Monday, July 18, 2011

அஞ்சு பத்துக்கு அலையும் ரமேசும் அற்புத விளக்கும்! - 3


முந்தைய பாகங்கள்: பாகம் 1, பாகம் 2

வீட்டை விட்டு அருவாளோடு வெளியே வந்த பாபு..இவர்கள் இரண்டுபேரையும் பார்த்துவிட்டு அருகில் வந்தார்..
"தம்பிகளா நீங்க யாரு? இங்க ஏன் நிக்கிறீங்க" என்றார்..

ரமேஷ் முந்திக்கொண்டு "அங்கிள் நான் இந்த வீட்லதான் இருக்கேன். இவன் என் பிரண்ட் சும்மா என்னைய பார்க்க வந்தான்" என்றான்..

பாபு கொஞ்சம் சமாதானம் ஆனவராக காம்பவுண்டில் இருந்த காக்கைகளை விரட்டிக்கொண்டே வீட்டுக்குள் சென்றார்! மனதுக்குள்.."இன்னிக்குகூட இதுல எது ஆம்பள காக்கைன்னு கண்டுபிடிக்க முடியலையே"ன்னு புலம்பிக்கொண்டே போனார்... கொஞ்ச நேரத்தில் அருணும் கிளம்பிவிட ரமேஷ் மதியான சாப்பாட்டுக்கு யாரை பிடிக்கலாம் என்று யோசிக்க துவங்கினான்!

--------------------------------------------------

காலையில் இருந்து அலைந்து திரிந்து ஒருவழியாக ரமேஷ் வீட்டை கண்டுபிடித்த பாண்டியனும் செல்வாவும் ரமேஷ் வீட்டு அழைப்பு மணியை அழுத்த... கதவை திறந்த ரமேஷ் இவர்களை ஒரு கேள்வியோடு  பார்த்தான்!

"இங்க ரமேஷ்ங்கிறது யாரு?" பாண்டியன் கேட்டார்...

"நான்தான் ரமேஷ் என்ன வேணும்" என்றான் ரமேஷ்!

உடனே செல்வா.."போங்க சார்..இப்ப மட்டும் உடனே சொல்றீங்க?.. நேத்தே சொல்லியிருந்தா நாங்க தேவையில்லாம அலைஞ்சிருக்க மாட்டோம்ல.." என்றான்!

அவனை இரவு நேர இட்லியை பங்கு போட வந்த தெருநாயை பார்ப்பது போல பார்த்த ரமேஷ்.."உங்களுக்கு என்ன வேணும்?" என்று திரும்பக்கேட்டான்!

உடனே பாண்டியன் முந்திக்கொண்டு.. "உங்க உதவி எங்களுக்கு தேவைப்படுது" என்றார்..

"என்ன உதவி.. உதவி பண்ணினா சாப்பாடு வாங்கி தருவீங்களா?" என்றான் ரமேஷ்..

"சின்ன உதவிதான்..எங்களோட வந்து வெளக்கு..”  .பாண்டியன் சொல்லி முடிப்பதற்குள் ரமேஷ் முந்திக்கொண்டு...”யோவ்..அதுக்கெல்லாம் வேற ஆள பாருங்க...வெளக்காம்ல..வெளக்கு..” என்று கோவமாக கத்த ஆரம்பித்தான்!

ஒன்றும் புரியாமல் முழித்த பாண்டியன்..”ஏங்க கோவப்படறீங்க? எங்க கூட வந்து ஒரு கடைல உள்ள வெளக்க எடுத்து தரனும்.. அததான் சொல்லவந்தேன்” என்றார்!

”என்னது..? வெளக்க எடுத்து தரணுமா? நான்கூட தப்பா நெனச்சிட்டேன்” என்று அசடு வழிந்தான் ரமேஷ்! ”அது சரி....ஏன் அந்த வெளக்க நான் எடுக்கணும்? நீங்களே எடுக்க வேண்டியதுதானே?” என்று கேட்டான்...

என்ன சொல்வது என்று முழித்த பாண்டியனை முந்திக்கொண்டு செல்வா சொல்ல ஆரம்பித்தான்.. ”அந்த விளக்கு சாதாரண விளக்கு இல்ல...அது சக்தி வாய்ந்தது... அத எடுக்கணும்னா பத்து பேருக்கு அன்னதானம் போட்டு அந்த பத்து பேரும் சேர்ந்து எடுத்தாதான் எடுக்கமுடியும்.. நாங்க பத்து பேர எங்க தேடிப்பிடிக்கிறது? அதான் உங்ககிட்ட வந்தோம்..இந்த ஏரியாவுலே பத்து பேரு சாப்பாட்ட மொத்தமா சாப்டுற ஒத்த ஆளு நீங்கதான்னு சொன்னாங்க.. அதான் உங்கள வெச்சே எடுக்கலாம்னு முடிவு பண்ணினோம்” என்றான்!

நம்ம புகழ் அந்த அளவு பரவிருச்சா என்று ஆச்சர்யபட்ட ரமேஷ்..

“இதை நான் எடுத்து தந்தா எனக்கு என்ன லாபம்” என்றான்!

”நாமம்தான்...” என்றான் செல்வா...

”என்ன..என்ன..?”

பாண்டியன் இடைமறித்து.. ”இங்க பாரு.. எனக்கு வசியமெல்லாம் தெரியும்..எதிர்வீட்டு பொண்ண நீ டாவடிக்கிறது எனக்கு தெரியும்...இதை எடுத்து தந்தா அந்த பொண்ணையும் வசியம் பண்ணி உன்னையே லவ் பண்ண வைக்கிறேன் போதுமா?” என்றார்!

ஓரளவு சமாதானம் ஆன ரமேஷ் சரி வாங்க போகலாம்..பேச்சு மாறக்கூடாது என்று கூறிக்கொண்டே அந்த கடையை நோக்கி மூவரும் செல்ல ஆரம்பித்தார்கள்!

மூவரும் ஒருவழியாக மவுண்ட் ரோட்டில் உள்ள அந்த மங்குனி காயலாங்கடையை  அடைந்தார்கள்.. கடை கொஞ்சம் பெரிதாக இருந்தது.. அந்த நேரத்தில் கடையில் கல்லாவில் உள்ளவரை தவிர யாரும் இல்லை.. உள்ளே சென்றதும் பார்வையை ஓட விட்ட பாண்டியன் விளக்கை தேடினார்!

செல்வா கல்லாவில் உள்ளவரை நோக்கி சென்றான்.. ரமேஷ் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாததுபோல் வெளியில் உள்ள பஜ்ஜி கடையை பார்த்துக்கொண்டிருந்தான்! பார்வையை துழாவவிட்ட பாண்டியன் அந்த விளக்கு கல்லாவுக்கு அருகில் இருப்பதை கண்டு கொண்டார்..அதை மெதுவாக செல்வாவிடம் உணர்த்தி ”நீ அவரிடம் பேச்சுக்கொடு” என்று கூறினார்!

உடனே செல்வாவும் அவரிடம் சென்று ”அண்ணே உங்க பேரே மங்குனிதானா” என்று கிண்டலாக சிரித்தான்..

அதற்கு மங்குனி லேசாக முறைத்ததும்...பேச்சை மாற்றி   ”இந்த விளக்கு எவ்வளவு?” என்றான்..

அதற்கு மங்குனி ..”இந்த விளக்கு விக்கிறது இல்லைங்க...இது எங்க பரம்பரை விளக்கு எங்க முன்னோர்கள் இதை துடைக்ககூட கூடாதுன்னு சொல்லியிருக்காங்க..அதனாலதான் இதை தூசியா இருந்தாகூட பரவாயில்லைன்னு பக்கத்துலே வச்சிருக்கேன்” என்றார்.

இதை எதிர்பார்த்த பாண்டியன்...செல்வாவிடம் மெதுவாக.. ”நீ அவரிடம் பேச்சுக்கொடுத்து அவரின் கவனத்தை திசைதிருப்பு..நான் போய் அந்த ரமேஷை அழைத்து வந்து அந்த விளக்கை எடுத்துவிடுகிறேன்” என்று கூறிக்கொண்டே வாசலை நோக்கி சென்றார்!

செல்வாவும் அதை புரிந்துகொண்டு  மங்குனியிடம்..”அண்ணே..எல்லாமே பழைய பொருட்களா வாங்கி விக்கிரீங்களே?..பழசுன்னா உங்களுக்கு ரெம்ப புடிக்குமோ?..உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சான்னே” என்றான்.

இதைக்கேட்டு கடுப்பான மங்குனி  அவனை முறைத்தார்! உடனே செல்வா சமாளித்துக்கொண்டு.. ”அண்ணே ஒரே ஒரு போன் பண்ணிக்கலாமா” என்றான்..

”உன் செல்போன்தான் இருக்கே அதுல பண்ணவேண்டியதுதானே” என்றார் மங்குனி!

”அண்ணே என் செல்போன்ல இன்கமிங் இல்ல..அவுட் கோயிங் மட்டும்தான்”

.மங்குனி கோபமாக “அதான் அவுட் கோயிங் இருக்குல்ல அப்புறம் என்ன? பண்ணவேண்டியதுதானே” என்றார்!

உடனே செல்வா ”லூசா அண்ணே நீங்க? நான் அவுட்கோயிங் பண்ணினாலும் என் ஃபிரண்டுக்கு இன் கமிங்க்தானே?” என்றான்.

இதைகேட்ட மங்குனிக்கு தலைசுத்தி...”ஐயோ தம்பி..கொஞ்சம் இருப்பா ஒரே ஒரு காஃபி வாங்கிட்டு வந்தடுறேன்”னு வெளியே சென்றார்..

இதற்காகவே காத்திருந்த பாண்டியன் ரமேஷிடம் சொல்லி அந்த விளக்கை எடுத்துக்கொண்டு கடையை விட்டு வேகமாக வெளியேறினார்கள்!

கடையை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி வந்ததும் பாண்டியன் ரமேஷிடம் விளக்கை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டார்..

அதற்கு ரமேஷ்  மறுப்பு  தெரிவித்து..”என்கிட்டே என்ன சொன்னீங்க? சாப்பாடு வாங்கி தர்றோம்னு சொன்னீங்க..தரல...அட..அந்த கடை வாசல்ல வித்த பஜ்ஜிகூட நீங்க வாங்கி தரல? சரி..என் ஆள வசியம் பண்றோம்னீங்க..அதுவும் பண்ணல? இதெல்லாம் முதல்ல செய்ங்க விளக்க தர்றேன்”னு அடம்பிடித்தான்..

இதைகேட்ட பாண்டியன் கோவமாகி...”டேய்ய்...வெண்ணை..இப்ப விளக்க தருவியா தரமாட்டியா?” என்று கேட்பதற்கும் ஒரு போலிஸ் வாகனம் ஒன்று அந்த இடத்தில வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது!

46 comments:

Madhavan Srinivasagopalan said...

Comedy. comedy.. super super..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடைசி வரைக்கும் எண்ணையில் பொறித்த பஜ்ஜி வாங்கி தராத செல்வா&பாண்டியன் ஒழிக

எஸ்.கே said...

கடைசி வரைக்கும் எண்ணையில் பொறித்த பஜ்ஜி வாங்கி தராத செல்வா&பாண்டியன் ஒழிக//

உங்க கவலை உங்களுக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

கடைசி வரைக்கும் எண்ணையில் பொறித்த பஜ்ஜி வாங்கி தராத செல்வா&பாண்டியன் ஒழிக//

உங்க கவலை உங்களுக்கு!//

:)

karthikkumar said...

பாபு கொஞ்சம் சமாதானம் ஆனவராக காம்பவுண்டில் இருந்த காக்கைகளை விரட்டிக்கொண்டே வீட்டுக்குள் சென்றார்! மனதுக்குள்.."இன்னிக்குகூட இதுல எது ஆம்பள காக்கைன்னு கண்டுபிடிக்க முடியலையே"ன்னு புலம்பிக்கொண்டே போனார்.///

பாபு மக்கா ரொம்ப பாவம் :))

Madhavan Srinivasagopalan said...

// எண்ணையில் பொறித்த //

@ Terror & Selva..

நோட் தட் பாயின்ட்..
அடுத்தமுறை மறக்காமல் ரமேஷுக்கு வேப்ப எண்ணையில் பொறித்த பஜ்ஜி வாங்கித் தரவும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ் முந்திக்கொண்டு "அங்கிள் நான் இந்த வீட்லதான் இருக்கேன். இவன் என் பிரண்ட் சும்மா என்னைய பார்க்க வந்தான்" என்றான்.. ////////

அங்கிள் அங்கிள் ... பாபு அங்கிள்...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Madhavan Srinivasagopalan said...

// எண்ணையில் பொறித்த //

@ Terror & Selva..

நோட் தட் பாயின்ட்..
அடுத்தமுறை மறக்காமல் ரமேஷுக்கு வேப்ப எண்ணையில் பொறித்த பஜ்ஜி வாங்கித் தரவும்..//

எழுத்து பிழை. வெப்ப எண்ணெய் அது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அங்கிளே அங்கிள் என அழைத்தால் பாபுவின் வயதென்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////."இன்னிக்குகூட இதுல எது ஆம்பள காக்கைன்னு கண்டுபிடிக்க முடியலையே"///////

வெளிய நிக்கிறது ரெண்டும் ஆம்பள காக்காதானுங்களே?

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ரமேஷ் முந்திக்கொண்டு "அங்கிள் நான் இந்த வீட்லதான் இருக்கேன். இவன் என் பிரண்ட் சும்மா என்னைய பார்க்க வந்தான்" என்றான்.. ////////

அங்கிள் அங்கிள் ... பாபு அங்கிள்...!//

நோ அங்கிள்... பாபு தாத்தா... :)

மாணவன் said...

//அதற்கு ரமேஷ் மறுப்பு தெரிவித்து..”என்கிட்டே என்ன சொன்னீங்க? சாப்பாடு வாங்கி தர்றோம்னு சொன்னீங்க..தரல...அட..அந்த கடை வாசல்ல வித்த பஜ்ஜிகூட நீங்க வாங்கி தரல? சரி..என் ஆள வசியம் பண்றோம்னீங்க..அதுவும் பண்ணல? இதெல்லாம் முதல்ல செய்ங்க விளக்க தர்றேன்”னு அடம்பிடித்தான்..///

அப்ப கடைசிவரை எதுவுமே வாங்கித் தரலையா?? :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////உடனே பாண்டியன் முந்திக்கொண்டு.. "உங்க உதவி எங்களுக்கு தேவைப்படுது" என்றார்..
/////

ம்ம் இந்தப் பன்னாட உதவியெல்லாம் தேவைப்பட்டிருக்கே?

எஸ்.கே said...

அப்ப பஜ்ஜி கிடைக்காதா?
அப்ப பஜ்ஜி கிடைக்காதா?
அப்ப பஜ்ஜி கிடைக்காதா?

செல்வா said...

// என்று கேட்பதற்கும் ஒரு போலிஸ் வாகனம் ஒன்று அந்த இடத்தில வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது! //

போலீசுக்கே போலீசா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"சின்ன உதவிதான்..எங்களோட வந்து வெளக்கு..” .பாண்டியன் சொல்லி முடிப்பதற்குள் ரமேஷ் முந்திக்கொண்டு...”யோவ்..அதுக்கெல்லாம் வேற ஆள பாருங்க...வெளக்காம்ல..வெளக்கு..” என்று கோவமாக கத்த ஆரம்பித்தான்! //////

பாவம் பலதடவ பண்ணி இருப்பாரு போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கோமாளி செல்வா said...
// என்று கேட்பதற்கும் ஒரு போலிஸ் வாகனம் ஒன்று அந்த இடத்தில வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது! //

போலீசுக்கே போலீசா ?//////

செல்வா கையக்கொடு, நானும் அப்படியே இதே வார்த்தைகளை போடலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////.இந்த ஏரியாவுலே பத்து பேரு சாப்பாட்ட மொத்தமா சாப்டுற ஒத்த ஆளு நீங்கதான்னு சொன்னாங்க.. அதான் உங்கள வெச்சே எடுக்கலாம்னு முடிவு பண்ணினோம்” என்றான்! /////

அப்போ பத்து பேரு அளவுக்கு கக்காவும் போவாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அதற்கு ரமேஷ் மறுப்பு தெரிவித்து..”என்கிட்டே என்ன சொன்னீங்க? சாப்பாடு வாங்கி தர்றோம்னு சொன்னீங்க..தரல...அட..அந்த கடை வாசல்ல வித்த பஜ்ஜிகூட நீங்க வாங்கி தரல? சரி..என் ஆள வசியம் பண்றோம்னீங்க..அதுவும் பண்ணல? இதெல்லாம் முதல்ல செய்ங்க விளக்க தர்றேன்”னு அடம்பிடித்தான்..///////

அட்லீஸ்ட் பச்சத்தண்ணியாவது வாங்கி கொடுத்திருக்கலாம்........அதுக்கே ரமேசு மூணுநாளு கண்ணுமுழிச்சி வேல பாப்பான்....

எஸ்.கே said...

அங்கிளே அங்கிள் என அழைத்தால் பாபுவின் வயதென்ன?//
இரண்டு பேருக்குமே சின்னவயசுதான்! மாமு என்பதைத்தான் அங்கிள் என அழைக்கப்படுகிறது!:-)

Mohamed Faaique said...

////கடைசி வரைக்கும் எண்ணையில் பொறித்த பஜ்ஜி வாங்கி தரா////

பஜ்ஜி’ய எண்ணைல பொரிக்காம வேற எதுல பொரிப்பாங்க???

கடம்பவன குயில் said...

//உடனே செல்வா ”லூசா அண்ணே நீங்க? நான் அவுட்கோயிங் பண்ணினாலும் என் ஃபிரண்டுக்கு இன் கமிங்க்தானே?” என்றான்.//

ஆஹா....ஆஹா....எங்கள் அறிவு ஜீவி செல்வாவைத் தவிர இப்படியெல்லாம் வேறு யாரால யோசிக்க முடியும்.

கடம்பவன குயில் said...

//”அண்ணே..எல்லாமே பழைய பொருட்களா வாங்கி விக்கிரீங்களே?..பழசுன்னா உங்களுக்கு ரெம்ப புடிக்குமோ?..உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சான்னே” என்றான்.//

ஏன் கல்யாணம் ஆயிருச்சுன்னா போனா போகட்டும் குடும்பஸ்தன்னு மொக்கபோட்டு உயிரோடு விளையாடாமல் விடப்போறாரா செல்வா?

test said...

வணக்கம் பாஸ்! படிச்சிட்டு வரேன்!

test said...

>>>>>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////.இந்த ஏரியாவுலே பத்து பேரு சாப்பாட்ட மொத்தமா சாப்டுற ஒத்த ஆளு நீங்கதான்னு சொன்னாங்க.. அதான் உங்கள வெச்சே எடுக்கலாம்னு முடிவு பண்ணினோம்” என்றான்! /////

அப்போ பத்து பேரு அளவுக்கு கக்காவும் போவாரா?<<<<
மாம்ஸ்...ROCKZZZZ !!!!!! :-)

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கடைசி வரைக்கும் எண்ணையில் பொறித்த பஜ்ஜி வாங்கி தராத செல்வா&பாண்டியன் ஒழிக//


நீயே பஜ்ஜில வகுந்து போட்ட வாழக்காய் மாதிரிதான் இருக்க?

வைகை said...

karthikkumar said...
பாபு கொஞ்சம் சமாதானம் ஆனவராக காம்பவுண்டில் இருந்த காக்கைகளை விரட்டிக்கொண்டே வீட்டுக்குள் சென்றார்! மனதுக்குள்.."இன்னிக்குகூட இதுல எது ஆம்பள காக்கைன்னு கண்டுபிடிக்க முடியலையே"ன்னு புலம்பிக்கொண்டே போனார்.///

பாபு மக்கா ரொம்ப பாவம் :))//


ஆமா மச்சி..அவரு டெக்னிக்கலா கொஞ்சம் வீக் :))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////உடனே பாண்டியன் முந்திக்கொண்டு.. "உங்க உதவி எங்களுக்கு தேவைப்படுது" என்றார்..
/////

ம்ம் இந்தப் பன்னாட உதவியெல்லாம் தேவைப்பட்டிருக்கே?//


சில சமயம் கழுதைப்பால் மருந்து ஆகுறது இல்லையா? அந்த மாதிரி இது :))

வைகை said...

Mohamed Faaique said...
////கடைசி வரைக்கும் எண்ணையில் பொறித்த பஜ்ஜி வாங்கி தரா////

பஜ்ஜி’ய எண்ணைல பொரிக்காம வேற எதுல பொரிப்பாங்க???//

தண்ணிலையும் பொறிப்பாங்க...சந்தேகம் இருந்தா செல்வாவ கேட்டுக்கங்க :))

வைகை said...

கடம்பவன குயில் said...
//உடனே செல்வா ”லூசா அண்ணே நீங்க? நான் அவுட்கோயிங் பண்ணினாலும் என் ஃபிரண்டுக்கு இன் கமிங்க்தானே?” என்றான்.//

ஆஹா....ஆஹா....எங்கள் அறிவு ஜீவி செல்வாவைத் தவிர இப்படியெல்லாம் வேறு யாரால யோசிக்க முடியும்.///

இப்பிடியே உசுப்பேத்தி..உசுப்பேத்திதான் எங்க உடம்பெல்லாம் ரணகளமா இருக்கு :))

வைகை said...

கடம்பவன குயில் said...
//”அண்ணே..எல்லாமே பழைய பொருட்களா வாங்கி விக்கிரீங்களே?..பழசுன்னா உங்களுக்கு ரெம்ப புடிக்குமோ?..உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சான்னே” என்றான்.//

ஏன் கல்யாணம் ஆயிருச்சுன்னா போனா போகட்டும் குடும்பஸ்தன்னு மொக்கபோட்டு உயிரோடு விளையாடாமல் விடப்போறாரா செல்வா?//

ஆமா...அல்ரெடி பாதி உயிரை வீட்டம்மா எடுத்துருப்பாங்க.. மீதிய எடுத்து என்ன பண்றது?

வைகை said...

ஜீ... said...
வணக்கம் பாஸ்! படிச்சிட்டு வரேன்!//


தாராளமா படிச்சிட்டு வாங்க பாஸ்.. படிச்சிட்டு திரும்பாம போறதுக்கு இது என்ன போலிஸ் ப்ளாக்கா?

வைகை said...

ஜீ... said...
>>>>>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////.இந்த ஏரியாவுலே பத்து பேரு சாப்பாட்ட மொத்தமா சாப்டுற ஒத்த ஆளு நீங்கதான்னு சொன்னாங்க.. அதான் உங்கள வெச்சே எடுக்கலாம்னு முடிவு பண்ணினோம்” என்றான்! /////

அப்போ பத்து பேரு அளவுக்கு கக்காவும் போவாரா?<<<<
மாம்ஸ்...ROCKZZZZ !!!!!! :-)//

என்ன? பன்னி கக்காவ கல்லு கல்லா போவாரா?

முத்தரசு said...

ரசித்து படித்தேன் கலக்கல் காமடி - தொடரட்டும் - விறுவிறுப்பு கூடுதுங்கோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மனசாட்சி said...

ரசித்து படித்தேன் கலக்கல் காமடி - தொடரட்டும் - விறுவிறுப்பு கூடுதுங்கோ
//

Thanks

பெசொவி said...

ROFL!

selva incoming outgoing comedy, super!

kalakkal, SK!

தினேஷ்குமார் said...

ரமேஷும் மங்குனி விளக்கும் அற்புதம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலக்கல் தொடர்.... 

வெளங்காதவன்™ said...

உள்ளேன் ஐயா....
#படிச்சுட்டு வாறன்....

வெளங்காதவன்™ said...

//அவனை இரவு நேர இட்லியை பங்கு போட வந்த தெருநாயை பார்ப்பது போல///

எடுத்துக்காட்டு உவமை அணி!

வெளங்காதவன்™ said...

///”அது சரி....ஏன் அந்த வெளக்க நான் எடுக்கணும்? நீங்களே எடுக்க வேண்டியதுதானே?” என்று கேட்டான்...///

எம்புட்டு அறிவு?!

வெளங்காதவன்™ said...

வாழ்க! வளர்க!

#யோவ் எஸ்.கே., எப்பத்தான் இந்தக் கருமம் முடுஞ்சு தொலையும்?
கக்காகூட ஒழுங்கா போக முடியல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெளங்காதவன் said...

வாழ்க! வளர்க!

#யோவ் எஸ்.கே., எப்பத்தான் இந்தக் கருமம் முடுஞ்சு தொலையும்?
கக்காகூட ஒழுங்கா போக முடியல...//

goto panni blog..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சூப்பர்...

Anonymous said...

I love this story .......,,,,,,,,pls go on .,