"எருமை மாடு, எவ்வளவு நேரம் மொட்டை மாடியில் இருப்பே கீழே இறங்கி வாடா" என்று.. பிச்சுமணியின் அப்பா குரல் கொடுத்தார், "அப்படி என்ன தாண்டா பண்ணுவே"... பிச்சுமணி அந்த தெருவிலே அவன் தான் அழகு என்று நினைப்பு... பல் விளக்குவதை கூட பெருமையா நினைப்பவன் பிச்சு மணி...புதியதாக கட்டிய வீட்டில் பிச்சுமணி குடும்பம் தான் முதலில் வந்தது...
பிறகு ரம்யா குடும்பம் வந்தது அவர்களிடம் சென்று பிச்சு மணி "இங்கு ஏதாவது தெரியவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்க நான் செய்து தரேன்" என்று சொன்னான் பிச்சுமணி, "சரிங்க ரொம்ப நன்றி" என ரம்யா கூறினாள். பால் காய்ச்சி ரம்யா பிச்சுமணியின் அப்பாவுக்கும் அவனுக்கும் பால் கொடுத்தாள் ரம்யா...."உங்க பெயர் என்ன..? என்ன வேலை செய்யறிங்க" என்று கேட்டாள் ரம்யா. அவ்வளவு தான்! ஒரு அரை மணிநேரம் தன் கதையை அளந்தான்...
ரம்யா: எனக்கு இந்த டெலிபோன் ஆபிஸ் எங்க இருக்கு என்று தெரியாது நீங்கள் எங்க சொல்ல முடியுமா..?
பிச்சுமணி :சரி நானே உங்களை கூப்பிட்டு போறேன்
ரம்யா : இல்லை எங்க இருக்குன்னு சொல்லுங்க போதும்
பிச்சுமணி : அப்போ ஏன் என் மேல நம்பிக்கை இல்லையா
ரம்யா : அப்படி இல்லை சரி வாங்க போகலாம் என்று சொன்னாள்
இவருவருக்கும் நட்பு அதிகரித்தது, ரம்யா வேலைக்கு சென்று விட்டு வந்தவுடன் "ஏன் என்னிடம் நீங்கள் வந்ததை சொல்லவில்லை" என்று சண்டை போட்டான் பிச்சு மணி, "சரி இனி உங்க கிட்ட சொல்றேன்"
"என்ன ஒரே கவலையா இருக்கீங்க" என்று பிச்சுமணி கேட்டான் பிச்சுமணி. "வேலைக்கு போயிட்டு வந்த டயர்ட் அவ்வளவுதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரி ஆகிடும்" "உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் என்னை தாராளமா கூப்பிடலாம்" என்று இரட்டை அர்த்தத்தில் சொல்லிவிட்டு போனான் பிச்சுமணி...
பக்கத்து வீட்டிற்கு வீரா மற்றும் அவனது அம்மாவும் குடி வந்தனர், வீராவை பார்த்தவுடன் தனக்கு எங்கே போட்டியாக வந்து விடுவானோ என்று எண்ணினான் பிச்சுமணி..ஏனென்றால் தன்னை விட வீரா அழகாக இருந்தான்..ரம்யாவிடம் ஏதோ பேசினான் அதை பார்த்த பிச்சுமணி உடனே ஓடிவந்து "என்ன பாஸ் வேண்டும் சொல்லுங்க நான் செய்து தரேன்" என்றான்..."ஒன்னும் இல்லை பாஸ் இந்த வீட்டு நம்பர் என்ன கேட்டேன் அவ்வளவு தான்". "இனி ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்க பாஸ் நான் ஹெல்ப் பண்றேன்" என்று கூறினான் பிச்சுமணி.
"நீங்கள் எம்ஜிஆர் படம் நிறைய பார்ப்பீர்கள் போல" என சிரிப்புடன் கேட்டான் வீரா
பிச்சுமணி : அப்படி எல்லாம் இல்லை பாஸ், ரொம்ப தான் கிண்டல் பண்றீங்க...
மறுநாள் வீரா பேருந்து நிலையத்தில் ரம்யாவை பார்த்தான் "எங்கே வெளியே கிளம்பியாச்சா" என்று வீரா கேட்டான். "என்ன பண்றீங்க...?" என வீரா கேட்டதற்கு ரம்யா சொன்னாள் "நான் சும்மா தான் இருக்கேன் எங்க வீட்டுகாரர் தான் வேலைக்கு போகிறார். கோவையில் வேலை பார்க்கிறார். வர திங்கள் முதல் இங்க சென்னையில் தான் வேலை செய்ய போறார்.".
வீரா : நீங்கள் இந்த வீட்டுக்கு வந்து எத்தனை நாள் ஆகிறது
ரம்யா : ஐந்து நாள் ஆகுது ஏன் என்ன ஆச்சு...
"சரிங்க நான் போகும் பஸ் வருது நான் போறேன்" என கிளம்பினான் வீரா..
மாலை வீட்டுக்கும் வரும் பொழுதே பிச்சுமணி வாசலில் நின்றுகொண்டு இருந்தான் "என்ன பாஸ் வேலை எல்லாம் முடிந்து விட்டதா..?" ங்கொய்யாலே நீ வேலைக்கு போகவே இல்லையா என மனதிற்குள் நினைத்து கொண்டான் வீரா...."முடிஞ்சு போச்சு பாஸ் சரி நான் வரட்டா" என கேட்டார், "ஒரு நிமிஷம் இருங்க பாஸ் நான் ஒருத்தருக்கு லவ் லெட்டர் கொடுக்க போறேன் அதை உங்களிடம் படிச்சு காட்டுறேன் நல்லா இருக்கா சொல்லுங்க"....அந்த கடிதத்தை படித்து காட்டினான் பிச்சு மணி
"எல்லாம் நல்லா இருக்கு, இது யாருக்கு சொல்லுங்க பிச்சுமணி". "வேற யாரும் இல்லை நம்ம ரம்யாவிற்கு தான்". அதை கேட்ட வீரா அதிர்ச்சி அடைந்தான், "என்ன சொல்றிங்க பாஸ் அவங்களுக்கு கல்யாணம் ஆகிபோச்சு உங்களுக்கு தெரியாதா...?". சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பிச்சுமணி கூறினான் "நம்ம முடிந்த வரை முயற்சி செய்வோம் மாட்டினா நல்லது இல்லை வேற ஆளை பார்த்து விட்டு போயிட்டே இருக்கணும்..."
ச்சே இவன் கூடவா இவ்வளவு நேரம் பேசினோம் என தலையில் அடித்து கொண்டு கிளம்பினான்...
சிறிது நாள் கழித்து ரம்யா தன் கணவர் உடன் வந்தால் அதை பார்த்த பிச்சுமணி ரம்யாவிடம் சென்று "இது யார்" என கேட்டான் அதற்கு "என் கணவர் இவர் தான். நான் யார் கூட வந்தால் உங்களுக்கு என்ன?" என்று முகத்தில் அறைந்தால் போல் கூறினாள்...
ஒரு நாள் பிச்சுமணி அந்த காதல் கடிதத்தை கொடுத்தான்..அதற்கு ரம்யா "எனக்கு கல்யாணம் ஆனது உனக்கு தெரிந்தும் எனக்கு லவ் லெட்டர் தருயே உனக்கு அறிவு இல்லையா ... நீ இப்படி பட்ட கேவலமான எண்ணத்தோட பழகறது தெரிஞ்சிருந்தா நான் அப்பவே உன்னை கிட்ட சேர்த்து இருக்க மாட்டேன் . இனி என் பக்கத்தில் வந்தே உன்னை செருப்பாலே அடிப்பேன்..இங்க இருந்து போ.. என் முகத்துலேயே முழிக்காதே" என சொல்லி கதவை சாத்துகிறாள்..
அடுத்த நாள் பிச்சுமணி எழுந்து வெளிய வந்தபோது, ரம்யா போர்ஷனிற்கு பக்கத்து போர்ஷன்ல புதுசா யாரோ குடி வராங்க. அங்க ஒரு பிகர்! பிச்சுமணி அங்க போய்... அந்த பொண்ணுகிட்ட "உங்களுக்கு என்ன உதவி வேணும் சொன்னாலும் என்னை கூப்பிடுங்க ஆன அந்த பக்கத்து வீட்டு ரம்யா கிட்ட மட்டும் போகாதீங்க அவ ஒரு மாதிரி" என்றான்... இவனை பற்றி தெரியாத அந்த பொண்ணு அப்பாவியா... சரினு தலை ஆட்டரா.. பிச்சி.. அடுத்த பச்சி அப்படினு மனசுகுள்ள வில்லதனமா சிரிச்சிகிட்டே வீட்டுக்கு போறான்... இவனை எல்லாம் கேக்க யாரு வருவாங்களோ.