Monday, October 1, 2012

நேரு ஸ்டேடியத்தில் HFH-2

HFH-2 கேமை வெற்றிகரமா நடத்தி முடித்ததற்காக நாகா,அனு மற்றும் எஸ்.கே அவர்களுக்கு நேரு ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடக்கிறது. அங்கு நடந்த சில காட்சிகள். பாராட்டு விழா நடக்கும்போது ஒவ்வொருவரிடமும் இந்த வெற்றிக்கு காரணம் யார்ன்னு கேட்கிறாங்க.

நாகா: இந்த வெற்றிக்கு காரணம் என் தோழிதான்!!(டெரர் கும்மி மெம்பர்கள் ஷாக்காகிரார்கள்)

அனு: இந்த வெற்றிக்கு காரணம் என் கணவர்தான்!!(டெரர் கும்மி மெம்பர்கள் மறுபடியும் ஷாக்காகிரார்கள்)


பாபு: அடப்பாவிகளா நம்ம டெரர் கும்மி பத்தி யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்களே. அட்லீஸ்ட் விளம்பர பிரிவு அதிகாரி என்னை பத்தியாவது சொல்லிருக்கலாம்.

அப்போது எஸ்.கே மேடைக்கு வருகிறார்.

எஸ்.கே: என் வெற்றிக்கு இந்த கேம் வெற்றிக்கு காரணம் என் அப்பா அம்மா மற்றும் என் டெரர் கும்மி நண்பர்கள்தான்.

டெரர்கும்மி: (எல்லோர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிகிறது. அப்பவும் இவிங்க டிம்மாதான் சார் தெரிவாங்க)

அப்படியே கேமராவை திருப்பி காட்றாங்க. அங்க எஸ்.கே வோட அம்மா அப்பா நிக்கிறாங்க. லைட்டா ஆடியன்ஸ் பக்கம் திருப்பி கும்மி மெம்பர்ஸை கவர் பண்றாங்க...

பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட் சூட்டில் அமர்ந்து இருக்கிரார்

டெரர் : அதே புன்னகையுடன் (நம்ம பய சார் என்ற) பெருமிதத்துடன் அமர்ந்து இருக்கிறார்.

அருண் : அடுத்த ஹண்ட் பார் ஹிண்டில் இந்த அவார்டு பற்றி கேள்விக்கு என்ன க்ளு வைக்கலாம் என்று சிந்தித்தவண்ணம் புன்னகையுடன் இருக்கிறார்.

ரமேஷ் : வயித்த பசிக்கிது. இங்க சாப்பாடு போடுவாங்களா என்று மனம் கேட்டாலும் முகத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்து இருக்கிறார்.

பாபு : எத்தனை முயற்சி செய்தும் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை அடக்க முடியாமல் கேமரா மேன் கண் கூசும் அளவு பளீர் பற்களுடன் அமர்ந்து இருக்கிறார்.

வைகை : மழைகால தொடரில் மச்சக்காரி என்ற தலைப்பில் பதிவு போடுவது பற்றி சிந்தித்து கொண்டே பாபு போன்ற அதே புன்னகையுடன் அமர்ந்து இருக்கிறார்.

நாகா : தன் சீட்டில் ரைட்டர் நாகா என்று தானே ஒரு போஸ்டரை ஒட்டி விட்டு பின்னர் அமருகிறார்.

மாணவன் : சைனா மொபைல் வாங்க வந்திருந்த சீன பெண்ணிடம் பேச்சி கொடுத்து கொண்டே மேடையை வேடிக்கை பார்க்கிறார்.

மாலுமி : இன்று மட்டும் குடிக்காமல் (போய் குடிப்பான்) பார்க்க டீசண்டாக உடை அணிந்து புன்னகையுடன் அமர்ந்து இருக்கிறார். இடையில் அவர் சேர்மேன் கால் வர, வை டா போனை ஸ்டுப்பிட்டு என்று சொல்லி விட்டு விழாவை தொடர்ந்து கவனிக்கிறார்

செல்வா : ட்யூட்டரில் விழா பற்றி அப்டேட் செய்து கொண்டே பால் வடியும் முகத்தில் அரும்பு மீசையுடன் அமர்ந்து இருக்கிறார்.

ஜெய் : சற்றே உடல் இளைத்து ட்ரிம்மாக காட்சி அளிக்கிறார். பேஸ் புக்கில் இதை ஸ்டேட்டஸ் போட்டால் கும்மி அடித்து நாசமாகிவிடும் என்பதால் அமைதியாக பார்த்து கொண்டு இருக்கிறார்.

பட்டிகாட்டான் : (கடைசி வரிசையில்) சார் நானும் அவங்க டீம் தான். சீட் கிடைக்கவில்லை அதான் இங்க இருக்கேன் என்று சொல்லி கொண்டே குறிப்பு எடுத்து கொண்டு இருக்கிறார். 

மங்கு: அங்கு வந்திருக்கும் எல்லோரிடமும் ஃபேஸ்புக் ஐடியை வாங்கி அவர்கள் இதுவரை போட்ட அனைத்து ஸ்டேட்டசுக்கும் அப்பவே மொபைலில் லைக் போடுகிறார்.  பின் தனது ஸ்டேட்டஸ்களுக்கு மறந்துவிடாமல் லைக் போடவேண்டும் என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.

வெங்கட் : (அருகில் உள்ள வெள்ளைகாரனிடம்) ஹலோ! ஐ ஆனந்த விகடன்  கோகுலத்தில் சூரியன் வெங்கட். திஸ் ப்ளாக் வோல்டு பேமஸ். டெய்லி 200 ஹிட்ஸ். யு ரீட் மை ப்ளாக் பட் நாட் ரீட் கமெண்ட்ஸ். ஆல் பேட் பாய்ஸ்.

கார்த்தி: (போனில் முறை பெண்ணிடம்) இல்லைமா.. உண்மையிலே நான் கேள்வி டீம்ல இருந்தேன். அவார்டு ஸ்டாக் இல்லியாம் அதனால முக்கியமானவங்களுக்கு மட்டும்
அவார்டு கொடுத்து இருக்காங்க. இப்போ கூட கோபி அண்ணா வந்து கை கொடுத்து சாரி சொல்லிட்டு போராரு. நம்புமா ப்ளீஸ்.. நான் பொய் சொல்லவில்லை..... ஹலோ! ஹலோ... வச்சிட்டா!!!

மாதவன் : அந்த ஸ்டேஜ்ல வச்சி இருக்க லைட் செட்டிங்ஸ் தப்பு. ஐன்ஸ்டின் லைட் தியறிபடி இதை 40 டிகிரி இறக்கி வச்சி இருக்கனும்.

PSV : இவரு பெரிய மனுசன் ஆதலால் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்.

எஸ்.கே அவர்கள் அவர்டு வாங்க அனைவரும் கண்ணில் துளிர்த்த ஒற்றை துளியை மற்றவருக்கு தெரியாமக் சுண்டி விட. பாபு மட்டும் முகத்தை கர்சீப்பால் மூடி கொண்டு தேம்பி தேம்பி அழ.. கேமர அதை காட்ட அதை பார்த்து வீட்டில் அண்ணி அழ, அப்பா ஏம்மா அழராங்க என்று ஹரினி கேட்க்க..... அதே நேரத்தில் பன்னிகுட்டி மொபைல் அடிக்க.. அதே புன்னகையுடம் கால் எடுக்க... லைனில் கொசக்சி பசபுகழ்

கொசக்சி : மச்சி கொல்கத்தாவில் இருந்து கிளம்பிட்டேன். பங்ஷ்னை ஆன்லைன்ல பார்த்துட்டு இருக்கேன் விஜயவாட கிட்ட வரும் பொழுது லைன் கட்டாகும். நேரா புகாரி போய் ஒரு தல கறி சாப்பிட்டு அவர்டு பங்ஷனுக்கு வந்துடரேன். இங்க எல்லாரும் உங்களை பத்தி தான் பேச்சி. கலக்கிட்டிங்க மச்சி..... 

என்று பேசி கொண்ட்டே போக. பன்னி முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல் அமைதியாக மொபைலை காலில் போட்டு மிதித்து சுக்குனூராக்குகிறார்.....

#எழுதியவர்
டெரர் பாண்டியன்
அட்டுமின்
டெரர் கும்மி

47 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

//பாபு மட்டும் முகத்தை கச்சீப்பால் மூடி கொண்டு தேம்பி தேம்பி அழ.. கேமர அதை காட்ட அதை பார்த்து வீட்டில் அண்ணி அழ, அப்பா ஏம்மா அழராங்க என்று ஹரினி கேட்க்க..... //

டேய் ...டேய் ..டேய் .........

Madhavan Srinivasagopalan said...

good .. highly imaginative -- characteristic....

:-)

Madhavan Srinivasagopalan said...

தப்பு(!) கண்டுபிடிக்கற குணத்த நானு மாத்தித்தான் ஆகணுமோ ? (மைன்ட் வாய்ஸ் )

பட்டிகாட்டான் Jey said...

என்னோட அருமைத் தம்பி... ”பாப்பு”வை கிண்டலடித்ததை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதை கண்டித்து தம்பி பாப்பு....டேமேஜர் முகத்தில் முனு தடவை “கர்ர்ர்ர்” “கர்ர்ர்ர்” ”கர்ர்ர்ர்” என்று காறித் துப்புவார்கள்.

Yoga.S. said...

வணக்கம்!நல்லா வயிறு(!)நோக சிரிச்சேன்!:தாங்க்ஸ்!

இம்சைஅரசன் பாபு.. said...

//PSV : இவரு பெரிய மனுசன் ஆதலால் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருக்கிறார். //

கூடவே வெள்ளை சட்டை ..வெள்ளை வேஸ்ட்டி ..வெத்தல பொட்டி போன்றவைகளையும் சொல்லாம விட்டு ட்டீங்க ஆபிசர்

Madhavan Srinivasagopalan said...

இம்சைஅரசன் பாபு.. said...

//PSV : இவரு பெரிய மனுசன் ஆதலால் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருக்கிறார். //

கூடவே வெள்ளை சட்டை ..வெள்ளை வேஸ்ட்டி ..வெத்தல பொட்டி போன்றவைகளையும் சொல்லாம விட்டு ட்டீங்க ஆபிசர்
//

அவருக்கு வெத்தல போடுற பழக்கம் இல்லீங்கோ..
அதே மாதிரி.. அவரும் மாடர்ன்தான் . பேன்ட் சர்ட் போட்டுப்பாரு..

வெளங்காதவன்™ said...

//HFH-2 கேமை வெற்றிகரமா நடத்தி முடித்ததற்காக///

இன்னும் வெளாடிக் கொண்டிருக்கிறேன் மை லார்ட்!!!

வெளங்காதவன்™ said...

//கொசக்சி : மச்சி கொல்கத்தாவில் இருந்து கிளம்பிட்டேன். பங்ஷ்னை ஆன்லைன்ல பார்த்துட்டு இருக்கேன் விஜயவாட கிட்ட வரும் பொழுது லைன் கட்டாகும்.///

கர்ர்... த்து...

வெளங்காதவன்™ said...

//
டெரர் பாண்டியன்
அட்டுமின்
///

இந்தப் பொழப்புக்கு.....

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் : (அருகில் உள்ள வெள்ளைகாரனிடம்) ஹலோ! ஐ ஆனந்த விகடன் கோகுலத்தில் சூரியன் வெங்கட். திஸ் ப்ளாக் வோல்டு பேமஸ். டெய்லி 200 ஹிட்ஸ். யு ரீட் மை ப்ளாக் பட் நாட் ரீட் கமெண்ட்ஸ். ஆல் பேட் பாய்ஸ்.////

ROFL ....HA.HA.HA....

பெசொவி said...

wholehearted welcome to all readers of this Blog!

hihi!

வெளங்காதவன்™ said...

//பெசொவி said...

wholehearted welcome to all readers of this Blog!

hihi!
///

பெரிய மனுஷன்யா!

Madhavan Srinivasagopalan said...

// இன்னும் வெளாடிக் கொண்டிருக்கிறேன் மை லார்ட்!!! //

சாரி ஃ பார் கன்ஃபியூஷன்.

நீங்க.. 'வெளாடுநீங்க.. ... வெளாடுநீங்க..
வெளாடுறீங்க.. ..
இன்னும் வெளாடுவீங்க..'

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகா: இந்த வெற்றிக்கு காரணம் என் தோழிதான்!!//////

இல்லியா பின்னே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டெரர்கும்மி: (எல்லோர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிகிறது. அப்பவும் இவிங்க டிம்மாதான் சார் தெரிவாங்க) /////

தகதகதகன்னு மின்னுற பாபு, டெரர், வைகை மாதிரி ஆளுக நம்மகிட்ட இருக்கும் போது இப்படி சொல்லி இருப்பதை கண்டிக்கிறேன்......

வைகை said...

பாபு போன்ற அதே புன்னகையுடன் அமர்ந்து இருக்கிறார்.///

இதுக்கு கேவலமா என்னை ரெண்டு வார்த்தை திட்டியிருக்கலாம்! ( இதுவே அப்பிடித்தானோ?) :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட் சூட்டில் அமர்ந்து இருக்கிரார்////

பங்க்சன் ஊட்டில நடக்கலேல்ல.....? ஏன்னா அங்க பிச்சக்காரன்கூட கோட்டுதான் போட்டிருப்பான்.....

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////டெரர்கும்மி: (எல்லோர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிகிறது. அப்பவும் இவிங்க டிம்மாதான் சார் தெரிவாங்க) /////

தகதகதகன்னு மின்னுற பாபு, டெரர், வைகை மாதிரி ஆளுக நம்மகிட்ட இருக்கும் போது இப்படி சொல்லி இருப்பதை கண்டிக்கிறேன்.....////

நல்லா கேட்டுக்கங்கையா..செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் :-)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட் சூட்டில் அமர்ந்து இருக்கிரார்////

பங்க்சன் ஊட்டில நடக்கலேல்ல.....? ஏன்னா அங்க பிச்சக்காரன்கூட கோட்டுதான் போட்டிருப்பான்....//

அப்ப ஏன் ரமேஷ் ஊட்டி போனப்ப கோட் போடல? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டெரர் : அதே புன்னகையுடன் (நம்ம பய சார் என்ற) பெருமிதத்துடன் அமர்ந்து இருக்கிறார்.//////

என்னது அதே புன்னகையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட் சூட்டில் அமர்ந்து இருக்கிரார்////

பங்க்சன் ஊட்டில நடக்கலேல்ல.....? ஏன்னா அங்க பிச்சக்காரன்கூட கோட்டுதான் போட்டிருப்பான்....//

அப்ப ஏன் ரமேஷ் ஊட்டி போனப்ப கோட் போடல? :-)///////////

ஏன்னா அவனை பிச்சக்காரனாகூட ஒத்துக்க மாட்டேன்னுட்டானுங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////டெரர்கும்மி: (எல்லோர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிகிறது. அப்பவும் இவிங்க டிம்மாதான் சார் தெரிவாங்க) /////

தகதகதகன்னு மின்னுற பாபு, டெரர், வைகை மாதிரி ஆளுக நம்மகிட்ட இருக்கும் போது இப்படி சொல்லி இருப்பதை கண்டிக்கிறேன்.....////

நல்லா கேட்டுக்கங்கையா..செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் :-)////////

தகதகதகன்னு மின்னுறன்னுதான் சொல்லி இருக்கேன், இன்னும் என்ன கலர்னு சொல்லல......

வைகை said...

பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட் சூட்டில் அமர்ந்து இருக்கிரார்///

நின்னாதான் பின்னாடி கிழிஞ்சிருக்கது தெரிஞ்சிரும்ல? :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அருண் : அடுத்த ஹண்ட் பார் ஹிண்டில் இந்த அவார்டு பற்றி கேள்விக்கு என்ன க்ளு வைக்கலாம் என்று சிந்தித்தவண்ணம் புன்னகையுடன் இருக்கிறார்.//////

இன்னும் கொஞ்ச நேரத்துல சட்டைய கிழிச்சிக்கிட்டு ஓடுவார்.......

வைகை said...

டெரர் : அதே புன்னகையுடன் (நம்ம பய சார் என்ற) பெருமிதத்துடன் அமர்ந்து இருக்கிறார்.//

அப்ப டெரர் ஒரு இளிச்சவாயனா? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட் சூட்டில் அமர்ந்து இருக்கிரார்///

நின்னாதான் பின்னாடி கிழிஞ்சிருக்கது தெரிஞ்சிரும்ல? :-))/////////

பின்னாடி சீட்டு கிழிஞ்சிருந்தா முன்னாடி எப்படி தெரியும்?

வைகை said...

அருண் : அடுத்த ஹண்ட் பார் ஹிண்டில் இந்த அவார்டு பற்றி கேள்விக்கு என்ன க்ளு வைக்கலாம் என்று சிந்தித்தவண்ணம் புன்னகையுடன் இருக்கிறார்.//

இவன புடிச்சு இன்னும் ஜெயில்ல போடலியா? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பாபு : எத்தனை முயற்சி செய்தும் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை அடக்க முடியாமல் கேமரா மேன் கண் கூசும் அளவு பளீர் பற்களுடன் அமர்ந்து இருக்கிறார்.///////

ஏன்னா பத்து ஃப்ளாஷ் லைட்டு ஒண்ணா அடிச்சாலும் அங்க அதுமட்டும்தான் தெரியும்.......

வைகை said...

ரமேஷ் : வயித்த பசிக்கிது. இங்க சாப்பாடு போடுவாங்களா என்று மனம் கேட்டாலும் முகத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்து இருக்கிறார்.//

அது கண்டிப்பா போடுவாங்கன்னு தெரிஞ்சதும் வந்த மகிழ்ச்சி :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
அருண் : அடுத்த ஹண்ட் பார் ஹிண்டில் இந்த அவார்டு பற்றி கேள்விக்கு என்ன க்ளு வைக்கலாம் என்று சிந்தித்தவண்ணம் புன்னகையுடன் இருக்கிறார்.//

இவன புடிச்சு இன்னும் ஜெயில்ல போடலியா? :-)/////////

ஜெயில்ல இருந்துதான் விரட்டி விட்டிருக்காங்களாம்........

வைகை said...

பாபு : எத்தனை முயற்சி செய்தும் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை அடக்க முடியாமல் கேமரா மேன் கண் கூசும் அளவு பளீர் பற்களுடன் அமர்ந்து இருக்கிறார்.///

அதுலயும் பாதி கொட்டி போச்சாம் :-)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
அருண் : அடுத்த ஹண்ட் பார் ஹிண்டில் இந்த அவார்டு பற்றி கேள்விக்கு என்ன க்ளு வைக்கலாம் என்று சிந்தித்தவண்ணம் புன்னகையுடன் இருக்கிறார்.//

இவன புடிச்சு இன்னும் ஜெயில்ல போடலியா? :-)/////////

ஜெயில்ல இருந்துதான் விரட்டி விட்டிருக்காங்களாம்.......//

அப்ப என்கவுன்ட்டர்ல போட சொல்லுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ் : வயித்த பசிக்கிது. இங்க சாப்பாடு போடுவாங்களா என்று மனம் கேட்டாலும் முகத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்து இருக்கிறார்.//////

அது சைவ சாப்பாடுதான்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே கடலை முட்டாய் 4 பாக்கெட் வாங்கிட்டு வந்திருப்பான்.......

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வைகை said...
பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட் சூட்டில் அமர்ந்து இருக்கிரார்///

நின்னாதான் பின்னாடி கிழிஞ்சிருக்கது தெரிஞ்சிரும்ல? :-))/////////

பின்னாடி சீட்டு கிழிஞ்சிருந்தா முன்னாடி எப்படி தெரியும்//

ஏன்னா நாம முன்னாடிதானே பார்ப்போம்? :-))

வைகை said...

நாகா : தன் சீட்டில் ரைட்டர் நாகா என்று தானே ஒரு போஸ்டரை ஒட்டி விட்டு பின்னர் அமருகிறார்.//

ஒட்டிட்டு அதுமேல உக்காந்தா தெரியாதே? நெத்தியில் ஒட்டிக்க சொல்லவும் :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வைகை said...
பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட் சூட்டில் அமர்ந்து இருக்கிரார்///

நின்னாதான் பின்னாடி கிழிஞ்சிருக்கது தெரிஞ்சிரும்ல? :-))/////////

பின்னாடி சீட்டு கிழிஞ்சிருந்தா முன்னாடி எப்படி தெரியும்//

ஏன்னா நாம முன்னாடிதானே பார்ப்போம்? :-))////////

முன்னாடி பின்னாடி பாத்தாலும் பின்னாடி கிழிஞ்சது முன்னாடி எப்படி தெரியும்....?

வைகை said...

மாணவன் : சைனா மொபைல் வாங்க வந்திருந்த சீன பெண்ணிடம் பேச்சி கொடுத்து கொண்டே மேடையை வேடிக்கை பார்க்கிறார்//

அங்கயுமா? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை : மழைகால தொடரில் மச்சக்காரி என்ற தலைப்பில் பதிவு போடுவது பற்றி சிந்தித்து கொண்டே பாபு போன்ற அதே புன்னகையுடன் அமர்ந்து இருக்கிறார்.///////

எழுத நெனச்சது மச்சக்காரியுடன் மஜா...... பட் நெனச்சதெல்லாம் எழுதிட முடியுமா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் : சைனா மொபைல் வாங்க வந்திருந்த சீன பெண்ணிடம் பேச்சி கொடுத்து கொண்டே மேடையை வேடிக்கை பார்க்கிறார்.//////

என் கடன் வேடிக்கை பார்த்து வெட்டியாய் போவதே.

இப்படிக்கு
மாண்புமிகு மாணவர்

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை : மழைகால தொடரில் மச்சக்காரி என்ற தலைப்பில் பதிவு போடுவது பற்றி சிந்தித்து கொண்டே பாபு போன்ற அதே புன்னகையுடன் அமர்ந்து இருக்கிறார்.///////

எழுத நெனச்சது மச்சக்காரியுடன் மஜா...... பட் நெனச்சதெல்லாம் எழுதிட முடியுமா.....//

ஆகவே மச்சக்காரி கிடைத்தால் தெரிய படுத்தவும் :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாலுமி : இன்று மட்டும் குடிக்காமல் (போய் குடிப்பான்) பார்க்க டீசண்டாக உடை அணிந்து புன்னகையுடன் அமர்ந்து இருக்கிறார். இடையில் அவர் சேர்மேன் கால் வர, வை டா போனை ஸ்டுப்பிட்டு என்று சொல்லி விட்டு விழாவை தொடர்ந்து கவனிக்கிறார்////////

அய்யய்யோ அவன் மப்பில்லேன்னா தெளிவா இருக்க மாட்டானே?

எஸ்.கே said...

கொசக்சியின் வரவை என் கண்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன....

ஜெயந்த் கிருஷ்ணா said...

நன்றி வணக்கம்

ராஜி said...

நிகழ்ச்சியை கண்குளிர கண்டு களித்தோம். இம்புட்டு கூட்டம் வந்திருக்கே. எப்படி சமாளிச்சீங்க? விஐபிகளை எப்படி சேஃப் பண்ணீங்க?

வெங்கட் said...

// பன்னி முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல் அமைதியாக மொபைலை காலில் போட்டு மிதித்து சுக்குனூராக்குகிறார்..... //

ஹா., ஹா., ஹா... க்ளாஸிக்..!

அப்பாதுரை said...

funny.
கொசக்சி - எப்படியெல்லாம் பேர் கண்டுபிடிக்கிறீங்கப்பா!
'ஆயிரம் வாட் பல்ப் ஒளியிலும் டிம்மாத்தான் தெரியும்' மக்கள் வாழ்க!