அழகாய் அமைதியாய் ஆவலுடன்
ரசித்திருந்த அலைகடல் அன்று
ஆழிப்பேரலையால் அல்லோலப்பட்டிருந்தது..
மணலுடனும் சிப்பிகளுடனும்
உறவாடிக்கொண்டிருந்த சின்னஞ்சிறுசுகள்
சிதிலமடைந்து சிதறிக்கிடக்க கண்டேன்
அடக்கம் செய்ய ஆளில்லாமல்
அனாதை பிணங்களாய் ஆயிரமாயிரம்
அண்ணன் தம்பிகள்.
சிணுங்கலுடன் தழுவிச் சென்றிருக்கிறாய்
எங்கள் கால்களை இன்று
பேரிரைச்சலுடன் வந்து
அள்ளி சென்றிருக்கிறாய்
ஆயிரம் அன்னை தந்தைகளை
ரசித்திருந்த அலைகடல் அன்று
ஆழிப்பேரலையால் அல்லோலப்பட்டிருந்தது..
மணலுடனும் சிப்பிகளுடனும்
உறவாடிக்கொண்டிருந்த சின்னஞ்சிறுசுகள்
சிதிலமடைந்து சிதறிக்கிடக்க கண்டேன்
அடக்கம் செய்ய ஆளில்லாமல்
அனாதை பிணங்களாய் ஆயிரமாயிரம்
அண்ணன் தம்பிகள்.
சிணுங்கலுடன் தழுவிச் சென்றிருக்கிறாய்
எங்கள் கால்களை இன்று
பேரிரைச்சலுடன் வந்து
அள்ளி சென்றிருக்கிறாய்
ஆயிரம் அன்னை தந்தைகளை
இனி இழப்பதற்கும் உறவுகளில்லை
இறப்பதற்கும் உயிர்களில்லை- நீ
இறப்பதற்கும் உயிர்களில்லை- நீ
விளையாட்டாய் விளையாடிச்செல்ல
இனி ஏதும் பொம்மைகள் இல்லை!
இனி ஏதும் பொம்மைகள் இல்லை!
இனி ஒரு உலகம் செய்தால்!
இதனையும் மனதில் கொண்டு
தவறில்லா தலைமுறை வேண்டும்!
தவறில்லா தலைமுறை வேண்டும்!
யாரேனும் கடவுள் இருந்தால்- இந்த
வரம் மட்டும் எங்களுக்கு வேண்டும்!
**********
**********
லட்சோப லட்சம் மனித உயிர்களை அனுமதி என்று எடுத்துச் சென்ற கடலதாய் அதை உரிமையில் செய்தாள் என்று விடுவதா? இல்லை இழந்து போன எம் மக்களின் உயிர் போன அவலம் நினைத்து அழுவதா?
ர் துறந்த அத்தனை உற்வுகளுக்கும்.......எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகிறோம்!
வாழ்க்கையை கொடுத்தவளும் அவளே? வாழ்வை பறித்தவளும் அவளே?
இனி ஒரு கொடுமை இப்படி வேண்டாம் தாயே என்று கடலன்னையிடம் இறைஞ்சி.....உயி
27 comments:
ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி...
எமது அஞ்சலிகளும் ............................ஆழமான பிரார்த்தனைகளும்!
பாஸ் அழகான் கவிதை. படித்ததும் மனதை என்னவோ செய்தது
இனி ஒரு உலகம் செய்தால்!
இதனையும் மனதில் கொண்டு
தவறில்லா தலைமுறை வேண்டும்!
யாரேனும் கடவுள் இருந்தால்- இந்த
வரம் மட்டும் எங்களுக்கு வேண்டும்!//
nice one anna
ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி..
mansu valikira varigal
எனது அஞ்சலிகளும்...இனி இது போல் எப்போதும் வரகூடாது...என்ற பிராத்தனைகளும்
அன்று ஞாயிறு. காலை என் அப்பா கோயிலுக்கு சென்று விட்டார். அது பெசண்ட் நகர் அருகே உள்ள அஷ்டலட்சுமி கோயில் அது. ஞாயிறு என்பதால் கொஞ்சம் சோம்பலாக படுக்கையில் இருந்தபோது நிலம் லேசாக அதிர்வது போலிருந்தது. துக்க கலக்கம் அதை புரியவைக்கவில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கும் அது புரியவில்லை. ஆனால் தொலைக்காட்சியை ஆன் செய்தவுடன் நிலநடுக்கம் ஏற்பட்டது புரிந்தது. கடல் சீற்றம், பேரலைகள் இருப்பதாய் சொன்னார்கள். சுனாமி என்ற வார்த்தையை அப்போதுதான் முதன்முதலாக கேட்டேன். அப்பா 10 மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தார். அவர் அனுபவத்தை சொன்னார். நேரடியாக தூரத்தில் 5 அடி நீள அலை சீறிக் கொண்டு வந்ததை பார்த்ததாக சொன்னார். ஒரே திகிலாக இருந்தது. என் அப்பாவும் அவர் நண்பர்களும் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தனர்.
தொலைக்காட்சி எங்களுக்கு வெறும் சோகத்தைதான் அளித்தது. கூட்டமாக உடல்களை பள்ளத்தில் போடும் காட்சிகள் இன்னமும் மனதை பிழியும் கோர நிகழ்வுகள்! இயற்கையின் கோபம் எத்தனை மனிதர்களை பலி வாங்கியுள்ளது!
அவர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம்.
//யாரேனும் கடவுள் இருந்தால்- இந்த
வரம் மட்டும் எங்களுக்கு வேண்டும்!//
அஞ்சலி செலுத்துவோம்!!
நமது உறவுகளுக்கு எனது அஞ்சலிகள்!
எமது அஞ்சலியும் அவர்களுக்கு உரித்தாக்குக.
அத்துணை உறவுகளுக்கும் என் அஞ்சலிகள்!
எனது அஞ்சலிகளும்..
வரிகள் ஒவ்வொன்றிலும் வலிகளை உணர்வுகளுடன் பதிவு செய்துள்ளீர்கள்
ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி...
உயிர் நீத்த அத்தனை உறவுகளுக்கும் அஞ்சலிகள்!
விளையாட்டாக பதிவுகள் இருக்கும் இக்களத்தில் ஒரு இதயம் தொடும் படைப்பு!! இனி இப்படி ஒரு நிலை இப்புவியில் எவருக்கும் வரவேண்டாம்!! நட்புக்கரங்களுடன் இணைந்து..அனைவரும் பிரார்த்திப்போம். இது போன்ற உணர்வுபூர்வ படைப்புகள் இப்பதிவில் தொடர்ந்தால்.. மகிழ்ச்சியாக இருக்கும்!!
நீங்காத வடுவாகிவிட்டது... :( இனிமேலும் இதுபோல் வராமல் இருந்தால் சரி....
அஞ்சலிகளும் பிரர்த்தனைகளும்....!
இனி இழப்பதற்கும் உறவுகளில்லை
இறப்பதற்கும் உயிர்களில்லை- நீ
விளையாட்டாய் விளையாடிச்செல்ல
இனி ஏதும் பொம்மைகள் இல்லை!//
அலையாய் அடிக்கிறது இந்த வரிகள்.
எமது அஞ்சலிகளும் பிரார்த்தனைகளும்
ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு எமது அஞ்சலிகளும் பிரார்த்தனைகளும்
இதையும் படிச்சி பாருங்க
இந்தியா பைத்தியகார நாடு...?
எமது அஞ்சலிகளும் ............................ஆழமான பிரார்த்தனைகளும்!
எனது அஞ்சலிகளும்...இனி இது போல் எப்போதும் வரகூடாது...என்ற பிராத்தனைகளும்
எனது அஞ்சலிகளும் .....................
மனதை நெருடும் கவிதை ஜெயந்த்.. ஆழிப்பேரலையால் உயிரிழந்த உயிர்களுக்கு எனது அஞ்சலிகளும்.. பிரார்த்தனைகளும்... :(
எனது அஞ்சலிகள். :(
எனது அஞ்சலிகளும்..
எமது அஞ்சலிகளும்:(
படித்ததும் அன்றைய நாள் நினைவுக்கு வந்து கண்கள் சிறிது பனித்து விட்டது. இது போன்ற ஒன்றை மனித குலம் இனி சந்திக்கவே கூடாது என்று பிரார்த்திக்கிறேன்.
கவிதை வரிகள் அல்ல வலிகள் !!
இன்னுயிரை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் !!
Post a Comment