Monday, June 13, 2011

ஆக்சுவலா...என்ன நடந்துச்சுன்னா.....?
ஒரு பிரேக்.......எடுத்துட்டு திரும்ப வரும் போது எப்பவுமே மனசு ச்ச்சும்மா ஜிவ்வுன்னு பறக்கும்னு எல்லோருக்கும் தெரியும் ஆனா.. இப்ப என் மனசு பறக்குறது எனக்குத்தான் தெரியும்...( இது எப்டி இருக்கு...)

லீவுக்கு எங்க அப்பத்தா வீட்டுக்கு போகும் போது.. காலையிலயும் சரி சாயங்கலாமும் சரி....காப்பித் தண்ணிய போட்டு எடுத்துகிட்டு எங்கப்பத்தா கொல்லையில இருக்குற பெரிய புளிய மரத்து தூறுக்கு வந்த்துடும்.அப்பா, அம்மா, தாத்தா, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, அத்தை பொண்ணுங்க..( இந்த இடத்துல தம்பி ரமேசு ஒரு ப்ரேக் கொடுத்து படிப்பானே..ஹி ஹி ஹி) நண்டு, சுண்டு, இருந்தது போனது, இப்டி ஒரு பட்டாளமே உக்காந்து காப்பி குடிக்கிற சாக்குல உலகத்தையே அங்கன கொண்டு வந்து பேசி சிரிப்போம்....!

காசு குடுத்தாலும் கெடைக்குமா அந்த சுகம். அதே மாதிரிதான் டெரர் கும்மில எழுதுறப்பவும் எனக்கு கெடக்கிது.. அதுக்காக நீங்க என்ன அப்பத்தாவான்னு ஒருத்தன் கேக்குறான் பாருங்க....? இந்தாங்க ஆளுக்கொரு கப் காஃபி குடிச்சுகிட்டே கேளுங்க...

சரி இப்போ...மேட்டர்க்குள்ள போலாமா...

அசோக் குமார் சிங்னு ஒருத்தன் ஃப்ரண்ட் ஆஃபீசுல என் கூட வேலை பாத்தான் சென்னையில...!ஆக்ராகாரன்..! சிங்ன்னா தலையில டர்பன் வச்ச சிங் இல்ல. இவன் பாக்க செம ஸ்மார்ட்டாதான் இருப்பான். நான் எப்டி இங்லீஷ் பேசுவேனோ அதே மாதிரி அவன் தமிழ் பேசுவான்...(அம்புட்டு அழகா அவன் பேச மாட்டான்.....)

ஆனா சென்னை தமிழ்ல்ல இருக்க கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லுவான். நைட் டூட்டிக்கு வழக்கம் போல வருவான். வழக்கம் போல ரோஸ்லின்னு ஒரு பொண்ண அவன் லவ் பண்றதாவும் அந்த பொண்ணு இவன ரொமப் ரொம்ப லவ் பண்றதாவும் சொல்லுவாங்க...!அந்த பொண்ணு ஒரு ஆங்கிலோ இண்டியன், வீடு இருக்கறது சென்ட் தாமஸ் மெளன்ட் மிலிட்டரி குவார்ட்டஸ்க்கு பின்னால....படிக்கிறது ஸ்டெல்லா மேரிஸ்

கலர் கலரா அவன் சொல்றத எல்லாம் நானும் இமை கொட்டமா கேட்டு கேட்டு வெறுப்பாதான் இருக்கும், அட நமக்கு ஒரு பொண்ணு அப்டி இல்லையேன்னு. நான் சென்னையில் அடி எடுத்து வச்ச காலம் அது. என்னை பொறுத்த வரைக்கும் நான் தங்கியிருக்கிருந்த இராயபுரம், அப்புறம் எங்க அத்தானோட நெட்வொர்க்ல எனக்கு தெரிஞ்ச காசி மேடு பசங்க.. இப்டி அப்டிதான்...நம்ம தொடர்பு எல்லாம்.

அன்னிக்கும் வழக்கபடி அவன் கதை சொல்வான்னு பாத்தேன்...ஆனா நைட் ஷிப்ட் வந்தவன் செம சோகமா இருந்தான்...! என்னா மச்சின்னு கேட்டேன்..! ரோஸ்லின் வழில வேற ஒருத்தன் குறுக்க வர்றான் மச்சி....அவன் நியூ காலேஸ் ஸ்டூடண்ட்டாம்...என்னிய ரூட்ட மாத்துடா பேமானின்னு சொல்றான் மச்சின்னு அவனுக்கு தெரிஞ்ச தமிழ்ல்ல கொஞ்சி கொஞ்சி சொல்ல...அழுவுற மாதிரி ஒரு மூஞ்சி வச்சிகிட்டு சொன்னது எனக்கு ரொம்ப டென்சனாயிடுச்சு...


ங்கொய்யாலா ஆக்ரால இருந்து வந்த பையன் அவன காப்பத்த வேண்டியது நம்ம பொறுப்பு இல்லையா? அதோட இல்லாம காதல சேத்து வைக்கிறது காலம் காலமா நாம செய்ற ஒரு புனிதமான காரியம் இல்லையா....?

சரி மச்சின்னு...சொல்லிட்டு அப்பத்தான...காசி மேட்ல இருந்த நம்ம தோஸ்த் கடா முத்துக்கு போன போட்டேன்.. ! அது என்ன கடா முத்துன்னு கேக்குறீங்களா.. ஹா ஹா ஹா வாலுப்பசங்க ஆளுக்கொரு அடை மொழி வச்சி இருப்பானுகோ...! இவரு படிக்கிறது சிஎஸ்சி கம்ப்யூட்டர் சென்ட்டர்ல ஆனா பச்சை பொறுக்கின்னு சொல்லிக்குவான்...

'மச்சி...ஆமாண்டா... அந்த பொண்ணு இவன் மேல உசுரயே வச்சு இருக்குடா...யாரோ ஒருத்தன் வந்து இவன கலாய்க்கிறாண்டா...? இவன் பாவம்டா ஒண்ணுயும் தெரியாத பச்சப்புள்ளடா ! சரி.. மாமா.. அரேஞ்ச் பண்ணு.. ஆமாம் சண்டே மார்னிங் அந்த பொண்ணு சாந்தோம் சர்ச்க்கு வருமாம்...அப்ப இந்த பையனும் அங்க வருவானாம்...ஓ .. டீல்டா .. சண்டே மார்னிங்க் நீ பொருள் எல்லாம் எடுத்துட்டு வந்துடு.. நான் அசோக் கோட அங்க வெயிட் பண்றேன்னு '

சொல்லிட்டு போன வச்சிட்டேன்.

அசோக் என் கை ரெண்டையும் புடிச்சுகிட்டு ஒரெ சென்டி மென்ட்தான்...! ச்ச்சே இது எல்லாம் சப்பை மேட்டர் டான்ற ரேஞ்ச்ல நான் ஒரு பந்தாவோட இச் ஓகே மச்சினு சொல்லிட்டேன்.

சீன இங்க கட் பண்ணுங்க...! இப்போ சீன் ஓப்பன் ஆகுற எடம்.. சாந்தோம் சர்ச் பக்கம்....

நானும் அசோக்கும் பைக்க ஸ்டாண்ட் போட்டுட்டு தூரமா நிக்குறோம்.....! அசோக்கோட லைஃப்ல குறூக்க வந்த அந்த பையன் அங்க வரும் போது அசோக் பைக் ஸ்டார்ட் பண்ணி அந்த பையன க்ராஸ் பண்ணி போகும் போது ஜ்ஸ்ட் ஒரு பிரேக் அடிச்சு நம்ம பசங்க கிட்ட அடையாளம் காட்டணும்...

அவ்ளோதான்..!

ஒரு ஆட்டோல ஒரு 5 தறுதலைங்க.. புல் மப்புல ஹாக்கி ஸ்டிக் எல்லாம் வச்சிகிட்டு வெயிட் பண்ணிட்டு இருக்காங்களே... அவுங்க.. போய் மிச்சத்த பாத்துக்குவாங்க...

இப்ப சீன்...அந்த பொண்ணு சர்ச்ல இருந்து வெளில வர்றா...

அசோக்க மெரட்டுன அந்த பையன் அவள கிராஸ் பண்ர மாதிரி எதித்தாப்ல நடந்து வர்றான்...

நான் அங்க ஓரமா நின்னு பாத்துட்டு இருக்கேன்.. அசோக் பைக்ல போயி கிராஸ் பண்ணி அடையாளம் காமிச்சாச்சு...

நம்ம பசங்க ஆட்டோல இருந்து போயி அசோக் அடையாளம் சொன்ன பையன்.. ச்ச்சும்மா பின்னு பின்னுன்னு பின்றாங்க....


அப்போ....
....
.....
....

ரோஸ்லின் வேகமா ஓடி வந்து அடிக்கிறவங்கள தடுக்குது.. அழுகுது.. ! நீ யாரும்மா.. ஓரம் போன்னு கூட்டத்துல ஒருத்தன் கத்துறான்..........அதுக்கு ரோஸ்லின்........நான் அவர லவ் பண்றேன்னு அடி வாங்குற பையன காட்டி சொல்லுது...! அவர் என்னோட லவ்வர்னு கதறுது....


ங்கொய்யாலா....அவன இந்த பொண்ணு லவ் பண்ணுதா...???????? அப்போ அசோக் குமார் சிங்தான் குறுக்க போன பையலா....???? எனக்கு தலை சுத்துது.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

மொத்த கேங்கும் மேட்டர அப்டியே விட்டுட்டு....ஆட்டோல. ஏறி பறந்துட்டாங்க...! அடி வாங்குன அந்தப் பையன ரோஸ்லின் அழுதுகிட்டே தோள்ள கை போட்டு கூட்டிட்டு போகுது...

மீன் டைம் அவன் பேரு என்னங்க மறந்து போச்சு.. கடா முத்து ... செல்லுல என்ன கூப்பிட்டு அசிங்க அசிங்கமா திட்றான்....ஏண்டா லவ்வ சேத்து வைக்க கூப்டன்னு நினைச்சா பிரிக்க கூப்டு இருக்கா.. நீ வீட்டாண்ட வா மவனே உனக்கு இருக்குனு கத்துறான்...!

டேய்.............அசோக்கு நாயே.........!!!! நீ மட்டும் கையில கிடச்ச செத்தடா மவனே...! என்ன அம்போன்னு விட்டுட்டு போய்ட்டான் பாஸ்....! அப்புறம் பஸ் புடிச்சி.. நான் தி.நகர் வந்து....அந்த நாய பாத்து ஏன்டா..இப்டி பண்ணினனு கேட்டா....

" இல்ல மச்சி அவன் என்ன லவ் பண்ணுவான்னு நினைச்சேன்டா..அவ லவ்வர்னு சொலிட்டு குறுக்க இருக்கவன போட்டு தள்ளிட்டா.. நான் ஈசியா அவள புடிச்சுடுவேண்டா...ஹி ஹி ஹி'ன்னு சிரிக்கிறான்.

அப்போ இவ்ளோ நாள் நைட் நீ சொன்ன கதையெல்லாம்...பொய்யா...???? அப்போ அவ உன்னை லவ் பண்ணவே இல்லையான்னு கேட்டதுக்கு சொல்றாங்க...

' நைட் டூட்டி தானே தூக்கம் வரமாம் இருக்க கொஞ்சம் இழுத்து சொன்னேன்.....மச்சி...ஆன அவ லவ்வர பிரிக்கணும்டா.னு சொல்லிட்டு போய்ட்டான்...!

அப்புறம் என்னாச்சு... கடா முத்து கால்ல விழுந்து அழுது கெஞ்சி மன்னிச்சுறு மச்சானு யாருக்கும் தெரியாம அவன சமாதனப்படுத்தி...அப்புறம் கடைசில அசோக் குமார் சிங்க போட்டுத் தள்ளிடானுக பசங்க...!

அட கதை சொன்னா கேட்டுகிட்டே இருக்கறது.......! அவ்ளோதான் கதை முடிஞ்சு போச்சு காப்பியும் முடிஞ்சு போச்சு கெளம்புங்க .. கெளம்புங்க....!


அப்போ...வர்ர்ர்ட்ட்டா!!!!


தேவா. S
17 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

:-))))))

சௌந்தர் said...

அது நம்ம ரமேஷ் தானே...????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில் ரதியோ மதனின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையின் நாளினில்

மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்

பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில்தானோ காமன் ஏவும் பாணமோ
நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே

மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்

காலையில் தோழி நக கோலமும் தேடி காண நாணம் கூடுதே
மங்கள மேளம் சுக சங்கம தீபம் காமன் கோயில் பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே

மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில் ரதியோ மதனின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையின் நாளினில்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுல கேரக்டர்ஸ் எல்லாம் மாறி மாறி இருக்கற மாதிரியே தோனுதே?

Madhavan Srinivasagopalan said...

காசுக்கு ஆளடிக்கும் ஆளுங்க கிட்ட இருக்குற நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.....
காதலை பிரிக்காத குணம்.. செமை..

மாணவன் said...

//அட கதை சொன்னா கேட்டுகிட்டே இருக்கறது.......! அவ்ளோதான் கதை முடிஞ்சு போச்சு காப்பியும் முடிஞ்சு போச்சு கெளம்புங்க .. கெளம்புங்க....!//

ஓகே ரைட்டு... :))

அருண் பிரசாத் said...

ஒரு புள்ளபூச்சிய அடிச்சிட்டு...நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு பில்டப் குடுக்க பார்த்து இருக்கீங்க...

அடிக்கறதா இருந்தா ரமேஷ் மேல கவெச்சி பாருங்க

இம்சைஅரசன் பாபு.. said...

//இதுல கேரக்டர்ஸ் எல்லாம் மாறி மாறி இருக்கற மாதிரியே தோனுதே?//

same feeling makka....

வைகை said...

அடிக்கறதா இருந்தா ரமேஷ் மேல கவெச்சி பாருங்க///

அதானே?..சின்னப்பையன்னுதானே அவன அடிச்சிங்க?.. தைரியம் இருந்தா சென்னைல போய் எங்க அண்ணன்..ரமேஷ் மேல கைய வச்சு பாருங்க.என்ன நடக்குதுன்னு? :))

வைகை said...

அவ்ளோதான் கதை முடிஞ்சு போச்சு காப்பியும் முடிஞ்சு போச்சு கெளம்புங்க .. கெளம்புங்க....!//

முடிஞ்சிச்சா?..நல்லவேள சொன்னிங்க..:))

Softy said...

Do Visit

http://verysadhu.blogspot.com

வெங்கட் said...

@ அருண்.,

// அடிக்கறதா இருந்தா ரமேஷ் மேல
கவெச்சி பாருங்க //

அதானே.. ரமேஷ் மேல கையை
வெச்சிட்டு ஒருத்தன் ஒரு அடி
அந்தாண்டை நகந்துட முடியுமா..?

ரமேஷ் இந்த விஷயத்துல ரொம்ப
கோவக்காரரு..

ஓசி சாப்பாடு வாங்கிட தர்ற வரை
அவனை விட மாட்டாரு..!

சுபத்ரா said...

:-)))))))))))))

JesusJoseph said...

பயன்னுள்ள தகவல்!. ;-)
நன்றி,
ஜோசப் (http://www.tamilcomedyworld.com)

Softy said...

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

Softy said...

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

Softy said...

மேலும் வாசிக்க.... பார்க்க.........

Do Visit

மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


http://www.verysadhu.blogspot.com/