Tuesday, January 18, 2011

விர்சுவல் பொங்கல் கொண்டாட்டம்... !

,
எங்களது கும்மி குழுவில் இருக்கும் நண்பர்கள் வெவ்வேறு ஊர்களில் தங்களின் உற்றாருடன் பொங்கல் கொண்டாடினாலும், இதுவரை செய்யாத முறையில் எங்களது கும்மி ஃபோரம் மூலம் ஒன்று சேர்ந்து கொண்டாடிய பொங்கல் - ஓர் விர்ச்சுவல் பொங்கல். அது பற்றி..

நாள், 15-01-2011 , தைத்திங்கள் 1 ,    மதியம் மூன்று மணிபோல் (ஐ.எஸ்.டி) எங்கள் 'கும்மி ஃபோரத்தில்' நண்பர் டெரர் பாண்டியன்தான் ஆரம்பித்தார்.

டெரர் பாண்டியன் : எஸ்.கே & சௌந்தர் & பாண்டியான் & பெ.சொ., மாதவன், ஜெய்... யாரு எல்லாருக்கும் நெட் இருக்கு வாங்க.. :))
எஸ்.கே : வந்தாச்சு !
டெரர் பாண்டியன் : நாம ஏன் இங்க, ஃபோரத்துல பொங்கல் கொண்டாடக் கூடாது.
( இல்லியா பின்ன, சொந்த பந்த்களை விட்டு வெளி நாட்டுல இருக்குற நண்பர்களுக்கு தனிமை மறந்து ஒரு இனிய பொங்கலா இருக்கட்டுமே ! )....

டெரர் பாண்டியன் : போய் ஸ்டவ், பானை , அரிசி, தண்ணி.. எல்லா பிக்சர் எடுத்து வாங்க. நாம போரம்ல பொங்கல் வைக்கலாம்... :)))
மாதவன் : நா கூட தேவையான பொருள் தரேன்..
டெரர் பாண்டியன் : சரி... நீங்க திரட்சை, முந்திரி எல்லாம் எடுத்து வாங்க....
(எலேய் எஸ்.கே.. இருக்கியா இல்லையா... டைம் ஆகுது..)

மாதவன் : முதல்ல, இடத்த சுத்தம் பண்ணி, கோலம் போடுறேன்..
டெரர் பாண்டியன் : இருங்க தல நான் கழுவி விடறேன்.. அப்புறம் நீங்க கோலம் போடுங்க.. :)
மாதவன் : இப்ப கோலம் ரெடி..

எஸ்.கே : இதோ, அரிசி.. ஓகேவா ?
ப. ராம்சாமி : இது புழுங்கலரிசி எஸ்கே, பொங்கலுக்கு பச்சரிசிதான் வேணும்.......
எஸ்.கே : அவசரத்துல மிஸ்டேக்காயிடிச்சி, சாரி. அரிசி நீங்களே ஏற்பாடு பண்ண முடியுமா 

டெரர் பாண்டியன் : பன்னி, உனக்கு பல விஷயம் தெரியுது மச்சி.. நீ உண்மையா விஞ்ஞானி, தான்.. :)). சரி. சரி.. போயி பச்சரிசிய சுத்தம் செய்திட்டு எடுத்து வா.
டெரர் பாண்டியன் : மாப்பு (தேவா) கரும்பு வாங்க மறந்துடேன்.. கொஞ்சம் கீழ இருக்க கடைல வாங்கி வா ப்ளீஸ்... :
தேவா : கரும்பு வாங்கியாந்துட்டேன்.... அடப்பாவிகளா மஞ்சக்கொத்து.... இருங்க இருங்க இப்ப வாங்கியாரேன்...........!


டெரர் பாண்டியன் @தேவா : அட! கரும்ப வெட்டியே வாங்கி வந்துட்டியா.. இங்க எங்க முழு கரும்பு கிடைக்குது... :)) மாப்ஸ் நீ பூஜை வேலை கவனி... :))
தேவா : சரி பூஜைய நான் பாக்குறேன்....மஞ்சள் கெழங்கு வாங்கியாந்து பானைல கட்டுங்க...!
மாதவன் : அலங்கரிக்கப் பட்ட பானை ரெடி. வாழைபழமும், கரும்பு துண்டும் கட்டிட்டேன்..

டெரர் பாண்டியன் : ஒ.கே ஸ்டவ் ரெடி, கோலம் போட்டாச்சி... பானை ரெடி...
பருப்பு, வாழைப்பழம் இதெல்லாம் இன்னும் வரலையா ? இதோ மஞ்சள்... வினோ, இத கொஞ்சம் பானைல கட்டுங்க... :)
வினோ : டன் ! மஞ்சள் கட்டியாச்சு...
பி.எஸ்.வி : கரும்புத் துண்டை பானையில கட்டுங்க
வினோ : ஏற்கனவே கட்டியாசுங்க
மாதவன் : வாழைத்தாரு இல்லாமா பொங்கலா ? ரெண்டும் ஏற்கனவே வந்திடிச்சே.. இதோ பாருங்க..

டெரர் பாண்டியன் : பன்னிகுட்டி இருக்கியா அரிசி கழுவிட்டியா?? :))
ப. ராம்ஸ் : யோவ் பச்சரிசி இப்போதான் கெடச்சிருக்கு, இரு கழுவுறேன்!

எஸ்.கே : வெல்லம் ரெடி.. ! சுத்தமான நெய்யும் ரெடி !!



டெரர் பாண்டியன் : அட பொங்கல் வேலை கலைகட்டுது... ஹா..ஹா..
ஜெயந்த் : எனக்கென்ன வேலை, நான் என்ன பண்ணனும் ?
எஸ்.கே : சாப்பிட ஆள் கூட்டிட்டு வாங்க ஜெயந்த் !
ஜெயந்த் : அதுக்கு தான் நானிருக்கனே.,..
டெரர் பாண்டியன் : ஜெயந்த், ராம்ஸ் அரிசி கழுவ போனான் கழுவிட்டானா பார்த்துட்டு ஓடிவா.. :))... டேய் டேய் அப்படியே அந்த பருப்ப கொஞ்சம் கழுவி எடுத்துவா...
ஜெயந்த் : இதோ இப்பவே பாக்குறேன்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...
தேவா : பூஜை வேலையா நா கவனிக்கறேன். தேங்காய் பழம் எல்லாம் எடுத்து வைக்கிறேன். தேங்காய்.. எங்க ?
எஸ்.கே : பழத்தை மாதவன், அப்பவே வெச்சிட்டாரே.. கவனிக்கலியா? இதோ தேங்காய், தேவா.


தேவா : பொங்கல் ரெடியா? பூசை ஆரம்பிக்கலாமா?
டெரர் பாண்டியன் : இரு மாப்பு அரிசி எடுத்துகிட்டு பன்னிகுட்டி ஓடி போய்டான்.... :)) ஜெய் பாக்க போய் இருக்கான்... :))
ஜெயந்த் : அரிசி ரெடி ஆரம்பிக்கலாமா..?
ஷமீர் அஹமது : சீக்கிரம்.. எவ்ளோ நேரம் வெயிட் பண்ணுறது..?
ராம்ஸ் : வாங்க, ஷமீர்.. நீங்களும் கலந்துகிட்டதுல ரொம்ப மகிழ்ச்சி.. (பாண்டியைப் பார்த்து ) அரிசிய குடுத்து விட்டேனே ஜெய்கிட்ட?
ஜெயந்த் : அரிசி ரெடி .. பருப்பு என்னாச்சுன்னு பாக்குறேன்..
மாதவன் : பால் ரெடி. சுத்தமான தண்ணி பைப்புல வரும்..



டெரர் பாண்டியன் : ராம்ஸ்.. ராம்ஸ்.. என்ன பண்ணுற அங்க.. ?
ப. ராம்ஸ் : சர்க்கரைப் பொங்கல்' ரெசிபி பண்ணுறேன் .
எஸ்.கே : வாழையிலை.. இதோ...

பி.எஸ்.வி. : இன்னும் பாலே பொங்கலை, அதுக்குள்ளே, இலையோட  வந்துட்டீங்களா, எஸ்கே? இதோ, "பொங்கலோ பொங்கல்" சொல்ல அடிக்க ட்ரம் செட் ரெடி.
எஸ் .கே : எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான்.
ஜெயந்த் : பொங்கல் கூட வடை இருக்கா ?

மாதவன் : வடைக்குலாம் தனியா நேரத்த வேஸ்டு பண்ண முடியாது..
அதனால.. ரெடிமேட் வடை.. வாங்கியாதிட்டேன்.

வினோத்: நன்றிங்க மாதவன்.. அதை நான் சூடு பண்ணிடுறேன்.
டெரர் பாண்டியன் : அட வடை வந்துடுச்சா பலே பலே.. :)
ஜெயந்த் : இந்தப்பா முந்திரி பருப்பு.. இதையும் சேத்துக்குங்க.....

பி.எஸ்.வி  : ஓகே, பத்த வைக்கவா, (அடுப்பத் தான்) தீக்குச்சி எடுத்தாச்சு.. இதோ பத்தவேச்சாச்சு..  விறகு அடுப்பும் ரெடி
பி.எஸ்.வி : விறகு அடுப்புல பொங்கல்-பானைய வெச்சாச்சு.. பானையில பால வெச்சிருக்கேன். அரிசி பருப்பு வெல்லம் எல்லாம் ரெடியா இருக்கா...
டெரர் பாண்டியன் : யாராவது வெல்லத்த கொஞ்சம் காய்ச்சுங்கபா... :)
மாதவன் : மொதல்ல வெல்லத்த தூள் பண்ணனும்..
வினோத் : ஏற்கனேவே காய்ச்சிட்டேனே, நான்.
டெரர் பாண்டியன் : நான் முன்னாடியே தூள் பண்ணி வெச்சிட்டேன். வினோத் காய்ச்சிட்டாராம்.. வெரி குட். :-)
ஜெயந்த் : பார்த்து பக்குவமா பண்ணுங்க... வீட்டில சமைக்கிற கனவானுங்க முன்னாடி வந்து அடுப்பை கவனிங்க..
தேவா : ஏய்.....புகை அதிகமா இருக்கு சுள்ளிய வை.......கண்ணு எல்லாம் எரியுது வீடு புல்லா புகை...!

டெரர் பாண்டியன் : இதுக்கு தான் நான் சுள்ளி பொறுக்கு வரேன் சொன்னேன்.. சௌந்தர் தான் ஈர சுள்ளி பொறுக்கி வந்துடான்... இரு நான் ஊதாங்கோல் வச்சி ஊதரேன்... அப்பா இப்போ நல்லா எரியுது.,... :)
தேவா : யாருக்குப்பா குலவை சத்தம் போடத்தெரியும் அவுங்க பால் பொங்கும் போது போடுங்க!
பி.எஸ்.வி. : ரெடியா? பால் பொங்கி வருது
வினோத் & மாதவன் : பால் பொங்குதா.. ? 'பொங்கலோ பொங்கல்' ! 'பொங்கலோ பொங்கல்' !!
டெரர் பாண்டியன்: 'ட்ரம்ஸ' எடுப்பா.. மறந்திட்டிங்களா ? :)

(எல்லோரும் ட்ரெம்ஸ் அடிச்சி, சத்தமாக சொல்லுறாங்க )

" பொங்கலோ பொங்கல்......!! "
(கொஞ்ச நேரம் கழித்து..)
மாதவன் : என்ன நடக்குது..பேச்சக் காணும்..?//
டெரர் பாண்டியன் : எல்லாம் பசி கடுப்புல இருக்காங்க... :))
எஸ்.கே : வெண்பொங்கலும் மெது-மசால் வடையும் ரெடி..
டெரர் பாண்டியன் :சரி சரி பொங்கல் ரெடி, வடை ரெடி... தேவா எங்க போனாரு.... படையல் போடணும்..... :) 
தேவா : பூஜை எல்லாம் ரெடி பண்ணிட்டேன் மாப்ஸ்... எல்லாம் கொண்டாங்க... பூஜை ஆரம்பிக்கிறேன்.....
டெரர் பாண்டியன் : இந்தா மாப்ஸ்!! பொங்கல், வடை, இலை, தேங்காய், கரும்பு, கற்பூறம்.. வேற ஏதாவது தேவையா... ?




பி.எஸ்.வி : எல்லா கடவுளும் இங்க ரெடி மணியும் ரெடி. - 
தேவா: தீபம் ஏத்திட்டேன்.
ப.ராம்ஸ் : ஒகே ஸ்டார்ட்........
ஜெயந்த் : எல்லாரும் வாங்கப்பா... சாமி கும்பிடலாம்....
தேவா:
(பூஜை போடுகிறார்) :
  பொங்கலோ பொங்கல்
சங்கரன் பொங்கல்
பட்டிப் பழுக பழுக
பால் பானை பொங்கப் பொங்க
மூதேவி முறிஞ்சோட...
சீதேவி நின்றுலங்க...

பொங்கலோ பொங்கல்...! பொங்கலோ பொங்கல்...! பொங்கலோ பொங்கல்...! பொங்கலோ பொங்கல்...!

ஒளி பரப்பி எல்லா உயிர்களுக்கும் உணர்வை கொடுக்கும் சூரியனே.. உன்னை நினைத்து எங்கள் நன்றிகளை தெரிவிக்கிறோம். டெரர் கும்மியில் இருக்கும் நாங்கள் எல்லோரும் இரத்த பந்தங்கள். எங்கள் குடும்பம்த்தில் இருக்கும் எல்லோருக்கும் எங்களுக்கும் நீண்ட ஆயுளும் நல்ல செல்வமும் எப்போதும் நிலைக்கட்டும்...

ஒத்துமையாய் எங்களை எப்போதும் செழிக்கவை...! மாம, அண்ணன், மாப்ஸ், சித்தப்பா.. என்று என்று எங்கள் எல்லா உறவுகளும் எப்போதும் தொடரட்டும்.. எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து நாங்கள் எப்போதும் ஒத்துமையாய் வாழ வேண்டும்.

யாருப்பா அது வெறும்பய அந்த மணி அடி.. நான் தீபம் காட்றேன்...! சத்தமா சொல்லுங்க மக்கா.. பொங்கலோ.............பொங்கல்.......

(எல்லோரும் சத்தமாக.. )

பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்....... ! பொங்கலோ.............பொங்கல்....... ! பொங்கலோ.............பொங்கல்.......!
-------------  இவ்வாறாக (விர்சுவல்) பொங்கல் இனிதே கொண்டாடப் பட்டது..! 

மாதவன் 

Wednesday, January 12, 2011

சிறுகுறிப்புத் திருவிழா!


முன்குறிப்பு : நாம ஒன்னாவது இரண்டாவது படிக்கும் போது இரண்டு மார்க் கேள்வில கேப்பாங்க இல்லையா , திருக்குறள் சிறுகுறிப்பு வரைக அப்படின்னு அது மாதிரி ப்ளாக் பத்தின சில சிறுகுறிப்புகள் உங்களுக்காக.

ப்ளாக் : ப்ளாக் என்பது அமெரிக்காவில் ஒரு இருதலைக் கொல்லி எருமையாகும். அது பெரும்பாலும் குளிர்ப்பிரதேசங்களில் வாழும் தன்மையுடையது. ஆனால் சில வெப்ப , மித வெப்ப பிரதேசங்களிலும் வாழ்வதாக சில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனைப் பற்றி நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பின்னூட்டம் : பின்னூட்டம் என்பது இருசக்கர வாகனங்களில் பொருத்தப்படும் ஒரு வித ஒலி எழுப்பும் கருவியாகும். இது பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு விதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை தமிழக சட்டமன்றத்தேர்தலில் இலவசத் திட்டங்களில் இது போன்ற கருவிகள் இலவசமாக வழங்கப்படலாம் என்ற அறிக்கையினை மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர் என்பது சூடான செய்தியாகும்!

பதிவு : பதிவு என்பது செவ்வாய்க் கோளில் காணப்படும் ஒரு உயிரனமாகும். அது பூமியில் வளருமா என்ற என்ற ஆராய்சிகள் தற்பொழுது நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் அந்தப் பூச்சி கொடூர விசத்தன்மை உடையது என்று கோட்டர் கோவிந்தன் பாதி மப்பில் உள்ள போது உளறியது நாம் அறிந்ததே! இருந்தாலும் அது போன்ற பூசிகளை பூமியில் வளர்க்க ஆராய்ச்சியாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பது சற்று வேதனை அளிக்கக்கூடியதாகவும் உள்ளது.

ஒட்டுப்பட்டை : ஒட்டுப்பட்டை என்பது ஒரு மனிதரின் பெயராகும். அவர் இருநூறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று தற்ப்பொழு பிறந்த குழந்தை ஒன்று திருவாய் மலர்ந்துள்ளது. அவர் காலத்தில் கல்வி அறிவு செழித்து வளர்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆயினும் அந்தக் கால கட்டங்களில் மக்கள் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தனர் என்ற புரளி கிளப்பியுள்ளது சற்று நடுக்கத்திற்கு உரியதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

எதிர் ஒட்டு  : எதிர் ஒட்டு என்பது ஒரு குளிர்பானம் ஆகும். அது ஹார்லிக்ஸ் , பூஸ்ட் போன்றது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். ஆயினும் அதனைப் பருகும் போது ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தக் கூடியதாக ஜப்பான் வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. ஆயினும் இதனை அருந்திய சிலர் அருந்திய உடனே ரத்தம் கக்கி செத்தது மகிழ்ச்சி அளிப்பதாக ஐ.நா சபைத் தலைவர் பெருமிதம் அடைந்துள்ளார்.

நீதி : நீதி என்பது ஒரு ஐந்து தலை கொண்ட , ஒவ்வொரு தலையிலும் தலா நான்கு கொம்புகள் கொண்ட , ஒரு பருமனான உருவம் உடைய கொடூர உருவம் கொண்ட அதே சமயம் பல வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் உயிரியாகும், ( அட ச்சே , நான் இந்தப் பதிவோட நீதி சொல்ல வந்து , நீதி பத்தி சிறுகுறிப்பு எழுதிட்டு இருக்கேன் )

பின்குறிப்பு : பின்குறிப்பு என்பது ஒரு பழங்கால ஒலைச்சுவடியாகும். அதில் தற்போழு ரோபோ எவ்வாறு உருவாக்குவது என்பது போன்ற நிரல்கள் C மொழியில் எழுதப்பட்டு காட்சி அளிப்பதாக திருவள்ளுவப் பெருந்தகை தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். ( மறுபடியும் பின்குறிப்பு எழுத வந்தவன் , பின்குறிப்பு பத்தி சொல்லிட்டு இருக்கேன் , சரி உங்களுக்கு ஏதும் சிறுகுறிப்பு எழுத ஆசை இருந்தா பின்னூட்டத்துல எழுதுங்க)

Tuesday, January 11, 2011

எங்கயோ, எதுலயோ தப்பு !

மொதல்ல புரியல.. எனக்குப் புரியலே.. என்ன காரணத்துக்காக அப்படி நடந்துதுன்னு புரியலை.

அதாவது சார் / மேடம், வீட்டுல அலாரம் டயம் பீஸு ரிப்பேர் ஆகிடிச்சு.. வேற வாங்கலாம்னு நேனைச்சப்ப திடீர்னு ஐடியா. அதான் வீட்டுல ரெண்டு ரிஸ்ட் வாட்ச், மூணு வால் கிளாக் எல்லாம் இருக்குதே, எல்லாத்துக்கும் மகுடமா, மொபைல் போனுகூட இருக்குது அதுலயே அலாரம் வேக்கலாமே ?அப்புறம் எதுக்கு வேற கடிகாரம் வாங்கணும் அதுவும், இப்ப இருக்குற விலைவாசியில, என்னாத்துக்கு எக்ஸ்ட்ரா செலவு பண்ணனும் ?
அப்படி நெனைச்சிதான் மொபைல் போன் அலாரம் வெச்சு எழுந்துக்க  யூஸ்   பண்ண ஆரம்பிச்சோம். நா ஆபீஸ் டயத்துக்கு போக (!) அலாரம் தேவையில்லை.  பசங்க ஸ்கூலு போக ரெடி பண்ணனுமே. அதுக்குத்தான் முக்கியமா வேணும். மொபைலுல அலாரம் வெக்குறது பெட்டெர். டெய்லி செட் பண்ண வேண்டாம். சண்டே தவிர மத்த நாளுக்கு சரியான டயத்துக்கு அலாரம் ஒரு தடவை செட் பண்ணி வெச்சாப் பொதும். அதுவே டெய்லி அடிக்கும். இந்த வசதி சாதாரண 'டயம் பீஸ்'ல  கெடையாதே, டெய்லி செட் பண்ணனுமே ?

மொதோ நாலு நாளு சரியா 'அலாரம்' வெச்சபடி அடிச்சுது, அஞ்சாவது நாளு 'சாட்டர்டே', அலாரம் அடிக்கலை. செட்டிங்க்ல ஏதாவது கோளாறா இருக்குமா ? நல்ல வேளை இது ரெண்டாவது(இந்த மாசத்துல) சாட்டர்டே, ஸ்கூலு கெடையாது, கஷ்டமில்லை. மொபைல் அலாரம் செட்டிங்க ஒரு தடவை... ம்ம்ம்ம்.. அஞ்சு தடவை செக் பண்ணி பாத்தாச்சு. அலாரம் செட்டிங்க்ல ஒரு தப்பும் இல்லை. சரி இதே செட்டிங்க்ல நாளைக்கு பாக்கலாம்.

மத்தாநாளு சண்டே நிம்மதியா தூங்கலாம்னு பாத்தா. அடிச்சு எழுப்பிடிச்சு அலாரம். என்னாடா பேஜாராகீது (பேஜர் இல்ல, பேஜாரு.. சென்னை பாஷை). வந்திச்சு எனக்கு கோபம். அப்படியே மொபைல எடுத்து ஆஃப் பண்ணிட்டு  தூங்கிட்டேன், அப்புறம் பாத்துக்கலாம் மிஸ்டேக்க.

சாவகாசமா எழுந்து, ஒரு முடிவுக்கு வந்தேன். இன்னிக்கி சண்டே கடை இருக்குதோ இல்லையோ ? இருந்தா வேற அலாரம் டயம் பீஸு வாங்க வேண்டியதுதான். மொபைல் போன் அலாரம் இப்படி கவுத்து விட்டுடிச்செனு பொலம்பிகிக்கிட்டு, மறுபடியும் 'அலாரம்' செட்டிங்கப் பாத்தேன். எல்லாம் நல்லாதான் இருக்கு. திங்கள் முதல் சனி வரை, (ஞாயிறு தவிர) 05:45 AM, காலை-மாலை குழப்பமில்லை. தேதி சரிதான்.. மாசமும் சரியாத்தான் இருக்கு.. அட.. ஒரு நிமிஷம்.. யுரேகா! யுரேகா!! யுரேகா!!! அஹா, தேதி(மாசம், வருசம்) செட்டிங்க்ல வருசம் 2012னு இருக்கே..

8ம் தேதி 2011ல சாட்டர்டே ஆனா 2012சண்டே -  அலாரம் நோ  !
9ம் தேதி 2011ல சண்டே ஆனா 2012மண்டே - அலாரம் எஸ் !


நீதி : அட்வான்ஸா ஒரு சில மேட்டருல இருக்கப்டாது ! 
---------------------------------------------------

Saturday, January 8, 2011

நகைகள் விற்பனைக்கு....!

நான் இணையத்தில் படித்த சில நல்ல ஜோக்குகளை மொழிபெயர்த்து இங்கே அவ்வப்போது அளிக்க விரும்புகிறேன்! ரசித்து மகிழுங்கள்! நன்றி!
 
அமெரிக்காவிலுள்ள சிறிய ஊர் ஒன்றின் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்கு சாட்சியம் அளிக்க வந்திருந்த மிகவும் வயதான பெண்மணியிடம் வக்கீல் கேட்டார்:

"திருமதி ஜோன்ஸ், என்னை உங்களுக்குத் தெரியுமா?" அதற்கு அந்தப் பெண்மணி,

"ஏன், கண்டிப்பாக எனக்கு உங்களைத் தெரியும் திரு. வில்லியம்ஸ். உங்களை  எனக்கு சின்னக் குழந்தையிலிருந்து தெரியும், உண்மையைச் சொன்னால் நீங்கள் எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம். பொய் சொன்னீர்கள், உங்களுடைய மனைவிக்கு துரோகம் செய்தீர்கள், நம் மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததோடில்லாமல் அவர்களுக்கு பின்புறம் போய் அவதூறு பேசினீர்கள். நீங்கள் ஏதோ பெரிய வக்கீல் என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் நீங்கள் வெறும் பேப்பர் தள்ளும் இயந்திரத்தின் பெறுமானமே இருப்பீர்கள் என்பதை உங்களுடைய மூளையால் இன்னமும் உணர முடியவில்லை. ஆமாம், எனக்கு உங்களைத் தெரியும்."

இதைக் கேட்ட வக்கீல் திக்கித்து நின்றுவிட்டார். என்ன செய்வது என்று
தெரியாமல் எதிரே அமர்ந்திருந்த எதிர்கட்சி வக்கீலை காண்பித்து கேட்டார்,

"திருமதி ஜோன்ஸ், எதிர்கட்சி வக்கீலை உங்களுக்குத் தெரியுமா?"

அவள் மறுபடியும், "ஏன், கண்டிப்பாகத் தெரியும். திரு. பிராட்லியை எனக்கு
அவருடைய இளமைக் காலத்திலிருந்து தெரியும். அவர் ஒரு சோம்பேறி,
கண்மூடித்தனமாக எதையும் நம்புபவர், அது மட்டுமின்றி அவருக்கு குடியில்
பிரச்சினை இருக்கிறது. எவருடனும் ஒருங்கான உறவை அவரால் உருவாக்க முடிவதில்லை, அவருடைய சட்டப் படிப்பு இந்த மாநிலத்திலேயே மோசமானது. அது மட்டுமின்றி அவருடைய மனைவிக்கு துரோகம் செய்து மூன்று பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றார். அதில் ஒரு பெண் உங்களுடைய மனைவி என்பதும் எனக்குத் தெரியும். ஆமாம், எனக்கு அவரைத் தெரியும்."

எதிர்கட்சி வக்கீல் கிட்டத்தட்ட மயக்கம் போடாத குறை.

நீதிபதி இரண்டு வக்கீலையும் தனது மேஜைக்கு அழைத்து மிகவும் மெல்லிய குரலில் கூறினார், "கொய்யாலே! உங்க ரெண்டு பேர்ல எவனாச்சும் அவகிட்ட என்னைத் தெரியுமான்னு கேட்டீங்க, உங்க ரெண்டு பேரை எலக்ட்ரிக் சேருக்கு அனுப்பிடுவேன்!"

**************************

ஒரு ஆள் ஒரு குதிரை வாங்கினாரு. அந்த குதிரையை விற்றவன் விக்கிறப்ப சொன்னான். “சார் இது அதிசய குதிரை. அப்பாடின்னு சொன்னா ஓட ஆரம்பிக்கும். அய்யயோன்னு சொன்னா நின்னுடும்”


அந்த ஆள் ஆச்சரியப்பட்டு குதிரை வாங்கிட்டாரு. குதிரையில ஏறி “அப்பாடி”ன்னாரு. குதிரை ஓட ஆரம்பிச்சிச்சு. பயங்கர வேகம். அங்க மலை சரிவு வேற. அது ஒரு பள்ளம் ஓரத்துக்கு வந்துச்சு. அந்த ஆள் பயந்து “அய்யய்யோ”ன்னு கத்தினாரு.
 

குதிரை உடனே நின்னுடுச்சு.
 

அவர் “அப்பாடி”ன்னு சொல்லிகிட்டே பெருமூச்சு விட்டாரு. குதிரை உடனே...

**************************

ஒரு ஆரம்ப பள்ளிக்கூடம். அங்க ஒரு கிளாசுக்கு டீச்சர் ஒரு கேமரா கூடவே சில பசங்களோட ஃபோட்டோக்களோட வந்தாங்க. ஒரு பையன் கேட்டான். 

“டீச்சர் ஏன் நீங்க கேமராவை எடுத்துட்டு வந்தீங்க” 

டீச்சர் ஆச்சரியமாகி “குரூப்பா சில போட்டோ எடுத்துக்கிட்டீங்கன்னா. நீங்கெல்லாம் பெரிசா ஆனதுக்கப்புறம், உங்க நண்பர்கள், சொந்தகாரங்க கிட்ட அந்த போட்டோக்களை காமிச்சு பெருமையா சொல்லலாம், இவ ரமேஷ் போலீசாயிட்டான், இவன் ராம் தொழிலதிபராயிட்டாம், இவன் சங்கர் வக்கீலாயிட்டான், இவன் பாபு டாக்டராயிட்டா.....  ”
 

அப்ப பின்னால இருந்து ஒரு குரல் வந்துச்சுச்சு ”இது எங்க கிளாஸ் டீச்சர் இப்ப உயிரோட இல்ல.”

**************************

ஃபிளாஷ் நியூஸ்: இரண்டு பேர் உட்காரும் வசதியுள்ள ஒரு பிளேன் ஒரு கல்லறைத் தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது. அப்பகுதி சர்தார் போலீஸ்கள் 500 உடல்களை தோண்டியெடுத்தனர். மேலும் உடல்கள் தோண்டப்பட்டு வருகின்றன......

**************************
பார்க்க முரட்டுத் தனமா இருந்த ஒரு ஆள் தன்னோட பைக்கில ஒரு பாருக்கு போனான். வண்டியை பாருக்கு முன்னாடி நிறுத்திட்டு உள்ளே போய் சாப்ட்டு வெளியே வந்தான். அங்கே அவன் பைக்கை காணோம்!
 

“அப்படியா!”ன்னுட்டு பாருக்குள்ளே போய், ”நான் இன்னும் ஒரு கிளாஸ் சாப்பிடப் போறேன். நான் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள என் பைக் வரலை, எங்க ஊர்ல நான் என்ன பண்ணேனோ அது இங்கயும் நடக்கும்!” அப்படின்னு கோபமா கத்தினாரு. 
 

உடனே பார் மேனேஜேரு அங்க இருந்த ஆளுங்க எல்லாம் எப்படியோ தேடி அவர் வண்டியை கண்டு பிடிச்சு பா முன்னாடி நிறுத்திட்டாங்க. பைக்கரானும் கிளம்பினான். கிளம்புறப்ப ஒருத்தர் கேட்டாரு...
 

“சார் உங்க ஊர்ல என்ன நீங்க பண்ணீங்க?”
 

அவன் பதில் சொன்னான் “வீட்டுக்கு நடந்தே போனேன்!”

**************************

இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது.

அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார், “இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும்”. மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் “நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் B.C.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்” என்று!

**************************
ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸ், நியூயார்க் போலீஸ், சர்தார் போலீஸ் மூணு பேருக்கும் சிறந்த போலீஸ் அவார்டுக்காக போட்டி வச்சாங்க. போட்டி என்னன்னா ஒரு காட்டுக்குள்ள போய் ஒரு பெரிய சிங்கத்தை முடிஞ்சவரை சீக்கிரமா புடிச்சிட்டு வரனும். யார் சீக்கிரம் புடிச்சிட்டு வராங்களோ அவங்க ஜெயிச்சாங்க!
 

முதல்ல ஸ்காட்லாந்துயார்டு போலீஸ் போனாரு. 15 நிமிசத்தில ஒரு பெரிய சிங்கத்தை புடிச்சிட்டு வந்துட்டாரு. அடுத்து நியூயார்க் போலீஸ் போனாரு. அவரும் ஒரு சிங்கத்தை 15 நிமிசத்தில புடிச்சிட்டு வந்துட்டாரு. கடைசியா சர்தார் போலீஸ் போனாரு. 15 நிமிசம் ஆச்சு வரலை. அரை மணி நேரம், இரு மணி நேரம் ஆச்சு. ஆனா அவர் வரவே இல்லை. அவரை தேடிக்கிட்டு நடுவர்களும் மற்ற போலீஸ்களும் போனாங்க. நடுக்காட்டுல அந்த சர்தார் போலீஸ் ஒரு கரடியை ஒரு மரத்தில கட்டி வச்சு அடிச்சிகிட்டு இருந்தாரு.
 

”மரியாதையா ஒத்துக்கோ நீ ஒரு சிங்கம்னு!”




டெரர் கும்மிக்காக 

எஸ்.கே




Tuesday, January 4, 2011

25 பைசா இன்னும் நீ வைச்சிருக்கியா...?



நான் இதை சொல்வதினால் என்னை கஞ்ச பிசுநாறி  என்று சொன்னாலும் பரவாயில்லை பதிவுலக அன்பர்களே .....நண்பர்களே ..சகோதர ....சகோதிரிகளே (இதுக்கு தான் அதிகமா அரசியல் மீட்டிங் கேக்காதேன்னு சொன்னா கேட்கணும் ).
சரி வரும் ஜூன் 30  தேதி முதல் 25 பைசா செல்லு படியாகாது என்று RESERVE BANK அறிவித்து விட்டது (25 பைசா இன்னும் நீ வைச்சிருக்கியா ன்னு யாரும் கேக்க கூடாது )எலேய் ரமேஷ் , டெர்ரர் ரெண்டு பெரும் என்ன நினைக்கிறீங்க ன்னு தெரியும் என்னை சரியான பிச்சைகார பயன்னு தானே நினைக்கீறீங்க பரவாயில்லை  எண்ணி கொள்ளுங்கள் .

நானும் ரமேஷும் வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றோம் சரி வரும் போது பிச்சைகாரன் ஒருத்தன் நின்றான் நான் 5 ரூபாய் எடுத்து கொடுக்க போனேன் .ரமேஷ் என் கையை பிடித்து என்ன பெரிய ராஜ பரம்பரயா நீ அப்படின்னு சொல்லிக்கிட்டு 1 ரூபாய் கொடுத்தான் அந்த பிச்சைகாரன் அந்த ரூபாயை ரமேஷ் மூஞ்சில விட்டு அடித்தான் .ரமேஷ் மூக்குல இருந்து ரத்தம் .அவனுக்கு  தான் பிஞ்சு  மூக்கு ஆச்சே .சௌந்தர் யார் அந்த பிச்சை காரன் ன்னு நினைகிரீய ...எலேய் அதுக்கு ஏன் டெர்ரர் பார்குற ...அவன் அந்த மாதிரி பிச்சை எடுக்க மாட்டான்...(இப்ப சொல்லுங்க யார் பிச்சை காரன் ?..யார் கொடை வள்ளல்..?என்று ) 

சரி சரி மேட்டர்க்கு வருவோம் எப்போதுமே இப்படி தான் சொல்ல வந்தத சொல்லாம .....

எங்கள் ஊரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 60 .59 காசு .ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு கிட்டு 60 .50 காசு கொடுத்தால் பெட்ரோல் பங்க்ல  வாங்க மாட்டாங்க  61 ரூபாய் கொடுத்தால் மீதி கிடைக்க மாட்டுது . இது என்ன நியாயம் நீங்களே சொல்லுங்கள் .சரி இந்த பிரச்சனையே    வேண்டாம் என்று 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னால் 99 .96 பைசா வந்தவுடன் பெட்ரோல் போடுவதை நிறுத்தி விடுகிறார்கள் .என்னய்யா டெய்லி இப்படி தானே போடுகிறீர்கள் என்றால்  பையன் பல்லை காண்பிக்குறான். (நான் என்ன பல் டாக்டரா) இப்படி போட்டாலும் 4 பைசா அவுட் .

அரசு 5 பைசா ,10 பைசா ,20 பைசா ,இப்பொழுது 25 பைசா செல்லாது  என்று கூறிவிட்டது .ஆனால் விலை மட்டும் ஏன் இப்படி நிர்ணயிக்கிறார்கள் என்று தெரியவில்லை .அந்நியன் படம் தான் நினைவுக்கு வருகிறது 5 பைசா வைச்சு எத்தனை  கோடி மக்கள் பணம் போகிறது .இந்த விலை கரெக்டா ரவுண்டு அப் பண்ணி  பைசாவில் இருந்தால் நல்லதுதானே .மக்களும் பெட்ரோல் பங்கில் சண்டை இட மாட்டார்கள் .சில்லரை  போன்ற விசயங்களுக்காக  உரிமையாளர்களுக்கு பிரச்சனை வராது அல்லவா ?செயல் படுமா அரசு ?

அவங்க மட்டும் ரவுண்டு பண்ணி  கொள்ளை  அடிக்கிறாங்கப்பா.அறுபதுனாயிரம் கோடி. ௦௦176000 கோடி இப்படி அடிக்கிறாங்க . 

ஒரு பைசாவா இருந்தா என்ன ஐந்து பைசாவா இருந்தா என்ன பணம்...பணம் தான் இது  பெட்ரோல் பங்கில் மட்டும் இல்லை எல்லா கடைகளிலும் இப்படி தான் நடக்குது.

டெரர் கும்மிக்காக
இம்சைஅரசன் பாபு.


Monday, January 3, 2011

பாம்பு....பாம்ம்ம்ம்ம்........பு..!


வழக்கபடி பஸ்ல ஏறி உக்காந்தேங்க.. ஆமா. கல்லூரி விடுமுறைக்காக திருப்பத்தூர்ல இருந்து புதுக்கோட்டை வந்து புதுக்கோட்டைல இருந்து பட்டுக்கோட்டை போற பஸ்ஸேதான்....! நான் ஏறுனப்ப கூட்டமே இல்ல. அப்புறம் பாத்தீங்கனா திபு திபுனு கூட்டம் ஏறி, பஸ் கிட்டத்தட்ட ஃபுல்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! அப்பா! இந்த காலை 11 மணிக்கே வெயிலு கொளுத்துற கொளுத்துல ஒரே புழுக்கம் பஸ்ஸுக்குள்ல...

அடிச்சு பிடிச்சு பஸ்ஸும் கிளம்பிடுச்சு... வழக்கப்படி நாம முன்னாலதானே உக்காருவோம்..(ஏன்னு எல்லோருக்கும் தெரியும்..ச்சும்மா கேள்வி கேக்கணுமின்னு கேக்கப்பிடாது.....அது வாலிப வயசு..(மறுபடி உள் கேள்வி கேக்குறான் பாரு  ஒருத்தன் இப்போ கிழவனான்னு.........முடியல...))

பஸ்ஸு சீறிப்பாயுது.. நான் கைல வைச்சிருந்த சூனியர் (ஜூ போடக்கூடாது அது வட மொழி ஹி ஹி ஹி)விகடன எடுத்து புரட்டிகிட்டே.. கையில இருந்த முறுக்கை சாப்பிட ஆரம்பிச்சேன்.. என் பக்கத்துல முக்காவாசி சீட்ல அவரே உக்காந்துகிட்டு...ஷேவ் பண்ணாத தாடியால தோள் பட்டைல குத்தி இம்சை பண்ணிகிட்டு இருந்தாரு ஒருத்தரு...ஆமாங்க ங்கொய்யால தூங்கி தூங்கி எம்மேல விழுகுறாரு... ! நானும் எம்புட்டு தடவைதான் தள்ளி தள்ளிவிடுறது...இதோ பாருங்க மறுபடி விழுறாரு மேல...ஷேவிங்காச்சும் பண்ணிட்டு வந்திருக்கலாம் ....ம்ம்ம்ம் எல்லாம் நேரக்கொடுமை...

யோவ் யாருய்யா முன்னால உக்காந்துகிட்டு எச்சிய துப்புறது போய்கிட்டு இருக்குற பஸ்ஸுல துப்புனா பின்னால இருக்கவங்க மேல படும்னு தெரியாது...ச்சே...என்ன இது ...முன்னால ஒருத்தர் கத்த.. பாதிக்கப்பட்ட நானும் கர்ச்சிப்பால தொடச்சிகிட்டே...அறிவே இல்லப்பா யாருக்கும்னு சொன்னது யாருக்கும் கேட்டு இருக்காது...

கூட்டம் உள்ள பிதுங்கி வழியுது கண்டக்டர் உள்ள போ.. உள்ளபோன்னு திணிச்சுகிட்டே டிக்கட் போட்டுகிட்டு இருந்தாரு...'இதுக்கு மேல உள்ள போகணும்னா பின்னால உடைச்சுகிட்டு கீழ விழுந்தாதேன்.. ஒரு பெருசு.. சிரிக்காம சொல்லிட்டு.. பேசாம நின்னுச்சு...' நான் திரும்பி பாத்தவுடன் அங்கிட்டு திரும்பிகிடுச்சு..

'ஏம்பா ஆவணம் நாலு ரோட்ல என்னிய இறக்கிவிட்ருப்பா ' ஒரு ஆயா டிரைவர்கிட்ட கெஞ்சிகிட்டு இருந்துச்சு.. டிரைவர் ஒரு ஹேர் பின் பெண்ட்ல கஷ்டப்பட்டு ஸ்டேரிங்க வளைக்க முடியாம வளைசுகிட்டு சொன்னாரு...' ம்ம்ம்ம்ம்ம் ஏன் ஆத்தா நான் பொழைக்கிற பொழப்புல உன்னிய வேற இறக்கி விடணுமா.. ம்க்கூம்ம்.. வண்டிய நிறுத்துறேன் நீயா இறங்கிக்கன்னு அந்த கடுப்புலயும் ஒரு நகைச்சுவைய தெளிச்சுவிட்டுட்டு.. கியர்பாக்ஸோடு மாரடிச்சிகிட்டு இருந்தாரு...

திடீர்னு ஒரு சத்தம்........' ஏய்..........என் பாம்ப காணம்டோய்ய்ய்ய்ன்னு...........' ஒரு முண்டாசு கட்டியிருந்த மூதேவி இப்படி கத்தவும்...டிரைவர்ல இருந்து எல்லோருக்கும் கரண்ட் அடிச்சமாதிரி ஷாக்கு........ஆமாம் முண்டாசு ஒரு பாம்பாட்டி...பாம்பு வைச்சிருந்த பெட்டிய பார்ட்டி வழில செக் பண்ணிக்க தொறந்திருக்கு... உள்ள பாம்ப காணோம்....அவரு டென்சனு பாம்ப காணொம்னு..நம்ம டென்சனு பாம்பு நம்மள போட்றுச்சுனா..???????? விளைவு...என்னவாயிருக்கும்.......

பஸ்ஸ நடுவழில நிறுத்தி புட்டு டிரைவர் மொத ஆளா கீழ குதிச்சு ஓடிட்டாரு.. நாங்க எல்லாம் அடிச்சு புடிச்சு உயிர கையில புடிச்சுக் கிழ இறங்கினோம்..(நான் முறுக்கு பாக்கெட்டோடதான் எறங்கினேன்...செத்தாலும் சாப்பிடறத விடமாட்டம்லப்பு...)

பாம்பாட்டி பஸ் புல்லா பாம்ப தேடிட்டி கீழ வந்து பாம்ப காணோம் சாமின்னு சத்தமா சொன்னான்....எல்லோரு காலுக்குள்ளயும் பாம்பு ஓடுற மாதிரி ஒரு மனப்பிராந்தி....ஹி ஹி ஹி...

ஒரே டென்சன் எல்லோருக்கும் இந்த நேரத்துலதான் இன்னோரு சி.ஆர்.சி (சோழன்ங்க) பஸ்ஸு எங்கள கிராஸ் பண்ணி போய் முன்னால நிக்குது. அந்த பஸ் டிரைவர் என்னமோ ஏதோன்னு நினைச்சு ஹெல்ப் பண்னுவோமேன்னு நிறுத்தியிருக்காரு...டபக்குனு அந்த பஸ்ல இருந்து நம்ம பஸ்ஸு பாம்பாட்டி மாதிரியே முண்டாசு கட்டுன ஒரு ஆளு வந்து இறங்கினான்...அவன் இவன பாத்துட்டு...

' டேய்........மாப்ளேய்....உன் பாம்பு என்கிட்ட இருக்குடோய்ன்னு ஒரு சத்தம் போட்டான்' நம்ம ஆளு  உடனே சந்தோசத்துல.. ஏய். காளி.....எம் பாம்பு கிடைச்சுருச்சுலேன்னு கைய எடுத்து வானத்த பாத்து கும்பிட்டு கத்திப்புட்டு........ரெண்ட மாப்ளைகளும்
 கட்டி பிடிச்சுகிட்டு நடு ரோட்ல ஒரே ஆனந்த கண்ணீரு....

வந்துச்சு பாருங்க கோபம் எல்லாருக்கும்.....அப்டியே அவிங்கள அசிங்க அசிங்கமா கேட்டுபுட்டு..........ரெண்டு பேரையும் ரெண்டு பஸ்காரங்களும் நடு காட்ல விட்டு புட்டு வண்டிய எடுத்துகிட்டு வந்தாச்சு...

மறுபடியும் ரெண்டு பேரும் வண்டி கிளம்புறதுக்கு முன்னால சாமி சாமின்னு கெஞ்சுனத யாரும் கண்டுக்கல............ஹா ஹா..ஹா..

ஊர் வந்து சேர்ற வரைக்கும் எங்க காலுக்குள்ள பாம்பு நெளிஞ்சுகிட்டே இருந்துச்சு சாமியோவ்....

கொடுமையில்ல... ...இன்னைக்கு பஸ்ல ஏறுனாலும் பாம்பாட்டிங்க அடிச்ச லூட்டி மறக்கவே முடியல சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


அப்போ வர்ர்ர்ர்ர்ட்டா!

டெரர் கும்மிக்காக
தேவா. S

Sunday, January 2, 2011

நாங்களும் ஹீரோ தான்!


பிரபல பதிவர்னு ஏதோ சொல்றாங்களே, அப்டின்னா என்னப்பா? ஏதோ ஹிட்ஸ வச்சு சொல்றதாம். இதில 2010-ல் முன்னணி  பதிவுகள்னு ஒரு லிஸ்ட் வேற வச்சிருக்காங்க. நான் தெரியாமத்தான் கேக்கறேன், ஹிட்ஸ் வர வைக்கிறது பெரிசா? நடிகை ரம்யாஸ்ரீக்கு ஆண் குழந்தை - தந்தை யார்? அப்படின்னு ஒரு தலைப்பு வச்சு பதிவு போட்டா, ஒரே நாள்ல ஆயிரக் கணக்கான ஹிட்ஸ் வராதா? ஆனா நாமலாம் அப்படி கீழ்த்தரமான பதிவு போடறது கிடையாது. நம்ம மனத் திருப்திக்காக பதிவு போடற சாதிப்பா, நாங்க!
அப்படியே பார்த்தாலும் நம்ம பிரெண்ட்ஸ் தான் முன்னணி லிஸ்ட்ல இருக்காங்க! எனக்குப் பின்னால ப்ளாக் ஆரம்பிச்சவங்க எனக்கு முன்னால போய்க்கிட்டிருக்கறது எனக்கு சந்தோஷம்தான், அதில் வருத்தமில்லை, அட, பொறாமை கூட எனக்கு இல்லைங்க! என்ன பாக்கறீங்க? நான் சொல்றதை நம்பலையா? அது உங்க இஷ்டம்.
திரும்பவும் சொல்றேன்,இந்த முன்னணி பதிவு,பின்னணி பதிவு இதெல்லாம் சுத்த ஹம்பக்! நான் அதை எல்லாம் நம்பறதே இல்லை, சொல்லப் போனா, அதை நான் எதிர்க்கிறேன் .............................................................. .........................இருங்க, ஒரு போன் வருது,
"ஹலோ, கோகுலத்தில் சூரியன் வெங்கட்டா? சொல்லுங்க, என்னது தமிழ்மணம் கடந்த மூன்று மாத முன்னணி பதிவுகள்ள என்னோட பதிவும் இருக்குதா? அதுவும் கிட்டத்தட்ட 1500 பதிவுகள்ல முப்பதாவது இடமா? ஓகே, தேங்க்ஸ்!" ........................................................

என்ன சொல்லிகிட்டிருந்தேன், ஆங்.....இந்த முன்னணி பதிவுகள் பத்தி. அதுல என்ன தப்புங்கறேன்? சும்மா ஹிட்ஸ் அது இதுன்னு சால்ஜாப்பு சொல்லாதீங்க. நல்லா எழுதினாதான மக்கள் வந்து படிப்பாங்க? யார் என்ன எழுதினாலும் வந்து படிச்சு போக மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்லை, சார்! ஏதோ என்னோட பதிவுகளும் முன்னணில வந்துடுச்சுன்னு நான் சொல்லலை. இந்த முன்னணி பதிவுகளை கிண்டல் பண்றவங்க எல்லாம் மனசாட்சியே இல்லாதவங்க, சார். வயித்தெரிச்சல்ல புலம்பறவங்க!
என்னதான் சொல்லுங்க, நாம எழுதறதை பாராட்டறவங்க இருக்கத் தான் செய்யறாங்க!
அது நமக்கு ஒரு டானிக் மாதிரி. அதுனாலதான் சொல்றேன், இந்த மாதிரி முன்னணி பதிவுகள் பத்தி எல்லாருக்கும் தெரிய வேண்டியது அவசியம்தான். நான் வரவேற்கிறேன்!

வாழ்க, பிரபல பதிவர்கள்!

Saturday, January 1, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும் டெரர் கும்மி குரூப் பன்னிகுட்டி ராம்சாமி மற்றும் பட்டாப்பட்டி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.