Showing posts with label கோண பூசாரி. Show all posts
Showing posts with label கோண பூசாரி. Show all posts

Friday, December 17, 2010

கருங்காலிக்காரனின் ஊத்தபித்துவங்கள்




நான் கருங்காலிக்காரன், சுருக்கமா கருங்காலி. அது என்ன பேரு, கருங்காலிங்கறீங்களா? அதான், கூடவே இருப்பேன், ஆனா பெரிய குழியா பறிச்சுடுவேன், அதுனாலதான் என்பேரு கருங்காலி. நான் ஆளுதான் பாக்க சிறுசா இருப்பேன், ஆனா எனக்கு எல்லாமே ஓவர், அதாங்க, இந்தக் கொழுப்பு, திமிரு, தெனாவெட்டு, ம$%$%சுரு, மட்டை. என் பேருக்கு முன்னாடி நானே ஒரு பட்டம் வெச்சுக்கிட்டேன். 'பீலா'சபி. அது எதுக்குன்னு பார்த்த உடனே புரிஞ்சிருக்குமே. இப்பல்லாம் அந்தப் பட்டப்பேரு யூஸ் பண்றதில்ல, ஏன்னா, கொஞ்ச நாள் முன்னாடி, பொட்டி தட்டுறதப் பத்தி நுணுக்கமா பதிவு போடுற ஒரு பெரிய பதிவர சீண்டிப் பாத்தேன். (நான் இப்படித்தாங்க, அடிக்கடி, கொழுப்பெடுத்து ஏதாவது பண்ணி வாயக்கொடுத்து உடம்ப புண்ணாக்கிடுவேன்). அப்போ அவரு குடுத்த குடுல, பட்டப் பேரு பட்டமா பறந்து போயிடுச்சு. அதுனால நோ மோர் பீலான்னு மட்டும் நெனச்சுடாதீங்க, பீலா இல்லையேல் நான் இல்லை, புரிஞ்சதா?

நானும் பதிவு எழுத வந்து, நாத்திகம், கம்யூனிசம், ம$%&&சம்னு எல்லாக் கருமத்தையும் எழுதித் தொலைச்சும் ஒரு நாயும் சீந்த மாட்டேனுடுச்சு. எல்லாப்பயலும் கண்டமேனிக்கி பாலோயர்ஸ் வெச்சுக்கிட்டு பிரபல பதிவர்னு சிலுப்பிக்கிட்டு திரியறானுங்க. நானும் என்னென்னமோ 2 வருசமா முக்கிப் பாத்தும் ஒண்ணுமே தேறல. அப்புறம் தான் ஐடியா வந்துச்சு. யாராவது ஒரு பிரபல பதிவர புடிச்சுக் கிழிச்சி பிரச்சனையக் கிளப்பி பேமசாயிடலாம்னு ப்ளான் பண்ணேன். அதுக்கேத்த மாதிரி அப்பாவி பிரபலம் ஒரு ஆளூ சிக்குனாரு. போட்டுத் தாளீச்சிட்டேன்ல. பதிவுலகமே கதி கலங்கிடுச்சு. பேமசாகனும்னு வெறில நான் கொஞ்சம் ஓவரா போயிட்டேன். அந்த பிரபல பதிவர் மெரட்டுன மெரட்டுல, துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடிட்டேன்.

அப்புறம் மெல்ல திரும்பி வந்து ஒரு மன்னிப்பு பதிவ போட்டு அதுக்கும் ஹிட்ஸ் வாங்கி பெரிய ஆளாயிட்டேன். தமிழ்மணத்துல கூட டாப்20ல போட்டாங்க. கொஞ்ச நாள் இப்படியே ஓட்டிடலாம்னு பாத்தா ஹிட் ரேட் குறைய ஆரம்பிடுச்சு. என்ன பண்றது, விட்ட இடத்த புடிக்கனுமே? மறுபடி ஒரு பிரபல பதிவர சீண்டுனா, எல்லோரும் சேந்து தொவைச்சு காயப் போட்ருவானுங்கன்னு, சூப்பர் ஸ்டார் ரஜினிய போட்டுத் தாக்குத் தாக்குன்னு தாக்கிட்டேன். எதிர்பதிவுலாம் போட்டுட்டாங்க. ஆனா பாருங்க, ஹிட் ரேட் நினச்ச அளவு கூடவே இல்ல. தக்காளி, எல்லாப்பயலும் வெவரமாயிட்டான். நான் பண்ற ஜெகஜ்ஜாலக் கில்லாடி வேலைகள புரிஞ்சிகிட்டானுங்க, நாதாரிங்க.

அடுத்து யார அட்டாக் பண்ணி முன்னுக்கு வர்ரதுன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு குரூப்பு இருக்கானுங்க, அவனுகளால தான் எனக்கு இந்த வாரம் தமிழ்மணம் டாப்20ல இடம் போச்சு. அவனுங்க பண்ற அலும்பு டூ மச், ஏதேதோ பண்ணி இந்த வாரம் தமிழ்மணம் டாப் 20க்குள்ள நுழைஞ்ச்சுட்டானுங்க.

வேற என்னதான் பண்றதுன்னு புரியாம, நம்ம காந்தித்தாத்தாவ இழுத்தேன் பாருங்க வம்புக்கு, புதுசு புதுசா ஆளுக வந்து திட்றாங்க, ஜாலிதான், இனிமே பிரபல பதிவர்தான் . அடுத்து ஒரு பெரிய பிரச்சனைய உண்டு பண்ணி தமிழ்மணம் ரேங்கிங்குள்ள மறுபடி நுழைஞ்சுட வேண்டியதுதான்.

ஏன்னா நானெல்லாம் பொறந்ததுலே இருந்து பிரபல பதிவர்டா, எனக்கு ரெண்டு இல்லடா, நாலு கொம்பு மொளச்சிருக்குடா... சாதா பதிவனுகல்லாம் எட்ட நின்னு பேசுங்கடா.....டேய்........!