல்வா உடனே வேகமா பதில் சொன்னார், “டிஸ்கவரி, சன்மியூசிக், போகோ அப்புறம் டென்ஸ்போர்ட்ஸ்!”

”டேய் எங்கடா போறே?”
”டீவி பார்க்க போறேம்மா”
”சரி ரொம்ப பக்கத்துல போய் பார்க்காதே”
அப்போ செல்வா அண்ணன் வெளியே போனான்.
”டேய் அண்ணா எங்கடா போறே?”
”சந்திர கிரகணம் பார்க்க போறேன்”
”சரி ரொம்ப பக்கத்துல போய் பார்க்காதே”

செல்வா வீட்டிற்கு வெளியே நாய் கூட விளையாடிக் கொண்டிருந்தார். அப்போ தபால்காரர் வந்தார். அங்க நாய் இருப்பதை பார்த்துட்டு கேட்டார்
”தம்பி உன் நாய் கடிக்குமா?”
“இல்லை கடிக்காது”
ஆனால் தபால்காரர் காம்பவுண்டிற்குள் வந்தபோது நாய் கடித்து விட்டது
“ஏம்பா உன் நாய் கடிக்காதுன்னு சொன்னியே?”
“ஆமா என் நாய் கடிக்காதுதான், ஆனா இது என் நாய் இல்லையே”

Tuesday, June 21, 2011

பதிவர் சந்திப்பு கதை!

முன்குறிப்பு : திருநெல்வேலி பதிவர் சந்திப்பை ரொம்ப ரொம்ப அருமையா நடத்தின திரு சங்கரலிங்கம் அவர்களுக்கும் மற்றும் கௌசல்யா , சித்ரா , பாபு ஆகியோருக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அங்கு சொன்ன கதையை இங்க பதிவிட்டிருக்கேன். படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.


எல்லோருக்கும் வணக்கம். எனக்கு இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கிறதுனே தெரியல. காரணம் என்ன விட பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இருக்கீங்க. அந்த பயம்தான். அதுவும் இல்லாம இது ஒரு மொக்க கதை. தயவு செஞ்சு கோபப்பட்டுறாதீங்க. சீக்கிரமே முடிச்சிடறேன். கூடவே இத நான் பேச்சு வழக்குல இல்லாம உரைநடை வழக்குல சொல்லப்போறேன். அது எப்படி இருக்குனு கேட்டு முடிச்சதுக்கு அப்புறம் சொல்லுங்க!

நீங்கள் இந்தப் பதிவர் சந்திப்பிற்கு மன்னிக்கவும் நண்பர்கள் சந்திப்பிற்கு வரும்போது பூனை குறுக்கே செல்லுதல் போன்ற சகுனங்கள் ஏற்ப்பட்டு அது மூட நம்பிக்கை என்று உதாசீனப்படுத்திக்கொண்டு வந்திருந்தால் நான் சொல்லப்போகும் இந்தக் கதை உங்களின் அந்த எண்ணத்தை மாற்றிவிடும்.

முதலில் உங்களுடன் சிறு கேள்வி ஒன்று இருக்கிறது. உங்களில் யாருக்கேனும் இன்று காலை சூரியன் உதித்ததிலிருது இப்பொழுதுவரை எத்தனை நாளிகைகள் ஆகியுள்ளன என்று துல்லியமாகத் தெரியுமா ? 

உங்களுக்குத் தெரியாதென்பது எனக்குத் தெரியும். உண்மையைச் சொல்லப்போனால் எனக்கும் அதுபற்றித் தெரியாது. இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் நாழிகைக் கணக்கிற்கும் நமது கதைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பதே. ஆகையினால் நாம் கதையைத் தொடரலாம். கதையின் சில இடங்களில் புயல் , மழை வருமென்பதால் எல்லோரும் தயவு செய்து உங்களது குடைகளைக் கையுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.

சுமார் 2100 வருடங்களுக்கு முன்னர் தமிழ் பீட்டர் என்றொரு குறுநில மன்னன் இருந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா ? தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் உங்களில் யாரும் 2100 வருடங்களாக வாழ்ந்துவருபவர்களாகத் தெரியவில்லை.

இருந்தாலும் நான்தான் திருவள்ளுவரின் வகுப்பாசிரியர் என்றும் நான் கணிதப்பாடம் நடத்தியதால் வெறுத்துப்போன திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்றும் உங்களில் யாரேனும் எழுந்து நின்றோ அல்லது உட்கார்ந்து கொண்டோ சொல்ல வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால் அந்த மன்னன் எனது கற்பனையில் வந்தவன் என்பதையும் கூற விழைகிறேன்!

தமிழ் மன்னனுக்கு அதுவும் 2100 ஆண்டுகளுக்கு முந்தய மன்னனுக்கு எப்படி தமிழ் பீட்டர் என்றொரு ஆங்கிலப்பெயர் வந்தது என்கிற உங்களின் சந்தேகம் நியாயமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் அதற்கான காரணத்தை நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து எழுதித் தொலைத்துவிட்டதால் மன்னிக்கவும் எழுதி கையுடனே கொண்டுவந்திருப்பதால் நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

அதிக தமிழர்கள் உள்ள இடத்தில் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசுபவரை நாம் பீட்டர் விடுறான் என்று சொல்கிறோம். அதைப்போலவே நமது மன்னர் ஒரு சமயம் அரசு வரிப்பணத்தில் வெளிநாட்டைச் சுற்றிப்பார்க்காவிட்டால் தான் மன்னராயிருப்பதற்கே தகுதியற்றவர் என்ற என்று நினைத்ததால் இங்கிலாந்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தார்.

அப்பொழுது இங்கிலாந்தில் பிறந்த இரண்டுவயதுக் குழந்தை கூட ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு வாலிபன் நமது மன்னரிடம் சில கேள்விகளைக்கேட்டன். மன்னரும் எவ்வளவோ முயன்றும் வாயில் வார்த்தைகளே வரவில்லை. அவருக்கு ஆங்கிலம் தெரியாதுதான் காரணம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஏனெனில் என் குலதெய்வத்தின் மீது சத்தியமாகச் சொல்கிறேன் நான் அவரை ஆங்கிலம் கற்க வேண்டாமெனச் சொல்லவேயில்லை. சரி கதைக்கு வருவோம்.

பதிலேதும் பேசமுடியாமல் நின்றிருந்த நம் மன்னர் திடீரென தமிழில் பேச ஆரம்பித்தார். மன்னர் பேசியது அந்த இளைஞருக்கோ அல்லது அந்த இளைஞர் பேசியது நம் மன்னருக்கோ புரியவில்லை. எனவே ஆங்கிலம் அதிகம் பேசுவோர் இருக்கும் இடத்தில் தமிழில் பேசியதால் நம் மன்னரின் பெயர் அன்றிலிருந்த தமிழ் பீட்டர் என்றானது.

மன்னரின் பெயர்க்காரணத்திற்கே இவ்வளவு நேரம் ஆகிவிட்டபடியால் விரைவில் இந்தக் கதையை முடிக்க முயற்சிக்கிறேன். சிறிது நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மன்னருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததது. அது என்ன அதிர்ச்சி என்று தெரிந்துகொள்ள சிறிய விளம்பர இடைவேளை விடலாம் என்றிருந்தேன். விளம்பரத்திற்காக நான் பட்ட இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. சில சோப்பு நிறுவனங்களிடமும், எங்கள் ஷாம்பூ போட்டு பல்லு விளக்கினால் பற்களில் கூட முடி முளைக்கும் என்று விளம்பரம் செய்யும் விளம்பரக் கம்பனிக்காரர்களிடமும் எனது கதைக்கு நீங்கள் ஸ்பான்சர் செய்யுங்கள் என்று நீண்ட நேரம் போராடினேன். பலனில்லை . அவர்கள் சொன்ன ஒரே பதில் மானாடி , மயிலாடி கெமிஸ்ட்ரி வந்தால்தான் நாங்கள் ஸ்பான்சர் செய்வோம் என்றதுதான்.

படிக்கும் காலத்திலிருந்தே நானும் கெமிஸ்ட்ரியும் ஒரே நேர்கோட்டில் ஆனால் எதிர் எதிர் திசைகளில் பயணித்ததால் அவர்கள் கேட்டது போல எனது கதையில் கெமிஸ்ட்ரி வராது என்பதால் விளம்பரம் தேடும் எனது முயற்ச்சியைக் கைவிட்டுவிட்டேன். அதே போல தொடரும் என்று போடுவதற்கு இது ஒன்று தொடர் நாடகமில்லை என்பதால் மறுபடியும் கதையைத் தொடர்கிறேன்.

நாடு திரும்பிய நம் மன்னருக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி என்னவென்றால் வெளிநாடு சென்று வந்த தினத்தன்று மன்னர் அகோரப் பசியிலிருந்தார். அதனால் அன்று பல்லுவிலக்குவதைக் கூட இரு தினங்களுக்கு ஒத்திப்போட்டுவிட்டு நாட்டில் யாருமே பல்லு விளக்கக்கூடாது என்ற சட்டத்தையும் போட்டுவிட்டு பந்தியில் அமர்ந்தார். அப்பொழுது என்னைத் தொடாதே என்றொரு சத்தம் கேட்டது. அதிர்ச்சியில் உறைந்துபோன மன்னர் அந்த சத்தம் இலையில் வைத்திருந்த பச்சியிலிருந்து வருவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்.. மன்னரின் அகோரப்பசி அந்தப் பச்சி சொல்வதைக் கேட்காமல் இரண்டு பச்சிகளை எடுத்து அப்படியே விழுங்கிவிட்டார்.

அப்பொழுது இலையிலிருந்த இன்னொரு பச்சி சொன்னது " பல்லு விளக்காமல் எங்களைச் சாப்பிட்டதால் எதிர்காலத்தில் சான்றோர்களின் முன்னிலையில், உன்னைவிட அறிவாளிகளின் முன்னிலையில்  நீ ஒரு மொக்கைக் கதை சொல்வாய் அதற்காக பயந்து நிற்பாய் " என நான் சாபம் அளிக்கிறேன் என்று வாயை மூடுவதற்குள் மன்னர் அந்தப் பச்சியை தனது வாயில் போட்டு மூடிவிட்டார்.

அந்தப் பச்சியின் சாபம் நிறைவேறாது என்று கர்வத்தில் இருந்த நமது மன்னர் சில தினங்களில் இறந்து விட்டார்.ஆனால் நல்லோரின் சாபம் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்கிற சிலப்பதிகார சொற்களை நியாபகப்படுத்த வைத்துவிட்டது இப்பொழுது! ஆம் அந்த பச்சி சொன்ன சான்றோர்கள் நீங்கள்தான் , பின்னர் அந்த மன்னர் யாரென்று நீங்களே ஒரு முடிவிற்கு  வாருங்கள்!

அதற்கு முன்னர் நான் முதலில் கூறியது போல இந்த கதையில் மழை , புயல் வராததற்குக் காரணம் நீங்கள் யாரும் குடை எடுத்துக்கொண்டு வரதாதால் மழை வந்து அதனால் நம் மன்னருக்கும் நாட்டிற்கும் ஏற்பட்ட தீமைகளால் நான்கு நாட்கள் தொடர்ந்து எழுதிய எனது கதையின் நானூற்றி ஐந்தாயிரம் பக்கங்களை உங்களுக்கு சொல்ல முடியாமல் போனது கண்டு வருந்துகிறேன். 

மேலும் முதலில் சொன்னது போல இதில் சகுனங்களை நம்புவீர்கள் என்று சொல்லியிருந்தேன். அதற்குக் காரணம் இந்தக் கதையை கேக்குறதே  கெட்ட விசயம்தானே! இப்ப சகுனத்த நம்புரீங்கள்ல :-)

பின்குறிப்பு : கதை எப்படி இருந்துச்சு அப்படிங்கிற உங்களோட கருத்துக்கள் ஆவலுடன் வரவேற்கப்படுகிறது!

Monday, June 20, 2011

டெரர் கும்மி அவார்டுகள்...!

கொஞ்ச நாளா யாருக்கும் பாராட்டு விழா நடக்காம..விருது கொடுக்காம ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமே இல்லாம போய்க்கிட்டு இருக்கு! அந்த  குறைய  போக்குறதுக்கு நம்ம டெரர் கும்மில உள்ள ஒவ்வொருத்தருக்கும் நாமலே விருது கொடுத்து சந்தோசப்படுதுவோம்.. இந்த விழாவுல நமீதா குத்தாட்டம் வேணும்னா நம்ம பன்னிய கேளுங்க.. கலாக்கா மாஸ்டரா இருக்கணும்னா நம்ம போலிச கேளுங்க.. ஏன்னா அவங்களோட கால்சீட்..கைசீட் எல்லாமே இப்ப இவங்க கைலதான் இருக்கு! சரி..என்னென்ன விருதுன்னு பார்ப்போம்...

ஓசிச்சோறு உலகநாதன்
உலகமே அழிஞ்சாலும் ஒசிச்சோறே லட்சியமா வச்சு வாழ்ந்து கொண்டிருக்கும் இவரைத்தவிர யாருக்கும் இந்த விருது பொருத்தமானதாக இருக்காது... இன்னும் உங்களுக்கு யாருன்னு தெரியலையா? அவருதான் சிரிப்பு போலிஸ் ரமேஷ்..

கக்கூஸ் காட்டு இதிகாசம்
இவருடைய பதிவுகளில் யாருமே சொல்லதயங்கும் கக்கூசின் மறுபக்கங்களை மக்கள் மனதுகளில் பதிய வைக்கும் முயற்சிகளுக்காக இவருடைய பதிவுகளுக்கு இந்த விருது வழங்க படுகிறது.. பலத்த கைதட்டல்களுக்கு இடையே நம் பன்னிகுட்டியை விருது வாங்க அழைக்கிறேன்!

பேரு வைய்யி பேதி ஆய்ருவாய்ங்க
தெனாலி கமல் மாதிரி அம்மாஞ்சியா இருந்துகிட்டு..பேரு என்னமோ இந்தியன் தாத்தா ரேஞ்சுக்கு டெரரா வச்சிக்கிட்டு பல பேர்கள திகில் ஆக்கி  வைத்திருக்கும்  டெரர் பாண்டியனுக்கு இந்த விருதை டெரரா கொடுக்கிறோம்!

பவரே இல்லைனாலும் பல்பு வாங்கு
ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் கரண்டு போனாலும் இருபத்தி நாலு மணிநேரமும் மகளிடம் பல்புகளை வாங்கி குவிக்கும் இம்சைஅரசன் அவர்களுக்கு இந்த விருதை அவருக்கு இம்சை இல்லாமல் கொடுக்கிறோம்!

புதிர்போடு புடிங்கிட்டுபோகும்
இந்த விருது..பதிவு போடறேன்னு சொல்லிக்கிட்டு புதிர் போட்டு படிக்கிறவங்களுக்கு பேதி ஆக்கி ஓட வைக்கிற மொரீசியசின் மொதலாளி அருண்பிரசாத் அவர்களுக்கு செல்கிறது!

நல்லா சொல்றான்யா டீடேய்லு
இந்த விருது.. வானம் வசப்படும்..மேகம் வசப்ப்படும்னு சொல்லிக்கிட்டு அவங்களுக்கே தெரியாத தகவல்கள கூட புள்ளிவிவரமா சொல்லும் மாணவனுக்கு வசமாக செல்கிறது!

ஒண்ணுமே இல்ல ஒலகநாதா
அஞ்சு அன்லிமிடெட் மீல்ஸ ஒண்ணா சாப்டர அளவுக்கு உடம்ப வச்சுகிட்டு பேரு மட்டும் வெறும்பயன்னு வச்சு சுத்திகிட்டு திரியும் வெரும்பயளுக்கு இந்த விருது கணமாக செல்கிறது!

லைக் போடு கொண்டாடு
இந்த விருது.. பதிவும் போடாம..பஸ்சும் விடாம போற போக்குல எல்லா பஸ்சுக்கும் லைக் போட்டு போய் கொண்டிருக்கும் முறைமாமன் கார்த்திக்குக்கு லைக் பண்ணி கொடுக்கிறோம்!

காட்டேரி கணக்கா கத சொல்லு
கதை சொல்றேன்கிற பேர்ல போற வர்றவன புடிச்சு வலுக்கட்டாயமா ரத்தம் குடிக்கும் கோமாளி செல்வாவிற்கு இந்த விருதை கதை அடிக்காமல் கொடுக்கிறோம்!

டாஸ்மாக் டமிலன் டண்டணக்கா
இருவத்தினாலு மணி நேரத்தில் இருபத்தாறு மணி நேரம் போதையில் இருக்கும் நம்ம மாலுமிக்கு இந்த விருதை ஆடாமல் அசையாமல் கொடுக்கின்றோம்!

போன் பண்ணு நம்பர் கேளு
போலிசுக்கு அடிக்கடி போன் பண்ணி என் போன் நம்பர் எனக்கே மறந்துபோச்சு.. என் நம்பர் எனக்கு வேணும்னு போலிசை டரியல் ஆக்கும் பனங்காட்டு நரிக்கு இந்த விருதை போனிலே கொடுக்கிறோம்!

ஊர சுத்து உருப்படாம போ
அப்பப்ப எதாவது ஊர சுத்திட்டு வந்து பத்து பதிவ தேத்திட்டு... பத்துமாதம் பதிவு பக்கமே வராம இருக்கும் சுற்றுலா விரும்பி அருணுக்கு இந்த விருதை சுத்தி சுத்தி கொடுப்போம்!

நவீன யுகத்தின் நக்கீரர்
தருதலைங்க போட்ற கமென்ட்ட கூட அழகா தமிழ்படுத்தி பிரித்து வைத்து அதில் உள்ள பொருளை தறுதலைகளுக்கு எடுத்துரைக்கும் மண்ணை மைந்தன் மாதவன் அவர்களுக்கு இந்த விருதை தமிழின் பால்( நோ அமலாபால்!) வழங்குகிறோம்!

கணக்கு போட்டா கமென்ட காணும்
பதிவுல கணக்கு போடறேன்னு சொல்லி வழக்கமா கமென்ட் போடற ஆளுகள கூட அந்த பக்கம் வரவிடாம கணக்கு பண்ணும் அண்ணன் பெ.சொ.வி அவர்களுக்கு இந்த விருதை கணக்கே பண்ணாமல் கொடுக்கிறோம்!

பாம்புகளுக்கு நடுவுல பாவம்யா
அந்த பக்கம் டெரர் கும்மி இந்த பக்கம் பொறுக்கி என விஷப்பாம்புகளுக்கு இடையில் வாழ்ந்துகொண்டு அவைகளுக்கு அப்பப்ப பாலும் ஊத்திக்கொண்டிருக்கும் எஸ்.கே அவர்களுக்கு இந்த விருதை பாவப்படாமல் வழங்குகிறோம்!

என்னங்கடா பண்ணுறீங்க       சீக்கிரமா போகனும்...!

 
இப்ப சந்தோசமா?
டெரர் கும்மிக்காக
வைகை

இரண்டாம் பாகம் விரைவில்......!

Thursday, June 16, 2011

புக்குல என் மூஞ்ச.... வைக்க!!!

வர..வர..இந்த வெளிநாட்ல இருக்கவங்க தொல்ல தாங்கலப்பா... இங்கே இருந்து ஒட்டகம் மேய்க்கிறதுக்கு ஓசில போக வேண்டியது..சிங்கப்பூர் போறேன்..சிலுக்குபட்டி போறேன்னு அங்க போயி குப்ப கூட்ட வேண்டியது.. ஆனா அவனுங்க ஆர்குட்லயும்..ஃபேஸ் புக்லயும் பண்ற அட்டகாசம் தாங்க முடியலடா சாமி..ஒட்டகம் மேக்கிரவன் ஒபாமாகிட்ட நிக்கிறமாதிரி போட்டோ போடறான்... ஒன்ற டாலர் பஸ் காச மிச்சம் புடிக்க நடந்து போற நாதாரிங்க... பென்ஸ் காருகிட்ட நிக்கிற மாதிரி போட்டோ போடறான்! 

@ டெரர்,பன்னி,வைகை,மாணவன், ஜெயந்த் .. இது உங்களுக்கு மட்டுமில்லடா உங்களமாதிரி சீன் போடற எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கை!

 இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே. இது மெயிலில் வந்தது தமிழில் அளித்திருக்கிறோம் அவ்வளவுதான்!

ஏண்டா உங்க கைய கால வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாதா? உங்களுக்கு வாழ்க்கையில என்னடா லட்சியம்? அடுத்தவங்களை பொறாமைப்பட வைக்கிறதா? அப்புறம் ஏன் உங்க புரொஃபைல் பிக்சருங்களை அடிக்கடி மாத்திகிட்டே இருக்கீங்க? என்ன காரணம்? எனக்கு இப்ப தெரிஞ்சாகனும்!

ஒத்துக்கிறோம், நீங்கெல்லாம் வெளிநாட்டுக்கு போய்ட்டீங்க. உங்க ஒன்னுவிட்ட இரண்டுவிட்ட சித்தப்பா, மாமால்லாம் உங்களை நினைச்சி பெருமைப்படுவாங்க. எங்களுக்கும் சந்தோசம்தான். அதுக்காகதானே ஏர்போட் வந்து டாடாலாம் காமிச்சு வழியனுப்பி வச்சோம். ஆனா உங்க போட்டோக்களை வச்சி எங்களை ஏண்டா சாவடிக்கிறீங்க?

சரி, ஒத்துக்கிறோம், நாங்க அந்த இடத்தையெல்லாம் மேப்ல மட்டும்தான் பார்த்துருக்கோம், நிஜ வாழ்க்கையில இல்ல. அவ்வளவுதானே? அதுக்காக ஏன், நீங்க ஒருநாள் விட்டு ஒரு நாள் புது படத்தை போடுறீங்க. உங்களுக்கு என்னதான் வேணும்? உங்களுக்கு தேவை, நாங்கெல்லாம் ‘like’-ஐ அழுத்திட்டு “வாவ், சூப்பர், கலக்கலா இருக்கு” இப்படி கமெண்ட் போடணும், அதானே? நீங்க ரகசியமா ஒவ்வொரு நிமிசமும் எல்லா கமெண்டையும் பார்ப்பீங்க. நாலு நாள் கழிச்சு “எல்லோருக்கும் நன்றி!” அப்படின்னு ஒரே வார்த்தையில முடிச்சிட்டு போயிடுவீங்க!

சரி, அதைக் கூட ஒத்துக்கலாம். நீங்க நிறைய காசு செலவு பண்ணி அங்க போயிருக்கீங்க, அதனால உங்களை எல்லோரும் பாராட்டனும்னு நினைக்கிறீங்க. புரியுது. ஆனா ஏண்டா செடி, மரம், நாய், பூனைன்னு இதையெல்லாம் புரொஃபைல் பிக்சர்ல போடுறீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? லூசுப்பசங்களா!


அப்புறம் இன்னொரு ரகம் இருக்கு. அதாவது அவங்க படத்துக்கு பதிலா அவங்க குழந்தை படத்தை போடுறது. இந்த மாதிரி ஆளுங்களை பத்தி நாங்க பேசக் கூட விரும்பலை.

எல்லாத்தோட பெஸ்ட் லேடிஸ்தான். ஏனுங்க அம்மிணி, உங்க படத்தை கருப்பு வெள்ளையா மாத்தி போட்டா, திடீர்னு அது அழகாயிடுமா? மத்தவங்க உங்களை பார்த்து “ஆஹா. என்ன அழகு! என்ன அழகு!” இப்படி நினைக்கனும், அப்புறம் உங்களுக்கு friend request அனுப்பனும். ம்.. அப்படித்தானே? எங்களுக்குதானே தெரியும் நீங்க எப்படி இருப்பீங்கன்னு!.

நீங்க இங்கயும் ஒன்னும் செஞ்சதில்ல. கல்யாணம் ஆகி அங்க போயிட்டு, அங்கேயும் ஒன்னும் செய்யாமதான் இருக்கீங்க. இதில பெருமைப்பட என்ன இருக்கு? இதில தினமும் நீங்க என்ன சமைச்சீங்கன்னு அப்டேட் பண்ணுறது வேற “நான் இன்று என் அன்புக் கணவருக்காக தயிர் சாதம் சமைத்தேன்!

சமைச்சீங்களா? உண்மையாவா? இதில வேற அந்த லூசு ஹஸ்பெண்டும் வந்து லைக் போடுவாரு அப்புறம் பொது இடத்தில சொல்வாரு. “தேங்க்யூ டார்லிங், உம்ம்ம்ம்மா…

நீங்க இந்தியாவிலிருந்து வந்தவங்கதானே? இந்த மாதிரி விசயமெல்லாம் அநாகரிகம்னும் பொது இடத்தில இப்படியெல்லாம் நடந்துக்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாது? நீங்க இந்தியாவை விட்டுட்டு போனா உடனே எல்லாத்தையும் மறந்துடுவீங்களா?

அப்புறம் நீங்க சமைச்ச சாப்பாட்டோட படத்தை மிக ருசியானது எச்சில் ஊறவைக்கும்ன்னு தலைப்போட வேற போடறது…சாப்பாட்டு பார்த்தால்ல தெரியும்.. எச்சில் ஊறுமா, வாந்தி வருமான்னு! இதில வெளிநாட்டுக்காரங்க யாராவது வந்து அது எப்படி செய்யறதுன்னு கேக்கறது! கொய்யால, நீ இண்டர்நெட்டுதானே யூஸ் பண்ணுறே? கூகுள்ள தேடிப்பார்த்தா கிடைக்கப் போகுது.

சரி எனக்கு இப்ப ஒன்னு சொல்லுங்க, நீங்க இந்தியாவில இருந்தப்ப ஒரு நாளாவது இப்படி சமைச்சிருக்கீங்களா? உங்க அண்ணனும் நல்ல பையன் தான். அவனுக்காக ஒரு நாளாவது சமைச்சிருக்கீங்களா? யோவ் கணவன்களா, நாங்க உங்களையும்தாம்பா கேட்கிறோம், நீங்க இங்க இருந்தப்ப, ஒருதடவையாவது, உங்கம்மா சாப்பாடு நல்லாயிருக்குனு பாராட்டியிருக்கீங்களா?

கணவன் மனைவி இரண்டு பேரும் இந்த மாதிரி லூசுத்தனமான விளையாட்டுகளை விளையாண்டுகிட்டு வருசத்துக்கு 365 நாளும் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிக்கிறீங்க. ஆனா சொல்வீங்க, “நாங்க கிங் கோல்ஸ் ஓரியண்டல் பேலசின் 35வது மாடியில் சூப்பர் டின்னர் சாப்பிட்டோம். செம சைனீஸ் ஃபுட்!” ஏம்பா அது வெறும் சைனீஸ் ஃபுட் தானே? அதுக்கு ஏன் இவ்வளவு சீன் போடறீங்க? இந்தியா சீனாவுக்கு பக்கத்திலதானே இருக்கு.

அப்படின்னா உண்மையா என்ன நடக்குதுனு  உங்களுக்கு தெரியலன்னா, இப்ப சொல்றோம் கேட்டுகுங்க. அங்க யாருமே சந்தோசமா இல்ல. நீங்க எவ்வளவு சம்பாதிச்சாலும், சந்தோசமா இருக்க போறதில்ல. வெஸ்டர்ன் டாய்லெட்ல உட்கார்ந்துகிட்டு, “நாம ஏன் இங்க வந்தோம்?”னு யோசிச்சிகிட்டு மட்டும்தான் இருப்பீங்க.

நாங்க இந்த உண்மையெல்லாம் சொன்னேன்னா, உடனே நீங்க உங்க ஐ- புரோடக்டெல்லாம் என்கிட்ட காமிப்பீங்க. இதப்பாருங்க, ஐபேட்2-லாம் இங்கேயும் கிடைக்குது, தெரியுமா? அதனால கம்முனு நாங்க சொல்றத கேளுங்க. உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க.

இப்ப நீங்க நினைக்க ஆரம்பிச்சிருக்கலாம், எங்களுக்கெல்லாம் பொறாமை, அதான் இப்படியெல்லாம் பேசுறோம்னு, இல்லையா? இதப்பாருங்க, நாங்களும் அங்கெயெல்லாம் போய் இந்த மாதிரியெல்லாம் செஞ்சாலும் இப்படித்தான் பேசுவோம். உங்களால என்ன செய்ய முடியும்?

இப்படிக்கு
உள்ளூர் டீக்கடை பெஞ்சு
.. 

நன்றி:
மொழி பெயர்ப்பு உதவி:எஸ்.கே,வைகை