Showing posts with label ட்வீட். Show all posts
Showing posts with label ட்வீட். Show all posts

Tuesday, June 12, 2012

பிரபல டிவிட்டர்கள் பய(ங்கர)டேட்டா!





பெயர்                                             -அப்பாட்டக்கர்கள்

புனைப்பெயர்                            -பிரபல டிவிட்டர்கள்


தொழில்                                       -டிவிட்டுவது


உபதொழில்                               -அதை யாரு RT பண்றாங்க என்று பார்த்துக் கொண்டிருப்பது!

உப உப தொழில்                  -சண்டை போடுவது


தலைவர்                                    -அதுக்குத்தான் சண்டையே


துணை தலைவர்                  -சட்டை கிழிந்தவுடன் தெரியும்


பொழுதுபோக்கு                     -மாறி மாறி எச்சி துப்பிக்குவது


துணை பொழுதுபோக்கு -துப்பு வாங்கியதை துடைதுக்கொள்ளுதல்


மேலும் பொழுதுபோக்கு -லாங்கர் டிவிட்டில் விளக்கம் சொல்வது




பலம்                                                 -கேணயனாய் மாட்டும் ஆபிஸ் மேனஜர்கள்

பலவீனம்                                       -நாலு ட்விட் போட்டா நானும் ரவுடிதான்


சமீபத்திய சாதனை                -இணையப் போராளியாய் மா(ற்)றிக் கொண்டது


நீண்ட கால சாதனை           -சோத்துக்கு இல்லைனாலும் ஸ்டேட்டஸ் போட மறக்காதது


சமீபத்திய எரிச்சல்                -வெளிக்குத்து பதிவுகள்


நீண்ட கால எரிச்சல்           -புதிது புதிதாய் போட்டிக்கு ஆள் வருவது


பிடித்தவர்கள்                            -பாலோயராய் சேருபவர்கள்


நண்பர்கள்                                   -ரீ-ட்வீட் பண்ணுபவர்கள்


அல்லக்கைகள்                        -ஆல் நியூ ட்வீட்டர்ஸ்

எதிரிகள்                                       -கடலை போடுவதை கண்டுபிடிப்பவர்கள்

ஆசை                                            -ட்வீட்டுகளை வைத்து சமூகப் போராளி ஆவது

நிராசை                                       -இன்னும் பெரிதாக யாரும் கண்டு கொள்ளாதது

நம்பிக்கை                                 -ட்விட்டர் போட்டே சே.குவாரா ஆகிவிடலாம் என்று

பயம்                                            -சைபர் கிரைம்



லட்சியம்                                       -அதிக ரீ-ட்விட்கள் வாங்கி அண்ணா நகரில் ப்ளாட் வாங்குவது

இதுவரை மறந்தது                 -ட்வீட்டர் ஆகமுன்பு என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதை

இனி மறக்க வேண்டியது -தினம் நாலு ட்வீட் செய்துட்டால் தானும் அப்பாட்டக்கர் என்ற நினைப்பை

மறக்க முடியாதது                 -அவ்வப்போது வாங்கும் செருப்படிகளை

விரும்புவது                                -பெண் ட்வீட்டர்களிடம் தனி சாட்

விரும்பாதது                               -பதிவுகளில் டவுசர் கிழிவது


டிஸ்கி: இது கற்பனைன்னு சொன்னா நம்பவா போறீங்க? இருந்தாலும் அனைத்தும் கற்பனையே

Friday, August 5, 2011

தோழி ட்வீட்கள்


 தோழி உங்களிடம் கோபமாய் இருக்கும் பொழுது, காமெடி செய்யாதீர், முகத்தை சோகமாய் வைத்துக் கொள்ளுங்கள்! # அனுபவம்

தோழியிடம் நன்றி சொல்லாதீர். அது உங்களை அந்நியன் ஆக்கிவிடும்!! # அனுபவம்

என் கனவில் நீ நீல வண்ண உடையில் வந்தாய் என்றேன் தோழியிடம். கனவு கருப்பு வெள்ளைதானே என்றாள். தேவதைகள் ஒருபோதும் கருப்பு வெள்ளையாய் இருக்க முடியாது என்றேன்.



தோழியை எப்போதும் எங்கேயும் காக்க வைக்காதீர். அது உங்கள் மீதான நம்பிக்கையை குறைக்கும். # அனுபவம்

தோழியிடம் சொல்லும் பொய்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அவள் எப்படியும் அதை ஒருமுறை சரி பார்ப்பாள். அப்போது பயன்படும். # அனுபவம்

தூங்கும் போது ஃபோன் செய்து தூங்கிட்டியா என்று கேட்கும் தோழியிடம் தூங்கவில்லை என்றே சொல்லுங்கள். அவள் எதிர்பார்ப்பதும் அதுவே தான். # அனுபவம்

அட்சயதிருதியைக்காக தங்கம் கேட்ட தோழியிடம் மாசு மருவற்ற தங்கமாய் நீ இருக்கையில் உனக்கு எதுக்கு தங்கம் என்றேன். அழகுக்கு அழகு சேர்க்க என்கிறாள்.

தோழி கோபத்தில் இருக்கும் போது திட்டும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்லாதீர். சிரித்துக்கொண்டே இருங்கள். கோபம்தானாய் தீர்ந்துவிடும். # அனுபவம்

இரண்டு செல்பேசி வைத்திருப்பின் தோழியுடன் பேசும் போது மற்றொரு செல்பேசியை ஊமையாக்கிவிடுங்கள். பேசும்போது அழைப்பு வந்தால் சந்தேகம் வரும் தோழிக்கு! #அனுபவம்


எப்போதும் தோழியை சந்திக்க செல்லும்போது உங்கள் செல்பேசியின் Inbox, Sent Items, Call History ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறிக்கூட வேறு தோழிகளின் குறுஞ்செய்திகளோ, அழைப்புகளோ இருக்கக் கூடாது. # அனுபவம்

தோழி, நீ இல்லையென்றால் உன் நினைவில் உன்னோடு வாழ்வேன் என நினைத்தேன் ஆனால் நீ - உன் நினைவையும் சேர்த்தல்லவா கேட்கிறாய்? # இதுவும் பொய் என்கிறாள் தோழி.

எப்போதும் அதிகாலையில் கேட்கும் இனிய சங்கீதம் உன்குரல் தான் என்றேன் தோழியிடம். இனிமேல் தினமும் உன்னை காலையில் நான் தான் எழுப்புவேன் என்கிறாள்.

ரோஜாக்கூட்டம் பார்த்துவிட்டு என் நினைவாய் நீ என்ன வைத்திருக்கிறாய் என்றாள் தோழி. நான் உன் நினைவை வைத்திருக்கிறேன் என்றேன். # கஞ்சப்பய என்கிறாள்.

தோழியுடனான ஊடல் காலத்தில் அலைபேசி ஒலிக்கும் போது அழைப்பது தோழியாய் இருக்குமோ என அலைபேசியை எடுக்க அவசரமாய் விழைகிறது மனம். # முரண்

ஊடலுக்கு பின்னான சந்திப்பில் தோழியுடன் இருக்கும் நெருக்கம் ஒவ்வொரு சந்திப்பிலும் குறைந்து கொண்டே செல்கிறது அடுத்த ஊடல் வரை. # ஊடல் நல்லது

பின் தொடர  : https://twitter.com/#!/NanChozhan