Monday, October 31, 2011

ஆனைக்கும் பானைக்கும் சரி

முன்குறிப்பு : யானைக்கும் பானைக்கும் சரி அப்படின்னு ஒரு பழமொழி இருக்கிறது நம்ம எல்லோருக்குமே தெரியும். அது எப்படி யானைக்கும் பானைக்கும் சரியாகும் ? அந்தப் பழமொழி எப்படி வந்திருக்கும் ? அதற்கான கற்பனையான காரணம்தான் இந்தக் கதை!

கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில்தான் இந்த மயிர்க்கூச்செரியும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பட்டிக்காடு என்ற ஒரு மாநகரத்தில் மட்பாண்டங்கள் செய்து வியாபாரம் செய்யும் குயவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த நகரத்திலேயே அவருக்கு மட்டும்தான் மட்பாண்டங்கள் செய்யத்தெரியும் என்பதால் அவர் எப்படிப்பட்ட பானைகள், பாத்திரங்கள் செய்தாலும் அவரது திறமையை ஊர்மக்கள் வியந்து பாராட்டி வந்தனர்.

ஒருசமயம் இவரிடம் எண்ணற்ற பானைகள் விற்காமல் தேங்கிவிட்டிருந்தது. அதே நகரத்தில் இத்தனை பானைகளுக்கு தேவை இருக்காது என்பதை உணர்ந்த அவர் இன்னும் சில பானைகளைத் தயாரித்து அயல் தேசங்களில் சென்று விற்றுவிடலாம் என்று முடிவெடுத்தார். அதன்படியே இன்னும் சில பானைகளைத் தயாரித்து தன்னிடமிருந்த அனைத்துப் பானைகளையும் ஒரு மாட்டுவண்டியில் ஏற்றினார். ஆனால் எண்ணற்ற பானைகள் இருந்தபடியால் வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடுகளால் அவற்றை இழுக்க முடியவில்லை. உடனே யானை ஒன்றை விலைக்கு வாங்கி மாட்டிற்குப் பதிலாக யானையைப் பூட்டி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

தொடர்ந்து நான்கு நாட்கள் காடுகள், மலைகள் போன்றவற்றைக் கடந்து ஒரு பாழடைந்த கிராமத்தை அடைந்தார். அந்த கிராமத்தில் இருந்த மக்கள் நாகரீகத்தில் மிகவும் பின்தங்கியிருந்தனர். அவர்களிடம் தண்ணீர் தேக்கி வைக்க , சமைக்க என்று இன்னமும் பானைகளைப் பயன்படுத்தும் பழக்கம் வந்திருக்கவில்லை. அவர்களுக்குப் பானைகளைப் பற்றிய அறிமுகமே இல்லாமலிருந்தது கண்டு வியந்துபோனார். இங்கே பானைகளையும் அவற்றின் பயன்களையும் எடுத்துக்கூறினால் அனேக பானைகளை விற்றுத் தீர்த்துவிடலாம் என்று கருதி பானைகளின் பயன்கள்களைப் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். அவர் நினைத்தது போலவே அவரிடம் இருந்த பாதிக்கும் மேலான பானைகள் அந்தக் கிராமத்தில் விற்றுப்போயிற்று.

அளவில்லாத மகிழ்ச்சியுடன் மீதமிருந்த பானைகளை எடுத்துக்கொண்டு அடுத்த நாட்டினை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். அடுத்த நாட்டில் எல்லா பானைகளையும் விற்றுத் தீர்த்துவிட்டு நாடு திரும்பலாம் என்று நினைத்தபோதுதான் டாலரின் மதிப்பு குறைந்து வருவது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் தாமதித்தால் தான் நஷ்டப்படவேண்டும் என்பதை அறிந்துகொண்டு தன்னிடமிருந்த முருகன் டாலர் உட்பட அனைத்து டாலர்களையும் ரூபாயாக மாற்றி எடுத்துக்கொண்டு தன் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்.

வரும்வழியில் அந்தப் பாழடைந்த கிராமத்தின் வழியாக வந்துகொண்டிருந்தார். அப்பொழுது அந்த கிராம மக்கள் அவரை வழிமறித்து அவர் கொடுத்த பானைகள் அனைத்தும் உடைந்துவிட்டது என்றும் அதற்குத் தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் மிரட்டினர். கீழே விழுந்தால் பானைகள் உடைந்துவிடும் என்று தான் முதலிலேயே சொன்னதாகவும் அதற்கெல்லாம் நஷ்ட ஈடு கொடுக்க முடியாதென்றும் சமாளித்தார் நமது வியாபாரி. ஆனால் மக்களோ “ USER MANUAL " இல் தண்ணீருடன் கீழே போட்டால் உடைந்துவிடும் என்றுதான் இருக்கிறதே ஒழிய வெறும் பானையைக் கீழே போட்டால் உடைந்துவிடுமென்று அதில் இல்லை என்றும் எனவே கண்டிப்பாக நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்றும் வாதிட்டு அவரை அந்த ஊர் நாட்டாமையிடம் அழைத்துச் சென்றனர்.

நாட்டாமையோ ஆலமரம் இருந்தால்தான் தீர்ப்புச் சொல்லுவேன் என்று கூறிக்கொண்டு ஆலமரத்தைத் தேடிக்கொண்டிருந்தார். ஊர் முழுவதும் தேடியும் ஒரு ஆலமரம் கூடக் கிடைக்கவில்லை. எனவே ஆலமர விதை ஒன்றை எடுத்துவந்து ஊரின் முக்கிய இடத்தில் விதைத்துவிட்டு இந்த விதை வளர்ந்து பெரிய மரமான பிறகுதான் இந்த வழக்கிற்குத் தீர்ப்பு வழங்குவேன் என்றாவாரு நடையைக் கட்டினார்.

அவர் நல்ல தீர்ப்பைச் சொல்லுவார் என்று எதிர்பார்த்த நம் வியாபாரிக்கோ சப்பென்று ஆகிவிட்டது. சரி இனியும் தாமதித்தால் மேலும் பிரச்சினைகள் வரலாம் என்று நினைத்துக்கொண்டு தன்னிடமிருந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து ஒவ்வொரு பானைக்குமான விலையைத் திருப்பித்தந்துவிடுவதாகக் கூறினார். ஆனால் அந்தக் கிராமத்தில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்பதால் மக்கள் அதனை வாங்க மறுத்துவிட்டு வேறு ஏதேனும் தருமாறும் தங்களை ஏமாற்ற நினைத்தால் உயிருடன் திரும்பமுடியாதென்றும் மிரட்டினர்.

நீண்ட யோசனைக்குப் பிறகு நமது பானை வியாபாரி தான் வந்திருந்த யானையை அந்தக் கிராமத்து மக்களிடம் ஒப்படைத்துவிட்டு நாடு திரும்பினார். யானையுடன் சென்ற தனது கணவர் தனியாக வருகிறாரே என்ன நேர்ந்தது என்று வினவினாள் அவரது மனைவி. அதற்கு நமது வியாபாரி “ ஆனைக்கும் பானைக்கும் சரியாப் போச்சு!” என்று பதிலளித்தார். அப்பொழுதிலிருந்து “யானைக்கும் பானைக்கும் சரி!“என்ற பழமொழி வழக்கத்திற்கு வந்தது.

பின்குறிப்பு : ”யானைக்கும் பானைக்கும் சரி”ன்ற பழமொழிக்கு நான் விளக்கம் சொல்லுறேன் பேர்வழினு இந்தக் கதைய வெளில சொல்லிறாதீங்க. அப்புறம் ஏதாச்சும் பிரச்சினைனா நான் பொறுப்பில்ல.இது முழுக்க முழுக்க கற்பனை. வரலாற்று நிகழ்வல்ல. நன்றி வணக்கம்!

இந்தப் பழமொழிக்கான உண்மையான கதை நம்ம ஜெய்சங்கர் அண்ணன் அவர்கள் கீழ பின்னூட்டத்துல சொல்லிருக்கார். அது என்னன்னா

ஒரு நாள் பானை வியாபாரி கல்லெடுத்து யானையை அடிக்க யானை செத்துப்போயிடுச்சு
யானைப்பாகன் தனக்கு அந்த யானை தான் வேணும்னு சொன்னான். புது யானைக்கு ஒத்துக்கலை

ஜட்ஜ் என்ன பண்ணினாருன்னா பானை வியாபாரிய வீட்டு கதவோரம் உள்ள எல்லா பானையும் அடுக்க சொன்னார்
யானை வியாபாரி வந்து கதவ தொறந்த வுடனே எல்லா பானையும் உடைஞ்சுடுச்சு
ஜட்ஜ் சொன்னார் யானைக்கும் பானைக்கும் சரின்னு.

இதன்மூலம் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்,

Thursday, October 27, 2011

வேலாயுதம் ஒரு கவிதை!

உன் படத்தை நான் பார்த்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும் மறக்காத கன்றாவியே!

மூன்று மணி நேரங்கள் படம் பார்த்த காலம்தான்

இரண்டு நாட்க்களாய் இதயத்தில் வலிக்குதடா..

பார்க்காமல் சிலநிமிடம்... பயத்தோடு சில நிமிடம்.

கதறி அழுதபடி கண்ணீரில் சிலநிமிடம்...

இரக்கமே இல்லாமல்..

எல்லா சீன்களிலும் டயலாக் பேசியே டரியல் ஆக்கிய சிலநிமிடம்!

உன் படத்தை நான் பார்த்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும் மறக்காத கன்றாவியே!

எது நியாயம் எது பாவம்

உனக்குகூட தெரியவில்லை!

அது படமா இல்ல எனக்கு வச்ச பாம்மா அதுபற்றி அறியவில்லை!

யார் முதலில் யார் முடிவில் ஒருவருக்கும் தெரியவில்லை!

படம் பார்த்த அனைவருக்குமே சங்குதானே?..

ஒருத்தனுக்கும் தோன்றவில்லை..

அச்சம் கலைந்தேன்..ங்கொய்யால..

அடுத்த படமும் நடிப்பேன் என்றாய்..

தூக்கம் கலைந்தேன்..

துயரங்கள் தொடரும் என்றாய்!

படம் பார்த்த காலத்தை கனவாக நினைத்தாலும்..

உன் படம் பார்த்து கடைசியாக அழுத கண்ணீர் கைகளிலே ஒட்டுதடா...

உன் படத்தை நான் பார்த்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும் மறக்காத கன்றாவியே!
 
ஹி..ஹி....வேலாயுதம்  படத்தை பார்த்ததின்  விளைவு இது!
நன்றி - வைரமுத்து (இருவர் பட கவிதை)
 
**********************************************************************************
ஒவ்வொரு விடியலிலும்

உன்னை நோக்கியே என் பிராத்தனை..

என் ஒவ்வொரு பாதச்சுவடும்..

உன்னை நோக்கியே அணிவகுக்கும்..

இரவுவரை உனைப்பார்த்து

உறவாடி வந்தாலும்..

விடிந்ததுமே என் மனது

உன்னை நோக்கி திரும்புவதை...

காதல் என்று சொன்னால் கயவர்கள்

நம்பமாட்டார்கள்!

என் ஆலயத்தின் மூலஸ்தானம்

திறப்பதற்கு காத்திருந்து..உன்

தரிசனத்தை நான் காண- இன்னும்

எத்தனை மணித்துளிகள் காத்திருக்க வைப்பாயோ?

# என்னங்கடா அநியாயம்...10 மணி ஆகப்போகுது...இன்னும் டாஸ்மாக் தொறக்கலை?

**********************************************************************************
ஒவ்வொரு இரவிலும்

உன்னுடைய தாலாட்டு..

ஒவ்வொரு விடியலிலும்

உன்னுடைய உற்சாகம்...

பல இரவுகளின் பொழுதை

உன்னோடு கழித்ததும்..

பல பயணங்களில்

என் மனதில் நீ தவழ்ந்ததும்...

என் தனிமையை பங்கிட்டு

தாரமாய் நின்றதும்..

பல நேரம் ஆனந்தம் 

சில நேரம் அதிர்ச்சி - இப்படி

கலவையான உணர்சிகளை

கண்மூடி ரசித்ததும்...

எப்படி தொலைத்தேன் உன்னை?

இன்றுவரை புரியவில்லை....

இப்போது யாரிடம் நீ?

என் நண்பனைகூட நம்பவில்லை...

இருந்தாலும் இருக்கலாம்!

# என் பாக்கெட் ரேடியோ தொலைஞ்சி போச்சி.. பார்த்தவங்க சொல்லுங்களே?

**********************************************************************************

Monday, October 24, 2011

பயடேட்டாவின் பய(ங்கர)டேட்டா!


பெயர்                                                         : பயோடேட்டா 

புனைப்பெயர்                                         : பய(ங்கர)டேட்டா

தொழில்                                                    : சிரிக்கவைப்பது

உபதொழில்                                            : தீ வைப்பது 

உப உபதொழில்                                  : பெட்ரோல் ஊத்துவது

தலைவர்                                                  : சிக்குபவர்கள்
 
துணைத்தலைவர்                               : இதை திட்டுபவர்கள்
 
பொழுதுபோக்கு                                   : கலாய்ப்பது

துணைப்பொழுதுபோக்கு                 : கலகம் வர வைப்பது

வயது                                                         : கொஞ்ச நாள்தான் ஆகுது 
பலம்                                                           : நகைச்சுவை

பலவீனம்                                                 : சில சமயம் அதில் உண்மைகள் வருவது

நம்பிக்கை                                               : இனிமேலும் தொடரும் என்று

பயம்                                                           :  நாட்டாமைகள் 
லட்சியம்                                                 : நகைச்சுவை மட்டும்

நீண்டகால சாதனை                       :  யாருமே கண்டு கொள்ளாமல் இருந்தது

சமீபத்திய சாதனை                         : கண்டுகொள்ளாமல் யாருமே இல்லாதது

இதுவரை மறந்தது                          :  கவலைகளை

இனி மறக்க வேண்டியது           : கவலை படுபவர்களை

பாடாய் படுத்துவது                         : சொம்புகள்
இதுவரை புரியாதது                       : அப்பிடி என்ன செய்திட்டோம்?


விரும்புவது                                          : தன்னால் வந்து மாட்டும் ஆடுகளை

விரும்பாதது                                        : அந்த ஆடு நான்தான் என்று வெளியில் சொல்வதை
நசுங்கியது                                            : சொம்புகள்

நசுங்காதது                                           : நட்புகள்

அடையாளம் காட்டியது              : நண்பர்களை

அடையாளம் தெரிந்தது                : சாயம் வெளுத்த நரிகளை
 
எச்சரிக்கை இல்லை... உங்க கைய காலா நினைச்சு சொல்றோம்... இது நகைச்சுவைக்கு மட்டுமே :-)) 


Wednesday, October 19, 2011

தமிழ்மணம் பிரச்சனையில் டெரர் கும்மியின் நிலைப்பாடு!


அனைவருக்கும் வணக்கம், 
கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் பிரச்சனைகளைப் பற்றி அனைவருமே அறிவீர்கள்.. அதன் தொடக்கம் எங்களுடைய அந்த பயடேட்டா பதிவு என்பதால் நாங்களும் சில விளக்கங்களை இதன் மூலம் கொடுப்பது அவசியமாகிறது! இதற்காக அந்த பதிவு தெரியாமல் போட்டுவிட்டோம் என்றோ அதில் தமிழ் மண நிர்வாகி திரு. பெயரிலி அவர்கள் போட்ட பின்னூட்டங்கள் ஏற்றுக்கொள்ள கூடியது என்றோ பின்வாங்க வில்லை. அந்த பதிவு தமிழ் மணத்தின் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டோ அல்லது வேறு உள்நோக்கத்திலோ வெளியிட வில்லை. மேலும் ஒட்டுமொத்த தமிழ்மணத்தை விட அவரின் கருத்துரைகளையும் எதேச்சாதிகரா போக்கையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம்..  இதுதான் எங்கள் நிலைப்பாடு.. இதற்கு மேலும் விளக்கங்கள் போதும் போதும் என்ற அளவிற்கு பல இடங்களில் கொடுத்தாகி விட்டது.


பதிவு போட்ட பிறகு தமிழ்மணத்தின் செயல்பாடு எங்களுக்கு பிடிக்கவில்லை அதனால் எங்கள் குழுவில் உள்ள பதினேழு பேரும் அதில் இருந்து விலகுவதாக நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி விலகிக்கொண்டோம். ( கவனிக்கவும்... கடிதம் எழுதி மட்டுமே... எதிர்ப் பதிவு போட்டு அல்ல ) யார் அந்த பதினேழு பேர் என்று தெரிந்து கொள்ள எங்கள் தளத்தில் பார்க்கவும்.

நாங்களாக யாரையும் கட்டாயபடுத்தி தமிழ் மணத்திற்கோ அல்லது திரு.பெயரிலி அவர்களுக்கு எதிராக பதிவு போடச் சொல்லவும் இல்லை தமிழ் மணத்தில் இருந்து விலகும் படி அறிவுறுத்தவும் இல்லை.. அது அவரவர் சொந்த விருப்பங்களின் பேரில் எடுத்த முடிவு. 

இதுவரை தமிழ்மணத்திற்கு எதிராகவும் திரு.பெயரிலிக்கு எதிராகவும் பல பதிவுகள் வந்து விட்டன.. அதில் ஒரு இடத்தில கூட நாங்கள் அவர்களை ஆபாசமாகவோ அல்லது கண்ணியக்குறைவாகவோ பேசவில்லை என்பதை எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.

இஸ்லாமிய நண்பர்கள்  சுட்டி காட்டும் அந்த முகமனை கிண்டல் செய்தது பற்றி அந்த நேரத்தில் எங்களுக்கு தெரியாது.... இன்று வரையிலும் அந்த முகமனை பற்றி எங்களுக்கு சரியான தெரிதல் இல்லை.. அதனாலேயே அதை பற்றி நாங்கள் கருத்து எந்த இடத்திலும் கூறவில்லை... தவறாக இருக்கும் பட்சத்தில் அவர் மன்னிப்பு கேட்ப்பதும் அவரை மன்னிப்பதும் அவர்களது நிலைப்பாடு.. இதில் நாங்கள் கருத்து சொல்ல ஒன்றுமில்லை... ஆனால் ஒன்றை  கூறிக்கொள்கிறோம்.. முகமனையை அவர் கிண்டல் செய்ய எங்கள் பதிவுதான் வாய்ப்பாக அமைந்தது என்று நினைத்தால் முஸ்லிம் சகோதரர்களிடம் வருத்தம் தெரிவிக்க எந்த ஈகோவும் எங்களுக்கு இல்லை.. சகோதரர்களே நீங்கள் அப்பிடி யாரேனும் நினைத்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்!

ஆனால்.. இந்த பிரச்சனையில் குளிர் காய நினைக்கும் சிலர் நாட்டாமை பண்ண வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.. மேலும் எங்களை ஏதோ மத உணர்வோடும் ஜாதி உணர்வோடும் சம்பந்தபடுத்த சிலர் ஆசைப்பட்டு பின்னூட்டம் இடுவது தெரிகிறது.. இதன் மூலம் நாங்கள் சொல்வது நாங்கள் எந்த மதத்துக்கோ ஜாதிகோ எதிரானவர்கள் இல்லை..அது எங்களுக்கு தேவையும் இல்லை.. எங்கள் குழுமத்தில் பதினேழு பேர் இருக்கிறோம்.. இதுவரை யார் எந்த மதம் எந்த ஜாதி என்று தெரியாமல்தான் பழகுகின்றோம்... எங்களுடைய சொந்த பதிவில் கூட மத ஜாதி உணர்வை தூண்டும் விதத்தில் ஏதேனும் உங்களால் சுட்டி காட்ட இயலுமா? இதை சவாலாகவே கூறுகிறோம்.. அப்படி சுட்டிகாட்டுங்கள்.. இப்போதே அந்த கருத்துரையை நீக்கச் சொல்லி, வருத்தம் தெரிவிக்க சொல்கிறோம். அது தப்பு மாதிரி தெரியுது ஆனா தப்பு இல்லையென்று நாங்கள் நியாயப்படுத்திச் சொல்ல மாட்டோம்!

இதற்கு மேலும் அந்த பயடேட்டா பதிவில் எங்களிடம் பதிலை எதிர்பார்த்தோ அல்லது விவாத நோக்கிலோ யாரும் கருத்துரை இடவேண்டாம். அதே போல் தூங்கி எழுந்த சிலர் நாட்டாமை பண்ணுகிறேன் என்று விடும் பதிவிலோ பஸ்சிலோ எங்கள் பதிலை எதிர்பார்க்கவேண்டாம்! போதுமான பதில்களை கொடுத்தாகி விட்டது... தமிழ்மண நிர்வாகிகளுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் பல வேலைகள் உள்ளது.

தமிழ்மணத்தை பற்றி இனி நாங்கள் கருத்து எதுவும் சொல்லப் போவதும் இல்லை.. தேவையுமில்லை. நாங்கள் விலகி விட்டோம் இனியும் இணைவதாக இல்லை.. ஆகவே இதன் மூலம் நாங்கள் சொல்வது இதுவரை அவர்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இனிமேலும் அவர்களின் புரிந்துணர்வுடன் கூடிய முன்னேற்றங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

இந்த பிரச்சனைக்கு பிறகு இதுவரை வெளிவந்த பதிவுகளில் எங்கள் குழுமத்தை சேர்ந்தவர்கள் இட்ட கருத்துரைகளை நாங்கள் எங்கள் குழுமத்தின் கருத்தாகவே ஏற்றுக்கொள்கிறோம்.. அதில் ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள் அதற்காக ஏதோ ஒரு பதிவில் பகிர்வுக்கு நன்றி என்று போட்டால் மதத் துவேசம் என்று சொல்ல வேண்டாம்..  இனி எங்கள் உறுப்பினர்கள் சொல்லும் கருத்துரைகள் அவரவர் சொந்த கருத்துரைகளே.. அதை டெரர் கும்மியோடு சம்பந்தப்படுத்த வேண்டாம் ( நன்றி - தமிழ்மணம் ) ஒருவருக்கு சொந்த கருத்துக்கள் இருக்க கூடாதா என்ன?

அந்த பதிவில் வந்த ஆபாச கருத்துரைகளை கண்டித்தும்...  இதுவரை எங்களோடு துணையாக இருந்து... இன்றும் இருந்துவரும் நண்பர்களுக்கு எங்கள் நன்றிகளையும் சொல்லிக்கொள்கிறோம்!

இந்த விளக்கம் கூட இது அடிப்படை பிரச்சனையில் இருந்து திசைமாறி மத ரீதியாக போய்விட்டதாலும் அதை வைத்து நாட்டமை செய்ய சிலர்ஆசைப்பட்டதாலுமே அவசியமாகி இருக்கிறது.. மற்றபடி நாங்கள் என்றுமே தவறென்றால் தட்டி கேட்க தயங்க மாட்டோம் என்பதையும் இதன்மூலம் சொல்லிக்கொள்கிறோம்! நன்றி.. டாட். :)


டெரர்கும்மி நண்பர்கள்

Wednesday, October 12, 2011

7 - ம் அறிவு படத்தின் கதை.. முதல் முறையாக உங்களுக்காக!
படத்தின் நாயகன் சூர்யா(நடிகர் சிவகுமாரின் மகன், நடிகை ஜோதிகாவின் கணவன், கார்த்தியின் அண்ணன்) ஒரு சர்கஸ் கம்பனியில் சர்கஸ் கலைஞனாக வேலை பார்க்கிறார். ஒருநாள் விஞ்ஞானி  ஆன சுருதி, நாயகன் சூர்யாவை சந்திக்கிறார்! இருவருக்கும் வேதியியல் மாற்றம் உருவாகி காதல் மலர்கிறது!. பின்னணியில் ஹரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல ஒரு  ஆங்கில  பாடலை சுட்டு ஒரு பாடல் போடுகிறார்! பாடல் முடிவதற்குள்... அந்த பாடலுக்கு சொந்தக்காரன் சண்டைக்கு வருகிறானோ இல்லையோ...  ஒரு பிரபல அரசியல்வாதி சண்டைக்கு வருகிறார்...

ஏன் சண்டைக்கு வருகிறார்? சூர்யாவுக்கும் அந்த குழப்பம்தான்.. ஆனால்  யாருக்கும்  எந்த  சிரமமும்   இல்லாமல் அந்த அரசியல்வாதியே  காரணத்தை சொல்லுகிறார்... சர்கஸ் என்பது  அவரது கட்சிக்கு  உரிமையான   ஒன்றாம்...  இவர்கள் தாவி தாவி சர்கஸ் பண்ணுவது  அவர்கள் கட்சியை கிண்டல் அடிப்பது போல் உள்ளது என்று சண்டைக்கு வருகிறாராம்... ஒரு வழியாக அவர்களை அடித்து போட்டு  விட்டு  அவர்களை பார்த்து வசனம் பேச ஆரம்பிக்கிறார் சூர்யா!

 அதை கேட்ட அந்த அரசியல்வாதி... சூர்யா காலில் விழுந்து கெஞ்சுகிறார்... " தம்பி.. என்னைய உன் கையாலே கொன்னுவிடு.. இப்பிடி வசனம் பேசியே என்ன சித்திரவதை செய்யாத.. என்று கதறுகிறார்... அதைக்கேட்ட சூர்யாவும்... சரி.. கடைசியா நான் கஷ்டப்பட்டு மனப்பாடம் செஞ்ச நூறு பூக்களின் பேர வரிசையா சொல்றேன்.. அத மட்டும் கேட்டுட்டு போங்கன்னு சொல்றார்... ஆனா அதைகேட்ட மறுவினாடியே.. அந்த அரசியல்வாதியின் உயிர் அநியாயமாக பிரிகிறது!

இதை பார்த்துகொண்டிருந்த ஸ்ருதி அஞ்சு நிமிஷம் பேசியே ஒருத்தன சாகடிக்கிறியே? ஆயுசு முழுக்க உன்கிட்ட நான் எப்பிடி பேச முடியும் என்று கேட்கிறார்... பின்னணியில் ஹரிஸ் ஜெயராஜ்... இந்த சீனுக்கு எந்த ஆல்பத்தில் இருந்து சுடலாம் என்று யோசிக்கும்போதே சூர்யா ஸ்ருதி   இருவருக்கும்  இடையில் கருத்து மோதல் வந்துவிடுகிறது!  அபோது ஸ்ருதி  சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்கிறார்!!

அபோது கோவமான சூர்யா ஸ்ருதியிடம்...   சட்டையை கலட்டி தனது சிக்ஸ் பேக் உடம்பை காண்பிக்கிறார்... ஒன்றும் புரியாமல் ஸ்ருதி சூர்யாவை பார்க்க.. சூர்யா சொல்லுகிறார்... " என்ன பார்க்கிற? ஏன் இப்ப சிக்ஸ் பேக் உடம்ப காண்பிக்கிரேன்னா?.. அந்த கருமம்தான் எனக்கும் தெரியல... ஏதோ.. டைரெக்டர்  சொன்னாரு காண்பிக்கறேன்" என்று சொல்கிறார்! இதுக்கும் நீ மயங்கலைனா.. இன்னைக்கு நைட்டே பவர் ஸ்டாரோட ஆனந்த தொல்லை படத்த பார்த்திட்டு தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டுகிறார்! மேலும் லத்திகா பட டிவிடியை உனக்கு அனுப்புவேன் என்றும் மிரட்டுகிறார்!

 இதைக்கேட்டு அதிர்ச்சியான ஸ்ருதி... உயிர் பயத்தில் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்கிறார்!! ஆனால் சூர்யா மன்னிக்க மறுக்கிறார்!! அபோதுதான் திரைக்கதையில் சூடு பிடிக்கிறது. பார்க்கிற நமக்கும் பேதி பிடிக்கிறது... பிறகு சூர்யாவின் இந்த தற்கொலை முயற்சிக்கு தான்தான்  காரணம் என்று நினைக்கும் ஸ்ருதி.. சூர்யாவின் இந்த பிரச்சினைக்கு காலச்சக்கரம் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறார் விஞ்ஞானியான ஸ்ருதி.  காலச்சக்கரம் மூலம் சூர்யாவை 30 வருடங்கள் பின்னோக்கி பயணம் செய்ய வைக்கிறார்.

அபோது சூர்யா 6 வயது சிறுவனாக நடித்திருக்கிறார். 36 வயதில் நான் உயரம் குறைவாக இருப்பதற்கு 6 வயதில் சரியாக Complan குடிக்காததுதான் காரணம் என கண்டறிகிறார் சூர்யா! மேலும் அப்போது சைனாவில் இருந்ததால்தான் அதை குடிக்கமுடியவில்லை என்று கண்டறிகிறார்! இப்போது திரைக்கதை  சைனாவுக்கு  செல்கிறது... இந்த இடத்தில ஹரிஸ் ஜெயராஜ்.. கவுண்ட மணி  ஏற்க்கனவே பாடி  வைத்த ஒரு சைனீஸ்  பாடலை யாருக்கும்  தெரியாமல்  ரீமிக்ஸ்  பண்ணி போடுகிறார்.. சூர்யாவுக்கு சைனாவில் ஏன் காம்ப்ளான் கிடைக்கவில்லை? திரும்பவும் அதை குடித்து  வளர்கிறாரா?  ஸ்ருதியை கை பிடிக்கிறாரா இல்லையா? என்பதுதான் மீதி கதை! அதை தைரியமிருந்தால் வெண்திரையில் காண்க!

குறிப்பு - இது  பேஸ் புக்கில் இருந்து எடுத்து அதை கொஞ்சம் டெவலப் செய்து இங்கு அளித்திருக்கிறோம்!


Monday, October 10, 2011

தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


பெயர்                            : தமிழ்மணம்புனைப்பெயர்                     : பதிவுலக கடவுள்


தொழில்                          : திரட்டுதல், பதிவுகளைஉபதொழில்                       : ரேங் போடுதல் 
உப உபதொழில்                  : கான்ஸ்டபிள் (ட்ராபிக்)


தலைவர்                         : யாருக்கும் தெரியாது


துணைத்தலைவர்                               : பிரபல பதிவர்கள் அல்ல 


பொழுதுபோக்கு                   : பதிவுகளை இணைத்தல்


துணைப்பொழுதுபோக்கு          : பதிவுகளை நீக்குதல்


மேலும் பொழுதுபோக்கு           : எச்சரிக்கை அனுப்புதல்


வயது                            : வயதாகிக் கொண்டிருக்கிறது


பலம்                             :பதிவர்கள்


பலவீனம்                         : அதுவும் அவர்களேதான்


நம்பிக்கை                        : மொக்கைப் பதிவர்களும் 

இலக்கியவியாதிகளாகி விடுவார்கள்


பயம்                             : இன்னும் கொஞ்ச நாளில் 

தமிழ்மணம் முழுதும் மொக்கையாகி விடுமோ?


லட்சியம்                         : நெ.1 திரட்டி


நீண்டகால சாதனை               : காப்பி-பேஸ்ட்டை 

கண்டுகொள்ளாமல் இருந்தது


சமீபத்திய சாதனை                               :காப்பி-பேஸ்ட்டை அதிரடியாக 

தூக்கியது


இதுவரை மறந்தது                :  ஆபாச பதிவுகளை


இனி மறக்க வேண்டியது           :மொக்கை பதிவர்கள் 

திருந்துவார்கள் என்று நம்புவதை 


பாடாய் படுத்துவது                : நட்சத்திரங்கள்


இதுவரை புரியாதது                             : விருதுகள்விரும்புவது                      : இனி சர்வர் பிரச்சனை 

வரக்கூடாது என்று

விரும்பாதது                     கட்டண சேவை பற்றி கேள்வி 
கேட்பதை
எச்சரிக்கை: பதிவு முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே. 

Thursday, October 6, 2011

பாட்டி சுட்டிங் வடை


ஒரு ஊர்ல ஒரு பாட்டி சுட்டிங் வடை ஆன் ஹெர் வடை சட்டி. அப்போ ஒரு செல்வா வடை வேணும் கையில காசு இல்லை அப்டின்னு கேக்குறான். பாட்டி டென்சனாகி, நோ பேராண்டி, நோ கிரெடிட், if யு வான்ட் வடை, ப்ளீஸ் பே கேஷ் ஆர் யுசிங் யுவர் கிரெடிட் ஆர் டெபிட் கார்ட். உடனே செல்வா அழ ஆரம்பித்தான்.

உடனே பாட்டி "டெல்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்ல தட்டாத" னு பாட ஆரம்பிக்கிறாள். சரி பாட்டி ஐ வில் கம் வித் மை பாதர் கிரெடிட் கார்ட் னு சொல்லிட்டு போயிடுறான். இந்த சமயத்துல ஒரு காக்கா வந்து அந்த வடைய பாட்டிகிட்ட கேக்குது. பாட்டியும் காசு இல்லாட்டி கிடையாதுன்னு சொல்லிடுறா.

காக்கா டென்சனாகி "தருவியா தரமாட்டியா தரலைனா உன் பேச்சு கா" னு பாடிகிட்டே வடையை ஆட்டையப் போட்டுட்டு போயிடுது. பாட்டி "வட போச்சேன்னு" கவலைல உக்காந்துட்டா.
காக்கா மரத்துல உக்காந்துகிட்டு வடைய சாப்பிட போகும்போது நரி அங்க வந்தது. அது காக்காகிட்ட ஏய் காக்கா யு ஆர் வெரி ப்யுடிபுல். யுவர் வாய்ஸ் சோ நைஸ். "கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" னு பாடுச்சு. காக்காவுக்கும் ஒரே குஷி.

உடனே நரி "காக்கா நீ எனக்காக ஒரு பட்டு பாடென்னு" சொல்லுச்சு. உடனே காக்கா வடையை வாய்ல வச்சுகிட்டே "சாரி நரி ஐ ஆம் பீலிங் ஹங்ரி. சோ ஆப்டர் ஈட்டிங் வடை, ஐ வில் சிங்". உடனே நரி நோ காக்கா, நான் சிங்கராஜா ஆபீஸ்ல அமைச்சர்(மங்குனி அமைச்சர் இல்ல) வேலைக்கு இண்டர்வியுக்கு போறேன். சீக்கிரம் பாடு.
உடனே காக்கா அந்த வடையை அதோட லவ்வர்கிட்ட கொடுத்துட்டு "ஏமாந்த சோணகிரி" அப்டின்னு பாட ஆரம்பிச்சதாம். நரி கோபமாகி "காக்கா யு ஆர் சீட்டிங்". நான் நேத்துதான் இந்த கதையை படிச்சேன். நீ பாடும்போது வடை கீழ விழும். நான் எடுத்துட்டு ஓடனும். அதுதான கதை.

உடனே காக்கா சொல்லுச்சாம் "நல்லவேளை நான் நேத்துதான் இண்டர்நெட்ல இந்த கதையை படிச்சேன். இல்லைனா நானும் எங்க கொள்ளுதாத்தா பாபு மாதிரி ஏமாந்து போயிருப்பேன். தேங்க்ஸ் டு இன்டர்நெட் அப்படின்னு சொல்லுச்சாம்". நரியும் "வட போச்சேன்னு" போயிடுச்சு.


மாரல் ஆப் தி ஸ்டோரி: அப்டேட் மிக முக்கியம் அமைச்சரே....

Tuesday, October 4, 2011

ஜாதிக் கட்சித் தலைவர் செல்வா

செல்வாவுக்கு திடீர் என்று தான் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது. திடீரெனப் பிரபலமாக என்ன செய்யலாம் என அவர் நண்பரிடம் ஆலோசனை கேட்டார். எந்த வித முதலீடும் இல்லாம திடீர் பிரபலம் ஆகணும்னா நீ ஜாதிக் கட்சியில் தான் சேரணும். அங்கிருந்து கொஞ்ச நாள்ல நீ எம்எல்ஏ, எம்பி என முன்னேறிப் போயிட்டே இருக்கலாம் என்று செல்வாவின் நண்பர் அறிவுரை வழங்கினார்.

நண்பரின் ஆலோசனைப் படி ஜாதிக் கட்சியில் சேரலாம் என்று முடிவு செய்த செல்வா, அப்போது பிரபலமாய் இருந்த ஒரு ஜாதிக் கட்சியின் அலுவலகத்திற்கு சென்றார். அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு கட்சி உறுப்பினரிடம் தான் வந்த நோக்கத்தை செல்வா கூறினார். அவரிடம் சில அத்தியாவசிய தகவல்களைக் கேட்ட அந்த கட்சி உறுப்பினர், கடைசியாய் உன் ஜாதி என்ன என்ற ஒரு முக்கிய கேள்வியைக் கேட்டார்.அதுவரை சரியாய் பதில் சொல்லிக் கொண்டிருந்த செல்வா இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல் தடுமாறினார். சமாளிப்பாக என்னோட ஜாதிப் பேர் தெரியாதுங்க. ஆனால் நான் உங்க ஜாதிக்கு மாறிக்கிறேன் என்று செல்வா சொன்னார். அதற்கு கட்சிக்காரர் ஜாதியெல்லாம் மாற முடியாது. ஜாதி என்பது பிறப்பால வருவது என்று சொல்லி செல்வாவை அனுப்பிவிட்டார்.


ஜாதி  என்பது பிறப்பால் வருவது என்பதைக் கேட்ட செல்வா ஒரு புத்திசாலித்தனமான முடிவெடுத்தார். தான் பிறந்த மருத்துவமனைக்கு சென்று, அவர் பிறந்த போது பணியாற்றிய மருத்துவரை சந்தித்தார். அந்த ஜாதிக் கட்சியின் பெயரைச் சொல்லி தன்னை அந்த ஜாதியில் மீண்டும் ஒருமுறை பிறக்கச் செய்யுங்கள் என்று மருத்துவரிடம் கேட்டார்.அதற்கு பின்பு அந்த மருத்துவர், மருத்துவ தொழிலை விட்டு புண்ணாக்கு விற்க சென்று விட்டார் என்பதை இங்கே சொல்ல வேண்டுமா என்ன?