Saturday, December 25, 2010

கலாட்டாவாய் ஒரு காலம்....!

திமிரு ஜாஸ்திதான் இப்பவும் அப்படிதான் ஆனா காலேஜ் படிக்கும் போது சொல்லவே வேணாம் ஹி ஹி ஹி நடந்ததெல்லாம் காமெடி ஆன கொடுக்குற பில்டப்பு உங்கவீட்டு இல்ல எங்க வீட்டு இல்ல ...

வடிவேலு மாதிரி கெத்தா நிப்போம்ல....ஆன உள்ள வெட வெடன்னு ஆடும்...அதுவும் அந்த கடைசி மேஜர் பிராக்டிக்கல்ல நடந்த கூத்தும் பிசிக்ஸ் பிராக்டிகல் நடந்த கூத்தும்....சிரிச்சு மாள முடியாது மக்கா

சால்ட் டைட்ரேசன் ஆரம்பிச்சு ஒரு 20 நிமிசத்துல என் மாப்ள ஜாபர் பேப்பர கொடுத்துட்டு போய்ட்டான்.. எல்லாம் முடிச்சு கிழிச்சுபுட்டு (எங்க போகும் எதுத்தாப்ல இருக்குற பக்ஸ் கடையில போயி தம்ம போடத்தான்).....நான் ரொம்ப போராடி பிராக்டிகல் பண்றேன் அங்கிட்டு பர்ஸ்ட் மார்க் எடுக்குற கவிதா, காளிதாஸ் எல்லாம் திணறிகிட்டு இருக்குற சமையத்துல ஜாபர் மட்டும் எப்படி??? எனக்கு ஒரே ஆச்சர்யம்தான்...

ஜாபர் யாரு தெரியுமா? அவன் அ.தி.மு.க ஜெ. பேரவை தலைவரா இருந்தான் அப்பவே! அப்பவேன்னா என்ன, 1947 என்னமோ நம்மல அந்த காலத்து ஆளு மாறி பாக்குறீக ஏப்பு?  1996 தான்.... 

ஒரு தடவை கிளாஸ்ல நோட்ஸ் கொடுத்துட்டு இருந்தாரு புரபசர்... எல்லோரும் எழுதிட்டு இருந்தோம் ...டக்குனு நிறுத்திபுட்டு... ஜாபர் எந்திரிச்சு படி நான் கொடுத்த நோட்சன்னு சொல்றாரு புரபசரு...ங்கொய்யால ஜாபர் என் நோட்டை புடுங்குறான் படிக்க..கடைசி பெஞ்ச்லதான் உக்காந்து இருப்போமா சோ.. புரபசர் கவனிக்கவே இல்ல...

நான் என் நோட்ட கொடுத்துட்டு அவன் ஏன் என் நோட்ட புடுங்குனான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்...அப்போ அவன் நோட்டை சைடு கண்ல பாத்த நான் மயக்கம்போட்டு விழாத குறைதாங்க...

புரபசர் நோட்ஸ் கொடுக்க கொடுக்க.. இந்த நாதரி மாப்ஸ்.. மூணு சுழி ’ண’ போட்டு அத ஃபினிஷ் பண்ணாம அப்படியே சுழிச்சு சுழிச்சு கிறுக்கிகிட்டு இருக்கான். நோட்ஸ் எழுதுற மாதிரியே ஒரு பில்டப்......கொடுத்து இருக்கு பயபுள்ள...

அப்புறமா கிளாஸ் முடிஞ்சி என்ன மச்சி ஏன் இப்படி ’ண’ போட்டு சுழிச்சுகிட்டே இருக்கனு  கேட்டதுக்கு, சொன்னா பாருங்க ஒரு பதிலு...எனக்கு இங்கிலிஸ்னா பிடிக்காது மாப்ள ... அதான் பழிவாங்கினேன் புரபசரன்னு ....ஹி ஹி  ஹி அப்படிப்பட்ட ஜாபரு..பக்காவா ப்ராக்டிகல் முடிச்சுட்டு போய்ட்டான்னா நீங்களே சொல்லுங்க எப்டிங்க சாத்தியம்.....?

கொஞ்ச நேரத்துல ...திடீர்னு சத்தம் ....இன் ஆர்கானிக் புரபசர் ஆழ்வாரப்பன் அடிச்சு புடிச்சு கத்திகிட்டு வர்றாரு... எங்கயா ஜாபரு? ஜாபரு எங்க? நாதரிப்பயலுவலுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து மேனேஜ்மெண்ட் என்ன வேலைய விட்டுத்தூக்க போவுதுன்னு ஒரே புலம்பல்....


என்னதான் பிரச்சினைன்னு பாத்தா.. ஆக்சுவலா ரெண்டு சால்ட் வாங்கி பிராக்டிகல் செய்யணும்...... ஒண்ணோட ஒண்ணு கம்பேர் பண்ணி ரிசல்ட் எழுதணும்...

ஆனா நம்ம ஜாபர் ரெண்டாவது சால்ட்டே வாங்கல...........?????????????????????????


ஆனா ரிசல்ட் எழுதி கொடுத்துட்டு போய்ட்டான் அதன் இப்போ பிரச்சினை...! சரி எப்படி ரிசல்ட் எழுதினான்? ஹி ஹி ஹி பயபுள்ள எப்டி பிராக்டிகல் செய்யும்... தெரிஞ்சாத்தானே? அதான் கொண்டு வந்த பிட்ட எடுத்து பொறுப்பா எழுதி கொடுத்துட்டு போய்ட்டான்....


ஒரு பேச்சுக்காகவாச்சும் இன்னொரு சால்ட் வாங்கி இருக்கலாம்ல....அதுவும் செய்யல அவனுக்குத்தான் எந்த மேஜர்ல படிக்கிறோம்னே கவலையில்லையே... 

அதுக்கப்புறம் லேப் அட்டென்டர விட்டு இவன கெஞ்சி கூட்டிட்டு வந்ததும் திமிரா ஜாபர் வரமாட்டேன்னு அடம் பிடிச்சதும் அவன் கெஞ்சி கூப்பிட்டுட்டு வந்ததும் வேற கதை! (மேனேஜ்மென்ட் காலேஜ்ல ரிசல்ட் லோவான கரஸ்பாண்டன்ட் கடுப்பாயிடுவார் அதான்!)

ஆனா அதுக்கு ஜாபர் நைட் ட்ரீட் கொடுத்ததுதான் அலும்போட உச்சம் மக்கா!

இது எல்லாம் முடிஞ்சு ஒரு 3 வருசம் கழிச்சு......

நான் சிங்கப்பூர் போயிருந்தப்ப தேக்காவுல காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ணினோம்....அப்போ ஜாபரும் வந்தான்.....ஒரு 13 பேரு அப்டி இப்டி சொல்லி சிரிச்சு பேசிகிட்டு இருந்தப்பா... ஜாபர் சொன்னான்..

' வேலை கொஞ்சம் கஷ்டமா இருக்கு மாப்ள.....என்ன பண்றது எம்புட்டு கஷ்டப்பட்டு நாம எல்லாம் படிச்சோம்.... அதுவும் நான் நைட்டு எல்லாம் கண்ணு முழிச்சு ( அச்சோ ஏமாந்து போயிடாதீங்க! 10 மணிக்கு மேல ராத்திரி முழிக்கவே மாட்டான்) ம்ம்ம்ம்  எல்லாம் செஞ்சு என்ன பிரோயசனம் மாப்ள...'

சொல்லிகிட்டு இருக்கும் போதே ... என்னது நீ கஷ்டப்பட்டு படிச்சியா எருமை மாடேன்னு எல்லோரும் மொத்து மொத்துனு மொத்தின பின்னாலும் சொல்றான்...

அடுத்த எலக்சன் அம்மாதான் .. வரும்... நான் ஒரு காலேஜே கட்டுவேன் மாப்ஸ்னு.....


ஒரு வேளை இன்ன நேரம் கட்டியிருந்தாலும் கட்டியிருப்பான்..ஆன அம்மா ஆட்சி போயிதான் ரொம்ப நாளாச்சே.......

ரோசிக்கணும்..... மக்கள்ஸ்!

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா!

டெரர் கும்மிக்காக 
தேவா. S

58 comments:

பெசொவி said...

vadai

பெசொவி said...

இப்படி நான் ப்ரீயா இருக்கற அன்னிக்கு போஸ்ட் போட்டா, வடை எனக்குத் தான்!

பெசொவி said...

//என்னதான் பிரச்சினைன்னு பாத்தா.. ஆக்சுவலா ரெண்டு சால்ட் வாங்கி பிராக்டிகல் செய்யணும்...... ஒண்ணோட ஒண்ணு கம்பேர் பண்ணி ரிசல் எழுதணும்...
ஆனா நம்ம ஜாபர் ரெண்டாவது சால்ட்டே வாங்கல...........?????????????????????????//


ஜாபரைக் கேட்டேன், "ஏன் இன்னொரு சால்ட் வாங்கல?"ன்னு, அதுக்கு "சாரிப்பா, எனக்கு பி.பீ இருக்கு. ஒரு உப்பே கஷ்டம், எப்படி இன்னொரு சால்டையும் வாங்கிக்கரது"ன்னு கேக்கறான்.

vinu said...

iiiiiiii me 4thu

dheva said...

பி.எஸ்.வி @ சட்னி வேணுமா?

karthikkumar said...

அப்படிப்பட்ட ஜாபரு..பக்காவா ப்ராக்டிகல் முடிச்சுட்டு போய்ட்டான்னா நீங்களே சொல்லுங்க எப்டிங்க சாத்தியம்..///
மனமிருந்தால் மார்க்கமுண்டு.... :)

dheva said...

மனமிருந்தால் மார்க்கமுண்டு.... :)//

அவனுக்கு மனமும் இல்ல மானமும் இல்ல

logu.. said...

ada athukulla 7 pera?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தப் பிராக்டிகல்ச நெனச்சாவே பயமா இருக்குப்பா, அதும் சால்ட்டுன்னா எனக்கு கடுப்பாயிடும்!

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்தப் பிராக்டிகல்ச நெனச்சாவே பயமா இருக்குப்பா, அதும் சால்ட்டுன்னா எனக்கு கடுப்பாயிடும்!///

காலேஜெல்லாம் போனா இப்படிதான்... யாரு சொன்னா கேக்குறா....:)

dheva said...

இந்தப் பிராக்டிகல்ச நெனச்சாவே பயமா இருக்குப்பா, அதும் சால்ட்டுன்னா எனக்கு கடுப்பாயிடும்!//



சால்ட் போட்டுக்கறதே இல்லையா ஊர்ஸ் நீ???????

logu.. said...

\\ஹி ஹி ஹி பயபுல்ல எப்டி பிராக்டிகல் செய்யும்... தெரிஞ்சத்தானே? அதான் கொண்டு வந்த பிட்ட எடுத்து பொறுப்பா எழுதி கொடுத்துட்டு போய்ட்டான்...\\


Ada nammalu..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்தப் பிராக்டிகல்ச நெனச்சாவே பயமா இருக்குப்பா, அதும் சால்ட்டுன்னா எனக்கு கடுப்பாயிடும்!///

காலேஜெல்லாம் போனா இப்படிதான்... யாரு சொன்னா கேக்குறா....:)/////

அப்புறம் பிகரு, கடலை, கருமாந்திரம்லாம் எப்ப பார்க்குறது?

dheva said...

அட அதுகுல்ல 7 பெர?//

லோகு @ இத கேக்கவா இம்புட்டு தூரம் வந்தீக???????????????????????????

dheva said...

அப்புறம் பிகரு, கடலை, கருமாந்திரம்லாம் எப்ப பார்க்குறது?//

பிகரு..........கடலை...........எம்புட்டு நாளாச்சு இப்டி எல்லாம் பேசி ..மாப்ஸ் ஹா ஹா..ஹா ரியலி மென்டலி ரிலாக்ஸ்ட் ஊர்ஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// dheva said...
இந்தப் பிராக்டிகல்ச நெனச்சாவே பயமா இருக்குப்பா, அதும் சால்ட்டுன்னா எனக்கு கடுப்பாயிடும்!//



சால்ட் போட்டுக்கறதே இல்லையா ஊர்ஸ் நீ???????//////

அத பர்ஸ்ட்டு இயர்ல தலைமுழுகுனதுதான்...!

logu.. said...

hayyoo..thala..

nammalunga evlo speeda irukainganu solla vanthenga..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////dheva said...
அப்புறம் பிகரு, கடலை, கருமாந்திரம்லாம் எப்ப பார்க்குறது?//

பிகரு..........கடலை...........எம்புட்டு நாளாச்சு இப்டி எல்லாம் பேசி ..மாப்ஸ் ஹா ஹா..ஹா ரியலி மென்டலி ரிலாக்ஸ்ட் ஊர்ஸ்!/////

அதெல்லாம் ஒரு காலம் ஊர்ஸ்....
அப்புறம் ராகிங்க இப்போ நெனச்சா ஜாலியா இருக்கு......!

dheva said...

nammalunga evlo speeda irukainganu solla vanthenga..///



logu @ அப்போ போஸ்ட் பத்தி ஒண்ணுமே இல்லையா சொல்றதுக்கு ஹா ஹா..ஹா!

செல்வா said...

20

dheva said...

உன்ன யாரு ரேக்கிங் பண்ணினா ஊர்ஸ்...@ நீ ராஜா காலேஜ்தானே.....?

logu.. said...

\\ logu.. said...
\\ஹி ஹி ஹி பயபுல்ல எப்டி பிராக்டிகல் செய்யும்... தெரிஞ்சத்தானே? அதான் கொண்டு வந்த பிட்ட எடுத்து பொறுப்பா எழுதி கொடுத்துட்டு போய்ட்டான்...\\


Ada nammalu..\\

athan sollitomla..
apram enna questeeeeeeeenu?

logu.. said...

\\ பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்தப் பிராக்டிகல்ச நெனச்சாவே பயமா இருக்குப்பா, அதும் சால்ட்டுன்னா எனக்கு கடுப்பாயிடும்!///

காலேஜெல்லாம் போனா இப்படிதான்... யாரு சொன்னா கேக்குறா....:)/////

அப்புறம் பிகரு, கடலை, கருமாந்திரம்லாம் எப்ப பார்க்குறது?\\

Athan ippavum rotla pogumpothu appappo vaikulla eee illa.. oru anakondave poguthey..
athuku peru ennavam?

செல்வா said...

//.அப்போ அவன் நோட்டை சைடு கண்ல பாத்த நான் மயக்கம்போட்டு விழாத குறைதாங்க...///

ஹி ஹி ஹி ... அது படிக்கிற புள்ளைக்கு அழகு .!

logu.. said...

\\
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
vadai\\

Addressavathu kuduthutu ponga sir..

vadai attaiya podonum..
Ragasiyama enaku mail pannunga..
inga irukurathellam attaiya podrathula namla vida expertunga.

karthikkumar said...

@ பன்னிகுட்டி
அதுக்குதான் காலேஜ் பக்கத்துல பொட்டிகட வெச்சிக்கணும்... வியாபாரமும் ஆச்சு , சைட் அடிச்சா மாதிரியும் ஆச்சுல்ல ...)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////dheva said...
உன்ன யாரு ரேக்கிங் பண்ணினா ஊர்ஸ்...@ நீ ராஜா காலேஜ்தானே.....?////

நான் சென்னைல படிச்சேன் மாப்ஸ், ராகிங்க்லாம் பட்டைய கெளப்பிட்டானுங்க, நாங்களும் சும்மா பின்னி பெடலெடுத்தோம்ல?

karthikkumar said...

Athan ippavum rotla pogumpothu appappo vaikulla eee illa.. oru anakondave poguthey..
athuku peru ennavam?///
THAT IS CALLED JOLLUUUUUU......

logu.. said...

\\நான் சென்னைல படிச்சேன் மாப்ஸ், ராகிங்க்லாம் பட்டைய கெளப்பிட்டானுங்க, நாங்களும் சும்மா பின்னி பெடலெடுத்தோம்ல?\\

Epdinga sir..
Adi vangi hospitalla pedaledutheengala?

karthikkumar said...

@ PANNIKUTTI

நான் சென்னைல படிச்சேன் மாப்ஸ், ராகிங்க்லாம் பட்டைய கெளப்பிட்டானுங்க, நாங்களும் சும்மா பின்னி பெடலெடுத்தோம்ல?/
பின்றதுன்னா ஜடைய பின்றதா, பெடலேடுக்கரதுன்னா சைக்கிள் பெடல கைல எடுப்பீங்களா. டவுட்டு நெம்பர் 10257

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////logu.. said...
\\ பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்தப் பிராக்டிகல்ச நெனச்சாவே பயமா இருக்குப்பா, அதும் சால்ட்டுன்னா எனக்கு கடுப்பாயிடும்!///

காலேஜெல்லாம் போனா இப்படிதான்... யாரு சொன்னா கேக்குறா....:)/////

அப்புறம் பிகரு, கடலை, கருமாந்திரம்லாம் எப்ப பார்க்குறது?\\

Athan ippavum rotla pogumpothu appappo vaikulla eee illa.. oru anakondave poguthey..
athuku peru ennavam?/////

என்னதான் ரோட்ல சூப்பர் பிகர் போனாலும் காலேஜ் மாதிரி பாதுகாப்பா சைட்டடிக்க கடலை போட முடியுமாண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
@ பன்னிகுட்டி
அதுக்குதான் காலேஜ் பக்கத்துல பொட்டிகட வெச்சிக்கணும்... வியாபாரமும் ஆச்சு , சைட் அடிச்சா மாதிரியும் ஆச்சுல்ல ...)////


ம்மூதேவி....காலேஜ் பக்கத்துல கடை போட்டா, காதலும் வராது வியாபாரமும் வராது, கடன் தான் வரும்.....!

logu.. said...

\\என்னதான் ரோட்ல சூப்பர் பிகர் போனாலும் காலேஜ் மாதிரி பாதுகாப்பா சைட்டடிக்க கடலை போட முடியுமாண்ணே?\\


agggaaa... ingathan nikkareenganne..
athukaga unarchivasapattu ippapoi admission ketratheenga..

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 27
/////dheva said...
உன்ன யாரு ரேக்கிங் பண்ணினா ஊர்ஸ்...@ நீ ராஜா காலேஜ்தானே.....?////

நான் சென்னைல படிச்சேன் மாப்ஸ், ராகிங்க்லாம் பட்டைய கெளப்பிட்டானுங்க, நாங்களும் சும்மா பின்னி பெடலெடுத்தோம்ல?///

இங்க வந்து சாட் பண்றீங்க இந்த தேவாவுக்கு எப்போ பார்த்தாலும் சாட் தான்

logu.. said...

\\நான் சென்னைல படிச்சேன் மாப்ஸ், ராகிங்க்லாம் பட்டைய கெளப்பிட்டானுங்க, நாங்களும் சும்மா பின்னி பெடலெடுத்தோம்ல?/
பின்றதுன்னா ஜடைய பின்றதா, பெடலேடுக்கரதுன்னா சைக்கிள் பெடல கைல எடுப்பீங்களா. டவுட்டு நெம்பர் 10257\\

mm.. enakkumthan.. 10258 ah vachukonga.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
@ PANNIKUTTI

நான் சென்னைல படிச்சேன் மாப்ஸ், ராகிங்க்லாம் பட்டைய கெளப்பிட்டானுங்க, நாங்களும் சும்மா பின்னி பெடலெடுத்தோம்ல?/
பின்றதுன்னா ஜடைய பின்றதா, பெடலேடுக்கரதுன்னா சைக்கிள் பெடல கைல எடுப்பீங்களா. டவுட்டு நெம்பர் 10257/////

என்றா டவுட்டு இது? அவனவன் குமுறிக்கிட்டு இருக்கான், அதுல போயி ஜடை, சைக்கிள்னு கொழப்பிக்கிட்டு இருக்கே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// logu.. said...
\\என்னதான் ரோட்ல சூப்பர் பிகர் போனாலும் காலேஜ் மாதிரி பாதுகாப்பா சைட்டடிக்க கடலை போட முடியுமாண்ணே?\\


agggaaa... ingathan nikkareenganne..
athukaga unarchivasapattu ippapoi admission ketratheenga../////

அதெல்லாம் படிச்சு முடிச்சு கடலை சே... டிகிரியும் வாங்கியாச்சு எப்பவோ!

karthikkumar said...

@ சவுந்தர்
இங்க வந்து சாட் பண்றீங்க இந்த தேவாவுக்கு எப்போ பார்த்தாலும் சாட் தான்//
வந்தூட்டாம் பாருயா சிங்கக்குட்டி எந்த வூரு பஞ்சாயத்துக்கு போனாலும் அங்க கரெக்டா கேள்வி கேக்குறது நம்மாளுதான்... பாத்தீங்களா இப்பகூட கரெக்டா கேள்வி கேற்றுக்கு...

karthikkumar said...

என்றா டவுட்டு இது? அவனவன் குமுறிக்கிட்டு இருக்கான், அதுல போயி ஜடை, சைக்கிள்னு கொழப்பிக்கிட்டு இருக்கே///
ஏன் நைட்டு அடிச்சது எரங்குலியா...

logu.. said...

\\ karthikkumar said...
என்றா டவுட்டு இது? அவனவன் குமுறிக்கிட்டு இருக்கான், அதுல போயி ஜடை, சைக்கிள்னு கொழப்பிக்கிட்டு இருக்கே///
ஏன் நைட்டு அடிச்சது எரங்குலியா...\\

innuma avara nambureenga?

ippollam kalailaye arambichudraram..( ithu enaku kathu vali vantha seithi)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது பதிவுதான?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் கண்டிப்பா கமென்ட் போடணுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நான் கண்டிப்பா கமென்ட் போடணுமா?/////

அங்கன ஒரு ஆளு உன்னப் போட்டு குமுறி எடுத்திருக்காரு, அங்கேலாம் சும்மா இருந்துட்டு இங்க வந்து கமென்ட் போடனுமான்னு கேக்குது பாரு?

சுபத்ரா said...

என்னதான் பிரச்சினைன்னு பாத்தா.. ஆக்சுவலா ரெண்டு சால்ட் வாங்கி பிராக்டிகல் செய்யணும்...... ஒண்ணோட ஒண்ணு கம்பேர் பண்ணி ரிசல் எழுதணும்...

ஆனா நம்ம ஜாபர் ரெண்டாவது சால்ட்டே வாங்கல...........?????????????????????????


ஆனா ரிசல்ட் எழுதி கொடுத்துட்டு போய்ட்டான் அதன் இப்போ பிரச்சினைன...! ////

ROFL :))))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/பன்னிக்குட்டி ராம்சாமி said... 43

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நான் கண்டிப்பா கமென்ட் போடணுமா?/////

அங்கன ஒரு ஆளு உன்னப் போட்டு குமுறி எடுத்திருக்காரு, அங்கேலாம் சும்மா இருந்துட்டு இங்க வந்து கமென்ட் போடனுமான்னு கேக்குது பாரு?
////

Where when?

மாணவன் said...

//ரோசிக்கணும்..... மக்கள்ஸ்!//

சார் ஒரு டவுட்டு “ரோசிக்கணும்” இது யோசிக்கணுமா இல்ல ரோசிக்கணுமா?

கொஞ்சம் தெளிவா சொல்லுங்க..

மாணவன் said...

போலீசு அண்ணே குட் ஈவ்னிங்....

எஸ்.கே said...

நான் படிச்சப்ப காலேஜ்ல சீனியர் பசங்க மரத்தில் இருக்கிற இலையை எண்ணச் சொன்னாங்க! அவங்க ராகிங் பண்ணதை பிரின்ஸ்பால்கிட்ட ஒரு பொண்ணு சொல்ல அது பிரச்சினையாகி யாராவது ராகிங் பண்ணா சிவியர் ஆக்சன்னு சொல்லிட்டாங்களாம்! (இதெல்லாம் நடந்து முடிஞ்சு கொஞ்ச நாள் கழிச்சுதான் காலேஜ்ல சேர்ந்தேனே:-)))

செல்வா said...

50

எஸ்.கே said...

கற்கள் நிறைந்த கட்டிடங்களில்
கலந்து நிறைந்திருக்கும் உணர்வுகள்
கல்லூரி!

logu.. said...

\\ கோமாளி செல்வா said...
50..\\

Ithukellam vadai kedaiyathu..

beppeeeyy...

பெசொவி said...

// எஸ்.கே said...
கற்கள் நிறைந்த கட்டிடங்களில்
கலந்து நிறைந்திருக்கும் உணர்வுகள்
கல்லூரி!
//

கற்க வந்தவரை "கல்" என்றும் சும்மா ஊர் சுற்றிப் பார்க்க வந்தவரை "ஊர்" என்றும் சொல்வதுதான் கல்லூரி, எஸ்கே!

எஸ்.கே said...

நல்ல ரசனையான விளக்கம் பிஎஸ்வி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ... ரைட் ...

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கல்

ரஹீம் கஸ்ஸாலி said...

தமிழ்மணத்தில் -வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

Maddy said...

Hi,I did my Bsc in APSA in 1992-1995 in chemistry. I still remember a similar incident. It was our final year physics practical. I had a classmate from thiruppathur, his name was Madhavan. He was a street smart guy..Prof. Jafarullah (coolest Prof.) was the incharge on that day exam..Madhavan was the first to finish the practicals and exited triumphantly within an hour, finding the wavelenghth or something experiment..After sometime Professor was aksing "Who has not started the wavelength experiment? You have not yet got the prism for starting it!!! It was hilarious....