முன்குறிப்பு : கொஞ்ச நாள் முன்னாடி நம்ம கலைஞர் டிவில ’தில் தில் மனதில்’ அப்படின்னு ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்., அதுல பயங்கரமா எல்லோரும் சாதனை பண்ணினாங்க. சரி நாமளும் எதாச்சும் சாதனை பண்ணலாம்னு நமக்கு என்ன திறமை இருக்கு அப்படின்னு ரோசித்தேன். ஒரு ஐடியா வந்திச்சு , அவுங்களுக்கு போன் பண்ணி கேக்குறதுக்கு முன்னாடி அவுங்க என்னோட சாதனைப் பார்த்துட்டு அவுங்க எப்படியெல்லாம் என்ன புகழ்வாங்க அப்படின்னு நினைச்சு பார்த்தேன்.! நீங்களும் படிச்சுப் பார்த்திட்டு பாராட்டிட்டு போங்கோ.!
முதல்ல என்னோட சாதனையை அறிமுகம் செய்யுறாங்க :
இவர் பேர் செல்வக்குமார் , இவர் இவரோட சாதனைப் பத்தி சொன்னதுமே எங்களுக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது , இவர் சொன்னது ஒண்ணும் சாதாரண சாதனை இல்ல , இதுவரைக்கும் உலகத்துல மிகச் சிலராலேயே பண்ண முடியுற சாதனை அது. ஆமா , அவர் சொன்ன சாதனை என்னன்னா பனிரெண்டு மணிநேரம் இடைவிடாம தூங்கப் போறதுதான். அது எவ்ளோ சிரமம்கறது நினைச்சு பார்த்தாலே ரொம்ப கஷ்டமா இருக்கு. நாங்க சொல்லுறது இதுதான் , யாரும் இந்த சாதனையை முயற்சி பண்ணிப் பார்க்க வேண்டாம். ஏன்னா இது பலநாள் பயிற்சி பண்ணி இந்த சாதனையயைபண்ணினது.!
சாதனையை முடிச்சிட்டு அதாவது பனிரெண்டு மணிநேரம் கழிச்சு எழுந்ததும் அந்த சாதனையைப் பத்தி சுருக்கமா சொல்லுறாங்க :
இவர் இந்த சாதனையை பண்ணும் போது கொஞ்சம் கூட கஷ்டப்படாம பண்ணினது இவரோட திறமையை காட்டுது . அத விட இவர் இந்த சாதனையை பண்ணுறதுக்கு முன்னாடி இரண்டு லிட்டர் தண்ணி குடிச்சார் , அதனால எப்படியும் பாத்ரூம் போக எழுந்தரிப்பர் அப்படின்னு நினைச்சோம் , ஆனா அதுக்கு கூட எழுந்தரிக்கல.
இந்த சாதனையை நேர்ல பார்த்தவங்களோட கருத்து :
என் பேர் சௌந்தர் . செல்வா அண்ணன் வீட்டுக்குப் பக்கத்துல தான் இருக்கேன் , அவர் இந்த சாதனையை செஞ்சிடுவார்னு எனக்கு தெரியும் , ஏன்னா தினமும் எட்டு மணி வரை தூங்குறதால அவுங்க அம்மா கிட்ட அடி வாங்குவார் . அப்பவெல்லாம் இது எங்க உருப்படப்போகுதுன்னு நினைப்பேன் , அதனால இவர் இந்த சாதனையை செஞ்சதுல எனக்கு ஆச்சர்யம் இல்ல.
என் பேர் ரமேஷ் , செல்வாவோட பிரெண்ட் நானு. அவன் இந்த சாதனையை பண்ணிடுவான்னு எனக்குத் தெரியும் . ஏன்னா இந்த மாதிரி சாதனையை அவனால மட்டும் தான் பண்ண முடியும் . கலைஞர் டிவில பண்ணப்போறேன்னு சொன்ன உடனேயே அவனுக்கு திங்குறதுக்கு நிறைய வாங்கி கொடுத்து தூங்க சொன்னேன். அவனும் தினமும் நான் சொன்னத கேட்டு தூங்கினதால இந்த சாதனையை பண்ணிருக்கான்.
இப்போ மானாட மயிலாட கலா அக்கா என்ன சொல்லுறாங்க :
இந்த சாதனையை பார்த்த உடனே அவுங்க அப்படியே மேடைல இருந்து எழுந்து HATS OFF செல்வா. சத்தியமா உன்னப் பார்த்த என்னோட சின்ன வயசு ஞாபகத்துக்கு வருது.நான் எல்லாம் சின்ன வயசுல எவ்ளோ நேரம் தூங்கிருப்பேன் தெரியுமா .? ஒவ்வொரு தடவையும் அம்மா அடிச்சு எழுப்பும் போது இன்னும் கொஞ்ச நேரம் தூங்கணும் தூங்கணும் அப்படிங்கிற வெறி , அந்த வெறில ஒவ்வொரு நாளும் தூங்கப் போவேன். ஆனா சீக்கிரமே எழுப்பி விட்ட்ருவாங்க. அதுவும் இல்லாம நீ தூங்கும் போது ஒரு தடவ அப்படியே திரும்பி படுத்த பாரு , அந்த மூவ்மென்ட் சத்தியமா என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது ( அவுங்க கண்ணுல இருந்து தண்ணி வருது ).! உனக்கும் அந்த பெட்டுக்கும் இருந்தா கெமிஸ்ட்ரி சான்சே இல்ல.! நீ எங்கயோ போகப் போற .!
நமீதா அக்கா என்னோட சாதனைப் பத்தி :
ஐ லவ் யூ மச்சான் . நீங்க பண்ணது எனக்கு எப்டி சொல்லுறது தெரில . ஆனா என்னால இது சத்தியமா முடியாது. அதுவும் இரண்டு லிட்டர் தண்ணி குடிச்சிட்டு இடைல பாத்ரூம் கூட போகாம தூங்குறது , அது யாராலையும் முடியாது.! நீங்க பண்ணினது சாதனை மட்டும் இல்ல , எல்லா இளைஞர்களுக்கும் நீங்க ஒரு உதார்.! கலக்கிட்ட மச்சான்.!
நம்ம நண்பர்கள் என்ன சொல்லுறாங்க :
முதல்ல நம்ம டெர்ரர் அண்ணன் :
இந்த நாய் இத செய்யும்னு எனக்கு நம்பிக்கையே இல்ல. ஆனா இவனாலயும் சாதனை பண்ண முடியும்னு நிரூபிச்சுட்டான். என்னால சத்தியமா இப்படி செய்ய முடியாது , ஏன் இனி எந்த நாயாலையும் இந்த சாதனையை செய்ய முடியாது! யோவ் பன்னிக்குட்டி நீயெல்லாம் எதுக்கு இருக்க , உன்ன விட சின்னப்பையன் என்னமா சாதனை பண்றான்.!
நம்ம பன்னிகுட்டி ராமசாமி அண்ணன் என்ன சொல்லுவார் :
இந்தத் தொம்பி இப்படி பண்ணுவான்னு எனக்கு நல்லாத் தெரியும்க , கழுத மேய்க்கிற பயல்தானேனு சும்மா நெனைச்சுடாதீங்க , இவன் கிட்ட இன்னும் என்னென்னமோ ஒளிஞ்சிட்டு இருக்கு , அதையும் நிதானமா படம் புடிச்சிட்டுப் போங்கோ .!
எங்க வாத்தியார் :
இவன் இதப் பண்ணினதுல எனக்கு ஒண்ணும் பெரிய ஆச்சர்யமா தெரியலைங்க ., ஏன்னா நான் ஒருதடவ கூட இவன் பள்ளிகூடத்துல முழிச்சிருந்து பார்க்கல. சத்தியமா நீயெல்லாம் உருப்பட மாட்டே அப்படின்னு தினமும் எங்கிட்ட திட்டு வாங்குவான் . அப்ப கூட லேசா எழுந்திரிச்சு பார்த்துட்டு மறுபடி தூங்கிடுவான். நானும் டஸ்டர் எடுத்து அடிப்பேன் , ஆனா என்னமோ ஒரு கொசு கடிச்ச மாதிரி தட்டி விட்டுட்டு மறுபடி தூங்கிடுவான் .. இவனோட இந்த சாதனை எனக்கு ஒண்ணும் பெரிசா தோனல . இவனால இத விட அதிக நேரம் தூங்க முடியும் .!
பின்குறிப்பு : இது முற்றிலும் நகைச்சுவைக்காகவே , எந்த நிகழ்ச்சியையும் கிண்டல் செய்திடும் நோக்கம் அல்ல .!
டெர்ரர் கும்மிக்காக செல்வா மற்றும் நண்பர்கள்
59 comments:
நல்ல சாதனை தொடருங்க
vadai???
pochu
அன்பின் செல்வா
தங்கள் சாதனைகள் கண்டு மகிழ்ந்தேன். தங்கள் இன்னும் பல சாதனைகள் செய்து கும்பகர்ணனை போல பெரிய ஆளாக வேண்டும்!
இளம் கும்பகர்ணன் செல்வா வாழ்க!
நீ கும்பகர்ணன் சாதனையை முறியடித்து...இன்னும் பல சாதனை செய்ய வாழ்த்துகிறேன்
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....கொட்டாவி வருது...தூங்க போறேன்
கொர்ர்ர்...கொர்ர்ர்ர்ர்ர்ர்...கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
அருண் பிரசாத் said... 3
pochu///
sorry na வடை வேண்டுமா உங்களுக்கு இங்க நமீதா கேகுராங்களே யாருக்கு தருவது.....
யாருப்பா அது தூங்கதே தம்பி தூங்காதே பாட்டு போடுறது நிறுத்துங்கப்பா... புள்ளைக்கு டிஸ்டர்ப் ஆகுதுல....
நீ தூங்கு ராசா...
ஆமா சாதனைன்னு தலைப்ப பாத்து வந்தா ஒரே சோதனையாவுல இருக்கு?!!!
//sorry na வடை வேண்டுமா உங்களுக்கு இங்க நமீதா கேகுராங்களே யாருக்கு தருவது.....//
சின்ன பொன்னு அழுவும் அதுக்கிட்டயே கொடுத்துடு
அருண் பிரசாத் said...
யாருப்பா அது தூங்கதே தம்பி தூங்காதே பாட்டு போடுறது நிறுத்துங்கப்பா... புள்ளைக்கு டிஸ்டர்ப் ஆகுதுல....
நீ தூங்கு ராசா..//////////
ஒரு பாட்டு படி மச்சி!
இன்னும் மென் மேலும் சாதனை செய்திட வாழ்த்துக்கள் செல்வா
//சின்ன பொன்னு அழுவும் அதுக்கிட்டயே கொடுத்துடு//
அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே.... (பேக் கிரெளண்ட் சாங்குப்பா)
சௌந்தர் said...
இன்னும் மென் மேலும் சாதனை செய்திட வாழ்த்துக்கள் செல்/////////
துணைக்கு வேணா என்ன கூப்ட சொல்லுங்க
//ஒரு பாட்டு படி மச்சி!//
போற்றி பாடடி பொன்னே....
மொக்கை காலடி மண்ணே....
@அருண்
எண்டா Month End ஆபிஸ்ல ஆனி புடுங்க சொல்லலை? கும்மியடிச்சிட்டு இருக்க... :))
//துணைக்கு வேணா என்ன கூப்ட சொல்லுங்க//
எலேய்...நீ யாருக்கு வேணும் போய் நமிதாவை அனுப்பு.... தாலாட்டு பாட மச்சி...
அருண் பிரசாத் said...
//சின்ன பொன்னு அழுவும் அதுக்கிட்டயே கொடுத்துடு//
அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே.... (பேக் கிரெளண்ட் சாங்குப்பா///////////
யாருக்கு பேக் ரவுண்ட்?
@terror
வந்துட்டாரு ஆபீஸ் ல ஒழுங்கா ஆணி புடுங்குரவரு ...பதிவ பத்தி கமெண்ட்ஸ் போடா சொன்ன ...கேக்குறான் பாரு கேள்வி ?(என்கிட்டே கேக்க கூடாது நீ எப்படி கமெண்ட்ஸ் போடுற ன்னு )
///TERROR-PANDIYAN(VAS) said...
@அருண்
எண்டா Month End ஆபிஸ்ல ஆனி புடுங்க சொல்லலை? கும்மியடிச்சிட்டு இருக்க... :))//
பொறாமைடா உனக்கு.... எல்லா கம்பனியும் இயர் எண்ட்னு சொல்லி ஜனவ்ரி 10 வரிக்கு மூடிட்டாங்க... என்னத்த வேலை செய்ய..... ஆபிஸ் ஸ்டாப் பாதி பேர் வகேஷன்ல போய்ட்டானுங்க....
I am working in International country you know...Foriegn laws, rules and regulations
//யாருக்கு பேக் ரவுண்ட்?//
எனக்குத்தான்... நமிக்கு வடைய விட்டு கொடுத்தேன்ல
இங்க என்ன நடக்குதுங்க .?!
//வந்துட்டாரு ஆபீஸ் ல ஒழுங்கா ஆணி புடுங்குரவரு ...பதிவ பத்தி கமெண்ட்ஸ் போடா சொன்ன ...கேக்குறான் பாரு கேள்வி ?(என்கிட்டே கேக்க கூடாது நீ எப்படி கமெண்ட்ஸ் போடுற ன்னு ) //
ஏன் மக்கா ஏன்? டெரர் கும்மி ஆபிஸ்ல ஆனி புடுங்கம சம்பளம் வாங்கின தட்டி கேக்கும்... (எனக்கு வேலை இருக்க அப்பொ மட்டும்..)
//I am working in International country you know...Foriegn laws, rules and ரேகுழட்டிஒன்ஸ்//
மக்கா டெர்ரர் துரை இங்கிலீஷ் எல்லாம் பேசுது இங்க வந்து பாரேன் .நமக்கு தெரிந்த LAW ஒரே LAW தான் அது தன ஷகிலா ....கரெக்ட் தானே மக்கா
25
25
//மக்கா டெர்ரர் துரை இங்கிலீஷ் எல்லாம் பேசுது இங்க வந்து பாரேன் .நமக்கு தெரிந்த LAW ஒரே LAW தான் அது தன ஷகிலா ....கரெக்ட் தானே மக்கா//
ஊர்மிளா தெரியாதா?
//ஏன் மக்கா ஏன்? டெரர் கும்மி ஆபிஸ்ல ஆனி புடுங்கம சம்பளம் வாங்கின தட்டி கேக்கும்... (எனக்கு வேலை இருக்க அப்பொ மட்டும்..//
மக்கா ஏகப்பட்ட பெற போடவேண்டியது வருமே இந்த பதிவை எழுதின ஆழ கூட போடா வேண்டியது தான் .மெயின் ஆள் தேவா , பண்ணி ,லூசு ரமேஷ் இப்படி ஏகப்பட்ட ஆள்கள் இருக்கங்களே சீக்கிரம் ரெடி பண்ணு
களிங்கர் டீவின்னா கலாக்கா ஒரு அக்கா அரிசி மூட்ட மாதிரி வந்து நிக்குமே அதுவா தம்பி.....?
////மக்கா டெர்ரர் துரை இங்கிலீஷ் எல்லாம் பேசுது இங்க வந்து பாரேன் .நமக்கு தெரிந்த LAW ஒரே LAW தான் அது தன ஷகிலா ....கரெக்ட் தானே மக்கா//
ஊர்மிளா தெரியாதா?//
YOU MEAN URMILA MADONKKAR SHE IS AN HINDI ARTIST.......... I THINK SO
//////
I am working in International country you know...Foriegn laws, rules and regulations//////
என்றா... இது...? யாரா இப்பிடி கக்கா போனவன்.....வந்து அள்ளிப் போடுங்கடா..........!
@pani kutty
//I am working in International country you know...Foriegn laws, rules and regulations//
paruya namalu dhan kuppa kottarom.. Jan 10 varai year end solli leave vidaranam.. inga picha kara pasanga enaku christmas kooda lave illa.. :(
/////இம்சைஅரசன் பாபு.. said...
////மக்கா டெர்ரர் துரை இங்கிலீஷ் எல்லாம் பேசுது இங்க வந்து பாரேன் .நமக்கு தெரிந்த LAW ஒரே LAW தான் அது தன ஷகிலா ....கரெக்ட் தானே மக்கா//
ஊர்மிளா தெரியாதா?//
YOU MEAN URMILA MADONKKAR SHE IS AN HINDI ARTIST.......... I THINK SO/////
இந்தியன்ல அந்தப் புள்ள குதி குதின்னு குதிக்கும் போது... நல்லா சப்புக் கொட்டி பாத்துட்டு இப்போ படவா I THINK SO வா...... ?
//// TERROR-PANDIYAN(VAS) said...
@pani kutty
//I am working in International country you know...Foriegn laws, rules and regulations//
paruya namalu dhan kuppa kottarom.. Jan 10 varai year end solli leave vidaranam.. inga picha kara pasanga enaku christmas kooda lave illa.. :(////
ஆமா இங்க மட்டும்.....ங்கொயயால....?
/////உனக்கும் அந்த பெட்டுக்கும் இருந்தா கெமிஸ்ட்ரி சான்சே இல்ல.! நீ எங்கயோ போகப் போற .!/////
கலாக்கா சொல்லிட்டாங்கள்ல, இனி எங்கே போகப் போற, எல்லாம் அங்கதான்......!!!
டேய் மச்சான் செல்வா நீ பண்ணது எவ்வளவு பெரிய சாதனை பெரியதா மச்சான் எனக்கு எல்லாம் தூக்கமே வராது மச்சான்...நீ சூப்பர் மச்சான்
அருண் பிரசாத் said...
//sorry na வடை வேண்டுமா உங்களுக்கு இங்க நமீதா கேகுராங்களே யாருக்கு தருவது.....//
சின்ன பொன்னு அழுவும் அதுக்கிட்டயே கொடுத்துடு///
யே மச்சான் அருண் நானா அழுவுது இல்லடா மச்சான்....சோ.. ஸ்வீட் டா மச்சான்
\\நமீதா அக்கா என்னோட சாதனைப் பத்தி :
ஐ லவ் யூ மச்சான்\\
Fuse pona kundu bulpuku nenappa paru.. lolla paru..
நல்ல முயற்சி
அப்படி கின்னஸ் சாதனை வரை முயற்சிக்கவும்
ஹ ஹ ஹ ஹ ஹ ஹா
உங்களின் சாதனைகள் தொடரட்டும்...........
40 aavathu vadai....
\\நானும் டஸ்டர் எடுத்து அடிப்பேன் , ஆனா என்னமோ ஒரு கொசு கடிச்ச மாதிரி தட்டி விட்டுட்டு மறுபடி தூங்கிடுவான் ..\\
Urutu kattaila pottu thallirukalam..
intha thollailam irunthirukkathulla..
என்னப்பா ? என்ன? என்ன நடக்குது இங்க ????????? நாங்கல்லாம் தூங்க ஆரம்பிச்சா விடாம 28 மணிநேரம் தூங்குவோம் ........... எங்க கிட்டேவா .......
"ஐ லவ் யூ மச்சான் . நீங்க ."
"ஐ லவ் யூ"
இது கொஞ்சம் ஓவரா இல்ல
இது போன்ற கடினமான சாதனைகள் தொடரட்டும் ...
வாழ்த்துக்கள்
super!
(template comment poduvor sangam!)
nameethaa vaazhga,
kala master vaazhga,
(jollu viduvor sangam)
Selvaa, thookkam, Chemistry enna oru team!
(etho oru comment poduvor sangam)
49
vadaikku kaathiruppor sangam
50
ஆஹா, செல்வா பதிவில் நானும் வடை வாங்கிட்டேன்!
நகைச்சுவை அள்ளிப் பீறுடுகிறது
சாதனை பார்த்து நான் என்ன சொல்றேன்னா ...
தூக்கமும் கண்களைத் தழுவட்டமே...
அட கருமமே படிக்கும்போது தூங்கிட்டேன். ஹிஹி
ஒரு பாலிடால் குடிச்சிட்டு படு. இன்னும் ரொம்ப வருஷம் தூங்கலாம்.
இப்படியே நல்ல சாதனைகள் செய் தம்பி...
உங்கள் சோதனை
எல்லாமே சாதனைதான்
வெற்றி உனக்கே
வாழ்க
மொக்கை
வாழ்க உன்
தொண்டு
ha ஹா ஹா ஹா யோவ் இது சாதனை அல்ல எங்களுக்கு வந்த சோதனை
எலேய் செல்வா உனக்குள்ள இவ்வளவு திறமை ஒளிஞ்சிருக்கா..
சாதனை முயற்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்... :-) நாங்களும் முயற்சிக்கிறோம்..
மேலும் பலப் பல சாதனைகளை செய்து இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரனாமாக இருக்க வாழ்த்துக்கள்..
Post a Comment