Showing posts with label ஹண்ட் பார் ஹிண்ட் விடைகள். Show all posts
Showing posts with label ஹண்ட் பார் ஹிண்ட் விடைகள். Show all posts

Tuesday, October 29, 2013

HUNT FOR HINT - 3 - விடைகள்




இணைய நண்பர்களே,
ஹண்ட் ஃபார் ஹிண்ட் 3 போட்டி முடிந்து வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை அனுப்பும் பணி நடந்து கொண்டு இருக்கின்றது.

இன்னும் சிலர் தொடர்ந்து விளையாடிட்டு தான் இருக்காங்க. இந்த கேம்மோட தனித்துவமே பரிசை வெல்வதை விட அனைத்து லெவல்களையும் முடிக்கறப்போ கிடைக்கற சந்தோஷத்துலதான் இருக்கு. நம்மளோட விடை தவறாக இருந்தாலும் அந்த தவறிலும் ஒரு புதிய விஷயத்தை தெரிஞ்சிக்கற திருப்தி வேற எந்த விளையாட்டிலும் கிடைக்காதது.
நீங்கள் விடைகளை தேடுறப்போ மட்டும் இல்லை நாங்கள் கேள்விகளை வடிவமைக்கறப்போ கூட பல விஷயங்களை கத்துகிட்டோம். ஒவ்வொரு கேள்வியையும் உருவாக்க எங்கள் அணி பல விஷயங்களை படிக்க வேண்டி இருந்தது. இப்படிப்பட்ட கேள்விகளும் அதுக்கான விடைகள் கொண்டு வரவேண்டிய முறையையும் சுருக்கமா பார்க்கலாம். 
 

LEVEL NAME PAGE NAME ANSWER How to get the Answer
welcome welcome.aspx Click on "Click and Go to next Level" Just a Click
FB changehere.aspx Change url from changehere. aspx to like.aspx Change the url name
play like.aspx dominos / dominoes Famous Tile - based game
series series.aspx sf Number Series in backwards... Ten, Nine, Eight, Seven, Six, Five
tintin tintin.aspx workhard Adventures of dancing men chiper 
pizza number.aspx 134340 Famous Planets Mnemonic. find the ????? and get the number of that planet
yellow blue.aspx india International Maritime signal Flags
love love.aspx music Trace those letters in keyboard and get the pattern
jeep jeep.aspx brumbrella Portmanteau word - Large pitch covering used at the Edgbaston Cricket Ground, Birmingham, England from 1981 to 2001
graph economics.aspx newdelhi/new delhi Get N and E co ordinates from bar graph - N 28, 36,50 E 77, 12, 32
action action.aspx angelina jolie Find 4 hollywood films and its common thing - Jon Voight. His daughter is answer
liarparadox liarparadox.aspx portmanteau All words including Level 12 answer is Portmanteau
animals animals.aspx cites Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora is a multilateral treaty to protect endangered plants and animals
music music.aspx badge get the letters from music note and convert them as seven segment display
artificer artificer.aspx steve wilhite Artificer / inventor of GIF images
mib mib.aspx hunt find the game machine. get the code from Polybius square
art gallery missing.aspx ant check only the frame and put it under famous morse code method
nature gothicpry.aspx
pitchgyro.aspx
itchygorp.aspx
chirpygot.aspx
porgyitch.aspx
element
taste
penta
korotkoff
quincunx
get the anagram of url name and click Copyright symbol on bottom of the page
roamaround solveme.aspx righthere roamaround all the level of the game based on the equation given. L = level, U = url, I = image name, a = Answer. get the mail id and send a blank msg to receive answer
identity identity.aspx 7777 open the image in note pad. Find the hint given. find the identiy of jamesbond on that novel
text text.aspx abaaabaaba Baconian chiper
number master.aspx semafour convert the highlighted number to time and get the letters from semaphore flag signal
movie whatnext.aspx 111221 find movie and then persons who told abt that disaster. get their number and complete the number series given in the image
herodotus herodotus.aspx snowden / edward snowden change url from herodotus.aspx to herodotus.txt. get another link and decode the image in stegnography
time time.aspx mike This is a list of time zone names based on the NATO phonetic alphabet as used by the U.S. military and others
common common.aspx alcoholics anonymous get all the images and find common number for all. Relate it with traditional steps
crossword crosswords.aspx myth find 17 words. arrange balance 9 letter in the same order given. Google lead you to a famous script and decode the symbol on the image
name nameit.aspx maxicode/maxi code just find the name of the code
game cricket.aspx indonesia Operation vijay with pakistan, Operation virat with Srilanka and find Operation Gambhir with whom
count count.aspx thisistheanswertoproceed google the quote and get excel. Downlad it from url. arrange the subscripted letters in order and get the equivalent letter from column

விடைகள் வந்த விதத்தை இன்னும் விரிவாக தெரிந்துக்கொள்ள எங்கள் Answer Guideஐ இங்கு பார்க்கலாம்

Please Share your Gaming Experience and give us your feedback / suggestions to improve the game.

இத்துடன் Hunt For Hint - 3ஐ Official ஆக நிறைவு செய்கிறோம். நல்லதொரு அனுபவத்தை உங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியுடன் உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம். மற்றுமொரு இனிய தருணத்தில் மீண்டும் இணையலாம். உங்கள் ஆதரவுக்கு ஊக்கத்திற்கும் எங்கள் நன்றிகள்.



Monday, October 22, 2012

Hunt For Hint 2 - Answers - Curtains Down

இணைய நண்பர்களே,

Hunt For Hint -2 வின் விடைகளை கடந்த 2 பதிவுகளாக பார்த்து வருகிறோம். இன்று கடைசி இரண்டு கேள்விகளுக்கான விடைகளுடன் கேம் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் மற்றும் இதுவரை HOFல் இடம்பிடித்தவர்களின் பட்டியலையும் பார்க்கலாம்.


LEVEL 19:
Hints: Pagetitle-News, url-word.aspx, imagename-news.jpg, On Image-some newspaper with articles, Sourcehint-<!-- Spanish Sunday -->
இந்த சுற்று பலரை குழப்பவிட்டது உண்மை. படத்தில் உள்ள பல்வேறு நிகழ்வுகள் நடந்த வருடத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு சோர்ஸ் ஹிண்ட்டில் கொடுத்துள்ள Spanish sundayவை crack செய்ய வேண்டும். எப்படி? கூகுள் டிரான்ஸ்லேட்டில் Sundayவை spanishக்கு மாற்றினால் உங்களுக்கு விடை கிடைக்கும். ஆனால் பலர் domingoவுடனே நின்று விட்டனர், ஆனால் அதற்கு கீழே இருந்த adjectiveவை கவனிக்கவில்லை. Dominicalஐ பார்த்து இருந்தால் அதுவே உங்களை ஒரு wikipedia பக்கத்திற்கு அழைத்து சென்று இருக்கும். பிறகு என்ன கண்டுபிடித்த வருடத்தை இந்த பக்கத்தில் பொருத்தி பார்க்க வேண்டியதுதான்.
Answer: Replace "word.aspx" to "feedbag.aspx"

LEVEL 20:
Hints: Pagetitle-Letter, Imagename-NO.jpg, On Image-A paragraph in a old sheet, Sourcehint-<!-- Elizabeth worried, “Everything's plastic, we're all gonna die...!” -->
இதுவரை வந்ததிலேயே கடினமானதாக உணரப்பட்ட லெவல் இது. கொடுக்கப்பட்ட paragraphல் உள்ள silent letters வரும் வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அதை Plastic number உடன் மேட்ச் செய்து ஒவ்வொரு வார்த்தையில் இருந்தும் plastic numberக்குரிய எழுத்தை எடுத்து ஒரு வார்த்தையாக உருவாக்க வேண்டும்.
Answer: Enter "whistle" in the Answer box

SOME INTERESTING STATISTICS:
மொத்த போட்டியாளர்கள்              : 754
மொத்த PAGE VIEWS                   : 259,540
HALL OF FAME ல் இடம்பிடித்தவர்கள் : 36
20 (கடைசி) லெவலில் இருப்பவர்கள் : 07

HALL OF FAME:
இதுவரை ஹால் ஆப் ஃபேம்மில் இடம் பிடித்தவர்கள்:

   HALL OF FAME
Rank Name Level Date Time
1 KVR, Riyadh 20 9/16/2012 5:38 PM
2 Mohamed Ali Jinna 20 9/16/2012 6:04 PM
3 sathyanarayanan-chennai 20 9/16/2012 6:32 PM
4 Penathal 20 9/16/2012 6:40 PM
5 Ca 20 9/16/2012 7:27 PM
6 Akila Balasubramanian From UK 20 9/16/2012 8:00 PM
7 Rukmani Ramkumar - Surat 20 9/16/2012 8:19 PM
8 Sen.. 20 9/16/2012 8:25 PM
9 Yosippavar, Tuticorin 20 9/16/2012 8:45 PM
10 Abdul Basith, Dubai 20 9/17/2012 12:52 AM
11 Athisha 20 9/17/2012 1:20 PM
12 G.Arivazhagan,Chennai 20 9/17/2012 1:51 PM
13 Srimathi.V. 20 9/17/2012 3:01 PM
14 Tamil Rasigan , Chennai 20 9/17/2012 3:15 PM
15 Santhosh Prn 20 9/17/2012 6:29 PM
16 Dhinesh Mukilan, USA 20 9/17/2012 6:30 PM
17 Anand Chennai 20 9/17/2012 7:52 PM
18 Subadhra 20 9/17/2012 9:57 PM
19 Varun Prakash P 20 9/17/2012 9:59 PM
20 Lathamagan 20 9/17/2012 11:33 PM
21 CHINMAY KUMAR, CHENNAI 20 9/18/2012 10:13 AM
22 Sashmita(chennai) 20 9/18/2012 10:27 AM
23 Arjun Dindigul 20 9/18/2012 12:13 PM
24 Bharathi singapore 20 9/20/2012 7:32 AM
25 Vairamuthu.M,Surat 20 9/20/2012 3:26 PM
26 Ashwin Moorthy 20 9/20/2012 3:27 PM
27 Vinod Pragadeesh M, Mettuppalayam 20 9/26/2012 12:17 PM
28 Suganthavani, Vellore 20 9/27/2012 12:08 PM
29 Rags 20 9/27/2012 12:13 PM
30 vinoth ,chennai 20 9/27/2012 12:13 PM
31 AravindNathR Chennai 20 9/27/2012 12:14 PM
32 Kalanesan, New Delhi. 20 10/2/2012 9:01 AM
33 Muthu - Chennai 20 10/3/2012 3:37 PM
34 Suresh Kumar California 20 10/7/2012 6:23 AM
35 Ramya, USA 20 10/7/2012 6:28 AM
36 NOOR JAWAHAR 20 10/9/2012 9:28 PM

Please Share your Gaming Experience and give us your feedback / suggestions to improve the game.

இத்துடன் Hunt For Hint - 2ஐ Official ஆக நிறைவு செய்கிறோம். நல்லதொரு அனுபவத்தை உங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியுடன் உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம். மற்றுமொரு இனிய தருணத்தில் மீண்டும் இணையலாம். உங்கள் ஆதரவுக்கு ஊக்கத்திற்கும் எங்கள் நன்றிகள்.

கூடுதல் தகவல்: Klueless 8 வரும் வெள்ளிகிழமை (26/10/2012) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நாங்கள் அந்த லெவல்களை முடித்தால் உங்களுக்கு உதவ முயற்சிக்கிறோம்.

Friday, October 12, 2012

HUNT FOR HINT 2 - Check point Answers

இணைய நண்பர்களே,

ஹண்ட் ஃபார் ஹிண்ட் 2 வின் முதல் 16 லெவல்களுக்கான பதில்களையும் அதை கண்டுபிடிக்கும் வழிமுறைகளையும் சென்ற இரண்டு பதிவுகளில் பார்த்தோம். இன்று கூட்டாக விளையாடுபவர்களுக்கு ஒரு செக் வைக்க நாங்கள் கேள்விகளுக்கு நடுவே ஆங்காங்கே கொடுத்த செக்பாயிண்ட் கேள்விகளுக்கான விடைகளை பார்க்கலாம். சும்மா சொல்ல கூடாது, நிஜமாகவே இந்த செக்பாயிண்ட் கேள்விகள் பலருக்கு செக் வைத்தது நிஜம்.


சரி இனி விடைகளை பார்க்கலாம்.

CHECKPOINT-FACTS:
Hints: Pagetitle-Each and every time I speak, I tell lies only!, url-facts.aspx, Imagename-contradictory.jpg, pagesource-<!-- Difference is not a different one when it is not differs with others. -->, On Image- list of statements with radiobutton enabled on "Say True or False"
True or False + Contradictoryஐ கூகுள் சர்ச் செய்திருந்தால் விடை நேராக கிடைத்து இருக்கும். பலர் ரேடியோ பட்டன் எதற்கு இருந்தது என்பதை கவனிக்காமல் விட்டு விட்டனர். பேஜ் டைட்டில் படி “எப்பொழுதும் நான் பொய் மட்டுமே பேசுவேன்” என்பதை எடுத்து கொண்டால் இப்போழுது அவர் பேசுவதும் பொய்யாகிவிடும். இது தான் லாஜிக்.
Answer: Enter "Liar paradox" in the Answer box

CHECKPOINT - GUNS:
Hints: Pagetitle-Guns, url-decodeme.aspx, Image name-4cube.jpg, On image-4 guns with barcode tags + Made in USA
urlல் சென்னது படி டீக்கோட் முறைதான் ஆனால் எதை டீகோட் செய்யனும்? image nameல் கொடுத்த 4cube=64 ஆம் base 64 decode முறைப்படி கொடுக்கப்பட்ட 3 MT***** கோடிங்களை டீகோட் செய்தால் சில வருடங்கள் கிடைக்கும். இதை USAவுடன் ஒப்பிட்டால் அமெரிக்க ஜனாதிபதிகள் சுட்டுகொல்லப்பட்ட வருடங்கள் வரும். நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது சுட்டு கொல்லப்பட்ட 4 வது ஜனாதிபதியின் வருடத்தை. அதை பழைய படி base 64 முறைப்படி என்கோட் செய்து போட வேண்டும்
Answer: Enter "MTkwMQ==" in the Answer box

CHECKPOINT - SURF:
Hints: Pagetitle-Surf the excel, url-surf.aspx, Image name-surf excel.jpg, On image-Surf detergent powder image
இந்த லெவல் சிலரை காயவிட்டது உண்மைதான். பல முறை பேஜ் urlல் ஒரு மாற்றம் செய்யனும் ஆனா அது வழக்கமா செய்யும் இடம் இல்லைனு சொன்னா புரியலை. மாற்றம் செய்ய வேண்டியது url extensionல். இதை நேராகவும் சொல்ல முடியலை. surf.aspx ஐ surf.xlsஆக மாற்றினால் ஒரு எக்செல் ஷீட் டவுன் லோட் ஆகும் அதை 10%க்கு zoom out செய்தால் A10, E25, G34, F67 என்ற எழுத்துக்கள் கிடைக்கும். இந்த செல்களில் பார்த்தால் உங்களுக்கான் விடை வழங்கப்பட்டு இருக்கும்
Answer: Enter "MUTE" in the Answer box

CHECKPOINT - TRAIN:
Hints: Pagetitle-Train, url-driveit.aspx, Imagename-great.jpg, On image-train+robber+cash
மிக சுலபமான லெவல் இது கொடுத்த வெளிப்படையான் க்ளூகளை வைத்து The Great Train Robbery என்பதை கண்டுபிடித்திடலாம். அடுத்து urlல் உள்ள drive it ஐ பிடித்தால் அந்த ரயிலை ஓட்டியவரின் பெயரை பிடித்திலாம் விடையையும் தான்.
Answer: Enter "Jack Mills" in the Answer Box

CHECKPOINT - BARBEQUE:
Hints: Pagetitle-craze, url-craze.aspx, Imagename-Barbeque.jpg, On image-Barbeque+Rabbit+Diamond Duck pendant chain
கிரிக்கெட் பற்றி எல்லாம் தெரியும் என நினைத்து கொண்டு இருந்த பலருக்கு செல்ல குட்டு வைத்த லெவல் இது. எல்லாமே நேரடியான படங்கள் ஆனால் தொடர்புபடுத்தியதில் தான் பலர் தோற்றார்கள். Barbeque, Rabbit / Bunny, Diamond Duck இவைகளை உணவுடன் சம்பந்தபடுத்தி தேடினார்களோ ஒழிய விளையாட்டுடம் சம்பந்தபடுத்த தவறிவிட்டனர். எங்கள் டிஸ்கஷன் போரம் அட்மின்களும் தெரிந்தே Sport term என்ற வார்த்தையை இதற்கு க்ளூவாக எங்கேயும் தரவில்லை. இவை இந்தியர்கள் பெரிதும் CRAZE கொண்ட விளையாட்டில் பயன்படுத்தும் சொற்கள். விக்கிபீடியாவில் இவை என்ன என்று படித்துதான் பாருங்களேன்.
Answer: Enter "Cricket" in Answer box

CHECKPOINT - PLACES
Hints: Pagetitle-Place, url-place.aspx, Imagename-place.jpg, On Image- Annadurai+Chennai, Periyaar+salem, Bharadhidasan+trichy, Rajinikant+____
இதுவும் சுலபமான லெவல்தான். படத்தையும் ஊரையும் தொடர்புபடுத்தினால் பிரபலமான பல்கலைகழகங்களும் அவை இருக்கும் ஊர்களும் என தெரியவரும். ஆனால் இங்கு ரஜினிகாந்திற்கு பதில் அண்ணாமலையை பயன்படுத்த வேண்டும்.
Answer: Enter "chidambaram" in the Answer Box

இத்துடன் செக்பாயிண்ட் கேள்விகள் முடிகின்றன. இனி மீதம் உள்ள கேள்விகளை பார்க்கலாம்.

LEVEL 17:
Hints: Pagetitle-It is an incredible jogo. Sometimes it's so incredible, It's Unbelivable, url-jogo.aspx, Imagename-alltime.jpg, On Image-Soccer field + 19,30, 20,10 numbers
படத்தை பார்த்ததும் இது Soccer விளையாட்டு சம்பந்தமான கேள்வி என புரிந்து இருக்கும். இதில் கொடுத்த 19,30 ஐ 1930 ஆம் வருடமாகவும், 20,10ஐ 2010 வருடமாகவும் கொண்டால் imagename படி alltime இந்த விளையாட்டின் இதுவரை நடந்துள்ள எல்லா உலக கோப்பைகளிலும் பங்கு கொண்ட அணி விடையாக கிடைக்கும்
Answer: replace "jogo.aspx" with "brazil.aspx"

LEVEL 18:
Hints: Pagetitle-Cards, Image name-goto.jpg, On image-4 playing cards for 6 player with their names, Page Source-<!-- "Hey falcon, who is the commander?" -->
அனைத்து playing cardகளையும் நம்பராக மாற்றினால் சில வருடங்கள் கிடைக்கும். இந்த வருடங்களை தொடர்புபடுத்தினால் மனிதன் நிலவுக்கு சென்ற வருடங்கள் என்பதை காணலாம். படத்தில் players name நிலவு சம்பந்தமாக இருப்பதும் Image name ல் go to என இருப்பதும் கூடுதல் க்ளூ. மறைத்து வைக்கப்பட்ட கார்டின் வருடத்தை கண்டுபிடித்து அந்த வருட  மிஷன்னில் சோர்ஸ் கோட்படி கமெண்ட்டராக இருந்தவர் பெயரை விடையாக தரவேண்டும்
Answer: Enter "David Scott" in the answer box

இந்த பதிவில் ஆங்காங்கே தேவையான விக்கிபீடியா லிங்குகளும் டீகோடிங் சைட் முகவரிகளும் உங்கள் வசதிக்காக இணைக்கப்படு இருக்கின்றது. இவை உங்களுக்கு உதவும் என நம்புகிறோம். உங்களுடைய அனுபவங்களை கமெண்ட்களில் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவோம்.

கடைசி 2 கேள்விகளுக்கான விடையுடன் இந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் 2 விளையாட்டு அனுபவம் அடுத்த பதிவில் முடிவடையும். 

கூடுதல் தகவல்: ஹண்ட் ஃபார் ஹிண்ட்டின் முன்னோடி க்ளூலெஸ் விளையாட்டின் 8 ஆம் பதிப்பு வரும் அக்டோபர் 19 அன்று வெளியாகிறது. அடுத்த அனுபவத்திற்கு தயாராகுங்கள்.


Tuesday, October 9, 2012

Hunt For Hint 2 Answers part 2

இணைய நண்பர்களே,

சென்ற பதிவில் சொன்னது போல Hunt For Hint - 2 வெற்றியாளர்களுக்கு அவர்கள் வழங்கிய முகவரியில் பரிசு காசோலை அனுப்பியாவிடது. இன்னும் ஒன்றிரண்டு நாடகளில் அவர்களுக்கு கிடைக்கப் பெற்றுவிடும்.



Hunt For Hint - 2 வின் முதல் எட்டு கேள்விகளுக்கான விடைகளை சென்ற பதிவில் பார்த்தோம். இனி அடுத்த 8 கேள்விகளுக்கான விடைகளை பார்க்கலாம்

LEVEL 9:
Hints: Page title-Author Alphabet, url-keystone.aspx, Image name-findword.jpg, On image- SEKLBFRH alphabets, Page source-<!-- 'And how exactly like an egg he is!' she said aloud, standing with her hands ready to catch him, for she was every moment expecting him to fall. -->
இமேஜ்ல கொடுத்து இருக்கும் எழுத்துகளை பார்த்தாலே இது ஒருவிதமான டீகோடிங் முறைனு யூகி்ச்சி இருக்கலாம். பேஜ் சோர்ஸ்ல் உள்ள வார்த்தைகளை கூகுள் செய்தால் நமக்கு Humpty Dumpty கதைகள் பற்றிய லிங்குகள் கிடைக்கும். அதை எழுதியவர் Lewis Carroll. பேஜ் டைட்டிலில் உள்ள Author Alphabetயும் இவர் பெயரையும் கூகுள் சர்ச் செய்தால் இவரின் புகழ் பெற்ற Alphabet cipher / vigenere cipher முறை கிடைக்கும். இந்த முறையை வைத்து விடையை கண்டுபிடிக்க வேண்டியதுதான். இதற்கும் ஆன்லைன் கன்வர்டர்கள் கிடைக்கின்றது. ஆனால் இந்த முறையில் Key word க்கொடுத்து விடையை டீகோட் செய்ய வேண்டும். இங்கு urlல் கொடுத்த keystoneதான் கீவேர்ட்
Answer: Enter "iamtired" in the answer box

LEVEL 10:
Hints: Page title-Game, url-strike.aspx, Image name-game.jpg,On image-Hey Mr Ball, Strike without hit me but all of us must fall in slow motion
3 Strike boards = turkey... இதை வைத்து இது Bowling விளையாட்டின் ஒரு term என கண்டுபிடித்து இருக்கலாம். அடுத்து Strikeக்குகான விக்கிபீடியாவின் முழு பக்கத்தையும் படித்தால் Hey Mr Ball, Strike without hit me but all of us must fall in slow motion க்கான அர்த்தம் தெரிந்து இருக்கும்

A "Longo" strike - is a strike which occurs without the ball hitting the headpin, yet all of the pins fall as if in slow motion

Answer: Replace "strike.aspx" with "longo.aspx"

LEVEL 11:
Hints: Page title-System Asset Management, Image name-titanic.jpg, On Image - Road runner + Blade and winston Churchill with ship's cat
Road Runnerஐயும் Bladeஐயும் இணைத்து இருந்தாலே Blade runner கிடைத்து இருக்கும் ஆனாலும் பலர் இதற்கு பிறகு என்ன செய்வது என புரியாமல் குழம்பினர். கூகுளில் Blade runner என கொடுத்தாலே சில சர்ச்களில் விடையை சொல்லி விடும். இருந்தாலும் இந்த பேஜில் சில க்ளூக்களும் இருந்தன. அந்த படத்தை கூகுள் இமேஜ் சர்ச் செய்தால் Winston Churchill Ship's cat விக்கி பக்கம் கிடைக்கும். மேலும் நாங்கள் கொடுத்த hidden clues..... System Asset Management = SAM, titanic.jpg = Unsinkable வைத்து பார்த்தால் அந்த விக்கி பக்கத்தில் இருக்கும் Unsinkable Sam ல் அந்த பூனையின் பெயரை கொடுத்து இருப்பார்கள். அந்த பூனையின் வரலாற்றை படித்து பாருங்கள் சுவாரசியமான ஒன்று.... நாம் அபசகுனமாக நினைக்கு பூனையை போர்க்கப்பல்களில் வளர்கிறார்கள் எனற் விஷயமே எங்களுக்கும் இப்போதுதான் தெரியும்.
Answer: Enter "Oscar Pistorius" in Answer box

LEVEL 12:
Hints: Page title-Time - 7.00 more, url-seven.aspx, Image name-films.jpg, Page Source-<!-- “Once a month, some 'women act' like men act all the time.” ― Robert A. Heinlein. -->, On Image- four film posters
சோர்ஸ் கோடில் ஹைலைட் செய்த படி Women act அதாவது  இமேஜில் கொடுத்து உள்ள படங்களின் நடித்த நடிகைகளின் பெயரை (Sigourney Weaver, Joan Plowright, Helen Mirren, Kate Winslet)  கண்டு பிடித்து அவர்களுக்குள் உள்ள ஒற்றுமையை கண்டுபிடிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் ஒரே வருடத்தில் 2 முறை கோல்டன் குளோப் விருது பெற்றவர்கள். இது நீங்கள் செல்ல வேண்டிய ட்ராக் கோல்டன் குளோப் என்பதை உறுதி படுத்திவிடும். அடுத்து டைட்டிலில் கொடுத்துள்ள Time - 7.00 more படி 7 முறைக்கு அதிகமாக கோல்டன் குளோப் விருதை பெற்ற நடிகைதான் உங்களை அடுத்த வெல்வலுக்கு அழைத்து செல்வார்.
Answer: Enter "Meryl Streep" in Answer box

LEVEL 13:
Hints: Pagetitle-ColorCode, Url-Here.aspx, Image name-Living.jpg, Page Source-<!-- Lovers in triangle not on square, but dots in triangle while dashes on square. --> <!-- Roses are red; Violets are pink, but squares and triangle are always dark red. -->, On Image-Dark&light green,Red patterns
Page title படி இதுவும் ஒரு டீகோடிங் முறைதான் என யூகிச்சி இருக்கலாம். பேஜ் சோர்ஸ்ல் கொடுத்தபடி dots in triangle while dashes on squareகளை மையமாக வைத்து triangleகளை DOT ஆகவும் Squareகளை DASHஆகவும் உருவகித்துக்கொள்ள வேண்டும் பிறகு squares and triangle are always dark red படி dark redல் உள்ளவைகளை மட்டும் கணக்கில் கொண்டு Morse Code decoding முறையில் டீகோட் செய்தால் விடைகிடைக்கும். HERE.aspx, Living.jpg எதற்கு என நீங்கள் டீகோட் செய்தவுடம் புரியும்
Answer: Replace "Here.aspx" to "Earth.aspx"

LEVEL 14:
Hints: Page title:Stone, Image name-five.gif, On Image- a Rectangular cuboid rotating with different colors and number with Brick wall background
இந்த சுத்து சுத்தறதை பார்த்தே பலருக்கு தலை சுத்தி போச்சு... முதல்ல அந்த எண்கள் என்னனு கண்டு பிடிக்கனும். அவை ISD codes.இதை கண்டுபிடிச்சிட்டா மற்ற வேலைகள் சுலபம். 5 நாடுகளின் பெயர்களையும் கூகுள் சர்ச் செய்தால் விடை கிடைக்கும். 
Answer: Enter "brics" in the Answer Box

LEVEL 15:
Pagetitle-Did Spielberg like or hate this movie?, url-fuzzishot.aspx, Imagename-actors.jpg, On image-Mr Bean & Spiderman, Page Source-<!-- Isn't weird how chairs exist even when you're not sitting on them? - Mr. X -->
Mr Beanஐயும் Spidermanஐயும் சேர்த்து கூகுளில் சர்ச் செய்தால் உங்களுக்கு Spider-plant man கிடைக்கும். urlல் உள்ள  HOT FUZZ movie(fuzzishot)யிலும் Spiderplantmanனிலும் நடித்தவர்கள் nick frost மற்றும் simon pegg. Page source clue மூலம் seth rogen ஐ கண்டுபிடித்து மூவரையும் இணைத்தால் கிடைப்பது ஒரு alien spoof movie. அதை தான் ஸ்பீல்பெர்க் விரும்புவாரா என டைட்டிலில் கேட்டு இருந்தோம்.
Answer: Enter "Paul" in the Answer box

LEVEL 16a:
Pagetitle-Key, url-key.aspx, Imagename-key.jpg, Page source-<!-- firstletters@gmail.com -->, On image: Set of 12 questions

12 கேள்விகளுக்கும் விடைகண்டுபிடிக்க வேண்டும். சுலபம் தான். Use Google for all questions.

Find the Places:
Q1:     301001 - Pincode of a place - Answer: Alwar
Q2:     e73.02 n26.28 - GPS location - Answer: Jodhpur
Q3:     Direct decode - Answer: Palanput
Q4:     Sardar Vallabhai patel Airport - gandhinagar - Answer: Ahmedabad
Q5:     Airport code - BDQ - Answer: Vadodara
Q6:     Direct decode - match only the "tick" - Answer: Betul
Q7:     DIAL - 0562 - STD Code - Answer: Agra
Q8:     Its Famous For "Dhaan Ka Katoora" - Answer: Bilaspur
Q9:     Vehicle Registration Code - UP 53 - Answer: Gorakphur
Q10:   RAIL - DGHA - Answer: Digha
Q11:   Direct decode - follow the line - Answer: Bardhaman
Q12:   D_rj_el_ng - fill the missing letter - Answer: Darjeeling
இதை எல்லாம் கண்டுபிடித்த பிறகு Source codeல் கொடுத்த படி Firstletters -> ajpavbabgdbd@gmail.comக்கு ஒரு blank mail அனுப்பினால் விடை உங்களுக்கு வந்து சேரும்.
Answer: Enter "Mughal Empire" in the answer box
LEVEL 16b:
Hints: Pagetitle-Map, url-travel.aspx, Imagename-Mughal empire.jpg, On Image-India Map, On page-Click to Draw, Ctrl + Click to Undraw, Source code -<!-- LOGO -->
16b என்னும் போதே சென்ற கேள்வியின் தொடர்ச்சிதான் என்பது தெரிந்து இருக்கும். சென்ற கேள்வியில் கண்டுபிடித்த இடங்களை மேப்பில் குறிக்க வேண்டும். முடித்ததும் உங்களுக்கு ஒரு லோகோ கிடைக்கும்
Answer: Enter "CNN" in the Answer box
இந்த பதிவு சற்றே பெரிய பதிவாக ஆகிவிட்டதால் மற்ற கேள்விகள் குறிப்பாக சுவாரசியமான செக்பாயிண்ட் கேள்விகளுக்கான விடைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.