படத்தின் நாயகன் சூர்யா(நடிகர் சிவகுமாரின் மகன், நடிகை ஜோதிகாவின் கணவன், கார்த்தியின் அண்ணன்) ஒரு சர்கஸ் கம்பனியில் சர்கஸ் கலைஞனாக வேலை பார்க்கிறார். ஒருநாள் விஞ்ஞானி ஆன சுருதி, நாயகன் சூர்யாவை சந்திக்கிறார்! இருவருக்கும் வேதியியல் மாற்றம் உருவாகி காதல் மலர்கிறது!. பின்னணியில் ஹரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல ஒரு ஆங்கில பாடலை சுட்டு ஒரு பாடல் போடுகிறார்! பாடல் முடிவதற்குள்... அந்த பாடலுக்கு சொந்தக்காரன் சண்டைக்கு வருகிறானோ இல்லையோ... ஒரு பிரபல அரசியல்வாதி சண்டைக்கு வருகிறார்...
ஏன் சண்டைக்கு வருகிறார்? சூர்யாவுக்கும் அந்த குழப்பம்தான்.. ஆனால் யாருக்கும் எந்த சிரமமும் இல்லாமல் அந்த அரசியல்வாதியே காரணத்தை சொல்லுகிறார்... சர்கஸ் என்பது அவரது கட்சிக்கு உரிமையான ஒன்றாம்... இவர்கள் தாவி தாவி சர்கஸ் பண்ணுவது அவர்கள் கட்சியை கிண்டல் அடிப்பது போல் உள்ளது என்று சண்டைக்கு வருகிறாராம்... ஒரு வழியாக அவர்களை அடித்து போட்டு விட்டு அவர்களை பார்த்து வசனம் பேச ஆரம்பிக்கிறார் சூர்யா!
அதை கேட்ட அந்த அரசியல்வாதி... சூர்யா காலில் விழுந்து கெஞ்சுகிறார்... " தம்பி.. என்னைய உன் கையாலே கொன்னுவிடு.. இப்பிடி வசனம் பேசியே என்ன சித்திரவதை செய்யாத.. என்று கதறுகிறார்... அதைக்கேட்ட சூர்யாவும்... சரி.. கடைசியா நான் கஷ்டப்பட்டு மனப்பாடம் செஞ்ச நூறு பூக்களின் பேர வரிசையா சொல்றேன்.. அத மட்டும் கேட்டுட்டு போங்கன்னு சொல்றார்... ஆனா அதைகேட்ட மறுவினாடியே.. அந்த அரசியல்வாதியின் உயிர் அநியாயமாக பிரிகிறது!
இதை பார்த்துகொண்டிருந்த ஸ்ருதி அஞ்சு நிமிஷம் பேசியே ஒருத்தன சாகடிக்கிறியே? ஆயுசு முழுக்க உன்கிட்ட நான் எப்பிடி பேச முடியும் என்று கேட்கிறார்... பின்னணியில் ஹரிஸ் ஜெயராஜ்... இந்த சீனுக்கு எந்த ஆல்பத்தில் இருந்து சுடலாம் என்று யோசிக்கும்போதே சூர்யா ஸ்ருதி இருவருக்கும் இடையில் கருத்து மோதல் வந்துவிடுகிறது! அபோது ஸ்ருதி சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்கிறார்!!

அபோது கோவமான சூர்யா ஸ்ருதியிடம்... சட்டையை கலட்டி தனது சிக்ஸ் பேக் உடம்பை காண்பிக்கிறார்... ஒன்றும் புரியாமல் ஸ்ருதி சூர்யாவை பார்க்க.. சூர்யா சொல்லுகிறார்... " என்ன பார்க்கிற? ஏன் இப்ப சிக்ஸ் பேக் உடம்ப காண்பிக்கிரேன்னா?.. அந்த கருமம்தான் எனக்கும் தெரியல... ஏதோ.. டைரெக்டர் சொன்னாரு காண்பிக்கறேன்" என்று சொல்கிறார்! இதுக்கும் நீ மயங்கலைனா.. இன்னைக்கு நைட்டே பவர் ஸ்டாரோட ஆனந்த தொல்லை படத்த பார்த்திட்டு தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டுகிறார்! மேலும் லத்திகா பட டிவிடியை உனக்கு அனுப்புவேன் என்றும் மிரட்டுகிறார்!
இதைக்கேட்டு அதிர்ச்சியான ஸ்ருதி... உயிர் பயத்தில் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்கிறார்!! ஆனால் சூர்யா மன்னிக்க மறுக்கிறார்!! அபோதுதான் திரைக்கதையில் சூடு பிடிக்கிறது. பார்க்கிற நமக்கும் பேதி பிடிக்கிறது... பிறகு சூர்யாவின் இந்த தற்கொலை முயற்சிக்கு தான்தான் காரணம் என்று நினைக்கும் ஸ்ருதி.. சூர்யாவின் இந்த பிரச்சினைக்கு காலச்சக்கரம் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறார் விஞ்ஞானியான ஸ்ருதி. காலச்சக்கரம் மூலம் சூர்யாவை 30 வருடங்கள் பின்னோக்கி பயணம் செய்ய வைக்கிறார்.

அபோது சூர்யா 6 வயது சிறுவனாக நடித்திருக்கிறார். 36 வயதில் நான் உயரம் குறைவாக இருப்பதற்கு 6 வயதில் சரியாக Complan குடிக்காததுதான் காரணம் என கண்டறிகிறார் சூர்யா! மேலும் அப்போது சைனாவில் இருந்ததால்தான் அதை குடிக்கமுடியவில்லை என்று கண்டறிகிறார்! இப்போது திரைக்கதை சைனாவுக்கு செல்கிறது... இந்த இடத்தில ஹரிஸ் ஜெயராஜ்.. கவுண்ட மணி ஏற்க்கனவே பாடி வைத்த ஒரு சைனீஸ் பாடலை யாருக்கும் தெரியாமல் ரீமிக்ஸ் பண்ணி போடுகிறார்.. சூர்யாவுக்கு சைனாவில் ஏன் காம்ப்ளான் கிடைக்கவில்லை? திரும்பவும் அதை குடித்து வளர்கிறாரா? ஸ்ருதியை கை பிடிக்கிறாரா இல்லையா? என்பதுதான் மீதி கதை! அதை தைரியமிருந்தால் வெண்திரையில் காண்க!
குறிப்பு - இது பேஸ் புக்கில் இருந்து எடுத்து அதை கொஞ்சம் டெவலப் செய்து இங்கு அளித்திருக்கிறோம்!
குறிப்பு - இது பேஸ் புக்கில் இருந்து எடுத்து அதை கொஞ்சம் டெவலப் செய்து இங்கு அளித்திருக்கிறோம்!