Wednesday, July 20, 2011

அஞ்சு பத்துக்கு அலையும் ரமேசும் அற்புத விளக்கும்! - 4


முந்தைய பாகங்கள்: பாகம் 1, பாகம் 2 , பாகம் 3
 
போலிஸ் வாகனத்தை பார்த்து பயந்துபோன பாண்டியனும் செல்வாவும் அந்த இடத்தை விட்டு மெதுவாக நழுவினர்..கொஞ்ச தூரம் சென்றதும் பாண்டியனிடம் செல்வா கேட்டான்..

”ஏன் சாமி..இவ்ளோ கஷ்டப்பட்டு விளக்க அவருகிட்ட விட்டு வந்துட்டோமே?”

“அட விட்ரா...அந்த நாதாரிக்கு அத வச்சு என்ன பண்ணனும்னே தெரியாது.. அந்த டாக் நேர வீட்டுக்குத்தான் போகும்.நாம வேற பிளான் பண்ணி அந்த விளக்க அவன்கிட இருந்து பறிச்சிருவோம்” என்று கூறிக்கொண்டே ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறி லாட்ஜை நோக்கி சென்றனர்!

------------------------------------------------

போலீஸ் வாகனத்தை பார்த்து பயந்துபோன ரமேஷ் பேஸ்மென்ட் வீக்கான வடிவேலு மாதிரி நின்றுகொண்டிருந்தான்..ஆனால் ஜீப்பில் இருந்து இறங்கிய காவலர்கள் இரண்டுபேரும் பக்கத்துக்கு பெட்டிகடையில் இரண்டு சிகரெட் வாங்கி பற்றவைத்துக்கொண்டு புகையை இவன் மூஞ்சியில் ஊதிவிட்டு சென்றனர்! ரமேஷ் தன் விதியை நொந்துகொண்டு சாப்பாடும் இல்லாமல் சாப்பாட்டுக்கு காசும் இல்லாமல் போற வர்ற வண்டியில் எல்லாம் லிப்ட் கேட்டு வீடு வந்து சேர்ந்தான்!

எப்படியோ வீடு வந்து சேர்ந்த ரமேஷ் கையில் விளக்கை வைத்துக்கொண்டு புலம்ப ஆரம்பித்தான்..அவன் அண்ணன் மாதவனும் அப்பாவும் வேலையில் இருந்து இன்னும் வரவில்லை..அண்ணி பிரசவத்திற்காக அவள் அம்மா வீடு சென்றிருந்தாள்..அம்மா அவன் அக்கா வீட்டுக்கு சென்று ஒரு வாரம் ஆகி விட்டது! தனியாக வயிற்றில் பசியோடும் மனதில் எதிர் வீட்டு பெண்ணை பற்றிய ஆசையோடும் புலம்பி கொண்டிருந்தான்!

”ச்ச்சே... இங்க வீட்டுக்கு வந்ததுக்கு பேசாம மைலாப்பூர் போயிருந்தா கபாலீஸ்வரர் கோயில் அன்னதானத்துலயாவது சாப்ட்ருக்கலாம்....அருண் வேலை பார்க்கிற இடத்துக்கு போயிருந்தா திட்டிகிட்டே ரெண்டு டீயாவது வாங்கி கொடுத்திருப்பான்..”.

திடீரென்று ஞாபகம் வந்தவனாய் போனை எடுத்து வெங்கட்டுக்கு டயல் செய்தான்... மறுமுனையில் ரிங் சென்றது... ”ஹலோ...மச்சி நான் ரமேஷ் பேசுறேன்..”.

மறுமுனையில் ”சொல்றா எப்பிடி இருக்க?.. ”

”நான் நல்லயிருக்கனும்னா உன் ஹெல்ப் வேணும்.”

”அப்பிடியா? சொல்லு..என்ன வேணும்?”

”நாலு மணி நேரமா சாப்புடவே இல்ல மச்சி..வந்து சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு போடா... ”

மறுமுனையில் அமைதி நிலவியது...

”மச்சி கேக்குதா?..”

”ம்ம் ...ஓக்கே.... ” என்று வெங்கட் சொன்னதும் மனதுக்குள் இளையராஜா....ச்சீ..இல்ல...சற்குனராஜின் ஆல்பம் சத்தம் இல்லாமல் ஓடியது...

ஆனால்..மறுமுனையில் வெங்கட் “பட் ஒன் கண்டிசன்..” என்றான்!

“என்ன மச்சி?”

”நான் உனக்கு சாப்பாடு வாங்கி தரணும்னா...2015 கிரிக்கெட் வோர்ல்ட் கப்போட டைம் டேபிள் தர்றேன்... அதுல யார் யார் ஜெயிப்பாங்கன்னு எனக்கு வீட்டு அட்ரசோட எழுதி அனுப்பு... எல்லாம் சரியா இருந்தா வந்து சாப்பாடு வாங்கி தரேன்.. ஆனா மச்சி..ரெண்டு பேர் சரியா சொன்னா உனக்கு பாதி சாப்பாடுதான் இப்பவே சொல்லிட்டேன்” என்றான் வெங்கட்!

இதை கேட்டதும் கடுப்பான ரமேஷ்.. ”போன வைடா அயோக்கிய ராஸ்கல்... நீ ஆணியே புடுங்க வேண்டாம்” என்று மீண்டும் தனியாக புலம்ப ஆரம்பித்தான்.... இப்படி புலம்பிகொண்டிருக்கும்போதே அவனை அறியாமல் அந்த விளக்கை அழுத்தி தேய்த்துவிட்டான்!

விளக்கை தேய்த்த கொஞ்ச வினாடியில்..அதிலிருந்து புகையாய் வந்தது! பயந்துபோன ரமேஷ் விளக்கை தூர வைத்துவிட்டுஅதையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று அதில் இருந்து கிளம்பிய ஓர் உருவம்..அந்த கால விட்டாலாச்சார்யா படங்களில் பார்ப்பது போலவே இருந்தது!

வந்ததுமே ரமேஷை பார்த்து “அடங்கொன்னியா...ஏன்டா தவள வாயா...? கைய வச்சுக்கிட்டு சும்மா இருந்த என்னடா? சும்மா இருந்த புண்ன சொறிஞ்சு விட்ட மாதிரி வெளக்க ஏன்டா தேச்சு என்னை கெளப்பி விட்ட?” என்று கேட்டது..

ரமேஷுக்கு பீதியில் பேதி மட்டும்தான் ஆகல....நின்ன இடத்திலே மூச்சா போய் விட்டான்...

இதைப்பார்த்த பூதம் கடுப்பாகி.. ”ஏன்டா நாசமாபோறவனே... உச்சா போற எடமாடா இது?” என்றது...

ரமேசுக்கு இன்னும் பயத்தில் பேச்சே வரவில்லை..பூதமும் விடாமல்.... ”படுவா..செய்யுறதையும் செஞ்சிபுட்டு உக்காந்துருக்கத பாரு?.. நமீதா மூஞ்சிய பக்கத்துல பார்த்த மாதிரி? இப்ப எதுக்குடா என்னை சொறிஞ்சு விட்ட..ச்சீ..எழுப்பி விட்ட?” என்றது..

பயந்துபோன ரமேஷ் பயத்துடனே..”ஐயோ எனக்கு ஒண்ணுமே தெரியாது..நான் வேணுமுன்னே இதை செய்யல” என்று கூறிக்கொண்டே கொஞ்சம் பயம் தெளிந்தவனாய்....”ஆமா நீ யாரு? உன் பேர் என்ன? நீ எப்பிடி இதுக்குள்ள வந்த?” என்று கேள்விகளை அடுக்கினான்!

"ஆங்..ஆ..இவரு பெரிய சி.பி.ஐ? அப்பிடியே கேள்வியா அடுக்குராறு? ஒரு வேளை ஓசி சோத்துக்கு சிங்கி அடிக்கிற மொன்ன நாயிக்கு பேச்சை பாரு? லொள்ள பாரு?" என்று பூதம் ரவுசு காட்டியது.
 
பிறகு அதுவே அமைதியாகி.."சர்தான் நாயே...உனக்கு ராமாயணம் தெரியுமாடா" என்றது! ரமேஷ் தெரியாது என்று சொல்லவும்..பூதம் நல்லவேளை என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு.."அது வந்துடா நாயே.. பாரதப்போர்ல(??!!) நான் ராமனுக்கு ஹெல்ப் செஞ்சு ரெம்ப டயர்ட் ஆயிட்டேண்டா..அதுக்காக ராமரு எம்மேல இரக்கப்பட்டு நான் ரெஸ்ட் எடுக்கனும்னு இந்த விளக்குல வச்சு அடசிட்டாறு..பூர்வ ஜென்மத்துல யாரு ராமனுக்கு உதவி செஞ்சாங்களோ..அவங்க இந்த வெளக்க தேச்சா நான் வெளில வரலாம்னு சொன்னாரு..அதான்.நீ தேக்கும்போது நான் வர வேண்டியதா போச்சுடா..ஃபிளட்டி இடியட் .. சரி..வந்தது வந்துட்டேன் உனக்கு ஏதும் ஹெல்ப் வேணும்னா கேள்றா நாயே.." என்றது!
 
இதைக்கேட்ட ரமேஷ் பூதத்திடம் உள்ள பயம் தெளிந்து... "முதல்ல உன் பேர மாத்தணும்..அது என்ன ராமன் அடிமை? இனிமே சுருக்கமா ராம்ஸ்..இதுதான் உன் பேர் சரியா?" என்றான்!

"சர்தான்டா நாயே..மேல சொல்லு என்றது ராம்ஸ் இன்னொரு கண்டிசனும் சொன்னது.. படுவா.. என்கிட்டே அது வேணும் இது வேணும்னு நொய்..நொய்
ங்ககூடாது... உனக்காக ஒன்னே ஒன்னு செஞ்சு தரேன்..கேளு" என்றது! 
 
ரமேஷ்க்கோ  சரியான பசி! சாப்பாடு வேணும்னு கேட்ப்பதற்கு வாயெடுத்தவன்.. எதிர் வீட்டு பெண்ணின் நினைவு வந்ததும்.. "ராம்ஸ்.. எதிர் வீட்ல  உள்ள பொண்ண நான் லவ் பண்றேன் எங்கள நீதான் சேர்த்து வைக்கணும்" என்றான்! 
 
"அடங்கொன்னியா? "  ராம்ஸ் பெரிய ஜெர்க் கொடுத்தது!

66 comments:

மாணவன் said...

வணக்கம் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டிங் டிங் டிகாரா...டங் டங்........டகாரா.............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மாணவன் said...
வணக்கம் :)///////

வணக்கம் வைக்கிறா எடமாடா இது?

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// மாணவன் said...
வணக்கம் :)///////

வணக்கம் வைக்கிறா எடமாடா இது//

ஹிஹி....பழக்கதோஷத்துல வச்சிட்டேன்... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////.நாம வேற பிளான் பண்ணி அந்த விளக்க அவன்கிட இருந்து பறிச்சிருவோம்” என்று கூறிக்கொண்டே ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறி லாட்ஜை நோக்கி சென்றனர்!///////

அது சேலமா?

மாணவன் said...

//டிங் டிங் டிகாரா...டங் டங்........டகாரா.............//

உங்க ஊர்ல இப்படிதான் வணக்கம் சொல்லுவீங்களா?? :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////போலீஸ் வாகனத்தை பார்த்து பயந்துபோன ரமேஷ் பேஸ்மென்ட் வீக்கான வடிவேலு மாதிரி நின்றுகொண்டிருந்தான்..///////

போலீசுக்கே போலீசா? அன்னிக்கு ரமேசு தொப்பி போட்டுட்டு போகல, அது மட்டும் போட்டிருந்தான்னு வெச்சுக்குங்களேன்.... சலங்க கட்டி ஆடி இருக்க மாட்டான்?

மாணவன் said...

//”நான் உனக்கு சாப்பாடு வாங்கி தரணும்னா...2015 கிரிக்கெட் வோர்ல்ட் கப்போட டைம் டேபிள் தர்றேன்... அதுல யார் யார் ஜெயிப்பாங்கன்னு எனக்கு வீட்டு அட்ரசோட எழுதி அனுப்பு... எல்லாம் சரியா இருந்தா வந்து சாப்பாடு வாங்கி தரேன்.. ஆனா மச்சி..ரெண்டு பேர் சரியா சொன்னா உனக்கு பாதி சாப்பாடுதான் இப்பவே சொல்லிட்டேன்” என்றான் வெங்கட்! ///

ரமேசுக்கு சாப்பாடு ஆசையே மறந்துருக்கும்.... ஹிஹிஹி

மாணவன் said...

//“அடங்கொன்னியா...ஏன்டா தவள வாயா...? கைய வச்சுக்கிட்டு சும்மா இருந்த என்னடா? சும்மா இருந்த புண்ன சொறிஞ்சு விட்ட மாதிரி வெளக்க ஏன்டா தேச்சு என்னை கெளப்பி விட்ட?” என்று கேட்டது..////

வெளங்கிருச்சு....யார் அந்த பூதம்னு... :)

மாணவன் said...

//ரமேஷ்க்கோ சரியான பசி! சாப்பாடு வேணும்னு கேட்ப்பதற்கு வாயெடுத்தவன்.. எதிர் வீட்டு பெண்ணின் நினைவு வந்ததும்.. "ராம்ஸ்.. எதிர் வீட்ல உள்ள பொண்ண நான் லவ் பண்றேன் எங்கள நீதான் சேர்த்து வைக்கணும்" என்றான்! ///

என்னாது ரமேஷ் லவ் பண்றாரா?? அப்ப இந்த வருசமாவது கல்யாணம் நடக்குமா?? :)

செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// மாணவன் said...
வணக்கம் :)///////

வணக்கம் வைக்கிறா எடமாடா இது?//

ஏன் அதுக்குத் தனியா வேற இடம் இருக்குதுங்களா ?

செல்வா said...

//வெளங்கிருச்சு....யார் அந்த பூதம்னு... :)/

அதுக்குள்ள வெளங்கிருச்சா ?

Madhavan Srinivasagopalan said...

பன்னியாரின் பிரசவம்.. சாரி.. சாரி.. பிரவேசம், இந்த இதழில்..
படித்துவிட்டீர்களா.. டெரர் கும்மி -- ."அஞ்சு பத்துக்கு அலையும் ரமேசும் அற்புத விளக்கும்! - 4" ...

முத்தரசு said...

கலக்கல் - கவுண்டமணி வசனத்தில் ராம்ஸ் -பார்க்கலாம் - தொடரட்டும்

செல்வா said...

// மனசாட்சி said...
கலக்கல் - கவுண்டமணி வசனத்தில் ராம்ஸ் -பார்க்கலாம் - தொடரட்டும்/

நன்றிங்க :-) தொடர்ந்து வாங்க!

Madhavan Srinivasagopalan said...

@ Selva// நன்றிங்க :-) தொடர்ந்து வாங்க! //

அப்ப , இந்தப் பகுதி எழுதினது
நீயா.. நீயா.. நீயா.. நீயா.. ?..

செல்வா said...

//அப்ப , இந்தப் பகுதி எழுதினது
நீயா.. நீயா.. நீயா.. நீயா.. ?../

இல்லனா, வைகை அண்ணன் தான் எழுதினது :-)

Unknown said...

நல்லா இருக்குண்ணா பதிவை தொடருங்கள்

நானும் உங்களை தொடர்கிறேன்...

Madhavan Srinivasagopalan said...

ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்..
கதை நகைச்சுவையாக செல்கிறது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// மாணவன் said...
வணக்கம் :)///////

வணக்கம் வைக்கிறா எடமாடா இது?//

ஏன் அதுக்குத் தனியா வேற இடம் இருக்குதுங்களா ?///////

இல்ல கைலதான் சொல்லனும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Madhavan Srinivasagopalan said...
ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்..
கதை நகைச்சுவையாக செல்கிறது../////

ஏனுங்க கதை எழுதுனவங்கள பாராட்டாமா ஆசிரியர்களை பாராட்டுறீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Madhavan Srinivasagopalan said...

@ Selva// நன்றிங்க :-) தொடர்ந்து வாங்க! //

அப்ப , இந்தப் பகுதி எழுதினது
நீயா.. நீயா.. நீயா.. நீயா.. ?..//

இது எழுதினது இல்லை. டைப் பண்ணினது!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

//ரமேஷ்க்கோ சரியான பசி! சாப்பாடு வேணும்னு கேட்ப்பதற்கு வாயெடுத்தவன்.. எதிர் வீட்டு பெண்ணின் நினைவு வந்ததும்.. "ராம்ஸ்.. எதிர் வீட்ல உள்ள பொண்ண நான் லவ் பண்றேன் எங்கள நீதான் சேர்த்து வைக்கணும்" என்றான்! ///

என்னாது ரமேஷ் லவ் பண்றாரா?? அப்ப இந்த வருசமாவது கல்யாணம் நடக்குமா?? :)
//

idiot

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

//ரமேஷ்க்கோ சரியான பசி! சாப்பாடு வேணும்னு கேட்ப்பதற்கு வாயெடுத்தவன்.. எதிர் வீட்டு பெண்ணின் நினைவு வந்ததும்.. "ராம்ஸ்.. எதிர் வீட்ல உள்ள பொண்ண நான் லவ் பண்றேன் எங்கள நீதான் சேர்த்து வைக்கணும்" என்றான்! ///

என்னாது ரமேஷ் லவ் பண்றாரா?? அப்ப இந்த வருசமாவது கல்யாணம் நடக்குமா?? :)
//

idiot

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிறகு அதுவே அமைதியாகி.."சர்தான் நாயே...உனக்கு ராமாயணம் தெரியுமாடா" என்றது!//

ராமாயணம் திருவள்ளுவர்தான எழுதினாரு?

செல்வா said...

//ராமாயணம் திருவள்ளுவர்தான எழுதினாரு?//

பாரதியார்!

test said...

வணக்கம் பாஸ்!

Madhavan Srinivasagopalan said...

//@ Blogger பன்னிக்குட்டி ராம்சா..."ஏனுங்க கதை எழுதுனவங்கள பாராட்டாமா ஆசிரியர்களை பாராட்டுறீங்க? //

அவரு வேற.. இவரு வேறையா ?
கிழிஞ்சுது பொ..

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பிறகு அதுவே அமைதியாகி.."சர்தான் நாயே...உனக்கு ராமாயணம் தெரியுமாடா" என்றது!//

ராமாயணம் திருவள்ளுவர்தான எழுதினாரு?//

ஏன் மாத்ரு பூதம்னு சொன்னா உனக்கு தெரியவா போகுது?

test said...

ராம்ஸ்?...பேச்சைப்பார்த்தா நம்ம மாம்ஸ் மாதிரி தெரியுதே! :-)

வைகை said...

Madhavan Srinivasagopalan said...
//@ Blogger பன்னிக்குட்டி ராம்சா..."ஏனுங்க கதை எழுதுனவங்கள பாராட்டாமா ஆசிரியர்களை பாராட்டுறீங்க? //

அவரு வேற.. இவரு வேறையா ?
கிழிஞ்சுது பொ.//

ஆமா..இப்ப நானும் பன்னியும் ஒரே ஆளுதான்..ஆனா வேற வேற ஐடில இருக்கம்ல? அதுமாதிரி :))

வைகை said...

ஜீ... said...
வணக்கம் பாஸ்!//

வாங்க பாஸ் :))

வைகை said...

ஜீ... said...
ராம்ஸ்?...பேச்சைப்பார்த்தா நம்ம மாம்ஸ் மாதிரி தெரியுதே! :-)//

அவரேதான் விட்றாதிங்க... போன ஜென்மத்துல அவரு பூதம்தான் (இப்ப மட்டும்? )

வெங்கட் said...

// ”நான் நல்லயிருக்கனும்னா
உன் ஹெல்ப் வேணும்.” //

அப்ப.. நான் ஹெல்ப் பண்ண மாட்டேன்..
ஊர் மக்கள் நிம்மதியா இருக்கட்டும்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மாணவன் said...
//”நான் உனக்கு சாப்பாடு வாங்கி தரணும்னா...2015 கிரிக்கெட் வோர்ல்ட் கப்போட டைம் டேபிள் தர்றேன்... அதுல யார் யார் ஜெயிப்பாங்கன்னு எனக்கு வீட்டு அட்ரசோட எழுதி அனுப்பு... எல்லாம் சரியா இருந்தா வந்து சாப்பாடு வாங்கி தரேன்.. ஆனா மச்சி..ரெண்டு பேர் சரியா சொன்னா உனக்கு பாதி சாப்பாடுதான் இப்பவே சொல்லிட்டேன்” என்றான் வெங்கட்! ///

ரமேசுக்கு சாப்பாடு ஆசையே மறந்துருக்கும்.... ஹிஹிஹி///////

இதுக்கெல்லாம் அசருவாரா நம்ம போலீசு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெங்கட் said...
// ”நான் நல்லயிருக்கனும்னா
உன் ஹெல்ப் வேணும்.” //

அப்ப.. நான் ஹெல்ப் பண்ண மாட்டேன்..
ஊர் மக்கள் நிம்மதியா இருக்கட்டும்..!//////

ஆமா நீங்க சும்மா இருந்தா ஊர்மக்கள் நிம்மதியா இருப்பாங்க..... இது கன்பர்ம்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மாணவன் said...
//ரமேஷ்க்கோ சரியான பசி! சாப்பாடு வேணும்னு கேட்ப்பதற்கு வாயெடுத்தவன்.. எதிர் வீட்டு பெண்ணின் நினைவு வந்ததும்.. "ராம்ஸ்.. எதிர் வீட்ல உள்ள பொண்ண நான் லவ் பண்றேன் எங்கள நீதான் சேர்த்து வைக்கணும்" என்றான்! ///

என்னாது ரமேஷ் லவ் பண்றாரா?? அப்ப இந்த வருசமாவது கல்யாணம் நடக்குமா?? :)////////

அவரு வருசத்துக்கு ரெண்டு பண்ணிக்கிட்டுத்தான் இருக்காரு, லவ்வு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Madhavan Srinivasagopalan said...

@ Selva// நன்றிங்க :-) தொடர்ந்து வாங்க! //

அப்ப , இந்தப் பகுதி எழுதினது
நீயா.. நீயா.. நீயா.. நீயா.. ?..//

இது எழுதினது இல்லை. டைப் பண்ணினது!!!//////

அப்போ கதையை டைப்ரைட்டர்ல இருந்து கம்ப்யூட்டருக்கு எப்படி ட்ரான்ஸ்பர் பண்ணாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவன் said...

//ரமேஷ்க்கோ சரியான பசி! சாப்பாடு வேணும்னு கேட்ப்பதற்கு வாயெடுத்தவன்.. எதிர் வீட்டு பெண்ணின் நினைவு வந்ததும்.. "ராம்ஸ்.. எதிர் வீட்ல உள்ள பொண்ண நான் லவ் பண்றேன் எங்கள நீதான் சேர்த்து வைக்கணும்" என்றான்! ///

என்னாது ரமேஷ் லவ் பண்றாரா?? அப்ப இந்த வருசமாவது கல்யாணம் நடக்குமா?? :)
//

idiot//////

அப்போ இந்த வருசமும் நடக்காதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பிறகு அதுவே அமைதியாகி.."சர்தான் நாயே...உனக்கு ராமாயணம் தெரியுமாடா" என்றது!//

ராமாயணம் திருவள்ளுவர்தான எழுதினாரு?/////

ம்மூதேவி அது சாலமன் பாப்பையா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வைகை said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பிறகு அதுவே அமைதியாகி.."சர்தான் நாயே...உனக்கு ராமாயணம் தெரியுமாடா" என்றது!//

ராமாயணம் திருவள்ளுவர்தான எழுதினாரு?//

ஏன் மாத்ரு பூதம்னு சொன்னா உனக்கு தெரியவா போகுது?//////

அதுமட்டும் அவனுக்கு தெரியும், சேலத்துக்கு போகமுன்னாடி அவர்கிட்டதான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஜீ... said...
ராம்ஸ்?...பேச்சைப்பார்த்தா நம்ம மாம்ஸ் மாதிரி தெரியுதே! :-)/////

கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்களே ஜீ... ? ஹார்லிக்ஸ் நிறைய குடிப்பீங்க போல ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
Madhavan Srinivasagopalan said...
//@ Blogger பன்னிக்குட்டி ராம்சா..."ஏனுங்க கதை எழுதுனவங்கள பாராட்டாமா ஆசிரியர்களை பாராட்டுறீங்க? //

அவரு வேற.. இவரு வேறையா ?
கிழிஞ்சுது பொ.//

ஆமா..இப்ப நானும் பன்னியும் ஒரே ஆளுதான்..ஆனா வேற வேற ஐடில இருக்கம்ல? அதுமாதிரி :))
//////

நீ எதுக்கு இப்ப மேட்டரை லீக் பண்ற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ் தன் விதியை நொந்துகொண்டு சாப்பாடும் இல்லாமல் சாப்பாட்டுக்கு காசும் இல்லாமல் போற வர்ற வண்டியில் எல்லாம் லிப்ட் கேட்டு வீடு வந்து சேர்ந்தான்!/////

அப்புறம் லிப்ட வாங்கிட்டு வந்து வீட்ல ஃபிட் பண்ணிட்டானா?

எஸ்.கே said...

//ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்..
கதை நகைச்சுவையாக செல்கிறது..//

அப்ப இங்க இருக்கிறதை பாடம்னே நினைச்சிட்டீங்களா?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தனியாக வயிற்றில் பசியோடும் மனதில் எதிர் வீட்டு பெண்ணை பற்றிய ஆசையோடும் புலம்பி கொண்டிருந்தான்! //////

வழக்கமா இந்த மாதிரி தனியா இருந்தா அவன் வேற ஒரு வேல பண்ணுவானே?

எஸ்.கே said...

ஏன் வாயை இந்த அளவு திறக்கிறார் ராம்ஸ்?:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////”ச்ச்சே... இங்க வீட்டுக்கு வந்ததுக்கு பேசாம மைலாப்பூர் போயிருந்தா கபாலீஸ்வரர் கோயில் அன்னதானத்துலயாவது சாப்ட்ருக்கலாம்..../////

அங்க டெய்லி அவனுக்குன்னு தனியா எடுத்து வெச்சிருப்பாங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எஸ்.கே said...
ஏன் வாயை இந்த அளவு திறக்கிறார் ராம்ஸ்?:-)//////

அது வீங்குன வாயி... அப்படித்தான் திறக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////”ம்ம் ...ஓக்கே.... ” என்று வெங்கட் சொன்னதும் மனதுக்குள் இளையராஜா....ச்சீ..இல்ல...சற்குனராஜின் ஆல்பம் சத்தம் இல்லாமல் ஓடியது... //////

அந்த கக்கா டெமோ ஆல்பமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////”நான் உனக்கு சாப்பாடு வாங்கி தரணும்னா...2015 கிரிக்கெட் வோர்ல்ட் கப்போட டைம் டேபிள் தர்றேன்... அதுல யார் யார் ஜெயிப்பாங்கன்னு எனக்கு வீட்டு அட்ரசோட எழுதி அனுப்பு... எல்லாம் சரியா இருந்தா வந்து சாப்பாடு வாங்கி தரேன்.. ஆனா மச்சி..ரெண்டு பேர் சரியா சொன்னா உனக்கு பாதி சாப்பாடுதான் இப்பவே சொல்லிட்டேன்” என்றான் வெங்கட்! //////

2015-ல ஜெயிக்க போறவங்க லிஸ்ட்ட வெங்கட் கிட்ட BCCI கொடுத்துட்டாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷுக்கு பீதியில் பேதி மட்டும்தான் ஆகல....நின்ன இடத்திலே மூச்சா போய் விட்டான்...//////

இத கரெக்டா பண்ணி இருப்பான்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எதிர் வீட்டு பெண்ணின் நினைவு வந்ததும்.. "ராம்ஸ்.. எதிர் வீட்ல உள்ள பொண்ண நான் லவ் பண்றேன் எங்கள நீதான் சேர்த்து வைக்கணும்" என்றான்! "அடங்கொன்னியா? " ராம்ஸ் பெரிய ஜெர்க் கொடுத்தது!///////

அடங்கொன்னியா...... அந்த பொண்ணு போன ஜென்மத்துல பூதத்தோட செட்டப்புடா.......

Mohamed Faaique said...

இந்த மனிசாளுங்கதான் ரமேச திட்டுராஙகனு பார்த்தா, பூதமும் சகட்டு மேனிக்கு லேட்டஸ்ட் கெட்ட வார்த்த, மட்ராஸ் கெட்ட வார்த்த, இங்கிலிபீஸுல கெட்ட வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணி திட்டுதே!!!!

rajamelaiyur said...

உங்க காமெடிக்கு அளவே இல்ல பாஸ்

Anonymous said...

வணக்கம் இங்க வைக்க கூடாதுன்னா கக்கூஸ் ல வந்து வைக்கட்டுமா கவுண்டரே

கடம்பவன குயில் said...

//பயந்துபோன ரமேஷ் பயத்துடனே..”ஐயோ எனக்கு ஒண்ணுமே தெரியாது..நான் வேணுமுன்னே இதை செய்யல” //

ரமேஷ் தம்பி சாப்பிடுவதைத்தவிர வேறு எதை வேணும்னே செய்திருக்கிறார்?. வேண்டா வெறுப்பாய்தான் எதையுமே செய்வார்.

Unknown said...

wow beautiful post..

i except more..

Unknown said...

60..me the 60

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

siva said...

wow beautiful post..

i except more..//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடம்பவன குயில் said...

//பயந்துபோன ரமேஷ் பயத்துடனே..”ஐயோ எனக்கு ஒண்ணுமே தெரியாது..நான் வேணுமுன்னே இதை செய்யல” //

ரமேஷ் தம்பி சாப்பிடுவதைத்தவிர வேறு எதை வேணும்னே செய்திருக்கிறார்?. வேண்டா வெறுப்பாய்தான் எதையுமே செய்வார்.//

க.க.க. போ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சுந்தர் said...

வணக்கம் இங்க வைக்க கூடாதுன்னா கக்கூஸ் ல வந்து வைக்கட்டுமா கவுண்டரே//

அங்க பன்னி ரொம்ப பிசியா இருப்பாரே!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்க காமெடிக்கு அளவே இல்ல பாஸ்//

ஹிஹி. நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Mohamed Faaique said...

இந்த மனிசாளுங்கதான் ரமேச திட்டுராஙகனு பார்த்தா, பூதமும் சகட்டு மேனிக்கு லேட்டஸ்ட் கெட்ட வார்த்த, மட்ராஸ் கெட்ட வார்த்த, இங்கிலிபீஸுல கெட்ட வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணி திட்டுதே!!!!//

என்ன பண்றது. இந்த பக்கிகளோட சேர்ந்தா அப்படித்தான்..

வெளங்காதவன்™ said...

வாழ்க...
#போலீஸ்.. கொஞ்சம் தள்ளி நில்லுயா....மூச்சா போயிட்டு பக்கத்துல வந்துட்டு...