Friday, August 17, 2012

விஷ்ணு - ஒலகப்பட விமர்சனம்!!!

1995 ஆம் வருஷம் SAC இயக்கத்தில் இளைய தளபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த படம். இப்ப என்ன எழவுக்கு விமர்சனம்ன்னா கேக்குறீங்க? இப்போ பழைய படத்துக்கு விமர்சனம் எழுதி நம்ம பிளாக் படிக்க வர்றவங்களை கொலையா கொன்னு அனுப்பனும்ன்னு ஒரு விதியாமா? அப்பத்தான் பதிவர்ன்னு ஒத்துக்குவாங்கலாமே?
 
அதான் நாமளும் பெரிய பிரபல பதிவர்தான. என்ன படத்துக்கு விமர்சனம் எழுதலாம்ன்னு மல்லாக்க படுத்து யோசிக்கும்போது ஒரு இசை சேனல்ல சின்ன டாக்டர் தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை புரோட்டான்னு பாடிக்கிட்டு இருந்தார். முட்டைன்னு என்னனே தெரியாத என்னை போல சைவ பிரியனுக்கு அந்த பாட்டு வித்தியாசமா பட்டது. அதான் அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுறேன். ஆமா முட்டைன்னா என்னது பாஸ்? டெரர் ஸ்கூல் எக்ஸாம்ல எல்லாம் வாங்குவானே அதான? அதுல எப்படி பாஸ் புரோட்டா செய்ய முடியும்?

 
ஹீரோ விஷ்ணு. அவனோட அப்பா பெரிய பணக்காரன். பாரின்ல படிக்கிற பையன் அப்பா கூட இருக்கனுமேன்னு இந்தியா வரார். அப்பவோ உன்னை கொல்ல ஒரு பக்கி திரியுது நீ இங்க இருக்காத பாரினுக்கே போயிடுன்னு சொல்றார். அதனால ஹீரோ வீட்டை விட்டு ஓடி ச்சீ திருட்டு லாரி ஏறி போறார். அதே லாரில ஹீரோயின் சங்கவியும் வர்றாங்க. இந்த அம்மணி லூசா,அரைக்கிறுக்கா இல்லை அந்தமாதிரி நடிக்குதான்னே தெரியாத அளவுக்கு வித்தியாசமா நடிச்சிருக்காங்க.

ஹீரோயின்தான் அப்படின்னா அவங்க தாத்தா அந்த பொண்ணை விட ரொம்ப மோசம். அப்புறம் என்ன ஹீரோயின் அம்மனி கேட்டதுக்காக ஒரு இத்துப்போன ரெண்டு ரூபாய் புரோட்டாவுக்காக பல்லாயிரம்  ரூபாய் பொருள்களை எல்லாம் உடைச்சு சண்டை போடுறார். அந்த கருமம் பிடிச்ச புரோட்டாவுக்கு ஒரு பாட்டு ஒரு பைட்டு போட்டு நம்ம மூஞ்சில சால்னா ஊத்துறாங்க.
 
ஆனாலும் தொட்டபெட்டா ரோட்டுமேல முட்டை புரோட்டா பாட்டுல இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்ன்னு வேற போட்டாங்க. அந்த பாட்டுல பொண்ணு ஒண்ணு வேற பாடுச்சு. பெண் குரலிலும் விஜய் சூப்பரா பாடிருக்காரு. கமலுக்கு முன்னாடியே பெண் குரலில் பாடியவர் விஜய் மட்டுமே. கமல் பாடினா மட்டும் கொண்டாடும் சினிமா உலகம் சின்ன வயசில் விஜய் பெண் குரலில் பாடியதை கண்டுக்காதது வருத்தமே.

ஹீரோயினோட தாத்தா ஹீரோவை இவனை கொல்லணும்ன்னு நினைச்சவன்கிட்டியே சேர்த்து விடுறாரு. அப்புறம் யாரு இவனை கொலை பண்ணனும்ன்னு நினைச்சாங்களோ அவரோட வளர்ப்பு பையனாவே போய் சேர்ந்து அவரையே அவர் கொல்றதுக்கு பிட் ஆகுறார். (சான்சே இல்லை. சூப்பர் ஐடியா).

கடைசில என்ன நடந்துச்சு உண்மையில் நடந்தது என்ன. தயவு செய்து KTV யில் 1987 வது தடவை சூப்பர் ஹிட் இரவுக்காட்சியில் போடும்போது பார்த்துக்கொள்ளவும். இங்கு கதை சொன்னா அப்புறம் யாரும் படத்தை பார்க்க மாட்டீங்க.

இயக்குனர் பாராட்டு பெறும் இடங்கள்:
 
- தியேட்டர் டிக்கெட் 10 ரூபாய் இருக்கும்போதே இந்த படத்தை ரிலீஸ் பண்ணியது. இப்ப இந்த படத்தை ரிலீஸ் பண்ணிருந்தா இந்த மொக்கை படத்துக்கு 120 ரூபாய் செலவாயிருக்கும்.

- விஜய் படத்தில் என்ன இருக்கும்ன்னு எதிர்பார்த்து வந்தவர்களை திருப்பதி படுத்தி அனுப்பியது(மீன் பிடிக்கும் சீன்)

தியேட்டர் ஆப்பரேட்டர் பாராட்டு பெறும் இடங்கள்:
 
- இந்த படம் எத்தனை நாள் ஒடுச்சுன்னு தெரியலை. இப்ப மாதிரி அப்போ படத்தை ஆன் பண்ணிவிட்டு ரெஸ்ட் எடுக்க முடியாது. படம் முடியிற வரைக்கும் அங்கதான் இருக்கணும். படம் ஒரு நாள் ஓடிருந்தாலே நாலு தடவை இந்த படத்தை பார்த்திருக்கணும். அந்த மன தைரியத்துக்காக தியேட்டர் ஆப்பரேட்டர் பாராட்டு பெறுகிறார்.

தியேட்டர் கேண்டீன் நடத்துபவர் பாராட்டு பெறும் இடங்கள்:

- இந்த படத்துக்கும் கூட்டம் வரும்ன்னு நினைச்சு நூறு போண்டா,நூறு முறுக்கு வாங்கி வச்சு கேண்டின் நடத்தினதற்க்காக இவரும்  பாராட்டு பெறுகிறார்.

எங்க பக்கத்து வீட்டு சேகர் மாமா பாராட்டு பெறும் இடங்கள்:

- இந்த படத்தையும் தனியா பார்க்காம அவரோட லவ்வரோட போயி பார்த்துட்டு வந்திட்டு அவரோட காதல் பிரியாம இருந்ததற்காக இவரும் பாராட்டு பெறுகிறார்.

இயக்குனரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்:

- இந்த படத்தை மறுபடியும் ரீமேக் பண்ணுவீர்களா?
 
- படத்துல ஹீரோ பேரு விஷ்ணுன்னு சொன்னிங்க, ஆனா பாட்டு பாடும்போது இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்னு போடறீங்க? இந்த இடத்துல லாஜிக் ஓட்டையே இருக்கு!

- தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை புரோட்டா பாட்டுல புரோட்டா மட்டும்தான் காட்டுனீங்க. முட்டையை காட்டவே இல்லை. இங்கு லாஜிக் மிஸ்டேக் ஏன் சார்?

- அவ்ளோ பெரிய பணக்காரன் ஏன் சார் திருட்டு லாரி ஏறி வரணும்? கால்டாக்சி புக் பண்ணி வரலாம்ல?

- இந்த படத்துல விஜய்க்கு ஏன் சார் மாமியாரே இல்லை?

- SS சந்திரனை ஏன் சார் வில்லனா போட்டீங்க? SS சந்திரன்னா யார் என்ன கேட்டாலும் SS ன்னுதான் சொல்லணும். அப்படின்னா ஹீரோ அவருக்கு தேவையானைதை கேட்டிருக்கலாமே. SS ன்னு சொல்லிருந்தா படமே முடிஞ்சிருக்குமே. இது பயங்கர லாஜிக் மிஸ்டேக்.

பிடிச்ச வசனங்கள்:

- கொலை கொலையாம் முந்திரிக்கா. பவர் ஸ்டார் அடிச்சா கத்திரிக்கா(பவர் ஸ்டார் டயலாக்)

- நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி(பாட்ஷா)

பிடிச்ச வசனங்கள் அப்டின்னுதானே சொன்னேன். இந்த படத்துலைன்னா சொன்னேன். பிம்பிளிக்கு பிளாப்பி.

எதுக்கு ஒலகப்பட விமர்சனம்ன்னு போட்டுருக்குன்னு பார்க்கிறீங்களா. ஹீரோ பாரின்ல இருந்துதான வராரு. அதான்!!
 

எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க்: ஏற்கனவே அந்த வருசத்துலையே விமர்சனம் போட்டிருப்பாங்க. திருப்பி மறுபடியும் விமர்சனம் போட மாட்டங்கன்னு நினைக்கிறேன்.

டிஸ்கி: இது டெரர் கும்மியின் 125 வது பதிவு. தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் அன்பு நண்பர்களுக்கு நன்றி. போன வருடம் விளையாண்ட Hunt for Hint டின் அடுத்த பாகம் விரைவில் டெரர் கும்மியில் வர போகிறது. விளையாட ஆர் யூ ரெடி?