Showing posts with label பரிசு. Show all posts
Showing posts with label பரிசு. Show all posts

Thursday, October 17, 2013

HUNT FOR HINT-3 - The Game Starts Now.......

இணைய நண்பர்களே,
பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக கடந்த இரண்டு வருடங்களாக டெரர்கும்மி சார்பாக நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் மெகா புதிர் போட்டி உங்களின் ஆதரவால் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் அப்படியான ஒரு போட்டியை மேலும் சிறப்பாக நடத்த போவதாக முந்தய பதிவுகளில் சொல்லி இருந்தோம்.


ஆம், நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போல இதோ இன்று “HUNT FOR HINT”போட்டியின் 3 வது பதிப்பை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த போட்டியை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். புகழ் பெற்ற ஆன்லைன் விளையாட்டான க்ளூலெஸ் விளையாட்டின் தாக்கத்தால் டெரர்கும்மி நண்பர்களால் உருவான விளையாட்டு "HUNT FOR HINT". இது  பல லெவல்களை கொண்ட ஒரு ஆன்லைன் விளையாட்டு.
.

 


மேலும் உங்களுக்கு உதவ எங்களின் விளையாட்டு குழு உறுப்பினர்கள் விளையாட்டுக்கான் டிஸ்கஷன் போரத்தில் தயாராக இருக்கிறார்கள்... அதற்கான சுட்டி கேம் தளத்திலேயே இருக்கிறது.... பயன்படுத்தி கொள்ளுங்கள்....

கேள்விகள் படமாகவோ, எழுத்தாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு விதத்திலோ இருக்கலாம். ஆங்காங்கே இருக்கும் க்ளூக்களை கண்டுபிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்.

விளையாடும் முறை, விதிகள் மற்றும் பரிசு விவரங்களை விளையாட்டின் பிரத்தியேக தளத்தில் கொடுத்து இருக்கிறோம்.  விளையாடும் முன்பு அவற்றை படித்தல் நலம்.  இல்லையென்றாலும் இந்த இணைப்பில் உள்ள பதிவுகளைப் படித்தாலும் நலம்!




இந்த விளையாட்டை வடிவமைக்க பலர் தங்களின் உழைப்பையும், விலை மதிப்பில்லாத நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு உள்ளனர். அவர்களுக்கு எங்களின் சிறப்பு நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டு, போட்டியாளர்கள் இந்த போட்டியை நேர்மையான முறையில் அணுகி எங்கள் உழைப்புக்கு மரியாதை செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் போட்டியை தொடங்குகிறோம்.....


கீழே உள்ள சுட்டியை சொடுக்கி விளையாட தொடங்குங்கள்....


வாழ்த்துக்களுடன் 
டெரர்கும்மி 


டிஸ்கி: விளையாட்டின் ஆர்வத்தை கருதி.... இந்த பதிவிற்கு வரும் அனைத்து கமெண்ட்டுகளும் மட்டறுக்கப்படுகிறது.

***********************************************************************************************************

For Non Tamil Players:

Dear Friends,
Hunt for Hint is created by Terror Kummi Team, based on the concept of the popular online game Klueless. It is a multilevel game and each level is a web page. The questions will be in the form of picture, text, or some data. All you have to do is to hunt for the hints to cross each level and win.

Our Game designers are available to help you in Game discussion Forum... Link for the forum is available on the game site.... Pls utilize it....

Please read the Rules of the Game and play with a high integrity. 

With the above hope, We declaring that the Game to begins now...



Greetings,
Terrorkummi 

Tuesday, September 3, 2013

HUNT FOR HINT-3 is Coming Soon....



அன்பு நண்பர்களே!

உங்களுடைய ஆல் டைம் ஃபேவரிட்  ஹண்ட் ஃபார் ஹிண்ட் கேம்-3  இன்னும் சில வாரங்களில் உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திணறடிக்க வந்துகொண்டிருக்கிறது!

ஆம்! கடந்த வருடம் உங்களை சுமார் ஒரு வார காலம் உங்கள் கணிணிகளில் கட்டிப்போட்ட “ஹண்ட் பார் ஹிண்ட்” விளையாட்டின் மூன்றாம் பாகம் தயாராகிக்  கொண்டு இருக்கிறது!  

கடந்த வருடம் அதை விளையாடுவதில் நீங்கள் காட்டிய ஆர்வமும், அதை உருவாக்கிய எங்கள் குழுவிற்கு நீங்கள் தந்த  ஆதரவும், உற்சாகமும் எங்கள் டெரர் கும்மி குழுவை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது! ஆகவே, கடந்த வருடத்தை விட இன்னும் சிறப்பாக, மேலும் செம்மையாக இந்த கேமை வடிவமைத்து கொண்டு இருக்கின்றார்கள் எங்கள் தொழில்நுட்ப குழுவினர்! கடந்த வருடத்தைப் போலவே, ஏன் அதைவிட அதிகமாகவே இந்த மூன்றாம் பாகம் உங்களை பல வித வழிகளில் ஆச்சரியபடுத்தவும்  உங்களை குழப்பி உங்கள் மூளையை சுற்றவிடவும் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை! 

அதனால் மிகவும் கவனத்துடனும் உஷாராகவும் உங்களைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டிய தருணம் வந்து விட்டது. உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி அவர்களையும் விளையாட தயார்படுத்துங்கள்! ஆனால் நண்பர்களோடு கூட்டாக விளையாடுவதைத் தவிர்த்துக் கொள்ளவும்! இந்த கேம் பற்றியோ அல்லது வேற ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ terrorkummi@gmail.com ல் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்காக  உதவக் காத்திருக்கின்றோம்!

மேலும் விபரங்களை உடனுக்குடன் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்! எங்களோடு www.terrorkummi.com இல் தொடர்ந்து இணைந்திருங்கள்!

கடந்த வருடம் விளையாடியவர்களிடம் இருந்து இந்த கேமை மேம்படுத்த மேலான ஆலோசனைகளையும் கருத்துகளையும் எதிர்பார்க்கின்றோம்! ஆகவே அதையும் தயங்காமல் மேலே குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! புதியவர்களும் ஆலோசனைகள் அனுப்பலாம்.  

இனி என்ன? வேட்டை ஆரம்பம்தான்!

நன்றியுடன்,

டீம் HFH-3

Hunt For Hint பற்றி மேலும் விவரங்கள் அறிய இங்கு செல்லுங்கள்....


========================================================================




Hi Hunters,

"Hunt for Hint 3" is on its way! Yes, you read it right, we are back to play with your minds again. The game that had left you frozen/clenched in your seats for a week last year is back to strain your grey cells.

Look out for further details soon in www.terrorkummi.com....
Now, what do we say about “Hunt for Hint 3"? Your interest and immense support has driven our designer team crazy to produce an even colorful and mind blowing game. We are pretty sure that this year too we will be able to keep you captivated. Moreover did we mention that you need to be more proactive this time? we bet, it will squeeze you out.:)

Feel free to mail us terrorkummi@gmail.com if you have any doubts about this game!

Since you are one of the best participant in last year's game, We are Looking forward to your suggestions and ideas to make the game more interesting.

Start Hunting!

Thanks and Regards

Team HFH-3

To Know more about Hunt For Hint... Click here...





Monday, March 12, 2012

டெரர் கும்மி விருதுகள் 2011: போட்டி முடிவுகள்!




அனைவருக்கும் வணக்கம்,
மீண்டும் ஒரு முறை ஒரு சந்தோசமான அறிவிப்போடு உங்களைச் சந்திப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. கடந்த டிசம்பர் மாதம் எங்களின் டெரர் கும்மி ஓராண்டு நிறைவு நாளை ஒட்டி நாங்கள் அறிவித்த டெரர் கும்மி விருதுகளுக்கு நீங்கள் அனைவரும் அளித்த ஆதரவிற்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறோம்.

எங்கள் சந்தோசத்தை பகிரவும் எங்களை ஒன்றிணைத்த இந்த பதிவுலகிற்கு நாங்கள் ஏதாவது திருப்பி செய்யும் வாய்ப்பாகவும் கருதித்தான் இந்த டெரர் கும்மி விருதுகளை அறிவித்தோம். நாங்கள் எதிர்பார்த்ததுக்கும் மேலாக உங்கள் ஆதரவினை எங்களுக்கு தந்து எங்களை உற்சாகப்படுத்தியுள்ளீர்கள். இந்த ஊக்கமும் உற்சாகமும் எங்களை மேலும் புத்துணர்ச்சியோடு செயல்படவைக்கும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த போட்டியை முடிவு செய்த உடனே நாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல் இதில் எந்தவித ஒளிவு மறைவும் இருக்ககூடாது என்று முடிவு செய்தோம். மேலும் ஒவ்வொரு பிரிவுக்கும் சிறந்த நடுவர்களை கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அந்த நடுவர்களும் பதிவுகளை பதிவர்களின் எந்த அடையாளமும் இல்லாமல் படித்து தேர்வு செய்யவேண்டும் என்று ஆரம்பத்திலே முடிவு செய்துவிட்டோம். அதற்காக எங்கள் குழுவின் தொழிநுட்ப வல்லுனர்களின் உழைப்பு அளவிடமுடியாதது.

போட்டிக்கு விளம்பர உதவி செய்த யுடான்ஸ் திரட்டிக்கு எங்கள் சிறப்பு நன்றிகள்.

நாங்கள் முன்பே சொன்னதுபோல ஒன்பது பிரிவுகளை தவிர்த்து ஹால் ஆஃப் ஃபேம் பிரிவு மட்டும் டெரர் கும்மி நண்பர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கும் கடுமையான போட்டியே இருந்தது  என்று சொல்லலாம். இறுதிகட்டமாக மூன்று பதிவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவரைத்தான் நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். அவரை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நம்புகிறோம்.

சரி.. வரலாறு போதும் முடிவுகளை சொல்லுங்கள் என்கிறீர்களா? அதுவும் சரிதான்... பிரிவு வாரியாக முடிவுகளும் அந்த பிரிவுகளுக்கு யார் யார் நடுவர்களாக இருந்தார்கள் என்பதையும்  கீழே வரிசையாக கொடுத்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் டெரர் கும்மி சார்பாக வாழ்த்துக்களைத்  தெரிவித்துக்கொள்கிறோம். பரிசுகளை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்ற விபரங்களோடு வெற்றி பெற்றவர்களை விரைவில் தொடர்புகொள்கிறோம். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

1. அனுபவம்/ பயணக்கட்டுரை பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 64. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து ஏழு பதிவுகள் நீக்கப்பட்டு 57 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.

                                         பதிவர்: சுவடுகள் 


இரண்டாம் பரிசு -  பதிவு: இலங்கையின் இயற்கை கொடை
                                        பதிவர்: என்னைத்தேடி...ஸ்ரீ

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த கொஞ்சம் வெட்டிப்பேச்சு திருமதி.சித்ராஅவர்களுக்கும் நிழல்காலத்தில் திரு.சிவா அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


2. அரசியல் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 17. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து மூன்று பதிவுகள் நீக்கப்பட்டு 14 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.


முதல் பரிசு -            பதிவு: அவர்கள் அறியாமையிலேயே இருக்கட்டும்
                                        பதிவர்: ஜானகிராமன்
                                       பதிவர்: சூறாவளி

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த தேவியர் இல்லம் திரு. ஜோதிஜி அவர்களுக்கும் திரு. கே.ஆர்.பி. செந்தில் அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


3. கதைகள் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 37. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து ஒரே பதிவு மட்டும் நீக்கப்பட்டு 36 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.

முதல் பரிசு -         பதிவு: நாமிருவர்
                                       பதிவர்: சுபத்ரா 


இரண்டாம் பரிசு -  பதிவு: பத்து ரூபாய் ஞானி!
                                       பதிவர்: வே.சுப்ரமணியன்
 
இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த பரிசல்காரன் அவர்களுக்கும் திரு. ஆர்.வி.எஸ். அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


4. கவிதைகள் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 45. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து ஒரே பதிவு மட்டும் நீக்கப்பட்டு 44 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.


முதல் பரிசு  -           பதிவு: பொருந்தாமல் நிற்கும் இந்த தலைப்பு !
                                         பதிவர்: வி.பாலக்குமார் 


இரண்டாம் பரிசு -   பதிவு: போராளி....!
                                           பதிவர்: dheva 

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு.நேசமித்திரன் அவர்களுக்கும் திரு.தமிழ்க்காதலன்  அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


5. திரைவிமர்சனம் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 26. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து இரண்டு  பதிவுகள்  நீக்கப்பட்டு 24 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.


முதல் பரிசு -                   பதிவு: வாகை சூட வா - திரைப்பார்வை
                                                 பதிவர்: கார்த்திகைப் பாண்டியன் 


இரண்டாம் பரிசு  -            பதிவு: Have a break Selva!
                                                     பதிவர்: கார்க்கி  

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு.கேபிள் சங்கர் அவர்களுக்கும் திரு.கருந்தேள் ராஜேஷ் அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


6. அறிவியல்/தொழில்நுட்பம் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 20. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து ஒரு பதிவு மட்டும் நீக்கப்பட்டு 19 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்


முதல் பரிசு -            பதிவு: பிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..
                                         பதிவர்: பதிவுலகில் பாபு 
                                                       பதிவர்:  Dr.Dolittle  

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த புரியாத கிறுக்கல்கள் திரு. ஜி.எஸ்.ஆர் அவர்களுக்கும் கிரி பக்கங்கள் திரு.கிரி அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


7. நகைச்சுவைப் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 36. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து மூன்று பதிவுகள்  நீக்கப்பட்டு 33 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்


முதல் பரிசு -              பதிவு: NRI கொசுத்தொல்லைகள்
                                            பதிவர்: ILA(@)இளா 


இரண்டாம் பரிசு  -     பதிவு: வெடி - உலகப்படங்களின் உச்சம்!
                                             பதிவர்: சிவகுமார் ! 

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு.கந்ததாசன் ப்ளஸ் அவர்களுக்கும் திரு. குசும்பன் சரவணன் அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


8. விழிப்புணர்வு பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 52. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து பதிவுகள்  நீக்கப்பட்டு 44 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.


முதல் பரிசு -                பதிவு: இயற்கையைக் காப்போம்
                                              பதிவர்: செல்விஷங்கர் 
 
இரண்டாம் பரிசு  -      பதிவு: சைபர் க்ரைம் - ஒரு பார்வை
                                               பதிவர்: Abdul Basith  
 
இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு. சீனாஐயா  அவர்களுக்கும் திரு.புதுகை அப்துல்லா  அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


9. சிறந்த புதிய பதிவர் பிரிவு 
இந்தப்பிரிவில் போட்டிக்கு தங்கள் தளங்களை இணைத்த பதிவர்களின்  எண்ணிக்கை 30. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து 7 தளங்கள்  நீக்கப்பட்டு 23 தளங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த தளங்களாக  தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தத் தளங்கள்.


முதல் பரிசு -         பதிவர்: ஜேகே
                                       வலைப்பூ: வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!


இரண்டாம் பரிசு - பதிவர்: யுவராணி தமிழரசன்
                                        வலைப்பூ: கிறுக்கல்கள்...
 
இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு. கே.வி.ஆர்  அவர்களுக்கும் திரு.விந்தை மனிதன் ராஜாராம் அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


10. HALL OF FAME BLOGGER
நாங்கள் விருதுகள் அறிவிப்பிலே சொன்னதுபோல இது முழுக்க முழுக்க டெரர் கும்மி நண்பர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கும் நாங்கள் தனி வரைமுறையே வைத்திருந்தோம். இதற்கென தனி படிவம்  தயார்  செய்து அதில் பரிந்துரை செய்யும் பதிவர், காரணம்.அவரின் சிறந்த பதிவுகளாக கருதுபவையின் லிங்க் அனைத்தையும் வாங்கினோம்.முக்கியமாக ஒருவர் பரிந்துரைப்பது அடுத்தவருக்கு தெரியாத வண்ணம் பார்துகொண்டோம்.

இவ்வாறு பல கட்ட விவாதங்களுக்கு பிறகு டெரர் கும்மி நண்பர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த HALL OF FAME BLOGGER



தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள். இவர்களுக்கு முதல்பரிசாக ரூபாய் 600 க்கான புத்தக  கூப்பனும், இரண்டாம் பரிசாக ரூபாய் 400 க்கான புத்தக  கூப்பனும் வழங்கப்படும்.Hall Of Fame Blogger பிரிவில் தேர்ந்தெடுக்கபட்டவருக்கு ரூபாய் 1000 மதிப்பிலான புத்தகக் கூப்பன் வழங்கப்படும்.பரிசு கூப்பன்கள் அனைத்தும் டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் வழங்கப்படும். புத்தகங்களை எப்படி வாங்குவது என்ற விபரங்களுடனும் விருதுக்கான லோகோ கோடிங்குடனும் வெற்றி பெற்றவர்களை விரைவில் தொடர்புகொள்கிறோம்.

அனைவருக்கும் நன்றி.


Tuesday, January 10, 2012

டெரர் கும்மி விருதுகள் 2011 - பதிவுகளை இணைக்க இன்றே கடைசி தினம்!


அனைவருக்கும் வணக்கம்,
ஒரு சந்தோஷ தருணத்தில் நாங்கள் அறிவித்த டெரர் கும்மி விருதுகள் 2011 உங்களின் அமோக ஆதரவோடு முடிவுகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதுவரை ஆதரவளித்த ஆதரவு அளித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றிகள். பதிவுகளை இணைப்பதற்கு ஜனவரி 10 ம் தேதி வரை காலக்கெடு என்று சொல்லியிருந்தோம். அந்த காலக்கெடு இன்றோடு முடிவடைகிறது. அதற்கான ஒரு சின்ன நினைவூட்டல்தான் இந்த அறிவிப்பு. இதுவரை பதிவுகளை இணைக்காதவர்கள் முடிந்தவரை இன்றைக்குள் இணைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

சிலருக்கு பதிவு செய்வதிலோ அல்லது பதிவுகளை இணைப்பதிலோ சில பிரச்சனைகளை சொன்னார்கள். அவர்களுக்கு உதவிகளையும் ஆலோசனைகளையும் தனி மின்மடலில் அளித்துக்கொண்டு இருக்கிறோம். அதே போல் இன்றைக்கும் இதுபோல நீங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டால் தயங்காமல் எங்களுக்கு மின்மடல் அனுப்புங்கள்.

மின்னஞ்சல் அனுப்புவதற்கு முன் கவனிக்கவும்.
 
//Unxpected error occoured//
//cannot complete your request//
////We have faced an unexpected situation. Please try again! ///////
//Time delay//

இது போன்ற Error Messages வந்தால் தயவு செய்து ஹோம் பேஜ்க்கு மீண்டு சென்று லாகின் செய்யவும் அல்லது.... அந்த Browser tabஐ மூடிவிட்டு புதியதாக ஒரு பேஜ்ஜில் லாகின் செய்யவும். நன்றி.

உங்களுக்கான மின்னஞ்சல் முகவரிகள்.

பதிவுகளை இணைப்பதற்கு முன் சிரமம் பாராமல் இந்த விதிமுறைகளை படித்துவிட்டு உங்கள் பதிவுகளை இணையுங்கள். உங்களுடைய வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு மீண்டும் ஒரு நல்ல பொழுதில் உங்களை சந்திக்கிறோம். நன்றி.

டெரர் கும்மி நண்பர்கள்.

    



Wednesday, January 4, 2012

டெரர் கும்மி விருதுகள் 2011 - சில அப்டேட்ஸ்.




அனைவருக்கும் வணக்கம்,
டெரர் கும்மி நண்பர்களின் சார்பில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவருக்கும் கடந்தகால கால கசப்புகள் மறந்து இனிமையான நினைவுகளோடு இருக்க எல்லோரும் வணங்கும் இறைவனை வேண்டிக்கொள்கிறோம். நாங்கள் அறிவித்த டெரர் கும்மி விருதுகள் 2011 க்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு மிகவும் நன்றி. பலரும் தங்கள் படைப்புகளை விருதுகளுக்கு பதிவுசெய்து  வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் எங்கள் நன்றிகள்.

படைப்புகளை இணைக்க இன்னும் குறைந்த அளவே கால அவகாசம் உள்ளது. அதாவது ஜனவரி 10 - ம் தேதி வரை இணைக்கப்படும் பதிவுகள்தான் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகளை இணைக்காதவர்கள் கூடுமானவரை விரைவாக தங்கள் பதிவுகளை இணைக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்வதில் அல்லது பதிவுகளை இணைப்பதில் ஏதேனும் சந்தேகம் அல்லது குழப்பம் இருந்தால் தயங்காமல் எங்களை தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு உதவுவதற்காக காத்திருக்கிறோம். நீங்கள் கருதுரைகளில் கேட்க்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் எதில் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் எங்கள் டெரர் கும்மி விருதுகள் இணைப்பை தங்கள் முகப்பில் வைத்து எங்களை கௌரவப்படுத்திய யுடான்ஸ் திரட்டி நிர்வாகிகளுக்கு எங்கள் நன்றிகள். மேலும் டெரர் கும்மி விருதினைப்பற்றி தங்கள் வலைப்பதிவில் எழுதிய பல நண்பர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள்.  கால அவகாசம் குறைவாக இருப்பதால் இன்னும் இணைக்காமல்  இருக்கும் நண்பர்கள் உடனே தங்கள் பதிவுகளை இணைக்கவும். அப்படி நீங்கள் இணைத்துவிட்டால் உங்கள் நண்பர்களிடமும் சொல்லி அவர்களையும் ஊக்கப்படுத்தவும். நல்லதொரு பொழுதில் மீண்டும் உங்களை சந்திக்கிறோம். நன்றி.
           

    


Sunday, December 11, 2011

டெரர் கும்மி விருதுகள் அறிவிப்பு - மொத்தப்பரிசு RS10000 !




அனைவருக்கும் வணக்கம்,

ஒரு சந்தோசமான தருணத்தில்  சந்தோசமான அறிவிப்போடு உங்களைச் சந்திப்பதில் எங்களுக்குப் பெருமகிழ்ச்சியே! தமிழ்நாட்டில்  பிறந்து உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களை இந்த இணையம் ஒன்றாகக் கொண்டு வந்து சேர்த்தது. சிதறிக் கிடந்த எங்களை இரும்புத் துகள்களைக் காந்தம் இழுப்பது போல இழுத்துச் சேர்த்துக் கொண்டது எங்களின் நட்புதான்! ஒரு குழுவாக மின்மடலிலும் பதிவுகளிலும் கூடி கும்மி அடித்த நாங்கள் கடந்த வருடம் இதே நாளில்தான் இந்த டெரர் கும்மி தளத்தை ஆரம்பித்தோம்! ஆரம்பத்தில் எந்த இலக்கும் எங்களுக்கு இருக்கவில்லை.. எங்களின்  ஒரே நோக்கம் வாசக நண்பர்களின் சந்தோசம் மட்டுமே! அதனை இலக்காக கொண்டுதான் அற்புத விளக்கு என்ற நகைச்சுவை தொடர்.. அதன் பின் ஹன்ட் ஃபார் ஹின்ட் என்ற கேம் அதன் தொடர்ச்சியாக புதிய முயற்சியாக  பூமியை தேடி என்ற அறிவியல் கதை என்று எங்களை நாங்களே அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முயற்சி செய்தோம்... அதற்கு உங்களின் ஆதரவும் வரவேற்பும்தான் முதல் காரணம் என்றால் அது மிகையில்லை!


இதே நம்பிக்கையோடு எங்களின் சந்தோசத்தை பகிரவும் உங்களுக்கு எங்களது நன்றியினை தெரிவிக்கும் விதமாகவும் எங்கள் அடுத்தகட்ட  முயற்சியினை இன்று விதைக்கிறோம்! அதாவது இந்த வருடத்தில் வந்த சிறந்த பதிவுகளைக் கண்டறிந்து ஊக்குவித்து பரிசு வழங்குவதே அது.  அனைத்துப் பதிவுகளையும் பத்து பிரிவுகளாக வகைப்படுத்தி இருக்கிறோம்.. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. இந்த வருடம் ஜனவரி முதல் தேதியில் இருந்து டிசம்பர் இறுதி வரை பதிவிடப்பட்ட/பதிவிடப்போகும்  உங்களுடைய பதிவுகளில் சிறந்த பதிவு எந்த பிரிவின் கீழ் வருகிறது என்று பார்த்து தயங்காமல் எங்களுக்கு அனுப்புங்கள். ஒவ்வொரு பிரிவிற்கும் இரண்டு நடுவர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்  அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இரண்டு இடுகைகளுக்கு (ஒவ்வொரு பிரிவிலும்) டெரர் கும்மி விருதுடன் முதல் பரிசும் இரண்டாம் பரிசும் வழங்கப்படும்! மொத்த பரிசுத்தொகை  RS 10000/-!





எப்படி உங்கள் பதிவுகளை இணைப்பது என்று இப்பொழுது குழம்ப வேண்டாம் அதைப்பற்றியும் எந்த தேதியில் இருந்து இணைக்க ஆரம்பிக்கலாம், இணைப்பதற்கு இறுதி தேதி எது மற்றும் மற்ற விதிமுறைகளை அனைத்தையும் அடுத்தடுத்த பதிவுகளில் தருகிறோம்.  இப்போது என்னென்ன பிரிவுகள் என்று தந்திருக்கிறோம், அதற்கு தகுந்தாற்போல் உங்கள் சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுத்து/தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்!


1 . நகைச்சுவைப்  பதிவுகள்.
இந்த பிரிவின் கீழ் உங்கள் ஆகச்சிறந்த நகைச்சுவை படைப்பு என்று கருதும் எந்த படைப்பையும் இணைக்கலாம்! உங்கள் பதிவுகளை தேர்ந்தெடுக்க இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்கள் தயாராக இருக்கின்றனர்! இன்னும் என்ன தாமதம்? கிளப்புங்கள் பட்டையை :-)

2 . கவிதைகள்
இந்த பிரிவின்கீழ் உங்கள் கவிதைகளை இணைக்கலாம். கவிதை என்றால் அது எந்த வடிவமாக இருந்தாலும் கவலை வேண்டாம் மரபுக் கவிதை, புதுக்கவிதை இப்படி தனித்தனிப் பிரிவுகள் இல்லை.  எப்படிப்பட்ட கவிதையையும் எங்களிடம் தாருங்கள். அதில் இருந்து சிறந்த முத்துக்களை தேர்ந்தெடுக்க எங்கள் கவிஞர்கள் தயாராக உள்ளனர்!

3 . விழிப்புணர்வு
இந்தப் பிரிவின் கீழ் உங்கள் விழிப்புணர்வு பதிவுகளை இணைக்கலாம்.. விழிப்புணர்வு என்றால் அது சமூகம், சுற்றுச்சூழல், கல்வி, மொழி இப்படி எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம்! உங்கள் பதிவு சமூக மாற்றத்திற்கு சின்ன விதையை விதைக்கும் என்று கருதினால் அதை தயங்காமல் எங்களிடம் இணையுங்கள்! சிறந்ததை தேர்ந்தெடுக்க எங்கள் நடுவர்கள் தயாராக உள்ளனர்!

4 . கதைகள்
இந்தப் பிரிவின் கீழ் சிறந்த கதை என்று நீங்கள் நினைக்கும்  உங்கள் கதைகளை இணைக்கலாம்! கதைக்களன் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்... சமூகம், குடும்பம், க்ரைம், த்ரில்லர் இப்படி.. அப்பறம் என்ன தயக்கம்? உடனே தயாராகுங்கள்! (தொடர்கதைகளுக்கு அனுமதி இல்லை, மன்னிக்கவும்)

5 . அனுபவம்/பயணக்கட்டுரை
இரண்டு பெயர் கொண்ட தலைப்பை பார்த்து குழம்ப வேண்டாம்.. சிலர் ஒரு கடைக்குச் சென்று வந்த அனுபவத்தைக் கூட அழகாகச் சொல்லியிருப்பார்கள்... சிலர் ஒரு இடத்திற்கு போய் வந்தால் அவர்களின் கட்டுரையின் வாயிலாக நம்மையும் அந்த இடத்திற்கே அழைத்துச் செல்வார்கள்! உங்கள் பதிவுக்கு இப்படி ஒரு தகுதி உண்டென்று நீங்கள் நினைத்தால் தயங்காமல் பதிகளை இந்த பிரிவின்கீழ் இணைக்கலாம்!

6 . அரசியல் கட்டுரை
கடந்த கால அரசியல் ஆகட்டும் சம கால அரசியல் ஆகட்டும், இரண்டைப் பற்றியும் திறம்பட எழுதக்கூடிய பதிவர்கள் நம் பதிவுலகத்தில் எத்தனையோ பேர் உள்ளனர். இப்படி ஒரு பதிவாக உங்கள் பதிவு இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் தயங்காமல் இந்த பிரிவின் கீழ் இணைத்துவிடுங்கள்!

7 . திரை விமர்சனம்
இன்று இயக்குனர்கள் கூட நம் பதிவர்களுக்கு சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யும் நிலைக்கு நம் பதிவர்களின் விமர்சனம் தரமாகவும் நடுநிலையாகவும் இருக்கின்றது! மோசமான திரைப்படத்தின் விமர்சனத்தைக் கூட நல்ல விமர்சனம் என்று சொல்ல வைக்கும் வகையில் எழுதக்கூடியவர்கள் இங்கு அதிகம். இப்படி ஒரு விமர்சனத்தை நீங்கள் எழுதியிருந்தால் இந்த பிரிவின்கீழ் இணைத்துவிடுங்கள்!

8 . தொழில்நுட்பம்
தொழில்நுட்ப பிரிவில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் சம்பந்தமான பதிவுகள் மட்டுமல்லாது, அறிவியல், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட பதிவுகளையும் இணைக்கலாம். கணினி சம்பந்தமான அனைவருக்கும் தெரிந்த விளக்கம் அளிக்கும் பதிவுகளாக அல்லாமல் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் புதிதாக அறிமுகமாகும் கணினி மென்பொருள்களை பற்றி விளக்குவதாகவும்,  அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் சம்பந்தமான எல்லோருக்கும் புரியும்படியான கட்டுரைகளாகவும் இருத்தல் நலம்.

9 . சிறந்த புதுமுக பதிவர்கள்
நீங்கள் இந்தவருடம் ( 2011 )  ஜனவரி முதல் தேதிக்கு பிறகு பதிவுலகிற்கு வந்து வாசகர்களிடம் நல்ல வரவேற்பை அல்லது அவர்களால் கவனிக்கப்படாமல் போன நல்ல பதிவுகளை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தால் தயங்காமல் இந்த பிரிவின் கீழ் இணைத்துவிடுங்கள்! உங்களை அங்கீகரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்! இதற்கு நீங்கள் எந்தக் குறிப்பிட்ட இடுகையையும் இணைக்க வேண்டாம். உங்கள் தளத்தின் முகவரியை மட்டும் இணைத்தால் போதுமானது. மற்றதை எங்கள் நடுவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!

10 . ஹால் ஆஃப் ஃபேம் பதிவர்.
இந்த பிரிவில் நீங்கள் இணைக்கமுடியாது. இது இந்த வருடம் முழுவதும் தொடர்ச்சியாக பல துறைகளிலும் படிக்க சுவாரஸ்யமான பதிவுகள் தந்த பதிவர் ஒருவரை அடையாளம்  காட்டும்  முயற்சி!  இது முழுக்க முழுக்க டெரர் கும்மி நண்பர்கள் நாங்கள் பதினாறு பேரும் ஒவ்வொருவரை நாமினேட் செய்து அதில் இருந்து ஒரு சிறந்த பதிவரை  தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளோம். இதில் எங்களுக்கு என்று சில விதிகளை வகுத்துள்ளோம். இந்த பிரிவு மட்டும் முழுக்க டெரர் கும்மி முடிவு சார்ந்தது!  

சரி.. எல்லா பிரிவுகளையும் பார்த்தாயிற்று.. இனி நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பதிவுகளை பிரிவுகளுக்கு தகுந்தாற்போல் வகைப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். விரைவில் அடுத்த அறிவிப்பில் எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை எப்படி இணைக்கலாம் என்றும் இணைப்பதற்கு என்னென்ன விதிமுறைகள் என்றும் சொல்லுகிறோம்! இந்த நேரத்தில் இன்னொன்றும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறோம். மேலே குறிப்பிட்ட பிரிவுகளில் 10 வது குறிப்பிட்ட ஹால் ஆஃப் ஃபேம் பதிவரை தேர்ந்தெடுப்பது மட்டுமே டெரர் கும்மி உறுப்பினர்கள். மீதமுள்ள ஒன்பது பிரிவுகளும் டெரர் கும்மியில் உறுப்பினர் அல்லாத நடுவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படும்... மேலும் எந்த ஒரு பிரிவிலும் டெரர்கும்மி உறுப்பினர்கள் யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இது வரை நீங்கள் கொடுத்து வந்த ஆதரவை இனிமேலும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் இருந்து இப்போது விடைபெறுகிறோம்!

டெரர் கும்மி நண்பர்கள்