Wednesday, June 22, 2011

சின்னஞ்சிறு செல்வா.....!

நாம இன்னைக்கு செல்வாவோட சின்ன வயசு அனுபவங்களை பார்க்கப்போறோம்! ரெடியா?


செல்வா அவங்கப்பாவோட வாட்சை உடைச்சிட்டாரு ஆனா உண்மையை ஒத்துக்கவே இல்ல. அதனால செல்வாவுக்கு புரிய வைக்கனும்னு கதை சொன்னாரு, “செல்வா, ஜார்ஜ் வாஷிங்டன் அவர் அப்பாவோட மரத்தை வெட்டிட்டாரு, ஆனா அந்த உண்மையை ஒத்துகிட்டாரு. அவங்கப்பாவும் அவரை தண்டிக்கலை.. ஏன் தெரியுதா?”
“ஆங்…அவர் கையில இன்னுமும் கோடாலி இருக்குல்ல!!”

செல்வா அவங்க வீட்டு சுவத்துல படம் வரைஞ்சுகிட்டு இருந்தார். அவங்கம்மா கோபமா ”டேய் என்னடா சுவத்துலயா வரைவாய்?”னு கோபமா கேட்டாங்க.
அதுக்கு செல்வா கேட்டார், “அம்மா நீதானே இது டிராயிங் ரூமுன்னு சொன்னேன்”

டீச்சர்: செல்வா உன் உடம்பில எத்தனை எலும்புங்க இருக்கு?
செல்வா: 208
டீச்சர்: தப்பு, 207தான்.
செல்வா: ஆமா டீச்சர், ஆனா நான் மத்தியானம் லஞ்ச்ல ஒரு கோழிக் காலை முழுங்கிட்டேன்.

அப்பா எனக்கு ஐஸ்கிரீம் வேணும்
செல்வா குளிர்காலத்துல அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாதுப்பா
அப்படின்னா நான் அதை சூடு பண்ணி சாப்பிடறேன்

செல்வா என்ன ஹோம்வொர்க் உங்கப்பா கையெழுத்துல இருக்கு?
நான் எங்கப்பா பேனா யூஸ் பண்ணேன் மிஸ்

”டேய் விஜய் சனிக்கிழமை எங்க வீட்ல பார்ட்டி இருக்கு அதுக்கு வருவியா?”
”வரேண்டா செல்வா உங்க வீட்டு அட்ரஸ் சொல்லு”
”நம்பர் 5 காமராஜர் வீதி- அங்க வந்து கதவை தலையால தட்டு”
”ஏண்டா என் கையில தட்டுனா என்ன?”
”டேய் நீ என்ன வெறுங்கையோடவா வரபோற?”
”!!!”

"ஏண்டா நேத்து ஸ்கூலுக்கு வரலை"
"கை உடைஞ்சிடுச்சு சார்"
"எப்படிடா கை உடைஞ்சது"
"டாக்டர் பிரிஸ்கிரிஸ்ப்சனை ஃபாலோ பண்ண சொன்னார் அதை செஞ்சேன் சார்"
"அப்புறம் ஏண்டா கை உடைஞ்சது"
"பிரிஸ்கிரிஸ்ப்சனை ஜன்னல் வழியா பறந்துச்சு அதை ஃபாலோ பண்ணேன்."

டீச்சர்: அக்பர் எவ்வளவு காலம் ஆட்சி செய்தார்?
செல்வா: 14ஆம் பக்கத்தில இருந்து 25ஆம் பக்கம் வரைக்கும் சார்!

“டேய் செல்வா அது என்ன நாய்டா?”
”அது போலீஸ் நாய்”
“பார்த்தா அப்படி தெரியலியே”
”அது ரகசிய போலீஸ்”

”டேய் நான் நேத்து அஞ்சு ஈயை சாவடிச்சேன் அதுல 3 ஆம்பள ஈ, 2 பொம்பள ஈ”
”எப்படி ஆம்பள ஈ பொம்பள ஈன்னு கண்டுபுடிச்சே?”
“அது ரொம்ப ஈஸி. 3 ஈ சேவிங் மிஷின் மேல உட்கார்ந்து இருந்தது, 2 லிப்ஸ்டிக் மேல உட்கார்ந்து இருந்தது”

கணக்கு கிளாஸ்ல செல்வா பாடத்தை கவனிக்காம இருந்தார். உடனே டீச்சர் கோபமாகி, “செல்வா! 4, 9, 16, 25 –ன்னா என்ன?
செல்வா உடனே வேகமா பதில் சொன்னார், “டிஸ்கவரி, சன்மியூசிக், போகோ அப்புறம் டென்ஸ்போர்ட்ஸ்!”

”டேய் எங்கடா போறே?”
”டீவி பார்க்க போறேம்மா”
”சரி ரொம்ப பக்கத்துல போய் பார்க்காதே”
அப்போ செல்வா அண்ணன் வெளியே போனான்.
”டேய் அண்ணா எங்கடா போறே?”
”சந்திர கிரகணம் பார்க்க போறேன்”
”சரி ரொம்ப பக்கத்துல போய் பார்க்காதே”

செல்வா வீட்டிற்கு வெளியே நாய் கூட விளையாடிக் கொண்டிருந்தார். அப்போ தபால்காரர் வந்தார். அங்க நாய் இருப்பதை பார்த்துட்டு கேட்டார்
”தம்பி உன் நாய் கடிக்குமா?”
“இல்லை கடிக்காது”
ஆனால் தபால்காரர் காம்பவுண்டிற்குள் வந்தபோது நாய் கடித்து விட்டது
“ஏம்பா உன் நாய் கடிக்காதுன்னு சொன்னியே?”
“ஆமா என் நாய் கடிக்காதுதான், ஆனா இது என் நாய் இல்லையே”

22 comments:

Madhavan Srinivasagopalan said...

ROFL..

Madhavan Srinivasagopalan said...

25 - டென் ஸ்போர்ட்ஸ்னா, 50 ட்வென்டி ஸ்போர்ட்ஸா ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super jokes

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kalakkal jokes

கோமாளி செல்வா said...

வாய்ப்பே இல்ல அண்ணா :-) இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்! ஒவ்வொரு ஜோக்கும் கலக்கல்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

“டேய் செல்வா அது என்ன நாய்டா?”
”அது போலீஸ் நாய்”
“பார்த்தா அப்படி தெரியலியே”
”அது ரகசிய போலீஸ்”//

என்னை அவமான படுத்திய எஸ்.கே வை கண்டிக்கிறேன்

கோமாளி செல்வா said...

//என்னை அவமான படுத்திய எஸ்.கே வை கண்டிக்கிறேன்
//

ஏன் சிரிப்பு போலீசுனு போடாததாலய னா ?

Madhavan Srinivasagopalan said...

"ஏண்டா நேத்து ஸ்கூலுக்கு வரலை"
"கால் உடைஞ்சிடுச்சு சார்"
"எப்படிடா கால் உடைஞ்சது"
"ஈரமா இருந்த 'பேண்டு' மொட்டை மாடில காய வெச்சப்ப கீழ விழுந்திடிச்சு.. சார்"
"அப்புறம் ஏண்டா கால் உடைஞ்சது"
"'பேன்ட்' விழுந்தப்ப, அதை நான் போட்டிருந்தேன் சார்..
"

Selva rocks again.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா ஒரு அறிவாளி

Madhavan Srinivasagopalan said...

// என்னை அவமான படுத்திய எஸ்.கே வை கண்டிக்கிறேன் //

அவருதான் அவமானப் படுத்தினாரு.. உங்களுக்கு புத்தி இல்லையா ?
நீங்களாவது அவமானப் படாம புத்திசாலித் தனமா ஏதாவது செஞ்சிருக்கலாமே..

கோமாளி செல்வா said...

//"'பேன்ட்' விழுந்தப்ப, அதை நான் போட்டிருந்தேன் சார்..//

ஐயோ எல்லோருமே இப்படி ஆகிட்டாங்களே :-)

karthikkumar said...

SUPER SK.. :)

Madhavan Srinivasagopalan said...

//ஐயோ எல்லோருமே இப்படி ஆகிட்டாங்களே :-)//

ஆக்கிப்புட்டு பேச்சைப் பாரு.. ராஸ்கல்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
“டேய் செல்வா அது என்ன நாய்டா?”
”அது போலீஸ் நாய்”
“பார்த்தா அப்படி தெரியலியே”
”அது ரகசிய போலீஸ்”//

என்னை அவமான படுத்திய எஸ்.கே வை கண்டிக்கிறேன்////////

அப்போ அந்த நாய் சிரிப்பு போலீஸ் நாயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ROFL..............

வைகை said...

அப்போ அந்த நாய் சிரிப்பு போலீஸ் நாயா?//

என்னது?சிரிப்பு போலிசு............. நாயா?

வைகை said...

சூப்பர் எஸ்.கே... பஸ்ல தன்னால சிரிசிகிட்டு வந்தேன் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
அப்போ அந்த நாய் சிரிப்பு போலீஸ் நாயா?//

என்னது?சிரிப்பு போலிசு............. நாயா?
////////

அது பேண்ட் போடுமா?

Madhavan Srinivasagopalan said...

//அது பேண்ட் போடுமா? //

பேண்டு புடும்..

siva said...

simply super....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

சூப்பர் எஸ்.கே... பஸ்ல தன்னால சிரிசிகிட்டு வந்தேன் :))//

நாங்க என்ன ஆள் வச்சா சிரிக்கிறோம். ராஸ்கல்