Showing posts with label அருண்பிரசாத். Show all posts
Showing posts with label அருண்பிரசாத். Show all posts

Friday, November 11, 2011

KLUELESS 7 - அறிவாளிக்கான விளையாட்டு

கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட “HUNT FOR HINT” கேமின் முன்னோடி “KLUELESS” தனது 7 ஆம் பாகத்தை இன்று காலை இந்திய நேரம் 11.11 க்கு வெளியிடுகிறது.

இது இந்தூர் ஐஐஎம் மாணவர்களால் வருடா வருடம் நடத்தப்படும் ஒரு அறிவுசார்ந்த போட்டி. இந்த போட்டியின் மேல் இருந்த இன்ஸ்பைரேஷனால் தான் நாங்கள் இதை அடிப்படையாக கொண்டு HUNT FOR HINT நடத்தினோம். எதிர்பார்த்தது போலவே நல்ல ஆதரவு கிடைத்தது . பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 


இப்பொழுது அதன் ஒரிஜினல் வெர்ஷனை விளையாட நீங்கள் தயாரா? எங்களுக்கு தெரிந்து HUNT FOR HINT விளையாட்டு KLUELESS விளையாட்டை விட மிகவும் சுலபமாக அமைத்து இருந்தோம். க்ளூலெஸ் விளையாட்டுக்கு ஐந்தில் ஒரு பங்கு கடினம் தான் ஹண்ட் பார் ஹிண்ட்க்கு வைத்து இருந்தோம். ஆனாலும் நம் பதிவர்கள் க்ளூலெஸ் கேமில் வெற்றி பெற எங்களால் ஆன உதவிகளை செய்ய முயற்சியாக தான் இந்த பதிவு. 


HUNT FOR HINT விளையாட்டின் அதே விதிமுறைகள் தான் இங்கும். ஆனாலும் புதியவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம்.

எப்படி விளையாடுவது?

  • பல லெவல்கள் கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு லெவலுக்கான விடையையும் கண்டு பிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்
  • கேள்விகள் படங்களாகவே பெரும்பாலும் இருக்கும்
  • விடைகள், ஆன்சர் பாக்ஸ்சிலோ கொடுத்தோ, URL மாற்றியோ,  கிளிக் செய்வது போன்றோ இருக்கும்
  • அனைத்து விடைகளும் கூகுளில் தேடுவதால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்
  • விடைகளுக்கான க்ளூக்கள், வெப் பேஜ் டைட்டில்லிலோ, URL, Image Name, Page source என பல விதங்களில் இருக்கும். குழப்புவதற்காகவே சில தேவையற்ற க்ளூக்களும் இருக்கும், ஜாக்கிரதை....
விளையாடுபவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடைய பிரத்தியேக தளத்திலேயே க்ளூக்களை கொடுக்கிறார்கள் இருந்தாலும் நம் தமிழ் பதிவுலக நண்பர்களுக்காக நாங்களும் இங்கு கமெண்ட்களில் க்ளூக்கள் கொடுக்கலாம் என இருக்கிறோம்.

எந்த காரணம் கொண்டும் நேரடி விடைகள் கொடுக்கப்பட மாட்டாது. 

நாங்களும் இனிதான் விடைகளை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் சில சமயங்களில் உங்களை விட பின்னால் இருப்பதறக்கு வாய்ப்புகள் அதிகம், அதனால் க்ளூ கொடுப்பது தாமதமாகலாம்.

உங்களுக்கு விடை தெரிந்தால் நீங்களும் க்ளூகளை கமெண்ட்களில் தெரிவிக்கலாம். (எங்களுக்கும் உதவும் :) )

அனைத்து கமெண்ட்டுகளும் மாடரேட் செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும்....

விளையாட்டை தொடங்க இங்கு கிளிக் செய்யவும்.


LETS PLAY TOGETHER....
ENJOY THE GREAT GAME :) with us



Wednesday, August 17, 2011

HUNT FOR HINT - புதிர் போட்டி - பரிசு 10,000 ரூபாய்

நண்பர்களே,

சிறுகதை போட்டி, கவிதைப்போட்டிகளை மட்டுமே பார்த்து கொண்டு இருந்த நம் பதிவுலகம், முதல் முறையாக ஒரு அறிவுசார் புதிர் போட்டியை விளையாட இருக்கிறது. ஆம், நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போல இதோ இன்று “HUNT FOR HINT” போட்டியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த போட்டியை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். புகழ் பெற்ற ஆன்லைன் விளையாட்டான க்ளூலெஸ் விளையாட்டின் தாக்கத்தால் டெரர்கும்மி நண்பர்களால் உருவான விளையாட்டு "HUNT FOR HINT". இது ஒரு பல லெவல்களை கொண்ட ஆன்லைன் விளையாட்டு.

கேள்விகள் படமாகவோ, எழுத்தாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு விதத்திலோ இருக்கலாம். ஆங்காங்கே இருக்கும் க்ளூக்களை கண்டுபிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்.

விளையாடும் முறை, விதிகள் மற்றும் பரிசு விவரங்களை விளையாட்டின் பிரத்தியேக தளத்தில் கொடுத்து இருக்கிறோம்.  விளையாடும் முன்பு அவற்றை படித்தல் நலம்.


இந்த விளையாட்டை வடிவமைக்க பலர் தங்களின் உழைப்பையும் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு உள்ளனர். அவர்களுக்கு எங்களின் சிறப்பு நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டு, போட்டியாளர்கள் இந்த போட்டியை நேர்மையான முறையில் அணுகுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் போட்டியை தொடங்குகிறோம்.....

கீழே உள்ள சுட்டியை சொடுக்கி விளையாட தொடங்குங்கள்....

வாழ்த்துக்கள்....



டிஸ்கி: விளையாட்டின் ஆர்வத்தை கருதி.... இந்த பதிவிற்கு வரும் அனைத்து கமெண்ட்டுகளும் மட்டறுக்கப்படுகிறது.



For Non Tamil Players:

Dear Friends,

Hunt for Hint is created by Terror Kummi Team, based on the concept of the popular online game Klueless. It is a multilevel game and each level is a web page. The questions will be in the form of picture, text, or some data. All you have to do is to hunt for the hints to cross each level and win.

Please read the Rules of the Game and play with a high integrity.

With the above hope, We declaring that the Game to begins now...



Monday, August 1, 2011

“சிரிப்புபோலீஸ்” காவியம்




ரமேஷ்: ஜெயந்த் ஏண்டா சோகமா இருக்க?

ஜெயந்த்: பதிவர் சந்திப்புல என்னை ஏமாத்திட்டாங்க?

ரமேஷ்: அய்யயோ என்ன ஆச்சு?

ஜெயந்த்: லிமிடெட் மீல்ஸ் போடுவாங்க. ஒரு பத்து பதினஞ்சு லிமிடெட் மீல்ஸ் சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்..

ரமேஷ்: அப்போ சாப்பாடு போடலியா?

ஜெயந்த்: போட்டாங்க. ஆனா அன்லிமிடெட் மீல்ஸ் போட்டாங்க. என்னால ஒரே ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் தான் சாப்பிட முடிஞ்சது.

ரமேஷ்: @@@@@@!!!!
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

பாபு: டேய் புது லேப்டாப் வாங்கணும் என்ன வாங்கலாம்?

ரமேஷ்: acer இல்லைன்னா dell வாங்கு..

பாபு: சரி. நம்ம ஊர்ல அடிக்கடி கரண்ட் போகுது. லேப்டாப்புக்கு என்ன UPS வாங்கனும்?

ரமேஷ்: கர். தூ....


~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

Hi,
Im Praba. I reached India. Today evening Ill meet you#SMS

ரமேஷ்: எனக்குத்தான் பிரபான்னு யாரையுமே தெரியாதே. யார் இது அதுவும் வெளிநாட்டுல இருந்து வந்திருக்கு. போன் பண்ணுவோம். அப்படியே கடலை போடலாம்.

போனில் ரமேஷ்: ஹலோ
எதிர்முனை: மாப்ளே நான் பிரபாகர் பேசுறேன். US ல இருந்து இந்தியா வந்துட்டேன். evening மீட் பண்ணலாம்.
ரமேஷ்: நாதாரி. மெசேஜ் அனுப்பும்போது பிரபாகரன்னு போட மாட்டியா. கொஞ்ச நேரத்துல மனசுக்குள்ள பறந்த பட்டாம்பூச்சிய விஷம் வச்சு கொன்னுட்டியே
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

டெரர் கும்மிக்காக
சிரிப்புபோலீஸ் பஸ்சில் இருந்து சுட்டவர்
அருண்பிரசாத்

Friday, June 24, 2011

கொல்றானே! கொல்றானே!!


அருண்: செல்வா, உன் சொந்த ஊர் எது?

செல்வா: எனக்கு சொந்தமா ஒரு தெரு கூட இல்லைண்ணா

அருண்: டேய் @#$@#, காலைல நீ எந்த ஊருல இருந்துடா வந்தே?

செல்வா: நான் காளைல வரலைண்ணா...பஸ்ல வந்தேன்

அருண்: கொல்றானே... சரி நீ எந்த ஊருக்கு சாயந்திரம் போவே...

செல்வா: எங்க வீடு இருக்கற ஊருக்குண்ணா...

அருண்: அந்த ஊருதான் எங்கடா இருக்கு?

செல்வா: எங்க வீடு இருக்குதுல்ல அங்கதான் இருக்கு...

அருண்: சரி விடு, அந்த ஊர் பேரு என்ன?

செல்வா: இதை மொதல்லயே தெளிவா கேட்டு இருக்கலாம்ல... கோபி...

அருண்: அது யாரு? உங்க அண்ணணா?

செல்வா: இல்லைண்ணா... கோபிசெட்டிபாளையம்.

அருண்: அடப்பாவி அங்கதாண்டா நான் 4 வருஷத்துக்கு முன்னாடி வேலை செஞ்சேன்

செல்வா: என்னன்னா இப்படி சொல்லுறீங்க... அப்போ எனக்கு ஒரு போன் பண்ணி இருக்காலாம்ல...

அருண்: அப்போ உன்னையோ உன் போன் நம்பரோ தெரியாதே..

செல்வா: அப்படியா... இந்தாங்க நோட் பண்ணிக்கோங்க....9900012345... மறக்காம கோபிக்கு போய் போன் பண்ணுங்க...

அருண்: டேய் நான் இப்போ அங்க இல்லை...

செல்வா: அதனால என்ன 4 வருஷத்துக்கு முன்னாடி இருந்தீங்கல்ல...அப்போ போன் பண்ணுங்க

அருண்: @#$@% #%^#$^#

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

Thursday, April 14, 2011

வெங்கட் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்





ராஜாதி ராஜ...
ராஜ குலோத்துங்க.....
ராஜ மார்த்தாண்ட....
ராஜ கம்பீர....

காத்த வராய...
கிருஷ்ண....
மொக்கை ராஜன்....
கோகுலத்தில் சூரியன் வெங்கட் அவர்கள் (ஓடாதீங்க, ஓடாதீங்க அவர் இங்கலாம் வரலை, வர மாட்டாரு)
இன்று (14 ஏப்ரல்) பிறந்தநாள் கொண்டாடுகிறார்....


இந்த பிஞ்சு மூஞ்சையா கலாய்கறீங்க எல்லோரும்?!

இன்று முதலாவது அவர் திருந்தி, மொக்கை பதிவுகளை போடாமல் இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என டெரர்கும்மி குரூப் சார்பாக வேண்டி கொள்(ல்)கிறோம்....


VKSயிடம் தொடர்ந்து அடிவாங்கும் கைபுள்ள, சே... சாரி... பழக்க தோஷத்துல வந்துடுச்சு, VKSஐ தொடர்ந்து சளைக்காமல் சமாளிக்கும் வெங்கட்டுக்கு இந்த குச்சி மிட்டாயையும் குருவி ரொட்டியையும் பிறந்தநாள் பரிசாக கொடுப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.....
குச்சி மிட்டாய்

அவசரத்துல குருவி ரொட்டி படம் கிடைக்கலை, அதான் குருவி வாயில ரொட்டி (குருவு ரொட்டி) இருக்கற படம்

அப்படியே எல்லோருக்கும்
“தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்”





Sunday, December 12, 2010

பாரதியின் கும்மி...



பாரதி பிறந்தநாளில் பிறந்த கும்மி வலைப்பூவிற்கு இந்த பாரதி பாடல் சமர்ப்பணம்....

பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே.

கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!
                                                 (கும்மி)

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.                                                         (கும்மி)

மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி!                                                      (கும்மி)

நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.                                                   (கும்மி)

கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.                                                 (கும்மி)

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!                                              (கும்மி)

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.                                                         (கும்மி)

காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!                                                             (கும்மி)