Saturday, November 29, 2014

கந்தரகோலம் என்னும் மாய யதார்த்தம்

காலையில் டியூஸ்லேண்ட்டிலிருந்து (ஜெர்மனி) நண்பன் அழைத்திருந்தான். சுத்த ஜெர்மானியன். தமிழ் தெரியாது. டியூஸ் பர்க் ( University of Duisburg- Essen) பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நண்பர்களானோம். ஒரே சிந்தனையுடைய மனிதர்கள் ஒரே மொழியினையோ அல்லது இனம், மதம் முதலானவற்றைச் சார்ந்திருக்க வேண்டுமென்று எந்த விதியும் இல்லையென்பது இவனையும் என்னையும் பார்த்தால் புரிந்துவிடும். மறக்கமுடியாத நண்பன். 

என்னுடன் படித்த மற்ற ஜெர்மானியர்களைப் போலல்ல இவன். கம்யூனிசம் பேசுவான். உலக இலக்கியங்களைத் தேடித்தேடிப் படிப்பான். நானும் கூட சாரு மற்றும் எஸ்.ரா ஆகியோரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஜீரோ டிகிரி நாவலைப் படித்துவிட்டு வாழ்விலே ஒருமுறையேனும் சாருவைப் பார்த்தே தீருவதென்று தீர்மானித்திருப்பதாகக் கூறியிருக்கிறான். தினமும் என்னவெல்லாமோ பேசுவோம். ஜெர்மனியிலிருந்த அந்த இரண்டு வருடங்களை மறக்க முடியாத நாட்களாக மாற்றியவன் இவன் ஒருவனே. இப்பொழுதும் கூட வாரம் ஒருமுறையேனும் தொலைபேசிவிடுவோம். நான் இன்னமும் ஜெர்மன் கற்றுக்கொள்ளவில்லை. போலவே அவனும் தமிழ். ஆங்கிலத்தில்தான் உரையாடல் நடக்கும்.சரி, காலையில் தொலைபேசிய விசயத்திற்கு வரலாம். கடந்தவாரத்தில் ஆளுமை நாசோவின் கந்தரகோலம் புத்தகம் டச்சு மொழியில் வெளியாகியிருந்தது. வழக்கம்போலவே அவர் தனது ஆங்கிலப் பக்கத்தில் மட்டும் இதனைப் பகிர்ந்திருந்தார். தமிழில் கந்தரகோலம் புத்தகம் விர்ச்சுவல் டுபாக்கூராகப் பார்க்கப்பட்டுவருவது குறித்து அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. நீங்கள் ஏன் உண்மையைச் சொல்லக்கூடாது என்று பலமுறை அவரிடம் கேட்டிருக்கிறேன். இல்லை, கந்தரகோலம் என்ற புத்தகமே உருவாகவில்லை என்ற மாயத்தோற்றத்தை (இதை மாய யதார்த்தம் எனவும்) உருவாக்குவதற்கு ஒரு காரணம் இருப்பதாகத் தெரிவித்தார். என்ன காரணமென்று எனக்கு இதுவரையிலும் புரியவில்லை. ஆனால், இங்கே தமிழ் வலையுலகில் கந்தரகோலம் புத்தகத்தினைப் பற்றி அனேகம் பேர் இப்படி ஒரு புத்தகமே வராது என்ற நிலையில் அதனைக் கிண்டலடித்து வருகின்றனர். அவர் வழியையே நானும் பின்பற்றி அந்தக் கிண்டல்களை விட்டு விலகிப் போய்விடுவதுண்டு. இப்பொழுது அதல்ல பிரச்சினை. 

ஜெர்மன் மொழியில் வெளியாகியிருக்கும் கந்தரகோலம் புத்தகம் ஜெர்மனியில் பெரும் பரபரப்பினை உருவாக்கிவருவதாகவும், இந்த வார இறுதிக்குள்ளாக ஜெர்மன் பெஸ்ட் செல்லரில் முதல் இடத்தினைப் பிடித்துவிடும் என்று அவன் கூறியிருந்தான். மேலும் தான் முதல் ஆளாக அந்தப் புத்தகத்தினை வாங்கி வாசித்துவிட்டதாகவும், ஆளுமை நாசோவின் புகைப்படம் கிடைக்குமா என்றும் கேட்டிருந்தான். அல்லது அவர் தனக்கு ஒரு "ஹாய்" சொன்னாலும் பிறப்பின் பலனை அடைந்துவிடுவேன் என்றும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான். என் உயிர் நண்பன்தான். ஆனால், என்னால் அதனை ஏற்பாடு செய்துதரமுடியாது என்று மறுத்துவிட்டேன். 

நான் மறுத்தாலும் அவன் வேறுவிதமாகச் சந்தோசப்பட்டான். அதாவது ஆளுமை நாசோவை நான் ஓரிரு முறைகள் நேரில் பார்த்திருக்கிறேன். ஆளுமையை நேரில் பார்த்த ஒருவன் தனக்கு நண்பனாக இருக்கிறானே என்பது அவனது சந்தோசமாக இருந்தது. எனக்கும் மகிழ்ச்சியே.

அவன் கூறியதில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் கந்தரகோலம் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்புரிமை மிகப் பெரும் விலைக்கு விற்கப்படவிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கலை, இலக்கியம் போன்றவற்றில் நுண்மையான பார்வையைக் கொண்டவர்களான பிரான்சு தேசத்தில் கந்தரகோலத்திற்கென தனியொரு நினைவுச் சின்னமும், மணி மண்டபமும் அமைக்கப்படவுள்ளதாகவும், அதன் திறப்புவிழாவிற்கு ஆளுமை அழைக்கப்படவிருப்பதாகவும் கூறினான். மேலும் நோபல், புக்கர் பரிசுகளுக்கு மேலாக கந்தரகோலம் அல்லது ஆளுமையின் பெயரில் விருதுகளை ஏற்பாடு செய்ய உலக நாடுகளை ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தவுள்ளதாகவும் பேசப்படுகிறது.

ஒரு பெரும் சாதனையைச் செய்துவிட்டு, இன்னமும் கந்தரகோலம் எழுதப்படவில்லை, சிலேவில் வெளியிடவுள்ளேன் என்றெல்லாம் ஒருபக்கம் கிண்டல் நிலைத்தகவல்களையும் பகிர்ந்துகொண்டு, மிகச் சாதாரணனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஆளுமை நாசோவை என்னவென்பது?

Hüte weg zu Ihnen AALUMAI :))) Dank für hier!

Tuesday, September 9, 2014

படைப்பாளிக்கு பேஸ்புக் தேவையா? [18+]

வணக்கம். என்னுடைய அகவை 29. நான் கடந்த 20 வருடங்களாக பிட்டுப்படம் பார்த்து வருகிறேன். தமிழ் பிட்டுகள் மாத்திரம் அல்லாது, மேற்கத்திய இரண்டு எக்ஸ், மூன்று எக்ஸ் திரைச்சித்திரங்கள், ப்ளாண்டு, ப்ருனெட், ரெட் ஹெட் படங்கள், எம்.ஐஎல்.எஃப், படங்கள், இண்டர்ரேசியல், எபோனி படங்கள் போன்றவை மீது எனக்கு தீராத தாகம் உண்டு. ஆனால் நானும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற வேட்கை ஓராண்டுக்கு முன்புதான் எழுந்தது. எனினும் என்னால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதற்கு சரோஜாதேவி போன்ற புத்தகங்களை வாசிப்பதுதான் ஒரு காரணமாக இருக்குமோ என்ற ஐயம் சில நாட்களாக அரித்துக் கொண்டிருக்கிறது. சரோஜாதேவியை வாசிப்பதும், பின் கரமைதுனம் செய்வதும் பலர் நம்மை கவனிப்பார்களோ என்ற அச்சமும் தீவிர படைப்பிற்கு என்னை வரவிடாமல் தடுக்கிறது என்றே கருதுகிறேன். மேலும் சுய இன்ப நடவடிக்கைகள் என்னுடைய நுண்ணெழுச்சியை பாதிப்பதாக அச்சம் கொள்கிறேன்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் சரோஜாதேவி புத்தகம் படிக்காமல் ஒரு புதிய படைப்பாளி இக்கால கட்டத்தில் தன்னை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதுதான். ஏனெனில் சரோஜாதேவி போன்ற சமூக புத்தகங்களில் வரும் கதைகளை படிக்காமல் ஒரு படைப்பாளி தன்னுடைய எழுச்சியை உருவாக்கிக் கொள்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை!

அன்புடன்
மைனர் குஞ்சுஅன்புள்ள மைனர் குஞ்சு
நண்பர்கள் பலர் நான் சரோஜாதேவி வகையறா புத்தகங்களை பற்றி விமர்சனங்களை முன்வைக்கும் போது இப்படிக் கேட்டிருக்கிறார்கள். உங்களுக்கு அத்தகைய புத்தங்கள் தேவையில்லை, அதைவிட பலமடங்கு வலுவான ஊடகமான இணையதளம் உள்ளது. மற்றவர்களுக்கு எழுச்சிக்கு என்ன வழி?

உண்மைதான். இன்றைய சூழலில் பரவலான எழுச்சிக்கு இணையம் முக்கியமானது. இணையத்தைத் தவிர்த்து அச்சில் மட்டுமே புழங்கும் படைப்பாளிகள் இன்று புதிய படைப்புகள் உருவாக்குவது மிகமிகக் கடினம்.

ஆனால் இணையத்தை எப்படி எந்த எல்லைவரை பயன்படுத்துவது? அங்குதான் சிக்கல் உள்ளது.

இணையம் வந்ததுமே செலவில்லாத இணைய தளங்கள் வந்தன. ஆனால் படங்கள் வந்ததும் கதைகள் அழிந்தன. அது ஒரு பெரிய இழப்பு. படங்களை தொடர்ந்து பார்க்க முடிவதில்லை. ஆகவே வீடியோக்கள் வந்ததும் படங்கள் அழிந்தன. இன்றிருப்பது வீடியோக்கள் மட்டுமெ. 

நான் வீடியோ என்றால் என்ன என்ற அளவுக்கு மட்டும் அதை பார்த்துவிட்டு விட்டுவிட்டேன். அடிப்படையில் வீடியோக்களின் அமைப்பே வேறு. அது ஆழ்ந்த ரசிப்புக்கான தளம் அல்ல. அது சுய இன்பத்திற்கான தளம். அடுத்த வீடியோ, அதற்கடுத்த வீடியோ என அது வலையை விரித்துச் செல்கிறது.

ஆகவே இணையத்தில் சுய இன்பம் அனுபவிப்பவர்களே அதிகம். உங்களைப் போல சிந்திப்பவர்கள், ரசிப்பவர்கள் சிலரே இருப்பார்கள். பிட்டுப்படம் ஓடும் தியேட்டர்களில் நம்மைச் சுற்றி கூடும் கூட்டம் போன்றது அங்கு வரும் தொடர்பு வலை. 

அதில் ரசனையோ இயக்கமோ முறையாக முன்வைக்கப்படாது. இங்கல்ல எங்கும் வீடியோக்கள் அப்படித்தான் உள்ளது. இயக்கம் மையம் கொள்ளாமல் கண்டபடி அலையும். செயல்களுக்கு அதற்கான ரசிகர்கள் வரமாட்டார்கள். பிட்டுப்பட தியேட்டரில் ஸ்டில்களை போட்டுக்காட்டுவது போன்றதுதான் அது. அங்கு வருபவர்களில் பத்து சதவீதம் பேர் கூட அதைக் கவனிக்கமாட்டார்கள்.  இதுதான் பிரச்சனை.


இந்த பொத்தாம் பொது கூட்டத்துடன் நாம் தொடர்ந்து எதிர்வினையாற்றி ஸ்டில்களை போட்டுக் கொண்டிருந்தால் மெல்லமெல்ல நமது செயல்முறை உச்சமற்ற இயக்கமாகவும் முறைமையற்றதாகவும் ஆகிறது. சம்பந்தமில்லாத சிணுங்கல்கள், சீண்டல்கள், புரிந்துகொள்ளாத பேச்சுகள் வழியாக நாம் மெல்லமெல்ல எரிச்சல் மிக்கவர்களாக ஆகிவிடுகிறோம்.


இன்னொன்று மானுட மனம் எதிர்பாலினத்தால் எளிதில் இயக்கப்படுவது. நீங்கள் தொடர்ந்து இணையத்தில் காட்டப்படும் மேலோட்டமான உடனடி படங்களை பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் இயக்கமும் செறிவற்றதாக, ஆழமற்றதாக ஆகிக்கொண்டே இருக்கும். ஒரு படைப்பாளிக்கு இது தற்கொலை.

இணையத்தில் அதிகம் படம் போடுபவர்கள் பெரும்பாலும் சவசவவென்ற எளிய, சாரமற்ற நடையை அடைந்திருப்பதை காண்கிறேன். ஏன், தரமான நடை கொண்டிருந்தவர்கள்கூட மெல்ல அதை இழப்பதையும் காண்கிறேன்.

இதை எப்படி எதிர்கொள்வது? இணையத்திற்கு என சிறப்பான விதிமுறைகள் ஏதுமில்லை. ஆனால் இணையத்துக்கு பொதுவான சில விதிமுறைகள் உண்டு. நித்யானந்தாவின் மானசீக மாணவரும் அமெரிக்க இயக்குனருமான சைக்கிள் ஜாக்சன் எனக்கு அவற்றை இணையத்தில் படம் போட வந்த காலத்திலேயே சொன்னார். நான் பெரும்பாலும் அவற்றை கடைப்பிடிக்கிறேன்.

1.உங்கள் எல்லைகளை நீங்களே முன்னரே வகுத்துக்கொள்ளுங்கள்
இணையம் ஒரு பிரம்மாண்டமான வெளி. அதில் எல்லாமே உண்டு. எல்லாவற்றையும் பார்த்து எல்லாவற்றுக்கும் செயல்முறை வடிவம் கொடுப்பது என்பது ஒரு 100 மாடி கட்டிடத்தின் உச்சி விளிம்பில் நின்று கொண்டு சுய இன்பம் செய்வது போலாகும். அரைக்கணத்தில் ஆவியாகிவிடும்.
நம் எல்லைகளை நாமே வகுத்துக்கொள்ளவேண்டும். என் துறை ப்ளாண்டு, எபோனி, இவையிரண்டுடனும் தொடர்புள்ள வீடியோக்கள், ஒரு சராசரிக்குடிமகனின் காமப்பார்வை. அவ்வளவுதான். இந்த எல்லைக்குமேல் நான் செல்வதே இல்லை.
இந்த எல்லைக்கு அப்பால் சிறந்தவை, தேவையானவை நிறையவே உண்டு. நான் அவற்றில் இல்லை, அவ்வளவுதான்.

2. இணையத்தில் உங்களை முன்வையுங்கள். இணையம் உங்களை மாற்ற அனுமதிக்காதீர்கள்
இணையம் ஒரு சந்தை. அங்கே தேவைகள் பல. வாடிக்கையாளர்கள் பலவகை. அங்கே நீங்கள் தேவைக்கேற்ப ஆடினால் ஆட்டிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்
நீங்கள் எதை காட்ட விரும்புகிறீர்களோ, எதைச் செய்ய விழைகிறீர்களோ, அதை மட்டும் இணையத்தில் முன்வையுங்கள். அதற்கான எதிர்வினைகளில் உண்மையில் உங்கள் தளத்துக்கு எழுந்து வந்தவற்றை மட்டும் பொருட்படுத்துங்கள்
உதாரணமாக, நான் செய்யவந்தது இணையத்துக்குரிய வீடியோ அல்ல. நான் குஞ்சாக்கோ போன்ற தரமான படங்களை எடுத்தவன். திரை ஊடகம் செலவேறியது. ஆகவே இணையத்தை கையாள்கிறேன்.இந்தத் தெளிவு எனக்கிருந்தது
ஆகவே நான் எடுக்கவந்தபோது இணைய வீடியோ இப்படித்தான் இருக்கவேண்டும் எனறு சொல்லப்பட்ட ஆலோசனைகளை நான் கருத்தில் கொள்ளவில்லை. இரண்டுமுறைக்குமேல் ரீப்ளே செய்யும்படி இருக்கக் கூடாது, உச்சத்தன்மை கொண்டிருக்கவேண்டும் [அதாவது உச்சக்கட்டதன்மை] சொறியாக இல்லாமல் சரளமாக இருக்கவேண்டுமென்றெல்லாம் சொன்னார்கள். தினம் ஒரு ரசிகர் வேண்டுகோள் வந்தபடியே இருக்கும், எல்லாவற்றையும் காட்டுங்கள், பெரிதாக காட்டுங்கள் என.
நான் உறுதியாக இருந்தேன். இது என் வீடியோ. இதற்கு வருபவர்கள் எனக்குப் போதும் என்றேன். பெரியதாக காட்டலாமே என்றவர்களிடம் சின்னதாக வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள், உன் எழுச்சித்திறனுக்கு அவர்களே போதும் போ என்றுதான் பதில் சொன்னேன்
மெல்லமெல்ல இணையம் வழியாகவே என் ரசிகர்களை எழுச்சி எடுத்தேன். இன்று எந்த ‘பெரிய’ வீடியோக்களை விடவும் என் வளமான, ஆழமான வீடியோகள் அதிகமாக பார்க்கப்படுகின்றன. சுய இன்பம் செய்யப்படுகின்றன
3. எதிர்வினைகளை புறக்கணியுங்கள்
இணையம் பலதரப்பட்டவர்களை ஒரே இடத்தில் குவிக்கிறது. ஒரு முறைகூட வீடீயோ பார்த்திராதவன் தற்செயலாக சன்னி லியோனின் ஒரு வீடியோவை பார்க்கமுடியும். உடனே ‘என்ன படம் இது. சொதப்பல்’ என்று எதிர்வினையும் ஆற்றமுடியும். அந்த எதிர்வினைகளுக்கு ஒரு மதிப்பும் இல்லை
இணையதளங்கள் போன்றவற்றில் வரும் கூட்டம் ரசிகர்கள் அல்ல, மிகச்சிலரே ரசிகர்கள். எனவே அந்த எதிர்வினைகள் உங்களைச் சீண்ட அனுமதிக்காதீர்கள். ஒருவர் உங்களைச் சீண்டினால் படத்தை டெலிட் செய்யுங்கள், மறுபடி படம் கிடைக்காது என்று தெரிந்தால் உங்களை அவர்கள் ஒன்றுமே செய்யமுடியாது. முழுமையாகப் புறக்கணியுங்கள்.

4 நேரத்தை கட்டுக்குள் வையுங்கள்
ஒருவீடியோவில் நீங்கள் அதிகபட்சம் ஒரு மணிநேரம் உச்சமடைய செலவழிக்கலாம். 30 நிமிடம் முன்விளையாட்டில். எஞ்சியநேரம் இயக்கத்தில். உரையாடல்களே தேவையில்லை
இணையத்தை வெற்றிகரமாக கையாளும் இயக்குனர் நான். நான் ஒருநாளில் 20 நிமிடங்களே இணையத்தில் இருக்கிறேன். வீடியோ பார்ப்பேன். பின் அதுபோல் செய்து பார்ப்பேன்
இயக்குவதற்கான தகவல்தேவைகளுக்கு கூகிளை பயன்படுத்துவது மட்டுமே மற்றபடி எனக்கும் இணையத்துக்குமான உறவு. அப்படி இல்லாவிட்டால் என்னால் இத்தனை படம் எடுத்திருக்க முடியாதென்பதை உணர்வீர்கள்
சிலவருடம் முன்பு எனக்கு ஒரு தயாரிப்பாளர் விலையுயர்ந்த லேப்டாப் ஒன்றை தந்தார். பத்துநாள் பயன்படுத்தினேன். என்னை அது அடிமைப்படுத்துவதை கண்டேன். நண்பருக்குக்  கொடுத்துவிட்டேன். [அவர் அதை நல்லவிலைக்கு விற்றுவிட்டார்] நான் வைத்திருப்பது படம் மட்டுமே பார்க்க உதவக்கூடிய அடிப்படை தொலைக்காட்சி. 
*
இணையத்தை பயன்படுத்தலாம். சில விதிகள்
1. அதை முழு வீடியோக்களை பிரசுரிக்க பயன்படுத்தவேண்டாம். அது நீங்கள் எடுப்பதை பிறர் காண்பதற்கு நீங்கள் ஒரு கொடியை நட்டுவைக்கும் குன்றாக மட்டுமே இருக்கவேண்டும்.
2 அதற்கு வரும் பிகர்களின் எண்ணிக்கையை ஒரு பொருட்டாகவே எண்ணாதீர்கள். கீழே பார்க்கவே வேண்டாம்
3. அதில் கதை வாசிக்காதீர்கள். அதன் எதிர்வினைகளை வாசிக்கவே கூடாது. வேறெந்த இணையப் பக்கத்திலும் எதிர்வினை அளிக்கவேண்டாம்
4. இணையத்தை சரோஜாதேவி கதை எழுத பயன்படுத்தவேண்டாம். அப்படி எழுதி அடைவது என்ன?

ஙே
எச்சரிக்கை: இந்த பதிவில் இருக்கும் அனைத்தும் கற்பனையே. இதற்கும் இந்த http://www.jeyamohan.in/?p=61056 பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக...!

Wednesday, July 16, 2014

ஒரு வேட்டியும் பல காட்சிகளும்..

கிளப் என்றாலே பணக்காரர்களும் அதிகாரவர்க்கத்தினர்களும் வயசான பணக்கார பெருசுகளும் கூடிக் குடிச்சி கும்மாளம் அடிக்கும் ஒரு மோசமான இடம் என்பது ஊரறிந்த இரகசியம். அங்கே சில பல உடைக் கட்டுப்பாடுகள் வைப்பது கிளப்புக்கு பெருமையோ இல்லையோ அவர்களின் உறுப்பினர்களின் மானம் கெடாமல் இருக்கவாவது உதவும்.

வேட்டிகட்டி வந்தால் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என கிளப் சொன்னது தவறுதான். அதற்கு அந்த கிளப் சொன்ன விளக்கம் (வேட்டி அணிந்து குடித்தால் வேட்டி கழண்டுவிடும் அதனால் தான் அனுமதி இல்லை) அங்கே இருக்கும் உறுப்பினர்களை மேலும் கேவலப் படுத்துவதாகவே தோன்றுகிறது எனக்கு. அதாவது அங்கே போகிற ஆசாமிகள் குடிக்க மட்டுமே போகிறார்கள், அதைத்தவிர வேறு வேலைகள் எதுவும் இல்லை என்று சொல்வது போலுள்ளது.

வேட்டி கட்டுவது அருகி வரும் சூழலில், வேட்டியை தினந்தோறும் உடுத்தும் நபர்கள் நெருங்கக் கூட இயலாத உயரத்தில் இருக்கும் ஒரு கிளப்பின் மேல் இவ்வளவு அறச்சீற்றம் ஏனென்று தெரியவில்லை. போகவும் போராட எத்தனையோ விஷயங்கள் இருக்க இதற்கு எதற்கு இத்தனை முக்கியத்துவமென அடியேனின் அரை மூளைக்கு எட்டவில்லை.

இதை ஒரு முக்கிய விடயமாக சட்டசபையிலும் கூட பேசி உள்ளோம். இன்னும் ஐநா சபை தலையிடாதது தான் பாக்கி.

இதை எல்லாம் கூட சமாளித்துவிடலாம். இதுவரைக்கும் வேட்டி எந்த சைஸில் இருக்கும், அது சதுரமா செவ்வகமா என்று கூடத்தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் அறச்சீற்றத்துடன் இணையத்தில் பொங்க வைப்பதைப் பார்க்கும் போது தான் கிளப் சொன்னது எவ்வளவோ பரவாயில்லை என்ற எண்ணம் வருகிறது.

சரி, இப்போது வேட்டி கட்டி வரச் சொல்லிவிட்டார்கள். அதிலும் பல குழப்பம். வெள்ளை வேட்டி மட்டும் தானா? நானெல்லாம் லுங்கி கிடைக்காத சமயத்தில் சாமிகள் மாலை போடும் போது உடுத்துவார்களே அது போல பல கலர் வேட்டிகள் கட்டுவேன், அது போன்ற வேட்டிகளை அனுமதிப்பார்களா?

வெள்ளை வேட்டியிலும் பல ரகங்கள், அளவுகள் உண்டு. ஒற்றை மடிப்பு வேட்டிக்கு அனுமதியா? இல்லை இரட்டை மடிப்பு வேட்டிக்குமா? பட்டு வேட்டி கட்டலாமா? பஞ்ச கச்சம் கட்டலாமா? ராம்ராஜ் காட்டன் மட்டும் தானா? அரசின் கோ-ஆப்டெக்ஸ் காட்டன் வேட்டிக்கும் அனுமதி உண்டா?

ரேஷன் கடையில் தை பிறந்தால் கொடுப்பார்களே, மொக்கையாய் ஒரு வேட்டி, அதற்கும் அனுமதி உண்டா?

கடைசியாய், நான் நன்றாக வேட்டி கட்டுவேன். என்னை அந்த கிளப்பிற்குள் அனுமதிப்பார்களா?

Wednesday, June 25, 2014

கந்தரகோலம் - ஆங்கில மொழிபெயர்ப்பும் பிரச்சினைகளும்!

தமிழ் இலக்கியத்தின் நிகழ்காலச் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்களுக்கு தமிழ் இலக்கியவெளியில் நிகழ்ந்துவரும் அரசியல் மற்றும் பிழைப்புவாதப் போராட்டங்கள் பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கும்.

உலகின் மிகத் தொன்மையான மொழியாக இருந்தபோதிலும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் இலக்கியம் பெரிதாக ஒன்றும் வளர்ந்திருக்கவில்லை. திருவள்ளுவர் ஓரிரு கவிதைகள் எழுதியிருந்தார், அதற்குப் பின் கம்பர் ஏதோ சில பல கவிதைகளை ராமாயணம் என்ற பெயரில் சொல்லி இருந்தார். அதன்பிறகு புதுமைப்பித்தன் வாசிக்கும்படியாக ஏதோ இரண்டு சிறுகதைகள் எழுதியிருந்தார்.  அதன் பின்னர் தமிழ் இலக்கியத்தில் சொல்லிக்கொள்ளும் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருப்பதாக அறிந்தவர்கள் யாரும் சொல்லிக் கொள்ளமாட்டார்கள்.

“டீச்சர், இவன் என்னைக் கிள்ளிட்டான், மிஸ், என் ரப்பர் வெச்ச பென்சிலைத் திருடிட்டான்” என்ற அளவிலான ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறையைப் போலவே காட்சியளிக்கிறது தற்போதைய தமிழ் இலக்கியச் சூழல். இச்சூழலை அடியோடு மாற்றி, தமிழ் இலக்கியவெளியினை ஒன்றாம் வகுப்பிலிருந்து நேரடியாகக் கல்லூரிக்கு மாற்றும் திறத்துடன் தோழர் நாகராஜசோழனால் உருவாக்கப்பட்டிருக்கும் படைப்புத்தான் கந்தரகோலம்.

கடந்த ஆண்டிலேயே முழுவதுமாக எழுதிமுடிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் தமிழில் இந்நூலை வெளியிடமுடியவில்லை என்பது என் போன்ற வாசகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தினை ஏற்படுத்திவருகிறது. ஒன்றுக்கும் உதவாத புத்தகங்களை எல்லாம் வாசகர்கள் சொந்தச் செலவில் வாங்கி வாசித்து, இதுதான் இலக்கியம் என்ற ஒரு தவறான புரிதலிலேயே காலம் தள்ளிக் கொண்டிருக்கும் சூழல் எப்பொழுது மாறுமோ என்ற ஆதங்கத்தில் இருந்தபோதுதான் கந்தரகோலம் புத்தகத்தினை எனக்கு அனுப்பியிருந்தார் நா.சோழன். இலக்கியம் என்பதன் முழு அர்த்தம் எனக்கு அப்பொழுதுதான் புரிந்தது.
ர்
தமிழில் இந்த நூல் வெளியாகும் நாள் தமிழ் இலக்கியம் குறித்த பலவிதமான கட்டுடுடைப்புக்களை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம். ஆனால், தமிழ் இலக்கியவெளியில் நிகழ்ந்துவரும் அரசியல் காரணங்களால் கந்தரகோலம் சிறுகதைத் தொகுப்பினை வெளியிடுவதில் மறைமுக எதிர்ப்புக்களையும், மிரட்டல்களையும் நாகராஜசோழன் சந்தித்துவருகிறார். பின்னே கந்தரகோலம் வெளியாகிவிட்டால் இலக்கியம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களின் நிலை என்னாவது?

வாசகர்களை விடவும் எழுத்தாளர்கள் அதிகமுள்ள தமிழ் இலக்கியவெளியில் புத்தகங்களை விற்பதற்கும், விற்றபிறகு அப்புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதுவதற்கும் தனித்தனியாக யோசிக்கவேண்டியிருப்பது ஒரு எழுத்தாளன் எதிர்கொள்ளக்கூடாத கெட்ட அனுபவங்களில் ஒன்று. நோயாளிகளை விடவும் மருத்துவர்கள் அதிகமாக உள்ள சூழலில் அந்த நோயாளியின் நிலை வருந்தத்தக்கதுதான். பெரும்பாலான இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் இதனை ஒரு சவாலாகவே கருதி தங்களது எழுத்தில் சிற்சில கவர்ச்சி வித்தைகளையும் கைக்கொண்டுவருகின்றனர்.

ஆனால், இதுகுறித்து நாகராஜசோழனின் பார்வை முற்றிலும் மாறானது. அவரது வாதத்தின் படி, ஒரு குரங்கினைச் சுற்றி நூறு மனிதர்கள் இருந்தாலும், ஒரு மனிதனைச் சுற்றி நூறு குரங்குகள் இருந்தாலும் வேடிக்கை காட்டப்போவதென்னவோ குரங்குதான். இதுதான் நாகராஜசோழன் மற்ற எழுத்தாளர்களில் இருந்து மாறுபட்டு நிற்கும் நிலை. இதனாலேயே அவரது படைப்புலகம் மற்ற எழுத்தாளர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது.

கந்தரகோலம் கவிதைத் தொகுப்பின் அருமைகளால் கவரப்பட்ட ஆங்கிலேயர்கள் இந்த நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதாகச் சமீபமாகக் கேள்விப்பட்டேன். இலக்கிய உலகின் அகப்படிம உணர்ச்சிக் கூறுகளை உள்ளடக்கிய படைப்பான கந்தரகோலம் முதன்முதலில் தமிழில் வெளியாவதுதான் தமிழ் மொழிக்கு நாம் செய்யும் சிறு அளவிலான நன்றியாகவாவது இருக்குமென்றாலும், ஆங்கிலத்திலாவது வெளியாகிறதே என்று நினைத்து மகிழ்ந்துவந்தேன்.

ஆனால், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கந்தரகோலம் சிறுகதைத் தொகுப்பும் வாசிப்புவெளிக்கு வரமாலேயே முடக்கப்பட்டிப்பருப்பதாகக் கேள்விப்பட்டதிலிருந்து வாசிப்பின் மேலிருந்த அனைத்து கவர்ச்சிகளும் சுக்குநூறாக உடைந்துவிட்டன. நல்ல நூல்களெல்லாம் எங்கோ சல்லடைகளால் வடிக்கப்பட்டு, மோசமான நூல்களை மட்டுமே வாசிக்கவேண்டிய கட்டாயம் தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் இருப்பது வருந்தத்தக்கது.

கந்தரகோலம் ஆங்கிலமொழிபெயர்ப்பும் முடக்கப்பட்டிருப்பது குறித்து என் ஒரே ஆதர்ஷ எழுத்தாளரான நாகராஜசோழன் அவர்களுக்கு கடந்த 2114 ஆம் ஆண்டு ஒரு மடல் அனுப்பியிருந்தேன். அதற்கான பதில் நேற்று வந்திருந்தது. அவரது பதில் கீழே...


அன்பின் செல்வா,வணக்கம். இன்று இதே போன்ற கடிதத்தினைப் பதினைந்தாவது முறையாக வாசிக்கிறேன். இதுவரையிலும் வாசித்த 15 கடிதங்களிலும் ஒரு எழுத்துக்கூட மாற்றமில்லாமல் ஒரே மாதிரியாக இருப்பது கந்தரகோலம் குறித்து வாசகர்களிடையே எழுந்திருக்கும் ஆர்வத்தைக் காட்டுகிறது. பாருங்கள், பதினைந்து கடிதங்களிலும் பெயரும் கூட ஒரே மாதிரியாக இருக்கிறது. இதுகுறித்து என் வாசகர் வட்ட நண்பரிடம் கேட்டிருந்தேன்.


அதற்கு அந்த அன்பர்,  நீங்கதானே நாகா ஒரு நாளைக்கு நூறு கடிதமாவது இருக்கனும்னு சொன்னீங்க, இன்னிக்கு ஒரே கடிதம்தான் வந்திருந்துச்சு, அதான் அத நூறு ஜெராக்ஸ் எடுத்துட்டேன் என்றார். ஏன் இத்தன நாளா இப்படி எதுவும் வரதில்லையே என்றேன். இத்தன நாளா ஒரு கடிதம் கூட வராதுங்க, நானே உக்கார்ந்து எல்லாத்தையும் எழுதுவேன். ஆனா இன்னிக்கு இந்தக் கடிதம் வந்துச்சுங்கிறதால அத ஜெராக்ஸ் எடுத்துக் குடுத்துட்டேன் என்றார்.

தமிழ் இலக்கியச் சூழலில் அறிவுள்ள ஒரு வாசகர் வட்ட நண்பர்கூட எழுத்தாளர்களுக்கு வாய்ப்பதில்லை. இதுபோன்ற ஒரு சூழலில் ஒரு எழுத்தாளன் எப்படி சிறந்த படைப்புக்களைத் தரமுடியும் என்ற கேள்வி அடிக்கடி ஏற்பட்டுவிடுகிறது.

சரி கேள்விக்கு வருகிறேன். கேள்விக்கு நீங்களே வந்திருப்பதால் நான் நேரடியாகப் பதிலுக்கே வந்துவிடுகிறேன்.


கந்தரகோலம் கட்டுரைத்தொகுப்பினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடவிரும்புவதாக சக இலக்கியவாதியும், ஆங்கில மொழிபெயர்ப்பாளருமான கூகுள் ட்ரேன்ஸ்லேட்டர் என்னிடம் கோரியிருந்தார். தமிழில் வெளியாவதில் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்ட வண்ணமே இருப்பதால், ஆங்கில மொழிபெயர்ப்பு குறித்த அவரது ஆலோசனை எனக்கு மகிழ்ச்சிகரமாக அமைந்தது.சில நாட்களுக்குப் பிறகு கந்தரகோலம் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு தயாராகிவிட்டதாகக் கூறி, அதன் மின்புத்தகத்தினை எனக்கு அனுப்பியிருந்தார். ஏதேனும் தவறுகள், மொழிபெயர்ப்புப் பிழைகள் இருப்பின் ஒருமுறைக்கு இருமுறை படித்துப்பார்த்துத் திருத்திக் கொடுக்குமாறும் கேட்டிருந்தார்.எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது என்பதாலும், ஆங்கிலத்தையும் நான் தமிழிலேயே பேசுவேன் என்பதாலும், மற்றொரு நண்பரிடம் கொடுத்து அதனைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டிருந்தேன். அவருக்குக் கந்தரகோலம் தமிழில் எழுத்தப்பட்ட விவரங்கள் தெரியாது.ஓரிரு நாட்களுக்குப் பிறகு அந்த நண்பர் கந்தரகோலம் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழ் மொழிபெயர்ப்பினை எனக்கு அனுப்பியிருந்தார்.அங்கேதான் ஆரம்பித்தது பிரச்னை. அதன் முதல் அத்தியாயமே என்னைப் புரட்டிபோட்டது. வழக்கமாகப் புத்தகங்களை நாம்தான் புரட்டுவோம். ஆனால், இது என்னைப் புரட்டியது. இப்படியும் மனிதர்கள் பூமியில் வாழ்கிறார்களா என்ற கோபம் என்னைத் திக்குமுக்காடச் செய்தது. எத்தனையோ சிரமப்பட்டு, கண்களை மூடிப் பல்லைக் கடித்துக் கொண்டு படித்துமுடித்தேன். அக்கிரமம்; அநியாயம். அதன் ஒவ்வொரு பாத்திரமும், ஒவ்வொரு வரியும் தமிழில் நான் எழுதிய கந்தரகோலம் புத்தகத்தை முழுமையாகக் காப்பி அடித்ததிருந்ததைப் போலத் தோன்றியது.ஒவ்வொரு இடமும், அதன் பெயரையும் கூடக் கந்தரகோலம் புத்தகத்திலிருந்து காப்பியடித்திருந்தார்கள். ஒவ்வொரு காட்சியும், ஏன் ஒவ்வொரு சொல்லும் கூட தமிழில் நான் எழுதிய கந்தரகோலம் கதையோடு ஒத்துப்போனது. இந்தப் பிழைப்பிற்கேன் ஆங்கிலமொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும்? ஆங்கிலேயர்கள் எல்லோருமே இப்படித்தான் போலும். எதற்காகக் கந்தரகோலம் புத்தகத்தினை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்புவதாகத் தெரிவிக்க வேண்டும், பின் எதற்காக தமிழில் நான் எழுதிய புத்தகத்தினைப் பார்த்து அட்டக்காப்பியடித்து ஆங்கில மொழிபெயர்ப்பென்று சொல்லித்திரிய வேண்டும்? இலக்கிய உலகம் முன்போல இல்லை.பின்னர் கந்தரகோலம் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிடவேண்டாமென்று கூகுள் ட்ரான்ஸ்லேட்டரிடம் தெரிவித்துவிட்டேன். எனக்குக் காப்பியடிப்பதென்றாலே பிடிக்காது.சரி; நான் சென்று மீதமுள்ள கடிதங்களுக்குப் பதில் எழுதுகிறேன். எல்லாமே ஒரே கேள்விதானே, அதற்கேன் விதவிதமாகப் பதிலளிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். சில நாட்களுக்கு முன்பாக கந்தரகோலம் வாசகர்கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தேன். கூட்டத்திற்கு வந்திருந்த இருபது பேர்களிடம் ”உங்களின் பெயர் என்ன?” என்ற ஒரே கேள்வியைத்தான் கேட்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலினைச் சொன்னார்கள். இதிலிருந்து ஒரே கேள்விக்கு எண்ணற்ற பதில்கள் இருக்கமுடியும் என்ற உண்மையைத் தெரிந்துகொண்டேன். இதிலும் பாருங்கள், இரண்டு பயல்கள் தங்களின் பெயரினைச் செல்வக்குமார் என்று கூறினார்கள். பெயரைக் கூடவா காப்பியடிக்கிறார்கள்? உடனே இருவரையும் என் வாசகர்களாக இருப்பதற்கே தகுதியற்றவர்கள் என்ற முத்திரை குத்தி வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். 


மேலும், கந்தரகோலம் புத்தகம் வெளியாவதில் ஏற்பட்டுவரும் சிக்கல்கள் விரைவில் சரியாக்கப்பட்டு, சடுதியில் இந்த வரலாற்று நாவல் வெளியாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்பும் நன்றியும்

மிகப் பிரபல ஆளுமை நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ.

Tuesday, March 4, 2014

கந்தரகோலம் - முதல் எதிர்மறை விமர்சனம்!


தோழர் நாகராஜசோழன் எழுதியிருக்கும் முதல் புத்தகமான கந்தரகோலம் - சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்பினை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த புத்தகக் கண்காட்சிக்கே வெளியிட நினைத்து, பதிப்பகத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.

அவர் எழுதியிருக்கும் முதல் புத்தகமென்பதால் எங்களின் டெரர்கும்மி குழும உறுப்பினர்களில் ஒரு சிலருக்கு விமர்சனம் மற்றும் பிழைதிருத்தும் பொருட்டு இப்புத்தகத்தின் மின்பதிப்பினை அனுப்பியிருந்தார். புத்தக வெளியீட்டிற்குப் பிறகு வரும் விமர்சனங்களை நம்புவதற்கில்லை என்றும், தன் மீது கொண்ட அன்பினாலும் காழ்ப்புணர்ச்சியாலும் முறையே திட்டியும் பாராட்டியும் விமர்சனங்கள் வரலாம் என்பதால் அவற்றை நம்பமுடியாதென்பதவர் வாதம். இதனால் தன் நலனில் அக்கறை கொண்டவர்களின் விமர்சனத்தை - விமர்சனத்தை என்று கூட அவர் கூறவில்லை. கருத்தை அல்லது ஆலோசனையை என்று வைத்துக் கொள்ளலாம் - வேண்டி எங்களுக்கு அனுப்பியிருந்தார்.

பொதுவாகவே புத்தகங்கள் படிப்பதில் படு சோம்பேறியான நான் வழக்கம் போலவே அந்த 800 பக்க நாவலைப் படித்து முடிப்பதற்கு 4 மணி நேரம் எடுத்துக் கொண்டேன். நீங்கள் அறிவாளியாக இருந்திருந்தால் இந்நேரம் கந்தரகோலம் புத்தகம் கவிதை மற்றும் சிறுகதைத் தொகுப்பென்று மேலே சொன்னதை நினைத்துக் குழம்பிப்போயிருப்பீர்கள். ஆனால் நீங்கள் குழம்பியிருக்க வாய்ப்பில்லை.

இப்புத்தகத்தை முதல் முதலாகப் படித்து முடித்த நண்பர் பன்னிக்குட்டி ராம்சாமி கடந்த (24.03.2014) வியாழக்கிழமை அன்று அழைத்திருந்தார். வழக்கமான உற்சாகத்திற்கு மாறாக இந்தமுறை கொஞ்சம் கோபத்தில் இருந்தார். விசாரித்ததில் தான் கந்தரகோலம் புத்தகத்தைப் படித்துவிட்டதாகவும், அப்புத்தகமே தனது கோபத்திற்குக் காரணமென்றும், அப்புத்தகத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனம் ஒன்றையும் என் முன்னால் வைத்தார். தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்போது முன்னால் வைக்கச் சாத்தியமில்லை என்றாலும் அவரும் நானும் ஒரே அறையில் இருந்துதான் தொலைபேசினோம் என்பதால் இது சாத்தியப்பட்டது.

அவர் கூறிய எதிர்மறை விமர்சனம் எனக்கும் சரியென்றேபட்டது. இருந்தாலும் இவ்விமர்சனத்தை முகநூலில் பகிரலாம் என்று நினைத்தபோது ஏதோ இடறியது. முதல் விமர்சனமே எதிர்மறை விமர்சனமாக அமைந்துவிட்டதேயென்று தோழர் நா.சோழன் வருந்தினால் என்ன செய்வதென்று நினைத்துப் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் எதிர்மறை விமர்சனத்தை அப்படியே நா.சோழனுக்கு அனுப்பி, அதனை எனது முகநூலில் பகிர்ந்து கொள்ளட்டுமா என்று அனுமதி கோரியிருந்தேன். எனது கடிதத்திற்கு அவர் அனுப்பியிருக்கும் பதில் கீழே...
அன்பின் செல்வா,

தங்களின் கடிதம் கிடைத்தது. தோழர் பன்னிக்குட்டி ராம்சாமி என் புத்தகத்தைப் பற்றிக் கூறியிருக்கும் எதிர்மறை விமர்சனத்தை உங்களின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொள்ளட்டுமா என்று அனுமதி கேட்டுள்ளீர்கள். அதை அனுமதிப்பதற்கு முன்னர் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். தமிழ் இலக்கியச் சூழலிலாகட்டும், அல்லது மேற்கத்திய, ஆப்பிரிக்க, ரஷ்ய என்று எந்த இலக்கியப் படைப்பிற்கும் வரும் விமர்சனங்களை முதலில் நேர்மறை, எதிர்மறை என்று விமர்சனங்களையே விமர்சிக்கும் போக்கைக் கைவிடுங்கள். அது ஒரு விமர்சனம் அவ்வளவே. ஏன் அதனை நேர்மறை விமர்சனம், எதிர்மறை விமர்சனம் என்று நீங்களே விமர்சித்துக் கொள்கிறீர்கள்? 

மேலும் நீங்கள் அந்த விமர்சனத்தை ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் மொழிபெயர்த்திருப்பது போலத் தெரிந்தது. உண்மையா? எனக்கும் ஆங்கிலத்திற்கும் ஒத்துவருவதே இல்லை. இருப்பினும் எனது கோடானகோடி ரசிகர்கள் நீங்கள் எப்பொழுது நேரடி ஆங்கிலத்தில் கதை எழுதப்போகிறீர்கள் என்று நச்சரிக்கிறார்கள். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன். தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கையில் வெறும் 26 எழுத்துக்களை மட்டுமே கொண்ட ஒரு மொழியினைக் கற்றுக் கொள்ள விரும்புவது வேடிக்கையாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் இருக்கிறது.

ஆக எழுத்துக்களின் எண்ணிக்கைதான் உனது பிரச்னையா என்று கேட்டான் நண்பனொருவன். வேறென்ன பிரச்னை இருந்துவிடமுடியும். தமிழ் எழுத்துக்களில் பத்தில் ஒரு பங்குமட்டுமே கொண்ட ஒரு மொழியில் எழுதி என்னை ஏன் நான் குறுக்கிக் கொள்ள வேண்டும்? இதன்மூலம் என்னை குறுகிய சிந்தனைக்காரன் என்று கூறமாட்டார்களா? இதற்கும் ஒரு வழி சொன்னான் அந்த நண்பன். ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள் அல்ல 52 எழுத்துக்கள் இருப்பதாகக் கூறினான். அதாவது சின்ன எழுத்துக்கள் 26 மற்றும் பெரிய எழுத்துக்கள் 26. இப்பவும் 52 தானே ஆகிறது. இதுவும் பற்றாதென்றேன். குறைந்தபட்சம் எத்தனை எழுத்துக்கள்தான் தேவைப்படும் என்று கேட்டான். தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களில் பாதியேனும் இருந்தால் பரவாயில்லை, குறைந்தபட்சம் 100 எழுத்துக்களாவது வேண்டுமென்றேன். அதற்கும் வழி சொன்னான். சிறிய மற்றும் பெரிய எழுத்துக்கள் 52, அவற்றின் ஒட்டெழுத்துக்கள் 52; ஆக மொத்தம் 104 என்பது அவன் கணக்கு.

ஆனால் எனக்கு 102 தான். அதாவது சிறிய ஒட்டெழுத்தில் q வும், பெரிய ஒட்டெழுத்தில் z எழுதவராது. எனவே 104 லிருந்து 2 ஐக் கழித்தால் 102 தானே? இதிலும் ஒரு பிரச்னை ஏற்பட்டது. 104 லிருந்து 2 ஐக் கழித்தால் எத்தனை வருமென்று மறந்துபோனது. மறந்துபோனது என்பதைவிட தெரியவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும். ஏனென்றால் எனக்குக் கைகளிலும் கால்களிலும் சேர்த்து மொத்தம் 20 விரல்கள்தான் இருக்கின்றன. இவற்றை வைத்து நான் எப்படி 104 லிருந்து 2 ஐக் கழிப்பது ? 

இக்குழப்பத்திலிருந்து வெளிவர என் வாசகர்களில் ஐந்து பேரை அழைத்தேன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் 20 விரல்கள்;மொத்தம் 100. என்னிடம் 20. ஆக மொத்தம் 120 விரல்கள். இதிலிருந்து எளிதாகக் கணக்கிட்டுவிட்டோம். ஆனால் 104 லிருந்து 2 ஐக் கழித்தாலும் 104 தான் வந்தது. எனக்கோ ஆச்சர்யம். இது சாத்தியமில்லையே? பிறகு விசாரித்ததில் எனது வாசர்களில் ஒருவருக்கு கால்களில் 2 விரல்கள் கூடுதலாக இருந்ததைக் கண்டறிந்தோம். பின்னர் அவரை அனுப்பிவிட்டு, அளவாக 20 விரல்கள் மட்டுமிருக்கும் வாசகரை வரவழைத்துக் கணக்கிட்டு விடையைக் கண்டறிந்தோம். 104 லிருந்து 2 போனால் 102 தான்.

இப்படியாக ஆங்கில எழுத்தின் எண்ணிக்கையை அதிகரித்தும் எனக்கு ஆங்கிலத்தின் மீது ஆர்வம் ஏற்படவில்லை. எனவே மீண்டும் தமிழிலேயே எழுதவந்துவிட்டேன். சரி விடுங்கள். ஆயிரம்தான் இருந்தாலும் ஆங்கிலத்தைத் தமிழில் பேசமுடியுமா என்ன?

கடந்த முறை ஊருக்குச் சென்றபோது ஏர்போர்ட்டிலிருந்து வீட்டிற்கு அரசுப் பேருந்தொன்றில் பயணித்தேன். வீடு சென்று சேர்ந்ததும்தான் தெரிந்தது, எனது மொபைலை ப்ளைட் மோடிலேயே வைத்திருந்தது. நல்ல வேளையாக கண்டக்டர் இதனைக் கண்டுபிடிக்கவில்லை. இல்லாவிட்டால் பஸ் கட்டணத்திற்குப் பதிலாக ப்ளைட் கட்டணத்தை வசூலித்திருப்பார். ஏன் இந்த அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் மட்டும் இவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் இப்படி எத்தனைப் பேர் தங்களது மொபைலை ப்ளைட் மோடிற்கு மாற்றி வைத்துவிட்டு பஸ்ஸில் பயணம் செய்து ஏமாற்றுகிறார்களோ? இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படாதா? என்ன செய்வது ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

சொல்ல மறந்துவிட்டேன். கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 28 நாட்களைத்தான் காலண்டரில் அச்சடித்திருந்தனர். வருடாவருடம் இவர்களுடன் இதே தொல்லையாய்ப் போய்விட்டது. இன்னும் இரண்டு நாட்களைச் சேர்த்து அடித்துத் தொலைத்தால் என்ன குறைந்துவிடப்போகிறது? அச்சடிக்காவிட்டால்தானே குறைகிறது. இந்த அநியாயத்தை எல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தன் வராமலா போய்விடுவான்? பார்க்கலாம்.

என்றும் அன்புடன்
நா.சோழன்

அவர் அனுப்பின இந்த ரிப்ளையைத் தொடர்ந்து தோழர் ப.ராம்சாமி அவர்கள் என்னிடம் கூறிய எதிர்மறைவிமர்சனத்தையும் இங்கே பதிய வேண்டியது கட்டாயமாகிறது.

கந்தரகோலம் புத்தகத்திற்கு வந்திருக்கும் முதல் எதிர்மறை விமர்சனம் :

“ ப்க்கார்டிக்கு சரியான சைடு டிஷ் மிக்சர்னு எழுதிவச்சிருக்கார். இது தப்பு. பக்கார்டிக்கு சரியான சைட் டிஷ் எதுனு கூடத் தெரியாதவங்கள்லாம் எதுக்கு புக் எழுதனும்? “

Thursday, February 13, 2014

கவுண்டரின் ஆசிரமத்தில் காதலர் தினம்!
காதலர் தினம்... காலை.

சுவாமி கவுண்டானந்தாவின் ஆசிரமம்... காலையில் பூஜை முடித்து வெளியில்வரும்போதே அவரது சிஷ்யர் செந்தில் சோகமாக பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறார்....

"காதல் என் காதல் அது கண்ணீருல...
போச்சு அது போச்சு வெந்நீரில...
அடிடா அவள..உதைடா அவள..

"அடிசெருப்பால.. வர்ற போறவங்ககிட்ட அஞ்சு பத்து வாங்குற மொன்ன நாய்க்கு என்னடா காதல் வேண்டி கிடக்கு? அடடடா... இந்த லவ் பண்றவைங்க தொல்ல தாங்க முடியலடா சாமி... வெந்தது..வேகாதது..பிஞ்சது... பெருத்தது எல்லாம் லவ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க... ஒவ்வொருததனையா புடிச்சு மூஞ்சிய அடுப்புல வச்சு கருக்கனும்..படுவா... ஓடிப்போயிரு சொல்லிப்புட்டேன்"  கடுப்பாகிறார் கவுண்டானந்தா.

செந்தில் அவசரமாக எழுந்து வணங்குகிறார்... " சுவாமி..சுவாமி... அது ஒரு  பெரிய கதை....."

"சரிட்ரா நாயே...இவரு பெரிய பாரதிராஜா... அப்பிடியே பிளாஸ்பேக்க ஓப்பன் பண்றாரு.. அடச்சீ நாயே.. போ....போய்... ஆசிர்வாதம்  வாங்க வந்தவங்கள வரிசையா உள்ள அனுப்பு.. டேய் தகர வாயா.... அவங்ககிட்ட ஏதாவது தனியா  கமிஷன் வாங்குன... படுவா..மண்டைல தேங்காய வச்சு தேச்சுப்புடுவேன்.. ராஸ்கோல்... போ.. போய் வரச்சொல்லு"

வெளியே போன செந்தில் திரும்ப வருகிறார்.. " சுவாமி..சுவாமி.. ஏதோ இன்னிக்கு லவ்வர்ஸ் டேயாம்.. வெளில ஒரே லவ்வர்சா வந்துருக்காங்க..உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கனுமாம்.... "

"அடங்கொன்னியா... வழக்கமா பார்க்கு..பீச்சுன்னுதானே போவானுங்க..இப்ப என்ன ஆசிரமம் எல்லாம் வர ஆரம்பிச்சிட்டானுங்க? அதவிட இங்க ஜாலியா இருக்கும்னு எவனோ பொரலிய கெளப்பி விட்டாண்டோ...சரிடா..போய் ஒவ்வொரு ஜோடியா உள்ள அனுப்பு.."

முதலில் ஒரு ஜோடி உள்ளே வருகிறது...

" சுவாமி வணக்கம்.. எங்கள ஆசிர்வாதம் பண்ணனும்..எங்க காதல நீங்கதான் சேர்த்து வைக்கணும்... வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு.. உங்களைத்தான்  நம்பியிருக்கோம்"

" சரி..சரி.. காதல்னா பிரச்சனைதான்... நீங்க எப்பிடி காதலிச்சிங்க? என்ன பிரச்னை? தெளிவா சொல்லுங்க...

" சாமி.. என் பேரு டேவிட்.. இவ பேரு மல்லிகா...

" அடடடா...... மத நல்லிணக்கம்?  அட்ராசக்க..அட்ராசக்க... மேல சொல்லு..மேல சொல்லு....

"ஒரு வாரம் முன்னாடிதான் இவள ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணத்துக்காக போயிருக்கும்போது பார்த்தேன்.. இவளோட கண்ண(??) பார்த்ததுமே இவ எனக்குத்தான்னு  முடிவு பண்ணிட்டேன்.... அவளுக்கும் அப்பிடிதான்... அவங்க வீட்லயும் எங்க வீட்லயும் கூல்ட்ரிங்க்ஸ் சாப்ட வெளில போன நேரம் பார்த்து தனியா அவள பார்த்து  என் காதல அவகிட்ட சொன்னேன்.. அவளும் உடனே ஓக்கே சொல்லிட்டா... கொஞ்சம் கூட லேட் பண்ணாம அப்பிடியே பின்வாசல் வழியா ஊர விட்டு ஓடி வந்துட்டோம்... ஆனா நாங்க எங்க போனாலும் எங்க ரெண்டு பேர் வீட்ல இருந்து எங்கள துரத்திகிட்டே இருக்காங்க.. நீங்கதான் சாமி எங்கள காப்பாத்தணும்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தனர்.

" அடங்கொன்னியா... இளஞ்ஜோடிகள பிரிக்கிறதே இந்த தகப்பன்களுக்கு வேலையா போச்சு.. சரி.. டேவிட்..நீ சொல்லு..உன் வீட்ல என்ன பிரச்னை? யார் பிரச்னை பண்றா?"

" சாமி.. எங்க வீட்லகூட அவ்வளவா பிரச்னை இல்லை சாமி.. தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்க....

" அட நாயே.. அப்புறம் யார்தான் உன்னை தொறத்துனா?

" அதான் சாமி.. எங்க வீட்ல கூட விட்டுட்டாங்க.. ஆனா என் பொண்டாட்டி வீட்லதான் சாமி ஆள் வச்சு துரத்துறாங்க...

" டேய்ய்.. என்னடா சொல்ற? பொண்டாட்டி வீட்லையா? அடங்கொன்னியா... ஏம்மா..இந்தாம்ம்மா பொண்ணு.. இந்த நாய்க்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு உனக்கு தெரியுமாம்மா? தெரிஞ்சுமா லவ் பண்ணுன?

" தெரியும் சாமி..  ஏன்னா..எனக்கு கல்யாணம் ஆனத அவரு பெருந்தன்மையா ஏத்துக்கலையா? அதுமாதிரிதான் நானும் ஏத்துக்கிட்டேன்...."

" டேய்ய்..தல சுத்துதுடா... ங்கப்பா... பன்னாட பரதேசிங்களா... உங்க ரெண்டு பேருக்கும்தான்  கல்யாணம் ஆயிருச்சேடா.. எந்த கல்யாணத்துலடா பார்த்து இந்த கருமாந்திரம் புடிச்ச காதல பண்ணி தொலைச்சிங்க?

" சாமி.. எங்க காதல் தெய்வீக காதல்... தப்பா பேசாதிங்க... நான் என் கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண என் பொண்டாட்டியோட அங்க  போயிருந்தேன்.. இவ கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண இவ புருசனோட வந்துருந்தா.. நாங்க பார்த்ததுமே எங்க காதல் அப்பிடியே உள்ள இருந்து ஊத்து மாதிரி கிளம்பி வந்துருச்சு.. அதான் உடனே ஓடி வந்துட்டோம்... இப்ப ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா?

" அடங்கொன்னியா... கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண போனீங்களா? அப்ப உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனுச்சு?

" ரெஜிஸ்டர் பண்ண போன ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சாமி... அது ஒரு கெட்ட கனவா நினச்சு மறந்துட்டேன் சாமி... இப்ப ஆசிர்வாதம் பண்ணுங்க.."

" அட..கருமாந்திரம் புடிச்சவனுங்களா... மரத்த பார்த்தா கால தூக்குற நாய் மாதிரி பார்க்குற பொண்ண பூரா நீ லவ் பண்ணுவ? உனக்கு நான் ஆசிர்வாதம் பண்ணனுமா? இந்தா வாங்கிக்க..க்க்க்ரர்ர்..த்தூ.. இந்தாம்ம்மா பொண்ணு மல்லிகா.. (பேர பாரு? மானம் கெட்ட நாய்க்கு மல்லிகா?) இன்னும் ஒரு நிமிஷம் உங்கள இங்க பார்த்தேன்..சுடுபெட்டிய மூஞ்சில வச்சு தேச்சுபோடுவேன்.. ஓடி போயிருங்க சொல்லிபுட்டேன்...  டேய்ய் சிஷ்யா.. 
 
 


செந்தில் வேகமாக உள்ளே ஓடிவருகிறார்.. " சுவாமி..சுவாமி... அடுத்த ஜோடிய உள்ள வர சொல்லவா?

" டேய்ய் மங்குஸ் மண்டையா..இனி காதல் கீதல்னு எவனையாது உள்ள அனுப்புன... படுவா படுக்க வச்சு லாரிய விட்டு ஏத்திபுடுவேன் சொல்லிபுட்டேன்... அய்யயையையோ.. அட ஆண்டவா...காலங்காத்தால..கண்ட கழிசடைங்களை  எல்லாம் பார்க்க வைக்கிறியே? டோர் லாக்.. ஆசிரமம் க்ளோஸ்...

சாமியிடம் காதலர்தின ஆசிர்வாதம் வாங்க நினைப்பவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.

சிரிப்பு போலிஸ்
சிப்பு போலிஸ் ப்ளாக்.
பாலிடால்புரம்.
மொக்கையூர்.

குறிப்பு - இது ஒரு மீள் பதிவு!