நான் இணையத்தில் படித்த சில நல்ல ஜோக்குகளை மொழிபெயர்த்து இங்கே அவ்வப்போது அளிக்க விரும்புகிறேன்! ரசித்து மகிழுங்கள்! நன்றி!
அமெரிக்காவிலுள்ள சிறிய ஊர் ஒன்றின் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்கு சாட்சியம் அளிக்க வந்திருந்த மிகவும் வயதான பெண்மணியிடம் வக்கீல் கேட்டார்:
"திருமதி ஜோன்ஸ், என்னை உங்களுக்குத் தெரியுமா?" அதற்கு அந்தப் பெண்மணி,
"ஏன், கண்டிப்பாக எனக்கு உங்களைத் தெரியும் திரு. வில்லியம்ஸ். உங்களை எனக்கு சின்னக் குழந்தையிலிருந்து தெரியும், உண்மையைச் சொன்னால் நீங்கள் எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம். பொய் சொன்னீர்கள், உங்களுடைய மனைவிக்கு துரோகம் செய்தீர்கள், நம் மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததோடில்லாமல் அவர்களுக்கு பின்புறம் போய் அவதூறு பேசினீர்கள். நீங்கள் ஏதோ பெரிய வக்கீல் என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் நீங்கள் வெறும் பேப்பர் தள்ளும் இயந்திரத்தின் பெறுமானமே இருப்பீர்கள் என்பதை உங்களுடைய மூளையால் இன்னமும் உணர முடியவில்லை. ஆமாம், எனக்கு உங்களைத் தெரியும்."
இதைக் கேட்ட வக்கீல் திக்கித்து நின்றுவிட்டார். என்ன செய்வது என்று
தெரியாமல் எதிரே அமர்ந்திருந்த எதிர்கட்சி வக்கீலை காண்பித்து கேட்டார்,
"திருமதி ஜோன்ஸ், எதிர்கட்சி வக்கீலை உங்களுக்குத் தெரியுமா?"
அவள் மறுபடியும், "ஏன், கண்டிப்பாகத் தெரியும். திரு. பிராட்லியை எனக்கு
அவருடைய இளமைக் காலத்திலிருந்து தெரியும். அவர் ஒரு சோம்பேறி,
கண்மூடித்தனமாக எதையும் நம்புபவர், அது மட்டுமின்றி அவருக்கு குடியில்
பிரச்சினை இருக்கிறது. எவருடனும் ஒருங்கான உறவை அவரால் உருவாக்க முடிவதில்லை, அவருடைய சட்டப் படிப்பு இந்த மாநிலத்திலேயே மோசமானது. அது மட்டுமின்றி அவருடைய மனைவிக்கு துரோகம் செய்து மூன்று பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றார். அதில் ஒரு பெண் உங்களுடைய மனைவி என்பதும் எனக்குத் தெரியும். ஆமாம், எனக்கு அவரைத் தெரியும்."
எதிர்கட்சி வக்கீல் கிட்டத்தட்ட மயக்கம் போடாத குறை.
நீதிபதி இரண்டு வக்கீலையும் தனது மேஜைக்கு அழைத்து மிகவும் மெல்லிய குரலில் கூறினார், "கொய்யாலே! உங்க ரெண்டு பேர்ல எவனாச்சும் அவகிட்ட என்னைத் தெரியுமான்னு கேட்டீங்க, உங்க ரெண்டு பேரை எலக்ட்ரிக் சேருக்கு அனுப்பிடுவேன்!"
**************************
ஒரு ஆள் ஒரு குதிரை வாங்கினாரு. அந்த குதிரையை விற்றவன் விக்கிறப்ப சொன்னான். “சார் இது அதிசய குதிரை. அப்பாடின்னு சொன்னா ஓட ஆரம்பிக்கும். அய்யயோன்னு சொன்னா நின்னுடும்”
அந்த ஆள் ஆச்சரியப்பட்டு குதிரை வாங்கிட்டாரு. குதிரையில ஏறி “அப்பாடி”ன்னாரு. குதிரை ஓட ஆரம்பிச்சிச்சு. பயங்கர வேகம். அங்க மலை சரிவு வேற. அது ஒரு பள்ளம் ஓரத்துக்கு வந்துச்சு. அந்த ஆள் பயந்து “அய்யய்யோ”ன்னு கத்தினாரு.
குதிரை உடனே நின்னுடுச்சு.
அவர் “அப்பாடி”ன்னு சொல்லிகிட்டே பெருமூச்சு விட்டாரு. குதிரை உடனே...
**************************
“டீச்சர் ஏன் நீங்க கேமராவை எடுத்துட்டு வந்தீங்க”
டீச்சர் ஆச்சரியமாகி “குரூப்பா சில போட்டோ எடுத்துக்கிட்டீங்கன்னா. நீங்கெல்லாம் பெரிசா ஆனதுக்கப்புறம், உங்க நண்பர்கள், சொந்தகாரங்க கிட்ட அந்த போட்டோக்களை காமிச்சு பெருமையா சொல்லலாம், இவ ரமேஷ் போலீசாயிட்டான், இவன் ராம் தொழிலதிபராயிட்டாம், இவன் சங்கர் வக்கீலாயிட்டான், இவன் பாபு டாக்டராயிட்டா..... ”
அப்ப பின்னால இருந்து ஒரு குரல் வந்துச்சுச்சு ”இது எங்க கிளாஸ் டீச்சர் இப்ப உயிரோட இல்ல.”
**************************
**************************
பார்க்க முரட்டுத் தனமா இருந்த ஒரு ஆள் தன்னோட பைக்கில ஒரு பாருக்கு போனான். வண்டியை பாருக்கு முன்னாடி நிறுத்திட்டு உள்ளே போய் சாப்ட்டு வெளியே வந்தான். அங்கே அவன் பைக்கை காணோம்!“அப்படியா!”ன்னுட்டு பாருக்குள்ளே போய், ”நான் இன்னும் ஒரு கிளாஸ் சாப்பிடப் போறேன். நான் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள என் பைக் வரலை, எங்க ஊர்ல நான் என்ன பண்ணேனோ அது இங்கயும் நடக்கும்!” அப்படின்னு கோபமா கத்தினாரு.
உடனே பார் மேனேஜேரு அங்க இருந்த ஆளுங்க எல்லாம் எப்படியோ தேடி அவர் வண்டியை கண்டு பிடிச்சு பா முன்னாடி நிறுத்திட்டாங்க. பைக்கரானும் கிளம்பினான். கிளம்புறப்ப ஒருத்தர் கேட்டாரு...
“சார் உங்க ஊர்ல என்ன நீங்க பண்ணீங்க?”
அவன் பதில் சொன்னான் “வீட்டுக்கு நடந்தே போனேன்!”
**************************
அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார், “இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும்”. மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் “நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் B.C.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்” என்று!
**************************
ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸ், நியூயார்க் போலீஸ், சர்தார் போலீஸ் மூணு பேருக்கும் சிறந்த போலீஸ் அவார்டுக்காக போட்டி வச்சாங்க. போட்டி என்னன்னா ஒரு காட்டுக்குள்ள போய் ஒரு பெரிய சிங்கத்தை முடிஞ்சவரை சீக்கிரமா புடிச்சிட்டு வரனும். யார் சீக்கிரம் புடிச்சிட்டு வராங்களோ அவங்க ஜெயிச்சாங்க!முதல்ல ஸ்காட்லாந்துயார்டு போலீஸ் போனாரு. 15 நிமிசத்தில ஒரு பெரிய சிங்கத்தை புடிச்சிட்டு வந்துட்டாரு. அடுத்து நியூயார்க் போலீஸ் போனாரு. அவரும் ஒரு சிங்கத்தை 15 நிமிசத்தில புடிச்சிட்டு வந்துட்டாரு. கடைசியா சர்தார் போலீஸ் போனாரு. 15 நிமிசம் ஆச்சு வரலை. அரை மணி நேரம், இரு மணி நேரம் ஆச்சு. ஆனா அவர் வரவே இல்லை. அவரை தேடிக்கிட்டு நடுவர்களும் மற்ற போலீஸ்களும் போனாங்க. நடுக்காட்டுல அந்த சர்தார் போலீஸ் ஒரு கரடியை ஒரு மரத்தில கட்டி வச்சு அடிச்சிகிட்டு இருந்தாரு.
”மரியாதையா ஒத்துக்கோ நீ ஒரு சிங்கம்னு!”
டெரர் கும்மிக்காக
![]() |
| எஸ்.கே |
