Tuesday, February 21, 2012

அவசரம்! காணாமல் போன பதிவர்கள்!

 
இதுலயாவது மிக்சிங் கரெக்ட்டா இருக்குமா?

பெயர் மாலுமி. எப்போதும் மப்புடனே இருப்பார். சைக்கிளை குரங்கு பெடல் போட்டதாலேயே மாலுமி என்று அவரே பெயர் வைத்துக்கொண்டார். காணாமல் போன அன்று கையில் குவாட்டரும் வாயில் வாந்தியும் வைத்திருந்தார் என்று பார்த்தவர்கள் சொனார்கள். பக்கத்துவீட்டு பருவதத்தின் நினைவாக ( என்ன? யாரு பருவதமா? அட நாய்ங்க...) அதற்கு யாரோ போர்த்திய பழைய சட்டையை காணாமல் போன அன்று இவர் திருடி அணிந்திருந்தாராம்.இவர் கடைசியாக பேசிய வார்த்தை குஷ்பூவை பார்க்க சென்னை போகணும் என்பதுதானாம். ஆனால் அப்படியே இவர் மோனிகாவையும் பார்க்க போயிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இவரைப்பற்றிய தகவல் அறிந்தால் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி. தமிழ் நாட்டின் எந்த டாஸ்மாக்கை வேணாலும் தொடர்புகொள்ளலாம்.


நம்மளவிட அன்சைசா இருக்குதுங்களே? ஷ்ஷ்ஷ்ஷ்.....

பெயர் வெறும்பய ஜெயந்த். பெயர்தான் வெறும்பய.. ஆனால் ஆள் பார்க்க பெறும்பயலா இருப்பாரு. காணாமல் போன அன்று ஓசி புத்தகத்தில் இருந்து கிழித்த கவிதையும் சுடுகாட்டு பிணத்தின் மாலையில் இருந்து திருடிய ரோஜாவும் வைத்திருந்தாராம். காணாமல் போன அன்று அவர் அளவுக்கு துணி கிடைக்காததால் கோஆப்டெக்சில் தள்ளுபடியில் வாங்கிய போர்வையை உடம்பில் சுற்றியிருந்தார் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். இவர் பல பெண்களை ”மேற்படிப்பு” படிக்க வைப்பதற்காகவும்  தலைமறைவாயிருக்கலாம் என்று மக்கள் சந்தேகிக்கின்றனர். இவர் கடைசியாக சொன்ன வார்த்தை ஜோதி பார்க்க போகணும் என்பதுதானாம். ஐயப்பன் கோவில் மகர ஜோதியை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு வெறும்பய பொறுப்பல்ல. இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி எல்லா அழகான பொண்ண பெத்தவன் வீட்டுக்கும் தகவல் கொடுத்துருங்க.. இவன அடிக்கத்தான் தேடிகிட்டு இருக்காங்க.

உனது வெற்றியை நாளை தரித்திரம்..ச்சே..சரித்திரம் சொல்லும்!

 பெயர் சிரிப்பு போலிஸ் ரமேஷ். இவர் பதிவெழுதி மக்களை சிரிக்க வைத்ததை விட தன் புகைப்படத்தை போட்டே மக்களை துன்பத்தை  மறந்து அதிகம் சிரிக்க வைத்ததால் சிரிப்பு போலிஸ் என்ற பெயர் ஒட்டிக்கொண்டது. அது எப்படி சாத்தியம் என்று கேட்டால்... இவர் புகைப்படத்தை பார்த்ததும் இந்த கொடுமையே தாங்கிட்டமே? நமக்கு வந்த துன்பமெல்லாம் எம்மாத்திரம் என்று சிரித்துவிடுவார்கள். இவர் காணாமல் போன அன்று குஷ்பூ இட்லியில் ஏன் குஷ்பூ இல்லை என்று சரவணபவன் சர்வருடன் சண்டை போட்டதாக தகவல். இவர் கடைசியாக பேசிய வார்த்தை.. இவர் அலுவலக சர்வர் USA யில் இருப்பதாக கேள்விப்பட்டதும்.. சர்வர் அங்க இருந்தா எனக்கு எப்பிடி சாப்பாடு கொண்டுவரமுடியும்? உடனே அந்த சர்வர இங்க டிரான்ஸ்பர் பண்ணிட்டு வர்றேன் என்று கோபமாக போனாராம். போகும் போதும் சும்மா போகாமல்  சின்ன தம்பி மார்த்தாண்டன் கணக்காக..ஐ..எனக்கு கண்ணாலம்...ஐ..எனக்கு கண்ணாலம் என்று கூவிக்கொண்டே சென்றாராம். இவரைப்பற்றி தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..சென்னையின் எந்த ஹோட்டல்ல வேணாலும் சொல்லுங்க... ஒரு இடத்துல கூட சாப்பிட்டதுக்கு பில் கொடுக்காததால எல்லோருமே கொலை வெறியா தேடிகிட்டு இருக்காங்க.

இவனுங்களுக்கு வணக்கம் சொல்லியே கை வலிக்குதுப்பா!

 பெயர் பன்னிக்குட்டி ராமசாமி. ராமசாமி என்னமோ இவர் சொந்த பெயராக இருந்தாலும் இந்த பன்னிகுட்டி என்ற அடைமொழி இவரிடம் ஒட்டிக்கொண்ட கதை வித்தியாசமானது. இவர் எந்த பிளாக்கில் கமெண்ட் போட்டாலும் ஒரு கமேன்ட்டோடு நிறுத்துவதில்லை. பன்னி குட்டி போட்டது போல் வத வதவென்று கமெண்ட்களாக  போட்டுத்தள்ளுவதால் இவருக்கு இந்த பெயர் ஒட்டிக்கொண்டது. இவர் காணமல் போன அன்று சில பிளாக்குகளுக்கு கமெண்ட் போட்டு வருவதாக சென்றாராம். ஆனால் பிளாக்கர் ஆரம்பித்த புதிதில் வந்த ப்ளாக்குகளுக்கு எல்லாம் இவர் இன்னும் கமெண்ட் போட்டுக்கொண்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பெயரில்லாத பிளாக்குக்கு எல்லாம் பயங்கர டேட்டா போடபோவதாக சொல்லிகொண்டிருந்தாராம். அண்ணனை காணாமல் இவரின் அடிவிழுதுகள் தற்கொலை முயற்சிக்கும் தயங்க மாட்டார்கள் என்பதால் இவரை பற்றிய தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க வேண்டிய முகவரி அகில உலக பன்னிக்குட்டி பாசறை, அபுதாபி குறுக்குசந்து, சில்பகுமார் எண்ணெய் கிணறு அருகில், துபாய்.


வாங்க..வாங்க.... அம்மா வந்தா இன்னும் குமிஞ்சு கும்பிடுவேன்!

பெயர் இம்சை அரசன் பாபு. மங்களகரமான பெயர்...ஆனால் இவர் வாழ்விலோ மங்களம் இல்லை. யாரும் தப்பா நினைக்க வேணாம்... இந்த கரண்ட் கட் பிரச்சனையால மங்களம் இல்லைன்னு சொல்லவந்தேன். காணாமல் போன அன்று நடந்து கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தாராம்..  திமுக ஆட்சியின் குறைகளை போனில்  கூறிக்கொண்டிருந்தவர் ஆட்சி மாறிய பின்னும் ஆளை காணவில்லை என்று  அச்சப்படுகின்றனர். அவர் தன்னை மறந்து குறைகளை கூறியபடி காசி வரை பேசியபடி நடந்தே  சென்றிருக்கலாம் என்று போலீசார் அஞ்சுகின்றனர். காணாமல் போன அன்று தனது தொப்பையை உள்ளே அடக்க முயற்சி செய்த சட்டையும் இடுப்பை இறுக்கி பிடிக்க முயற்சி செய்து தோற்ற பேண்ட்டும் அணிந்திருந்தார். பேன்ட் பாக்கெட்டில் எப்போதும்போல் பேர்நெஸ் க்ரீமில் ஐந்து பாக்கெட் வைத்திருந்தாராம். இவர் காணாமல் போகும்முன் கடைசியாக பேசிய வார்த்தை..மக்கா..திமுக கண்டிப்பா தோற்கும்... அம்மா ஆட்சி வந்ததும் கரண்ட் கட்டே இருக்காது என்பதுதானாம். இவரை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி.. அகில இந்திய அம்மா பாசறை, கோவில்பட்டி கிளை.Tuesday, February 14, 2012

கவுண்டமணியும் காதலர் தினமும்! ( லவ்வர்ஸ் டே ஸ்பெசல் )

 
காந்த கண்ணழகிகளையே காணுமே?
 
 
காதலர் தினம்... காலை.

சுவாமி கவுண்டானந்தாவின் ஆசிரமம்... காலையில் பூஜை முடித்து வெளியில்வரும்போதே அவரது சிஷ்யர் செந்தில் சோகமாக பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறார்....

"காதல் என் காதல் அது கண்ணீருல...
போச்சு அது போச்சு வெந்நீரில...
அடிடா அவள..உதைடா அவள..

"அடிசெருப்பால.. வர்ற போறவங்ககிட்ட அஞ்சு பத்து வாங்குற மொன்ன நாய்க்கு என்னடா காதல் வேண்டி கிடக்கு? அடடடா... இந்த லவ் பண்றவைங்க தொல்ல தாங்க முடியலடா சாமி... வெந்தது..வேகாதது..பிஞ்சது... பெருத்தது எல்லாம் லவ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க... ஒவ்வொருததனையா புடிச்சு மூஞ்சிய அடுப்புல வச்சு கருக்கனும்..படுவா... ஓடிப்போயிரு சொல்லிப்புட்டேன்"  கடுப்பாகிறார் கவுண்டானந்தா.

செந்தில் அவசரமாக எழுந்து வணங்குகிறார்... " சுவாமி..சுவாமி... அது ஒரு  பெரிய கதை....."

"சரிட்ரா நாயே...இவரு பெரிய பாரதிராஜா... அப்பிடியே பிளாஸ்பேக்க ஓப்பன் பண்றாரு.. அடச்சீ நாயே.. போ....போய்... ஆசிர்வாதம்  வாங்க வந்தவங்கள வரிசையா உள்ள அனுப்பு.. டேய் தகர வாயா.... அவங்ககிட்ட ஏதாவது தனியா  கமிஷன் வாங்குன... படுவா..மண்டைல தேங்காய வச்சு தேச்சுப்புடுவேன்.. ராஸ்கோல்... போ.. போய் வரச்சொல்லு"

வெளியே போன செந்தில் திரும்ப வருகிறார்.. " சுவாமி..சுவாமி.. ஏதோ இன்னிக்கு லவ்வர்ஸ் டேயாம்.. வெளில ஒரே லவ்வர்சா வந்துருக்காங்க..உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கனுமாம்.... "

"அடங்கொன்னியா... வழக்கமா பார்க்கு..பீச்சுன்னுதானே போவானுங்க..இப்ப என்ன ஆசிரமம் எல்லாம் வர ஆரம்பிச்சிட்டானுங்க? அதவிட இங்க ஜாலியா இருக்கும்னு எவனோ பொரலிய கெளப்பி விட்டாண்டோ...சரிடா..போய் ஒவ்வொரு ஜோடியா உள்ள அனுப்பு.."

முதலில் ஒரு ஜோடி உள்ளே வருகிறது...

" சுவாமி வணக்கம்.. எங்கள ஆசிர்வாதம் பண்ணனும்..எங்க காதல நீங்கதான் சேர்த்து வைக்கணும்... வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு.. உங்களைத்தான்  நம்பியிருக்கோம்"

" சரி..சரி.. காதல்னா பிரச்சனைதான்... நீங்க எப்பிடி காதலிச்சிங்க? என்ன பிரச்னை? தெளிவா சொல்லுங்க...

" சாமி.. என் பேரு டேவிட்.. இவ பேரு மல்லிகா...

" அடடடா...... மத நல்லிணக்கம்?  அட்ராசக்க..அட்ராசக்க... மேல சொல்லு..மேல சொல்லு....

"ஒரு வாரம் முன்னாடிதான் இவள ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணத்துக்காக போயிருக்கும்போது பார்த்தேன்.. இவளோட கண்ண(??) பார்த்ததுமே இவ எனக்குத்தான்னு  முடிவு பண்ணிட்டேன்.... அவளுக்கும் அப்பிடிதான்... அவங்க வீட்லயும் எங்க வீட்லயும் கூல்ட்ரிங்க்ஸ் சாப்ட வெளில போன நேரம் பார்த்து தனியா அவள பார்த்து  என் காதல அவகிட்ட சொன்னேன்.. அவளும் உடனே ஓக்கே சொல்லிட்டா... கொஞ்சம் கூட லேட் பண்ணாம அப்பிடியே பின்வாசல் வழியா ஊர விட்டு ஓடி வந்துட்டோம்... ஆனா நாங்க எங்க போனாலும் எங்க ரெண்டு பேர் வீட்ல இருந்து எங்கள துரத்திகிட்டே இருக்காங்க.. நீங்கதான் சாமி எங்கள காப்பாத்தணும்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தனர்.

" அடங்கொன்னியா... இளஞ்ஜோடிகள பிரிக்கிறதே இந்த தகப்பன்களுக்கு வேலையா போச்சு.. சரி.. டேவிட்..நீ சொல்லு..உன் வீட்ல என்ன பிரச்னை? யார் பிரச்னை பண்றா?"

" சாமி.. எங்க வீட்லகூட அவ்வளவா பிரச்னை இல்லை சாமி.. தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்க....

" அட நாயே.. அப்புறம் யார்தான் உன்னை தொறத்துனா?

" அதான் சாமி.. எங்க வீட்ல கூட விட்டுட்டாங்க.. ஆனா என் பொண்டாட்டி வீட்லதான் சாமி ஆள் வச்சு துரத்துறாங்க...

" டேய்ய்.. என்னடா சொல்ற? பொண்டாட்டி வீட்லையா? அடங்கொன்னியா... ஏம்மா..இந்தாம்ம்மா பொண்ணு.. இந்த நாய்க்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு உனக்கு தெரியுமாம்மா? தெரிஞ்சுமா லவ் பண்ணுன?

" தெரியும் சாமி..  ஏன்னா..எனக்கு கல்யாணம் ஆனத அவரு பெருந்தன்மையா ஏத்துக்கலையா? அதுமாதிரிதான் நானும் ஏத்துக்கிட்டேன்...."

" டேய்ய்..தல சுத்துதுடா... ங்கப்பா... பன்னாட பரதேசிங்களா... உங்க ரெண்டு பேருக்கும்தான்  கல்யாணம் ஆயிருச்சேடா.. எந்த கல்யாணத்துலடா பார்த்து இந்த கருமாந்திரம் புடிச்ச காதல பண்ணி தொலைச்சிங்க?

" சாமி.. எங்க காதல் தெய்வீக காதல்... தப்பா பேசாதிங்க... நான் என் கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண என் பொண்டாட்டியோட அங்க  போயிருந்தேன்.. இவ கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண இவ புருசனோட வந்துருந்தா.. நாங்க பார்த்ததுமே எங்க காதல் அப்பிடியே உள்ள இருந்து ஊத்து மாதிரி கிளம்பி வந்துருச்சு.. அதான் உடனே ஓடி வந்துட்டோம்... இப்ப ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா?

" அடங்கொன்னியா... கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண போனீங்களா? அப்ப உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனுச்சு?

" ரெஜிஸ்டர் பண்ண போன ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சாமி... அது ஒரு கெட்ட கனவா நினச்சு மறந்துட்டேன் சாமி... இப்ப ஆசிர்வாதம் பண்ணுங்க.."

" அட..கருமாந்திரம் புடிச்சவனுங்களா... மரத்த பார்த்தா கால தூக்குற நாய் மாதிரி பார்க்குற பொண்ண பூரா நீ லவ் பண்ணுவ? உனக்கு நான் ஆசிர்வாதம் பண்ணனுமா? இந்தா வாங்கிக்க..க்க்க்ரர்ர்..த்தூ.. இந்தாம்ம்மா பொண்ணு மல்லிகா.. (பேர பாரு? மானம் கெட்ட நாய்க்கு மல்லிகா?) இன்னும் ஒரு நிமிஷம் உங்கள இங்க பார்த்தேன்..சுடுபெட்டிய மூஞ்சில வச்சு தேச்சுபோடுவேன்.. ஓடி போயிருங்க சொல்லிபுட்டேன்...  டேய்ய் சிஷ்யா.. 
 
 


செந்தில் வேகமாக உள்ளே ஓடிவருகிறார்.. " சுவாமி..சுவாமி... அடுத்த ஜோடிய உள்ள வர சொல்லவா?

" டேய்ய் மங்குஸ் மண்டையா..இனி காதல் கீதல்னு எவனையாது உள்ள அனுப்புன... படுவா படுக்க வச்சு லாரிய விட்டு ஏத்திபுடுவேன் சொல்லிபுட்டேன்... அய்யயையையோ.. அட ஆண்டவா...காலங்காத்தால..கண்ட கழிசடைங்களை  எல்லாம் பார்க்க வைக்கிறியே? டோர் லாக்.. ஆசிரமம் க்ளோஸ்...

சாமியிடம் காதலர்தின ஆசிர்வாதம் வாங்க நினைப்பவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.

சிரிப்பு போலிஸ்
சிப்பு போலிஸ் ப்ளாக்.
பாலிடால்புரம்.
மொக்கையூர்.