பெயர் : இம்சை அரசன் பாபு
நிஜப்பெயர் : மேல உள்ளதையே வெச்சிருக்கலாம்
தொழில் : அருவாளுக்கு சாணி ச்சி.. சாணை பிடித்தல்
உபதொழில் : வாய்ஸ் சாட்டிங் (எங்கேன்னு கேட்கப்படாது)
தலைவர் : திமுகவுல இல்லை
துணைத்தலைவர் : தேமுதிகவுல இல்லை
பொழுதுபோக்கு : ரமேசுக்கு பெண் பார்த்தல் (பேன் அல்ல)
துணைப் பொழுது போக்கு : அதைக் கெடுத்து விடுதல்
மேலும் பொழுது போக்கு : எல்லாரையும் திட்டுதல்
வயது : சைட் அடிக்கும் வயதல்ல
பலம் : வயிற்றில்
பலவீனம் : தமிழில் மட்டுமே எழுதுவது
சமீபத்திய சாதனை : சென்னைக்கு போய் நரியை பார்க்காமல் தப்பி வந்தது
நீண்டகால சாதனை : பஸ்சும் விடத்தெரிந்து கொண்டது
சமீபத்திய எரிச்சல் : சென்னைக்குச் சென்றும் ரமேசையே பார்க்க வேண்டி வந்தது
நீண்டகால எரிச்சல் : பிரபல பதிவர் ஆகியும் (?) இன்னும் சர்ச்சைகள் வராதது
நண்பர்கள் : எல்லோரும்
எதிரிகள் : எல்லோரும்
ஆசை : ஐம்பதிலும் ஆசை வரும்
நிராசை : மீண்டும் ஐம்பது வருமா?
நம்பிக்கை : தானும் ஒரு பதிவர்
பயம் : பார்ட் 2...?
லட்சியம் : பார்ட்3...?
இதுவரை மறந்தது : வயதை
மறக்க வேண்டியது : சாப்பாடு (ஓசி அல்ல)
மறக்க முடியாதது : அதெல்லாம் பப்ளிக்ல சொல்ல முடியாது
விரும்புவது : கடலை (சாப்பிட அல்ல)
விரும்பாதது : பெண்கள் காவலனாக காலத்தை ஓட்டுவதை
