Tuesday, June 21, 2011

பதிவர் சந்திப்பு கதை!

முன்குறிப்பு : திருநெல்வேலி பதிவர் சந்திப்பை ரொம்ப ரொம்ப அருமையா நடத்தின திரு சங்கரலிங்கம் அவர்களுக்கும் மற்றும் கௌசல்யா , சித்ரா , பாபு ஆகியோருக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அங்கு சொன்ன கதையை இங்க பதிவிட்டிருக்கேன். படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.


எல்லோருக்கும் வணக்கம். எனக்கு இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கிறதுனே தெரியல. காரணம் என்ன விட பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இருக்கீங்க. அந்த பயம்தான். அதுவும் இல்லாம இது ஒரு மொக்க கதை. தயவு செஞ்சு கோபப்பட்டுறாதீங்க. சீக்கிரமே முடிச்சிடறேன். கூடவே இத நான் பேச்சு வழக்குல இல்லாம உரைநடை வழக்குல சொல்லப்போறேன். அது எப்படி இருக்குனு கேட்டு முடிச்சதுக்கு அப்புறம் சொல்லுங்க!

நீங்கள் இந்தப் பதிவர் சந்திப்பிற்கு மன்னிக்கவும் நண்பர்கள் சந்திப்பிற்கு வரும்போது பூனை குறுக்கே செல்லுதல் போன்ற சகுனங்கள் ஏற்ப்பட்டு அது மூட நம்பிக்கை என்று உதாசீனப்படுத்திக்கொண்டு வந்திருந்தால் நான் சொல்லப்போகும் இந்தக் கதை உங்களின் அந்த எண்ணத்தை மாற்றிவிடும்.

முதலில் உங்களுடன் சிறு கேள்வி ஒன்று இருக்கிறது. உங்களில் யாருக்கேனும் இன்று காலை சூரியன் உதித்ததிலிருது இப்பொழுதுவரை எத்தனை நாளிகைகள் ஆகியுள்ளன என்று துல்லியமாகத் தெரியுமா ? 

உங்களுக்குத் தெரியாதென்பது எனக்குத் தெரியும். உண்மையைச் சொல்லப்போனால் எனக்கும் அதுபற்றித் தெரியாது. இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் நாழிகைக் கணக்கிற்கும் நமது கதைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பதே. ஆகையினால் நாம் கதையைத் தொடரலாம். கதையின் சில இடங்களில் புயல் , மழை வருமென்பதால் எல்லோரும் தயவு செய்து உங்களது குடைகளைக் கையுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.

சுமார் 2100 வருடங்களுக்கு முன்னர் தமிழ் பீட்டர் என்றொரு குறுநில மன்னன் இருந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா ? தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் உங்களில் யாரும் 2100 வருடங்களாக வாழ்ந்துவருபவர்களாகத் தெரியவில்லை.

இருந்தாலும் நான்தான் திருவள்ளுவரின் வகுப்பாசிரியர் என்றும் நான் கணிதப்பாடம் நடத்தியதால் வெறுத்துப்போன திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்றும் உங்களில் யாரேனும் எழுந்து நின்றோ அல்லது உட்கார்ந்து கொண்டோ சொல்ல வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால் அந்த மன்னன் எனது கற்பனையில் வந்தவன் என்பதையும் கூற விழைகிறேன்!

தமிழ் மன்னனுக்கு அதுவும் 2100 ஆண்டுகளுக்கு முந்தய மன்னனுக்கு எப்படி தமிழ் பீட்டர் என்றொரு ஆங்கிலப்பெயர் வந்தது என்கிற உங்களின் சந்தேகம் நியாயமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் அதற்கான காரணத்தை நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து எழுதித் தொலைத்துவிட்டதால் மன்னிக்கவும் எழுதி கையுடனே கொண்டுவந்திருப்பதால் நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

அதிக தமிழர்கள் உள்ள இடத்தில் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசுபவரை நாம் பீட்டர் விடுறான் என்று சொல்கிறோம். அதைப்போலவே நமது மன்னர் ஒரு சமயம் அரசு வரிப்பணத்தில் வெளிநாட்டைச் சுற்றிப்பார்க்காவிட்டால் தான் மன்னராயிருப்பதற்கே தகுதியற்றவர் என்ற என்று நினைத்ததால் இங்கிலாந்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தார்.

அப்பொழுது இங்கிலாந்தில் பிறந்த இரண்டுவயதுக் குழந்தை கூட ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு வாலிபன் நமது மன்னரிடம் சில கேள்விகளைக்கேட்டன். மன்னரும் எவ்வளவோ முயன்றும் வாயில் வார்த்தைகளே வரவில்லை. அவருக்கு ஆங்கிலம் தெரியாதுதான் காரணம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஏனெனில் என் குலதெய்வத்தின் மீது சத்தியமாகச் சொல்கிறேன் நான் அவரை ஆங்கிலம் கற்க வேண்டாமெனச் சொல்லவேயில்லை. சரி கதைக்கு வருவோம்.

பதிலேதும் பேசமுடியாமல் நின்றிருந்த நம் மன்னர் திடீரென தமிழில் பேச ஆரம்பித்தார். மன்னர் பேசியது அந்த இளைஞருக்கோ அல்லது அந்த இளைஞர் பேசியது நம் மன்னருக்கோ புரியவில்லை. எனவே ஆங்கிலம் அதிகம் பேசுவோர் இருக்கும் இடத்தில் தமிழில் பேசியதால் நம் மன்னரின் பெயர் அன்றிலிருந்த தமிழ் பீட்டர் என்றானது.

மன்னரின் பெயர்க்காரணத்திற்கே இவ்வளவு நேரம் ஆகிவிட்டபடியால் விரைவில் இந்தக் கதையை முடிக்க முயற்சிக்கிறேன். சிறிது நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மன்னருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததது. அது என்ன அதிர்ச்சி என்று தெரிந்துகொள்ள சிறிய விளம்பர இடைவேளை விடலாம் என்றிருந்தேன். விளம்பரத்திற்காக நான் பட்ட இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. சில சோப்பு நிறுவனங்களிடமும், எங்கள் ஷாம்பூ போட்டு பல்லு விளக்கினால் பற்களில் கூட முடி முளைக்கும் என்று விளம்பரம் செய்யும் விளம்பரக் கம்பனிக்காரர்களிடமும் எனது கதைக்கு நீங்கள் ஸ்பான்சர் செய்யுங்கள் என்று நீண்ட நேரம் போராடினேன். பலனில்லை . அவர்கள் சொன்ன ஒரே பதில் மானாடி , மயிலாடி கெமிஸ்ட்ரி வந்தால்தான் நாங்கள் ஸ்பான்சர் செய்வோம் என்றதுதான்.

படிக்கும் காலத்திலிருந்தே நானும் கெமிஸ்ட்ரியும் ஒரே நேர்கோட்டில் ஆனால் எதிர் எதிர் திசைகளில் பயணித்ததால் அவர்கள் கேட்டது போல எனது கதையில் கெமிஸ்ட்ரி வராது என்பதால் விளம்பரம் தேடும் எனது முயற்ச்சியைக் கைவிட்டுவிட்டேன். அதே போல தொடரும் என்று போடுவதற்கு இது ஒன்று தொடர் நாடகமில்லை என்பதால் மறுபடியும் கதையைத் தொடர்கிறேன்.

நாடு திரும்பிய நம் மன்னருக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி என்னவென்றால் வெளிநாடு சென்று வந்த தினத்தன்று மன்னர் அகோரப் பசியிலிருந்தார். அதனால் அன்று பல்லுவிலக்குவதைக் கூட இரு தினங்களுக்கு ஒத்திப்போட்டுவிட்டு நாட்டில் யாருமே பல்லு விளக்கக்கூடாது என்ற சட்டத்தையும் போட்டுவிட்டு பந்தியில் அமர்ந்தார். அப்பொழுது என்னைத் தொடாதே என்றொரு சத்தம் கேட்டது. அதிர்ச்சியில் உறைந்துபோன மன்னர் அந்த சத்தம் இலையில் வைத்திருந்த பச்சியிலிருந்து வருவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்.. மன்னரின் அகோரப்பசி அந்தப் பச்சி சொல்வதைக் கேட்காமல் இரண்டு பச்சிகளை எடுத்து அப்படியே விழுங்கிவிட்டார்.

அப்பொழுது இலையிலிருந்த இன்னொரு பச்சி சொன்னது " பல்லு விளக்காமல் எங்களைச் சாப்பிட்டதால் எதிர்காலத்தில் சான்றோர்களின் முன்னிலையில், உன்னைவிட அறிவாளிகளின் முன்னிலையில்  நீ ஒரு மொக்கைக் கதை சொல்வாய் அதற்காக பயந்து நிற்பாய் " என நான் சாபம் அளிக்கிறேன் என்று வாயை மூடுவதற்குள் மன்னர் அந்தப் பச்சியை தனது வாயில் போட்டு மூடிவிட்டார்.

அந்தப் பச்சியின் சாபம் நிறைவேறாது என்று கர்வத்தில் இருந்த நமது மன்னர் சில தினங்களில் இறந்து விட்டார்.ஆனால் நல்லோரின் சாபம் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்கிற சிலப்பதிகார சொற்களை நியாபகப்படுத்த வைத்துவிட்டது இப்பொழுது! ஆம் அந்த பச்சி சொன்ன சான்றோர்கள் நீங்கள்தான் , பின்னர் அந்த மன்னர் யாரென்று நீங்களே ஒரு முடிவிற்கு  வாருங்கள்!

அதற்கு முன்னர் நான் முதலில் கூறியது போல இந்த கதையில் மழை , புயல் வராததற்குக் காரணம் நீங்கள் யாரும் குடை எடுத்துக்கொண்டு வரதாதால் மழை வந்து அதனால் நம் மன்னருக்கும் நாட்டிற்கும் ஏற்பட்ட தீமைகளால் நான்கு நாட்கள் தொடர்ந்து எழுதிய எனது கதையின் நானூற்றி ஐந்தாயிரம் பக்கங்களை உங்களுக்கு சொல்ல முடியாமல் போனது கண்டு வருந்துகிறேன். 

மேலும் முதலில் சொன்னது போல இதில் சகுனங்களை நம்புவீர்கள் என்று சொல்லியிருந்தேன். அதற்குக் காரணம் இந்தக் கதையை கேக்குறதே  கெட்ட விசயம்தானே! இப்ப சகுனத்த நம்புரீங்கள்ல :-)

பின்குறிப்பு : கதை எப்படி இருந்துச்சு அப்படிங்கிற உங்களோட கருத்துக்கள் ஆவலுடன் வரவேற்கப்படுகிறது!

34 comments:

அருண் பிரசாத் said...

ஹையோ..ஹையோ...

கோமாளி செல்வா said...

//
அருண் பிரசாத் said...
ஹையோ..ஹையோ...//அழாதீங்க னா...

மாணவன் said...

எல்லாம் சரி அங்க இந்த கதைய சொன்னப்ப யாரும் அழலியே.... :))

பட் கதை நல்லாருக்கு செல்வா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னமோ நடக்குது.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தக் கதைய சொல்லி காலியாகுன விக்கட்டுகள் ஏத்தனை?

இராஜராஜேஸ்வரி said...

மழை வந்ததா?

கோமாளி செல்வா said...

/// மாணவன் said...
எல்லாம் சரி அங்க இந்த கதைய சொன்னப்ப யாரும் அழலியே.... :))

பட் கதை நல்லாருக்கு செல்வா...//யாரும் அழலைன்னு தான் நினைக்கிறேன்.. ஹி ஹி

கோமாளி செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்தக் கதைய சொல்லி காலியாகுன விக்கட்டுகள் ஏத்தனை?//அதெல்லாம் ஒண்ணும் ஆகல னா...

கோமாளி செல்வா said...

// இராஜராஜேஸ்வரி said...
மழை வந்ததா?

//

வரலைங்க :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவர் சந்திப்புன்னா திருநெல்வேலி சந்திப்பு மாதிரி அதுவும் ஒரு ரயில்வே டேசனா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாபுவுக்கு பேதில போன காரணம் விளங்கிடுச்சு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெரர் கும்மிக்கு என்னோவோ ஆச்சுடோய். தினமும் பதிவு போடுரானுகடோய்

கோமாளி செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிவர் சந்திப்புன்னா திருநெல்வேலி சந்திப்பு மாதிரி அதுவும் ஒரு ரயில்வே டேசனா?

//

இல்ல அது ஒரு கப்பல் சந்திப்புனா :-)

கோமாளி செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பாபுவுக்கு பேதில போன காரணம் விளங்கிடுச்சு

//

இப்பவாச்சும் விளங்குச்சே ..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

haa..haa..haaa..

இம்சைஅரசன் பாபு.. said...

டேய் ஒருதடவ கேட்டதுக்கே ..நிக்காம ரெண்டுநாள் போச்சு ..மறுபடியுமா ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இவனை குற்றாலத்துலையே விட்டுட்டு வந்திருக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இரு பதிவ படிச்சிட்டு வரேன்

கோமாளி செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இவனை குற்றாலத்துலையே விட்டுட்டு வந்திருக்கலாம்//அங்க ஒரு கதை சொல்லிருப்பேன் ...

Madhavan Srinivasagopalan said...

இரண்டரை நாழிகை என்பது ஒரு மணி நேரம்.
சூரிய உதயத்துடன் முதலாவது நாழிகை ஆரம்பமாகும்.
உதாரணமாக ஆறு மணிக்கு சூரிய உதயம் எனக் கொண்டால்..
காலை பத்து மணியுடன் பத்து நாழிகை முடிந்து போகும்.
ஒரு நாளைக்கு 24 மணி நேரமாதலால், நாள் ஒன்றிக்கு 60 நாழிகை இருக்கும்.

இப்ப மணி -- இந்திய நேரப்படி..மாலை நாலு : நாற்பது -- இன்றைக்கு சூரிய உதயம் ஐந்து மணி நாற்பது நிமிடங்கள்.. எனவே.. தற்சமயம் 27.5 நாழிகைகள் முடிந்துள்ளது.

koodal bala said...

ஹி ......ஹி ......

கோமாளி செல்வா said...

//இப்ப மணி -- இந்திய நேரப்படி..மாலை நாலு : நாற்பது -- இன்றைக்கு சூரிய உதயம் ஐந்து மணி நாற்பது நிமிடங்கள்.. எனவே.. தற்சமயம் 27.5 நாழிகைகள் முடிந்துள்ளது.//

நீங்க கணக்குல புலியோ ?

ஷர்புதீன் said...

அதெல்லாம் சரி ., கதைய எங்கே

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

:))

வெங்கட் said...

கதை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு..
பல இடங்களில் சபாஷ் போட
வைத்தாய் செல்வா..

கடம்பவன குயில் said...

ஓ...அதான் குற்றாலம் போய் குளிச்சும் பைத்தியம் தெளியாமல் நம்ம பதிவர்கள் அலயுறாங்களா???

FOOD said...

சில பேரை குற்றாலத்திற்கு கூட்டிட்டு போய்,தெளியற வரை அங்கேயே விட்டுட்டு வருவது வழக்கம். நீங்களும் கூட ஒருத்தரைக் கூட்டிட்டுப் போனதா சொன்னாங்களே!

FOOD said...

கதையை அன்றும் ரசித்தேன், இன்றும்தான்.

MANO நாஞ்சில் மனோ said...

டேய் டேய் அண்ணனை ஒத்தைக்கு உட்டுட்டு ஒடுனியே அதையும் சொல்லுடா டுபுக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

நெல்லையில இருந்து தென்காசி வரை உறங்கிட்டே வந்த டக்கால்டி ராஸ்கல்....

MANO நாஞ்சில் மனோ said...

உன்னை பார்க்க எழுகடல் கடல் தாண்டி வந்த என்கிட்டேயே உறக்கம் காட்டி என்னை ஏமாத்திட்டியே, நல்லா இருடே மக்கா.....

சிநேகிதன் அக்பர் said...

சூப்பர் பாஸ். உட்காந்து யோசிச்சிங்க போல :)

Rathnavel said...

நல்ல பதிவு.
உங்கள் பேச்சை ரசித்தோம்.
சிபி சொன்னது போல் எழுத்துலகில் நன்கு முன்னேற வாழ்த்துக்கள்.

cho visiri said...

Good at narration.

Enjoyed the story. Well wishes to you,dear.