Thursday, June 16, 2011

புக்குல என் மூஞ்ச.... வைக்க!!!

வர..வர..இந்த வெளிநாட்ல இருக்கவங்க தொல்ல தாங்கலப்பா... இங்கே இருந்து ஒட்டகம் மேய்க்கிறதுக்கு ஓசில போக வேண்டியது..சிங்கப்பூர் போறேன்..சிலுக்குபட்டி போறேன்னு அங்க போயி குப்ப கூட்ட வேண்டியது.. ஆனா அவனுங்க ஆர்குட்லயும்..ஃபேஸ் புக்லயும் பண்ற அட்டகாசம் தாங்க முடியலடா சாமி..ஒட்டகம் மேக்கிரவன் ஒபாமாகிட்ட நிக்கிறமாதிரி போட்டோ போடறான்... ஒன்ற டாலர் பஸ் காச மிச்சம் புடிக்க நடந்து போற நாதாரிங்க... பென்ஸ் காருகிட்ட நிக்கிற மாதிரி போட்டோ போடறான்! 

@ டெரர்,பன்னி,வைகை,மாணவன், ஜெயந்த் .. இது உங்களுக்கு மட்டுமில்லடா உங்களமாதிரி சீன் போடற எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கை!

 இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே. இது மெயிலில் வந்தது தமிழில் அளித்திருக்கிறோம் அவ்வளவுதான்!

ஏண்டா உங்க கைய கால வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாதா? உங்களுக்கு வாழ்க்கையில என்னடா லட்சியம்? அடுத்தவங்களை பொறாமைப்பட வைக்கிறதா? அப்புறம் ஏன் உங்க புரொஃபைல் பிக்சருங்களை அடிக்கடி மாத்திகிட்டே இருக்கீங்க? என்ன காரணம்? எனக்கு இப்ப தெரிஞ்சாகனும்!

ஒத்துக்கிறோம், நீங்கெல்லாம் வெளிநாட்டுக்கு போய்ட்டீங்க. உங்க ஒன்னுவிட்ட இரண்டுவிட்ட சித்தப்பா, மாமால்லாம் உங்களை நினைச்சி பெருமைப்படுவாங்க. எங்களுக்கும் சந்தோசம்தான். அதுக்காகதானே ஏர்போட் வந்து டாடாலாம் காமிச்சு வழியனுப்பி வச்சோம். ஆனா உங்க போட்டோக்களை வச்சி எங்களை ஏண்டா சாவடிக்கிறீங்க?

சரி, ஒத்துக்கிறோம், நாங்க அந்த இடத்தையெல்லாம் மேப்ல மட்டும்தான் பார்த்துருக்கோம், நிஜ வாழ்க்கையில இல்ல. அவ்வளவுதானே? அதுக்காக ஏன், நீங்க ஒருநாள் விட்டு ஒரு நாள் புது படத்தை போடுறீங்க. உங்களுக்கு என்னதான் வேணும்? உங்களுக்கு தேவை, நாங்கெல்லாம் ‘like’-ஐ அழுத்திட்டு “வாவ், சூப்பர், கலக்கலா இருக்கு” இப்படி கமெண்ட் போடணும், அதானே? நீங்க ரகசியமா ஒவ்வொரு நிமிசமும் எல்லா கமெண்டையும் பார்ப்பீங்க. நாலு நாள் கழிச்சு “எல்லோருக்கும் நன்றி!” அப்படின்னு ஒரே வார்த்தையில முடிச்சிட்டு போயிடுவீங்க!

சரி, அதைக் கூட ஒத்துக்கலாம். நீங்க நிறைய காசு செலவு பண்ணி அங்க போயிருக்கீங்க, அதனால உங்களை எல்லோரும் பாராட்டனும்னு நினைக்கிறீங்க. புரியுது. ஆனா ஏண்டா செடி, மரம், நாய், பூனைன்னு இதையெல்லாம் புரொஃபைல் பிக்சர்ல போடுறீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? லூசுப்பசங்களா!


அப்புறம் இன்னொரு ரகம் இருக்கு. அதாவது அவங்க படத்துக்கு பதிலா அவங்க குழந்தை படத்தை போடுறது. இந்த மாதிரி ஆளுங்களை பத்தி நாங்க பேசக் கூட விரும்பலை.

எல்லாத்தோட பெஸ்ட் லேடிஸ்தான். ஏனுங்க அம்மிணி, உங்க படத்தை கருப்பு வெள்ளையா மாத்தி போட்டா, திடீர்னு அது அழகாயிடுமா? மத்தவங்க உங்களை பார்த்து “ஆஹா. என்ன அழகு! என்ன அழகு!” இப்படி நினைக்கனும், அப்புறம் உங்களுக்கு friend request அனுப்பனும். ம்.. அப்படித்தானே? எங்களுக்குதானே தெரியும் நீங்க எப்படி இருப்பீங்கன்னு!.

நீங்க இங்கயும் ஒன்னும் செஞ்சதில்ல. கல்யாணம் ஆகி அங்க போயிட்டு, அங்கேயும் ஒன்னும் செய்யாமதான் இருக்கீங்க. இதில பெருமைப்பட என்ன இருக்கு? இதில தினமும் நீங்க என்ன சமைச்சீங்கன்னு அப்டேட் பண்ணுறது வேற “நான் இன்று என் அன்புக் கணவருக்காக தயிர் சாதம் சமைத்தேன்!

சமைச்சீங்களா? உண்மையாவா? இதில வேற அந்த லூசு ஹஸ்பெண்டும் வந்து லைக் போடுவாரு அப்புறம் பொது இடத்தில சொல்வாரு. “தேங்க்யூ டார்லிங், உம்ம்ம்ம்மா…

நீங்க இந்தியாவிலிருந்து வந்தவங்கதானே? இந்த மாதிரி விசயமெல்லாம் அநாகரிகம்னும் பொது இடத்தில இப்படியெல்லாம் நடந்துக்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாது? நீங்க இந்தியாவை விட்டுட்டு போனா உடனே எல்லாத்தையும் மறந்துடுவீங்களா?

அப்புறம் நீங்க சமைச்ச சாப்பாட்டோட படத்தை மிக ருசியானது எச்சில் ஊறவைக்கும்ன்னு தலைப்போட வேற போடறது…சாப்பாட்டு பார்த்தால்ல தெரியும்.. எச்சில் ஊறுமா, வாந்தி வருமான்னு! இதில வெளிநாட்டுக்காரங்க யாராவது வந்து அது எப்படி செய்யறதுன்னு கேக்கறது! கொய்யால, நீ இண்டர்நெட்டுதானே யூஸ் பண்ணுறே? கூகுள்ள தேடிப்பார்த்தா கிடைக்கப் போகுது.

சரி எனக்கு இப்ப ஒன்னு சொல்லுங்க, நீங்க இந்தியாவில இருந்தப்ப ஒரு நாளாவது இப்படி சமைச்சிருக்கீங்களா? உங்க அண்ணனும் நல்ல பையன் தான். அவனுக்காக ஒரு நாளாவது சமைச்சிருக்கீங்களா? யோவ் கணவன்களா, நாங்க உங்களையும்தாம்பா கேட்கிறோம், நீங்க இங்க இருந்தப்ப, ஒருதடவையாவது, உங்கம்மா சாப்பாடு நல்லாயிருக்குனு பாராட்டியிருக்கீங்களா?

கணவன் மனைவி இரண்டு பேரும் இந்த மாதிரி லூசுத்தனமான விளையாட்டுகளை விளையாண்டுகிட்டு வருசத்துக்கு 365 நாளும் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிக்கிறீங்க. ஆனா சொல்வீங்க, “நாங்க கிங் கோல்ஸ் ஓரியண்டல் பேலசின் 35வது மாடியில் சூப்பர் டின்னர் சாப்பிட்டோம். செம சைனீஸ் ஃபுட்!” ஏம்பா அது வெறும் சைனீஸ் ஃபுட் தானே? அதுக்கு ஏன் இவ்வளவு சீன் போடறீங்க? இந்தியா சீனாவுக்கு பக்கத்திலதானே இருக்கு.

அப்படின்னா உண்மையா என்ன நடக்குதுனு  உங்களுக்கு தெரியலன்னா, இப்ப சொல்றோம் கேட்டுகுங்க. அங்க யாருமே சந்தோசமா இல்ல. நீங்க எவ்வளவு சம்பாதிச்சாலும், சந்தோசமா இருக்க போறதில்ல. வெஸ்டர்ன் டாய்லெட்ல உட்கார்ந்துகிட்டு, “நாம ஏன் இங்க வந்தோம்?”னு யோசிச்சிகிட்டு மட்டும்தான் இருப்பீங்க.

நாங்க இந்த உண்மையெல்லாம் சொன்னேன்னா, உடனே நீங்க உங்க ஐ- புரோடக்டெல்லாம் என்கிட்ட காமிப்பீங்க. இதப்பாருங்க, ஐபேட்2-லாம் இங்கேயும் கிடைக்குது, தெரியுமா? அதனால கம்முனு நாங்க சொல்றத கேளுங்க. உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க.

இப்ப நீங்க நினைக்க ஆரம்பிச்சிருக்கலாம், எங்களுக்கெல்லாம் பொறாமை, அதான் இப்படியெல்லாம் பேசுறோம்னு, இல்லையா? இதப்பாருங்க, நாங்களும் அங்கெயெல்லாம் போய் இந்த மாதிரியெல்லாம் செஞ்சாலும் இப்படித்தான் பேசுவோம். உங்களால என்ன செய்ய முடியும்?

இப்படிக்கு
உள்ளூர் டீக்கடை பெஞ்சு
.. 

நன்றி:
மொழி பெயர்ப்பு உதவி:எஸ்.கே,வைகை 

47 comments:

மாணவன் said...

வந்தாச்சு சார் :)

Madhavan Srinivasagopalan said...

நல்ல வேளை.. நானு மூஞ்சிப் புத்தகத்துல கண்டபடி போட்டாலாம் மாத்துறது இல்லை..
நானு வெளி நாட்டுளையும் இல்லை..

! சிவகுமார் ! said...

என்னா அடி!! டீக்கடை தீக்கடையாவுள்ள இருக்கு...Mr and Mrs எல்லாரும் சாப்பிட வேண்டிய வேப்பிலை லேக்கியம்.

! சிவகுமார் ! said...

என்னா அடி!! டீக்கடை தீக்கடையாவுள்ள இருக்கு...Mr and Mrs எல்லாரும் சாப்பிட வேண்டிய வேப்பிலை லேக்கியம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

! சிவகுமார் ! said...

என்னா அடி!! டீக்கடை தீக்கடையாவுள்ள இருக்கு...Mr and Mrs எல்லாரும் சாப்பிட வேண்டிய வேப்பிலை லேக்கியம்.//

அத ஏன்யா ரெண்டு தடவை சொல்ற. தூக்கம் கலையலையா?

மாணவன் said...

“வாவ், சூப்பர், கலக்கலா இருக்கு”...

ஹிஹிஹி...

வைகை said...

ஒட்டகம் மேக்கிரவன் ஒபாமாகிட்ட நிக்கிறமாதிரி போட்டோ போடறான்..//

இது யாருன்னு எனக்கு தெரியுமே :))

கோமாளி செல்வா said...

//@ டெரர்,பன்னி,வைகை,மாணவன், ஜெயந்த் .. இது உங்களுக்கு மட்டுமில்லடா உங்களமாதிரி சீன் போடற எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கை!//

எங்க போலீசு அண்ணன் அடிக்கடி சிங்கப்பூர் போறேன்னு சொல்லிட்டு போட்டோ புடுச்சிட்டு வந்து ப்ளாக் ல போடுவாரே அதுக்கு ஒண்ணும் இல்லைங்களா ?

வெறும்பய said...

நன்றி:
மொழி பெயர்ப்பு உதவி:எஸ்.கே,வைகை///

யோவ மொழிபெயர்த்தது நான்யா.. ஒழுங்கு மரியாதையா எனக்கு நன்றி சொல்லுங்க..

(நல்லவேளை இத எழுதினது நான்னு யாருக்கும் தெரியாது)

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
! சிவகுமார் ! said...

என்னா அடி!! டீக்கடை தீக்கடையாவுள்ள இருக்கு...Mr and Mrs எல்லாரும் சாப்பிட வேண்டிய வேப்பிலை லேக்கியம்.//

அத ஏன்யா ரெண்டு தடவை சொல்ற. தூக்கம் கலையலையா//

எத்தன தடவ சொன்னாலும் உனக்கு வெளங்க போறது இல்ல.. அப்புறம் ஏன் இந்த கேள்வி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா said...

//@ டெரர்,பன்னி,வைகை,மாணவன், ஜெயந்த் .. இது உங்களுக்கு மட்டுமில்லடா உங்களமாதிரி சீன் போடற எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கை!//

எங்க போலீசு அண்ணன் அடிக்கடி சிங்கப்பூர் போறேன்னு சொல்லிட்டு போட்டோ புடுச்சிட்டு வந்து ப்ளாக் ல போடுவாரே அதுக்கு ஒண்ணும் இல்லைங்களா ?//

ஹா ஹா ஹா கேட்டான்ல. செல்வா கேட்டான்ல. சிங்கப்பூர்ல இருக்குறவங்க பதில் சொல்லுங்க..

வெறும்பய said...

ஹா ஹா ஹா கேட்டான்ல. செல்வா கேட்டான்ல. சிங்கப்பூர்ல இருக்குறவங்க பதில் சொல்லுங்க..//

இதற்க்கு பதில் சொல்லும் பொறுப்பை மாணவன் ஏற்றுக் கொள்வான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

நன்றி:
மொழி பெயர்ப்பு உதவி:எஸ்.கே,வைகை///

யோவ மொழிபெயர்த்தது நான்யா.. ஒழுங்கு மரியாதையா எனக்கு நன்றி சொல்லுங்க..

(நல்லவேளை இத எழுதினது நான்னு யாருக்கும் தெரியாது)//

யார்டா அவன். ஜெயந்த் ஊர்ல இல்லாதப்ப அவன் பேர்ல கமென்ட் போடுறது?

கோமாளி செல்வா said...

//யோவ மொழிபெயர்த்தது நான்யா.. ஒழுங்கு மரியாதையா எனக்கு நன்றி சொல்லுங்க.. //

மொழி பெயர்க்கரதுன என்னமோ மரத்த புடுங்கிரதுன்னு நினைச்சிட்டார் போல .. ஹி ஹி .. ஹய்யோ ஹய்யோ !

வெறும்பய said...

யார்டா அவன். ஜெயந்த் ஊர்ல இல்லாதப்ப அவன் பேர்ல கமென்ட் போடுறது?//

அதானே யார்ரா அவன்.. என் பெயர்ல கமெண்ட் போடுறது...

கோமாளி செல்வா said...

/இதற்க்கு பதில் சொல்லும் பொறுப்பை மாணவன் ஏற்றுக் கொள்வான்//

மாணவன் அவர்களைக் காணவில்லை.. சரி நான் போய் செல்வா கதைகள் எழுதிட்டு வரேன்..

வைகை said...

கோமாளி செல்வா said...
/
எங்க போலீசு அண்ணன் அடிக்கடி சிங்கப்பூர் போறேன்னு சொல்லிட்டு போட்டோ புடுச்சிட்டு வந்து ப்ளாக் ல போடுவாரே அதுக்கு ஒண்ணும் இல்லைங்களா //


செல்வா...அதுக்கெல்லாம் போட்டா...18+ தான் போடணும் :))

Madhavan Srinivasagopalan said...

//மாணவன் அவர்களைக் காணவில்லை.. //

மாணவன் மேட்னி ஷோ பாக்கப் போயிட்டான்..

இம்சைஅரசன் பாபு.. said...

//“வாவ், சூப்பர், கலக்கலா இருக்கு”...

ஹிஹிஹி..//

டேய் உன்ன தான்டா சொல்லிருக்கு ..இனி டெய்லி ப்ரோபைல் போட்டோ மாத்துவே ..?

வைகை said...

வெறும்பய said...
யார்டா அவன். ஜெயந்த் ஊர்ல இல்லாதப்ப அவன் பேர்ல கமென்ட் போடுறது?//

அதானே யார்ரா அவன்.. என் பெயர்ல கமெண்ட் போடுறது.//

அவ்விட அனைவரும் சுகந்தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹூ இஸ் தேட் ஹிப்புபோட்டமஸ்....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வர..வர..இந்த வெளிநாட்ல இருக்கவங்க தொல்ல தாங்கலப்பா...///

டாய் டெரர் என்னடா பண்ண? இப்படி கிழிக்கிறானுங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆனா அவனுங்க ஆர்குட்லயும்..ஃபேஸ் புக்லயும் பண்ற அட்டகாசம் தாங்க முடியலடா சாமி..////

எச்சூஸ் மி, இதெல்லாம் என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////.ஒட்டகம் மேக்கிரவன் ஒபாமாகிட்ட நிக்கிறமாதிரி போட்டோ போடறான்... ////////

பவர்ஸ்டாரும் ஒட்டகம் மேய்க்கிறாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////@ டெரர்,பன்னி,வைகை,மாணவன், ஜெயந்த் .. இது உங்களுக்கு மட்டுமில்லடா உங்களமாதிரி சீன் போடற எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கை!//////

யோவ் பன்னிய ஏன்யா இதுல சேத்தீங்க, அவன் நல்ல பயலாச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அப்புறம் ஏன் உங்க புரொஃபைல் பிக்சருங்களை அடிக்கடி மாத்திகிட்டே இருக்கீங்க?///

யாராவன்...? மாணவனா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய்ய் எவனாவது வந்து ரிப்ளை பண்ணுங்கடா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆனா ஏண்டா செடி, மரம், நாய், பூனைன்னு இதையெல்லாம் புரொஃபைல் பிக்சர்ல போடுறீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? லூசுப்பசங்களா!////////

அப்போ நரி படம் வெச்சுக்கலாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எல்லாத்தோட பெஸ்ட் லேடிஸ்தான். ஏனுங்க அம்மிணி, உங்க படத்தை கருப்பு வெள்ளையா மாத்தி போட்டா, திடீர்னு அது அழகாயிடுமா? /////

அதானே, ஆனா அதுக்கும் இந்த ஜொள்ளக்கை கூட்டம் வருதே, அவிங்கள என்ன பண்ண?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மத்தவங்க உங்களை பார்த்து “ஆஹா. என்ன அழகு! என்ன அழகு!” இப்படி நினைக்கனும், அப்புறம் உங்களுக்கு friend request அனுப்பனும். ம்.. அப்படித்தானே? எங்களுக்குதானே தெரியும் நீங்க எப்படி இருப்பீங்கன்னு!.///////

உங்களுக்கு பட்டறிவு நிறைய இருக்கும் போல தெரியுது...? நல்லா எடுத்துச் சொல்லுங்க சார், சின்னப் பசங்க நிறைய பேரு ப்ரொபைல் போட்டோவ பாத்துட்டு மனச கெடுத்துக்கிறானுங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இதில தினமும் நீங்க என்ன சமைச்சீங்கன்னு அப்டேட் பண்ணுறது வேற “நான் இன்று என் அன்புக் கணவருக்காக தயிர் சாதம் சமைத்தேன்!”//////

தயிர் பாக்கெட் வாங்கி, சோத்துல மிக்ஸ் பண்ணா அது சமையலா? என்ன ஒலகமடா இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////இதில வேற அந்த லூசு ஹஸ்பெண்டும் வந்து லைக் போடுவாரு அப்புறம் பொது இடத்தில சொல்வாரு. “தேங்க்யூ டார்லிங், உம்ம்ம்ம்மா…”///////

அமேரிக்காவுல இருக்காராம்.... மாடர்னா வாழ்றாராம்.... பன்னாட பரதேசி ராஸ்கல்ஸ்..... எங்க போனாலும் இந்த ஜாதியவும், டௌரியவும் விட மாட்டேங்கிறீங்களேடா மம்பட்டி வாயனுகளா.........

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
உங்களுக்கு பட்டறிவு நிறைய இருக்கும் போல தெரியுது...? நல்லா எடுத்துச் சொல்லுங்க சார், சின்னப் பசங்க நிறைய பேரு ப்ரொபைல் போட்டோவ பாத்துட்டு மனச கெடுத்துக்கிறானுங்க.....///

அவருக்கு பட்டறிவு இல்ல பன்னி.. அறிவே பட்டு போச்சு :)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////ஆனா அவனுங்க ஆர்குட்லயும்..ஃபேஸ் புக்லயும் பண்ற அட்டகாசம் தாங்க முடியலடா சாமி..////

எச்சூஸ் மி, இதெல்லாம் என்ன?//

அதெல்லாம் வெட்டி பசங்களுக்கு தெரியும்.. நமக்கு என்ன தெரியும் பன்னி? நாம்தான் நாம நம்ம ம..ம.. மனசு உண்டுன்னு இருக்கோமே?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இதில தினமும் நீங்க என்ன சமைச்சீங்கன்னு அப்டேட் பண்ணுறது வேற “நான் இன்று என் அன்புக் கணவருக்காக தயிர் சாதம் சமைத்தேன்!”//////

தயிர் பாக்கெட் வாங்கி, சோத்துல மிக்ஸ் பண்ணா அது சமையலா? என்ன ஒலகமடா இது?//

இததான் நாம தண்ணியடிச்சா தனியா பண்ணுவமே?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அப்புறம் ஏன் உங்க புரொஃபைல் பிக்சருங்களை அடிக்கடி மாத்திகிட்டே இருக்கீங்க?///

யாராவன்...? மாணவனா?///


ஏன்னா அவரு சிங்கபூருல இருக்காராம் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////இதில வேற அந்த லூசு ஹஸ்பெண்டும் வந்து லைக் போடுவாரு அப்புறம் பொது இடத்தில சொல்வாரு. “தேங்க்யூ டார்லிங், உம்ம்ம்ம்மா…”///////

அமேரிக்காவுல இருக்காராம்.... மாடர்னா வாழ்றாராம்.... பன்னாட பரதேசி ராஸ்கல்ஸ்..... எங்க போனாலும் இந்த ஜாதியவும், டௌரியவும் விட மாட்டேங்கிறீங்களேடா மம்பட்டி வாயனுகளா.........
//

Like Like Like Like Like Like

மங்குனி அமைச்சர் said...

என்கு அவ்ளவா டமில் பட்க த்தெர்யாதூ , யாராவது கொஞ்சும் இங்கிலீசுல டிரான்சுலேட் பண்ணி சொல்றிங்களா ???

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////எல்லாத்தோட பெஸ்ட் லேடிஸ்தான். ஏனுங்க அம்மிணி, உங்க படத்தை கருப்பு வெள்ளையா மாத்தி போட்டா, திடீர்னு அது அழகாயிடுமா? /////

அதானே, ஆனா அதுக்கும் இந்த ஜொள்ளக்கை கூட்டம் வருதே, அவிங்கள என்ன பண்ண?//

அட..சொந்தப்பேர்ல வந்தா பரவாயில்லை.. காவாலிங்க பொண்ணுங்க பேர வச்சுகிட்டு வாராங்க பன்னி.:))

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

அமேரிக்காவுல இருக்காராம்.... மாடர்னா வாழ்றாராம்.... பன்னாட பரதேசி ராஸ்கல்ஸ்..... எங்க போனாலும் இந்த ஜாதியவும், டௌரியவும் விட மாட்டேங்கிறீங்களேடா மம்பட்டி வாயனுகளா.........
//

Like Like Like Like Like Like//

நீ என்ன ஓவரா லைக் பண்ற? ஸ்டமக் பர்னிங்? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

அமேரிக்காவுல இருக்காராம்.... மாடர்னா வாழ்றாராம்.... பன்னாட பரதேசி ராஸ்கல்ஸ்..... எங்க போனாலும் இந்த ஜாதியவும், டௌரியவும் விட மாட்டேங்கிறீங்களேடா மம்பட்டி வாயனுகளா.........
//

Like Like Like Like Like Like//

நீ என்ன ஓவரா லைக் பண்ற? ஸ்டமக் பர்னிங்? :))//

S S SS

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வர..வர..இந்த வெளிநாட்ல இருக்கவங்க தொல்ல தாங்கலப்பா...///

டாய் டெரர் என்னடா பண்ண? இப்படி கிழிக்கிறானுங்க?//

டெரர் மற்றும் ஒட்டகத்தைக் காணவில்லை. டெரரின் ஆபீஸ் பரபரப்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இதில தினமும் நீங்க என்ன சமைச்சீங்கன்னு அப்டேட் பண்ணுறது வேற “நான் இன்று என் அன்புக் கணவருக்காக தயிர் சாதம் சமைத்தேன்!”//////

தயிர் பாக்கெட் வாங்கி, சோத்துல மிக்ஸ் பண்ணா அது சமையலா? என்ன ஒலகமடா இது?//

அதுதான் தயிர் சாதம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

அருண் பிரசாத் said...

//@ டெரர்,பன்னி,வைகை,மாணவன், ஜெயந்த் .. இது உங்களுக்கு மட்டுமில்லடா உங்களமாதிரி சீன் போடற எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கை!//

அப்பாடி என் பேர் இல்லை.... நான் அவன் இல்லை

Shiva sky said...

சூப்பர் ..நெத்தியடி...

Rajan said...

ரொம்ப நாளா இத சொல்லனும்னு நெனச்சிட்டே இருந்தேன். நீங்க சொல்லிடீங்க.