Wednesday, July 13, 2011

அஞ்சு பத்துக்கு அலையும் ரமேசும் அற்புத விளக்கும்! - 1

அன்பார்ந்த வாசகர்களே! ஒரு புது முயற்சியாய் இந்த நகைச்சுவை தொடர்கதை. இந்த கதை தனிப்பட்ட ஒருவரால் எழுதப்பட்டது அல்ல! இது ஒரு கூட்டு முயற்சி! உங்களின் கருத்துகளை நாங்கள் அவசியம் வேண்டுகிறோம். உங்கள் கருத்துக்களை கமெண்டிலோ அல்லது terror.blogger@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பவும். மிக்க நன்றி!



வானுயர்ந்த மரங்களைகொண்ட அடர்ந்த காடு! ஆள் அரவமே இல்லாத அந்த காட்டின் நடுவே நிலாவை நின்று தொடும் உயரத்தில் ஒரு  அரண்மனை! அன்று இரவு அது ஒரு சொர்க்கபூமியாக காட்சி தந்தது! காரணம் மன்னருக்கு அன்று பிறந்தநாள்! உற்சாக பானம் தந்த உற்சாகத்தில் மிதந்துகொண்டு அந்தப்புரத்தில் மஞ்சத்தில் மிதந்து கொண்டிருந்தார் மன்னர்! ஆனால் அந்த சந்தோசங்கள் கொஞ்ச நேரம் மட்டுமே! அவரது உற்சாகத்தை மொத்தமாக குலைக்கும் விதமாக ஒற்றன் ஒருவன் ஓலை கொண்டுவந்தான்! ஓலையை படித்த மன்னரின் தோள்கள் தினவெடுத்தன... கோபத்தில் ரத்தம் தலைக்கேறியது! 

”என்ன தைரியம் இருந்தால் பக்கத்து நாட்டு மன்னன் என் மீது படையெடுப்பான்?..தளபதியாரே!” என்று கூவிக்கொண்டே தன் இடுப்பு துணி நழுவதைகூட  கூட பொருட்படுத்தாமல் வேக நடை போட்டான்! 

அதை கண்ட அந்தப்புர பெண்ணொருத்தி நாணத்தில் சிவந்துபோய்...மன்னா..மன்னா..” என்று கூவிக்கொண்டே பின்னால் ஓடிச்சென்று அவனுடைய வேட்டியை அவனிடம் வழங்கினாள்.......
 
நாட்டின் மானத்தைவிட என் மானம் ஒன்றும் பெரிதல்ல” என்று கூறிக்கொண்டே இடுப்பு வேட்டியை வெடுக்கென்று பறித்தான் மன்னன்........

அப்போது “ஐயோ...” என்ற அலறல் கேட்டது!

திடுக்கென்று கண்விழித்த ரமேஷின் கைகளில் அவனுடைய அண்ணன் மாதவனின் வேட்டி இருந்தது! பக்கத்தில் படுத்திருந்த ரமேஷின் அண்ணன் பயந்துபோய் நடுங்கியவாரே மூலையில் அமர்ந்திருந்தார்!

இதைக் கண்ட அவனுடைய அப்பா...”ஏன்டா நாயே? விடிய விடிய கண்ட படமெல்லாம் பார்க்கவேண்டியது..பார்த்ததும் இல்லாம எங்க உயிரை ஏன்டா வாங்குற? தின்கிற சோத்துக்கு கூட சம்பாதிக்கிறது இல்லை.. இதுலவேற....கண்ட கருமாந்திர கனவுவேற? கைய கால அமுக்கிகிட்டு ஒழுங்கா படுடா...” என்று கத்தத் தொடங்கினார்!

அது ரமேஷுக்கு வழக்கமாகி போனதால் அதையே தாலாட்டாக எடுத்துக்கொண்டு தூங்கிபோனான்! ஆனால் மாதவன்தான் பாவம் வேட்டியை இறுக்கி பிடிப்பதிலே தூக்கம் பிடிபடவில்லை!

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட்டான் ரமேஷ்! அவ்ளோ நல்லவன் இல்லைங்க...காரணம் ஒரு வாரம் முன்பு எதிர்வீட்டில் குடிவந்த பெண்தான் காரணம்! அவள் மொட்டை மாடியில் படிப்பதும்..அவளுக்காக இவன் அங்கு நின்று அதியசமாக பல் துலக்குவதும் கொஞ்ச நாளாக புதிதாக நடக்கும் விஷயங்கள்! ஆனால் அவள் பெயரைக்கூட ரமேஷால் தெரிந்துகொள்ள முடியவில்லை!

இப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ”ஏன்டா தண்டச்சோறு..” என்ற அவன் அப்பாவின் குரல் கேட்டு.... திடுக்கிட்டு ஓடினான்!

இதுதாங்க ரமேஷ்! சொல்லிக்கொள்ளும்படி படிப்பும் இல்லை வேலையும் இல்லை.. வேலையும் இல்லை.. ஆனால் வேளைக்கு சாப்பிடனும்.... அழகான பெண்ணை திருமணம் செய்யணும்...வேலையே செய்யக்கூடாது ஆனால் கையில் காசு வேண்டும்!

சரி...இவன் இப்படி வெட்டியாகவே இருக்கட்டும் வாங்க நாம இன்னொரு ஆளை பார்ப்போம்!
****************************

சென்னையின் ஒரு குறுகலான சந்து அது...ஒரு பழைய வீட்டை லாட்ஜாக மாற்றி  ஒருவர் காசு பார்த்துக்கொண்டிருந்தார்.. அது நமக்கு தேவை இல்லை...அந்த லாட்ஜின் இரண்டாவது மாடியில் மூன்றாவது அறையில் இருப்பவர்கள்தான் நமக்கு முக்கியம்!

மந்திரவாதி பாண்டியனும் அவனது அல்லக்கை செல்வாவும் மும்முரமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்! அவர்கள் பேசியதை ஒட்டுக்கேட்டதில் கிடைத்து இதுதான்...

"டேய் கூமுட்டை செல்வா...இங்க வாடா...!"  செல்வா பம்மிக்கொண்டு வந்தான்....

" நாம் ஊரில் பிரசன்னம் பார்த்ததில் என்னடா தெரிந்தது.? "

"நாம எங்க சாமி ஊர்ல பிரசன்னாவ பார்த்தோம்? இப்பதானே சென்னை வந்துருக்கோம்... ஏதாவது ஷூட்டிங்கில இருப்பாரு நாளைக்கு போய் பார்ப்போம்! "

இதை கேட்ட பாண்டியன் முகம் சிவந்தது...மன்னிக்கவும் மேலும் கருத்தது!

”டேய்ய்ய்.... பிரசன்னம்னா சோழி போட்டு பாக்குறது...”

“ஓ..அதுவா சாமி? சாமி ஒரு சந்தேகம் கேக்கலாமா?..”

“கேளுடா வெண்ணை ...”

“அது ஏன் சாமி பிரசன்னம் பார்த்தா சோழிய கீழ போட்டுட்டு எண்ணுறாங்க?...கைல வச்சுகிட்டே எண்ணலாம்ல?”

“டேய்ய்ய் பரதேசி.... இதுக்கு மேல கேள்வி கேட்ட சுடுதண்ணிய மூஞ்சில ஊத்திருவேன் ஓடிபோயிரு சொல்லிட்டேன்” என்று கோவத்தில் கத்தினார் பாண்டியன்! 

”சாமி சுடுதண்ணிய மூஞ்சில ஊத்துறதுனா கொஞ்சம் ஆறவச்சு ஊத்துங்க.. எனக்கு சூடு ஆகாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க” என்று செல்வா அப்பாவியாக சொல்லவும்... கடுப்பான பாண்டியன் சொல்ல ஆரம்பித்தார்...


”இங்க மவுண்ட் ரோட்ல உள்ள ஒரு காயலாங்கடைல ஒரு அதிசய விளக்கு இருக்கு! ஆனா அதை நாம எடுக்க முடியாது! அந்த விளக்கோட பூர்வ ஜென்ம பந்தம் உள்ள ரமேஷ்னு ஒருத்தன் இங்க வேளச்சேரில இருக்கான்.. அவன் மட்டுமே அதை எடுக்க முடியும்! நம்மோட முதல் வேலை அவன கண்டுபிடிக்கிறது... அதுக்கப்புறமா அவனை வச்சு அந்த விளக்கை எடுத்திட்டு...நாம நினைக்கிறத அடையலாம்டா வெண்ணை” என பாண்டியன் சொல்லி முடித்தார்!

“அப்பிடியா சாமி?..அப்ப வெளக்க எடுத்துட்டு மொதவேலையா கேப்டன் வாய கட்டனும்...ஓவரா கத்துறான்”

“டேய்ய்....என்னடா சொல்ற? அவரு வாய நீ ஏன்டா கட்ற?” பாண்டியன் கத்தினார்!

“சாமி...கேப்டன்னா அவரு இல்ல..எங்க தெருவுல உள்ள ஒரு நாய் பேரு சாமி..என்னை பார்த்தா ஓவரா கொலைக்குது அதான்...ஹி ..ஹி...” என்று சொல்லிக்கொண்டே வேகமாக நழுவினான்...

“டேய்ய் கேணை எங்கடா போற?”

“அதுவா...?..அது..அது..கீழ உள்ள கடைல வடை சுடறாங்க போல? வாசனை மூக்க துளைக்குது... கொஞ்ச நேரம் நீங்களா சண்டை போட்டுக்கங்க..நான் போய் வடையை வாங்கிட்டு வந்துறேன்” என்று சொல்லிவிட்டு ஓடி போய் விட்டான்!

அதே நேரம்.... ரமேஷ் "அருண் என்னை காப்பாத்து...." என கத்தி கொண்டே வேகமாக  ஓடி கொண்டு இருந்தான்..... 

அவருக்கு பின்னால் 4 தடியர்கள் பட்டாகத்தியுடன் ஓடி வந்து நெருங்கினர்....

(தொடரும்)

58 comments:

எஸ்.கே said...

இந்த கதை தனிப்பட்ட ஒருவரால் எழுதப்பட்டது அல்ல! இது ஒரு கூட்டு முயற்சி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த கதை தனிப்பட்ட ஒருவரால் எழுதப்பட்டது அல்ல! இது ஒரு பொரியல்/வெஞ்சனம் முயற்சி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு இன்னும் ராயல்டி,ராயல்காபி,ராயல்பூஸ்ட் எதுவுமே வரல....

எஸ்.கே said...

ராயல்டி,ராயல்காபி,ராயல்பூஸ்ட் எதுவுமே வரல.....நீங்கதானே கட்டுமஸ்தா இருக்கீங்களே இதெல்லாம் அவசியமில்லையே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காரணம் மன்னருக்கு அன்று பிறந்தநாள்!//

முன்னாடியே தெரிஞ்சிருந்தா ட்ரீட் கேட்டிருப்பேன்

இம்சைஅரசன் பாபு.. said...

//பாண்டியன் முகம் சிவந்தது...மன்னிக்கவும் மேலும் கருத்தது!//

வஞ்சபுகழ்ச்சி அணி ....

Madhavan Srinivasagopalan said...

//ஆனால் மாதவன்தான் பாவம் வேட்டியை இறுக்கி பிடிப்பதிலே தூக்கம் பிடிபடவில்லை! //

பாவந்தான்..
மாதவனுக்கு ரெண்டு 'பெர்முடா', ரெண்டு 'ஷார்ட்ஸ்' பார்சல்..

Madhavan Srinivasagopalan said...

// * அந்த லாட்ஜின் இரண்டாவது மாடியில் மூன்றாவது அறையில் # இருப்பவர்கள்தான் நமக்கு முக்கியம்! //

முதலாவது தெரிவில்
இரண்டாவது மாடியில் மூன்றாவது அறையில் # உள்ள நான்கு ஆட்கள்தான் நமக்கு முக்கியம்! ....

இம்சைஅரசன் பாபு.. said...

//4 தடியர்கள் பட்டாகத்தியுடன் ஓடி வந்து நெருங்கினர்.... //

மாலுமி அனுப்பின ஆளா இருக்குமோ ..

எஸ்.கே said...

முதலாவது தெரிவில்
இரண்டாவது மாடியில் மூன்றாவது அறையில் # உள்ள நான்கு ஆட்கள்தான் நமக்கு முக்கியம்! .... //

அந்த ரூம்ல இரண்டு பேர்தாங்க இருக்காங்க:-)

Madhavan Srinivasagopalan said...

//ரமேஷ் "அருண் என்னை காப்பாத்து...." என கத்தி கொண்டே வேகமாக ஓடி கொண்டு இருந்தான்..... //

மொபைல் போனுல ?

இல்லேன்னா மொரீஷியசுக்கு எப்படி கேக்கும்..?
அட்லீஸ்ட் கோவைக்கு கூட கேக்காதே.. !!

எஸ்.கே said...

மாலுமி அனுப்பின ஆளா இருக்குமோ ..//

அப்படின்னா சதக் சதக்தானா?

எஸ்.கே said...

//பாண்டியன் முகம் சிவந்தது...மன்னிக்கவும் மேலும் கருத்தது!//

வஞ்சபுகழ்ச்சி அணி ....
//இல்லை அவர் முகம் மழை மேகம் போல மாறிச்சுனுதானே மறைமுகமா சொல்லியிருக்கு:-)

Madhavan Srinivasagopalan said...

//முதலாவது தெரிவில்
இரண்டாவது மாடியில் மூன்றாவது அறையில் # உள்ள நான்கு ஆட்கள்தான் நமக்கு முக்கியம்! .... //

அந்த ரூம்ல இரண்டு பேர்தாங்க இருக்காங்க:-) //

ஒரு ஃப்லோவுக்காக ரெண்டுபேர சேக்கக் கூடாதா ..?
ஆளுக்கா பஞ்சம்.. ?

முத்தரசு said...

செம்ம காமடி - விறுவிறுப்பா போச்சி எதிர் பார்க்க வச்ச....ஹீம்

முத்தரசு said...

//மாதவன்தான் பாவம் வேட்டியை இறுக்கி பிடிப்பதிலே தூக்கம் பிடிபடவில்லை!//

பாவம் இந்த அண்ணன்

Madhavan Srinivasagopalan said...

@ எஸ்.கே
ரெண்டு பேருதான் அப்படீன்னா இது எப்படி ?

நாலாவது சந்து லாட்ஜுல..
மூணாவது மாடில இருந்த ரெண்டு பேரு ஒன்னாம் நம்பர் ரூமுக்குள்ள போயி....

எஸ்.கே said...

//நாலாவது சந்து லாட்ஜுல..
மூணாவது மாடில இருந்த ரெண்டு பேரு ஒன்னாம் நம்பர் ரூமுக்குள்ள போயி.... //

இதுக்கு மேல போனா ஸீரோ மைனஸ் ஒன்னுனு சொல்ல ஆரம்பிச்சிடுவீங்களோ:-))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மனசாட்சி said...

செம்ம காமடி - விறுவிறுப்பா போச்சி எதிர் பார்க்க வச்ச....ஹீம்//

நன்றிங்க. மேலும் விரைவில் அடுத்தடுத்த பாகங்களையும் படிங்க..

Anonymous said...

படம் கலக்கல் எஸ் கே

இம்சைஅரசன் பாபு.. said...

//படம் கலக்கல் எஸ் கே//

படத்தையே பார்க்காதே ..கதைய படிங்க .

கடம்பவன குயில் said...

//அவருக்கு பின்னால் 4 தடியர்கள் பட்டாகத்தியுடன் ஓடி வந்து நெருங்கினர்.... //

ஓ.....இதுக்குப் பேருதான் சஸ்பென்சா?

எழுதறது காமெடி சீரியல். இதிலென்ன சஸ்பென்ஸ் வேண்டியிருக்கு. சீக்கிரம் தொடருங்க. ஒருவேளை ரமேஷோட இம்சை தாங்காமல் மாதவன் அண்ணன் செட்டப் பண்ணிய ஆளா இருக்குமோ?

மாணவன் said...

அடுத்தபாகம் எதிர்பார்ப்புடன்.... :)

Madhavan Srinivasagopalan said...

//ஒருவேளை ரமேஷோட இம்சை தாங்காமல் மாதவன் அண்ணன் செட்டப் பண்ணிய ஆளா இருக்குமோ? //

பாபுவத் தான சொல்லுறீங்க..?


மாதவன் அண்ணன் = யாரு அவரு ?

Anonymous said...

ம்மா ., செமைய இருக்கு !! வயிறு வலிக்கு சிரிச்சு சிரிச்சு .,

Anonymous said...

பாவம் ரமேஷ் சார் ., .,

Madhavan Srinivasagopalan said...

@ இம்சைஅரசன் பாபு// படத்தையே பார்க்காதே ..கதைய படிங்க . //

பார்க்காதே -- மரியாதை மிஸ்ஸிங்..
படிங்க -- அது..

Anonymous said...

இதுல செக்கசெவேல்னு இருக்குற எங்க டெரர் அண்ணன்னே கருப்பு ஏன் சொன்னிங்க எஸ் கே

அருண் பிரசாத் said...

நல்ல தொடக்கம் வாழ்த்துக்கள்....

Madhavan Srinivasagopalan said...

//கல்பனா said...

இதுல செக்கசெவேல்னு இருக்குற எங்க டெரர் அண்ணன்னே கருப்பு ஏன் சொன்னிங்க எஸ் கே //

கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு.. !!

arasan said...

கெளப்புங்க ... அருமையா தான் இருக்கு ..
அடுத்து ரமேஷ் சாரின் நிலையை அறிந்தும் கொள்ளும் ஆவலோடு..

Madhavan Srinivasagopalan said...

//அவருக்கு பின்னால் 4 தடியர்கள் பட்டாகத்தியுடன் ஓடி வந்து நெருங்கினர் //

டவுட்டு : பட்டாபட்டியா இருக்குமோ ?

Madhavan Srinivasagopalan said...

இக்கதை பற்றி பன்னியாரின் கருத்தென்னவோ ?

செல்வா said...

இந்த கதை தனிப்பட்ட ஒருவரால் எழுதப்பட்டது அல்ல! இது ஒரு கூட்டு முயற்சி! (CP)

vidivelli said...

ஐயையோ அப்படின்னா அந்த நாலு பேரும் யாருங்க...
புரியவே முடியல...சப்போட்டுக்கு போகணுமா?hahaha.....
காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக....


உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ,,,,,,,,,,,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vidivelli said...

ஐயையோ அப்படின்னா அந்த நாலு பேரும் யாருங்க...
புரியவே முடியல...சப்போட்டுக்கு போகணுமா?hahaha.....
காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக....


உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ,,,,,,,,,,,//

கருத்துக்கு நன்றி. வலைப்பூ வருகிறோம்..

Madhavan Srinivasagopalan said...

// கோமாளி செல்வா said...

இந்த கதை தனிப்பட்ட ஒருவரால் எழுதப்பட்டது அல்ல! இது ஒரு கூட்டு முயற்சி! (CP)//

கண்டிப்பா இது செல்வா கதை அல்ல.. அல்ல.. அல்ல..

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
//பாண்டியன் முகம் சிவந்தது...மன்னிக்கவும் மேலும் கருத்தது!//

வஞ்சபுகழ்ச்சி அணி ....//


இதுல எங்க புகழ்ச்சி வந்தது? நேரடியா வஞ்சம்தான் :))

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
//4 தடியர்கள் பட்டாகத்தியுடன் ஓடி வந்து நெருங்கினர்.... //

மாலுமி அனுப்பின ஆளா இருக்குமோ ..//


இருக்காது மக்கா.. மாலுமி அனுப்பியிருந்தா அவங்க கைல பீர் பாட்டில்தான் இருந்துருக்கும் :))

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த கதை தனிப்பட்ட ஒருவரால் எழுதப்பட்டது அல்ல! இது ஒரு பொரியல்/வெஞ்சனம் முயற்சி!//

உனக்கு ஏன் கல்யாணம் ஆகலைன்னு இப்பதான் தெரியுது?

வைகை said...

எஸ்.கே said...
//பாண்டியன் முகம் சிவந்தது...மன்னிக்கவும் மேலும் கருத்தது!//

வஞ்சபுகழ்ச்சி அணி ....
//இல்லை அவர் முகம் மழை மேகம் போல மாறிச்சுனுதானே மறைமுகமா சொல்லியிருக்கு:-)//

ஏன்? யாரும் காறி துப்பிட்டாங்களா?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
காரணம் மன்னருக்கு அன்று பிறந்தநாள்!//

முன்னாடியே தெரிஞ்சிருந்தா ட்ரீட் கேட்டிருப்பேன்//

நானாயிருந்தா அந்தபுரதுக்கு லைப் டைம் பாஸ் கேட்ருப்பேன்.. ஹி..ஹி :))

வைகை said...

கல்பனா said...
இதுல செக்கசெவேல்னு இருக்குற எங்க டெரர் அண்ணன்னே கருப்பு ஏன் சொன்னிங்க எஸ் கே//


அந்த பயபுள்ள அப்பிடியா சொன்னுச்சு? பயபுள்ள பொய் சொல்லிருக்கு போல? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

கல்பனா said...
இதுல செக்கசெவேல்னு இருக்குற எங்க டெரர் அண்ணன்னே கருப்பு ஏன் சொன்னிங்க எஸ் கே//


அந்த பயபுள்ள அப்பிடியா சொன்னுச்சு? பயபுள்ள பொய் சொல்லிருக்கு போல? :))//

நகைச்சுவை பதிவுனால நகைச்சுவையா கமென்ட் போட்டிருப்பாங்க. விடு மச்சி

Anonymous said...

இதுல மந்திரவாதி பாண்டியனின் மந்திரம் ...,''' கிர்ர்ர்ரர்ர்ர்ர் தூஊஊஊஊஊ'' தானே மக்களே :))))))))

Anonymous said...

///// இதைக் கண்ட அவனுடைய அப்பா...”ஏன்டா நாயே? விடிய விடிய கண்ட படமெல்லாம் பார்க்கவேண்டியது..பார்த்ததும் இல்லாம எங்க உயிரை ஏன்டா வாங்குற? தின்கிற சோத்துக்கு கூட சம்பாதிக்கிறது இல்லை.. இதுலவேற....கண்ட கருமாந்திர கனவுவேற? கைய கால அமுக்கிகிட்டு ஒழுங்கா படுடா...” என்று கத்தத் தொடங்கினார்! //////////

இந்த வரிகள் என் கண் முன்னே அப்படியே காட்சிகளாக விரிகிறது .# டேய் எப்பட எங்க வீட்டுக்கு வந்தீங்க :)))))))

சேலம் தேவா said...

ராஜேஷ்குமார் நாவலைப்போல் விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளது தொடர்.அடுத்த பகுதியை அவலுடன் ச்சீ..ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :)

NaSo said...

தங்கள் எழுத்து நடை மிக அலகாக இருக்கிறது!

NaSo said...

49

NaSo said...

50

வடைன்னு போட்டால் பிரபல பதிவர்கள் கோவிசுக்குவாங்களோ?

வெங்கட் said...

@ நாகராஜ சோழன்.,

// தங்கள் எழுத்து நடை மிக அலகாக இருக்கிறது! //

என்னாது " அகாகவா.?"

தமிழ் வளர்த்த சோழன் வாழ்க..!

வெங்கட் said...

நல்ல விறுவிறுப்பான தொடக்கம்..
அசத்துங்க..!

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்கள் புது முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பர்களே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தொடக்கம்
விறுவிறுப்பான நடை ..

ஆமா அடுத்த பாகம் எப்போ வரும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வானுயர்ந்த மரங்களைகொண்ட அடர்ந்த காடு//

சுமார் எத்தன கிலோ மீட்டர் இருக்கும் மரத்தோட உயரம்

பெசொவி said...

ha...haa....haaa!
(Template comment poduvor sangam)

NaSo said...

//வெங்கட் said...

@ நாகராஜ சோழன்.,

// தங்கள் எழுத்து நடை மிக அலகாக இருக்கிறது! //

என்னாது " அலகாகவா.?"

தமிழ் வளர்த்த சோழன் வாழ்க..!

July 13, 2011 8:22 PM//

அது தெரிஞ்சே போட்ட கமெண்ட்ங்க..

Logu Venkatachalam said...

ஆரம்பம் நன்றாக உள்ளது.

பாண்டியனின் வசனங்கள் வென்னிற ஆடை மூர்த்தியை நினைவுபடுத்துகிறது.

"கேப்டன்" போன்ற அரசியல் கலப்பை தவிர்க்கவும்.

கதை படித்து கொஞ்சம் சிரிப்பும் வந்தது. சந்தானம் நகைச்சுவை மாதிரி இல்லாமல் இதில் கொஞ்சம் நகைச்சுவையும் உள்ளது.

இங்குள்ள கருத்துக்களெல்லாம் நீங்களே வெவ்வேறு பெயரில் போட்டுக்கொண்டது இல்லைதானே?

// இந்த கதை தனிப்பட்ட ஒருவரால் எழுதப்பட்டது அல்ல! இது ஒரு பொரியல்/வெஞ்சனம் முயற்சி!

உங்களுக்கும் கடிக்கவும் தெரியும் போலிருக்கிறதே!