Showing posts with label பெசொவி - கும்மி. Show all posts
Showing posts with label பெசொவி - கும்மி. Show all posts

Sunday, August 7, 2011

நண்பர்கள் தின வாழ்த்துகள்!


முகம் கொடுத்து
முகவரி கொடுத்த
பெற்றோர் உளர்
முகம் தெரிந்து
முகவரி தெரிந்து
உற்றார் சிலர் உளர்
முகத்தில்
நகை தேக்கி
மூளையில் விஷம் தேக்கும்
செற்றாரும் உளர்
முகமும் அறியாமல்
முகவரியும் தெரியாமல்
அகம் மட்டும்
நோக்கும்
என் இனிய
இணைய நட்பே
உனக்கு
உள்ளம் கனிந்த
நல் வாழ்த்துகள்!

************************************

பிறர் வாழப் 
பொறுக்கா மனம் கொண்டு
விம்மி வெதும்பும் 
மாந்தர் நடுவே 
கும்மி அடிப்பதே
தொழிலாய்க் கொண்டு
குவலயம் முழுதும்
நட்புக் கரம் நீட்டும்
எம் 
டெரர் கும்மி 
மக்களிடமிருந்து 


"இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!"

Sunday, January 2, 2011

நாங்களும் ஹீரோ தான்!


பிரபல பதிவர்னு ஏதோ சொல்றாங்களே, அப்டின்னா என்னப்பா? ஏதோ ஹிட்ஸ வச்சு சொல்றதாம். இதில 2010-ல் முன்னணி  பதிவுகள்னு ஒரு லிஸ்ட் வேற வச்சிருக்காங்க. நான் தெரியாமத்தான் கேக்கறேன், ஹிட்ஸ் வர வைக்கிறது பெரிசா? நடிகை ரம்யாஸ்ரீக்கு ஆண் குழந்தை - தந்தை யார்? அப்படின்னு ஒரு தலைப்பு வச்சு பதிவு போட்டா, ஒரே நாள்ல ஆயிரக் கணக்கான ஹிட்ஸ் வராதா? ஆனா நாமலாம் அப்படி கீழ்த்தரமான பதிவு போடறது கிடையாது. நம்ம மனத் திருப்திக்காக பதிவு போடற சாதிப்பா, நாங்க!
அப்படியே பார்த்தாலும் நம்ம பிரெண்ட்ஸ் தான் முன்னணி லிஸ்ட்ல இருக்காங்க! எனக்குப் பின்னால ப்ளாக் ஆரம்பிச்சவங்க எனக்கு முன்னால போய்க்கிட்டிருக்கறது எனக்கு சந்தோஷம்தான், அதில் வருத்தமில்லை, அட, பொறாமை கூட எனக்கு இல்லைங்க! என்ன பாக்கறீங்க? நான் சொல்றதை நம்பலையா? அது உங்க இஷ்டம்.
திரும்பவும் சொல்றேன்,இந்த முன்னணி பதிவு,பின்னணி பதிவு இதெல்லாம் சுத்த ஹம்பக்! நான் அதை எல்லாம் நம்பறதே இல்லை, சொல்லப் போனா, அதை நான் எதிர்க்கிறேன் .............................................................. .........................இருங்க, ஒரு போன் வருது,
"ஹலோ, கோகுலத்தில் சூரியன் வெங்கட்டா? சொல்லுங்க, என்னது தமிழ்மணம் கடந்த மூன்று மாத முன்னணி பதிவுகள்ள என்னோட பதிவும் இருக்குதா? அதுவும் கிட்டத்தட்ட 1500 பதிவுகள்ல முப்பதாவது இடமா? ஓகே, தேங்க்ஸ்!" ........................................................

என்ன சொல்லிகிட்டிருந்தேன், ஆங்.....இந்த முன்னணி பதிவுகள் பத்தி. அதுல என்ன தப்புங்கறேன்? சும்மா ஹிட்ஸ் அது இதுன்னு சால்ஜாப்பு சொல்லாதீங்க. நல்லா எழுதினாதான மக்கள் வந்து படிப்பாங்க? யார் என்ன எழுதினாலும் வந்து படிச்சு போக மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்லை, சார்! ஏதோ என்னோட பதிவுகளும் முன்னணில வந்துடுச்சுன்னு நான் சொல்லலை. இந்த முன்னணி பதிவுகளை கிண்டல் பண்றவங்க எல்லாம் மனசாட்சியே இல்லாதவங்க, சார். வயித்தெரிச்சல்ல புலம்பறவங்க!
என்னதான் சொல்லுங்க, நாம எழுதறதை பாராட்டறவங்க இருக்கத் தான் செய்யறாங்க!
அது நமக்கு ஒரு டானிக் மாதிரி. அதுனாலதான் சொல்றேன், இந்த மாதிரி முன்னணி பதிவுகள் பத்தி எல்லாருக்கும் தெரிய வேண்டியது அவசியம்தான். நான் வரவேற்கிறேன்!

வாழ்க, பிரபல பதிவர்கள்!

Monday, December 27, 2010

தயவு செய்து இந்தப் பதிவைப் படிக்காதீங்க!

தயவு செய்து இந்தப் பதிவைப் படிக்காதீங்க! 

தயவு செய்து இந்தப் பதிவைப் படிக்காதீங்க! சார், மேடம், திரும்பவும் சொல்றேன், இந்தப் பதிவு உங்களுக்கானது அல்ல, அதுனால இதுக்கு மேலயும் இந்த பதிவைப் படிக்காதீங்க, உங்க வசதிக்காக மேலும் மூணு நாலு பிளான்க் வரி விடறேன், அப்படியே திரும்பிப் போய்டுங்க!













பாத்தீங்களா, அவ்ளோ சொல்லியும் இந்தப் பதிவைப் படிக்க வர்றீங்க!

இதுதான் சார், நான் சொல்ல விரும்பறது. ஒரு விஷயத்தை செய்யாதேன்னா அந்த விஷயத்து மேல தன்னால ஒரு ஆர்வம் வந்துடுது. சின்ன பசங்களும் அப்படிதான். ஒரு காரியம் தப்பான ஒண்ணு, அதை செய்யவே கூடாதுன்னு யார்கிட்ட வேணும்னாலும் சொல்லிப்பாருங்க, உடனே அந்த காரியத்த செஞ்சு முடிக்க ஒரு வேகம் வரும்.

ஆகவே, மக்களே, பிறர் தவறு செய்யும்போது அது தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்பினால், அதன் சாதக பாதகங்களை விளக்கி சொன்னால் மட்டுமே மற்றவர்களுக்கு புரியும் என்பதை எடுத்துக் காட்டவே இந்தப் பதிவு!

நன்றி!

Sunday, December 19, 2010

டெரர் இப்படி செய்யலாமா?


நீங்களே சொல்லுங்க, நாம டெரர் பேருல எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கோம்?
அவன் இப்படி செஞ்சது எனக்குத் துளிக்கூட பிடிக்கல.
அவன் செஞ்சது சரியா, தப்பா? இது தான் நான் உங்க கிட்ட கேக்கற கேள்வி.
அவன் எப்படிப்பட்டவன் என்று உங்க எல்லோருக்கும் தெரியுமோ என்னவோ, எனக்கு நல்லா தெரியும்.
அவன் இப்படி செஞ்சா, மத்தவங்க என்ன நினைப்பாங்க?
ஒரு வேளை அவன் செஞ்சது சரின்னு நீங்க நினைக்கலாம், அது பத்தி நான் கவலைப் படப்போவதில்லை.

ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் நீங்களே கூட அவன் செஞ்சது சரியில்லையோன்னு நினைக்கலாம். ஆனா, இன்னிக்கு என்னப் பொறுத்த வரைக்கும் அவன் செஞ்சது சரியில்லைதான்.

அப்படி அவன் என்னதான் செஞ்சான்னு உங்களுக்கு சொல்லவே இல்லையோ?
சொல்றேன். அவன் ஒண்ணுமே செய்யலைங்க. அவன் ஏதாவது செஞ்சா அது சரியா, தப்பா அப்படின்னு உங்களை எல்லாம் கேக்கலாம்னு இருந்தேன். ஆனா, பாருங்க, அவன் ஒண்ணுமே செய்யலை! என்னை ஏமாத்திட்டான்!

இப்போ சொல்லுங்க, டெரர் செஞ்சது சரியா?

டிஸ்கி: என்ன ரொம்ப சொரிஞ்சுட்டனா? இந்தப் பஞ்சு படம் எதுக்குப் போட்டிருக்கேன்னு இப்ப புரியுதா?

Sunday, December 12, 2010

கும்மித் திருக்குறள்

 

கும்மி அடிப்போர் சங்கம் சேர்ந்து இந்த வலைப்பூவை உருவாக்கியாச்சு. இதில் நம்ம பங்குக்கு எதுவும் செய்யலைனா நல்லா இருக்காது. பாரதியாரை வச்சு அருண் எழுதியதால், நான் திருவள்ளுவரை காப்பி அடிச்சு திருக்குறள் எழுதுகிறேன். (குறள் வெண்பா இலக்கணம் மீறாமல் எழுதியிருக்கிறேன்)






கும்மி எனப்படுவது யாதெனின் மற்றவரை  
விம்மிச் சிரிக்கச் செயல்.

தைரியமும் நேர்மையும் கொண்டநல்  கும்மியோரை 
வைரியும் பாராட்டு வார்.    (வைரி = எதிரி)

குறும்பில் சிரிக்கட்டும் பார்.   (பார் = உலகம்)

தேவா கருத்தில் புயலே வீசினும்
ராவா அடிப்பார் கும்மி  

அருணோ   ரமேஷோ  டெரரோ எதிரிக்கு 
கருணையே காட்டுவது இல். 

சோகமாய் உள்ளவரை சுகமாய் ஆக்கிடும் 

தீதின்றிக் கும்மிடு வர்.

ராமசாமி வாவாவா ஆடுகள் காத்திருக்க
பூமாலை போட்டுநீ வெட்டு.

எஸ்கேயின் வண்ணத்தால் டெம்ப்ளேட் அதிருது 
ரிஸ்கேதும் உண்டோ நமக்கு? 

ஜெய்லானி எப்பவும் டெர்ரரே ஆனாலும் 
பொய்லாம் பரப்புவது இல்.