Showing posts with label சிரிப்பு போலீஸ்-காவியம். Show all posts
Showing posts with label சிரிப்பு போலீஸ்-காவியம். Show all posts

Monday, July 11, 2011

குள்ளநரி கூட்டம்..!இது விமர்சனமல்ல..



நண்பர்களே, நாம அனைவரும் பனங்காட்டு நரியுடன் நட்பு வைத்து ஒன்னரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. முழுக்க முழுக்க தமிழில், இலவசமாக ஒரு நாதாரியை திட்டவும்,காறி துப்பவும் இவருடன் நட்பு வைக்கப்பட்டது.


இவருடன் நட்பு வைக்க துவங்கிய சில வாரங்களிலேயே லட்சக்கணக்கில் வாசகர்கள் குவிந்தனர் . பல பங்களிப்பாளர்கள் சாட்டில் திட்டியது போக அவரை திட்டி ஈமெயில் கூட  அனுப்ப ஆரம்பித்தனர் . இன்றும் அவரை திட்டி
சராசரியாக நூற்றைம்பது ஈமெயில்கள் அனுப்பப்படுகிறது .



ஆனால் இவர் போதையில் இருக்கும்போது மட்டுமே நம்மால் நிம்மதியாக இருக்க முடிகிறது. இவர் தெளிந்துவிட்டால் நம் கதி அதோகதிதான்.


திடீரென்று ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் பாத்திருக்கியா மச்சி என்று ஆரம்பிப்பார், உடனே தெளிய ஆரம்பித்து விட்டது என்று தப்பிவிடுவது உத்தமம். புரியாமல் சரி சொல்லுன்னு சொல்லிட்டீங்கன்னா அவ்வளவுதான்...  இனி ராயபுரம் ரவுடிகளுடன் கஞ்சா அடித்தது முதல் அரசியல்வாதிகளுடன் கொள்ளையடித்தது வரை பேச தொடங்குவார். 


கவிதைன்னா ...,ரெண்டு வரிக்குள ஒரு பிரம்மாண்டம் இருக்கணும், வாழ்க்கையோட இயலாமையும் ,சந்தோஷத்தையும்,துக்கத்தையும், படிக்கிறவங்களுக்கு கொண்டு வரணும்,அதுக்கு பேர் தான் கவிதை. இப்படி யாருக்குமே புரியாத பாஷையில் கவிதைக்கு விளக்கம் கொடுப்பார்.



இடைஇடையே ’பழம் பெரும்’சினிமா நடிகைகளின் புள்ளிவிபரங்கள் வேறு. அப்படியே முழுதும் தெளிந்து விட்டால் உடனே ஆரண்ய காண்டம் பார்த்தீங்களா? கோஹினூர் காண்டம் பாத்தீங்களா என்று பஸ்விட்டு எல்லாரையும் அலறி ஓட வைப்பார், இல்லையென்றால் பின்நவீனத்துவத்தைப் பற்றி முன்நவீனத்துவ முறையில் விளக்கி பதிவெழுதி அனைவரையும் கதற வைப்பார்.


இதிலிருந்து பதிவர்கள், பொதுமக்கள் அனைவரையும் காப்பாற்றும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள், (யார்? யாரோ!)
 
அதனால்தான் இவருக்கு ஊத்திக்கொடுத்து ஊத்திக்கொடுத்து இவரது ப்ளாக் User name-யை மறக்க வைத்தோம். அப்பாடின்னு கொஞ்சநாள் நிம்மதியாக இருந்தோம். அப்போது நரி வல்லாரை கீரை சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகமாகும்னு அதை சாப்பிட்டு வல்லாரை கீரைக்கு கெட்ட பேர் உண்டு பண்ணினது தான் மிச்சம்.ஆனால் ஒருநாள் அவரது போதை தெளிந்து தில்லுமுல்லு என்ற புதிய ப்ளாக் ஆரமித்துவிட்டார். அதனால் நம் தமிழ் மக்களின் நலன் கருதி இவரை தெளிய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.



அதனால் இவர் தெளியாமல் இருக்க வைக்க சரக்கு வாங்கி கொடுத்து, ஊறுகாய் வாங்கி கொடுத்து நமக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுடுள்ளது . எவ்வளவோ , விளம்பரங்கள் போட்டும் , இந்த நட்டத்தை ஈடு செய்ய இயலவில்லை .

நரியின் குடி அதிகமாகி உள்ளதால் அவர் போதைக்கு மாதாமாதம் கிட்டத்தட்ட ஆயிரம் டாலர் செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால வாசகர்களிடம் பிச்சை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. உங்களால் முடிந்த பிச்சையை சத்யம் தியேட்டர் வாசலில் பிச்சை எடுக்கும் மங்குனி தட்டிலோ, பரங்கிமலை ஜோதி வாசலில் பிச்சை எடுக்கும் வெறும்பையன் தட்டிலோ போடும்படி கேட்டு கொள்கிறோம். ஒரு வேளை ஓசி சோறு போட்டால் உங்கள் வீடு தேடி வந்து ரமேஷ் பிச்சை எடுக்கும் வசதியும் செய்து உள்ளோம். மேலும் 24 மணி நேரத்திற்கும் ஊத்திக் கொடுக்க கேப்டனிடம் பயிற்சி பெற்ற ஒருவரை நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்!


ஜூலை 31 க்குள் ஆயிரம் டாலர் திரட்ட முடியவில்லை என்றால், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நரிக்கு சரக்கு வாங்கி தருவதை நிறுத்த  முடிவு செய்துள்ளோம்.


இது போல ஒவ்வொரு மாதமும் ஆயிரம் டாலர் நிதி உதவி கிடைத்தால் மட்டுமே நம்மால் நரிக்கு சரக்கு வாங்கி கொடுத்து அவருக்கு போதை தெளியாமல் வைக்க முடியும். எவ்வளவோ உதவிகள் அளித்த வாசகர்கள், இந்த நிதி உதவியிலும் பங்களிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். அது ஒரு டாலரோ, நூறு டாலரோ, எவ்வளவாக இருந்தாலும் தயவு செய்து பிச்சையாகவோ மேலே குறிப்பிட்ட தளங்களில் உள்ள பேபால் லிங்கிலோ அனுப்பவும். உங்கள் வங்கி அல்லது பேபால் கணக்கில் “நரி வளர்ச்சி நிதி” என்று தான் பெயர் வருமே தவிர வேறு எந்த தகவலும் வராது (இது உங்கள் நன்மைக்காக).


தயவு செய்து பங்களியுங்கள், நரிக்கு போதை தெளியாமல் இந்த நாட்டை காப்பாற்ற உதவுங்கள்..

ஆண்டவா நாட்டு மக்களை நீ காப்பாற்று. நரியிடமிருந்து பதிவுலகை நாங்கள் காப்பாற்றுகிறோம்.

Monday, July 4, 2011

வெண்ணிற ஆடை மூர்த்தியின் தத்துவங்கள்


ஏழையாக இருப்பது நல்லது. வியாதி வந்தால் டாக்டர் சீக்கிரம் குணப்படுத்திவிடுவார்.
==============================
E.C.G என்பது ஜீவன் ஈஸியாகப் போகுமா இல்லை அவஸ்தைப்பட்டு போகுமா என்று கோடிட்டு காட்டும் வரைபடம்.
==============================
அபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.
==============================
செல்வா: அப்பா நம்ம கார யாரோ திருடிட்டு போறாங்க.
அப்பா: அவங்க யாருன்னு பாத்தியா?
செல்வா: இல்லப்பா ஆனா கார் நம்பர் நோட் பண்ணினேன்.
==============================
வக்கீல்: போலீஸ் விசிலடிச்சு,கையை ஆட்டி கூப்பிட்ட போது ஏன் காரை நிறுத்தலை?
பெண்: நான் அந்த மாதிரி பெண் இல்லைங்க..
==============================
நல்லவேளை நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். வடநாட்டில் பிறந்திருந்தால் ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டிருப்பேன்.
==============================
மூக்கில் ரத்தம் கசியாமல் இருக்க மற்றவர் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலம்.
==============================
வந்தது போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது சாதாரண ஆபரேசன். வராமலே போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன்.
==============================
அவர் யாரிடமும் ஷட்-அப் என்று சொல்ல மாட்டார். அவர் ஒரு பல் டாக்டர்.
==============================
எங்கள் தாத்தா நூறு வயது வரை உயிரோடு இருப்பதற்கு காரணம் ஆப்பிள் தான். ஆம் இதுவரை அவர் ஆப்பிள் சாப்பிட்டதே இல்லை.
==============================
உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.
==============================
ஒரு பெண்ணுக்கு அழகுதான் அவளது சொத்து என்றால் நிறைய பெண்களுக்கு சொத்து வரி கட்ட அவசியமே இருக்காது.
==============================
மொட்டைத்தலை உள்ளவனுக்கு மயிர் கூச்செறியும் கதை சொல்லலாமா?
==============================
எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமெனில் வயதானவர்கள் பக்கத்திலேயே இருங்கள்.
==============================
உடல் எடையை குறைக்க அவன் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தான். ஆனால் எடை குறையவில்லை. நண்பர்கள் குறைந்துவிட்டனர்.
==============================
ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?
==============================
திருமண மோதிரம்: உலகத்திலேயே விரலுக்கு போடும் மிகச் சிறிய விலங்கு
==============================
ஒரு பெண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவாள் திருமணம் ஆகும்வரை. ஒரு ஆண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டான் திருமணம் ஆகும்வரை.
==============================
உலகத்திலேயே ஒரே ஒரு பெண்தான் நல்லவள் இல்லை. அவள்தான் என் மனைவி என பல கணவன்மார்கள் நினைப்பதுண்டு.
==============================
சமையலறையில் நிகழும் விபத்தைதான் ஏன் மனைவி எனக்கு டின்னராக பரிமாறுகிறாள்
==============================
இரண்டு கல்யாணம் செய்து கொள்பவனுக்கு தண்டனை - இரண்டு மாமியார்கள்.
==============================
கணவன்: ஏன் உறவுக்காரங்க வந்தா நீ சரியா கவனிக்கிறதில்லை?
மனைவி: ஏன் இப்படி சொல்றீங்க. என் மாமியாரைவிட உங்க மாமியாரத்தான நான் நல்லா கவனிக்கிறேன்.
==============================
நண்பர் 1 : கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறதா?
நண்பர் 2 : உண்டு. என் மனைவியை முதன் முதலாக ஒரு பெட்ரோல் பாங்கில்தான பார்த்தேன்.
==============================
தூக்கத்தில் உளறுவது பற்றி அவன் கவலைப்பட மாட்டான். அவனுடைய மனைவிக்கும் அவனுடைய ஸ்டெனோ வுக்கும் ஒரே பேர்தான்.
==============================
குழந்தைகள் வேகமாக வளர்வதே ஸ்கூல் யூனிபார்ம் வாங்கியபின் 2,3 மாதங்களில்தான்
==============================
டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். அவருக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர் டெலிபோனை கண்டுபிடித்தே இருக்க மாட்டார்.
======================================
ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு வந்த கடிதம்:

அய்யா என் மனைவி என்னை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தாள். உங்கள் பத்திரிகையில் வந்த "விவாகரத்தும், அதன் விபரீத விளைவுகளும்" என்கிற அருமையான கட்டுரையை படித்ததும் மனம் திருந்தி விவாகரத்து முயற்சிகளை கைவிட்டுவிட்டாள்.

பின் குறிப்பு: இத்துடன் நான் என் சந்தாவை கேன்சல் செய்கிறேன். இனிமேல் உங்கள் பத்திரிக்கையை எனக்கு அனுப்ப வேண்டாம்.
==============================
நன்றி: வெண்ணிறாடை மூர்த்தி. அவர் எழுதிய புத்தகத்தில் தொகுத்தது
 

Thursday, June 16, 2011

புக்குல என் மூஞ்ச.... வைக்க!!!

வர..வர..இந்த வெளிநாட்ல இருக்கவங்க தொல்ல தாங்கலப்பா... இங்கே இருந்து ஒட்டகம் மேய்க்கிறதுக்கு ஓசில போக வேண்டியது..சிங்கப்பூர் போறேன்..சிலுக்குபட்டி போறேன்னு அங்க போயி குப்ப கூட்ட வேண்டியது.. ஆனா அவனுங்க ஆர்குட்லயும்..ஃபேஸ் புக்லயும் பண்ற அட்டகாசம் தாங்க முடியலடா சாமி..ஒட்டகம் மேக்கிரவன் ஒபாமாகிட்ட நிக்கிறமாதிரி போட்டோ போடறான்... ஒன்ற டாலர் பஸ் காச மிச்சம் புடிக்க நடந்து போற நாதாரிங்க... பென்ஸ் காருகிட்ட நிக்கிற மாதிரி போட்டோ போடறான்! 

@ டெரர்,பன்னி,வைகை,மாணவன், ஜெயந்த் .. இது உங்களுக்கு மட்டுமில்லடா உங்களமாதிரி சீன் போடற எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கை!

 இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே. இது மெயிலில் வந்தது தமிழில் அளித்திருக்கிறோம் அவ்வளவுதான்!

ஏண்டா உங்க கைய கால வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாதா? உங்களுக்கு வாழ்க்கையில என்னடா லட்சியம்? அடுத்தவங்களை பொறாமைப்பட வைக்கிறதா? அப்புறம் ஏன் உங்க புரொஃபைல் பிக்சருங்களை அடிக்கடி மாத்திகிட்டே இருக்கீங்க? என்ன காரணம்? எனக்கு இப்ப தெரிஞ்சாகனும்!

ஒத்துக்கிறோம், நீங்கெல்லாம் வெளிநாட்டுக்கு போய்ட்டீங்க. உங்க ஒன்னுவிட்ட இரண்டுவிட்ட சித்தப்பா, மாமால்லாம் உங்களை நினைச்சி பெருமைப்படுவாங்க. எங்களுக்கும் சந்தோசம்தான். அதுக்காகதானே ஏர்போட் வந்து டாடாலாம் காமிச்சு வழியனுப்பி வச்சோம். ஆனா உங்க போட்டோக்களை வச்சி எங்களை ஏண்டா சாவடிக்கிறீங்க?

சரி, ஒத்துக்கிறோம், நாங்க அந்த இடத்தையெல்லாம் மேப்ல மட்டும்தான் பார்த்துருக்கோம், நிஜ வாழ்க்கையில இல்ல. அவ்வளவுதானே? அதுக்காக ஏன், நீங்க ஒருநாள் விட்டு ஒரு நாள் புது படத்தை போடுறீங்க. உங்களுக்கு என்னதான் வேணும்? உங்களுக்கு தேவை, நாங்கெல்லாம் ‘like’-ஐ அழுத்திட்டு “வாவ், சூப்பர், கலக்கலா இருக்கு” இப்படி கமெண்ட் போடணும், அதானே? நீங்க ரகசியமா ஒவ்வொரு நிமிசமும் எல்லா கமெண்டையும் பார்ப்பீங்க. நாலு நாள் கழிச்சு “எல்லோருக்கும் நன்றி!” அப்படின்னு ஒரே வார்த்தையில முடிச்சிட்டு போயிடுவீங்க!

சரி, அதைக் கூட ஒத்துக்கலாம். நீங்க நிறைய காசு செலவு பண்ணி அங்க போயிருக்கீங்க, அதனால உங்களை எல்லோரும் பாராட்டனும்னு நினைக்கிறீங்க. புரியுது. ஆனா ஏண்டா செடி, மரம், நாய், பூனைன்னு இதையெல்லாம் புரொஃபைல் பிக்சர்ல போடுறீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? லூசுப்பசங்களா!


அப்புறம் இன்னொரு ரகம் இருக்கு. அதாவது அவங்க படத்துக்கு பதிலா அவங்க குழந்தை படத்தை போடுறது. இந்த மாதிரி ஆளுங்களை பத்தி நாங்க பேசக் கூட விரும்பலை.

எல்லாத்தோட பெஸ்ட் லேடிஸ்தான். ஏனுங்க அம்மிணி, உங்க படத்தை கருப்பு வெள்ளையா மாத்தி போட்டா, திடீர்னு அது அழகாயிடுமா? மத்தவங்க உங்களை பார்த்து “ஆஹா. என்ன அழகு! என்ன அழகு!” இப்படி நினைக்கனும், அப்புறம் உங்களுக்கு friend request அனுப்பனும். ம்.. அப்படித்தானே? எங்களுக்குதானே தெரியும் நீங்க எப்படி இருப்பீங்கன்னு!.

நீங்க இங்கயும் ஒன்னும் செஞ்சதில்ல. கல்யாணம் ஆகி அங்க போயிட்டு, அங்கேயும் ஒன்னும் செய்யாமதான் இருக்கீங்க. இதில பெருமைப்பட என்ன இருக்கு? இதில தினமும் நீங்க என்ன சமைச்சீங்கன்னு அப்டேட் பண்ணுறது வேற “நான் இன்று என் அன்புக் கணவருக்காக தயிர் சாதம் சமைத்தேன்!

சமைச்சீங்களா? உண்மையாவா? இதில வேற அந்த லூசு ஹஸ்பெண்டும் வந்து லைக் போடுவாரு அப்புறம் பொது இடத்தில சொல்வாரு. “தேங்க்யூ டார்லிங், உம்ம்ம்ம்மா…

நீங்க இந்தியாவிலிருந்து வந்தவங்கதானே? இந்த மாதிரி விசயமெல்லாம் அநாகரிகம்னும் பொது இடத்தில இப்படியெல்லாம் நடந்துக்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாது? நீங்க இந்தியாவை விட்டுட்டு போனா உடனே எல்லாத்தையும் மறந்துடுவீங்களா?

அப்புறம் நீங்க சமைச்ச சாப்பாட்டோட படத்தை மிக ருசியானது எச்சில் ஊறவைக்கும்ன்னு தலைப்போட வேற போடறது…சாப்பாட்டு பார்த்தால்ல தெரியும்.. எச்சில் ஊறுமா, வாந்தி வருமான்னு! இதில வெளிநாட்டுக்காரங்க யாராவது வந்து அது எப்படி செய்யறதுன்னு கேக்கறது! கொய்யால, நீ இண்டர்நெட்டுதானே யூஸ் பண்ணுறே? கூகுள்ள தேடிப்பார்த்தா கிடைக்கப் போகுது.

சரி எனக்கு இப்ப ஒன்னு சொல்லுங்க, நீங்க இந்தியாவில இருந்தப்ப ஒரு நாளாவது இப்படி சமைச்சிருக்கீங்களா? உங்க அண்ணனும் நல்ல பையன் தான். அவனுக்காக ஒரு நாளாவது சமைச்சிருக்கீங்களா? யோவ் கணவன்களா, நாங்க உங்களையும்தாம்பா கேட்கிறோம், நீங்க இங்க இருந்தப்ப, ஒருதடவையாவது, உங்கம்மா சாப்பாடு நல்லாயிருக்குனு பாராட்டியிருக்கீங்களா?

கணவன் மனைவி இரண்டு பேரும் இந்த மாதிரி லூசுத்தனமான விளையாட்டுகளை விளையாண்டுகிட்டு வருசத்துக்கு 365 நாளும் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிக்கிறீங்க. ஆனா சொல்வீங்க, “நாங்க கிங் கோல்ஸ் ஓரியண்டல் பேலசின் 35வது மாடியில் சூப்பர் டின்னர் சாப்பிட்டோம். செம சைனீஸ் ஃபுட்!” ஏம்பா அது வெறும் சைனீஸ் ஃபுட் தானே? அதுக்கு ஏன் இவ்வளவு சீன் போடறீங்க? இந்தியா சீனாவுக்கு பக்கத்திலதானே இருக்கு.

அப்படின்னா உண்மையா என்ன நடக்குதுனு  உங்களுக்கு தெரியலன்னா, இப்ப சொல்றோம் கேட்டுகுங்க. அங்க யாருமே சந்தோசமா இல்ல. நீங்க எவ்வளவு சம்பாதிச்சாலும், சந்தோசமா இருக்க போறதில்ல. வெஸ்டர்ன் டாய்லெட்ல உட்கார்ந்துகிட்டு, “நாம ஏன் இங்க வந்தோம்?”னு யோசிச்சிகிட்டு மட்டும்தான் இருப்பீங்க.

நாங்க இந்த உண்மையெல்லாம் சொன்னேன்னா, உடனே நீங்க உங்க ஐ- புரோடக்டெல்லாம் என்கிட்ட காமிப்பீங்க. இதப்பாருங்க, ஐபேட்2-லாம் இங்கேயும் கிடைக்குது, தெரியுமா? அதனால கம்முனு நாங்க சொல்றத கேளுங்க. உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க.

இப்ப நீங்க நினைக்க ஆரம்பிச்சிருக்கலாம், எங்களுக்கெல்லாம் பொறாமை, அதான் இப்படியெல்லாம் பேசுறோம்னு, இல்லையா? இதப்பாருங்க, நாங்களும் அங்கெயெல்லாம் போய் இந்த மாதிரியெல்லாம் செஞ்சாலும் இப்படித்தான் பேசுவோம். உங்களால என்ன செய்ய முடியும்?

இப்படிக்கு
உள்ளூர் டீக்கடை பெஞ்சு
.. 

நன்றி:
மொழி பெயர்ப்பு உதவி:எஸ்.கே,வைகை 

Friday, June 10, 2011

தமிழ்நாடு மின்சார வாரியம் ராக்ஸ்

உன்னை பிரண்டா மதிச்சு மெசேஜ்
அனுப்பினா நீ என்ன பண்ணனும்?

சொல்லுடா செல்லம் நீ என்ன பண்ணனும்?
ஒண்ணு மெசேஜ் save பண்ணனும்.
இல்லன்னா Forward பண்ணனும்.

அத விட்டுட்டு நீ எதுக்காக டெலீட் பண்ற?
இல்ல தெரியாம கேக்கபோறேன்.
நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

வருசத்துக்கு ஒரு தடவ பூஸ்டர் பேக் போடுற
உனக்கே இவ்ளோ அதப்புன்னா

மாச மாசம் பூஸ்டர் பேக் போட்டு
சுத்தி சுத்தி மெசேஜ் அனுப்புற
எனக்கெப்படி இருக்கும்..

ஒழுங்கா மெசேஜ் பண்ணு
#SMS
====================================
Teacher is Hot Water
Parent is mineral water
Enemy is salt water
Lover is ice water

But 
Friendship is
Beer Bottle
சும்மா பாசத்துல பொங்குவோம்ல!!!
====================================
டீச்சர்: ஏண்டா ஹோம் வொர்க் பண்ணலை?
பையன்: கரண்ட் இல்லை
டீச்சர்: மெழுகுவர்த்தி ஏத்தி வச்சி எழுத வேண்டிதான?
பையன்: தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்துச்சு.
டீச்சர்: போய் எடுக்க வேண்டிதான?
பையன்: நான் குளிக்காம சாமி ரூம் போக மாட்டேன்.
டீச்சர்: ஏன் குளிக்கலை?
பையன்: மோட்டார் ஓடலை. தண்ணி வரலை.
டீச்சர்: ஏன் மோட்டார் ஓடலை?
பையன்: சனியனே அதான் சொன்னனே. கரண்ட் இல்லைன்னு.
டீச்சர்: !!!!
#தமிழ்நாடு மின்சார வாரியம் ராக்ஸ்...
====================================
டெரர் கும்மிக்காக பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்.

Monday, December 13, 2010

வ - குவாட்டர் கட்டிங் !!!

வ - குவாட்டர் கட்டிங் !!!
(பை : சங்க மூத்த குடிமகன் டெரர் )

'ரா'வோட "ராவா" குடிச்சவனும் ..
'ரா' பகலா படிச்சவனும் ..
நல்லா தூங்கினதா..
சரித்திரமே இல்ல !


இப்படிக்கு  - வாத்தியார் வைக்கிற பரீட்சை எழுதி பெயிலா போனவர்கள் சங்கம் !

நம்ம 'செல்வா' தத்துவம் !!!!!
ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் , பரிசு கைக்குத்தான் கிடைக்கும் .... But  யாரு கைக்கு ???? thats செல்வா style ...

சூப்பர் பன்னிக்குட்டி பஞ்ச் !!
 (By : சுடச்  சுட அல்வா கொடுக்கும்  பன்னிக்குட்டி )

அதிகமா “சீரியல்" பாக்குற பொண்ணும் ..
ரொம்ப நாளா டீ கடைல தூங்கற 
“பன்"னும் ..
நல்லா இருந்ததா ?
சரித்திரமே இல்லை ..


எஸ்.கே கிட்ஸ் !!!

மாதவன் :   டேய் எஸ்.கே , நீ சொல்லு டா !
                  முதல் மாசம் ஜனவரி !!
                  
ரெண்டாவது மாசம் பிப்ரவரி !! பத்தாவது மாதம்?
  எஸ்.கே : டெலிவரி தான் சார்...!!

பாட்"சா"ப்ட்வேர் - செம  நக்கல் மச்சி : : :(நரி)

நான் software-காரன்.. software-காரன்..
நாலும் தெரிஞ்ச pc-காரன்..
mainframe-ல COBOL-காரன்..
internet-ல java-காரன்..
cut and pastu வேலைக்காரன்..
logic உள்ள மூளைக்காரன்டா........
நான் எப்பவுமே
programmers'க்கு உறவுக்காரன்டா.......

Google'ன்னா அஜக்குத்தான் ,Orkut'ன்னா குமுக்குத்தான்..
Google'ன்னா அஜக்குத்தான் ,Orkut'ன்னா குமுக்குத்தான்..

Project தினுசாசு..,code-டும் பெருசாச்சு..
bug-க்க எதிர்பார்த்து.., பாதி வயசாச்சு..
review படபடக்கும் நேரத்தில..
Email window-வின்  ஓரத்தில...

நான் H1-ல இலவசமா போறேம்மா..
உன் பிள்ளைக்கொரு B1 வாங்கி தாரேம்மா..
நம்பி வந்து பாரு , இது நம்ம (Software) சாப்ட்டு வேரு..
C++'ல  code-டு.., Crash'சும் கூட ஆகாது... து .. து. . து . . .

நான் software-காரன்.. software-காரன்..
................................................................
................................................................

backend-டுள்ள DB-காரன்..
frontend-டுள்ள VB-காரன்..
OS-ல NT-காரன்..
Assembled PC-க்காரன்டா ..டா .. டா .. டா ..
நான் internet-டில்
eppo'ழுதும் browsing செய்வேன்டா.....

Facebook-ன்னா  அஜக்குத்தான் ,Twitter -ன்னா  குமுக்குத்தான்...
Facebook-ன்னா  அஜக்குத்தான் ,Twitter -ன்னா  குமுக்குத்தான்...

ISO audit-ஐ - ஆபத்தில் விட மாட்டேன்..
Critical bug வந்தா , மாட்டேன்னு சொல்ல மாட்டேன்...
நரி கோரஸ் : : :
{{{  அஜக்கு ன்னா அஜக்கு ... குமுக்கு ன்னா குமுக்கு ... }}}
{{{  யேய் .. அஜக்கு ன்னா அஜக்கு ... குமுக்கு ன்னா குமுக்கு ... }}}

அப்பப்போ bore அடிச்சா மேட்டர்'ரையும்..
match நடந்தா CricInfo with குவாட்டரையும் .....   சேத்'து'டுவேன்...

ஈமெயில்-ன்னா அனுப்புடா.., ஈமெயில்-ன்னா அனுப்புடா ...
ஈமெயில்-ன்னா Reply பண்ணுடா ... ஈமெயில்-ன்னா Reply பண்ணுடா...

Song dedicated to all our software guys


லாஸ்ட் பட் லீஸ்ட் !!

காவலன் Theatre'ல ஓடப் போவது பற்றி : : :

பன்னிகுட்டி to சௌந்தர்:  இந்த படம் நூறு நாள் ஓடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
சௌந்தர் :   நூறு நாள் என்ன நண்பா ..., ஐநூறு நாளே ஓடும்.
பன்னிகுட்டி : என்ன டா ....காமெடி பன்ற ???
சௌந்தர் :   கொய்யால .., முதல்ல யாருடா காமெடி பண்ணுனது ?!

செல்வாவின் சந்தேகம்:
ரயில்வே கால அட்டவணைல காலம்தான(column) இருக்கணும் ஏன் ரோவும்(row) இருக்கு?
....................