Monday, October 31, 2011

ஆனைக்கும் பானைக்கும் சரி

முன்குறிப்பு : யானைக்கும் பானைக்கும் சரி அப்படின்னு ஒரு பழமொழி இருக்கிறது நம்ம எல்லோருக்குமே தெரியும். அது எப்படி யானைக்கும் பானைக்கும் சரியாகும் ? அந்தப் பழமொழி எப்படி வந்திருக்கும் ? அதற்கான கற்பனையான காரணம்தான் இந்தக் கதை!

கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில்தான் இந்த மயிர்க்கூச்செரியும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பட்டிக்காடு என்ற ஒரு மாநகரத்தில் மட்பாண்டங்கள் செய்து வியாபாரம் செய்யும் குயவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த நகரத்திலேயே அவருக்கு மட்டும்தான் மட்பாண்டங்கள் செய்யத்தெரியும் என்பதால் அவர் எப்படிப்பட்ட பானைகள், பாத்திரங்கள் செய்தாலும் அவரது திறமையை ஊர்மக்கள் வியந்து பாராட்டி வந்தனர்.

ஒருசமயம் இவரிடம் எண்ணற்ற பானைகள் விற்காமல் தேங்கிவிட்டிருந்தது. அதே நகரத்தில் இத்தனை பானைகளுக்கு தேவை இருக்காது என்பதை உணர்ந்த அவர் இன்னும் சில பானைகளைத் தயாரித்து அயல் தேசங்களில் சென்று விற்றுவிடலாம் என்று முடிவெடுத்தார். அதன்படியே இன்னும் சில பானைகளைத் தயாரித்து தன்னிடமிருந்த அனைத்துப் பானைகளையும் ஒரு மாட்டுவண்டியில் ஏற்றினார். ஆனால் எண்ணற்ற பானைகள் இருந்தபடியால் வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடுகளால் அவற்றை இழுக்க முடியவில்லை. உடனே யானை ஒன்றை விலைக்கு வாங்கி மாட்டிற்குப் பதிலாக யானையைப் பூட்டி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

தொடர்ந்து நான்கு நாட்கள் காடுகள், மலைகள் போன்றவற்றைக் கடந்து ஒரு பாழடைந்த கிராமத்தை அடைந்தார். அந்த கிராமத்தில் இருந்த மக்கள் நாகரீகத்தில் மிகவும் பின்தங்கியிருந்தனர். அவர்களிடம் தண்ணீர் தேக்கி வைக்க , சமைக்க என்று இன்னமும் பானைகளைப் பயன்படுத்தும் பழக்கம் வந்திருக்கவில்லை. அவர்களுக்குப் பானைகளைப் பற்றிய அறிமுகமே இல்லாமலிருந்தது கண்டு வியந்துபோனார். இங்கே பானைகளையும் அவற்றின் பயன்களையும் எடுத்துக்கூறினால் அனேக பானைகளை விற்றுத் தீர்த்துவிடலாம் என்று கருதி பானைகளின் பயன்கள்களைப் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். அவர் நினைத்தது போலவே அவரிடம் இருந்த பாதிக்கும் மேலான பானைகள் அந்தக் கிராமத்தில் விற்றுப்போயிற்று.

அளவில்லாத மகிழ்ச்சியுடன் மீதமிருந்த பானைகளை எடுத்துக்கொண்டு அடுத்த நாட்டினை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். அடுத்த நாட்டில் எல்லா பானைகளையும் விற்றுத் தீர்த்துவிட்டு நாடு திரும்பலாம் என்று நினைத்தபோதுதான் டாலரின் மதிப்பு குறைந்து வருவது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் தாமதித்தால் தான் நஷ்டப்படவேண்டும் என்பதை அறிந்துகொண்டு தன்னிடமிருந்த முருகன் டாலர் உட்பட அனைத்து டாலர்களையும் ரூபாயாக மாற்றி எடுத்துக்கொண்டு தன் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்.

வரும்வழியில் அந்தப் பாழடைந்த கிராமத்தின் வழியாக வந்துகொண்டிருந்தார். அப்பொழுது அந்த கிராம மக்கள் அவரை வழிமறித்து அவர் கொடுத்த பானைகள் அனைத்தும் உடைந்துவிட்டது என்றும் அதற்குத் தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் மிரட்டினர். கீழே விழுந்தால் பானைகள் உடைந்துவிடும் என்று தான் முதலிலேயே சொன்னதாகவும் அதற்கெல்லாம் நஷ்ட ஈடு கொடுக்க முடியாதென்றும் சமாளித்தார் நமது வியாபாரி. ஆனால் மக்களோ “ USER MANUAL " இல் தண்ணீருடன் கீழே போட்டால் உடைந்துவிடும் என்றுதான் இருக்கிறதே ஒழிய வெறும் பானையைக் கீழே போட்டால் உடைந்துவிடுமென்று அதில் இல்லை என்றும் எனவே கண்டிப்பாக நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்றும் வாதிட்டு அவரை அந்த ஊர் நாட்டாமையிடம் அழைத்துச் சென்றனர்.

நாட்டாமையோ ஆலமரம் இருந்தால்தான் தீர்ப்புச் சொல்லுவேன் என்று கூறிக்கொண்டு ஆலமரத்தைத் தேடிக்கொண்டிருந்தார். ஊர் முழுவதும் தேடியும் ஒரு ஆலமரம் கூடக் கிடைக்கவில்லை. எனவே ஆலமர விதை ஒன்றை எடுத்துவந்து ஊரின் முக்கிய இடத்தில் விதைத்துவிட்டு இந்த விதை வளர்ந்து பெரிய மரமான பிறகுதான் இந்த வழக்கிற்குத் தீர்ப்பு வழங்குவேன் என்றாவாரு நடையைக் கட்டினார்.

அவர் நல்ல தீர்ப்பைச் சொல்லுவார் என்று எதிர்பார்த்த நம் வியாபாரிக்கோ சப்பென்று ஆகிவிட்டது. சரி இனியும் தாமதித்தால் மேலும் பிரச்சினைகள் வரலாம் என்று நினைத்துக்கொண்டு தன்னிடமிருந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து ஒவ்வொரு பானைக்குமான விலையைத் திருப்பித்தந்துவிடுவதாகக் கூறினார். ஆனால் அந்தக் கிராமத்தில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்பதால் மக்கள் அதனை வாங்க மறுத்துவிட்டு வேறு ஏதேனும் தருமாறும் தங்களை ஏமாற்ற நினைத்தால் உயிருடன் திரும்பமுடியாதென்றும் மிரட்டினர்.

நீண்ட யோசனைக்குப் பிறகு நமது பானை வியாபாரி தான் வந்திருந்த யானையை அந்தக் கிராமத்து மக்களிடம் ஒப்படைத்துவிட்டு நாடு திரும்பினார். யானையுடன் சென்ற தனது கணவர் தனியாக வருகிறாரே என்ன நேர்ந்தது என்று வினவினாள் அவரது மனைவி. அதற்கு நமது வியாபாரி “ ஆனைக்கும் பானைக்கும் சரியாப் போச்சு!” என்று பதிலளித்தார். அப்பொழுதிலிருந்து “யானைக்கும் பானைக்கும் சரி!“என்ற பழமொழி வழக்கத்திற்கு வந்தது.

பின்குறிப்பு : ”யானைக்கும் பானைக்கும் சரி”ன்ற பழமொழிக்கு நான் விளக்கம் சொல்லுறேன் பேர்வழினு இந்தக் கதைய வெளில சொல்லிறாதீங்க. அப்புறம் ஏதாச்சும் பிரச்சினைனா நான் பொறுப்பில்ல.இது முழுக்க முழுக்க கற்பனை. வரலாற்று நிகழ்வல்ல. நன்றி வணக்கம்!

இந்தப் பழமொழிக்கான உண்மையான கதை நம்ம ஜெய்சங்கர் அண்ணன் அவர்கள் கீழ பின்னூட்டத்துல சொல்லிருக்கார். அது என்னன்னா

ஒரு நாள் பானை வியாபாரி கல்லெடுத்து யானையை அடிக்க யானை செத்துப்போயிடுச்சு
யானைப்பாகன் தனக்கு அந்த யானை தான் வேணும்னு சொன்னான். புது யானைக்கு ஒத்துக்கலை

ஜட்ஜ் என்ன பண்ணினாருன்னா பானை வியாபாரிய வீட்டு கதவோரம் உள்ள எல்லா பானையும் அடுக்க சொன்னார்
யானை வியாபாரி வந்து கதவ தொறந்த வுடனே எல்லா பானையும் உடைஞ்சுடுச்சு
ஜட்ஜ் சொன்னார் யானைக்கும் பானைக்கும் சரின்னு.

இதன்மூலம் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்,

32 comments:

Madhavan Srinivasagopalan said...

எலேய் சின்ராசு.. அருவாள ரெடி பண்ணுடா..
இன்னைக்கு செல்வா சரியா மாட்டிக்கிட்டான்..

மொதோ வெட்டு..

Madhavan Srinivasagopalan said...

முட்டாள் வியாபாரி..
வேற வழியில வந்திருக்காமில்ல.. அதென்ன நாலு அடிப் பாதையா ?

செல்வா said...

//வேற வழியில வந்திருக்காமில்ல.. அதென்ன நாலு அடிப் பாதையா ?//

அதான ..

முத்தரசு said...

முடியலை....

முத்தரசு said...

ஏன் ஏன் இந்த கொல வெறி

முத்தரசு said...

சர்தான்.., டெரர் கும்மிக்கும் கோமாளி செல்வாவுக்கும் சரி தான். சரியாய் இருந்த சரிதான்

வெளங்காதவன்™ said...

எலேய் செல்வா...

ஓடிப்போயிரு தங்கம்....

ரெண்டு நாளா கொலை வெறில இருக்கேன்....

செல்வா said...

//சர்தான்.., டெரர் கும்மிக்கும் கோமாளி செல்வாவுக்கும் சரி தான். சரியாய் இருந்த சரிதான்//

இது வேறையா ? :))

செல்வா said...

//எலேய் செல்வா...

ஓடிப்போயிரு தங்கம்....

ரெண்டு நாளா கொலை வெறில இருக்கேன்....//

எதுக்கு தேடுறீங்க ? ஏதாச்சும் விசேசம் இருக்குதா ?

Unknown said...

கதை அருமை செல்லு(செல்வாவ செல்லமா சொன்னா அது செல்லு)

செல்வா said...

//// கதை அருமை செல்லு(செல்வாவ செல்லமா சொன்னா அது செல்லு)//

செல்லா ? :((

Unknown said...

ஒரு ஊர்ல பானை வியாபாரியும் யானை பாகனும் இருந்தாங்க

ஒரு நாள் பானை வியாபாரி கல்லெடுத்து யானையை அடிக்க யானை செத்துப்போயிடுச்சு
யானைப்பாகன் தனக்கு அந்த யானை தான் வேணும்னு சொன்னான். புது யானைக்கு ஒத்துக்கலை
ஜட்ஜ் என்ன பண்ணினாருன்னா பானை வியாபாரிய வீட்டு கதவோரம் உள்ள எல்லா பானையும் அடுக்க சொன்னார்
யானை வியாபாரி வந்து கதவ தொறந்த வுடனே எல்லா பானையும் உடைஞ்சுடுச்சு
ஜட்ஜ் சொன்னார் யானைக்கும் பானைக்கும் சரின்னு

வைகை said...

பான ரொம்ப உடைஞ்சிருக்கே? :)

அருண் பிரசாத் said...

பானை மட்டும்தான் உடைஞ்சி இருக்கா?
சட்டி உடையலையானு கேட்டேன்...

வைகை said...

அருண் பிரசாத் said...
பானை மட்டும்தான் உடைஞ்சி இருக்கா?


சட்டி உடையலையானு கேட்டேன்..//

அப்ப அதெல்லாம் இல்லையாம் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பானைக்கு யானைன்னா... பூனைக்கு என்ன?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
பானைக்கு யானைன்னா... பூனைக்கு என்ன?//

பூனைக்கு நரி :)

செல்வா said...

//பூனைக்கு நரி :)

//

பனங்காட்டு நரியா ?

நாய் நக்ஸ் said...

வள் ....வள் ....வள் ....

வெளங்காதவன்™ said...

//கோமாளி செல்வா said...

//எலேய் செல்வா...

ஓடிப்போயிரு தங்கம்....

ரெண்டு நாளா கொலை வெறில இருக்கேன்....//

எதுக்கு தேடுறீங்க ? ஏதாச்சும் விசேசம் இருக்குதா ?
////

ஆங்... என்னங்க?
#சிக்கினா சங்கு...

சந்துரூ said...

//முருகன் டாலர் உட்பட அனைத்து டாலர்களையும் ரூபாயாக மாற்றி எடுத்துக்கொண்டு தன் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்.// முடியல....

rajamelaiyur said...

//Madhavan Srinivasagopalan said...

எலேய் சின்ராசு.. அருவாள ரெடி பண்ணுடா..
இன்னைக்கு செல்வா சரியா மாட்டிக்கிட்டான்..

//

இதோ நானும் வரேன்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

விஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹையோ சூப்பரு கத

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லா எழுதிருக்கான் பாரு ஏர்ல பூட்டின எருமை மாதிரி

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Online Works For All said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html//

காந்தி எப்போ செத்தாரு? ஏன்யா விளம்பரம் போட்டு சாவடிக்கிறீங்க?

Yoga.S. said...

அதெப்புடிங்க ஒங்களுக்கு மட்டும் இப்புடீல்லாம் தோணுது?

நவின் குமார் said...

முட்டா பய வியாபாரி நானா இருந்தா எல்லாருக்கும் travellers செக் கொடுத்துட்டு எஸ்கேப் ஆகி இருப்பேன்

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல ஆராய்ச்சி

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.