Monday, December 20, 2010

வலை வீசலாம் வாங்க

எப்பவும் கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து சாட் பண்ணிட்டு இருக்க இனை பிரியாத தோழர்கள் பரதேசி,  கம்முனாட்டி. அவங்க ரூம் குள்ள என்ன பேசிட்டு இருக்காங்க பாக்கலாம். இவங்க ரெண்டு பேரும்  வேட்டையாடு விளையாடு இளமாறன், அமுதன் மாறி. புரிஞ்சிருக்குமே?!.

"என்னடா கம்முனாட்டி வாய் எல்லாம் பல்லா இருக்கு? அப்டி என்னத்த லேப்பி ல பாத்து சிரிச்சிட்டு இருக்க?"
"வாடா பரதேசி, இன்னைக்கு சாட்ல ஒரு பிகர் மாட்டி இருக்குடா"
"டேய், எத்தன நாள் தான்டா இப்டியே கரெக்ட் பண்ணிட்டு இருக்க, அதுக்கு நான் ஒரு சூப்பர் ஐடியா வெச்சிருக்கேன்"
"என்னடா, ரூம்க்கு கூட்டிட்டு வந்திடலாம்ன்னு சொல்றியா? கூட்டிட்டு வந்தா தான் நாம ஒன்னுமே பண்ண முடியாதே. அதுக்கு தான இப்டி சாட் பண்ணி ஆசைய தீத்துக்கறோம்?"
"அதுக்கு தான்டா. உனக்கு ப்ளாக் பத்தி தெரியுமா?"
"இல்லையே, என்ன அது?"
"நாமளே நம்ம பேர்ல வெப்சைட் ஆரம்பிசுக்கலாம்டா. என்ன வேணா எழுதலாம். அங்க கூட நெறையா பொம்பள புள்ளைங்க சுத்தீட்டு இருக்குது. அங்க போய் நம்ம வேலைய காட்டலாம்"

இதாங்க நம்ம கம்முனாட்டியும், பரதேசியும் பிளாக்ல என்டர் ஆன வரலாறு. இப்போ தெரிஞ்சிருக்குமே இவனுங்க பொழப்பு என்னனு? பசங்கனா பொண்ணுகள சைட் அடிக்கறது அவங்க ரத்தத்துல ஊறி போனது. ஆனா இவனுங்க மாறி சில பேர் பொண்ணுங்கள ஒரு சக மனுசியா பாக்க மாட்டாங்க. ஏதோ போக பொருள் மாறி பாப்பாங்க. சீ தேவா அண்ணன் பதிவ படிச்சு படிச்சு எனக்கும் அதே மாறி வருது. இப்போ ஓவர் டு இவனுங்க ப்ளாக் அனுபவம். சாட்ல அசிங்கமா பேசற எல்லாருக்கும் நேர்ல ஒன்னும் பண்ண முடியாதோ?இது என்னோட ஒரு சின்ன டவுட்.

"சரி என்ன பேர்டா வெக்க?"
"கடைந்து எடுத்த காதலன் னு வைக்கலாம்"
"அடடே கவிதையா வருதுடா உனக்கு, ஆமா என்ன தான் எழுத?"
"சும்மா எதாச்சும் எழுதலாம்டா. நல்ல கவிதை எழுதறவங்க  நெறைய பேர் இருக்காங்க. அவங்க கற்பனைய கொஞ்சம் கடன் வாங்கி, அதையே மாத்தி எழுதிடலாம். ஏன்னா கவிதை எழுதினா தான் ஈசியா எதாச்சும் பட்சி மாட்டும்"

ரெண்டு பேரும் கவிதையா எழுதி தள்ளினாங்க. 1 வாரம் ஒரு ஈ காக்கா வரல. கொஞ்சம் கொஞ்சமா திரட்டிகள் மூலமா சில பேர் வந்தாங்க. விடா முயற்சில ஒரு பெண் பதிவர புடிச்சாங்க.

"மச்சி! வெற்றி வெற்றி, இவ்ளோ நாள் கழிச்சு ஒரு பொண்ணு மாட்டிகிச்சு"
"என்னடா பேரே சரி இல்ல"
"பேராடா முக்கியம், மொதல்ல அவ என்ன பதிவு போட்ருக்கானு பாத்து அத பாராட்டுவோம். கொஞ்ச நாள் போகட்டும், அப்பறம் மடக்கிடலாம்"

கொஞ்சம் கொஞ்சமா இலை மறை காயா கண்டதெல்லாம் பேசினானுங்க. அந்த பெண் பதிவரும் இவனுங்க கேட்டதுக்கெல்லாம் நண்பர்கள் தானேன்னு பதில் சொல்லிட்டு இருந்துச்சு.

"டேய் பரதேசி பட்சி மாட்டிகிச்சுன்னு நெனைக்கறேன். வயச கேட்டா மட்டும் சொல்லவே மாட்டேங்குதே என்னடா பண்ண?"
"வயச தெரிஞ்சு நாம என்ன பண்ண போறோம்? நேர்ல வரசொல்லு, நாமளே கேட்டு தெரிஞ்சுக்கலாம்"
"நேர்ல வந்தா மட்டும் இவரு வீரத்த காட்டுவாரு பாரு. சரி வர சொல்றேன்.பாக்கலாம் என்ன சொல்றான்னு"
"என்னடா கேட்டதும் ஓகே சொல்லிட்டா. எதாச்சும் அட்டு பிகர்ரா இருக்குமோ?"
"அப்டி இருந்தா கூட பரவால்ல மச்சி. இது வரைக்கும் இவ்ளோ டீப்பா யாரு கிட்டையும் பேசியதில்ல. இப்போ இவ ஓகே தான?இது வரைக்கும் சாட்ல பேசி இருக்கோம், போன் பண்ணி பேசி இருக்கோம் . நேர்ல பேசினதே இல்லையே. என்ன தான் ஆகும்ன்னு பாத்திடலாம்."
"ஆமாடா நீ சொல்றது கூட சரி தான், எனக்கு இப்பவே என்ன நடக்குமோன்னு ஆசையா இருக்கு"
"ஹா ஹா ஹா, சரி நாளைக்கு தான் பாக்க போறோமே."

அடுத்த நாள் ரெண்டு பேரும் டிப் டாப்பா டிரஸ் பண்ணிட்டு போனானுங்க. என்ன பண்ண அவனுங்களால டிரஸ் மட்டும் தான் பண்ண முடியும்? அவனுங்க நெனச்ச மாறி அது அட்டு எல்லாம் இல்லேங்க.கொஞ்சம் நல்ல பிகர் தான். இவனுங்க வழி வழின்னு வழிஞ்சததால தான் போனா வாரம் சென்னைல வெள்ளமே வந்துச்சாமா.

"என்னங்க பரதேசி, பேசிகிட்டே இருக்கீங்க, வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு போக மாட்டிங்களா"
"ஐயோ நாங்க பேச்சிலர்ஸ். ரூம் கொஞ்சம் அப்டி இப்டி தான் இருக்கும். அங்க எல்லாம் நீங்க எப்டி (என்ன இவ ரூம் கெல்லாம் வரன்னு சொல்றா, வேற எதிர் பாக்கறா போலயே ?)
"அதெலாம் எனக்கு தெரியாதா, இஷ்டம் இல்லைனா வேணாம் விடுங்க"
"சே சே அப்டி எல்லாம் இல்லேங்க போலாம் வாங்க" 
"மொத மொதலா உங்க ரூம்கு வரென் இருங்க ஜூஸ் வாங்கிட்டு வறேன்"

ரூமுக்கு போய்ட்டு அவ அந்த ஜூஸ் குடிக்காம  அவங்க ரெண்டு பேரையும் குடிக்க வெச்சா. அதுக்கு அப்பறம் காலைல தான் எழுந்தாங்க..

"ஐயோ பரதேசி, நீயும் உன் ஐடியாவும்"

சத்தம் கேட்டு பரதேசி எழுந்தான். ரெண்டு பேர் உடம்பிலையும் ஒட்டு  துணி இல்ல. ரூமையே தொடச்சு வெச்சிட்டு போய்டா.
"மொதல் வேலை அந்த ப்ளாக் டெலிட் பண்ணனும்டா பரதேசி"
"லேப்டாப் தூக்கிட்டு போய்டா. டெலிட் பண்ண வெளிய போகணும். வெளிய போனும்னா துணி வேணும்"

அப்பறம் ஜாக்கி சான் படத்ல வர மாறி பேப்பர் கட்டிட்டு ட்ரை பண்ணாங்க.  படி இறங்கும் பொது பேப்பர் கிழிஞ்சு, அதுக்கப்பறம் என்ன ஆச்சுன்னு சொல்லி இந்த பதிவ 18 + ஆக்க வேணாம்.

இதாங்க கடைந்தெடுத்த காதலன் அழிந்த கதை. இனி எவனும் ப்ளாக் ல நட்பா பேசறவங்க கிட்ட அசிங்கமா பேச மாட்டானுங்கன்னு நெனைக்கறேன். சரி அப்டி யாராச்சும் இருந்தா சொல்லுங்க.அடுத்த முறை பேர் சொல்லி கும்முவோம்.சரி நான் கெளம்பறேன், போய் லவ் ஸ்டோரி எழுதணும்..

பின்குறிப்பு : முழுக்க முழுக்க கற்பனை. யாராச்சும் தப்பா நெனச்சா பரவால்ல நெனச்சுகோங்க. அதனால கம்பெனி கவலைபடாது.கற்பனைன்னு சொன்னா நம்பனும் சரியா?. 
யார் மனசையும் புண் படுத்த இது எழுதல, சிந்திக்கவே..


டெரர் கும்மிக்காக சுற்றுலா விரும்பி அருண் பிரசாத் 

73 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன வெளையயாட்டு இது...என்ன வெளையாட்டு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த மாதிரி நெஜமாவே சில ஜொள்ளு அனிமல்ஸ் ப்ளாக்ஸ்ல சுத்திக்கிட்டு இருக்கு......

Arun Prasath said...

ஹி ஹி... அதுக்கு தான இந்த சமூக ஆர்வம் கொண்ட பதிவு?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெறும் மயக்க மருந்து மட்டும் கொடுத்திருக்கக் கூடாது, நல்லா புடிங்கிட்டு போறமாதிரியும் பண்ணியிருக்கனும்........

Arun Prasath said...

அட என்ன அண்ணே பாவம் ஏதோ அறியா புள்ளைங்க தெரியாம பண்ணிடாங்கன்னு விடுவீங்களா... ஏன் இந்த கொலை வெறி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பின்குறிப்பு : முழுக்க முழுக்க கற்பனை. யாராச்சும் தப்பா நெனச்சா பரவால்ல நெனச்சுகோங்க. அதனால கம்பெனி கவலைபடாது.////

எந்த படுவா தப்பா நெனக்கிறது, இங்க வரச்சொல்லு, என்னான்னு பாக்கிறேன்...

Arun Prasath said...

எந்த படுவா தப்பா நெனக்கிறது, இங்க வரச்சொல்லு, என்னான்னு பாக்கிறேன்...//

அதெல்லாம் நெனைக்க மாட்டாங்க (அப்டின்னு நெனைக்கறேன்).. ஆமா எதுக்கு நினைக்கணும், குற்றம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்

வெறும்பய said...

நல்ல விழிப்புணர்வு பதிவு...

Arun Prasath said...

template பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி :)

siva said...

:)

வெறும்பய said...

Arun Prasath said...

template பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி :)

//

யாருக்கு...

கொன்னியா... அது நான் டைப் பன்னி போட்ட கமெண்ட்யா

Arun Prasath said...

கொன்னியா... அது நான் டைப் பன்னி போட்ட கமெண்ட்யா//

அப்டியா என்ன?

Arun Prasath said...

@siva
:)//

வருகைக்கும் சிரிப்பிற்கும் நன்றி

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

பன்னிகுட்டி சார் இன்னைக்கி உங்க கடைல நான் தான் வடை வாங்கிருக்கேன்

வினோ said...

தேவையான பதிவு அருண்... :)

Arun Prasath said...

கமெண்ட் மட்டும் போடறவர் பேரையும் போட்டா நல்லா இருக்கும்

Arun Prasath said...

தேவையான பதிவு அருண்... :)//

நன்றி வினோ சார்.... :)

Arun Prasath said...
This comment has been removed by the author.
ஜீ... said...

:-)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:)

Arun Prasath said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு
@ஜீ//

நன்றி

எஸ்.கே said...

ரொம்ப ரொம்ப அவசியமான பதிவு! இதுபோல் இருப்பவர்கள் இதை படித்தால்...??

Arun Prasath said...

ரொம்ப ரொம்ப அவசியமான பதிவு! இதுபோல் இருப்பவர்கள் இதை படித்தால்...??//

தெரில.... படிச்சா கண்டிப்பா கமெண்ட் வருமா என்ன?

சௌந்தர் said...

பிரசாத் இது நீங்க செய்யுற வேலை தானே...

வைகை said...

வெறும்பய said...
நல்ல விழிப்புணர்வு பதிவு...///

வைகை said...

ஐயோ பேரோட காப்பி பண்ணிட்டேனே?!!!

Arun Prasath said...

பிரசாத் இது நீங்க செய்யுற வேலை தானே...//

எப்டி தான் கண்டுபுடிகராங்களோ?

வைகை said...

ஆமா மேல புள்ளி வச்சு கோலம் போட்ருக்கே அதுக்கு என்ன அர்த்தம்?

Arun Prasath said...

ஐயோ பேரோட காப்பி பண்ணிட்டேனே?!!!..//

அடபாவமே... சந்திச்சதுக்கே இப்டியா?

Arun Prasath said...

ஆமா மேல புள்ளி வச்சு கோலம் போட்ருக்கே அதுக்கு என்ன அர்த்தம்?//

enga?

வைகை said...

Arun Prasath said...
ஐயோ பேரோட காப்பி பண்ணிட்டேனே?!!!..//

அடபாவமே... சந்திச்சதுக்கே இப்டியா?/////////இப்ப கொஞ்சம் தெளிஞ்சுரிச்சு

சௌந்தர் said...

"மச்சி! வெற்றி வெற்றி, இவ்ளோ நாள் கழிச்சு ஒரு பொண்ணு மாட்டிகிச்சு"
"என்னடா பேரே சரி இல்ல"
"பேராடா முக்கியம், மொதல்ல அவ என்ன பதிவு போட்ருக்கானு பாத்து அத பாராட்டுவோம். கொஞ்ச நாள் போகட்டும், அப்பறம் மடக்கிடலாம்///

நேத்து உங்களை ஒரு ப்ளாக் பக்கம் பார்த்தேன் அது இதுதானா...கதை சரி சரி

வைகை said...

:-)
:)

Arun Prasath said...

இப்ப கொஞ்சம் தெளிஞ்சுரிச்சு//

தெளிய கூடாதே

Arun Prasath said...

நேத்து உங்களை ஒரு ப்ளாக் பக்கம் பார்த்தேன் அது இதுதானா...கதை சரி சரி//

யப்பா உனக்கு தான் அந்த பின் குறிப்பு... படிச்சிட்டு அப்புறம் சொல்லு

சௌந்தர் said...

அருமையான விழிப்புணர்வு ஊட்டும் பதிவு வாழ்த்துக்கள்

வைகை said...

சௌந்தர் said...
அருமையான விழிப்புணர்வு ஊட்டும் பதிவு வாழ்த்துக்கள்

வைகை said...

ச்சே இப்பவும் பேரோட காப்பி பண்ணிட்டேன்

அருண் பிரசாத் said...

அட என்னமா எழுதி இருக்கான்... என்ன ராசா சொந்த அனுபவமோ?

சௌந்தர் said...

ச்சே இப்பவும் பேரோட காப்பி பண்ணிட்டேன்///

இப்படி காபி பண்ணனும்

வைகை said...

சௌந்தர் said...
ச்சே இப்பவும் பேரோட காப்பி பண்ணிட்டேன்///

இப்படி காபி பண்ணனும்//////


பெரியவங்க இப்படி சொல்லிக்குடுக்கனும்! சின்ன புள்ள நான் ஒலகம் தெரிய மாட்டேங்குது

Arun Prasath said...

அட என்னமா எழுதி இருக்கான்... என்ன ராசா சொந்த அனுபவமோ?///

என்ன எழுதினாலும் கேட் போடறாங்களே

Arun Prasath said...

பெரியவங்க இப்படி சொல்லிக்குடுக்கனும்! சின்ன புள்ள நான் ஒலகம் தெரிய மாட்டேங்குது//

யாரு சின்ன புள்ள... இந்த பதிவு எழுதினதே ஒரு கொழந்த தான்

நா.மணிவண்ணன் said...

இப்படில்லாம் கூட பண்ணலாமா இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே

பதிவுலகில் பாபு said...

சூப்பர் பதிவுங்க அருண்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/

வெறும்பய said... 9

நல்ல விழிப்புணர்வு பதிவு...//

இதுக்குதான் ஆபீஸ்ல தூங்காதன்னு சொன்னேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Arun Prasath said...

ஹி ஹி... அதுக்கு தான இந்த சமூக ஆர்வம் கொண்ட பதிவு?!///

சமூக ஆர்வம் அந்த பிகர் பேரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெறும் மயக்க மருந்து மட்டும் கொடுத்திருக்கக் கூடாது, நல்லா புடிங்கிட்டு போறமாதிரியும் பண்ணியிருக்கனும்........//

அந்த பொண்ணு உங்கள கேட்ட மாதிரியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வந்தேன் வடையை வென்றேன்..
offline

Arun Prasath said...

இப்படில்லாம் கூட பண்ணலாமா இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே//

கொஞ்சம் கெட்டி பேப்பர் ரெடி பண்ணிக்குங்க

Arun Prasath said...

சூப்பர் பதிவுங்க அருண்.//

நெசமாவா

எஸ்.கே said...

மீனுக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்? மீன்
மானுக்கு வலை போட்ட வலைக்குள்ள என்ன இருக்கும்? மான்

ஆனா இப்படி வலை போட்டா, போட்டுக்க ட்ரஸ் கூட இருக்காது!

Arun Prasath said...

வந்தேன் வடையை வென்றேன்..
offline//

யாரும் இல்லாத நேரத்தில் வந்து வடை வென்ற அஞ்சா நெஞ்சம் போலீஸ் வாழ்க

Arun Prasath said...

மீனுக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்? மீன்
மானுக்கு வலை போட்ட வலைக்குள்ள என்ன இருக்கும்? மான்

ஆனா இப்படி வலை போட்டா, போட்டுக்க ட்ரஸ் கூட இருக்காது!///


அடடா தத்துவம் கொட்டுதே..

karthikkumar said...

ப்ளாக் ல நட்பா பேசறவங்க கிட்ட அசிங்கமா பேச மாட்டானுங்கன்னு நெனைக்கறேன். சரி அப்டி யாராச்சும் இருந்தா சொல்லுங்க.அடுத்த முறை பேர் சொல்லி கும்முவோம்.சரி நான் கெளம்பறேன்//
அன்பின் அருண் என்கிட்ட இந்த மாதிரி ஒரு பக்கி அநாகரீகமா சாட்ல பேசுது. நீந்தான் அத பத்தி புனைவு எழுதணும் அது யாருன்னு ஒரு அடையாளம் சொல்றேன். யமஹா பைக்ல வூர் வூரா சுத்திக்கிட்டு வேல வெட்டிக்கும் போகாம மொக்க போடறத பொழப்பா வெச்சிக்கிட்டு இருக்கும். சீக்கிரம் எழுதுங்க.

Arun Prasath said...

அன்பின் அருண் என்கிட்ட இந்த மாதிரி ஒரு பக்கி அநாகரீகமா சாட்ல பேசுது. நீந்தான் அத பத்தி புனைவு எழுதணும் அது யாருன்னு ஒரு அடையாளம் சொல்றேன். யமஹா பைக்ல வூர் வூரா சுத்திக்கிட்டு வேல வெட்டிக்கும் போகாம மொக்க போடறத பொழப்பா வெச்சிக்கிட்டு இருக்கும். சீக்கிரம் எழுதுங்க.//


பங்காளி, நான் இத்தனை நாளா உங்கள ஆண் பதிவர்ன்னு நெனச்சிட்டு இருந்தேன்?!

karthikkumar said...

பங்காளி, நான் இத்தனை நாளா உங்கள ஆண் பதிவர்ன்னு நெனச்சிட்டு இருந்தேன்?///
ஆண்பதிவர்தான்யா ஆனாலும் விடமாட்டீங்குதே இந்த பக்கி :)

Arun Prasath said...

ஆண்பதிவர்தான்யா ஆனாலும் விடமாட்டீங்குதே இந்த பக்கி :)//

அடப்பாவி... என்ன சொன்னாலும் கேட் போடுதே

எஸ்.கே said...

ஆண்பதிவர்தான்யா ஆனாலும் விடமாட்டீங்குதே இந்த பக்கி :)///

ஓ அப்ப இந்த பதிவில் வந்தவங்க மாதிரி...

karthikkumar said...

எஸ்.கே said...
ஆண்பதிவர்தான்யா ஆனாலும் விடமாட்டீங்குதே இந்த பக்கி :)///

ஓ அப்ப இந்த பதிவில் வந்தவங்க மாதிரி.///

என்னது அப்போ நெறைய பேர்கிட்ட இந்த பக்கி வேளையாடிருக்கா.

karthikkumar said...

Arun Prasath said...
ஆண்பதிவர்தான்யா ஆனாலும் விடமாட்டீங்குதே இந்த பக்கி :)//

அடப்பாவி... என்ன சொன்னாலும் கேட் போடுதே///

சரி அப்புறம் வரேன் ஆணி .
MEET

மாணவன் said...

//மீனுக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்? மீன்
மானுக்கு வலை போட்ட வலைக்குள்ள என்ன இருக்கும்? மான்

ஆனா இப்படி வலை போட்டா, போட்டுக்க ட்ரஸ் கூட இருக்காது//

சரியா சொல்லியிருக்கீங்க

பார்த்து உஷாரா இருந்துக்கனும்

மாணவன் said...

65 ஆவது வடை

சிரிப்பு போலீசுக்கு எதிர்குத்து...

அவர்தான் வடை வாங்குவாரா...

நாங்களும் வாங்குவோம்ல.....

logu.. said...

hayyoo..hayyoo..


solrathellam sollitu..karpanaiyamm..
entha sevuthula muttikirathunu therilaiye..

கோமாளி செல்வா said...

அட பாவமே ..!! இப்படிஎல்லாமா பண்ணுறாங்க ..?

கோமாளி செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த மாதிரி நெஜமாவே சில ஜொள்ளு அனிமல்ஸ் ப்ளாக்ஸ்ல சுத்திக்கிட்டு இருக்கு......

//

பாருயா ..?!

இம்சைஅரசன் பாபு.. said...

எப்படி இந்த பொண்ணுக எல்லாம் இந்த மாதிரி பசங்கள தேர்ந்தேடுக்குதோ தெரியல .....நமக்கு ஒன்னும் சிக்க மாட்டுது ......(வையத்து எரிச்சல் தான் )

இம்சைஅரசன் பாபு.. said...

//
யார் மனசையும் புண் படுத்த இது எழுதல, சிந்திக்கவே..//

ரொம்ப .....சிந்திச்சேன் ..........ம்.ம் ..நீ நடத்து ராசா

இம்சைஅரசன் பாபு.. said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த மாதிரி நெஜமாவே சில ஜொள்ளு அனிமல்ஸ் ப்ளாக்ஸ்ல சுத்திக்கிட்டு இருக்கு......//

ஜொள்ளு விட்ட வாய வெட்டி காக்கைக்கு போடணும்

ப்ரியமுடன் வசந்த் said...

அடப்பாவிகளா ஃபாலோ பண்ணிட்டு மேல பார்த்தா ஆடுகள்ன்னு வருது 86வது ஆடா நானு அய்யய்யோ தெரியாத்தனமா மாட்டிகிட்டேனே இவிங்க பிரியாணி போட்டாலும் போடுவாய்ங்க ச்சூதானமா இருக்கணும்

இனியவன் said...

கற்பனையா அல்லது அனுபவமான்னு தெரியல. ஆனா ஜொள்ளு விடுறவங்க நிர்வாணப்படுத்தப்போவது உறுதி