Monday, September 23, 2013

HUNT FOR HINT-3 புதிர்ப் போட்டி! மொத்தப்பரிசு 12,000 ரூபாய்!


இணைய நண்பர்களே,
கடந்த இரண்டு வருடங்களாக டெரர்கும்மி சார்பாக நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் மெகா புதிர் போட்டி உங்களின் ஆதரவால் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் அப்படியான ஒரு போட்டியை மேலும் சிறப்பாக நடத்த போவதாக முந்தய பதிவு மற்றும் கூகுள் ப்ளஸ்சில் அறிவிப்பு செய்திருந்தோம்!

ஆம் நண்பர்களே சோம்பி இருக்கும் உங்கள் புத்தியைத் தீட்ட நேரம் வந்துவிட்டது! வருகின்ற அக்டோபர் மாதம் 9ம் தேதி (09/10/2013) புதன் கிழமை காலை 9.00 மணிக்கு ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 3 போட்டி தொடங்கும். கடந்த வருடத்தைவிட இந்தவருடம் பரிசுத்தொகையும் அதிகம்! மொத்தப்பரிசு ரூ 12,000!

      


இந்த வருடம் புதியதாக விளையாட போகிறவர்களுக்காக இந்த கேம் பற்றிய சிறிய அறிமுகம்:

என்ன புதிர் போட்டி இது?

1. இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.

2. நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்

3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து  விடை சொல்ல வேண்டும்

4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்.... 

5. விடையை  கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு)  செல்லும்

6. இப்படி மொத்த லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....

7. அனைத்து லெவல்களையும்  முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.

8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்

9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.பரிசு விவரம்:

முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 2000 ரூபாய்
இரண்டு ஆறுதல் பரிசு தலா 1000 ரூபாய்.

இந்த போட்டியை பற்றிய மேலும் விரங்கள் அறிய கீழ்கண்ட சமூகத் தளங்களில் உள்ள எங்கள் பேஜ்களை பாருங்கள்......


கடந்த இரண்டு வருடமும் நடந்த கேம்களை  புதியதாக விளையாடி பயிற்சி செய்ய...

2011 கேம் 

2012 கேம் 

இந்தப் போட்டியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள 


இந்த வருடமும் இந்த விளையாட்டு உங்களுக்கு நல்லதொரு அனுபவத்தை தருமென்று நம்புகிறோம். இதனைப்பற்றிய விபரங்களை அடிக்கடி உங்களுக்குத் தருகிறோம். தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள்!

வாழ்த்துக்களுடன் 
டெரர்கும்மி 

Thursday, September 19, 2013

தங்கலிஷ் சிறுகதைகள் - 01

ஆண்ட்ராய்ட் இல்லேன்னா நோக்கியா மாதிரி யூசர் பிரண்ட்லி மொபைல் இருந்தாத்தான் பரவால்லைங்க. இல்லைன்னா கஷ்டம் தான்.

ஏன் என்னாச்சிங்க?

தங்கலிஷ் பிரச்சினைங்க. ட்விட்டர், பேஸ்புக்ல எல்லாம் லேப்டாப்ல போய் தமிழ்ல ஸ்டேட்டஸ் போட்டிடுவேன். ஆனா இந்த எஸ்எம்எஸ் மட்டும் மொபைல்ல இருந்து தான் அனுப்ப வேண்டியிருக்கு.

அது வாஸ்தவம் தாங்க.

தங்கலிஷ்ல மெசேஜ் அனுப்புனா சில நேரம் நாம என்ன சொல்ல வர்றோம்ங்கிறது அந்தப் பக்கம் இருக்கிறவங்களுக்கு புரிய மாட்டேங்குது. கொஞ்ச நாளைக்கு முன்னே தூங்கப்போறேன், தொங்கப்போறேன்னு தங்கலிஷ் ஸ்டேட்டஸ் ஒண்ணு நெட்ல சுத்திட்டு இருந்தது ஞாபகம் இருக்கா? அதுல பார்த்தீங்கன்னா ஒரே ஒரு 'O' தான் பிராப்ளம்.

...

அலுவலக நண்பர் அவர். அதி தீவிர பெண்ணியவாதி. காத்திரமான (?) முதலாளித்துவ மனப்பான்மை கொண்ட அவர் எப்படி பெண்ணியவாதியாக மாறினார் என்பது எங்களுக்கெல்லாம் ரொம்ப ஆச்சரியமான விஷயம். ஆன்சைட் யூஎஸ் போனவுடன் ஐபோன் வாங்கி காலைக்கடன்கள் தவிர்த்த அனைத்தையும் போட்டோ புடிச்சி பேஸ்புக்லையும் ஆபீஸ் ஷேர் டிரைவ்லையும் போட்டு எங்களையெல்லாம் மிரண்டோட செய்தவர். என்னதான் நடந்திச்சி இந்த இடைப்பட்ட காலத்துல என ஒரு மழை நாள் இரவில் பாரில் அமரவைச்சி கேட்ட போதுதான் மேற்சொன்னபடி ஆரம்பிச்சார்.

நான் முன்ன வொர்க் பண்ணிய டீம்ல எனக்கு ஒரு தோழி இருந்தாங்க. அவங்களோட ரொம்ப க்ளோஸ் இல்லைன்னாலும் அப்பப்போ எஸ்எம்எஸ் அனுப்புற அளவுக்கு பழக்கம்..

ம்..

அப்போத்தான் ஆன்சைட்ல இருந்து வந்திருந்தேன். வேலைவெட்டி எதுவும் இல்லைங்கிறதால அடிக்கடி பிரேக் எடுத்திட்டு சுத்திட்டு இருந்தேன். அப்படி ஒருமுறை பிரேக்ல இருந்து பிளேஸ்க்கு வரும்போது என்னோட தோழி அழுத முகத்தோட எங்கியோ கிளம்பிட்டு இருந்தாங்க..

என்ன இருந்தாலும் தோழி இல்லையா, அதான் மனசு கேட்காமல் "ஏன் மூஞ்சி வீங்கியிருக்கு"ன்னு தங்கலிஷ் மெசேஜ் அனுப்பினேன்.

ஹா...ஹா...

Tuesday, September 3, 2013

HUNT FOR HINT-3 is Coming Soon....அன்பு நண்பர்களே!

உங்களுடைய ஆல் டைம் ஃபேவரிட்  ஹண்ட் ஃபார் ஹிண்ட் கேம்-3  இன்னும் சில வாரங்களில் உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திணறடிக்க வந்துகொண்டிருக்கிறது!

ஆம்! கடந்த வருடம் உங்களை சுமார் ஒரு வார காலம் உங்கள் கணிணிகளில் கட்டிப்போட்ட “ஹண்ட் பார் ஹிண்ட்” விளையாட்டின் மூன்றாம் பாகம் தயாராகிக்  கொண்டு இருக்கிறது!  

கடந்த வருடம் அதை விளையாடுவதில் நீங்கள் காட்டிய ஆர்வமும், அதை உருவாக்கிய எங்கள் குழுவிற்கு நீங்கள் தந்த  ஆதரவும், உற்சாகமும் எங்கள் டெரர் கும்மி குழுவை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது! ஆகவே, கடந்த வருடத்தை விட இன்னும் சிறப்பாக, மேலும் செம்மையாக இந்த கேமை வடிவமைத்து கொண்டு இருக்கின்றார்கள் எங்கள் தொழில்நுட்ப குழுவினர்! கடந்த வருடத்தைப் போலவே, ஏன் அதைவிட அதிகமாகவே இந்த மூன்றாம் பாகம் உங்களை பல வித வழிகளில் ஆச்சரியபடுத்தவும்  உங்களை குழப்பி உங்கள் மூளையை சுற்றவிடவும் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை! 

அதனால் மிகவும் கவனத்துடனும் உஷாராகவும் உங்களைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டிய தருணம் வந்து விட்டது. உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி அவர்களையும் விளையாட தயார்படுத்துங்கள்! ஆனால் நண்பர்களோடு கூட்டாக விளையாடுவதைத் தவிர்த்துக் கொள்ளவும்! இந்த கேம் பற்றியோ அல்லது வேற ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ terrorkummi@gmail.com ல் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்காக  உதவக் காத்திருக்கின்றோம்!

மேலும் விபரங்களை உடனுக்குடன் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்! எங்களோடு www.terrorkummi.com இல் தொடர்ந்து இணைந்திருங்கள்!

கடந்த வருடம் விளையாடியவர்களிடம் இருந்து இந்த கேமை மேம்படுத்த மேலான ஆலோசனைகளையும் கருத்துகளையும் எதிர்பார்க்கின்றோம்! ஆகவே அதையும் தயங்காமல் மேலே குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! புதியவர்களும் ஆலோசனைகள் அனுப்பலாம்.  

இனி என்ன? வேட்டை ஆரம்பம்தான்!

நன்றியுடன்,

டீம் HFH-3

Hunt For Hint பற்றி மேலும் விவரங்கள் அறிய இங்கு செல்லுங்கள்....


========================================================================
Hi Hunters,

"Hunt for Hint 3" is on its way! Yes, you read it right, we are back to play with your minds again. The game that had left you frozen/clenched in your seats for a week last year is back to strain your grey cells.

Look out for further details soon in www.terrorkummi.com....
Now, what do we say about “Hunt for Hint 3"? Your interest and immense support has driven our designer team crazy to produce an even colorful and mind blowing game. We are pretty sure that this year too we will be able to keep you captivated. Moreover did we mention that you need to be more proactive this time? we bet, it will squeeze you out.:)

Feel free to mail us terrorkummi@gmail.com if you have any doubts about this game!

Since you are one of the best participant in last year's game, We are Looking forward to your suggestions and ideas to make the game more interesting.

Start Hunting!

Thanks and Regards

Team HFH-3

To Know more about Hunt For Hint... Click here...