Friday, July 15, 2011

அஞ்சு பத்துக்கு அலையும் ரமேசும் அற்புத விளக்கும்! - 2


 பாகம் -1 -க்கு இங்கே கிளிக் செய்யவும்

ரமேஷ் ”அருண் என்னை காப்பாத்து....”என் கத்தி கொண்டே வேகமாக  ஓடி கொண்டு இருந்தான்.....

அவருக்கு பின்னால் 4 தடியர்கள் பட்டாகத்தியுடன் ஓடி வந்து நெருங்கினர்....

ஓடி வந்த தடியர்களில் ஒருவன் ரமேஷை தாண்டி ஓடிவிட.... உடனே ரமேஷ் “டேய் நான் இங்க இருக்கேண்டா....நீ எங்க ஓடுற” என கேட்க.....

அதற்கு அவன், “டேய்... லூசாடா நீ... நாங்களே சாமிக்கு பலி கொடுக்க வெச்சி இருந்த ஆடு ஓடிடுச்சேனு துரத்திகிட்டு இருக்கறோம்.... குறுக்கால வந்து கேள்வி கேட்டுகிட்டு... தள்ளிப்போ கத்தி மேல பட்டுற போகுது” என்றான்....

“ஆகா, இவ்வளோ நேரம் ஓடினது வேஸ்ட்டா போய்டுச்சே” என மனசுக்குள் நினைத்துக்கொண்டு.... அவனிடன் “அப்போ நீங்க என்னை வெட்ட ஓடிவரலையாண்ணே” என அப்பாவியாய் கேட்க....

“தம்பி நாங்க பென்சில் சீவுறதுக்கு எல்லாம் பட்டாகத்திய உபயோகிக்க மாட்டோம்.... டேய்... அங்க ஓடுது பிடிங்கடா” என கத்தி கொண்டு ஓடினான்....

அசிங்கப்பட்ட ரமேஷ் சுற்றி முற்றும் பார்த்துவிட்டு “அப்பாடி, யாரும் நம்மளை பார்க்கலை” என நினைத்துக் கொண்டு அருண் வீட்டை நோக்கி சென்றான்

மேஷ் இப்ப ஏன் நண்பன் அருண்பிரசாத்தை பார்க்கிறதுக்காக போய்கிட்டு இருந்தான்னா, டெய்லி அருணோட புண்ணியதுலதான் ஓசி டீயும் கொஞ்சம் இட்லியும் கிடைக்குது... இதுக்காக யாரும் இது ஒரு பொழப்பான்னு நினைக்காதிங்க! அவனுக்கு இது மட்டுமே பொழப்பு! இட்லி சாப்பிடும் போது அருணிடம் ரமேஷ் சொல்ல ஆரம்பித்தான்..

“மச்சி...எதிர் வீட்டுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்துருக்கு! ஒரு வாரம் ஆச்சு...எனக்கு அவளை ரொம்ப புடிச்சிருக்கு..நீதாண்டா என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணனும்..பிளீஸ் மச்சி”

கேட்டுக்கொண்ட அருண், "சரி மச்சி..ஆனா எனக்கு ஆள மொதல்ல காமி! ஆளை பாத்துட்டு தான் நான் ஹெல்ப் பண்றதை பத்தி முடிவு பண்ணுவேன்.. "

"ஏன் மொக்க ஃபிகரா இருந்தா ஹெல்ப் பண்ண மாட்டியா.?"

"ம்ஹும்.. மொக்கை பிகரா இருந்தா மட்டும் தான் ஹெல்ப் பண்ணுவேன்.."

"ஒருவேளை அவ சூப்பர் பிகரா இருந்தா..?"

"இன்னைல இருந்து நாம ரெண்டு பேரும் Enemies..! உனக்கு போட்டியே நான் தான்.!"

இதை கேட்ட ரமேஷ் கோவத்தில் படக்கென்று எழுந்து...தட்டில் இட்லி மீதம் இருப்பதை பார்த்து விட்டு கோபத்தை ஒத்தி போட்டு விட்டு திரும்பவும் உட்கார்ந்து இட்லியை திங்க ஆரம்பித்தான்! இதை பார்த்த அருண் தலையில் அடித்துக்கொண்டான்!

“மச்சி கோவிச்சுக்காத...உன்னை இப்பவே நான் கூட்டி போய் காமிக்கிறேன்...அந்த பொண்ணு இன்னும் காலேஜ் கிளம்பியிருக்காது” என்று கூறிக்கொண்டே அருணையும் அழைத்துக்கொண்டே வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்!

அருணும் ரமேஷும் அவன் வீட்டு வாசலில் காவல் இருக்க ஆரம்பித்தனர்..அந்த பொண்ணின் வரவுக்காக! இதைப்பார்த்த ரமேசின் அண்ணன் மாதவன்..”என்னடா இங்க நிக்கிறே” என்று கேட்டார் ஒரு கையில் வேட்டியை பிடித்தபடி!

“ஒண்ணுமில்லை அண்ணா...சும்மாதான்” என்றான் ரமேஷ்..

“ஒரு பொண்ணுக்காக இப்படி உழைக்கிறத விட பொன்னுக்காக கொஞ்சம் கஷ்டப்படலாம்ல” என்று தத்துவம் கூறி விட்டு சென்றார்!

இதைக்கேட்ட அருண் கடுப்பாகி ”ஏண்டா நாயே? எள்ளுதான் எண்ணெய்க்கு காயுதுன்னா எலிப்புழுக்க ஏண்டா காயனும்?” என்று கடுப்படித்தான்...அருண் இப்படி பேசும் போதே ரமேஷ் பரபரப்பானான்...

“மச்சி..மச்சி அந்த பொண்ணு வெளில வருதுடா... எங்கே என்று திரும்பி பார்த்த அருணும் அந்த பொண்ணை பார்த்துவிட்டு...

"மச்சி., உனக்கு கண்டீப்பா ஹெல்ப் பண்றேன்..!"

"அப்ப இந்த பிகர் மொக்கையா மச்சி..? நான் வேணா வேற பொண்ணை பார்க்கவா..?"

"வேணாம்.. வேணாம்.. இந்த பொண்ணையே பாரு.. !"

"ஏன் மச்சி..?"

"இதுக்கே உன்னை பிடிக்கலைனா.. வேற எந்த பொண்ணுக்குடா உன்னை பிடிக்க போவுது..?!" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே.....அந்த பொண்ணின் வீட்டிலிருந்து குரல் வந்தது...

“அப்பா...அப்பா...நான் போயிட்டு வரேன் அப்பா..” என்று கூறிக்கொண்டே அந்த பெண் வீதியில் நடக்க ஆரம்பித்தது... வீட்டுக்குள் இருந்து இன்னொரு குரல் கேட்டது...

"பார்த்து பத்திரமா போயிட்டு வா மக்கா!” என்று கூறிக்கொண்டே இரண்டு கையால் வேட்டியை மடித்து கட்டியபடி வாயில் அருவாளை கவ்விக்கொண்டு வெளியில் வந்தார் அந்த பெண்ணின் அப்பா பாபு!

33 comments:

கோமாளி செல்வா said...

இது ஒரு கூட்டு முயற்சி. உங்களின் கருத்துகள் உவகையோடு வரவேற்கப்படுகின்றன்!

Madhavan Srinivasagopalan said...

ரியலி நகைச்சுவை பூந்து வெளையாடுது..

(eg.//கோவத்தில் படக்கென்று எழுந்து...தட்டில் இட்லி மீதம் இருப்பதை பார்த்து விட்டு கோபத்தை ஒத்தி போட்டு//)

//இதை பார்த்த அருண் தலையில் அடித்துக்கொண்டான்!//

இப்படி எழுதி இருக்கலாமோ ?
பார்த்த என்பதற்கு 'பார்த்த / படித்த / கேள்விப் பட்ட '.
அருண் என்பதற்கு பதிலலக 'அனைவரும்'

Madhavan Srinivasagopalan said...

----------------------
ஆனா, நாலு பேரு, அருவாள், ரமேஷ் ரொம்ப லேட்டு
-- அதான் அல்ரெடி வடிவேலு காமிச்சிட்டரே.

Madhavan Srinivasagopalan said...

//ஒரு கையில் வேட்டியை பிடித்தபடி //

ரெண்டு 'பெர்முடா', ரெண்டு 'ஷார்ட்ஸ்' பார்சல்..
--- வந்து சேரலையா ?

ஓஹோ.. பார்சல் செஞ்சு ரெண்டு நாளு தான் ஆகுதா..
அவர கொஞ்சம் வெயிட் பண்ணச் சொல்லுங்க..

Madhavan Srinivasagopalan said...

என்னாது சத்தமே காணும்,
மியூசிக் ஸ்டார்ட் ஆகலையா,
நான்தான் ஆளில்லாத கடையில டீ ஆத்துறேனா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்க என் பிகரு?
எங்க என் பிகரு?

எஸ்.கே said...

எங்க என் பிகரு?
எங்க என் பிகரு?//
அதோ டைட்டில்ல 2 அப்படினு இருக்கே அதான் FIGURE!

இம்சைஅரசன் பாபு.. said...

//என்று கூறிக்கொண்டே இரண்டு கையால் வேட்டியை மடித்து கட்டியபடி வாயில் அருவாளை கவ்விக்கொண்டு வெளியில் வந்தார் அந்த பெண்ணின் அப்பா பாபு!//

ஹி ..ஹி ...

Madhavan Srinivasagopalan said...

// அதோ டைட்டில்ல 2 அப்படினு இருக்கே அதான் FIGURE! //

ரமேசுக்கு ரெண்டு பிகரா ? -- something wrong

Madhavan Srinivasagopalan said...

ரெண்டு பேருல.. வலது பக்கம் இருக்குறது அருண் தான ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன சத்தம்?

karthikkumar said...

/என்று கூறிக்கொண்டே இரண்டு கையால் வேட்டியை மடித்து கட்டியபடி வாயில் அருவாளை கவ்விக்கொண்டு வெளியில் வந்தார் அந்த பெண்ணின் அப்பா பாபு///

பாபுவுக்கு அவ்ளோ வயசா ஆச்சு ?... :))

வைகை said...

karthikkumar said...
/என்று கூறிக்கொண்டே இரண்டு கையால் வேட்டியை மடித்து கட்டியபடி வாயில் அருவாளை கவ்விக்கொண்டு வெளியில் வந்தார் அந்த பெண்ணின் அப்பா பாபு///

பாபுவுக்கு அவ்ளோ வயசா ஆச்சு ?... :)//

இதுவரை உனக்கு தெரியாதா?

வைகை said...

இது ஒரு கூட்டு முயற்சி. உங்களின் கருத்துகள் உவகையோடு வரவேற்கப்படுகின்றன்! (Hii..Hiiii)

எஸ்.கே said...

//பாபுவுக்கு அவ்ளோ வயசா ஆச்சு ?... :))/

அவருக்கு வயசாகலை! அவர் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்!

ஜீ... said...

செம்ம கலக்கல்! :-)

ஜீ... said...

என்ன கூட்டமே இல்ல? கும்மி கிடையாதா?

ஜீ... said...

பாவம் மாதவன்! இன்னுமா வேட்டியக் கையில பிடிச்சுட்டு இருக்காரு?

ஜீ... said...

//அருவாளை கவ்விக்கொண்டு வெளியில் வந்தார் அந்த பெண்ணின் அப்பா பாபு!//
மகள் வளர்ந்து காலேஜுக்கா...ஸ்ஸ்ஸ்ஸப்பா! அதுக்குள்ளே எவ்ளோ பலப் வான்கியிருப்பாரு! :-)

கடம்பவன குயில் said...

ஐயோ.....ரமேஷ்தம்பி இன்னும் பச்சப்பிள்ளையாவே இருக்கீங்களே..எதுக்கு நண்பரை ஹெல்ப்புக்கு கூப்பிட்டாலும் கூப்பிடுங்கள். லவ்வுக்கு முதல்முதலாக ஹெல்ப்புக்கு மட்டும் நண்பரை கூப்பிடவே கூடாதுப்பா. உங்களுக்கு கரெக்கட் பண்ணாமல் அவர் கரெக்ட்பண்ணி கம்பி நீட்டிடுவார். அப்புறம் நீ்ங்க ஆசப்பட்ட ஃபிகருக்கு காலம் முழுதும் நீங்க அண்ணனாகவே இருக்க வேண்டியதுதான். ஜாக்கிரதை. நல்ல நகைச்சுவை தொடர். தொடருங்கள். வாழ்த்துக்கள்

சேலம் தேவா said...

//தம்பி நாங்க பென்சில் சீவுறதுக்கு எல்லாம் பட்டாகத்திய உபயோகிக்க மாட்டோம்.... //

சூப்பர் பஞ்ச்..!! :D

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடம்பவன குயில் said...

ஐயோ.....ரமேஷ்தம்பி இன்னும் பச்சப்பிள்ளையாவே இருக்கீங்களே..எதுக்கு நண்பரை ஹெல்ப்புக்கு கூப்பிட்டாலும் கூப்பிடுங்கள். லவ்வுக்கு முதல்முதலாக ஹெல்ப்புக்கு மட்டும் நண்பரை கூப்பிடவே கூடாதுப்பா. உங்களுக்கு கரெக்கட் பண்ணாமல் அவர் கரெக்ட்பண்ணி கம்பி நீட்டிடுவார். அப்புறம் நீ்ங்க ஆசப்பட்ட ஃபிகருக்கு காலம் முழுதும் நீங்க அண்ணனாகவே இருக்க வேண்டியதுதான். ஜாக்கிரதை. நல்ல நகைச்சுவை தொடர். தொடருங்கள். வாழ்த்துக்கள்//

நல்லவன்னு நம்பி கூப்டங்க. பயபுள்ள ஏமாத்திடுச்சு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சேலம் தேவா said...

//தம்பி நாங்க பென்சில் சீவுறதுக்கு எல்லாம் பட்டாகத்திய உபயோகிக்க மாட்டோம்.... //

சூப்பர் பஞ்ச்..!! :D
//

Thanks. He he

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஜீ... said...

//அருவாளை கவ்விக்கொண்டு வெளியில் வந்தார் அந்த பெண்ணின் அப்பா பாபு!//
மகள் வளர்ந்து காலேஜுக்கா...ஸ்ஸ்ஸ்ஸப்பா! அதுக்குள்ளே எவ்ளோ பலப் வான்கியிருப்பாரு! :-)//

இப்போ தமிழ்நாட்டு பல்பு கடைக்கு அவர்தாள் ஹோல் சேல் டீலர்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ் இன்னும் கவுண்ண்ட்டிங்க் பண்றதை மட்டும் விடலை போல. பையன்க்கு விடலைன்னு நினப்பு வேற ஹா ஹா

பட்டாபட்டி.... said...

ஹா.ஹா...சூப்பராகீது...

middleclassmadhavi said...

:-))

மாணவன் said...

செம்மையாகீது மாமு அசத்துங்க...

:)

மாணவன் said...

// பட்டாபட்டி.... said...
ஹா.ஹா...சூப்பராகீது...//

நன்றி பட்டாஜி :)

மனசாட்சி said...

Continue…..Continue…..Continue…..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//இது ஒரு கூட்டு முயற்சி.
//

என்ன கூட்டு , வழைகாயா இல்ல உருளையா

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

என்ன கன்றாவி இது ?