ரமேஷ்: ஜெயந்த் ஏண்டா சோகமா இருக்க?
ஜெயந்த்: பதிவர் சந்திப்புல என்னை ஏமாத்திட்டாங்க?
ரமேஷ்: அய்யயோ என்ன ஆச்சு?
ஜெயந்த்: லிமிடெட் மீல்ஸ் போடுவாங்க. ஒரு பத்து பதினஞ்சு லிமிடெட் மீல்ஸ் சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்..
ரமேஷ்: அப்போ சாப்பாடு போடலியா?
ஜெயந்த்: போட்டாங்க. ஆனா அன்லிமிடெட் மீல்ஸ் போட்டாங்க. என்னால ஒரே ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் தான் சாப்பிட முடிஞ்சது.
ரமேஷ்: @@@@@@!!!!
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
பாபு: டேய் புது லேப்டாப் வாங்கணும் என்ன வாங்கலாம்?
ரமேஷ்: acer இல்லைன்னா dell வாங்கு..
பாபு: சரி. நம்ம ஊர்ல அடிக்கடி கரண்ட் போகுது. லேப்டாப்புக்கு என்ன UPS வாங்கனும்?
ரமேஷ்: கர். தூ....
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
Hi,
Im Praba. I reached India. Today evening Ill meet you#SMS
ரமேஷ்: எனக்குத்தான் பிரபான்னு யாரையுமே தெரியாதே. யார் இது அதுவும் வெளிநாட்டுல இருந்து வந்திருக்கு. போன் பண்ணுவோம். அப்படியே கடலை போடலாம்.
போனில் ரமேஷ்: ஹலோ
எதிர்முனை: மாப்ளே நான் பிரபாகர் பேசுறேன். US ல இருந்து இந்தியா வந்துட்டேன். evening மீட் பண்ணலாம்.
ரமேஷ்: நாதாரி. மெசேஜ் அனுப்பும்போது பிரபாகரன்னு போட மாட்டியா. கொஞ்ச நேரத்துல மனசுக்குள்ள பறந்த பட்டாம்பூச்சிய விஷம் வச்சு கொன்னுட்டியே
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
டெரர் கும்மிக்காக
சிரிப்புபோலீஸ் பஸ்சில் இருந்து சுட்டவர்
அருண்பிரசாத்
