Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, February 3, 2016

சமகால திரைவிமர்சனப் படைப்பிலக்கியங்கள - ஒரு பார்வை!

அன்பின் ப.ரா,

இரண்டு நாட்களுக்கும் முன்பாக நானும் என் அறைத் தோழனும் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றினைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அந்தப் படத்தைப் பற்றி நமது இணைய சமூகம் என்ன நினைக்கிறது என்றறிவதற்காக இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்தப் படத்தினைப் பற்றிய இலக்கியத் தரத்திலான விமர்சனக் கட்டுரை ஒன்றினைக் காண நேர்ந்தது. அதில் இருந்தவை நிச்சயமாகத் தமிழ் எழுத்துக்கள்தான். ஆனால், சேர்த்துப் படிக்கையில் அது வேறொரு மொழியாகத் தெரிந்தது. என் நண்பனிடம் கொடுத்து அதனைப் படிக்கச் சொன்னேன். நீண்ட நேரம் அதைப் படித்தான். தமிழ் வழிக் கல்வி கற்றவன்தான்.

முதலில் அவன் நேராகவும், செல்ஃபோனை நேராகவும் பிடித்துப் படித்தான். பின்னர் செல்ஃபோனைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் படித்தான். அதன் பின்னர் செல்ஃபோனை என் கையில் கொடுத்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் அப்படியே தலைகீழாக நின்று கொண்டு படித்தான். மறுபடி செல்ஃபோனைத் தலைகீழாகப் பிடிக்கும்படிக் கூறிக்கொண்டு மறுபடியும் படித்தான். கடைசியில் அந்தப் படம் முடிந்துவிட்டது. இவன் இன்னமும் விமர்சனத்தைப் படித்து முடிக்கவில்லை. 

இப்பொழுதெல்லாம் நள்ளிரவில் திடீரென எழுந்து விழுமியங்கள், எச்சங்கள், கோட்பாடுகள், நுண் கருத்துத் திணிப்புக்கள், அல்லலுறும் மனது, மனப்பகிர்த் துளிகளின் பிம்பங்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிடுகிறான். திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும் அதைக் குறித்த இலக்கிய விமர்சனங்கள் இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பிரமிப்பாக இருக்கிறது.

தமிழின் மிக முக்கியமான ஆளுமையான தாங்கள், திரைப்படம் குறித்த இலக்கிய விமர்சனங்களின் தாக்கம் குறித்து என்ன நினைக்கிறீர்கள். சுய உணர்வு நிலையில்லாத தமிழ்ச் சமூகத்தில் இது போன்ற உன்னதமான விமர்சனங்கள் உள்ளிழுத்துக் கொள்ளப்படும் என்று கருதுகிறீர்களா?  
இப்படிக்கு
Selvakumar Palanisamy


அன்பின் செல்வா,

படத்தை பார்த்துவிட்டு விமர்சனத்தை படிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள். விமர்சனத்தை படிக்கும் முன் படத்தை பார்ப்பது என்பது கக்கா போகும் முன் கழுவுவதை போன்றது. தவறேதும் இல்லையென்றாலும் சரி என்று சொல்ல முடியாது அல்லவா? அது இருக்கட்டும், விமர்சனத்திற்கு வருவோம். இலக்கியத் தரத்திலான விமர்சனம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது இலக்கியத்தரம் என்று முன்பே தாங்கள் அறிந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆனால் தமிழில் இலக்கியம் என்று வந்துவிட்டால் அதை வாசிப்பதற்கு முன்னர்  சில விஷயங்களை உள்வாங்கி விளங்கிக் கொள்ள வேண்டும். 


தற்கால தமிழ் இலக்கிய சூழலில் பல்வேறு ஞானமரபுகள் தோன்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் தமக்கென தனித்தன்மையான எச்சங்களை விரவி வைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் கோட்பாடுகள் பெரும்பாலும் தொன்மையான விழுமியங்களில் இருந்து கடனாக பெறப்பட்டவையே. அங்கே காணப்படும் நுண்ணரசியல், பல நேரங்களில் ஞானமரபுகளை உடைத்தெறிவதாக இருந்த போதும், ஆழமான படிமங்கள் ஊடான கருத்து திணிப்புகள் ஏற்படுத்தி வரும் பிம்பங்கள் இந்த கட்டமைப்புகளைத் தக்க வைக்கும் வேலையை இடையறாது செய்து வருகின்றன. இவற்றை அறிந்திருந்தால் மட்டுமே தமிழ் இலக்கிய கட்டுரைகளை வாசிக்க முடியும். தெரியாமல் வாசித்து விட்டீர்கள் என்றால் அது இலக்கிய கட்டுரையே அல்ல என்று அறிக. ஆகவே நீங்கள் உடனடியாக ஏதாவது ஒரு இலக்கிய ஞானமரபை தெரிவு செய்து, ஆசான் ஒருவரை பிம்பமாக ஏற்றுக்கொள்ள முயல வேண்டும்.  

நிற்க. இப்போது உங்கள் நண்பரின் பிரச்சனைக்கு வருவோம். செல்போனை தலைகீழாக வைத்தும், தானே தலைகீழாக நின்றும் படிக்க முயற்சித்ததாக கூறி இருக்கிறீர்கள். அதுதான் நீங்கள் இருவரும் செய்த இமாலய தவறு. இலக்கியம் வளர்ப்பதற்கென்றே அரசு ஆங்காங்கே கடைகள் கட்டி சில நீர்மங்களை வினியோகம் செய்து வருவதை அறியாமல் நீங்கள் தமிழராக இருக்கவே வாய்ப்பில்லை. இலக்கிய விமர்சனம் படிக்க வேண்டும் என்று முடிவு செய்த மறுகணமே நீங்கள் அந்த கடைகளுக்கு விஜயம் செய்திருக்க வேண்டும். அங்கே அதைவிட இலக்கியத்தரம் மிக்க விமர்சனங்கள் வாயால் எழுதப்படுவதை செவிகுளிர பார்த்திருக்கலாம். தலைகீழாக, ஒருக்களித்தவாறு, கோணலாக, நேராக என்று அனைத்து தளங்களிலும் ஒரே நேரத்தில் இலக்கியம் வாசித்த அனுபவம் உடனடியாகக் கிடைத்திருக்கும். 

இது எதையும் செய்யாமல் நேரடியாக ஒரு இலக்கிய விமர்சனத்தை படிக்க வைத்து உங்கள் நண்பரை சுய மனமுரண்டு நிலையை அடைய வைத்திருக்கிறீர்கள். அவரை சரி செய்ய இப்போது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நள்ளிரவில் எழுந்து அவர் கூச்சலிடும் போது, ’தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி’ என்று சத்தமாக அவர் காதில் கத்தவும். ஆரம்பநிலை என்றால் உடனே சரியாகி விடுவார். அப்படியும் அடங்கவில்லை என்றால் ’சாட்டையடி பதிவு தோழர்’ என்று கத்தவும். இதற்கும் அடங்காத முற்றிய நிலை என்றால் அதற்கு இன்னொரு வழி இருக்கிறது.  ’சார் பத்மபூசன் வேணுமா’ என்று காதில் மிக மெதுவாக ரகசியம் பேசுவது போன்ற தொனியில் கேக்கவும்.... அடங்கியே தீருவார்!

திரைப்படங்களுக்கு எழுதப்படும் இலக்கியத்தரமான விமர்சனங்கள் குறித்து எமக்கு எப்பொழுதும் ஆழ்ந்த கவலை உண்டு. தமிழ்ப்படங்களே இலக்கியத்தின் உச்சகட்டம் எனும்போது அதை இலக்கியத் தரமாக விமர்சிக்கிறேன் என்பதே மிகப்பெரும் முரண்நகையாகும். இத்தகைய விமர்சனங்களில் காணப்படும் மிகைப்புகழ்ச்சிகள், குதர்க்க வாதங்கள், அதீத சொல்லாடல்கள், எள்ளல்கள் அனைத்தும் நம் விஜய் அண்ணாவின் ஓப்பனிங் சாங்கில் அவர் பார்க்கும் ஒரே ஒரு ஓரப் பார்வைக்கு அருகில் கூட வர இயலாது என்பதே எம் தெளிவு...!


இப்படிக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி

Saturday, November 29, 2014

கந்தரகோலம் என்னும் மாய யதார்த்தம்

காலையில் டியூஸ்லேண்ட்டிலிருந்து (ஜெர்மனி) நண்பன் அழைத்திருந்தான். சுத்த ஜெர்மானியன். தமிழ் தெரியாது. டியூஸ் பர்க் ( University of Duisburg- Essen) பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நண்பர்களானோம். ஒரே சிந்தனையுடைய மனிதர்கள் ஒரே மொழியினையோ அல்லது இனம், மதம் முதலானவற்றைச் சார்ந்திருக்க வேண்டுமென்று எந்த விதியும் இல்லையென்பது இவனையும் என்னையும் பார்த்தால் புரிந்துவிடும். மறக்கமுடியாத நண்பன். 

என்னுடன் படித்த மற்ற ஜெர்மானியர்களைப் போலல்ல இவன். கம்யூனிசம் பேசுவான். உலக இலக்கியங்களைத் தேடித்தேடிப் படிப்பான். நானும் கூட சாரு மற்றும் எஸ்.ரா ஆகியோரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஜீரோ டிகிரி நாவலைப் படித்துவிட்டு வாழ்விலே ஒருமுறையேனும் சாருவைப் பார்த்தே தீருவதென்று தீர்மானித்திருப்பதாகக் கூறியிருக்கிறான். தினமும் என்னவெல்லாமோ பேசுவோம். ஜெர்மனியிலிருந்த அந்த இரண்டு வருடங்களை மறக்க முடியாத நாட்களாக மாற்றியவன் இவன் ஒருவனே. இப்பொழுதும் கூட வாரம் ஒருமுறையேனும் தொலைபேசிவிடுவோம். நான் இன்னமும் ஜெர்மன் கற்றுக்கொள்ளவில்லை. போலவே அவனும் தமிழ். ஆங்கிலத்தில்தான் உரையாடல் நடக்கும்.



சரி, காலையில் தொலைபேசிய விசயத்திற்கு வரலாம். கடந்தவாரத்தில் ஆளுமை நாசோவின் கந்தரகோலம் புத்தகம் டச்சு மொழியில் வெளியாகியிருந்தது. வழக்கம்போலவே அவர் தனது ஆங்கிலப் பக்கத்தில் மட்டும் இதனைப் பகிர்ந்திருந்தார். தமிழில் கந்தரகோலம் புத்தகம் விர்ச்சுவல் டுபாக்கூராகப் பார்க்கப்பட்டுவருவது குறித்து அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. நீங்கள் ஏன் உண்மையைச் சொல்லக்கூடாது என்று பலமுறை அவரிடம் கேட்டிருக்கிறேன். இல்லை, கந்தரகோலம் என்ற புத்தகமே உருவாகவில்லை என்ற மாயத்தோற்றத்தை (இதை மாய யதார்த்தம் எனவும்) உருவாக்குவதற்கு ஒரு காரணம் இருப்பதாகத் தெரிவித்தார். என்ன காரணமென்று எனக்கு இதுவரையிலும் புரியவில்லை. ஆனால், இங்கே தமிழ் வலையுலகில் கந்தரகோலம் புத்தகத்தினைப் பற்றி அனேகம் பேர் இப்படி ஒரு புத்தகமே வராது என்ற நிலையில் அதனைக் கிண்டலடித்து வருகின்றனர். அவர் வழியையே நானும் பின்பற்றி அந்தக் கிண்டல்களை விட்டு விலகிப் போய்விடுவதுண்டு. இப்பொழுது அதல்ல பிரச்சினை. 

ஜெர்மன் மொழியில் வெளியாகியிருக்கும் கந்தரகோலம் புத்தகம் ஜெர்மனியில் பெரும் பரபரப்பினை உருவாக்கிவருவதாகவும், இந்த வார இறுதிக்குள்ளாக ஜெர்மன் பெஸ்ட் செல்லரில் முதல் இடத்தினைப் பிடித்துவிடும் என்று அவன் கூறியிருந்தான். மேலும் தான் முதல் ஆளாக அந்தப் புத்தகத்தினை வாங்கி வாசித்துவிட்டதாகவும், ஆளுமை நாசோவின் புகைப்படம் கிடைக்குமா என்றும் கேட்டிருந்தான். அல்லது அவர் தனக்கு ஒரு "ஹாய்" சொன்னாலும் பிறப்பின் பலனை அடைந்துவிடுவேன் என்றும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான். என் உயிர் நண்பன்தான். ஆனால், என்னால் அதனை ஏற்பாடு செய்துதரமுடியாது என்று மறுத்துவிட்டேன். 

நான் மறுத்தாலும் அவன் வேறுவிதமாகச் சந்தோசப்பட்டான். அதாவது ஆளுமை நாசோவை நான் ஓரிரு முறைகள் நேரில் பார்த்திருக்கிறேன். ஆளுமையை நேரில் பார்த்த ஒருவன் தனக்கு நண்பனாக இருக்கிறானே என்பது அவனது சந்தோசமாக இருந்தது. எனக்கும் மகிழ்ச்சியே.

அவன் கூறியதில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் கந்தரகோலம் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்புரிமை மிகப் பெரும் விலைக்கு விற்கப்படவிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கலை, இலக்கியம் போன்றவற்றில் நுண்மையான பார்வையைக் கொண்டவர்களான பிரான்சு தேசத்தில் கந்தரகோலத்திற்கென தனியொரு நினைவுச் சின்னமும், மணி மண்டபமும் அமைக்கப்படவுள்ளதாகவும், அதன் திறப்புவிழாவிற்கு ஆளுமை அழைக்கப்படவிருப்பதாகவும் கூறினான். மேலும் நோபல், புக்கர் பரிசுகளுக்கு மேலாக கந்தரகோலம் அல்லது ஆளுமையின் பெயரில் விருதுகளை ஏற்பாடு செய்ய உலக நாடுகளை ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தவுள்ளதாகவும் பேசப்படுகிறது.

ஒரு பெரும் சாதனையைச் செய்துவிட்டு, இன்னமும் கந்தரகோலம் எழுதப்படவில்லை, சிலேவில் வெளியிடவுள்ளேன் என்றெல்லாம் ஒருபக்கம் கிண்டல் நிலைத்தகவல்களையும் பகிர்ந்துகொண்டு, மிகச் சாதாரணனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஆளுமை நாசோவை என்னவென்பது?

Hüte weg zu Ihnen AALUMAI :))) Dank für hier!

Monday, October 10, 2011

தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...






பெயர்                            : தமிழ்மணம்



புனைப்பெயர்                     : பதிவுலக கடவுள்


தொழில்                          : திரட்டுதல், பதிவுகளை



உபதொழில்                       : ரேங் போடுதல் 




உப உபதொழில்                  : கான்ஸ்டபிள் (ட்ராபிக்)


தலைவர்                         : யாருக்கும் தெரியாது


துணைத்தலைவர்                               : பிரபல பதிவர்கள் அல்ல 


பொழுதுபோக்கு                   : பதிவுகளை இணைத்தல்


துணைப்பொழுதுபோக்கு          : பதிவுகளை நீக்குதல்


மேலும் பொழுதுபோக்கு           : எச்சரிக்கை அனுப்புதல்


வயது                            : வயதாகிக் கொண்டிருக்கிறது


பலம்                             :பதிவர்கள்


பலவீனம்                         : அதுவும் அவர்களேதான்


நம்பிக்கை                        : மொக்கைப் பதிவர்களும் 

இலக்கியவியாதிகளாகி விடுவார்கள்


பயம்                             : இன்னும் கொஞ்ச நாளில் 

தமிழ்மணம் முழுதும் மொக்கையாகி விடுமோ?


லட்சியம்                         : நெ.1 திரட்டி


நீண்டகால சாதனை               : காப்பி-பேஸ்ட்டை 

கண்டுகொள்ளாமல் இருந்தது


சமீபத்திய சாதனை                               :காப்பி-பேஸ்ட்டை அதிரடியாக 

தூக்கியது


இதுவரை மறந்தது                :  ஆபாச பதிவுகளை


இனி மறக்க வேண்டியது           :மொக்கை பதிவர்கள் 

திருந்துவார்கள் என்று நம்புவதை 


பாடாய் படுத்துவது                : நட்சத்திரங்கள்


இதுவரை புரியாதது                             : விருதுகள்



விரும்புவது                      : இனி சர்வர் பிரச்சனை 

வரக்கூடாது என்று

விரும்பாதது                     கட்டண சேவை பற்றி கேள்வி 
கேட்பதை




எச்சரிக்கை: பதிவு முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே. 

Friday, August 5, 2011

தோழி ட்வீட்கள்


 தோழி உங்களிடம் கோபமாய் இருக்கும் பொழுது, காமெடி செய்யாதீர், முகத்தை சோகமாய் வைத்துக் கொள்ளுங்கள்! # அனுபவம்

தோழியிடம் நன்றி சொல்லாதீர். அது உங்களை அந்நியன் ஆக்கிவிடும்!! # அனுபவம்

என் கனவில் நீ நீல வண்ண உடையில் வந்தாய் என்றேன் தோழியிடம். கனவு கருப்பு வெள்ளைதானே என்றாள். தேவதைகள் ஒருபோதும் கருப்பு வெள்ளையாய் இருக்க முடியாது என்றேன்.



தோழியை எப்போதும் எங்கேயும் காக்க வைக்காதீர். அது உங்கள் மீதான நம்பிக்கையை குறைக்கும். # அனுபவம்

தோழியிடம் சொல்லும் பொய்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அவள் எப்படியும் அதை ஒருமுறை சரி பார்ப்பாள். அப்போது பயன்படும். # அனுபவம்

தூங்கும் போது ஃபோன் செய்து தூங்கிட்டியா என்று கேட்கும் தோழியிடம் தூங்கவில்லை என்றே சொல்லுங்கள். அவள் எதிர்பார்ப்பதும் அதுவே தான். # அனுபவம்

அட்சயதிருதியைக்காக தங்கம் கேட்ட தோழியிடம் மாசு மருவற்ற தங்கமாய் நீ இருக்கையில் உனக்கு எதுக்கு தங்கம் என்றேன். அழகுக்கு அழகு சேர்க்க என்கிறாள்.

தோழி கோபத்தில் இருக்கும் போது திட்டும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்லாதீர். சிரித்துக்கொண்டே இருங்கள். கோபம்தானாய் தீர்ந்துவிடும். # அனுபவம்

இரண்டு செல்பேசி வைத்திருப்பின் தோழியுடன் பேசும் போது மற்றொரு செல்பேசியை ஊமையாக்கிவிடுங்கள். பேசும்போது அழைப்பு வந்தால் சந்தேகம் வரும் தோழிக்கு! #அனுபவம்


எப்போதும் தோழியை சந்திக்க செல்லும்போது உங்கள் செல்பேசியின் Inbox, Sent Items, Call History ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறிக்கூட வேறு தோழிகளின் குறுஞ்செய்திகளோ, அழைப்புகளோ இருக்கக் கூடாது. # அனுபவம்

தோழி, நீ இல்லையென்றால் உன் நினைவில் உன்னோடு வாழ்வேன் என நினைத்தேன் ஆனால் நீ - உன் நினைவையும் சேர்த்தல்லவா கேட்கிறாய்? # இதுவும் பொய் என்கிறாள் தோழி.

எப்போதும் அதிகாலையில் கேட்கும் இனிய சங்கீதம் உன்குரல் தான் என்றேன் தோழியிடம். இனிமேல் தினமும் உன்னை காலையில் நான் தான் எழுப்புவேன் என்கிறாள்.

ரோஜாக்கூட்டம் பார்த்துவிட்டு என் நினைவாய் நீ என்ன வைத்திருக்கிறாய் என்றாள் தோழி. நான் உன் நினைவை வைத்திருக்கிறேன் என்றேன். # கஞ்சப்பய என்கிறாள்.

தோழியுடனான ஊடல் காலத்தில் அலைபேசி ஒலிக்கும் போது அழைப்பது தோழியாய் இருக்குமோ என அலைபேசியை எடுக்க அவசரமாய் விழைகிறது மனம். # முரண்

ஊடலுக்கு பின்னான சந்திப்பில் தோழியுடன் இருக்கும் நெருக்கம் ஒவ்வொரு சந்திப்பிலும் குறைந்து கொண்டே செல்கிறது அடுத்த ஊடல் வரை. # ஊடல் நல்லது

பின் தொடர  : https://twitter.com/#!/NanChozhan

Friday, July 8, 2011

இம்சை(யின்) அரசன் பாபுவின் பய(ங்கர)டேட்டா...





பெயர்                                                           : இம்சை அரசன் பாபு

நிஜப்பெயர்                                               : மேல உள்ளதையே வெச்சிருக்கலாம்
தொழில்                                                      : அருவாளுக்கு சாணி ச்சி.. சாணை பிடித்தல்
உபதொழில்                                              : வாய்ஸ் சாட்டிங் (எங்கேன்னு கேட்கப்படாது)
தலைவர்                                                    : திமுகவுல இல்லை
துணைத்தலைவர்                               : தேமுதிகவுல இல்லை
பொழுதுபோக்கு                                    : ரமேசுக்கு பெண் பார்த்தல் (பேன் அல்ல)
துணைப் பொழுது போக்கு               : அதைக் கெடுத்து விடுதல்
மேலும் பொழுது போக்கு                 : எல்லாரையும் திட்டுதல் 
வயது                                                           : சைட் அடிக்கும் வயதல்ல
பலம்                                                             : வயிற்றில் 
பலவீனம்                                                   : தமிழில் மட்டுமே எழுதுவது
சமீபத்திய சாதனை                              : சென்னைக்கு போய் நரியை பார்க்காமல் தப்பி வந்தது
நீண்டகால சாதனை                            : பஸ்சும் விடத்தெரிந்து கொண்டது
சமீபத்திய எரிச்சல்                             : சென்னைக்குச் சென்றும் ரமேசையே பார்க்க வேண்டி வந்தது
நீண்டகால எரிச்சல்                            : பிரபல பதிவர் ஆகியும் (?) இன்னும் சர்ச்சைகள் வராதது
நண்பர்கள்                                                 : எல்லோரும்
எதிரிகள்                                                     : எல்லோரும்
ஆசை                                                           : ஐம்பதிலும் ஆசை வரும்
நிராசை                                                       : மீண்டும் ஐம்பது வருமா?
நம்பிக்கை                                                 : தானும் ஒரு பதிவர்
பயம்                                                             : பார்ட் 2...?
லட்சியம்                                                   : பார்ட்3...?
இதுவரை மறந்தது                               : வயதை
மறக்க வேண்டியது                              : சாப்பாடு (ஓசி அல்ல)
மறக்க முடியாதது                                 : அதெல்லாம் பப்ளிக்ல சொல்ல முடியாது
விரும்புவது                                               : கடலை (சாப்பிட அல்ல)
விரும்பாதது                                             : பெண்கள் காவலனாக காலத்தை ஓட்டுவதை




Tuesday, June 28, 2011

டெரர் கும்மி அவார்ட்ஸ் பார்ட் -2

நமக்கு நா(ம)மே திட்டத்தின் கீழ் டெரர் கும்மி குழுமம் வழங்கி வரும் அவார்டுகளின் வரிசையில் இது இரண்டாம் பாகம்.....!



பதிவ போடு நிக்காம ஓடு விருது
Photobucket

தமிழ்ப்பதிவர்ன்ன பேர்ல ஹீப்ரு மொழில பதிவு போட்டு சும்மா எட்டிப்பார்க்க வந்தவைங்களையும் தலைதெறிக்க ஓடவைக்கும் தேவா அவர்களுக்கு இந்த விருதை ஓடிக்கொண்டே வழங்குகிறோம்.







எவனா இருந்தாலும் வெட்டுவேன் விருது


அன்னை முதல் ஐயா வரை, அம்மா முதல் சும்மா வரை யாரையும் விட்டுவைக்காமல் வெட்டி கிழிச்சு துவைச்சி காயப்போடும் பட்டாபட்டி அவர்களுக்கு இந்த விருதை பம்மிக் கொண்டே வழங்குகிறோம்.






தோசைய சுட்டுப்பாரு விருது


உண்மை சுடுமாம், அப்போ பொய் குளுகுளுன்னு இருக்குமோ? நெருப்புதான் சுடும், ஆனால் உண்மையும் சுடும்னு சொல்லி எல்லாரையும் தோசை சுடுவது போல் சுட்டுத்தள்ளிக் கொண்டிருக்கும் வைகைக்கு இந்த விருதை வழங்குகிறோம்.




வருத்தப்படாத வாலிபர் விருது



சங்கத்து ஆளு யாரு, கலாய்க்கிற ஆளு யாருன்னே தெரியாம சங்கம் வெச்சி அடிவாங்கிட்டு இருக்கும் வெங்கட்டிற்கு வருத்தப்படாத வாலிபர் விருதை வருத்தத்துடன் வழங்குகிறோம்.






பதுங்கி வாழு பதிவபோடு விருது


பதிவு பக்கமும் போரம் பக்கமும் வராம பதுங்கி இருந்துகிட்டு. அப்பப்ப வந்து தமிழன் மேல ஸ்ரீலங்காகாரன் குண்டு போட்ற மாதிரி  பதிவ மட்டும்  போட்டு ஓடிப்போகும் மங்குனி அமைச்சருக்கு இந்த விருதை குண்டுகட்டா வழங்குறோம்!







புதுமாப்பிள்ளையான பூச்சாண்டி விருது


கொலைவெறி கவிதையா எழுதி நம்மகிட்ட புரியலயான்னு வேற கேள்வி கேட்டு பூச்சாண்டி காமிச்சிகிட்டு இருந்துபுட்டு  இந்த வருடம் புதுசா கல்லாணம் கட்டிகிட்ட  கலியுகம் தினேஷ்க்கு இந்த விருத அளிக்கிறோம்.. வீட்டுகார அம்மாகிட்ட கவிதைய காமிச்சிராம.. பாவம் பயந்துருவாங்க!





தோழிமார் தோழன் எங்க சோழன் விருது



ஊரே தூங்குனாலும் நடு ராத்திரி தோழிக்காக பஸ் விட்டு நம்ம பல்சை எகிரவைக்கும் நம்ம நாகராஜசோழன்MLA க்கு இந்த விருதை பஸ்ல லிங்க் கொடுத்து கொடுக்கிறோம்!


Monday, June 27, 2011

பதிவுலகில் சிரிப்பு போலீஸ்... ஒரு பய(ங்கர)டேட்டா!




அப்பாடா, நம்மளைப்பத்தியும் நல்லாத்தான் எழுதி இருக்காய்ங்க போல...!



பெயர்:                                                             : சிரிப்பு போலீஸ்


புனைப்பெயர்:                                            : ரமேஷ்


தொழில்:                                                       : ப்ளாக் ஓனர்


உபதொழில்:                                               : டேமேஜர் என்று சொல்லி தூங்குவது 


தலைவர்:                                                     : டாகுடரு கேப்டன்


துணைத்தலைவர்:                                 : டாகுடர் விஜய், டீஆர், பவர்ஸ்டார் சீனி 


பொழுதுபோக்கு:                                     : சாப்பிடுதல் (ஓசியில்)


துணைப்பொழுதுபோக்கு:                 : சாப்புடுறதுக்கு ரிவர்சு


மேலும் பொழுதுபோக்கு:                  : துணிதுவைத்தல்


வயது:                                                           : கல்யாணத்திற்குத்தயார் (10 வருசமாய்)


பலம்:                                                            : ப்ளாகில் கமெண்ட்ஸ் போடுவது


பலவீனம்:                                                   : பதிவும் எழுதுவது


எலேய் நானும் பதிவர்தான்னு சொன்னா நம்பனும்.....




சமீபத்திய சாதனை:                              : பதிவு எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி இருப்பது


நீண்டகால சாதனை:                            : ராஜ் வீடியோவிஷன் வைத்துள்ள 
அத்தனை படங்களையும் பார்த்து முடித்தது


சமீபத்திய எரிச்சல்:                               : டெரருக்காக காலைல இருந்தே சாப்பிடாம வெயிட் பண்ணியும் ஓசிச்சாப்பாட்டை மிஸ் பண்ணியது


நீண்டகால எரிச்சல்:                             : கேப்டனுக்கு இன்னும் ஆஸ்கார் விருது 
கிடைக்காதது


நண்பர்கள்:                                                  : சாப்பாடு வாங்கிக் கொடுப்பவர்கள்


எதிரிகள்:                                                      : சமீபத்தில் திருமணம் ஆனவர்கள்


ஆசை:                                                            : என்றும் 16


நிராசை:                                                        : பிரபல பதிவர் ஆகுதல் 

இன்னுமாடா என்னைய நம்புறீங்க?



நம்பிக்கை:                                                  : என்னைக்காவது எப்படியாவது 
கல்யாணம் நடந்துடும்!


பயம்:                                                              : என்றும் தனிக்கட்டை? ( என்னைக்கு நடக்கும்?)


லட்சியம்:                                                     : அழகான பொண்ணை திருமணம் செய்வது 


இதுவரை மறந்தது:                                : கண்ணாடியில் தன்னை பார்க்க 


இனி மறக்க வேண்டியது:                   : கல்யாணம் ஆகும் என்று நம்புவதை 


விரும்புவது:                                               : பதிவுலக கனவுக்கண்ணனாக 


விரும்பாதது:                                              : இன்னுமா கல்யாணம் ஆகலேன்னு கேட்பதை



மீ... டோட்டல் டேமேஜ்..................