Thursday, June 23, 2011

Hero-ன்னா.. அது நம்ம சிரிப்பு போலீஸ் தான்..!

(நன்றி S.K)


நம்ம ரமேஷை Hero-ஆ வெச்சு
ஒரு தமிழ்படம் எடுத்தே தீருவேன்னு
பிரபல டைரக்டர் ஒருத்தர் ஒத்தை
கால்ல நிக்கறாரு..!

வெயிட்.. வெயிட்.. யாரும்
அவசரப்படக்கூடாது..

சாணி அடிக்கறதா இருந்தாலும்.,
காறி துப்பறதா இருந்தாலும்
எல்லாம் படம் ரிலீஸ் ஆனப்புறம்
தான்.. என்ன ஓ.கேவா..?!!

ஆமா நான் தெரியாம தான் கேக்குறேன்..
நம்ம ரமேஷ்க்கு என்ன குறைச்சல்..?

என்ன டாக்குடர் சீனிவாசனை விட
கொஞ்சம் அழகு கம்மி..!
அவ்ளோ தானே..?! இதுக்கு போயி..

( " லத்திகா " புகழ்.. " பவர் ஸ்டார் "
டாக்குடர் சீனிவாசன் )

சரி.. இப்ப மேட்டர்க்கு வருவோம்..

அந்த டைரக்டரு முதல்ல கதையை
என்கிட்ட தான் சொன்னாரு..

அந்த கதை என்னான்னா..

அது ஒரு வித்தியாசமான லவ்
ஸ்டோரி...

ஹீரோ... நம்ம ரமேஷ்..

நம்ம ரமேஷ் ஹீரோயினை
லவ் பண்றாப்ல..

அந்த புள்ள ரொம்ப உஷாரு..
அவங்க வில்லனை லவ் பண்றாங்க..

அந்த பாழாப்போன வில்லன்
நம்ம ஹீரோயினோட அக்காவை
லவ் பண்றான்..

அந்த ஹீரோயினோட அக்காவோ
நம்ம ரமேஷோட அண்ணனை
லுக் விடுது..

ஆனா நம்ம ரமேஷோட அண்ணன்
வில்லனோட  அக்காவுக்கு ரூட் விடறாரு..

அந்த வில்லனோட அக்காவோ
ஹீரோயினோட அண்ணன் மேல
உசுரா இருக்கு..

ஹீரோயினோட அண்ணனோ
வில்லனோட தங்கச்சியை
சின்சியரா லவ் பண்றாரு..

ஆனா அந்த வில்லனோட தங்கச்சி
நம்ம ரமேஷோட தம்பியை கட்டிக்க
ஆசைப்படுது..

ஆனா ரமேஷ் தம்பிக்கு
ஹீரோயினோட தங்கச்சி மேல
ஒரு கண்ணு..

ஹீரோயினோட தங்கச்சிச்சிக்கோ 
வில்லனோட  தம்பியை தான்
பிடிக்குது.. 

ஆனா அந்த பையனோ சாமியாரா
போயிடறான்..

இதான் அந்த கதை..

டிஸ்கி : யார் யாரையோ லவ் பண்ணினாலும்.,
ஒரு பொண்ணு கூட ரமேஷை லவ்
பண்ணலைங்கறது தான் இந்த கதையில
ஹைலைட்..

டைரக்டருடன் ஒரு மினி பேட்டி :

" என்ன கண்றாவி கதை சார் இது..? "

" இது ரமேஷை மனசுல வெச்சி தயார்
பண்ணின கதை..! "

( ம்ம்..அப்ப அது அப்படி தான் இருக்கும் )

" ஹீரோயின் யார் சார்..? "

" ' கோ ' பட கார்த்திகா..! "

" உங்க படத்துக்கும் " கோ " மாதிரி 
சின்னதா., பொருத்தமா ஒரு டைட்டில்
சொல்லட்டுமா சார்..? "

" சின்னதாவா..? எங்கே சொல்லுங்க...?! "

" த்தூ..! "

( படத்துல இருந்து உங்களுக்காக
ஒரு ஸ்பெஷல் ஸ்டில்..)( நன்றி " சேலம் தேவா " )

53 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Movie title Super

மாணவன் said...

வணக்கம்..

//" த்தூ..! "//

ரொம்ப நல்லாருக்கு.... த்தூ த்தூ தூ :)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Terror Vadai enakuthan. . .

நாகராஜசோழன் MA said...

நிஜ வாழ்க்கையில் தான் ஒரு பொண்ணும் லவ் பண்ணல. சினிமா கதையில கூட ரமேஷ்க்கு ஆள் கிடையாதா? இதுக்கும் பேசாம கேரளாவுக்கு அடிமாடா ரமேஷ் போய்டலாம்.

மாணவன் said...

போட்டோ டிசைனிங் வொர்க் சூப்பர் எஸ்.கே :)

மாணவன் said...

//நிஜ வாழ்க்கையில் தான் ஒரு பொண்ணும் லவ் பண்ணல. சினிமா கதையில கூட ரமேஷ்க்கு ஆள் கிடையாதா? இதுக்கும் பேசாம கேரளாவுக்கு அடிமாடா ரமேஷ் போய்டலாம்.//

எத்தன தடவை போறது மாமு... :))

நாகராஜசோழன் MA said...

//மாணவன் said...

//நிஜ வாழ்க்கையில் தான் ஒரு பொண்ணும் லவ் பண்ணல. சினிமா கதையில கூட ரமேஷ்க்கு ஆள் கிடையாதா? இதுக்கும் பேசாம கேரளாவுக்கு அடிமாடா ரமேஷ் போய்டலாம்.//

எத்தன தடவை போறது மாமு... :))//

அப்போ பாலிடால் குடிக்கலாம்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Action movie ya?

வெங்கட் said...

@ மாணவன்.,

// போட்டோ டிசைனிங் வொர்க்
சூப்பர் எஸ்.கே :) //

1st Photo Designed by S.K
2nd Photo Designed by Salem Deva

வெங்கட் said...

@ ராஜா.,

// Action movie ya? //

ஆமா., பயங்கர ஆக்சன்..
படம் முழுக்க ரமேஷை
துரத்தி., துரத்தி அடி பின்னிட்டே
இருப்பாங்க..

கடம்பவன குயில் said...

படம் 2 காட்சிகள் தாண்டி வெற்றிகரமாக 3வது காட்சி ஓட வாழ்த்துக்கள் சகோ.
படம் பார்த்துட்டு வெளியில் வருபவர்களுக்கு ஆளுக்கொரு எலுமிச்சை தலையில் தேய்க்க இலவசமாய் கொடுக்கப்படும் என்றும் ஒரு அறிவிப்பை வெளியிடுங்கள்.

வைகை said...

காலைல வீட்ட விட்டு கெளம்பும் போதே ஆத்தா சொன்னுச்சு... பாவி நான்தான் கேக்கல... கண்ட கழிசட எல்லாம் கலர் சட்ட போட்டுக்கிட்டு வரும்...சின்ன பையன் நீ..பார்த்து பயந்துருவன்னு சொன்னுச்சு.. இந்தா பார்துட்டன்ல... இன்னிக்கு வெளங்குன மாதிரிதான்! :))

வைகை said...

இந்த படமும் அநாகரிகம் படமும் ஒண்ணா வருதே?..இதுல ஏதும் உள்குத்து இருக்கா?

வைகை said...

" சின்னதாவா..? எங்கே சொல்லுங்க...?! "

" த்தூ..! "//

...ச்சீ..

வைகை said...

போட்டோ டிசைனிங் வொர்க் சூப்பர் எஸ்.கே//

பயபுள்ள எஸ்.கே புண்ணியதுலயாவது அழகா தெரியட்டும் :))

வைகை said...

வெங்கட் said...
@ ராஜா.,

// Action movie ya? //

ஆமா., பயங்கர ஆக்சன்..
படம் முழுக்க ரமேஷை
துரத்தி., துரத்தி அடி பின்னிட்டே
இருப்பாங்க..//

இருக்காதே?..இவருதான் ஒரு அடிக்கே கால்ல விழுந்துருவாரே?

சேலம் தேவா said...

//நம்ம ரமேஷை Hero-ஆ வெச்சு
ஒரு தமிழ்படம் எடுத்தே தீருவேன்னு
பிரபல டைரக்டர் ஒருத்தர் ஒத்தை
கால்ல நிக்கறாரு..! //

பிரபல டைரக்டரா இல்ல... பல்லு போன டைரக்டரா..?! :)

சேலம் தேவா said...

//சாணி அடிக்கறதா இருந்தாலும்.,
காறி துப்பறதா இருந்தாலும்
எல்லாம் படம் ரிலீஸ் ஆனப்புறம்
தான்.. என்ன ஓ.கேவா..?!!//

வரலாறு காணாத தட்டுப்பாடு.மாட்டுப்பண்ணைகளில் அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பம்.பண்ணை உரிமையாளர்கள் மகிழ்ச்சி. :)

Anonymous said...

ஹ ஹா ., நோ கமெண்ட்ஸ் .,

ஹீரோ ரமேஷ் சார் வாழ்க வாழ்க !!!!!!!

சேலம் தேவா said...

//ஆமா நான் தெரியாம தான் கேக்குறேன்..
நம்ம ரமேஷ்க்கு என்ன குறைச்சல்..? //

எல்லாமே கொஞ்சம் அதிகம்தான்.இல்லைன்னா தன்னம்பிக்கையா ஹீரோவா நடிக்க ஒத்துகிட்ருப்பாரா..?!

இம்சைஅரசன் பாபு.. said...

ஹீரோ போட்டோ வ போடா சொன்னா "கிங் காங்" போட்டோவ போட்டு இருக்கு ..

Anonymous said...

வெங்கட் அவர்களின் ஆதீதய சிந்தனைக்கு ஒரு சலாம் :)))

சேலம் தேவா said...

//யார் யாரையோ லவ் பண்ணினாலும்.,
ஒரு பொண்ணு கூட ரமேஷை லவ்
பண்ணலைங்கறது தான் இந்த கதையில
ஹைலைட்..//

இது ஹைலைட் இல்ல..பீஸ்போன லைட். :)

இம்சைஅரசன் பாபு.. said...

படத்தோட பேர் தான் சூப்பர் ..த்தூ

Anonymous said...

ஹீரோ போட்டோ வ போடா சொன்னா "கிங் காங்" போட்டோவ போட்டு இருக்கு ..///

அப்போ ஹீரோ "கிங் காங்" இல்லையா அண்ணா .,., .,.,

வெங்கட் said...

யாரோ ஒரு மைனஸ் ஓட்டு போட்டு
இருக்காங்களே.. ஒருவேளை அது
நம்ம சிரிப்பு போலீஸோட தலைமை
ரசிகர் மன்ற நிர்வாகியா இருக்குமோ.? # டவுட்டு

வெங்கட் said...

@ கல்பனா.,

// அப்போ ஹீரோ "கிங் காங்"
இல்லையா அண்ணா //

நோ., நோ., ஹீரோவை ஒரு தலையா
காதலிக்குற ஒரு கேரக்டர் இருக்காம்..

அதான் கிங் காங்காம்.!

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// வரலாறு காணாத தட்டுப்பாடு.
மாட்டுப்பண்ணைகளில் அட்வான்ஸ்
புக்கிங் ஆரம்பம்.பண்ணை உரிமையாளர்கள்
மகிழ்ச்சி. :) //

ஹா., ஹா., ஹா..!!

Kousalya said...

கதை படிக்கும் போதே ஏதாவது வில்லங்கம் இருக்கும்னு தெரியும் ஆனாலும் கிளைமாக்ஸ்ல மெசெஜ்(?) இருக்கும்னு நம்பி முழுசா படிச்சி தொலைச்சிட்டேன்...

இப்ப தலை சுத்துது !!

எஸ்கே and சேலம் தேவா வொர்க் சூப்பர் !!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யார்டா அது மைனஸ் ஓட்டு போட்டது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி சரி அடுத்த படத்துளையாவது த்ரிஷாவ ஜோடியா போடுங்க. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

இந்த படமும் அநாகரிகம் படமும் ஒண்ணா வருதே?..இதுல ஏதும் உள்குத்து இருக்கா?//

ஆமான்னா என்ன பண்ண போற? இல்லைன்னா என்ன பண்ண போற?

ரசிகன் said...

//வெங்கட் said... ஒரு மைனஸ் ஓட்டு போட்டு
இருக்காங்களே.. ஒருவேளை அது
நம்ம சிரிப்பு போலீஸோட தலைமை
ரசிகர் மன்ற நிர்வாகியா இருக்குமோ.? # டவுட்டு//

சே.. சே... அந்த மைனஸ் ஓட்டு போட்டது கார்த்திகாவோட அம்மா நடிகை ராதாங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாகராஜசோழன் MA said...

நிஜ வாழ்க்கையில் தான் ஒரு பொண்ணும் லவ் பண்ணல. சினிமா கதையில கூட ரமேஷ்க்கு ஆள் கிடையாதா? இதுக்கும் பேசாம கேரளாவுக்கு அடிமாடா ரமேஷ் போய்டலாம்.//

நான் ஏண்டா போகணும்? ராஸ்கல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

//நிஜ வாழ்க்கையில் தான் ஒரு பொண்ணும் லவ் பண்ணல. சினிமா கதையில கூட ரமேஷ்க்கு ஆள் கிடையாதா? இதுக்கும் பேசாம கேரளாவுக்கு அடிமாடா ரமேஷ் போய்டலாம்.//

எத்தன தடவை போறது மாமு... :))//

ஆமா கூட வந்தவன் சொல்றான்..கேளுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாகராஜசோழன் MA said...

//மாணவன் said...

//நிஜ வாழ்க்கையில் தான் ஒரு பொண்ணும் லவ் பண்ணல. சினிமா கதையில கூட ரமேஷ்க்கு ஆள் கிடையாதா? இதுக்கும் பேசாம கேரளாவுக்கு அடிமாடா ரமேஷ் போய்டலாம்.//

எத்தன தடவை போறது மாமு... :))//

அப்போ பாலிடால் குடிக்கலாம்.//

போய் குடி. நானா வேனாங்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டம்பவன குயில் said...

படம் 2 காட்சிகள் தாண்டி வெற்றிகரமாக 3வது காட்சி ஓட வாழ்த்துக்கள் சகோ.
படம் பார்த்துட்டு வெளியில் வருபவர்களுக்கு ஆளுக்கொரு எலுமிச்சை தலையில் தேய்க்க இலவசமாய் கொடுக்கப்படும் என்றும் ஒரு அறிவிப்பை வெளியிடுங்கள்.//

தெளிவா சொல்லுங்க :

படம் 2 வருடங்கள் தாண்டி வெற்றிகரமாக 3வது வருடம் ஓட வாழ்த்துக்கள் சகோ.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

காலைல வீட்ட விட்டு கெளம்பும் போதே ஆத்தா சொன்னுச்சு... பாவி நான்தான் கேக்கல... கண்ட கழிசட எல்லாம் கலர் சட்ட போட்டுக்கிட்டு வரும்...சின்ன பையன் நீ..பார்த்து பயந்துருவன்னு சொன்னுச்சு.. இந்தா பார்துட்டன்ல... இன்னிக்கு வெளங்குன மாதிரிதான்! :))
//

கண்ணாடிய பார்க்காதன்னு சொன்னா கேக்குறியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சேலம் தேவா said...

//நம்ம ரமேஷை Hero-ஆ வெச்சு
ஒரு தமிழ்படம் எடுத்தே தீருவேன்னு
பிரபல டைரக்டர் ஒருத்தர் ஒத்தை
கால்ல நிக்கறாரு..! //

பிரபல டைரக்டரா இல்ல... பல்லு போன டைரக்டரா..?! :)//

நீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சேலம் தேவா said...

//சாணி அடிக்கறதா இருந்தாலும்.,
காறி துப்பறதா இருந்தாலும்
எல்லாம் படம் ரிலீஸ் ஆனப்புறம்
தான்.. என்ன ஓ.கேவா..?!!//

வரலாறு காணாத தட்டுப்பாடு.மாட்டுப்பண்ணைகளில் அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பம்.பண்ணை உரிமையாளர்கள் மகிழ்ச்சி. :)//

என்னாம் சில பேருக்கு லாபம் என்றால் சந்தோசம் தான. ஷ் யப்பா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கல்பனா said...

ஹ ஹா ., நோ கமெண்ட்ஸ் .,

ஹீரோ ரமேஷ் சார் வாழ்க வாழ்க !!!!!!!
//

வாழ்க வாழ்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

ஹீரோ போட்டோ வ போடா சொன்னா "கிங் காங்" போட்டோவ போட்டு இருக்கு ..
//

உன் போட்டோ இங்க இல்லியே

karthikkumar said...

மாணவன் said...
வணக்கம்..

//" த்தூ..! "//

ரொம்ப நல்லாருக்கு.... த்தூ த்தூ தூ :)
copy paste :)

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// என்னாம் சில பேருக்கு லாபம்
என்றால் சந்தோசம் தான. ஷ் யப்பா //

சாணியை விக்கறதால
மாட்டு பண்ணைக்காரங்களுக்கு
லாபமெல்லாம் ஒண்ணும் இல்லையாம்..

போஸ்டர்ல உங்க மூஞ்சை பாத்து
புள்ள குட்டிங்க எல்லாம் பயந்துக்குமேன்னு
சாணியை இலவசமா தர்றாங்களாம்..

சில இடங்கள்ல மாடே வந்து உங்க
போஸ்டர் மேல சாணி அடிக்குதாம்..!

முனைவர்.இரா.குணசீலன் said...

;)))

கோமாளி செல்வா said...

போலீஸ் ராக்ஸ் :-)

கோமாளி செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யார்டா அது மைனஸ் ஓட்டு போட்டது?/நீங்க தான்.. ஹி ஹி

பெசொவி said...

ரமேஷைக் கலாய்ச்ச வெங்கட்டை VKS சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்!
இப்படிக்கு
VKS பெயரில் ரமேஷ் மட்டும்

பெசொவி said...

// என்ன கண்றாவி கதை சார் இது..? "

" இது ரமேஷை மனசுல வெச்சி தயார்
பண்ணின கதை..! "

( ம்ம்..அப்ப அது அப்படி தான் இருக்கும் )
//

வெங்கட்டை வச்சு எடுத்தா, இன்னும் கண்றாவியாக இருக்குமோ?

இப்படிக்கு
அகில உலக ரமேஷ் ரசிகர்கள் சார்பில்
சாட்சாத் ரமேஷ்தான்

பெசொவி said...

vadai

பெசொவி said...

//என்னாம் சில பேருக்கு லாபம் என்றால் சந்தோசம் தான. ஷ் யப்பா
//

நடிச்சா சில பேருக்கு லாபம், நடிக்கலைனா எல்லாருக்குமே லாபம்
இப்படிக்கு
வெங்கட்

RAMVI said...

எல்லாம் புரிந்தது. ஒன்று மட்டும் புரியவில்லை! ரமேஷை யாராவது லவ் பண்ணர்களா இல்லையா????????

drogba said...

director ஒரு ஆழ்ந்த கருத்தை சொல்ல வாறார். அதாவது நீங்க love பண்ணுற ஆளை விட உங்களை love பண்ணுற ஆளை கலியாணம் கட்டினா வாழ்க்கை சூப்பரா இருக்கும்