Monday, July 25, 2011

அஞ்சு பத்துக்கு அலையும் ரமேசும் அற்புத விளக்கும்! - 6

”நான் வேணா மிஸ் மரியாதையா பேசட்டுமா?”
முந்தைய பாகங்கள்: பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5

அவள் நடப்பதை தூரத்தில் பார்த்துக்கொண்டே வந்த ரமேஷ் வேகமாக வீட்டுக்குள் சென்றான்.. அங்கு அருண் பேரீச்சம் பழம் தின்று கொண்டிருப்பதை பார்த்ததும்...”ஏன்டா நாயே? முன்னாடியே பேரீச்சம் பழம் இருக்குன்னு சொல்லிருந்தா நான் இவ்ளோ தூரம் போயிருக்கமாட்டேன்ல? இப்ப பாரு அந்த பொண்ணு எங்கயோ போய்கிட்டு இருக்கு” என்றான்...

இதைக்கேட்ட அருண் அதிர்ச்சியாகி..”டேய்ய்.. என்னடா சொல்ற? நீதான் என்கிட்டே கொடுக்க சொன்னேன்னு சொல்லி ஒருத்தன் கொடுத்துட்டு போறான்டா” என்றான்..

இதைக்கேட்ட ரமேஷ் மேலும் குழப்பமாகி.. ”டேய்ய்....நான் ஒண்ணுமே சொல்லடா யார்கிட்டயும்... அதுசரி...அவன் என்ன சும்மாவா கொடுத்துட்டு போறான்?” என்றான் ரமேஷ்.

“போடாங்... சும்மா கொடுக்க அவன் என்ன உன்னை மாதிரி லூசா? இங்க இருந்த பழைய விளக்க தூக்கி கொடுத்தேன்.. பத்து பேரீச்சம்பழம் கூடவே கொடுத்துட்டு போய்ட்டான்” என்று பெருமைப்பட்டான் அருண்!

இதைக்கேட்ட ரமேஷுக்கு தலையே வெடித்தது போல் இருந்தது.. ரெண்டு இட்லி கம்மியா இருந்தாகூட தாங்கிக்கொள்ளும் அவன் இதயம் இதைத்தாங்காமல்... ”போடாங்....நல்லா வருது வாயில.. திண்ண பரோட்டா வெளில வந்துருமேன்னு பேசாம போறேன்” என்று கூறிக்கொண்டே வீட்டை விட்டு வெளியேறினான்!

இதை ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த அருணும் பூட்டி சாவியை வைத்துவிட்டு அவன் வீடு நோக்கி நடந்தான்!

இதற்கிடையில்... போலிஸ் வாகனத்தை பார்த்து பயந்து போன பாண்டியனும் செல்வாவும்.. உடனே லாட்ஜை காலி செய்து ரமேஷ் வீட்டுக்கு அடுத்த தெருவிலே அவசரகதியில் ஒரு வீட்டை பார்த்து வந்திருந்தனர்... அங்குதான் இப்பொழுது பாண்டியன் செல்வாவுக்காக காத்துக்கொண்டிருந்தார்!

அந்த பெண் பின்தொடர்வதை அறிந்த செல்வா..கொஞ்சம் வேகமாக நடந்து அந்த பெண் பார்வையில் இருந்து மறைந்து..அவசரமாக அவர்கள் புதிதாக வந்த வீட்டை அடைந்தான்! செல்வாவை விளக்கோடு பார்த்த சந்தோஷத்தில் பாண்டியன் வழக்கம்போல புரியாத தமிழில் பேச ஆரம்பித்தார்! இதைப்பார்த்த செல்வா கொஞ்சம் அரண்டு போய்.. அந்த நோட்டை எடுத்துக்கொண்டு வராண்டாவில் உட்காந்தான்.. இதை எதிர்பார்த்த பாண்டியனும்..அந்த விளக்கோடு மாடியில் உள்ள ஓர் அறையை நோக்கி போனார்! நாம் தேய்த்தால் அந்த பூதம் வருமா என்ற சந்தேகத்தோடு அதை தேய்க்க ஆரம்பித்தார்.......

செல்வா போன திசையில் வந்த அந்த பெண்ணும்.. வழியில் உள்ளவர்களிடம் செல்வாவின் அடையாளத்தைக்கூறி கேட்டுக்கொண்டே அந்த வீட்டை அடைந்தாள் அந்த பெண்...

அதேசமயம்...அந்த பெண்ணின் அடையாளத்தைக்கூறி கேட்டுக்கொண்டே அந்த பெண்ணை தேடி வந்து கொண்டிருந்தான் ரமேஷ்.....

பாண்டியன் விளக்கை தேய்க்க ஆரம்பித்ததும் வெளியில் வந்த ராம்ஸ் பாண்டியனை பார்த்து அதிர்ச்சியாகி... ”அடங்கொன்னியா... படுவா நீ யார்ரா? ஏன்டா..நாயே..கண்டவனெல்லாம் கை வெக்கிரதுக்கு இது என்ன கார்ப்பரேசன் பம்பா? வெளக்குடா... வெளக்கு.. அது சரி... பருத்திக்கொட்டைக்கு பட்டு சட்டை போட்ட மாதிரி இருக்க உனக்கு எங்க தெரியப்போகுது?”

 ராம்சின் என்ட்ரியை பார்த்து  பயந்துபோன பாண்டியன் ஓரமாக பம்மினார்....  ”ஹேய்...இங்க வா..ஏன் பம்முற? இப்ப எதுக்கு நீ தேய்ச்சேன்னு சொல்லலைனா..படுவா..மூஞ்சிலே அப்பிப்புடுவேன்..சொல்றா ராஸ்கோல்” என்றது ராம்ஸ்!

“அது ஒன்னுமில்லைங்க ஐயா...” என்று வாயெடுத்த பாண்டியனை இடைமறித்த ராம்ஸ்..
”ஏய்..நிறுத்து...நிறுத்த்த்து.....ஆங்..இவருக்கு அப்பிடியே இளமை ஊஞ்சலாடுது..இவரு என்னைபார்த்து ஐயா.. சொய்யானுகிட்டு... படுவா.. ராம்சுன்னு சொல்றா”.என்றது! அது இல்லை ராம்ஸ்..

“எனக்கு ஒரு வரம் வேணும் ராம்ஸ்” என்றார் பாண்டியன்....

இந்தப்பக்கம்.....

வெளியே கேட்டை திறந்துகொண்டு வந்த அந்த பெண்ணைப்பார்த்து அதிர்ச்சியான செல்வா விரைவாக அந்த நோட்டை பின்பக்கமாக மறைத்தான்! இதைப்பார்த்துவிட்ட அந்த பெண்ணும்.. ”என்னங்க மறைக்கிரிங்க?” என்றாள்..

உடனே செல்வா.. ”நான் எங்க முறைக்கிறேன்? நீங்கதான் இப்ப என்னை பார்த்து முறைக்கிறீங்க” என்றான்!

இதைக்கேட்ட அந்த பெண்..”ஐயோ.. நீங்க பின்னாடி மறைச்சத சொன்னேன்” என்றாள்..

”என்னங்க நீங்க? உங்களுக்கு தெரிஞ்சேதான் மறைச்சிருக்கேன்.. அப்ப.. உங்களுக்கு முன்னாடி மறைச்சததானே அர்த்தம்? அப்புறம் ஏன் பின்னாடி மறைச்சேன்னு பொய் சொல்றீங்க”

இதைக்கேட்டு கடுப்பானாள் அந்த பெண்.. ”ஹலோ... மிஸ்டர் மரியாதையா பேசுங்க”

“சாரிங்க... எனக்கு மரியாதையா பேச தெரியும்..ஆனா நீங்க சொன்ன அந்த மிஸ்டர் மரியாதையா பேச தெரியாது... நான் வேணா உங்கள மிஸ்னு கூப்ட்டு மிஸ்  மரியாதையா பேசவா” என்றான் செல்வா!

அந்த பெண்ணுக்கு லேசாக தலைசுற்ற ஆரம்பித்தது...”சார்..ப்ளீஸ் சார்... நீங்க எடுத்துட்டு வந்த என் நோட்ட தாங்க நான் என் வீட்டுக்கு போகணும்” என்றாள்!

“என்னம்மா லூசா நீ? இப்பகூட நீ என் வீட்லதானே இருக்க”

இதைக்கேட்ட அந்த பெண்.. இருந்த கொஞ்சம் தெம்பும் போய் அந்த இடத்திலே மயங்கி விழுந்தது... இதைப்பார்த்த செல்வா அதிர்ச்சியாகி... ’இப்பிடி மயங்கிருச்சே?.. நம்ம அழகுல மயங்குனுச்சா...இல்லை அலும்புல மயங்குனுசான்னு தெரியலையே’ என்று நினைத்துக்கொண்டு.. அந்த பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தான்......

அதே நேரம் மாடியிலிருந்து வேகமாக ஓடிவந்த பாண்டியன்... கையில் கிடைத்த துணிகளை பைகளில் அமுக்கிக்கொண்டு..”டேய்ய்... நாதாரி... சீக்கிரம் கிளம்புடா” என்றார்.. சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த பெண்ணை பார்த்தவர்.. ”இது யார்ரா?” என்றார்..

சொல்ல வாயெடுத்த செல்வாவை அடக்கி விட்டு..”சரி..அதெல்லாம் போறப்ப பேசலாம்...சீக்கிரம் கிளம்பு” என்று கூறிக்கொண்டே...கிட்டத்தட்ட செல்வாவை இழுத்துக்கொண்டு வெளியேறினார்..

“என்னாச்சு சாமி?” என்றான் செல்வா..

”நாம உயிரோடு இருக்கனுமா வேண்டாமா?” என்றார் பாண்டியன்..

இதைக்கேட்டு அதிர்ச்சியான செல்வா.. ”ஆமா சாமி” என்றான்..

“அப்ப நாம இங்க இருந்து கிளம்பனும்.. இன்னும் அஞ்சு நிமிடம் இருந்தோம்.. அந்த பூதம் நம்மள கொன்னுரும்.” என்று கூறிக்கொண்டே..அந்த பெண்ணை அப்படியே விட்டு விட்டு வீட்டை விட்டு அவசரமாக வெளியேறினர்!

இதை தூரத்தில் பார்த்துக்கொண்டே வந்த ரமேஷ்.. அந்த வீட்டினுள் நுழைந்து அந்த பெண் மயங்கி கிடபதைப்பார்த்தான்.......

30 comments:

மாணவன் said...

//இதைக்கேட்ட ரமேஷுக்கு தலையே வெடித்தது போல் இருந்தது.. ரெண்டு இட்லி கம்மியா இருந்தாகூட தாங்கிக்கொள்ளும் அவன் இதயம் இதைத்தாங்காமல்... ”போடாங்....நல்லா வருது வாயில.. திண்ண பரோட்டா வெளில வந்துருமேன்னு பேசாம போறேன்” என்று கூறிக்கொண்டே வீட்டை விட்டு வெளியேறினான்! ///

ஹிஹி... ரமேஷ் ராக்ஸ்...

மாணவன் said...

கதையை நகைச்சுவையாகவும் மிகவும் சுவாரசியமாகவும் கொண்டு சென்ற விதம் அருமை,இப்படி ஒரு கான்செப்டை தேர்வு செய்து எண்ணங்களை எழுத்தாக்கி நகைச்சுவை கலந்து பதிவு செய்த டெரர் - கும்மி குரூப்ஸ் நண்பர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் & நன்றிகள் பல....

அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் டெரர் - கும்மியின் நீண்டகால வாசகன்...

உங்கள். மாணவன்

:)

Madhavan Srinivasagopalan said...

//கதையை நகைச்சுவையாகவும் மிகவும் சுவாரசியமாகவும் கொண்டு சென்ற விதம் அருமை,இப்படி ஒரு கான்செப்டை தேர்வு செய்து எண்ணங்களை எழுத்தாக்கி நகைச்சுவை கலந்து பதிவு //

தொடர்ச்சி..

செய்து வாசகர்களை நகைச்சுவை கடலில் முக்கி எடுக்கும் உங்களுக்கு பாராட்டும், நன்றியும்..

எஸ்.கே said...

//அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் டெரர் - கும்மியின் நீண்டகால வாசகன்...//

நன்றி வாசகரே! தங்களைப் போன்ற வாசகர்களே எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் அருமருந்துகள்! இது போன்ற கதையை ஒரு கூட்டு முயற்சியாக படைக்க முயன்றததற்கு ஓரளவாவது வரவேற்பு கிடைத்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி! இருப்பினும் தங்களைப் போன்ற வாசகர்கள் அவ்வப்போது இப்படி கருத்துக்கள் மூலம் எங்களை குதூகலம் கொள்ள செய்கின்றது என்பதை மறுக்க இயலாது என்று சொல்லிக் கொள்கிற அதே வேளையில் தங்களுக்கு எங்கள் நன்றிகளை பாதக் காணிக்கையாக்குகிறோம் என்பதை மட்டறுப்பின்றி இனிமையோடு ஏற்கிறோம்!

வைகை said...

நன்றிகளை பாதக் காணிக்கையாக்குகிறோம் என்பதை மட்டறுப்பின்றி இனிமையோடு ஏற்கிறோம்//

தயவுசெய்து தமிழில் கமென்ட் போடவும் :))

வைகை said...

போடாங்... சும்மா கொடுக்க அவன் என்ன உன்னை மாதிரி லூசா//

மச்சி..உனக்கும் தெரிஞ்சு போச்சா?

வைகை said...

பத்து பேரீச்சம்பழம் கூடவே கொடுத்துட்டு போய்ட்டான்” என்று பெருமைப்பட்டான் அருண்! //

ஆங்..அப்பிடியே பத்து ஆஸ்கர் அவார்ட மொத்தமா வாங்கிட்டாரு? பேரீச்சம் பழதுக்கே இந்த பாடா?

வைகை said...

”போடாங்....நல்லா வருது வாயில.. திண்ண பரோட்டா வெளில வந்துருமேன்னு பேசாம போறேன்”//

இதுவல்லவோ கொள்கை!( த்தூ....)

வைகை said...

போன பாண்டியனும் செல்வாவும்.. உடனே லாட்ஜை காலி செய்து ரமேஷ் வீட்டுக்கு அடுத்த தெருவிலே அவசரகதியில் //

மொன்ன நாய்ங்க....வாடக கொடுக்காம இருந்துருப்பாய்ங்க.. லாட்ஜ் ஓனர் பொடரில போட்டு அடிச்சு தொரத்தி விட்ருப்பான் :)

வைகை said...

செல்வாவை விளக்கோடு பார்த்த சந்தோஷத்தில் பாண்டியன் வழக்கம்போல புரியாத தமிழில் பேச ஆரம்பித்தா//

இதை கேட்டதுக்கு பிறகுமா செல்வா உயிரோட இருந்தான்?

வைகை said...

அந்த பூதம் வருமா என்ற சந்தேகத்தோடு அதை தேய்க்க ஆரம்பித்தார்.......//

லாட்ரி சீட்டு வாங்கி சொரண்டுன பயதானே? நல்லா தேச்சிருப்பான் :))

வைகை said...

வழியில் உள்ளவர்களிடம் செல்வாவின் அடையாளத்தைக்கூறி கேட்டுக்கொண்டே //

பொல்லாத அடையாளம்? மொச புடிக்கிற நாய மூஞ்சிய பார்த்தா தெரியாதா?

எஸ்.கே said...

செல்வாவை விளக்கோடு பார்த்த சந்தோஷத்தில் பாண்டியன் வழக்கம்போல புரியாத தமிழில் பேச ஆரம்பித்தா//

இதை கேட்டதுக்கு பிறகுமா செல்வா உயிரோட இருந்தான்?

///

வழக்கமா செல்வாவும் அப்படித்தான் பேசுவாரு அதனால ஒன்னும் ஆகலை:-)

எஸ்.கே said...

வைகை said...

நன்றிகளை பாதக் காணிக்கையாக்குகிறோம் என்பதை மட்டறுப்பின்றி இனிமையோடு ஏற்கிறோம்//

தயவுசெய்து தமிழில் கமென்ட் போடவும் :))//

அன்பரே! தங்களின் கருத்துக்களை கண்டு கதலியைக் கண்ட வேழம் போல இனிமை ஏற்படும் வேளையில் தாங்கள் பூவில் தேனை தேடி கிடைக்காத பொன்வண்டாக மருகுவதைக் கண்டு எங்கள் உவகை காற்றடைத்த பையிலிருந்து வெளியேறும் வாயுவைப் போல வெளியேறுகின்றது.

வைகை said...

எஸ்.கே said...
வைகை said...

நன்றிகளை பாதக் காணிக்கையாக்குகிறோம் என்பதை மட்டறுப்பின்றி இனிமையோடு ஏற்கிறோம்//

தயவுசெய்து தமிழில் கமென்ட் போடவும் :))//

அன்பரே! தங்களின் கருத்துக்களை கண்டு கதலியைக் கண்ட வேழம் போல இனிமை ஏற்படும் வேளையில் தாங்கள் பூவில் தேனை தேடி கிடைக்காத பொன்வண்டாக மருகுவதைக் கண்டு எங்கள் உவகை காற்றடைத்த பையிலிருந்து வெளியேறும் வாயுவைப் போல வெளியேறுகின்றது.//

உருளைக்கிழங்கு சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளவும் :))

வைகை said...

எஸ்.கே said...
செல்வாவை விளக்கோடு பார்த்த சந்தோஷத்தில் பாண்டியன் வழக்கம்போல புரியாத தமிழில் பேச ஆரம்பித்தா//

இதை கேட்டதுக்கு பிறகுமா செல்வா உயிரோட இருந்தான்?

///

வழக்கமா செல்வாவும் அப்படித்தான் பேசுவாரு அதனால ஒன்னும் ஆகலை:-)//

வெளங்கும்... நல்ல ஜோடிடா இது? ஏர்ல பூட்ன எருமை மாதிரி? :))

மாணவன் said...

//நன்றி வாசகரே! தங்களைப் போன்ற வாசகர்களே எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் அருமருந்துகள்! இது போன்ற கதையை ஒரு கூட்டு முயற்சியாக படைக்க முயன்றததற்கு ஓரளவாவது வரவேற்பு கிடைத்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி! இருப்பினும் தங்களைப் போன்ற வாசகர்கள் அவ்வப்போது இப்படி கருத்துக்கள் மூலம் எங்களை குதூகலம் கொள்ள செய்கின்றது என்பதை மறுக்க இயலாது என்று சொல்லிக் கொள்கிற அதே வேளையில் தங்களுக்கு எங்கள் நன்றிகளை பாதக் காணிக்கையாக்குகிறோம் என்பதை மட்டறுப்பின்றி இனிமையோடு ஏற்கிறோம்!///

எஸ்.கே, சூப்பர்... :) செம்ம கலக்கல்....

உங்களது கூட்டு முயற்சி தொய்வில்லாமல் தொடர வேண்டும் என்பதே என்னைப்போன்ற வாசகர்களின் ஆவலும் எண்ணமும், இதேபோன்று தொடர்ந்து நகைச்சுவை கட்டுரைகளையும், ஆக்கங்களையும் பதிவு செய்து என்னைப்போன்ற பல வாசகர்களை மகிழ்விக்க வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறிக்கொண்டு....

வாய்ப்பிற்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்...
நன்றி
நன்றி கலந்த வணக்கம்.

தொடரட்டும் உங்களின் இந்த நகைச்சுவை நற்பணி....

:)

எஸ்.கே said...

உருளைக்கிழங்கு சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளவும் :))//
அன்பு நெஞ்சரே! தங்கள் அன்பு கண்டு எங்கள் மனம் வெயில் பட்ட வெண்ணை போல் உருகுகின்றது..ஆனால் உன் அன்பு வெண்ணையடா அவர் அன்பு வெள்ளமடா என என் நெஞ்சம் என்னை நோக்கி சுட்டுவதால், பாத்திரத்திலிருந்து தப்பிக்கும் கொதிக்கும் உலைநீராய் உள்ளம் கொதிக்கின்றது!

எஸ்.கே said...

//வாய்ப்பிற்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்...
நன்றி
நன்றி கலந்த வணக்கம்.

தொடரட்டும் உங்களின் இந்த நகைச்சுவை நற்பணி....//
மகிழ்விக்கும் எங்களை மகிழ்விக்கும் மனதிற்கினிய மங்காத மாணவரே! மாசில்லா மாணிக்கமாய் மாபெரும் வாசகனாய் எங்களை வாழ்த்த வரும் வெண்மதியே! நீவீர் வாழ்க! நின் புரொஃபைல் படம் வாழ்க!

தினேஷ்குமார் said...

நான் படிச்சிட்டு வர்றேன் .... ஆபிஸ் கம்ப்யூட்டர்ல யாரோ ஆணி அடிச்சுபுட்டாங்க ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////”நாம உயிரோடு இருக்கனுமா வேண்டாமா?” என்றார் பாண்டியன்..
///////

ஏன் மறந்துட்டு அவர் ப்ளாக்கையே படிச்சி தொலச்சிட்டாரா?

Madhavan Srinivasagopalan said...

@ //பன்னிக்குட்டி ராம்சாமி said...


ஏன் மறந்துட்டு அவர் ப்ளாக்கையே படிச்சி தொலச்சிட்டாரா? //

செல்வா கதைகள் 1 , 2 படிச்சாலும் அப்படி ஓர் எண்ணம் வரலாமே.. .

கடம்பவன குயில் said...

//இதை தூரத்தில் பார்த்துக்கொண்டே வந்த ரமேஷ்.. அந்த வீட்டினுள் நுழைந்து அந்த பெண் மயங்கி கிடபதைப்பார்த்தான்.....//

ஹய்யோ....நம்ம பழைய தமிழ்பட ஸ்டைலில் அந்தப்பெண்ணை ரமேஷ்தம்பி காப்பாற்றி உடனே ரமேஷ்மேல அந்தப்பெண்ணுக்கு லவ் வரவச்சுறாதீங்கப்பா... எங்கள் இதயம் எதையும் தாங்கும் இதயமல்ல. மெல்லிதயம்.

வலையகம் said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

வெளங்காதவன் said...

hi hi hi....
Present my lord!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடம்பவன குயில் said...

//இதை தூரத்தில் பார்த்துக்கொண்டே வந்த ரமேஷ்.. அந்த வீட்டினுள் நுழைந்து அந்த பெண் மயங்கி கிடபதைப்பார்த்தான்.....//

ஹய்யோ....நம்ம பழைய தமிழ்பட ஸ்டைலில் அந்தப்பெண்ணை ரமேஷ்தம்பி காப்பாற்றி உடனே ரமேஷ்மேல அந்தப்பெண்ணுக்கு லவ் வரவச்சுறாதீங்கப்பா... எங்கள் இதயம் எதையும் தாங்கும் இதயமல்ல. மெல்லிதயம்.//

ஏன் ஏன் இந்த பொறாமை?

Reverie said...

முதல் முதலாய் நுழைகிறேன்...சுற்றி பார்த்துவிட்டு வருகிறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

அதேசமயம்...அந்த பெண்ணின் அடையாளத்தைக்கூறி கேட்டுக்கொண்டே அந்த பெண்ணை தேடி வந்து கொண்டிருந்தான் ரமேஷ்.....//

டேய்........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........முடியல..............

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////”நாம உயிரோடு இருக்கனுமா வேண்டாமா?” என்றார் பாண்டியன்..
///////

ஏன் மறந்துட்டு அவர் ப்ளாக்கையே படிச்சி தொலச்சிட்டாரா?//

ஹா ஹா ஹா ஹா அண்ணே நீங்க எங்கேயோ....................

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Reverie said...

முதல் முதலாய் நுழைகிறேன்...சுற்றி பார்த்துவிட்டு வருகிறேன்...//

வருக வருக ஆதரவு தருக