Tuesday, December 28, 2010

மாஸ்டர்....??????????!!!!!!!!!!


'நான் அழுதா நீங்க  கொஞ்சம் சந்தோசமா சிரிப்பீங்க அப்டீன்னு தெரிஞ்சா நான் அழுக ரெடி மக்கா '

ஸ்ட்ரெய்ட்டா மேட்டர்க்கு வர்றேன்.........

ஸ்கூல்ல படிக்கிறப்ப கடைசி பீரியட் பி.டி. பீரியட். எல்லோரும் கிரவுண்டுக்கு விளையாட போனோம் ஆனா அன்னிக்கு இஷ்டப்படி விளையாடுங்கன்னு சொல்லிட்டாங்கா ஏன்னா மாஸ்டர் வரலன்னு சொல்லிட்டாங்க.....சரி ஓ.கே.ன்னு புட்பால் விளையாடணும்னு கேட்டா கொடுக்க மாட்டேன்னு சொல்றாங்கா கேட்டா ஒரு வாரத்துக்கு குடுக்க கூடாதுன்னு வேற மாஸ்டர் சொல்லியிருக்கார்னு சொன்னாங்க.. எவரு அவருன்னு கேட்டா ஹெட் மாஸ்டர்ன்னு சொன்னாங்க........சரி கழுதை போய் தொலையட்டுமேன்னு...மரத்தடில உக்காந்து பேசிகிட்டு இருந்தோம் அப்போ என் ஃப்ரண்ட் சொல்றான்...மச்சி வாடா கட் அடிச்சிட்டு போயிடுவோம் லாஸ்ட் பீரியட்தானேன்னு.. சரின்னு தைரியமா புக் எல்லாம் எடுத்துட்டு. சுவர ஏறிக்குதிச்சு..  காம்பவுண்ட் விட்டு வெளில வந்துட்டோம்...சரி ஒரு ஹோட்டல போய் சாப்புடுவோம்னு நுழைஞ்சோம்...

ஆளுக்கு ரெண்டு புரோட்டா வைங்கனு ஒரு பத்து பேரு அதட்டலா சொன்னோம்..அப்போ சர்வர் சொன்னார்.. இருங்க மாஸ்டர் இப்போதான் வந்தாரு ரெடி பண்ணிட்டு இருக்காருன்னு......எனக்கு டென்சன் நம்ம பி.டி. மாஸ்டர் எதுக்கு இங்க வந்தாருன்னு டென்சனாகி வாங்கடா போலாம்னு கிளம்புற சமயத்துல ப்ரண்ட் சொல்றான் உள்ள இருக்குறது புரோட்டா மாஸ்டராம்... அடங்கொன்னியா அதுசரின்னு கொஞ்ச டென்சனாவே கிச்சனா பாத்துகிட்டே சாப்ட்டு முடிச்சு வெளிவ வந்து டீ சொல்ற மச்சின்னு சொன்னா கூட்டாளி மறுபடியும் சர்வர்கிட்ட சொன்னேன் 10 டீன்னு....அவன் உடனே....' மாஸ்டர் 10 டீன்னு ' கத்தினான் பாருங்க நான் டென்சனாகி டேய் இவரு யாருடா ஹெட்மாஸ்டரான்னு பயத்துல கேட்டவுடனே சர்வரே சிரிச்சுகிட்டு சொல்றான்..தம்பி இவரு டீ மாஸ்டர்னு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

ஏன்டா கொல்றீங்க இப்டின்னு நினைச்சுகிட்டு நேரே 10 பேரும் பஸ்டாண்டுக்கு வர்ற வழில ஒரு அண்ணாவ பாத்தோம் அவரு எங்க சீனியர் நாங்க 10வது படிக்கிறப்பவே அவரு +2 முடிச்சு போய்ட்டாரு..சந்தோசமா பேசிகிட்டு இருந்தப்பா என்னாண்ணா எப்டி இருக்கு காலேஜ் லைஃப் எங்க போய்ட்டு வர்றீங்க.னு கேட்டோம்.......சூப்பரா போது தம்பி இப்போ கராத்தே கிளாசுக்கு போனேன் மாஸ்டர் வரலே அதான் வீட்டுக்கு போய்ட்டு இருக்கேன்னு சொன்னான்.........எனக்கு கோபம் வந்துடுச்சு......ஏன்டா இந்த புரோட்டா மாஸ்டர் கராத்தே எல்லாம் சொல்லித்தாரறான்னு சொல்லிட்டு....அவரு அந்த ஹோட்டல்ல இருக்காருண்ணேன்னு அதான் வரல போல இருக்குன்னு சொன்னேன்.....

என் ப்ரண்ட் 'டேய் கம்மனாட்டி வாய மூடுடா எருமை.அவன் சொல்றது கராத்தே மாஸ்டர்டா'னு திட்டிபுட்டான்..ஹி ஹி ஹினு வழிஞ்சு கிட்டு....சரின்னா அப்புறம் பாக்காலாம்னு சொல்லிட்டு பஸ்டாண்ட வர்ற வரைக்கும் ஒரே யோசனை எனக்கு ங்கொய்யாலா என்ன தப்பு பண்ணினோம் கரீக்டாதேனே திங்க் பண்றோம்னு யோசிச்சுட்டு பஸ்ல ஏறி உக்காந்தோம் வீட்டுக்கு போவோம்னு...நானும் இன்னொரு ப்ரண்டும் ஒரே ஊர்.. பாக்கி டிக்கட் எல்லாம் கழண்டுபோய்ட்டாங்க.. நானும் இன்னும் ரெண்டு புத்திசாலி ப்ரண்ட்ச் மட்டும்தான்....டிக்கெட் எடுத்துட்டு......உக்காந்து இருந்த என் காதுல விழுற மாதிரி முன்னால சீட்ல இருக்கவன் ஏன் பேசனும்.. 

அவன் யார்கிட்டயோ சொல்றான் ' மச்சி சினிமா எல்லாம் சூப்பர் ஆனா பாட்டு சீன்ல மாஸ்டர் சரியா சொல்லிக் கொடுக்கல போல ஹீரோ சரியாவே ஆடலேன்னு...' அதுக்கு பக்கத்துல இருந்த ஆளு....' ஒரு படத்துல இருக்குற மாஸ்டர வச்சிதான்...டான்சே; ஆனா ஸ்டண்ட்ல மாஸ்டர் கலக்கி இருப்பாரு '

அவுங்க பேசிகிட்டே இருக்காங்க எனக்கு தலை சுத்துது.......டீ மாஸ்டர், புரோட்டா மாஸ்டர்......எல்லா பிடி. மாஸ்டர்  ஹெட்மாஸ்டர், கராதே மாஸ்டர்.......ம்ம்ம்ம் இவுங்கள்ள யாரு டான்ஸ்சொல்லி கொடுப்பா, கராத்தே மாஸ்டர் சண்டை சொல்லிக் கொடுப்பாரா ஒரே குழப்பாம இருந்ததோட.........வழில ஒரு போஸ்டர பாத்தேன்..மாஸ்டர். அஸ்வினுக்கு காதணி விழானு ஒரு போஸ்டர வேற பாத்து தொலைச்சுட்டேன்......அட இவனும் மாஸ்டரா எப்படின்னு ஒரே குழப்பமுங்க...

இந்த குழப்பத்தோட... வீட்டுக்கு போனேன் அம்மா கோபமா மாஸ்டர் இப்போதான் போன் பண்ணினாரு எங்க போய் சுத்திட்டு வர்றேன்...ம்ம்ம்ம்ன்னு இடுப்புல கை வைச்சு கேட்டாங்க


எந்த....த.த........மாஸ் ட......ர்மா...(எல்லா மாஸ்டரும் சேந்து என்ன ஒரு வழி பண்ண எனக்கு மூளை குழம்பிப் போச்சு.......) அப்டீன்னு கேக்க

புரோட்டா மாஸ்டரா? டீ மாஸ்டரா? டான்ஸ் மாஸ்டரா? பி.டி. மாஸ்டரா? கராத்தே மாஸ்டரா? ஸ்டண்ட் மாஸ்டரா? இல்ல.......கடைசியா பாத்த அந்த குட்டி பையன் மாஸ்டரா?

என்னடா ரொம்ப யோசிக்கிறா ட்யூசன் போகமா கட் அடிச்சீல்ல உன் டீயூசன் மாஸ்டர்டா அம்மா சொல்லிக்கிட்டு இருக்கும் போதே..........நான் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்...........

நீங்களே சொல்லுங்க மக்கா எம்பூட்டு கன்பீசன்...பேர மாத்தி மாத்தி வைக்காமா என்ன மாதிரி ஆளுகளுக்கு எம்ப்பூட்டு கன்பீசன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


அப்போ வர்ட்ட்ட்ட்டா...!

டெரர் கும்மிக்காக
தேவா. S

பின் குறிப்பு: அடுத்த நாள் போஸ்ட்மேன் வந்து அப்பாகிட்ட பேசிட்டு இருந்தார் சார் உங்களுக்கு ஒரு ரிஜிஸ்டர் போஸ்ட் வந்து திரும்பி போஸ்ட் ஆபிசுக்கே போய்டுச்சு.....நீங்க போய் அங்க வாங்கிக்கோங்கன்னு..சொன்னார்...

அப்பா கேட்டார் போஸ்ட் ஆபீசுல யார பார்க்கணும்னு.....அதுக்கு போஸ்ட்மேன் சொல்றாரு...........

'போஸ்ட் மாஸ்டரைத்தான் ' அப்டீன்னு

வீட்டுக்குள்ள டி.வி பாத்துட்டு இருந்த நான் மறுபடி....மயக்...க்க்கமாயிட்டேங்க...%$£!!!****(^%$!
 

46 comments:

கோமாளி செல்வா said...

வடை .!

logu.. said...

ada..ada..... pocheyyy..pocheyyy

logu.. said...

komali vadaiya kakka thookitu poi tholaiyattum..

logu.. said...

\\சரி ஒரு ஹோட்டல போய் சாப்புடுவோம்னு நுழைஞ்சோம்...\\

Thinnutu kasu kudutheengala..illa mavatuneengala?

கோமாளி செல்வா said...

/ இருங்க மாஸ்டர் இப்போதான் வந்தாரு ரெடி பண்ணிட்டு இருக்காருன்னு......எனக்கு டென்சன் நம்ம பி.டி. மாஸ்டர் எதுக்கு இங்க வந்தாருன்னு டென்சனாகி வாங்கடா போலாம்னு கிளம்புற சமயத்துல ப்ரண்ட் சொல்றான் உள்ள இருக்குறது புரோட்டா மாஸ்டராம்...//

அட பாவமே , பரோட்டா மாஸ்டருக்கும் , உங்க வாத்தியாருக்கும் கூட வித்தியாசம் தெரியலையா ..?

கோமாளி செல்வா said...

//.ஏன்டா இந்த புரோட்டா மாஸ்டர் கராத்தே எல்லாம் சொல்லித்தாரறான்னு சொல்லிட்டு..../

நல்ல கேள்வி ..!

கோமாளி செல்வா said...

//.ம்ம்ம்ம் இவுங்கள்ள யாரு டான்ஸ்சொல்லி கொடுப்பா, கராத்தே மாஸ்டர் சண்டை சொல்லிக் கொடுப்பாரா ஒரே குழப்பாம இருந்ததோட.........வழில ஒரு போஸ்டர பாத்தேன்..மாஸ்டர். அஸ்வினுக்கு காதணி விழானு ஒரு போஸ்டர வேற பாத்து தொலைச்சுட்டேன்......//

அதானே ,, நானும் அடிக்கடி இப்படி நிறைய கேள்வி கேக்குறது வழக்கம் ,
ஆனா நான் அப்படி அறிவாளித்தனம கேட்ட எல்லாம் அடிக்க வராங்க .!

வினோ said...

இப்படியுமா சந்தேகம் வரும்?

மாணவன் said...

இது சரியான மாஸ்டர் பீஸ் பதிவால இருக்கு

ஹிஹிஹி

மாணவன் said...

10...வடை

TERROR-PANDIYAN(VAS) said...

@மாணவன்

//இது சரியான மாஸ்டர் பீஸ் பதிவால இருக்கு//

வாழ்த்தாம போற பாரு... அட பொன்னான பணி சொல்லிட்டு போ... :))

சங்கவி said...

உங்களுக்கு நான் ஒரு விருது தருகிறேன்...

கும்மி மாஸ்டர் விருது...

எஸ்.கே said...

அப்ப மாஸ்டர் டிகிரின்னா என்னா?

dheva said...

கும்மி மாஸ்டர் விருதா.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

dheva said...

புரோட்டா போடுற ஆள எகுக்கு மாஸ்டர்னு சொல்லணும்....டவுட்டு:-))))

dheva said...

சரி சரி இந்த போஸ்ட் படிக்க எல்லோருக்கும் மாஸ்டர் மைண்ட் வேண்டும்...

அங்க பாருங்க ஒருத்தரு படிச்சுட்டு பொறாமையில வயிறு எரிஞ்சு போறாரு.......

சும்மா ஜாலியா சிரிச்சுட்டு போங்க பாஸ்.! எல்லாத்துக்குமா அர்த்தம் இருக்கு வாழ்க்கையில.........ஹா ஹா..ஹா!

எஸ்.கே said...

குவிஸ் மாஸ்டர்: யார் மனசில யாரு எனக்கு என்ன பேரு?

எஸ்.கே said...

//சும்மா ஜாலியா சிரிச்சுட்டு போங்க பாஸ்.! எல்லாத்துக்குமா அர்த்தம் இருக்கு வாழ்க்கையில.........ஹா ஹா..ஹா!//

வாழ்க்கையில் எல்லாமே அர்த்தம் நிறைந்தவைதான்.. அதுக்கான டிக்ஸ்னரிதான் நம்மகிட்ட நிறைய நேரம் கிடைக்க மாட்டேங்குது!:-)

எஸ்.கே said...

மாஸ்டர் எனக்கு ஒரு டீ!

எஸ்.கே said...

சரக்கு மாஸ்டர்னா யாரு?

எஸ்.கே said...

Dheva. Master of kummy?

எஸ்.கே said...

மாஸ்டர் வேற மேஸ்ட்ரோ வேறயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாருங்க அது மாஸ்டர், இப்படி எல்லா வேலையையும் பண்றாரு?

நாகராஜசோழன் MA said...

:)))))

karthikkumar said...

இதுபோக கலா மாஸ்டர் நு ஒருத்தங்க இருக்காங்க. சனி கிழமையான வந்து பயமுறுத்துவாங்க.... உங்களுக்கு தெரில போல... உங்க வீட்டு டீவில கலைஞர் சானெல் தெரியாதா சார்.. :)

அருண் பிரசாத் said...

ஓகே மாஸ்டர்


(எந்த மாஸ்டருனு குழம்பி சாகுங்க)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா.. சரக்கு மாஸ்டர்னா சரக்கு அடிக்க சொல்லித்தருவாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த ஸ்டேசன் மாஸ்டர் எங்கே போனாரு?

சௌந்தர் said...

மாஸ்டர் தேவா இருக்காரா என்னது என்ன மாஸ்டரா ஜப்பான் மொழி சொல்லி தருவார் அந்த மாஸ்டர்

எஸ்.கே said...

ஆமா மாஸ்டர் என்பது கடவுளைத்தானே குறிக்கின்றது?

சி.பி.செந்தில்குமார் said...

sk super kalakkal ( short form of sk)

எஸ்.கே said...

சிபி சார் இதை எழுதியது தேவா அவர்கள்! நான் வெறும் பப்ளிஷ்தான் பண்ணேன்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

ஜீ... said...

Super! :-)

akbar said...

Appo intha GYM Master yarungo? heheheh

Anonymous said...

ச்ச வடைக்கு செம போட்டியவுல இருக்கு
பதிவுல ஏன் இம்புட்டு சந்தேகம்
:)
நல்ல இருக்கு SK சார்

எஸ்.கே said...

//கல்பனா said...

ச்ச வடைக்கு செம போட்டியவுல இருக்கு
பதிவுல ஏன் இம்புட்டு சந்தேகம்
:)
நல்ல இருக்கு SK சார்//

மிக்க நன்றி!

ஆனால் இதை எழுதியது தேவா அவர்கள் நான் வெறும் பப்ளிஷ்தான் பண்ணேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புட்பால் விளையாடணும்னு //

Food பால்(Milk)


சாப்பிட மில்க் வேணும்னு கேட்டா என்ன பண்ணுவாங்க?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஏதோ ஒரு மாஸ்டர் பிளான் பண்ணி ஒரு பதிவு தேத்திட்டீங்க, போலிருக்கு?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஸ்கூல் காலத்தில, மாஸ்டர் தேவா ஒரு மார்க்கமாதான் இருந்திருக்காரு!
:)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// கோமாளி செல்வா said...
வடை .!
//

வந்திட்டாருய்யா வடை மாஸ்டர்

Anonymous said...

போஸ்ட் மாஸ்டருனா.. ப்ளாக்ல போட்ற போஸ்ட் தான???

வானம் said...

சச்சின மாஸ்டர் பிளாஸ்டர்ன்னு சொல்லுராங்களே, ஏன்?
கைல, கால்ல எல்லாம் பிளாஸ்திரி ஒட்டிக்கிட்டு வெளையாடுறதுனாலயா?

அரசன் said...

அசத்தலுங்கோ...

சுபத்ரா said...

GrandPa = தாத்தா
GrandMa = பாட்டி

GrandMASTER = ???

EximMates said...

Simply superb ....