Friday, July 22, 2011

அஞ்சு பத்துக்கு அலையும் ரமேசும் அற்புத விளக்கும்! - 5


முந்தைய பாகங்கள்: பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4

"அடங்கொன்னியா?....இது அந்த பொண்ணுக்கு தெரியுமாடா" என்றது ராம்ஸ்!

"தெரியாது ராம்ஸ்" என்றான் ரமேஷ்!

”அதானே பார்த்தேன்..தெரிஞ்சிருந்தா இன்னுமா அந்த பொண்ணு உயிரோட இருக்கும்?"

இதைக் கேட்ட ரமேஷ்..”ராம்ஸ் நீ என் அண்ணன் மாதிரி.....” என்றான் கையை பிடித்துக்கொண்டே!

“சரி..சரி....செண்டிமெண்டல் லாக்.. அந்த பொண்ணு உனக்குத்தான்” என்றது ராம்ஸ்!

“ஆனா ராம்ஸ் அந்த பொண்ணு அப்பன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்..எப்ப பார்த்தாலும் அருவாளோட திரியுறான்”

“ஆங்..ஆ..அப்பிடியே அவரு சீவிட்டாலும்... மொதல்ல அவன தலைய சீவ சொல்லுடா..தேங்கா மூஞ்சி தலையன்”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வெளியில் கேட் திறக்கும் சத்தம் கேட்டது...யாரென்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்த ரமேஷ்..அதிர்ச்சியானான்! அங்கு அருண்பிரசாத் நின்று கொண்டிருந்தான்!

அருணைப்பார்த்த ரமேஷ் அதிர்ச்சியாகி...இந்த நேரத்துல இவன் ஏன் இங்க வர்றான் என்று நினைத்துக்கொண்டே..வேகமாக ராம்ஸிடம் வந்து, “ராம்ஸ்..ராம்ஸ்....என் பிரெண்ட் வரான்..நீ வேகமா ஒளிஞ்சிக்க...இல்லைனா அவன் ஏகப்பட்ட கேள்விகள் கேட்பான்” என்றான் ரமேஷ்.

இதைக்கேட்ட ராம்ஸும்....வேகமாக விளக்கினுள் சென்று மறைந்தது! இதைப்பார்த்த ரமேஷ் ரிலாக்ஸ் ஆகி.. கதவை திறந்து விட்டு, “வா மச்சி... என்ன வேலை விட்டு நேர இங்க வந்துட்டியா? எதுவும் முக்கியமான விசயமா?” என்றான்.

“காலைல அந்த பொண்ணை சரியா கூட பார்க்காம போயிட்டேன்.. அதான் இப்ப பார்த்து உனக்காக பேசலாம்னு வந்தேன்” என்றான் அருண்

“சரி மச்சி.. நல்ல நேரத்துல வந்த... வா மச்சி சாப்டவே இல்ல மச்சி..ஏதாவது வாங்கி தா”

இதைக்கேட்ட அருண் கடுப்பாகி, “இதே பொழப்பா போச்சுடா உனக்கு? வேணா ஒன்னு பண்ணு..காசு தரேன் போய் சாப்டு எனக்கும் ஏதாவது வாங்கிட்டு வா..எனக்கும் பசிக்குது..ஆனா நடக்கவெல்லாம் முடியாது.. டயர்டா இருக்கு” என்றான்.

இதைக்கேட்ட ரமேஷ் காதுகளில் சற்குனராஜ் திரும்பவும் வாசிக்க ஆரம்பித்தார்.. குதித்துக்கொண்டு வெளியே சென்றான்!

ரமேஷ் அந்த பக்கம் சென்றதும்..எதிர்வீட்டு பெண் யாருடனோ போனில் பேசிக்கொண்டே வந்தது.... வீடு வந்ததும் உள்ளே செல்லாமல் கையில் உள்ள நோட்டை காம்பவுண்டில் வைத்து விட்டு காம்பவுண்ட் மறைவில் நின்று பேசிக்கொண்டிருந்தது!

இந்த பக்கம்.போன ரமேஷை ஆளை காணாமல் கடுப்பான அருண் என்ன செய்வதென்று தெரியாமல் ஓரமாக வைத்திருந்த அந்த விளக்கை எடுத்து வைத்து பார்த்துக்கொண்டிருந்தான்!

இதே வேளையில் விளக்கை கைப்பற்ற திட்டம் தீட்டிய பாண்டியனும் செல்வாவும்...ரமேஷ் ஒரு தீனி பைத்தியம் என்பதை தெரிந்துகொண்டு பழைய பொருட்களுக்கு பேரீச்சம்பழம் தருபவன் போல செல்வாவை மாற்றி அனுப்பி வைத்தார் பாண்டியன்! இதோ செல்வாவும் ரமேஷின் வீட்டை அடைந்து விட்டான்

போன் பேசிக்கொண்டிருந்த அந்த பெண்ணை ஓரப்பார்வையில் பார்த்தபடியே அழைப்பு மணியில் கைவைத்தான் செல்வா! கதவை திறந்த அருண் செல்வாவை புரியாமல் பார்க்க..செல்வாவும் அருணை புதிதாக பார்த்தான்...

செல்வா சமாளித்தவாறே, “வீட்ல யாரும் இல்லையா சார் என்றான்” உடனே அருண்.

“ஏன் என்னை பார்த்தா உனக்கு மனுசனா தெரியலையா” என்றான்!

செல்வாவும் விடாமல் “பார்த்தா தெரியுது சார்..ஆனா நான் உங்கள பார்க்கலைன்னு சொன்னா என்ன பண்ணுவிங்க?” என்றான்.

ஏற்கனவே பசியில் இருந்த அருண் கடுப்பாகி “உனக்கு இப்ப என்ன வேணும் சொல்லு” என்றான்!

உடனே செல்வாவும் “உனக்கு என்ன வேணும்” என்று சொல்லிவிட்டு “சொல்லிட்டேன் சார்” என்றான்!

கடுப்பான அருண் “டேய்ய்.... உனக்கு என்னதாண்டா வேணும்?”

“வேற என்ன சார் கேக்கபோறேன்? அழகான வீடு.. அன்பா மனைவி.. அறிவான புள்ளைகள் இதுதான் சார் எனக்கு வேணும்”

“அவ்வ்வ்வ்.. சாவடிக்கிறானே?.. டேய்ய்..அது இல்லைடா இங்க யார பார்க்க வந்தன்னு கேட்டேன்?” என்றான் அருண்.

“ஓ..அதுவா சார்.. நான் உங்கள பார்க்க வரல.. ஆனா இப்ப உங்களை பார்த்திட்டேனே? அப்ப யார பார்க்க வந்தன்னு சொல்லுங்க பார்ப்போம்” என்றான் செல்வா.

இதைக்கேட்டு மேலும் கடுப்பான அருண் “டேய்..என்ன கொலைகாரனா மாத்தாத.. ஒழுங்...” இப்படி அருண் சொல்லும்போதே இடைமறித்த செல்வா “கோவிச்சுக்காதிங்க சார்....ரமேஷ் சார வழில பார்த்தேன்... வீட்ல ஒரு பழைய விளக்கு இருக்காம்..அதை எடுத்துகிட்டு கொஞ்சம் பேரீச்சம் பழத்த உங்கள்ட்ட கொடுத்துட்டு போக சொன்னார்” என்றான்.

உடனே அருணும் மகிழ்ச்சியாகி ‘பரவாயில்லையே நண்பன் நமக்காக யோசிச்சிருக்கானே’ என்று நினைத்துக்கொண்டு அவ்வளவு நேரம் கையில் வைத்திருந்த விளக்கை அவனிடம் எடுத்து கொடுத்துவிட்டு பேரீச்சம் பழங்களை வாங்கி வைத்து திங்க ஆரம்பித்தான்!

கைகளில் விளக்கை வாங்கிய செல்வா சந்தோசமாக வெளியே வந்த வேளையில்.. அதுவரை அங்கு நின்று பேசிகொண்டிருந்த அந்த எதிர் வீட்டு பெண் அங்கு இல்லை..ஆனால் அவள் சுவற்றின் மீது வைத்த நோட்டு மட்டும் அப்படியே இருந்தது.. அதைப்பார்த்த செல்வாவுக்கு கைகள் அரித்து..அந்த நோட்டையும் எடுத்துக்கொண்டு நடந்தான்... கொஞ்ச நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த அந்த பெண் நோட்டை காணாமல் திகைக்க.. தூரத்தில் செல்வா நோட்டுடன் நடப்பது தெரிந்து அவனை பின்தொடர்ந்தாள்!

தூரத்தில் வந்து கொண்டிருந்த ரமேஷ் இதைப் பார்த்து அதிர்ச்சியாகி.........

27 comments:

எஸ்.கே said...

”பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழேய்!!!”

மாணவன் said...

//”பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழேய்!!!”///

ஹா..ஹா.... எஸ்.கே ROFL....

Madhavan Srinivasagopalan said...

செல்வாவின் பேச்சுக்கள்.. முழுவதும் நகைச்சுவையாக இருக்கிறது.. பேஷ்.. பேஷ்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அந்த சைக்கிள் தள்ளிட்டு வரது யாருங்க..

karthikkumar said...

போன் பேசிக்கொண்டிருந்த அந்த பெண்ணை ஓரப்பார்வையில் பார்த்தபடியே அழைப்பு மணியில் கைவைத்தான் செல்வா! ///

பின்னாளில் சக்தி வாய்ந்த சாமியாராக இப்போதே தயாராகிவிட்டான் செல்வா... :))

செல்வா said...

//பின்னாளில் சக்தி வாய்ந்த சாமியாராக இப்போதே தயாராகிவிட்டான் செல்வா... :))//

ராஸ்கல்... ஏன்டா சாபம் குடுக்கிற ?

Unknown said...

வணக்கம் பாஸ்!

Unknown said...

//“சரி..சரி....செண்டிமெண்டல் லாக்.. அந்த பொண்ணு உனக்குத்தான்” என்றது ராம்ஸ்! //
ச்சே இவ்ளோ நாளா ராம்ஸ் பத்தி தெரியாம போச்சே!

Unknown said...

//இதைக்கேட்ட ரமேஷ் காதுகளில் சற்குனராஜ் திரும்பவும் வாசிக்க ஆரம்பித்தார்..//
அவர் என்னங்க வாசிச்சாரு? கக்கா தானே போனாரு?

வைகை said...

வெறும்பய said...
அந்த சைக்கிள் தள்ளிட்டு வரது யாருங்க.//

மொதல்ல நீ ஜோதிய தள்ளிகிட்டு போனது யாருன்னு கண்டுபிடி :))

வைகை said...

Madhavan Srinivasagopalan said...
செல்வாவின் பேச்சுக்கள்.. முழுவதும் நகைச்சுவையாக இருக்கிறது.. பேஷ்.. பேஷ்.//

ரொம்ப நன்னாயிருக்கு! ( நீங்க போட மறந்தது)

வைகை said...

karthikkumar said...
போன் பேசிக்கொண்டிருந்த அந்த பெண்ணை ஓரப்பார்வையில் பார்த்தபடியே அழைப்பு மணியில் கைவைத்தான் செல்வா! ///

பின்னாளில் சக்தி வாய்ந்த சாமியாராக இப்போதே தயாராகிவிட்டான் செல்வா... :)//

இவராவது குண்டலினிய எழுப்புவாரா?

வைகை said...

கோமாளி செல்வா said...
//பின்னாளில் சக்தி வாய்ந்த சாமியாராக இப்போதே தயாராகிவிட்டான் செல்வா... :))//

ராஸ்கல்... ஏன்டா சாபம் குடுக்கிற ?//

அடபாவி? சாமியாரா போறது வரமடா...யாருகண்டா ஜெனிகூட உன் ஆசிரமத்துக்கு வரலாம் :))

வைகை said...

ஜீ... said...
வணக்கம் பாஸ்!//

வணக்கம்..வந்தனம்...சுஸ்வாதகம் :))

வைகை said...

ஜீ... said...
//“சரி..சரி....செண்டிமெண்டல் லாக்.. அந்த பொண்ணு உனக்குத்தான்” என்றது ராம்ஸ்! //
ச்சே இவ்ளோ நாளா ராம்ஸ் பத்தி தெரியாம போச்சே?///

இப்ப தெரிஞ்சிருசுல? ஏன் தாமதம்?

வைகை said...

ஜீ... said...
//இதைக்கேட்ட ரமேஷ் காதுகளில் சற்குனராஜ் திரும்பவும் வாசிக்க ஆரம்பித்தார்..//
அவர் என்னங்க வாசிச்சாரு? கக்கா தானே போனாரு?//

அவரோட ஆல்பமெல்லாம் கேட்டதில்லையா? ச்ச்சே...வாழ்க்கைல பத்தி நாளா வேஸ்ட் பண்ணிட்டிங்களே?

NaSo said...

எஸ்.கே said...
”பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழேய்!!!”

Copy & Paste

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இப்படியே போயிருந்நா எப்படி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அண்ணே நான் வியாபாரிங்க...
நான் போய்....

ஆங்.. இவரு பெரிய கப்பல் வியாபாரி...

இம்சைஅரசன் பாபு.. said...

கொடை புடிச்சிட்டு போற பெரியவர காணோம்

பெசொவி said...

//“வேற என்ன சார் கேக்கபோறேன்? அழகான வீடு.. அன்பா மனைவி.. அறிவான புள்ளைகள் இதுதான் சார் எனக்கு வேணும்”
//

அவன் எதோ RJ ஆவனும்னு சொல்லிகிட்டிருந்தானே!

karthikkumar said...

வைகை said...

அடபாவி? சாமியாரா போறது வரமடா...யாருகண்டா ஜெனிகூட உன் ஆசிரமத்துக்கு வரலாம் :))//

@ செல்வா // பாரு மச்சி நான் கொடுத்தது சாபம் இல்ல வாழ்த்துன்னு இப்போவாவது புரிஞ்சிக்கோ :))

எஸ்.கே said...

Selva is a good Dates seller!

எஸ்.கே said...

கொடை புடிச்சிட்டு போற பெரியவர காணோம்//

Ya..I also wait for him. I want to ask him "Now, Who have that S.Sundari?"

MANO நாஞ்சில் மனோ said...

ஏ யப்பா அப்பிடியே பதிவு போடும் போது வயிறு வலிக்கு மாத்திரையும் குடுத்து அனுப்புங்கடே மக்கா முடியலை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present sir

Mohamed Faaique said...

///போன் பேசிக்கொண்டிருந்த அந்த பெண்ணை ஓரப்பார்வையில் பார்த்தபடியே அழைப்பு மணியில் கைவைத்தான் செல்வா! ///

பின்னாளில் சக்தி வாய்ந்த சாமியாராக இப்போதே தயாராகிவிட்டான் செல்வா... :))///

Reppeattu...