Sunday, December 12, 2010

பாரதியின் கும்மி...பாரதி பிறந்தநாளில் பிறந்த கும்மி வலைப்பூவிற்கு இந்த பாரதி பாடல் சமர்ப்பணம்....

பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே.

கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!
                                                 (கும்மி)

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.                                                         (கும்மி)

மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி!                                                      (கும்மி)

நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.                                                   (கும்மி)

கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.                                                 (கும்மி)

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!                                              (கும்மி)

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.                                                         (கும்மி)

காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!                                                             (கும்மி)

29 comments:

சுபத்ரா said...

வாவ்...புதுக் குழந்தைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாட்டுத்தலைவன் பாரதி பிறந்த நாளில்... பிறந்தது இந்தக் கும்மி....!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//பாட்டுத்தலைவன் பாரதி பிறந்த நாளில்... பிறந்தது இந்தக் கும்மி....!//

அப்பொ பாரதிராஜா???

அருண் பிரசாத் said...

பாட்டுத்தலைவன் ராமராஜன் இல்லையா?

TERROR-PANDIYAN(VAS) said...

test

அருண் பிரசாத் said...

test 2

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அடப் பாவி அருண், ப்ளாக் ஓபன் பண்ணினா சொந்தமா சரக்கு எடுத்து வரணும், இப்படி பாரதி, பாரதி தாசன் இப்படின்னு ஓசியில் ஏதாவது அள்ளிட்டு வந்தா அது சரியில்ல.

அருண் பிரசாத் said...

test 3

dheva said...

பாருங்க மக்கா பாரதியாரே கும்மியத்தான் அடிச்சு இருக்காரு..அவ்வ்வ்வ்வ்வ்!

ஏண்டா அருணு தூங்கலியா ராசா!

அருண் பிரசாத் said...

@ PSV

பாரதியே கும்மி அடிக்க சொல்லுறாருனு சொல்ல வந்தேன்... அதுக்காக நான் பாரதி மாதிரி பாட்டு எழுதமுடியுமா என்ன?

dheva said...

ஏண்டா தம்பி அப்போ பாரதியும் மொக்கதான் போட்டு இருக்காப்புலன்று சொல்றியா..


டெரர் கும்மி மாதிரி அவரு ஓண்ணு வச்சிருந்து இருப்பாரோ..>?

dheva said...

ஏண்டா தம்பி அப்போ பாரதியும் மொக்கதான் போட்டு இருக்காப்புலன்று சொல்றியா..


டெரர் கும்மி மாதிரி அவரு ஓண்ணு வச்சிருந்து இருப்பாரோ..>?

dheva said...

பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்கு முதல் கமெண்ட் போடச்சொல்லி வடை எல்லாம் கொடுத்திருக்கும் நாம்தான் முற்போக்கு வாதிகள் இல்லையா அருண்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//பாட்டுத்தலைவன் பாரதி பிறந்த நாளில்... பிறந்தது இந்தக் கும்மி....!//

அப்பொ பாரதிராஜா???////

அத அவங்க அப்பாருட்ட தான் கேக்கோனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
பாட்டுத்தலைவன் ராமராஜன் இல்லையா?////

அவரு மாட்டுத்தலைவன்....!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Selva

//எலிமருந்து வச்சிட்டு அந்த காகித்துமேல விஷம் அப்படின்னு எழுதினா கூட எலி
அத தின்னுட்டு செத்திருதே ஏன்.?
ஏன்னா அது தற்கொலை பண்ணிக்கிது.!

நீதி : பாவம் அதுக்கு என்ன சோகமோ.!
//
வேற என்ன சோகம்? உன்னோட மொக்கைய படிச்சிருக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////dheva said...
பாருங்க மக்கா பாரதியாரே கும்மியத்தான் அடிச்சு இருக்காரு..அவ்வ்வ்வ்வ்வ்!

ஏண்டா அருணு தூங்கலியா ராசா!////

அப்போ இனிமே குமுறக் குமுறக் கும்மிதான்.......!

dheva said...

ஊர்ஸ்.... @ நம்ம கும்மி பிளாக்ல நான் சட்டைய கழட்டிபோட்டுட்டு ஹாயா கும்மு கும்முனு கும்ம போறேன்.. இது நம்ம ஹாலிடே ஸ்பாட்டு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.!

dheva said...

ஊர்ஸ்.... @ நம்ம கும்மி பிளாக்ல நான் சட்டைய கழட்டிபோட்டுட்டு ஹாயா கும்மு கும்முனு கும்ம போறேன்.. இது நம்ம ஹாலிடே ஸ்பாட்டு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.!

dheva said...

கும்மி எங்கள் ஜாதியே..
கும்மி எங்கள் பூமியே..
இருக்கும் மக்கள் யாவரும்
கும்மியடிக்கும் மக்களே..

பாரதியின் வழி நடபோம் கும்மி கலாச்சாரத்தை கட்டிக் காப்போம்.........!

வினோ said...

பத்து நிமிஷம் வெளிய போயிட்டு வரதுக்குள்ள பாரதிய போட்டு கும்மிடீங்கள?

Ananthi said...

Situation Song-aa?? superrrr :-)

வெறும்பய said...

online

வெறும்பய said...

கும்மியோ கும்மி...

வெறும்பய said...

வடை எனக்கே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எலேய் ஒரே நாளல்ல எத்தனை போஸ்ட் போடுவீங்க. அப்புறம் நானும் என் ப்ளாக் ல இருந்து மீள் பதிவு போடுவேன்

எஸ்.கே said...

fantastic!!!!

சுபத்ரா said...

//dheva said...

பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்கு முதல் கமெண்ட் போடச்சொல்லி வடை எல்லாம் கொடுத்திருக்கும் நாம்தான் முற்போக்கு வாதிகள் இல்லையா அருண்..!//

ஹை... வடை எனக்குத்தான்:-)

சுபத்ரா said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
பாட்டுத்தலைவன் ராமராஜன் இல்லையா?////

அவரு மாட்டுத்தலைவன்....!//

:-) :-)