Friday, December 31, 2010

அவார்டு தரோம்




நேத்து நானும் என் நண்பனும் டீக்கடைக்கு போனோம். 2 டீ ஆர்டர் பண்ணி உட்கார்ந்து இருந்தோம். டீயை ஒரு கப்ல கொண்டு வந்து கொடுத்தாங்க. குடிச்சி முடிச்சிட்டோம். அதுக்கு என்ன இப்போவா? சொல்றேன் இருங்க.

நாம தான் பிரபலபதிவர் ஆச்சே... நமக்கு குடுத்த கப்பு, அவார்டு இதை எல்லாம் மத்தவங்க கூட பகிர்ந்துக்கனுமே! அதான், இந்தாங்க எல்லோரும் இந்த கப்பை அவார்டா நினைச்சி வாங்கிகங்க.

ங்கொய்யால அவார்டா குடுக்கறீங்க அவார்டு... பெரிய ஆஸ்கார் அவார்டு ... அதை அவங்க அவுங்க பிளாக்ல வேற வெச்சிகனுமாம்.... அது இல்லாம அதை மத்தவங்க கூட பகிர்ந்துக்கனுமாம்.... இந்த கப்பையும் பகிர்ந்துக்கலைனா பேய் குரூப் அவார்டு வெச்சி இருக்கறவங்க பிளாக்குக்கு வந்து வெட்டும்...

சரி அது என்னங்கடா அவார்டு கொடுக்கறீங்க. வேணும்னா ஒரு 1000 ரூபாய் பணமா குடுங்கலேன் நானும் சந்தோஷமா வங்கிட்டு போறேன். இந்தா,

என் அக்கெளண்ட் நம்பர் 420 420 420 420 420
டுபாகூர் பேங்க்
மொள்ளமாறிபேட்டை பிரான்ச்

ஆயிரம் ரூபாய் அனுப்பி வையி.

அவார்டு குடுக்கறானாம்.

இங்க இருக்கற 2 பூசாரிங்க ஏற்கன்வே ஒரு பதிவுல அன்பா சொல்லி பார்த்தாங்க. எல்லாத்துக்கு மேல போய் ஒரு பூசாரி ஒரு பிளாக்ல இருந்து திருடியும் பார்த்தாச்சு ஆனா யாரும் திருந்தற மாதிரி தெரியல...

எவ்வளோ சொல்லியும் யாரும் திருந்தல... அவார்டு குடுக்கறதையும் நிறுத்துல... (ஓ, ரெண்டும் ஒண்ணுதானா?)

இப்போ நான் குடுத்து இருக்கற கப்பை வெச்சிட்டு மத்த அவார்டை வெக்கனும்னு தீர்ப்பு சொல்லுறேன்.....

இப்போகிளம்பறேன். மறுபடி வருவேன், வந்து பாக்குறதுக்குள்ள இந்த அவார்டை வெச்சி இருக்கனும்... இல்ல எல்லா அவார்டையும் தூக்கி இருக்கனும். இல்ல, மகனே செத்த.

Thursday, December 30, 2010

நீங்களும் அரசியல்வாதியாகலாம்!!

வனிதா விஜயகுமார்: என் பையனை எனக்கு தராவிட்டால் அரசியல் ரீதியாக போராடுவேன். முடிந்தால் அரசியலில் சேர்ந்து போராடுவேன்.


விஜய்: என் படத்தை ரிலீஸ் பண்ண விட மாட்டேன்கிறாங்க. அரசியல் கட்சி ஆரமித்து போராடுவேன்.


எஸ்.ஏ.சி: என் பையனுக்கு தொடர்ந்து டார்ச்சர் தர்றாங்க. கூடிய விரைவில் விஜய் கட்சி ஆரமிப்பார்.


என்ன எழவுடா இங்க நடக்குது. மக்களுக்கு சேவை செய்ய கட்சி ஆரமிச்சாங்க. அப்புறம் கொள்ளை அடிக்க கட்சி ஆரமிச்சாங்க. இப்போ சொந்த பிரச்னையை தீர்க்க கட்சியா? அய்யோ ராமா? இது எங்க போய் முடியும்?


நாங்கெல்லாம் எவ்ளோ பெரிய மூளைகாரங்க. நான் தர்ரண்டா ஐடியா...


இது பிரபல பதிவர்களுக்கு:


- எவனாவது மைனஸ் ஓட்டு போட்டானா. கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
- உங்களை பத்தி புனைவு எழுதுறாங்களா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
- அடுத்தவனுக்கு 100 comments வருது. உங்களுக்கு 10 கூட தேறலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
-  உங்களுக்கு வடை கிடைக்கலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க. (இது செல்வாக்கு மட்டும்)
- அடுத்தவங்க பதிவை படிச்சு ஒண்ணுமே புரியலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.

இது மக்களுக்கு:


- உங்க வீட்டு கக்கூஸ்ல தண்ணி வரலையா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
- பக்கத்து வீட்டு பொண்ணு செருப்பால அடிச்சதா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.
- புது படத்துக்கு டிக்கெட் கிடைக்கலியா? கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுங்க.

(என்னது ரோடு சரி இல்லியா. அட விடுங்க. அதான் வீட்டுல டிவி இருக்கே. அதுல உக்கார்ந்து எதாச்சும் பாருங்க. ரோட்டுக்கு எதுக்கு போறீங்க? பசிச்சா கேஸ் அடுப்புல ஒரு ரூபாய் அரிசி வச்சு சமையல் பண்ணுங்க )


நீதி: வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்னு பெரியவங்க சொன்னாங்க. நான் சொல்றேன் வீட்டுக்கு ஒரு ச்சீ ஆளுக்கொரு கட்சி ஆரமிங்க. எல்லோரும் நாசமாப் போகலாம். ங்கொய்யால, யார்கிட்ட? எங்ககிட்டயேவா ? நாங்கெல்லாம் தமிழங்க. தமிழ்நாட்டுல இருக்கோம்.


மைன்ட் வாய்ஸ்: பட்டாப்பட்டி மாதிரியே பதிவு போட்டிருக்கனே. கட்சி ஆரமிச்சு அரசியல் ரீதியா போராடுவானோ?
.....

Wednesday, December 29, 2010

சாதனை முயற்சி.!

முன்குறிப்பு : கொஞ்ச நாள் முன்னாடி நம்ம கலைஞர் டிவில ’தில் தில் மனதில்’ அப்படின்னு ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்., அதுல பயங்கரமா எல்லோரும் சாதனை பண்ணினாங்க. சரி நாமளும் எதாச்சும் சாதனை பண்ணலாம்னு நமக்கு என்ன திறமை இருக்கு அப்படின்னு ரோசித்தேன். ஒரு ஐடியா வந்திச்சு , அவுங்களுக்கு போன் பண்ணி கேக்குறதுக்கு முன்னாடி அவுங்க என்னோட சாதனைப் பார்த்துட்டு அவுங்க எப்படியெல்லாம் என்ன புகழ்வாங்க அப்படின்னு நினைச்சு பார்த்தேன்.! நீங்களும் படிச்சுப் பார்த்திட்டு பாராட்டிட்டு போங்கோ.!

முதல்ல என்னோட சாதனையை அறிமுகம் செய்யுறாங்க : 
 இவர் பேர் செல்வக்குமார் , இவர் இவரோட சாதனைப் பத்தி சொன்னதுமே எங்களுக்கு  அப்படியே தூக்கி வாரிப்போட்டது , இவர் சொன்னது ஒண்ணும் சாதாரண சாதனை இல்ல , இதுவரைக்கும் உலகத்துல மிகச் சிலராலேயே பண்ண முடியுற சாதனை அது. ஆமா , அவர் சொன்ன சாதனை என்னன்னா பனிரெண்டு மணிநேரம் இடைவிடாம தூங்கப் போறதுதான். அது எவ்ளோ சிரமம்கறது நினைச்சு பார்த்தாலே ரொம்ப கஷ்டமா இருக்கு. நாங்க சொல்லுறது இதுதான் , யாரும் இந்த சாதனையை முயற்சி பண்ணிப் பார்க்க வேண்டாம். ஏன்னா இது பலநாள் பயிற்சி பண்ணி இந்த சாதனையயைபண்ணினது.!

சாதனையை முடிச்சிட்டு அதாவது பனிரெண்டு மணிநேரம் கழிச்சு எழுந்ததும் அந்த சாதனையைப்  பத்தி சுருக்கமா சொல்லுறாங்க :
இவர் இந்த சாதனையை பண்ணும் போது கொஞ்சம் கூட கஷ்டப்படாம பண்ணினது இவரோட திறமையை காட்டுது . அத விட இவர் இந்த சாதனையை பண்ணுறதுக்கு முன்னாடி இரண்டு லிட்டர் தண்ணி குடிச்சார் , அதனால எப்படியும் பாத்ரூம் போக எழுந்தரிப்பர் அப்படின்னு நினைச்சோம் , ஆனா அதுக்கு கூட எழுந்தரிக்கல.

இந்த சாதனையை நேர்ல பார்த்தவங்களோட கருத்து :

என் பேர் சௌந்தர் . செல்வா அண்ணன் வீட்டுக்குப் பக்கத்துல தான் இருக்கேன் , அவர் இந்த சாதனையை செஞ்சிடுவார்னு எனக்கு தெரியும் , ஏன்னா தினமும் எட்டு மணி வரை தூங்குறதால அவுங்க அம்மா கிட்ட அடி வாங்குவார் . அப்பவெல்லாம் இது எங்க உருப்படப்போகுதுன்னு நினைப்பேன் , அதனால இவர் இந்த சாதனையை செஞ்சதுல எனக்கு ஆச்சர்யம் இல்ல.

என் பேர் ரமேஷ் , செல்வாவோட பிரெண்ட் நானு. அவன் இந்த சாதனையை பண்ணிடுவான்னு எனக்குத் தெரியும் . ஏன்னா இந்த மாதிரி சாதனையை அவனால மட்டும் தான் பண்ண முடியும் . கலைஞர் டிவில பண்ணப்போறேன்னு சொன்ன உடனேயே அவனுக்கு திங்குறதுக்கு நிறைய வாங்கி கொடுத்து தூங்க சொன்னேன். அவனும் தினமும் நான் சொன்னத கேட்டு தூங்கினதால இந்த சாதனையை பண்ணிருக்கான்.

இப்போ மானாட மயிலாட கலா அக்கா என்ன சொல்லுறாங்க : 

இந்த சாதனையை பார்த்த உடனே அவுங்க அப்படியே மேடைல இருந்து எழுந்து HATS OFF செல்வா. சத்தியமா உன்னப் பார்த்த என்னோட சின்ன வயசு ஞாபகத்துக்கு வருது.நான் எல்லாம் சின்ன வயசுல எவ்ளோ நேரம் தூங்கிருப்பேன் தெரியுமா .? ஒவ்வொரு தடவையும் அம்மா அடிச்சு எழுப்பும் போது இன்னும் கொஞ்ச நேரம் தூங்கணும் தூங்கணும் அப்படிங்கிற வெறி , அந்த வெறில ஒவ்வொரு நாளும் தூங்கப் போவேன். ஆனா சீக்கிரமே எழுப்பி விட்ட்ருவாங்க. அதுவும் இல்லாம நீ தூங்கும் போது ஒரு தடவ அப்படியே திரும்பி படுத்த பாரு , அந்த மூவ்மென்ட் சத்தியமா என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது ( அவுங்க கண்ணுல இருந்து தண்ணி வருது ).! உனக்கும் அந்த பெட்டுக்கும் இருந்தா கெமிஸ்ட்ரி சான்சே இல்ல.! நீ எங்கயோ போகப் போற .!

நமீதா அக்கா என்னோட சாதனைப் பத்தி :

ஐ லவ் யூ மச்சான் . நீங்க பண்ணது எனக்கு எப்டி சொல்லுறது தெரில . ஆனா என்னால இது சத்தியமா முடியாது. அதுவும் இரண்டு லிட்டர் தண்ணி குடிச்சிட்டு இடைல பாத்ரூம் கூட போகாம தூங்குறது , அது யாராலையும் முடியாது.! நீங்க பண்ணினது சாதனை மட்டும் இல்ல , எல்லா இளைஞர்களுக்கும் நீங்க ஒரு உதார்.! கலக்கிட்ட மச்சான்.!

நம்ம நண்பர்கள் என்ன சொல்லுறாங்க :
முதல்ல நம்ம டெர்ரர் அண்ணன் :
இந்த நாய் இத செய்யும்னு எனக்கு நம்பிக்கையே இல்ல. ஆனா இவனாலயும் சாதனை பண்ண முடியும்னு நிரூபிச்சுட்டான். என்னால சத்தியமா இப்படி செய்ய முடியாது , ஏன் இனி எந்த நாயாலையும் இந்த சாதனையை செய்ய முடியாது! யோவ் பன்னிக்குட்டி நீயெல்லாம் எதுக்கு இருக்க , உன்ன விட சின்னப்பையன் என்னமா சாதனை பண்றான்.!

நம்ம பன்னிகுட்டி ராமசாமி அண்ணன் என்ன சொல்லுவார் :
இந்தத் தொம்பி இப்படி பண்ணுவான்னு எனக்கு நல்லாத் தெரியும்க , கழுத மேய்க்கிற பயல்தானேனு சும்மா நெனைச்சுடாதீங்க , இவன் கிட்ட இன்னும் என்னென்னமோ ஒளிஞ்சிட்டு இருக்கு , அதையும் நிதானமா படம் புடிச்சிட்டுப் போங்கோ .!

எங்க வாத்தியார் : 
இவன் இதப் பண்ணினதுல எனக்கு ஒண்ணும் பெரிய ஆச்சர்யமா தெரியலைங்க ., ஏன்னா நான் ஒருதடவ கூட இவன் பள்ளிகூடத்துல முழிச்சிருந்து பார்க்கல. சத்தியமா நீயெல்லாம் உருப்பட மாட்டே அப்படின்னு தினமும் எங்கிட்ட திட்டு வாங்குவான் . அப்ப கூட லேசா எழுந்திரிச்சு பார்த்துட்டு மறுபடி தூங்கிடுவான். நானும் டஸ்டர் எடுத்து அடிப்பேன் , ஆனா என்னமோ ஒரு கொசு கடிச்ச மாதிரி தட்டி விட்டுட்டு மறுபடி தூங்கிடுவான் .. இவனோட இந்த சாதனை எனக்கு ஒண்ணும் பெரிசா தோனல . இவனால இத விட அதிக நேரம் தூங்க முடியும் .!

பின்குறிப்பு : இது முற்றிலும் நகைச்சுவைக்காகவே , எந்த நிகழ்ச்சியையும் கிண்டல் செய்திடும் நோக்கம் அல்ல .!

                                                          
டெர்ரர் கும்மிக்காக செல்வா மற்றும் நண்பர்கள்

Tuesday, December 28, 2010

மாஸ்டர்....??????????!!!!!!!!!!


'நான் அழுதா நீங்க  கொஞ்சம் சந்தோசமா சிரிப்பீங்க அப்டீன்னு தெரிஞ்சா நான் அழுக ரெடி மக்கா '

ஸ்ட்ரெய்ட்டா மேட்டர்க்கு வர்றேன்.........

ஸ்கூல்ல படிக்கிறப்ப கடைசி பீரியட் பி.டி. பீரியட். எல்லோரும் கிரவுண்டுக்கு விளையாட போனோம் ஆனா அன்னிக்கு இஷ்டப்படி விளையாடுங்கன்னு சொல்லிட்டாங்கா ஏன்னா மாஸ்டர் வரலன்னு சொல்லிட்டாங்க.....சரி ஓ.கே.ன்னு புட்பால் விளையாடணும்னு கேட்டா கொடுக்க மாட்டேன்னு சொல்றாங்கா கேட்டா ஒரு வாரத்துக்கு குடுக்க கூடாதுன்னு வேற மாஸ்டர் சொல்லியிருக்கார்னு சொன்னாங்க.. எவரு அவருன்னு கேட்டா ஹெட் மாஸ்டர்ன்னு சொன்னாங்க........சரி கழுதை போய் தொலையட்டுமேன்னு...மரத்தடில உக்காந்து பேசிகிட்டு இருந்தோம் அப்போ என் ஃப்ரண்ட் சொல்றான்...மச்சி வாடா கட் அடிச்சிட்டு போயிடுவோம் லாஸ்ட் பீரியட்தானேன்னு.. சரின்னு தைரியமா புக் எல்லாம் எடுத்துட்டு. சுவர ஏறிக்குதிச்சு..  காம்பவுண்ட் விட்டு வெளில வந்துட்டோம்...சரி ஒரு ஹோட்டல போய் சாப்புடுவோம்னு நுழைஞ்சோம்...

ஆளுக்கு ரெண்டு புரோட்டா வைங்கனு ஒரு பத்து பேரு அதட்டலா சொன்னோம்..அப்போ சர்வர் சொன்னார்.. இருங்க மாஸ்டர் இப்போதான் வந்தாரு ரெடி பண்ணிட்டு இருக்காருன்னு......எனக்கு டென்சன் நம்ம பி.டி. மாஸ்டர் எதுக்கு இங்க வந்தாருன்னு டென்சனாகி வாங்கடா போலாம்னு கிளம்புற சமயத்துல ப்ரண்ட் சொல்றான் உள்ள இருக்குறது புரோட்டா மாஸ்டராம்... அடங்கொன்னியா அதுசரின்னு கொஞ்ச டென்சனாவே கிச்சனா பாத்துகிட்டே சாப்ட்டு முடிச்சு வெளிவ வந்து டீ சொல்ற மச்சின்னு சொன்னா கூட்டாளி மறுபடியும் சர்வர்கிட்ட சொன்னேன் 10 டீன்னு....அவன் உடனே....' மாஸ்டர் 10 டீன்னு ' கத்தினான் பாருங்க நான் டென்சனாகி டேய் இவரு யாருடா ஹெட்மாஸ்டரான்னு பயத்துல கேட்டவுடனே சர்வரே சிரிச்சுகிட்டு சொல்றான்..தம்பி இவரு டீ மாஸ்டர்னு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

ஏன்டா கொல்றீங்க இப்டின்னு நினைச்சுகிட்டு நேரே 10 பேரும் பஸ்டாண்டுக்கு வர்ற வழில ஒரு அண்ணாவ பாத்தோம் அவரு எங்க சீனியர் நாங்க 10வது படிக்கிறப்பவே அவரு +2 முடிச்சு போய்ட்டாரு..சந்தோசமா பேசிகிட்டு இருந்தப்பா என்னாண்ணா எப்டி இருக்கு காலேஜ் லைஃப் எங்க போய்ட்டு வர்றீங்க.னு கேட்டோம்.......சூப்பரா போது தம்பி இப்போ கராத்தே கிளாசுக்கு போனேன் மாஸ்டர் வரலே அதான் வீட்டுக்கு போய்ட்டு இருக்கேன்னு சொன்னான்.........எனக்கு கோபம் வந்துடுச்சு......ஏன்டா இந்த புரோட்டா மாஸ்டர் கராத்தே எல்லாம் சொல்லித்தாரறான்னு சொல்லிட்டு....அவரு அந்த ஹோட்டல்ல இருக்காருண்ணேன்னு அதான் வரல போல இருக்குன்னு சொன்னேன்.....

என் ப்ரண்ட் 'டேய் கம்மனாட்டி வாய மூடுடா எருமை.அவன் சொல்றது கராத்தே மாஸ்டர்டா'னு திட்டிபுட்டான்..ஹி ஹி ஹினு வழிஞ்சு கிட்டு....சரின்னா அப்புறம் பாக்காலாம்னு சொல்லிட்டு பஸ்டாண்ட வர்ற வரைக்கும் ஒரே யோசனை எனக்கு ங்கொய்யாலா என்ன தப்பு பண்ணினோம் கரீக்டாதேனே திங்க் பண்றோம்னு யோசிச்சுட்டு பஸ்ல ஏறி உக்காந்தோம் வீட்டுக்கு போவோம்னு...நானும் இன்னொரு ப்ரண்டும் ஒரே ஊர்.. பாக்கி டிக்கட் எல்லாம் கழண்டுபோய்ட்டாங்க.. நானும் இன்னும் ரெண்டு புத்திசாலி ப்ரண்ட்ச் மட்டும்தான்....டிக்கெட் எடுத்துட்டு......உக்காந்து இருந்த என் காதுல விழுற மாதிரி முன்னால சீட்ல இருக்கவன் ஏன் பேசனும்.. 

அவன் யார்கிட்டயோ சொல்றான் ' மச்சி சினிமா எல்லாம் சூப்பர் ஆனா பாட்டு சீன்ல மாஸ்டர் சரியா சொல்லிக் கொடுக்கல போல ஹீரோ சரியாவே ஆடலேன்னு...' அதுக்கு பக்கத்துல இருந்த ஆளு....' ஒரு படத்துல இருக்குற மாஸ்டர வச்சிதான்...டான்சே; ஆனா ஸ்டண்ட்ல மாஸ்டர் கலக்கி இருப்பாரு '

அவுங்க பேசிகிட்டே இருக்காங்க எனக்கு தலை சுத்துது.......டீ மாஸ்டர், புரோட்டா மாஸ்டர்......எல்லா பிடி. மாஸ்டர்  ஹெட்மாஸ்டர், கராதே மாஸ்டர்.......ம்ம்ம்ம் இவுங்கள்ள யாரு டான்ஸ்சொல்லி கொடுப்பா, கராத்தே மாஸ்டர் சண்டை சொல்லிக் கொடுப்பாரா ஒரே குழப்பாம இருந்ததோட.........வழில ஒரு போஸ்டர பாத்தேன்..மாஸ்டர். அஸ்வினுக்கு காதணி விழானு ஒரு போஸ்டர வேற பாத்து தொலைச்சுட்டேன்......அட இவனும் மாஸ்டரா எப்படின்னு ஒரே குழப்பமுங்க...

இந்த குழப்பத்தோட... வீட்டுக்கு போனேன் அம்மா கோபமா மாஸ்டர் இப்போதான் போன் பண்ணினாரு எங்க போய் சுத்திட்டு வர்றேன்...ம்ம்ம்ம்ன்னு இடுப்புல கை வைச்சு கேட்டாங்க


எந்த....த.த........மாஸ் ட......ர்மா...(எல்லா மாஸ்டரும் சேந்து என்ன ஒரு வழி பண்ண எனக்கு மூளை குழம்பிப் போச்சு.......) அப்டீன்னு கேக்க

புரோட்டா மாஸ்டரா? டீ மாஸ்டரா? டான்ஸ் மாஸ்டரா? பி.டி. மாஸ்டரா? கராத்தே மாஸ்டரா? ஸ்டண்ட் மாஸ்டரா? இல்ல.......கடைசியா பாத்த அந்த குட்டி பையன் மாஸ்டரா?

என்னடா ரொம்ப யோசிக்கிறா ட்யூசன் போகமா கட் அடிச்சீல்ல உன் டீயூசன் மாஸ்டர்டா அம்மா சொல்லிக்கிட்டு இருக்கும் போதே..........நான் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்...........

நீங்களே சொல்லுங்க மக்கா எம்பூட்டு கன்பீசன்...பேர மாத்தி மாத்தி வைக்காமா என்ன மாதிரி ஆளுகளுக்கு எம்ப்பூட்டு கன்பீசன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


அப்போ வர்ட்ட்ட்ட்டா...!

டெரர் கும்மிக்காக
தேவா. S

பின் குறிப்பு: அடுத்த நாள் போஸ்ட்மேன் வந்து அப்பாகிட்ட பேசிட்டு இருந்தார் சார் உங்களுக்கு ஒரு ரிஜிஸ்டர் போஸ்ட் வந்து திரும்பி போஸ்ட் ஆபிசுக்கே போய்டுச்சு.....நீங்க போய் அங்க வாங்கிக்கோங்கன்னு..சொன்னார்...

அப்பா கேட்டார் போஸ்ட் ஆபீசுல யார பார்க்கணும்னு.....அதுக்கு போஸ்ட்மேன் சொல்றாரு...........

'போஸ்ட் மாஸ்டரைத்தான் ' அப்டீன்னு

வீட்டுக்குள்ள டி.வி பாத்துட்டு இருந்த நான் மறுபடி....மயக்...க்க்கமாயிட்டேங்க...%$£!!!****(^%$!
 

Monday, December 27, 2010

தயவு செய்து இந்தப் பதிவைப் படிக்காதீங்க!

தயவு செய்து இந்தப் பதிவைப் படிக்காதீங்க! 

தயவு செய்து இந்தப் பதிவைப் படிக்காதீங்க! சார், மேடம், திரும்பவும் சொல்றேன், இந்தப் பதிவு உங்களுக்கானது அல்ல, அதுனால இதுக்கு மேலயும் இந்த பதிவைப் படிக்காதீங்க, உங்க வசதிக்காக மேலும் மூணு நாலு பிளான்க் வரி விடறேன், அப்படியே திரும்பிப் போய்டுங்க!













பாத்தீங்களா, அவ்ளோ சொல்லியும் இந்தப் பதிவைப் படிக்க வர்றீங்க!

இதுதான் சார், நான் சொல்ல விரும்பறது. ஒரு விஷயத்தை செய்யாதேன்னா அந்த விஷயத்து மேல தன்னால ஒரு ஆர்வம் வந்துடுது. சின்ன பசங்களும் அப்படிதான். ஒரு காரியம் தப்பான ஒண்ணு, அதை செய்யவே கூடாதுன்னு யார்கிட்ட வேணும்னாலும் சொல்லிப்பாருங்க, உடனே அந்த காரியத்த செஞ்சு முடிக்க ஒரு வேகம் வரும்.

ஆகவே, மக்களே, பிறர் தவறு செய்யும்போது அது தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்பினால், அதன் சாதக பாதகங்களை விளக்கி சொன்னால் மட்டுமே மற்றவர்களுக்கு புரியும் என்பதை எடுத்துக் காட்டவே இந்தப் பதிவு!

நன்றி!

Sunday, December 26, 2010

ஆழிப்பேரலை..


அழகாய் அமைதியாய் ஆவலுடன்
ரசித்திருந்த அலைகடல் அன்று
ஆழிப்பேரலையால் அல்லோலப்பட்டிருந்தது..

மணலுடனும் சிப்பிகளுடனும்
உறவாடிக்கொண்டிருந்த சின்னஞ்சிறுசுகள்
சிதிலமடைந்து சிதறிக்கிடக்க கண்டேன்

அடக்கம் செய்ய ஆளில்லாமல்
அனாதை பிணங்களாய் ஆயிரமாயிரம்
அண்ணன் தம்பிகள்.

சிணுங்கலுடன் தழுவிச் சென்றிருக்கிறாய்
எங்கள் கால்களை இன்று
பேரிரைச்சலுடன் வந்து
அள்ளி சென்றிருக்கிறாய்
ஆயிரம் அன்னை தந்தைகளை

இனி இழப்பதற்கும் உறவுகளில்லை
இறப்பதற்கும் உயிர்களில்லை- நீ
விளையாட்டாய் விளையாடிச்செல்ல
இனி ஏதும் பொம்மைகள் இல்லை!


இனி ஒரு உலகம் செய்தால்!
இதனையும் மனதில் கொண்டு
தவறில்லா தலைமுறை வேண்டும்!
யாரேனும் கடவுள் இருந்தால்- இந்த
வரம் மட்டும் எங்களுக்கு வேண்டும்!

**********


லட்சோப லட்சம் மனித உயிர்களை அனுமதி என்று எடுத்துச் சென்ற கடலதாய் அதை உரிமையில் செய்தாள் என்று விடுவதா? இல்லை இழந்து போன எம் மக்களின் உயிர் போன அவலம் நினைத்து அழுவதா?

வாழ்க்கையை கொடுத்தவளும் அவளே? வாழ்வை பறித்தவளும் அவளே?

இனி ஒரு கொடுமை இப்படி வேண்டாம் தாயே என்று கடலன்னையிடம் இறைஞ்சி.....உயிர் துறந்த அத்தனை உற்வுகளுக்கும்.......எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகிறோம்!

Saturday, December 25, 2010

கலாட்டாவாய் ஒரு காலம்....!

திமிரு ஜாஸ்திதான் இப்பவும் அப்படிதான் ஆனா காலேஜ் படிக்கும் போது சொல்லவே வேணாம் ஹி ஹி ஹி நடந்ததெல்லாம் காமெடி ஆன கொடுக்குற பில்டப்பு உங்கவீட்டு இல்ல எங்க வீட்டு இல்ல ...

வடிவேலு மாதிரி கெத்தா நிப்போம்ல....ஆன உள்ள வெட வெடன்னு ஆடும்...அதுவும் அந்த கடைசி மேஜர் பிராக்டிக்கல்ல நடந்த கூத்தும் பிசிக்ஸ் பிராக்டிகல் நடந்த கூத்தும்....சிரிச்சு மாள முடியாது மக்கா

சால்ட் டைட்ரேசன் ஆரம்பிச்சு ஒரு 20 நிமிசத்துல என் மாப்ள ஜாபர் பேப்பர கொடுத்துட்டு போய்ட்டான்.. எல்லாம் முடிச்சு கிழிச்சுபுட்டு (எங்க போகும் எதுத்தாப்ல இருக்குற பக்ஸ் கடையில போயி தம்ம போடத்தான்).....நான் ரொம்ப போராடி பிராக்டிகல் பண்றேன் அங்கிட்டு பர்ஸ்ட் மார்க் எடுக்குற கவிதா, காளிதாஸ் எல்லாம் திணறிகிட்டு இருக்குற சமையத்துல ஜாபர் மட்டும் எப்படி??? எனக்கு ஒரே ஆச்சர்யம்தான்...

ஜாபர் யாரு தெரியுமா? அவன் அ.தி.மு.க ஜெ. பேரவை தலைவரா இருந்தான் அப்பவே! அப்பவேன்னா என்ன, 1947 என்னமோ நம்மல அந்த காலத்து ஆளு மாறி பாக்குறீக ஏப்பு?  1996 தான்.... 

ஒரு தடவை கிளாஸ்ல நோட்ஸ் கொடுத்துட்டு இருந்தாரு புரபசர்... எல்லோரும் எழுதிட்டு இருந்தோம் ...டக்குனு நிறுத்திபுட்டு... ஜாபர் எந்திரிச்சு படி நான் கொடுத்த நோட்சன்னு சொல்றாரு புரபசரு...ங்கொய்யால ஜாபர் என் நோட்டை புடுங்குறான் படிக்க..கடைசி பெஞ்ச்லதான் உக்காந்து இருப்போமா சோ.. புரபசர் கவனிக்கவே இல்ல...

நான் என் நோட்ட கொடுத்துட்டு அவன் ஏன் என் நோட்ட புடுங்குனான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்...அப்போ அவன் நோட்டை சைடு கண்ல பாத்த நான் மயக்கம்போட்டு விழாத குறைதாங்க...

புரபசர் நோட்ஸ் கொடுக்க கொடுக்க.. இந்த நாதரி மாப்ஸ்.. மூணு சுழி ’ண’ போட்டு அத ஃபினிஷ் பண்ணாம அப்படியே சுழிச்சு சுழிச்சு கிறுக்கிகிட்டு இருக்கான். நோட்ஸ் எழுதுற மாதிரியே ஒரு பில்டப்......கொடுத்து இருக்கு பயபுள்ள...

அப்புறமா கிளாஸ் முடிஞ்சி என்ன மச்சி ஏன் இப்படி ’ண’ போட்டு சுழிச்சுகிட்டே இருக்கனு  கேட்டதுக்கு, சொன்னா பாருங்க ஒரு பதிலு...எனக்கு இங்கிலிஸ்னா பிடிக்காது மாப்ள ... அதான் பழிவாங்கினேன் புரபசரன்னு ....ஹி ஹி  ஹி அப்படிப்பட்ட ஜாபரு..பக்காவா ப்ராக்டிகல் முடிச்சுட்டு போய்ட்டான்னா நீங்களே சொல்லுங்க எப்டிங்க சாத்தியம்.....?

கொஞ்ச நேரத்துல ...திடீர்னு சத்தம் ....இன் ஆர்கானிக் புரபசர் ஆழ்வாரப்பன் அடிச்சு புடிச்சு கத்திகிட்டு வர்றாரு... எங்கயா ஜாபரு? ஜாபரு எங்க? நாதரிப்பயலுவலுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து மேனேஜ்மெண்ட் என்ன வேலைய விட்டுத்தூக்க போவுதுன்னு ஒரே புலம்பல்....


என்னதான் பிரச்சினைன்னு பாத்தா.. ஆக்சுவலா ரெண்டு சால்ட் வாங்கி பிராக்டிகல் செய்யணும்...... ஒண்ணோட ஒண்ணு கம்பேர் பண்ணி ரிசல்ட் எழுதணும்...

ஆனா நம்ம ஜாபர் ரெண்டாவது சால்ட்டே வாங்கல...........?????????????????????????


ஆனா ரிசல்ட் எழுதி கொடுத்துட்டு போய்ட்டான் அதன் இப்போ பிரச்சினை...! சரி எப்படி ரிசல்ட் எழுதினான்? ஹி ஹி ஹி பயபுள்ள எப்டி பிராக்டிகல் செய்யும்... தெரிஞ்சாத்தானே? அதான் கொண்டு வந்த பிட்ட எடுத்து பொறுப்பா எழுதி கொடுத்துட்டு போய்ட்டான்....


ஒரு பேச்சுக்காகவாச்சும் இன்னொரு சால்ட் வாங்கி இருக்கலாம்ல....அதுவும் செய்யல அவனுக்குத்தான் எந்த மேஜர்ல படிக்கிறோம்னே கவலையில்லையே... 

அதுக்கப்புறம் லேப் அட்டென்டர விட்டு இவன கெஞ்சி கூட்டிட்டு வந்ததும் திமிரா ஜாபர் வரமாட்டேன்னு அடம் பிடிச்சதும் அவன் கெஞ்சி கூப்பிட்டுட்டு வந்ததும் வேற கதை! (மேனேஜ்மென்ட் காலேஜ்ல ரிசல்ட் லோவான கரஸ்பாண்டன்ட் கடுப்பாயிடுவார் அதான்!)

ஆனா அதுக்கு ஜாபர் நைட் ட்ரீட் கொடுத்ததுதான் அலும்போட உச்சம் மக்கா!

இது எல்லாம் முடிஞ்சு ஒரு 3 வருசம் கழிச்சு......

நான் சிங்கப்பூர் போயிருந்தப்ப தேக்காவுல காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ணினோம்....அப்போ ஜாபரும் வந்தான்.....ஒரு 13 பேரு அப்டி இப்டி சொல்லி சிரிச்சு பேசிகிட்டு இருந்தப்பா... ஜாபர் சொன்னான்..

' வேலை கொஞ்சம் கஷ்டமா இருக்கு மாப்ள.....என்ன பண்றது எம்புட்டு கஷ்டப்பட்டு நாம எல்லாம் படிச்சோம்.... அதுவும் நான் நைட்டு எல்லாம் கண்ணு முழிச்சு ( அச்சோ ஏமாந்து போயிடாதீங்க! 10 மணிக்கு மேல ராத்திரி முழிக்கவே மாட்டான்) ம்ம்ம்ம்  எல்லாம் செஞ்சு என்ன பிரோயசனம் மாப்ள...'

சொல்லிகிட்டு இருக்கும் போதே ... என்னது நீ கஷ்டப்பட்டு படிச்சியா எருமை மாடேன்னு எல்லோரும் மொத்து மொத்துனு மொத்தின பின்னாலும் சொல்றான்...

அடுத்த எலக்சன் அம்மாதான் .. வரும்... நான் ஒரு காலேஜே கட்டுவேன் மாப்ஸ்னு.....


ஒரு வேளை இன்ன நேரம் கட்டியிருந்தாலும் கட்டியிருப்பான்..ஆன அம்மா ஆட்சி போயிதான் ரொம்ப நாளாச்சே.......

ரோசிக்கணும்..... மக்கள்ஸ்!

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா!

டெரர் கும்மிக்காக 
தேவா. S

Friday, December 24, 2010

பதிவுலக (பெண்கள்) காவலன்

இந்த வார ஆடு அறுப்புக்கு செலக்ட்டானது ஒரு ஆடு இல்லை ஆடுகள். இதை படிச்சி எவன் எவனுக்கு குத்துமோ கொடையுமோ அது எல்லாம் எனக்கு தெரியாது.

இதை படிச்சிட்டு வந்து எதிர் கருத்து சொல்றேன் சொல்லிட்டு “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” சொல்லி நீங்களே மாட்டிக்காதிங்க. குற்றமுள்ள நெஞ்சு எல்லாம் குறு குறுக்கத்தான் செய்யும். அதனால படிச்சிட்டு அப்படியே மூடிக்கிட்டு போங்க. உரைக்க வேண்டியவங்களுக்கு உரைச்சா சரி. நாலே நாலு வரியில் பதிவு போட வேண்டியது. அதையும் ஒரு பதிவுன்னு சொல்லி வீடு வீடா கதவை தட்டி அதாங்க சாட்ல லிங்க் கொடுக்க வேண்டியது.

கூகுள்காரன் இலவசமா தரான்னு சொல்லி குடும்பம், நண்பர்கள் பேர்ல எல்லாம் ஐ.டி கிரியேட் பண்ண வேண்டியது. இருக்க எல்லா மொக்க பதிவுக்கும் போய் டெம்ப்ளேட் கமெண்ட், ஓட்டு போட வேண்டியது. அப்பொ தான அவங்க திருப்பி குத்துவாங்க....ஓட்டு. கேட்டா நல்ல பதிவுகளை வளர்க்கறாங்களாம் ஓட்டு போட்டு. அப்படி முக்கி முக்கி வளர்த்தும் ப்ளாக்கு கூட்டம் வரலைனா ஊர்ல எவனாவது வளர்ந்தா அவனை பார்த்து வயிறு எரியுறது. அவனால தான் மொத்த பதிவுலகமே கெட்டு குட்டிசுவரா போச்சி சொல்லி பொலம்பறது.

நின்னா பதிவு, உக்காந்தா பதிவு, சாப்ட்டா பதிவு, சாப்பிட்டது செரிச்சா பதிவு, செரிச்சது..... சரி வேண்டாம். இப்படி எல்லாம் பதிவு போட்டு சாவடிக்கறிங்க. அதுக்கு வரும் பாரு கமெண்ட் ஆஹா.. அருமை, கலக்கிட்டீங்க சகோ, எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது, காட்சிகள் கண்ணு முன்னாடி விரியுது இப்படி பல டெம்ப்ளேட் கமெண்ட். அதுலையும் சில பேரு எதாவது கேவலமான விஷயத்தை பற்றின பதிவா இருக்கும் அங்க போய் வாழ்த்துகள், தொடருங்கள். அதுக்கு எல்லாம் நாங்க எதாவது கேட்டமா? நீங்க இப்படி எல்லாம் நாறடிச்சி வீணா போகாத பதிவுலகம் எங்களால வீணா போச்சா? என்னாங்கடா நியாயம் இது..?

நீங்க சுத்த தமிழ்ல உளறி கொட்டி வைப்பிங்க நாங்க எல்லாரும் படிக்கிற மாதிரி, பிடிக்கிற மாதிரி, புரியற மாதிரி எழுதினா அது உங்களுக்கு எரிச்சலா இருக்கா? சாப்ட்ட சாப்பாடு திரும்பா வாய் வழியா வந்தா அதுக்கு பேரு வாந்தி தான். பிரபல பதிவர் எடுக்கறாரு சொல்லி அது வவவவாசனை திரவியமாகிடாது. வாந்தின்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது, கவிதை எழுதுவாங்க பாரு... அப்பா தாங்கலைடா சாமி... புலிய பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். நேத்து பூந்தி சாப்ட்டேன். செரிக்கவில்லை அதனால வாந்தி எடுத்துட்டேன். இதை கவிதையா சொல்றாராம்.

சாப்பிட்டேன் நேற்று பூந்தி
என் வயிறு அடையவில்லை சாந்தி
என் வயிறு அடையவில்லை சாந்தி
எடுத்தேன் காலையில் வாந்தி!!

இப்படி பட்ட பொன்னான கவிதைகளை பொறிச்சி வைக்க தனி ப்ளாக் வேற சில பேரு வச்சி இருப்பாங்க. அட உங்களை சொல்லை சார் / மேடம்... நீங்க நல்லா தான எழுதறிங்க. நான் சொல்றாது உரைநடைய நாலா பிரிச்சி போட்டு கவிதை சொல்றவங்களை.

அப்புறம் புதுசா ஒரு பொம்பள பிள்ளை ப்ளாக் ஆரம்பிக்ககூடாது. கூகுள்ல ரிஜிஸ்டர் ஆகுதோ இல்லையோ இவரு டேட்டா பேஸ்ல ஏத்திடுவாரு. அவங்க ப்ளாக் அழகுபடுத்த, ஓட்டு பட்டை இணைக்க, முன்னனில வர இப்படி பல யோசனை சொல்லுவாரு. அதுக்காக சாட் பண்ண ஆரம்பிப்பாரு அப்புறம் இவரே அவார்டு கொடுப்பாரு. அகிலவுலக ப்ளாக் சங்க தலைவர் அவார்டு கொடுத்துட்டாரு இல்லை அதை அவங்க பெருமையா ப்ளாக்ல போட்டுப்பாங்க.

அதுக்கு அப்புறம் தான் தலைவலி. அவங்களுக்குனு அவங்க என்ன கேவலமா எழுதினாலும் கலக்கறிங்க சகோ சொல்லி ஜொள்ள.. ச்சி சொல்ல ஒரு கூட்டம் வந்துடும். அவங்க இவரை மதிக்க மாட்டாங்க. உடனே இவரு டார்ச்சர் ஆரம்பிப்பாரு... ஏன் எனக்கு நீ குட் மார்னிங் சொல்லவில்லை (பொழுது விடியாது பாரு), குட் நைட் சொல்லவில்லை (உன் பொண்டாட்டிக்கு என்னைக்காவது சொல்லி இருக்கியா?) இப்படி. அதுக்கு அப்புறம் அவங்க வந்து அய்யோ அம்மான்னு கத்துவாங்க. அதுக்கு பஞ்சாயத்து பண்ண நாலு பேரு போவாங்க

ஆம்பளை ப்ளாக் ஆரம்பிச்சா எவனும் ஐடியா தர மாட்டரான்யா. பாவம் நம்ம டெரர் பாண்டி ப்ளாக்னு ஒன்னு ஆரம்பிச்சி வச்சிட்டு திறியுது. அதுல தமிழ்மணம் ஓட்டு பட்டை இல்லை. இன்ன வரைக்கும் ஏண்டா வைக்கல சொல்லி ஒரு நாய் கேக்கல (யோ பட்டாபட்டி!! உன்னையும் சேர்த்துதான்). ஆனா பொண்ணுங்க ஆரம்பிச்சா மட்டும் நீங்க ஓட்டு பட்டை இணைச்சா உங்கள் கருத்து அதிக மக்களை போய் சேருமேன்னு ஜொள்ள வேண்டியது.

ஸ்டாப்... ஸ்டாப்... ஸ்டாப் ஏண்டா இந்த கோண பூசாரி இப்படி கேணத்தனமா கத்தறான் பாக்கறிங்களா? ஒன்னும் இல்லிங்க எதிர்காலத்துல நம்ம கும்மி குருப்ப யாராவது திட்டினா அவங்களை எப்படி திட்டலாம்னு சொல்லி சும்மா திட்டி பார்த்தேன். அட நிஜமாதான்... நம்பமாட்டறிங்க பாத்திங்களா? என்னா சொன்னிங்க உங்களுக்கு தெரிஞ்ச பதிவர் (ஆண் / பெண்) அப்படி இருக்காங்களா? அய்யோ.. இதுக்கு நான் பொறுப்பு இல்லைப்பா... இது எல்லாம் கற்பனை, அவங்க கூட பொருந்தினது தற்செயலானது. இது எல்லாம் சைபர் கிரைம் ஆக்டல Defamation சொல்லி பைல் பண்ண முடியாது. என்னாது உனக்கு எப்படி தெரியுமா? நாங்களும் அந்த வெங்காயத்த எல்லாம் உரிச்சி பாத்துட்டு தான் வந்து இருக்கோம்.

டிஸ்கி : இங்கு வரும் கமெண்டுகளுக்கு பதிவு எழுதியவர், ப்ளாக் ஓனர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் பொறுப்பல்ல. கமெண்ட் போடுபவர்களே சட்ட ரீதியாக பெறுப்பு. அதனால் யாருடைய மனமாவது புண்பட்டால் கமெண்ட் போட்டவரிடம் நேரடியாக தொடர்பு கொள்ளவும். கமெண்ட் போட்டவருடைய விபரம் கேட்டு எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம். ஏன்ன எங்க கிட்ட இல்லை.

Thursday, December 23, 2010

பிச்சுமணியின் லீலைகள்...




"எருமை மாடு,  எவ்வளவு நேரம் மொட்டை மாடியில் இருப்பே கீழே இறங்கி வாடா" என்று.. பிச்சுமணியின் அப்பா குரல் கொடுத்தார், "அப்படி என்ன தாண்டா பண்ணுவே"... பிச்சுமணி அந்த தெருவிலே அவன் தான் அழகு என்று நினைப்பு... பல் விளக்குவதை கூட பெருமையா நினைப்பவன் பிச்சு மணி...புதியதாக கட்டிய வீட்டில் பிச்சுமணி குடும்பம் தான் முதலில் வந்தது...


பிறகு ரம்யா குடும்பம் வந்தது அவர்களிடம் சென்று பிச்சு மணி "இங்கு  ஏதாவது தெரியவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்க நான் செய்து தரேன்" என்று சொன்னான் பிச்சுமணி, "சரிங்க ரொம்ப நன்றி" என ரம்யா கூறினாள். பால் காய்ச்சி ரம்யா பிச்சுமணியின் அப்பாவுக்கும் அவனுக்கும் பால் கொடுத்தாள் ரம்யா...."உங்க பெயர் என்ன..? என்ன வேலை செய்யறிங்க" என்று கேட்டாள் ரம்யா. அவ்வளவு தான்! ஒரு அரை மணிநேரம் தன் கதையை அளந்தான்...

ரம்யா: எனக்கு இந்த டெலிபோன் ஆபிஸ் எங்க இருக்கு என்று தெரியாது நீங்கள் எங்க சொல்ல முடியுமா..?

பிச்சுமணி :சரி நானே உங்களை கூப்பிட்டு போறேன்


ரம்யா : இல்லை எங்க இருக்குன்னு சொல்லுங்க போதும்


பிச்சுமணி : அப்போ ஏன் என் மேல நம்பிக்கை இல்லையா


ரம்யா : அப்படி இல்லை சரி வாங்க போகலாம் என்று சொன்னாள்


இவருவருக்கும் நட்பு அதிகரித்தது, ரம்யா வேலைக்கு சென்று விட்டு வந்தவுடன் "ஏன் என்னிடம் நீங்கள் வந்ததை சொல்லவில்லை" என்று சண்டை போட்டான் பிச்சு மணி, "சரி இனி உங்க கிட்ட சொல்றேன்"


"என்ன ஒரே கவலையா இருக்கீங்க" என்று பிச்சுமணி கேட்டான் பிச்சுமணி. "வேலைக்கு போயிட்டு வந்த டயர்ட் அவ்வளவுதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரி ஆகிடும்"  "உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் என்னை தாராளமா கூப்பிடலாம்" என்று இரட்டை அர்த்தத்தில் சொல்லிவிட்டு போனான் பிச்சுமணி...


பக்கத்து வீட்டிற்கு வீரா மற்றும் அவனது அம்மாவும் குடி வந்தனர், வீராவை பார்த்தவுடன் தனக்கு எங்கே போட்டியாக வந்து விடுவானோ என்று எண்ணினான் பிச்சுமணி..ஏனென்றால் தன்னை விட வீரா அழகாக இருந்தான்..ரம்யாவிடம் ஏதோ பேசினான் அதை பார்த்த பிச்சுமணி உடனே ஓடிவந்து "என்ன பாஸ் வேண்டும் சொல்லுங்க நான் செய்து தரேன்" என்றான்..."ஒன்னும் இல்லை பாஸ் இந்த வீட்டு நம்பர் என்ன கேட்டேன் அவ்வளவு தான்". "இனி ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்க பாஸ் நான் ஹெல்ப் பண்றேன்" என்று கூறினான் பிச்சுமணி.

"நீங்கள் எம்ஜிஆர் படம் நிறைய பார்ப்பீர்கள் போல" என சிரிப்புடன் கேட்டான் வீரா

பிச்சுமணி : அப்படி எல்லாம் இல்லை பாஸ், ரொம்ப தான் கிண்டல் பண்றீங்க...    

மறுநாள் வீரா பேருந்து நிலையத்தில் ரம்யாவை பார்த்தான் "எங்கே வெளியே கிளம்பியாச்சா" என்று வீரா கேட்டான். "என்ன பண்றீங்க...?" என வீரா கேட்டதற்கு ரம்யா சொன்னாள் "நான் சும்மா தான் இருக்கேன் எங்க வீட்டுகாரர் தான் வேலைக்கு போகிறார். கோவையில் வேலை பார்க்கிறார். வர திங்கள் முதல் இங்க சென்னையில் தான் வேலை செய்ய போறார்.".


வீரா : நீங்கள் இந்த வீட்டுக்கு வந்து எத்தனை நாள் ஆகிறது 

ரம்யா : ஐந்து நாள் ஆகுது ஏன் என்ன ஆச்சு... 

"சரிங்க நான் போகும் பஸ் வருது நான் போறேன்" என கிளம்பினான் வீரா.. 

மாலை வீட்டுக்கும் வரும் பொழுதே பிச்சுமணி வாசலில் நின்றுகொண்டு இருந்தான் "என்ன பாஸ் வேலை எல்லாம் முடிந்து விட்டதா..?" ங்கொய்யாலே நீ வேலைக்கு போகவே இல்லையா என மனதிற்குள் நினைத்து கொண்டான் வீரா...."முடிஞ்சு போச்சு பாஸ் சரி நான் வரட்டா" என கேட்டார், "ஒரு நிமிஷம் இருங்க பாஸ் நான் ஒருத்தருக்கு லவ் லெட்டர் கொடுக்க போறேன் அதை உங்களிடம் படிச்சு காட்டுறேன் நல்லா இருக்கா சொல்லுங்க"....அந்த கடிதத்தை படித்து காட்டினான் பிச்சு மணி


"எல்லாம் நல்லா இருக்கு, இது யாருக்கு சொல்லுங்க பிச்சுமணி". "வேற யாரும் இல்லை நம்ம ரம்யாவிற்கு தான்". அதை கேட்ட வீரா அதிர்ச்சி அடைந்தான், "என்ன சொல்றிங்க பாஸ் அவங்களுக்கு கல்யாணம் ஆகிபோச்சு உங்களுக்கு தெரியாதா...?". சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பிச்சுமணி கூறினான் "நம்ம முடிந்த வரை முயற்சி செய்வோம் மாட்டினா நல்லது இல்லை வேற ஆளை பார்த்து விட்டு போயிட்டே இருக்கணும்..."


ச்சே இவன் கூடவா இவ்வளவு நேரம் பேசினோம் என தலையில் அடித்து கொண்டு கிளம்பினான்...


சிறிது நாள் கழித்து ரம்யா தன் கணவர் உடன் வந்தால் அதை பார்த்த பிச்சுமணி ரம்யாவிடம் சென்று "இது யார்" என கேட்டான் அதற்கு "என் கணவர் இவர் தான். நான் யார் கூட வந்தால் உங்களுக்கு என்ன?" என்று முகத்தில் அறைந்தால் போல் கூறினாள்...


ஒரு நாள் பிச்சுமணி அந்த காதல் கடிதத்தை கொடுத்தான்..அதற்கு ரம்யா "எனக்கு கல்யாணம் ஆனது உனக்கு தெரிந்தும் எனக்கு லவ் லெட்டர் தருயே உனக்கு அறிவு இல்லையா ...  நீ இப்படி பட்ட கேவலமான எண்ணத்தோட பழகறது தெரிஞ்சிருந்தா நான் அப்பவே உன்னை கிட்ட சேர்த்து இருக்க மாட்டேன் . இனி என் பக்கத்தில் வந்தே உன்னை செருப்பாலே அடிப்பேன்..இங்க இருந்து போ..  என் முகத்துலேயே முழிக்காதே" என சொல்லி கதவை சாத்துகிறாள்..


அடுத்த நாள் பிச்சுமணி எழுந்து வெளிய வந்தபோது, ரம்யா போர்ஷனிற்கு பக்கத்து போர்ஷன்ல புதுசா யாரோ குடி வராங்க. அங்க ஒரு பிகர்! பிச்சுமணி அங்க போய்... அந்த பொண்ணுகிட்ட "உங்களுக்கு என்ன உதவி வேணும் சொன்னாலும் என்னை கூப்பிடுங்க ஆன அந்த பக்கத்து வீட்டு ரம்யா கிட்ட மட்டும் போகாதீங்க அவ ஒரு மாதிரி" என்றான்... இவனை பற்றி தெரியாத அந்த பொண்ணு அப்பாவியா... சரினு தலை ஆட்டரா.. பிச்சி.. அடுத்த பச்சி அப்படினு மனசுகுள்ள வில்லதனமா சிரிச்சிகிட்டே வீட்டுக்கு போறான்... இவனை எல்லாம் கேக்க யாரு வருவாங்களோ. 



Wednesday, December 22, 2010

டுமீல்சாமி என்றொருவன்!


ஒரு தடவை டுமீல் சாமி காலேஜில “நான் முதல்வரானால் ” அப்படிங்கிற தலைப்பில ஒரு கட்டுரை எழுதச் சொன்னாங்க! “நான் முதல்வரானால் ஆணும் பெண்ணும் சமமென அறிவிப்பேன். எல்லோருக்கும் சம உரிமை. யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது. உடை, செயல், எண்ணம் எதிலும் கட்டுப்பாடு கிடையாது, முக்கியமா எல்லா எக்ஸாமையும் கேன்சல் பண்ணிடுவேன்” கடைசி லைனை படிச்சிட்டு என்னடா இதுன்னு கேட்டா, “முதல்வர்னா பிரின்சிபால்தானே” ங்கிறான்.


********************************

டுமீல் சாமிக்கு இந்த பேர் வரக்காரணம்  தெரிஞ்சிக்கனும்னா. ஒரு சின்ன ஃபிளாஷ்பேக். அவன் சின்ன வயசில தீபாவளி துப்பாக்கி கேட்டதுக்கு அவங்கப்பா வாங்கி தரலை! அவன் அழுது அழுது வெறுத்து போய் கடைசில கையை துப்பாக்கி மாதிரி வச்சிகிட்டு டுமீல் டுமீல்னு கத்திகிட்டு ரோட்ல போற வரவங்களால சுட்டுகிட்டு இருந்தான். அந்த சமயத்தில் பக்கத்து தெருவில ஒரு திருடன் திருடி மாட்டிகிட்டான். அவனை பிடிக்க ஆளுங்க சூழ்ந்துட்டாங்க. அவன் தப்பிச்சு ஓடி வந்தான் பாருங்க. அப்படி வரப்ப, சாமி டுமீல் டுமீல்னு எதிரே வந்த திருடனையும் சுட்டுட்டான். அவன் ஏற்கனவே பயத்தில இருந்தவன் உண்மையில் யாரோ சுட்டுட்டாங்கன்னு இன்னும் பயந்து கீழே விழுந்துட்டான். பின்னாடி துரத்திட்டு வந்த கூட்டம் அவனை புடிச்சுடிச்சி! வெறும் வாயால டுமீல் டுமீல்னு கத்தியே திருடனை புடிச்சதால அவனுக்கு டுமீல் சாமின்னு பேரு வந்துடுச்சு!

****************************************

டுமீல்சாமி காலேஜ்ல ஒரு போட்டி நடந்துச்சு! அது என்னான்னா, எல்லா நாட்டில இருந்தும் ஸ்டூடன்ட்ஸ் வந்து எந்த மொழில வேணா உலக சமாதானத்த பற்றி பேசலாம் ஆங்கிலத்தில் அதை ஒருத்தர் மொழிபெயர்த்து சொல்வார். ஆனா பத்து நிமிஷம்தான் டைம்! டுமீல்சாமியும் அதில் கலந்துகிட்டான்! எல்லோரும் பேசினாங்க கடைசியா டுமீல்சாமியை பேசச் சொன்னப்ப அவன் எதுவுமே பேசலை! கம்முனு இருந்தான்! டைம் முடிஞ்சிடுச்சு! எல்லோரும் ஏண்டா பேசலைன்னு கேட்டதுக்கு சொன்னான்,
“மௌனமும் ஒரு மொழிதானே!”

*************************************

டுமீல்சாமியிடம் சில கேள்விகள்:

1.    2012ல் உலகம் அழியுமா?
உலக மக்கள் தொகை 650 கோடிக்கு மேலேயாமே! எல்லோரும் ஒற்றுமையா பாடுபட்டா முடிச்சுடுலாம்!

2.    அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பாவா?
இருந்தாலும் இருக்கும்! எதுக்கும் நான் என் சித்தப்பாவை கேட்டுச் சொல்றேன்!

3.    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் இருக்க ஒரு வழி சொல்லுங்களேன்!
சுத்தமான சிமெண்ட் தரையில் விழவும்.

4.    மகிழ்ச்சியோடு வாழ என்ன செய்ய வேண்டும்?
உங்க மனைவி பேரை மகிழ்ச்சின்னு மாத்திடுங்க!

5.    மச்சானை பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே!
ம்! பார்த்தேன்! மலை வாழைப்பழம் ஒத்துக்கலையாம்! அதான் தோப்புக்குள்ள ஒதுங்கியிருக்காரு!

6.    ஆண்புறா செத்துட்டா பெண்புறா கல்ல முழுங்கிட்டு உயரத்திலிருந்து கீழே விழுந்து செத்துடுமாமே உண்மையா?
இதையேன் விட்டுட்டீங்க, முடி விழுந்தா நரி சுவத்தில முட்டிக்கும், பன்னிக்கு நகம் விழுந்த பைத்தியம் புடிச்சுடும், வாலறுந்த பல்லியை ஊரவிட்டு ஒதுக்கிடுவாங்க, கரப்பான்பூச்சி மீசை உதிர்ந்தா குப்புற படுத்துக்கும், அப்புறம்....

7.   தற்கொலை உதாரணம் சொல்க.
டெர்ரர் கும்மி படித்தல்!
அப்பவே சொன்னேன் படிக்காதன்னு கேட்டியா? இப்ப அநியாயமா போயிட்டியே.....!


டெரர் கும்மிக்காக

அன்புடன்

எஸ். கே




எழுதுனவன் கதியே அப்படி இருக்குன்னா படிக்கிறவங்க இருப்பாங்கன்னு நினைக்கிறே!

Tuesday, December 21, 2010

நன்பேண்டா !

( நன்பேண்டா ! )
கும்மிக் குழு நண்பர் வெங்கட் பதிவு போட்டா எப்படி இருக்கும்..
"ஸ்மார்ட்டா, ஸ்டைலா.. "
(மைன்ட் வாய்ஸ் -- போதும் போதும் மேட்டருக்கு வா)
ஓவர் டு வெங்கட்
( ஓடுறதுக்கு ரெடியா ? )
வெங்கட் : காலைல பிரண்டு கிட்டேருந்து போன் வந்திச்சு..
                  அட..போனுல கால் வந்துச்சிப்பா ... அய்யோ..
                  என்னோட பேசுறதுக்கு, பிரண்டு போன் பண்ணினான்..
( இதுக்கு கேப்ஷன் வேணாம் )
பிரண்டு : வெங்கட், சாயந்திரம் நீ  ஃப்ரீயா இருக்கியா ?

வெங்கட் : இரு டைரில அப்பாயின்ட்மென்ட பாத்து சொல்லுறேன்
         (நல்லவேளை, அவனால இப்போ நா என்ன செய்யுறேன்னு பாக்க முடியாது)
         இன்னிக்கு சாயந்திரம் ஒக்கே.. என்ன மேட்டர்.?

பிரண்டு : எனக்கு எங்கப்பா கோல்டுல மோதிரம் வாங்க பணம் தந்தாரு..

வெங்கட் : அத ஆட்டைய போட்டு இன்னிக்கு பார்ட்டியா?
                  கண்டிப்பா வந்துடறேன்.

பிரண்டு : டேய்.. அப்புறம், 'மோதிரம் எங்கே'னு  எங்கப்பா கேப்பாரே..
                 ஏற்கனவே நாம ஒரு செயின் வித்து பார்ட்டி போனதுக்கே எங்கப்பா
                 திட்டினாரு..

வெங்கட் : என்னமோ தங்க செயினை வித்த மாதிரி பேசுற..
                  அது நாய் கழுத்துல போற செயின் தானேடா..

பிரண்டு : ஆமா.. அதுக்கே எங்கப்பா துரத்தி, துரத்தி அடிச்சாரு..


வெங்கட் : சரி.. சரி.. இப்ப நா என்ன பண்ணனும்..?

பிரண்டு : எனக்கு நல்லதா ஒரு மோதிரம் செலக்ட் பண்ணி குடேன்.
                 ஒன்னோட செலெக்ஷன் சூப்பரா இருக்கும்..
---------------------------------------------------------------------------------------------------
( ஹி.. ஹி.. ஈவ்னிங் வந்தாச்சு )
 (நகைக் கடையில், அரை மணி நேர அலசலுக்கு பின்னர்)

பிரண்டு : என்னடா.... ஒண்ணுமே சரியா வரலியே ! நீ வந்தும் கெடைக்கலியே ?

வெங்கட் : ஏய்.. இங்கப் பாரு.. 'லோட்டஸ்' படம் போட்ட மோதிரம்....
                 இதை டிரை பண்ணு.. உனக்கு பொருத்தமா இருக்கும்.

பிரண்டு : ( போட்டு பார்த்துவிட்டு ) 'ரொம்ப லூசா' இருக்குதே.

வெங்கட் : அதுனாலதாண்டா அப்படி சொன்னேன்....
   ----------------------------------------------------------------------

டிஸ்கி : நா, KAS மெம்பரு..

Monday, December 20, 2010

வலை வீசலாம் வாங்க

எப்பவும் கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து சாட் பண்ணிட்டு இருக்க இனை பிரியாத தோழர்கள் பரதேசி,  கம்முனாட்டி. அவங்க ரூம் குள்ள என்ன பேசிட்டு இருக்காங்க பாக்கலாம். இவங்க ரெண்டு பேரும்  வேட்டையாடு விளையாடு இளமாறன், அமுதன் மாறி. புரிஞ்சிருக்குமே?!.

"என்னடா கம்முனாட்டி வாய் எல்லாம் பல்லா இருக்கு? அப்டி என்னத்த லேப்பி ல பாத்து சிரிச்சிட்டு இருக்க?"
"வாடா பரதேசி, இன்னைக்கு சாட்ல ஒரு பிகர் மாட்டி இருக்குடா"
"டேய், எத்தன நாள் தான்டா இப்டியே கரெக்ட் பண்ணிட்டு இருக்க, அதுக்கு நான் ஒரு சூப்பர் ஐடியா வெச்சிருக்கேன்"
"என்னடா, ரூம்க்கு கூட்டிட்டு வந்திடலாம்ன்னு சொல்றியா? கூட்டிட்டு வந்தா தான் நாம ஒன்னுமே பண்ண முடியாதே. அதுக்கு தான இப்டி சாட் பண்ணி ஆசைய தீத்துக்கறோம்?"
"அதுக்கு தான்டா. உனக்கு ப்ளாக் பத்தி தெரியுமா?"
"இல்லையே, என்ன அது?"
"நாமளே நம்ம பேர்ல வெப்சைட் ஆரம்பிசுக்கலாம்டா. என்ன வேணா எழுதலாம். அங்க கூட நெறையா பொம்பள புள்ளைங்க சுத்தீட்டு இருக்குது. அங்க போய் நம்ம வேலைய காட்டலாம்"

இதாங்க நம்ம கம்முனாட்டியும், பரதேசியும் பிளாக்ல என்டர் ஆன வரலாறு. இப்போ தெரிஞ்சிருக்குமே இவனுங்க பொழப்பு என்னனு? பசங்கனா பொண்ணுகள சைட் அடிக்கறது அவங்க ரத்தத்துல ஊறி போனது. ஆனா இவனுங்க மாறி சில பேர் பொண்ணுங்கள ஒரு சக மனுசியா பாக்க மாட்டாங்க. ஏதோ போக பொருள் மாறி பாப்பாங்க. சீ தேவா அண்ணன் பதிவ படிச்சு படிச்சு எனக்கும் அதே மாறி வருது. இப்போ ஓவர் டு இவனுங்க ப்ளாக் அனுபவம். சாட்ல அசிங்கமா பேசற எல்லாருக்கும் நேர்ல ஒன்னும் பண்ண முடியாதோ?இது என்னோட ஒரு சின்ன டவுட்.

"சரி என்ன பேர்டா வெக்க?"
"கடைந்து எடுத்த காதலன் னு வைக்கலாம்"
"அடடே கவிதையா வருதுடா உனக்கு, ஆமா என்ன தான் எழுத?"
"சும்மா எதாச்சும் எழுதலாம்டா. நல்ல கவிதை எழுதறவங்க  நெறைய பேர் இருக்காங்க. அவங்க கற்பனைய கொஞ்சம் கடன் வாங்கி, அதையே மாத்தி எழுதிடலாம். ஏன்னா கவிதை எழுதினா தான் ஈசியா எதாச்சும் பட்சி மாட்டும்"

ரெண்டு பேரும் கவிதையா எழுதி தள்ளினாங்க. 1 வாரம் ஒரு ஈ காக்கா வரல. கொஞ்சம் கொஞ்சமா திரட்டிகள் மூலமா சில பேர் வந்தாங்க. விடா முயற்சில ஒரு பெண் பதிவர புடிச்சாங்க.

"மச்சி! வெற்றி வெற்றி, இவ்ளோ நாள் கழிச்சு ஒரு பொண்ணு மாட்டிகிச்சு"
"என்னடா பேரே சரி இல்ல"
"பேராடா முக்கியம், மொதல்ல அவ என்ன பதிவு போட்ருக்கானு பாத்து அத பாராட்டுவோம். கொஞ்ச நாள் போகட்டும், அப்பறம் மடக்கிடலாம்"

கொஞ்சம் கொஞ்சமா இலை மறை காயா கண்டதெல்லாம் பேசினானுங்க. அந்த பெண் பதிவரும் இவனுங்க கேட்டதுக்கெல்லாம் நண்பர்கள் தானேன்னு பதில் சொல்லிட்டு இருந்துச்சு.

"டேய் பரதேசி பட்சி மாட்டிகிச்சுன்னு நெனைக்கறேன். வயச கேட்டா மட்டும் சொல்லவே மாட்டேங்குதே என்னடா பண்ண?"
"வயச தெரிஞ்சு நாம என்ன பண்ண போறோம்? நேர்ல வரசொல்லு, நாமளே கேட்டு தெரிஞ்சுக்கலாம்"
"நேர்ல வந்தா மட்டும் இவரு வீரத்த காட்டுவாரு பாரு. சரி வர சொல்றேன்.பாக்கலாம் என்ன சொல்றான்னு"
"என்னடா கேட்டதும் ஓகே சொல்லிட்டா. எதாச்சும் அட்டு பிகர்ரா இருக்குமோ?"
"அப்டி இருந்தா கூட பரவால்ல மச்சி. இது வரைக்கும் இவ்ளோ டீப்பா யாரு கிட்டையும் பேசியதில்ல. இப்போ இவ ஓகே தான?இது வரைக்கும் சாட்ல பேசி இருக்கோம், போன் பண்ணி பேசி இருக்கோம் . நேர்ல பேசினதே இல்லையே. என்ன தான் ஆகும்ன்னு பாத்திடலாம்."
"ஆமாடா நீ சொல்றது கூட சரி தான், எனக்கு இப்பவே என்ன நடக்குமோன்னு ஆசையா இருக்கு"
"ஹா ஹா ஹா, சரி நாளைக்கு தான் பாக்க போறோமே."

அடுத்த நாள் ரெண்டு பேரும் டிப் டாப்பா டிரஸ் பண்ணிட்டு போனானுங்க. என்ன பண்ண அவனுங்களால டிரஸ் மட்டும் தான் பண்ண முடியும்? அவனுங்க நெனச்ச மாறி அது அட்டு எல்லாம் இல்லேங்க.கொஞ்சம் நல்ல பிகர் தான். இவனுங்க வழி வழின்னு வழிஞ்சததால தான் போனா வாரம் சென்னைல வெள்ளமே வந்துச்சாமா.

"என்னங்க பரதேசி, பேசிகிட்டே இருக்கீங்க, வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு போக மாட்டிங்களா"
"ஐயோ நாங்க பேச்சிலர்ஸ். ரூம் கொஞ்சம் அப்டி இப்டி தான் இருக்கும். அங்க எல்லாம் நீங்க எப்டி (என்ன இவ ரூம் கெல்லாம் வரன்னு சொல்றா, வேற எதிர் பாக்கறா போலயே ?)
"அதெலாம் எனக்கு தெரியாதா, இஷ்டம் இல்லைனா வேணாம் விடுங்க"
"சே சே அப்டி எல்லாம் இல்லேங்க போலாம் வாங்க" 
"மொத மொதலா உங்க ரூம்கு வரென் இருங்க ஜூஸ் வாங்கிட்டு வறேன்"

ரூமுக்கு போய்ட்டு அவ அந்த ஜூஸ் குடிக்காம  அவங்க ரெண்டு பேரையும் குடிக்க வெச்சா. அதுக்கு அப்பறம் காலைல தான் எழுந்தாங்க..

"ஐயோ பரதேசி, நீயும் உன் ஐடியாவும்"

சத்தம் கேட்டு பரதேசி எழுந்தான். ரெண்டு பேர் உடம்பிலையும் ஒட்டு  துணி இல்ல. ரூமையே தொடச்சு வெச்சிட்டு போய்டா.
"மொதல் வேலை அந்த ப்ளாக் டெலிட் பண்ணனும்டா பரதேசி"
"லேப்டாப் தூக்கிட்டு போய்டா. டெலிட் பண்ண வெளிய போகணும். வெளிய போனும்னா துணி வேணும்"

அப்பறம் ஜாக்கி சான் படத்ல வர மாறி பேப்பர் கட்டிட்டு ட்ரை பண்ணாங்க.  படி இறங்கும் பொது பேப்பர் கிழிஞ்சு, அதுக்கப்பறம் என்ன ஆச்சுன்னு சொல்லி இந்த பதிவ 18 + ஆக்க வேணாம்.

இதாங்க கடைந்தெடுத்த காதலன் அழிந்த கதை. இனி எவனும் ப்ளாக் ல நட்பா பேசறவங்க கிட்ட அசிங்கமா பேச மாட்டானுங்கன்னு நெனைக்கறேன். சரி அப்டி யாராச்சும் இருந்தா சொல்லுங்க.அடுத்த முறை பேர் சொல்லி கும்முவோம்.சரி நான் கெளம்பறேன், போய் லவ் ஸ்டோரி எழுதணும்..

பின்குறிப்பு : முழுக்க முழுக்க கற்பனை. யாராச்சும் தப்பா நெனச்சா பரவால்ல நெனச்சுகோங்க. அதனால கம்பெனி கவலைபடாது.கற்பனைன்னு சொன்னா நம்பனும் சரியா?. 
யார் மனசையும் புண் படுத்த இது எழுதல, சிந்திக்கவே..


டெரர் கும்மிக்காக சுற்றுலா விரும்பி அருண் பிரசாத் 

Sunday, December 19, 2010

டெரர் இப்படி செய்யலாமா?


நீங்களே சொல்லுங்க, நாம டெரர் பேருல எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கோம்?
அவன் இப்படி செஞ்சது எனக்குத் துளிக்கூட பிடிக்கல.
அவன் செஞ்சது சரியா, தப்பா? இது தான் நான் உங்க கிட்ட கேக்கற கேள்வி.
அவன் எப்படிப்பட்டவன் என்று உங்க எல்லோருக்கும் தெரியுமோ என்னவோ, எனக்கு நல்லா தெரியும்.
அவன் இப்படி செஞ்சா, மத்தவங்க என்ன நினைப்பாங்க?
ஒரு வேளை அவன் செஞ்சது சரின்னு நீங்க நினைக்கலாம், அது பத்தி நான் கவலைப் படப்போவதில்லை.

ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் நீங்களே கூட அவன் செஞ்சது சரியில்லையோன்னு நினைக்கலாம். ஆனா, இன்னிக்கு என்னப் பொறுத்த வரைக்கும் அவன் செஞ்சது சரியில்லைதான்.

அப்படி அவன் என்னதான் செஞ்சான்னு உங்களுக்கு சொல்லவே இல்லையோ?
சொல்றேன். அவன் ஒண்ணுமே செய்யலைங்க. அவன் ஏதாவது செஞ்சா அது சரியா, தப்பா அப்படின்னு உங்களை எல்லாம் கேக்கலாம்னு இருந்தேன். ஆனா, பாருங்க, அவன் ஒண்ணுமே செய்யலை! என்னை ஏமாத்திட்டான்!

இப்போ சொல்லுங்க, டெரர் செஞ்சது சரியா?

டிஸ்கி: என்ன ரொம்ப சொரிஞ்சுட்டனா? இந்தப் பஞ்சு படம் எதுக்குப் போட்டிருக்கேன்னு இப்ப புரியுதா?

Saturday, December 18, 2010

பின்நவீனத்துவ காதல்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே!!

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஊழலைப் போல அவன் மனது முழுதும் அவள் நினைவு. இன்று எப்படியாவது அவளைப் பார்த்து விட வேண்டுமென காலையிலிருந்து உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் மறந்து தவம் கிடந்தான் சிவா.


சிவாவைப் பற்றி ஒரே வரியில் சொல்ல முடியாது. அவனைப் புரிந்து கொண்டவர்கள் அவனையும் தவிர்த்து அவன் வீட்டு நாய் மட்டுமே! கூதிர் காலத்தில் குளிப்பான். கோடையில் குளிப்பதை மறப்பான். பகலில் நட்சத்திரங்களை எண்ணுவான். இரவினில் சூரியனைத் தேடுவான். சினிமாவில் ஆக்‌ஷன் காட்சிகளை ரசித்துப் பார்ப்பான்.

நாவலில் செண்டிமெண்ட் காட்சிகள் வந்தால் அழுவான். பின்நவீனத்துவத்திலிருந்து கட்டற்ற களஞ்சியமான விக்கீபீடியா வரை கரைத்துக் குடித்தவன். எப்போவதாவது குடிக்க மாட்டான். குடித்துவிட்டு தத்துவமோ கவிதையோ சொல்லமாட்டான். கள்ளையும் சாராயத்தையும் கலந்து குடித்து கலெக்டரைப் பார்க்க வேண்டுமென்பான்.

எதைப் பற்றியும் கவலைப் படமாட்டான். ஆனால் சில நேரம் ஓரமாய் ஊறும் எறும்பைக் கூட காப்பாற்றி அதன் வீட்டில் விடவேண்டுமென்பான். மொத்தத்தில் அவனுடைய பெற்றோர்களுக்கு அவன் புரியாத புதிர். அவனுடைய நண்பர்களுக்கு அவன் ஊறுகாய் அவர்களின் போதைக்கு. இப்படியாய் நாளொரு புத்தகமும் பொழுதொரு குடியுமாய் போன அவனது வாழ்க்கையில் ஒரு புதினமாய் வந்தால் அவள். இவன் படிக்கும் நூலகத்தில் அவள் நூலகர். மின்னல் சிரிப்பு, கன்னக் கதுப்பு என அவளை பார்த்ததும் மயங்கினான். அவனிடம் இது வரை இல்லாத காதல் சுரப்பிகள் சுரக்கத் தொடங்கின.

அவளுக்காக முடி வெட்டினான். வாரமொருமுறை குளித்தான். தலை வாரினான். விஜய் போல உடை அணிந்தான்.காலையில் குடிப்பதை நிறுத்தினான். அவளிடம் இலக்கியம் பேசினான். அப்படிப் பேசியதிலிருந்து அவளுக்கு பின்நவீனத்துவம் பிடிக்கும் என்று சிவாவுக்குத் தெரிந்தது. உடனே அவனுக்குள் இருந்த வைரமுத்து விழித்துக் கொண்டார். அவளுக்காக ஒரு பின்நவீனத்துவ கவிதை இரண்டு வாரமாய் எழுதி இரண்டு நாட்களுக்கு முன் கொடுத்தான். அதை வாங்கியதிலிருந்து அவள் இரண்டு நாள் வராததால் இப்போது தவம் கிடக்கிறான்.


அவள் வருவது தூரத்தில் தெரிந்ததால் சிவா எழுந்து தலையை சரி செய்தான். அவள் சிவாவை நெருங்கி அழகாய் சிரித்து அவனிடம் சாருவின் ஒரு புத்தகத்தை கொடுத்துச் சென்றாள்.

Friday, December 17, 2010

கருங்காலிக்காரனின் ஊத்தபித்துவங்கள்




நான் கருங்காலிக்காரன், சுருக்கமா கருங்காலி. அது என்ன பேரு, கருங்காலிங்கறீங்களா? அதான், கூடவே இருப்பேன், ஆனா பெரிய குழியா பறிச்சுடுவேன், அதுனாலதான் என்பேரு கருங்காலி. நான் ஆளுதான் பாக்க சிறுசா இருப்பேன், ஆனா எனக்கு எல்லாமே ஓவர், அதாங்க, இந்தக் கொழுப்பு, திமிரு, தெனாவெட்டு, ம$%$%சுரு, மட்டை. என் பேருக்கு முன்னாடி நானே ஒரு பட்டம் வெச்சுக்கிட்டேன். 'பீலா'சபி. அது எதுக்குன்னு பார்த்த உடனே புரிஞ்சிருக்குமே. இப்பல்லாம் அந்தப் பட்டப்பேரு யூஸ் பண்றதில்ல, ஏன்னா, கொஞ்ச நாள் முன்னாடி, பொட்டி தட்டுறதப் பத்தி நுணுக்கமா பதிவு போடுற ஒரு பெரிய பதிவர சீண்டிப் பாத்தேன். (நான் இப்படித்தாங்க, அடிக்கடி, கொழுப்பெடுத்து ஏதாவது பண்ணி வாயக்கொடுத்து உடம்ப புண்ணாக்கிடுவேன்). அப்போ அவரு குடுத்த குடுல, பட்டப் பேரு பட்டமா பறந்து போயிடுச்சு. அதுனால நோ மோர் பீலான்னு மட்டும் நெனச்சுடாதீங்க, பீலா இல்லையேல் நான் இல்லை, புரிஞ்சதா?

நானும் பதிவு எழுத வந்து, நாத்திகம், கம்யூனிசம், ம$%&&சம்னு எல்லாக் கருமத்தையும் எழுதித் தொலைச்சும் ஒரு நாயும் சீந்த மாட்டேனுடுச்சு. எல்லாப்பயலும் கண்டமேனிக்கி பாலோயர்ஸ் வெச்சுக்கிட்டு பிரபல பதிவர்னு சிலுப்பிக்கிட்டு திரியறானுங்க. நானும் என்னென்னமோ 2 வருசமா முக்கிப் பாத்தும் ஒண்ணுமே தேறல. அப்புறம் தான் ஐடியா வந்துச்சு. யாராவது ஒரு பிரபல பதிவர புடிச்சுக் கிழிச்சி பிரச்சனையக் கிளப்பி பேமசாயிடலாம்னு ப்ளான் பண்ணேன். அதுக்கேத்த மாதிரி அப்பாவி பிரபலம் ஒரு ஆளூ சிக்குனாரு. போட்டுத் தாளீச்சிட்டேன்ல. பதிவுலகமே கதி கலங்கிடுச்சு. பேமசாகனும்னு வெறில நான் கொஞ்சம் ஓவரா போயிட்டேன். அந்த பிரபல பதிவர் மெரட்டுன மெரட்டுல, துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடிட்டேன்.

அப்புறம் மெல்ல திரும்பி வந்து ஒரு மன்னிப்பு பதிவ போட்டு அதுக்கும் ஹிட்ஸ் வாங்கி பெரிய ஆளாயிட்டேன். தமிழ்மணத்துல கூட டாப்20ல போட்டாங்க. கொஞ்ச நாள் இப்படியே ஓட்டிடலாம்னு பாத்தா ஹிட் ரேட் குறைய ஆரம்பிடுச்சு. என்ன பண்றது, விட்ட இடத்த புடிக்கனுமே? மறுபடி ஒரு பிரபல பதிவர சீண்டுனா, எல்லோரும் சேந்து தொவைச்சு காயப் போட்ருவானுங்கன்னு, சூப்பர் ஸ்டார் ரஜினிய போட்டுத் தாக்குத் தாக்குன்னு தாக்கிட்டேன். எதிர்பதிவுலாம் போட்டுட்டாங்க. ஆனா பாருங்க, ஹிட் ரேட் நினச்ச அளவு கூடவே இல்ல. தக்காளி, எல்லாப்பயலும் வெவரமாயிட்டான். நான் பண்ற ஜெகஜ்ஜாலக் கில்லாடி வேலைகள புரிஞ்சிகிட்டானுங்க, நாதாரிங்க.

அடுத்து யார அட்டாக் பண்ணி முன்னுக்கு வர்ரதுன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு குரூப்பு இருக்கானுங்க, அவனுகளால தான் எனக்கு இந்த வாரம் தமிழ்மணம் டாப்20ல இடம் போச்சு. அவனுங்க பண்ற அலும்பு டூ மச், ஏதேதோ பண்ணி இந்த வாரம் தமிழ்மணம் டாப் 20க்குள்ள நுழைஞ்ச்சுட்டானுங்க.

வேற என்னதான் பண்றதுன்னு புரியாம, நம்ம காந்தித்தாத்தாவ இழுத்தேன் பாருங்க வம்புக்கு, புதுசு புதுசா ஆளுக வந்து திட்றாங்க, ஜாலிதான், இனிமே பிரபல பதிவர்தான் . அடுத்து ஒரு பெரிய பிரச்சனைய உண்டு பண்ணி தமிழ்மணம் ரேங்கிங்குள்ள மறுபடி நுழைஞ்சுட வேண்டியதுதான்.

ஏன்னா நானெல்லாம் பொறந்ததுலே இருந்து பிரபல பதிவர்டா, எனக்கு ரெண்டு இல்லடா, நாலு கொம்பு மொளச்சிருக்குடா... சாதா பதிவனுகல்லாம் எட்ட நின்னு பேசுங்கடா.....டேய்........!

Thursday, December 16, 2010

கோமாளி செல்வா..........அதிரடி பேட்டி.......!


ஏய்........ஓடுறான் பாருங்க பிடிங்க அவன...


அவன் தான் (கோமாளி)செல்வா.....ங்கொய்யால நம்ம கைல சிக்காம எஸ் ஆகிட்டு இருந்தான் பிடிச்சு தூக்கிட்டு வாங்க பயபுள்ளைய.. நாக்க புடுங்குர மாதிரி நாலு கேள்வி கேப்போம்...........

பிடி...படுவா........ஏய்.........கொண்டு வாங்க அவன இங்க.......ம்ம்ம்ம்ம்ம்

(டெரர் கும்மி இனி. டெ.கு.)

டெ.கு : நீதான் செல்வாவா........?

செல்வா: ஆமாண்ணா...நாந்தான் உங்ககிட்ட நீங்க கேக்குறதுக்கு முன்னால ஒரு கேள்வினா?

டெ.கு.: கேளுடி மவனே கேளு....

செல்வா: அடிக்கும் போது ஃபேஸ்ல டச் பண்ணாம அடிக்கச் சொல்லுங்கண்ணா பர்சனாலிட்டி போயிடும்.....அப்ப்றங்கண்னா? கும்மி கும்மினு சொல்றீங்களே அது எப்டி இருக்கும் அம்மி மாதிரிங்களாங்க?

டெ.கு.: பாத்தியா பயபுள்ள நம்ம கிட்டையே மொக்க போடுது...பிச்சு புடிவே பிச்சு.........உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது....நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு. தமிழ் நாட்டு அரசியல் பத்தி என்ன நினைக்கிற?

செல்வா: தமிழ் நாட்டு அரசியில் கல்லு நிறைய கிடக்குதுங்கண்ணா... நல்லா அரிசியா கிடைக்கமாட்டேங்குது! அப்புறம் அரிசி விக்கிற ஆளுங்க எல்லாம்தான் அரிசியல்வாதிங்களான்னா டவுட்டு:-))))

டெ.கு: உன் டவுட்ட கொண்டு போய் குப்பைல போடு....

செல்வு: சரி கொடுங்கன்னா டக்குனு போய் போட்டுட்டு வர்றேன்...ஒரு பேக்ல போட்டு கொடுங்கன்னா கீழ கொட்டிட போது...

டெ.கு: ம்ம்ம் மவனே பேசுன சங்க அறுத்துடுவேன்

செல்வா: பேசாம பேட்டிக்கு எப்டினா பதில் சொல்றது.. ஊமை பாசையிலா? ஆமான்னா சங்கு அறுத்துடுவே சங்கு அறுத்துடுவேனு சொல்றீங்களே வேன்டாம்னா விட்டுங்க பாவம் அந்த சங்கு. நல்ல மனுசனா இருப்பாரு போல சங்க தயவு செஞ்சு விட்டுடுங்க இது என் வேண்டு கோள்!

டெ.கு: பய... ரொம்ப டஃப் கொடுக்குறானே.... சரி அத விடு/////

செல்வா: எதண்னா?.

டெ.கு: அட கொல்றானே.. கேள்விய என்ன கேக்க விடுடா? உனக்கு பிடிச்ச நடிகர் யார்?

செல்வா: விஜயகாந்த்னா.. ஏன்ன அவர் நல்லா நடிக்கிறார்ங்கறதே நல்ல நடிப்பா இருக்கும்னா...ஈசிய கண்டு பிடிககலாம் நடிக்கத்தெரியாம நடிக்கிறார்னு

டெ.கு: பதிவுலகம் பத்தி உன் கருத்து

செல்வா: நான் இதுவரைக்கும் போனதில்லைங்க மொக்கைகள் கூட்டம் நிறைய இருக்காம்...நல்லா எழுதுறேன்னு பல பேர் மொக்கை போடுறாகளாம்..ஆன மொக்கை போடுறேன்னு பல பேர் நல்லா எழுதுறாங்களாம்..அவ்வ்வ்வ்வ்வ்வ்

டெ.கு: உனக்கு பிடித்த பதிவர் யார்?

செல்வா: டி.ராஜேந்தர்னா..

டெ.கு: (ஷாக்காகி!!!!!!) என்னது? டி. ராஜேந்தரா? அவரு எப்பய்ய பதிவரானாரு?

செல்வா: எல்லோர் கழுத்தையும் பல்லால பதிய பதிய கடிக்கிறார்ல படத்துல எல்லாம்.. கடிக்கிறதுக்கு பல்லு வேணும்ல அப்போ அவர் பதியர் இல்ல பதிவர்னு தானே சொல்லணும்....


டெ.கு: காவல்துறை பத்தி என்ன நினைக்கிற.....

செல்வா: அவன எனக்கு பிடிக்காது....

டெ.கு: அவனா?

செல்வா: ஆமாம் எனக்கு போட்டியா நான் பாக்குற ஒரே ஜென்மம்

டெ.கு: டேய் யார சொல்ற நீ?

செல்வா: இப்போ கதை எழுதுறானாம் கதை இருக்கு அவனுக்கு ஆப்பு...

டெ.கு : நான் தமிழ் நாட்டு காவல்துறைய கேக்குறேன்... நீ யார சொல்ற

செல்வா: அவன் தான் ரமேஷ்.. அவன் போலிசுதானே!!!!!

டெ.கு: அவன் போலிசா அப்டித்தான் நம்பிட்டு இருக்கியா?

செல்வா: அப்போ அவரு நிஜமா போலிசு இல்லையா...??????????? நான் தான் ஏமாந்து போய்ட்டேனா..........வடை போச்சோ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டெ.கு: வடைன்னு சொன்ன உடனே ஒரு கேள்வி வருது...

செல்வா: கேள்வி வரட்டும்.....! வடை வருமா?

டெ.கு: இருடா கேள்விய கேக்கவிடு ங்கொய்யால இல்ல பன்னிக்குட்டி, டெரரு எலோரயும் கூப்பிட்டு அசிங்க அசிங்கமா திட்ட சொல்வேன்.. இப்பொ எஸ்.கே வேற புல் பார்ம்ல இருக்காரு.. கம்முனு கேள்வி கேக்க விடு ங்கொன்னியா....

ஏன்டா வடை வடைனு அலையுற.....? ஏன்? ஏன்? ஏன்?

செல்வா: எதுக்குன்னா ஒரு வடை கொடுக்க வக்கில்ல உங்களுக்கு இத்தனை ஏன் போடுறீங்க....ம்ம்ம்ம்


எங்க பாட்டி சுட்ட வடைய எடுத்துச்சே காக்கா அத நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்....

எங்க போனாலும் என் வடைய சுடுறானே... இந்த இம்சை அவன நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன்...


எல்லா அநியாயத்தையும் பாத்துட்டு கண்டுக்காம இருக்கீங்களே கும்மி குரூப் அவனுகள நிறுத்த சொல்ங்க நான் நிறுத்துறேன்... (செல்வா மூச்சிறைக்க நிக்கிறான்...)

சரி என்ன இவ்ளோ கேள்வி கேட்டீங்களா நான் ஒரு கேள்வி கேக்கலாமா உங்கள....

டெ.கு: (பயத்துடன்....) ம்ம்ம்ம்ம்ம் சரி கேளு.....

செல்வா: ங்கொய்யால உங்களுக்கு எல்லாம் அறிவு இருக்கா சின்ன பையன் என்ன பேட்டி எடுக்குறேன்னு சொல்லிட்டு நீங்களே கேள்வி பதில் ரெடி பண்ணி போடுறீங்களே.. உங்களை எல்லாம் என்ன செய்யலாம்...........(அச்சோ இது ரியல்.. செல்வா..........அரிவாளோட வர்றான்................டீம் எஸ்கேப்பு.........ஆத்தாடி........இவன் கோமாளி இல்ல கொலைகாரன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............)


ஆக்கமும் உணர்வும் டெரர் கும்மிக்காக............
தேவா. S



அப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா!



Wednesday, December 15, 2010

அமிர்த சஞ்சீவி மொக்கைகள்!





*. காதல் எங்க ஆரம்பிச்சு எங்க முடியுதுன்னு தெரியுமா .? 'கா' வுல ஆரம்பிச்சு 'ல்' ல முடியுது.! நீதி : இதுகூடவா தெரியாது .?

*. ஒரு யானை நினைச்சா எறும்ப மிதிக்கலாம் ; ஆனா ஒரு எறும்பு நினைச்சா யானைய மிதிக்க முடியாது.! நீதி : உண்மை சிலநேரங்களில் கசக்கும்.!

*. ஆட்டோ ஓட்டுறவர் ஆட்டோ டிரைவர்; பஸ் ஓட்டுறவர் பஸ் டிரைவர்; அப்படின்னா 'ஈ' ஓட்டுறவர் பேரு என்ன.?

*. ஒரு கல்ல கண்ணாடி மேல வீசினா கண்ணாடி உடைஞ்சு போகுது;ஒரு கண்ணாடிய கல்லு மேல வீசினா கல்லுதானே உடையனும்.?கண்ணாடி ஏன் உடையுது.?

*. டீ கேட்டா டீ பவுடர் போடுறாங்க ; காபி கேட்டா காபி பவுடர் போடுறாங்க ; அப்படின்னா சுடுதண்ணி கேட்டா என்ன சுடுபவுடர் போடுவாங்களா.?

*. சைக்கிளோட முன்னாடி வீல் முன்னாடி சுத்துது அப்படிங்கறதுக்காக பின்னாடி வீல் பின்னாடி சுத்த முடியாது.!

*. கடல் தண்ணிக்கும் ஆத்துத் தண்ணிக்கும் என்ன வித்தியாசம்.? கடல் தண்ணில ஆத்துத் தண்ணி இருக்கும் , ஆனா ஆத்துத் தண்ணில கடல் தண்ணி இருக்காது .!

*. தண்ணி அடிச்ச மப்பு வரும்னு சொன்னாங்க , நானும் ஒரு பக்கட்ல தண்ணி ஊத்திவச்சு ஒரு குச்சி எடுத்து அடிச்சேன்,எனக்கு மப்பே வரல , ஏன் ..?

*.பூமிய விட சூரியன் பெரிசு அப்படின்னு எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு தெரியுமா.? சப்ப மேட்டர். ஏன்னா பூமி இரண்டு எழுத்து , சூரியன் நாலு எழுத்து.!

*. எறும்பு ஏன் சிறுசாவும் யானை பெருசாவும் இருக்குன்னு தெரியுமா.?ஏன்னா எறும்பு பிறக்கும் போதே சிறுசா பொறந்துருச்சு,அதனால.!

*. உப்பு டப்பா மேல சர்க்கரை அப்படின்னு எழுதி வச்சா கூட எறும்பு வர்றதில்லையே ஏன்..? ஏன்னா எறும்புக்குதான் எழுதப் படிக்கத் தெரியாதே..!

*.கம்ப்யூட்டருக்கு பட்டை போட்டா பிடிக்குமா இல்ல நாமம் போட்டா பிடிக்குமா..? நாமாம்தான். ஏன்னா அதுலதான் RAM இருக்கே.!

*.அதிகமா குளிர் அடிச்சா தண்ணி பனிக்கட்டியா மாறிடும் ; ஆனா எவ்ளோ வெயில் அடிச்சாலும் தீ தீக்கட்டியா மாறாது.!

*.இருட்டுல லைட்டு போட்ட வெளிச்சம் வரும் ; ஆனா வெளிச்சத்துல லைட்டு போட்ட இருட்டு வராது ; நீதி : ஆற்காட்டார்க்கு நன்றி.!

*. காக்காய்க்கு வயசான என்ன ஆகும் .? காக்பழம் ஆகிடும்.! மாங்காய் மாம்பலம் ஆகும் போது காக்காய் ஏன் காக்பழம் ஆக கூடாது.?

*  யானையோட மூளை மனுசனோட மூளைய விடப் பெரிசா இருக்கலாம்,ஆனா அதுக்கு மூளை அப்படின்னா என்னனே தெரியாது.! நீதி:உங்கள் கையில்.!

*  உங்க கம்பியூட்டர் 16 மில்லியன் கலரா காட்டக்கூடியதா இருந்தாலும் செஸ் போர்ட Black & White ல தான் காட்டும்.!

*  மர மண்டை அப்படின்னு திட்டுறதால நம்ம தலைல மரத்த வச்சு வளர்க்க முடியுமா...? நீதி : !@$@##^*^)&%#$@%&$&#^*(

*  பொண்ணுகளுக்கு கம்பியூட்டர்ல பிடிச்ச பார்ட் எதுன்னு தெரியுமா..? " SERIAL "- port தான் ரொம்ப பிடிக்கும் ..!!

*  ஆஞ்சநேயர் சாமிய கும்பிட்டா கல்யாணம் பண்ணிக்ககூடது அப்படின்னு சொல்லுறாங்க , அப்படின்னா முருகன கும்பிட்டா இரண்டு கல்யாணம் பண்ணிக்கனுமா..?

*  நமக்கு இரும்பு சத்து கம்மிய இருக்குது அப்படிங்கறதுக்காக இரும்பு சாப்பிட்டு அதைய குணப்படுத்த முடியுமா .? நீதி : இரும்பு சத்துனா என்ன .?

*  பஜ்ஜி சூடா சாப்பிடனும் அப்படிங்கறதுக்காக வாய்ல எண்ணெய் ஊத்தி பஜ்ஜி சுட முடியாது ..!! நீதி : இதையெல்லாம் படிக்கணும்னு உங்க தலையெழுத்து.!