Monday, June 20, 2011

டெரர் கும்மி அவார்டுகள்...!

கொஞ்ச நாளா யாருக்கும் பாராட்டு விழா நடக்காம..விருது கொடுக்காம ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமே இல்லாம போய்க்கிட்டு இருக்கு! அந்த  குறைய  போக்குறதுக்கு நம்ம டெரர் கும்மில உள்ள ஒவ்வொருத்தருக்கும் நாமலே விருது கொடுத்து சந்தோசப்படுதுவோம்.. இந்த விழாவுல நமீதா குத்தாட்டம் வேணும்னா நம்ம பன்னிய கேளுங்க.. கலாக்கா மாஸ்டரா இருக்கணும்னா நம்ம போலிச கேளுங்க.. ஏன்னா அவங்களோட கால்சீட்..கைசீட் எல்லாமே இப்ப இவங்க கைலதான் இருக்கு! சரி..என்னென்ன விருதுன்னு பார்ப்போம்...

ஓசிச்சோறு உலகநாதன்
உலகமே அழிஞ்சாலும் ஒசிச்சோறே லட்சியமா வச்சு வாழ்ந்து கொண்டிருக்கும் இவரைத்தவிர யாருக்கும் இந்த விருது பொருத்தமானதாக இருக்காது... இன்னும் உங்களுக்கு யாருன்னு தெரியலையா? அவருதான் சிரிப்பு போலிஸ் ரமேஷ்..

கக்கூஸ் காட்டு இதிகாசம்
இவருடைய பதிவுகளில் யாருமே சொல்லதயங்கும் கக்கூசின் மறுபக்கங்களை மக்கள் மனதுகளில் பதிய வைக்கும் முயற்சிகளுக்காக இவருடைய பதிவுகளுக்கு இந்த விருது வழங்க படுகிறது.. பலத்த கைதட்டல்களுக்கு இடையே நம் பன்னிகுட்டியை விருது வாங்க அழைக்கிறேன்!

பேரு வைய்யி பேதி ஆய்ருவாய்ங்க
தெனாலி கமல் மாதிரி அம்மாஞ்சியா இருந்துகிட்டு..பேரு என்னமோ இந்தியன் தாத்தா ரேஞ்சுக்கு டெரரா வச்சிக்கிட்டு பல பேர்கள திகில் ஆக்கி  வைத்திருக்கும்  டெரர் பாண்டியனுக்கு இந்த விருதை டெரரா கொடுக்கிறோம்!

பவரே இல்லைனாலும் பல்பு வாங்கு
ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் கரண்டு போனாலும் இருபத்தி நாலு மணிநேரமும் மகளிடம் பல்புகளை வாங்கி குவிக்கும் இம்சைஅரசன் அவர்களுக்கு இந்த விருதை அவருக்கு இம்சை இல்லாமல் கொடுக்கிறோம்!

புதிர்போடு புடிங்கிட்டுபோகும்
இந்த விருது..பதிவு போடறேன்னு சொல்லிக்கிட்டு புதிர் போட்டு படிக்கிறவங்களுக்கு பேதி ஆக்கி ஓட வைக்கிற மொரீசியசின் மொதலாளி அருண்பிரசாத் அவர்களுக்கு செல்கிறது!

நல்லா சொல்றான்யா டீடேய்லு
இந்த விருது.. வானம் வசப்படும்..மேகம் வசப்ப்படும்னு சொல்லிக்கிட்டு அவங்களுக்கே தெரியாத தகவல்கள கூட புள்ளிவிவரமா சொல்லும் மாணவனுக்கு வசமாக செல்கிறது!

ஒண்ணுமே இல்ல ஒலகநாதா
அஞ்சு அன்லிமிடெட் மீல்ஸ ஒண்ணா சாப்டர அளவுக்கு உடம்ப வச்சுகிட்டு பேரு மட்டும் வெறும்பயன்னு வச்சு சுத்திகிட்டு திரியும் வெரும்பயளுக்கு இந்த விருது கணமாக செல்கிறது!

லைக் போடு கொண்டாடு
இந்த விருது.. பதிவும் போடாம..பஸ்சும் விடாம போற போக்குல எல்லா பஸ்சுக்கும் லைக் போட்டு போய் கொண்டிருக்கும் முறைமாமன் கார்த்திக்குக்கு லைக் பண்ணி கொடுக்கிறோம்!

காட்டேரி கணக்கா கத சொல்லு
கதை சொல்றேன்கிற பேர்ல போற வர்றவன புடிச்சு வலுக்கட்டாயமா ரத்தம் குடிக்கும் கோமாளி செல்வாவிற்கு இந்த விருதை கதை அடிக்காமல் கொடுக்கிறோம்!

டாஸ்மாக் டமிலன் டண்டணக்கா
இருவத்தினாலு மணி நேரத்தில் இருபத்தாறு மணி நேரம் போதையில் இருக்கும் நம்ம மாலுமிக்கு இந்த விருதை ஆடாமல் அசையாமல் கொடுக்கின்றோம்!

போன் பண்ணு நம்பர் கேளு
போலிசுக்கு அடிக்கடி போன் பண்ணி என் போன் நம்பர் எனக்கே மறந்துபோச்சு.. என் நம்பர் எனக்கு வேணும்னு போலிசை டரியல் ஆக்கும் பனங்காட்டு நரிக்கு இந்த விருதை போனிலே கொடுக்கிறோம்!

ஊர சுத்து உருப்படாம போ
அப்பப்ப எதாவது ஊர சுத்திட்டு வந்து பத்து பதிவ தேத்திட்டு... பத்துமாதம் பதிவு பக்கமே வராம இருக்கும் சுற்றுலா விரும்பி அருணுக்கு இந்த விருதை சுத்தி சுத்தி கொடுப்போம்!

நவீன யுகத்தின் நக்கீரர்
தருதலைங்க போட்ற கமென்ட்ட கூட அழகா தமிழ்படுத்தி பிரித்து வைத்து அதில் உள்ள பொருளை தறுதலைகளுக்கு எடுத்துரைக்கும் மண்ணை மைந்தன் மாதவன் அவர்களுக்கு இந்த விருதை தமிழின் பால்( நோ அமலாபால்!) வழங்குகிறோம்!

கணக்கு போட்டா கமென்ட காணும்
பதிவுல கணக்கு போடறேன்னு சொல்லி வழக்கமா கமென்ட் போடற ஆளுகள கூட அந்த பக்கம் வரவிடாம கணக்கு பண்ணும் அண்ணன் பெ.சொ.வி அவர்களுக்கு இந்த விருதை கணக்கே பண்ணாமல் கொடுக்கிறோம்!

பாம்புகளுக்கு நடுவுல பாவம்யா
அந்த பக்கம் டெரர் கும்மி இந்த பக்கம் பொறுக்கி என விஷப்பாம்புகளுக்கு இடையில் வாழ்ந்துகொண்டு அவைகளுக்கு அப்பப்ப பாலும் ஊத்திக்கொண்டிருக்கும் எஸ்.கே அவர்களுக்கு இந்த விருதை பாவப்படாமல் வழங்குகிறோம்!

என்னங்கடா பண்ணுறீங்க       சீக்கிரமா போகனும்...!

 
இப்ப சந்தோசமா?
டெரர் கும்மிக்காக
வைகை

இரண்டாம் பாகம் விரைவில்......!

62 comments:

மாணவன் said...

1st award.... :)

பெசொவி said...

ROFL

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாய்... எனக்குத்தான் அவார்டுனாலே ஆகாதுன்னு தெரியுமில்ல? படுவா எல்லாப்பயலையும் தொலச்சி புடுவேன் தொலச்சி ராஸ்கல்ஸ்.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இந்த விழாவுல நமீதா குத்தாட்டம் வேணும்னா நம்ம பன்னிய கேளுங்க.. ////////

அந்த காண்ட்ராக்ட் இப்போ சிபி எடுத்திருக்கார்.......!

Madhavan Srinivasagopalan said...

நவீனயுக நக்கீரர்.. வாழ்க.. வாழ்க..

மாணவன் said...

விருது வழங்கும் விழாவில் எங்கள் தலைவர் சிங்கையின் சிங்கம் பட்டாபட்டிக்கு அவார்ட் வழங்காததை சிங்கப்பூர் மாவட்டம் கிழக்கு வட்டத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// கலாக்கா மாஸ்டரா இருக்கணும்னா நம்ம போலிச கேளுங்க.. ////////

இது ஒண்ணுதான்யா உருப்படியா பண்றான் இந்தாளு..........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////Madhavan Srinivasagopalan said...
நவீனயுக நக்கீரர்.. வாழ்க.. வாழ்க..
////////

தன்னைத்தானே வாழ்த்திக் கொண்ட தானைத்தலைவன் வாழ்க.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மாணவன் said...
விருது வழங்கும் விழாவில் எங்கள் தலைவர் சிங்கையின் சிங்கம் பட்டாபட்டிக்கு அவார்ட் வழங்காததை சிங்கப்பூர் மாவட்டம் கிழக்கு வட்டத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.... :))
///////

அதான் எனக்கு கொடுத்திட்டாங்கள்ல? நான் வேற அவர் வேறயா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இங்க கமென்ட் போட்டா சாப்பாடு தருவீங்களா?

Madhavan Srinivasagopalan said...

//தன்னைத்தானே வாழ்த்திக் கொண்ட தானைத்தலைவன் வாழ்க.........//

தன்னைத்தானே வாழ்த்திக் கொண்ட ஆளையும், வாழ்த்திய பன்னியாரும் வாழ்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இங்க கமென்ட் போட்டா சாப்பாடு தருவீங்களா?////////

இப்பத்தான் பக்கத்து தெருவுல இருக்க கல்யாண மண்டபத்துல உன்ன யாரோ பாத்ததா சொன்னாங்க? பந்தில இடம் கிடைக்கலியா? ஏன் குப்பத்தொட்டில கூடவா இல்ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புதிர்போடு புடிங்கிட்டுபோகும்//

யாருக்கு புடிங்கிட்டுபோகும்?

Madhavan Srinivasagopalan said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இங்க கமென்ட் போட்டா சாப்பாடு தருவீங்களா? //

இங்கு அவார்டு மட்டுமே போடப்படும் (தரப்படும்)
சாப்பாடு அல்ல என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்வீர்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஓசிச்சோறு உலகநாதன்உலகமே அழிஞ்சாலும் ஒசிச்சோறே லட்சியமா வச்சு வாழ்ந்து கொண்டிருக்கும் இவரைத்தவிர யாருக்கும் இந்த விருது பொருத்தமானதாக இருக்காது... இன்னும் உங்களுக்கு யாருன்னு தெரியலையா? அவருதான் சிரிப்பு போலிஸ் ரமேஷ்..////////

இதற்காகவே சிட்டியில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களின் ஆறு மாத ஷெட்யூலையும் கையில் எப்போதும் தயாராக வைத்திருக்கிறார். அவரது கடமை உணர்ச்சியை பாராட்டுவோம்......!

வெங்கட் said...

அவார்டா..., எனக்கெதுக்கு அவார்டு..?
சரி., சரி குடுங்க.. அட நான் இங்க
நிக்கறேன்.. அங்கே எங்கே போறீங்க S.K..

ஓ.. அது அவங்களுக்கா...
எனக்கில்லையா.. ( கர்ர்ர்ர் )

நீங்க அவங்களுக்கே குடுங்க..
எனக்கு வேணாம்... நாம இந்த
மாதிரி எத்தனை அவார்டு
வாங்கியிருப்போம்... அவ்வ்வ்வ்வ்..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இங்க கமென்ட் போட்டா சாப்பாடு தருவீங்களா?////////

இப்பத்தான் பக்கத்து தெருவுல இருக்க கல்யாண மண்டபத்துல உன்ன யாரோ பாத்ததா சொன்னாங்க? பந்தில இடம் கிடைக்கலியா? ஏன் குப்பத்தொட்டில கூடவா இல்ல?//

எனக்கு முன்னாடி வந்து எல்லாத்தையும் தின்னுபுட்டு பேச்ச பாரு ராஸ்கல்

Madhavan Srinivasagopalan said...

// இதற்காகவே சிட்டியில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களின் ஆறு மாத ஷெட்யூலையும் கையில் எப்போதும் தயாராக வைத்திருக்கிறார். அவரது கடமை உணர்ச்சியை பாராட்டுவோம்......!//

'பாய்ஸ்' பட செந்தில் மாதிரி ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...அவார்டா..., எனக்கெதுக்கு அவார்டு..?
சரி., சரி குடுங்க.. அட நான் இங்க
நிக்கறேன்.. அங்கே எங்கே போறீங்க S.K..//

போஸ்ட் போட்டது வைகை,. இன்னுமா போதை தெளியல?

வெங்கட் said...

டெரர் கும்மியில் Silent Member-ஆக
ரொம்ப Silent-ஆக இருக்கும் எனக்கு
எந்த Award-ம் குடுக்காத S.K வை
வன்மையாக கண்டித்து.. இன்று முதல்
ரமேஷ் சொந்த காசில் சாப்பிடும்
போராட்டம் ஆரம்பிக்க போகிறார்..

Madhavan Srinivasagopalan said...

@ Venkat
அவார்ட் தந்தது 'வைகை',
எஸ்.கே அல்ல.. என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெங்கட் said...
டெரர் கும்மியில் Silent Member-ஆக
ரொம்ப Silent-ஆக இருக்கும் எனக்கு
எந்த Award-ம் குடுக்காத S.K வை
வன்மையாக கண்டித்து.. இன்று முதல்
ரமேஷ் சொந்த காசில் சாப்பிடும்
போராட்டம் ஆரம்பிக்க போகிறார்..
//////////

யோவ் தொடரும் போட்டிருக்கு பாக்கலியா? உங்களுக்குலாம் பார்ட்-2 வுலதான் சீட் கொடுத்திருக்கோம்......

வெங்கட் said...

// டெரர் கும்மி அவார்டுகள்...!
posted by எஸ்.கே //

இப்படிதானே எனக்கு Dashboard-ல
வந்தது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

டெரர் கும்மியில் Silent Member-ஆக
ரொம்ப Silent-ஆக இருக்கும் எனக்கு
எந்த Award-ம் குடுக்காத S.K வை
வன்மையாக கண்டித்து.. இன்று முதல்
ரமேஷ் சொந்த காசில் சாப்பிடும்
போராட்டம் ஆரம்பிக்க போகிறார்..//

யாரோட சொந்த காசில்?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////இந்த விழாவுல நமீதா குத்தாட்டம் வேணும்னா நம்ம பன்னிய கேளுங்க.. ////////

அந்த காண்ட்ராக்ட் இப்போ சிபி எடுத்திருக்கார்.......!//

சிபி இதையும் விடலியா?

வைகை said...

மாணவன் said...
விருது வழங்கும் விழாவில் எங்கள் தலைவர் சிங்கையின் சிங்கம் பட்டாபட்டிக்கு அவார்ட் வழங்காததை சிங்கப்பூர் மாவட்டம் கிழக்கு வட்டத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.... :))//

இதுக்குனே வர்றாங்கையா..நல்லா கெளப்புங்க பீதிய :))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////Madhavan Srinivasagopalan said...
நவீனயுக நக்கீரர்.. வாழ்க.. வாழ்க..
////////

தன்னைத்தானே வாழ்த்திக் கொண்ட தானைத்தலைவன் வாழ்க........//

தானை தலைவனை வாழ்த்திய பன்னியும் வாழ்க :))

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// யோவ் தொடரும் போட்டிருக்கு
பாக்கலியா? உங்களுக்குலாம் பார்ட்-2 வுலதான்
சீட் கொடுத்திருக்கோம்...... //

ஹி., ஹி., ஹி.. சரியா கவனிக்கலை..

அதுலயும் வரலன்னா.. அப்புறம்
வெட்கத்தை விட்டு, மானத்தை விட்டு
கெஞ்சி கேப்போம்.. Be Careful..!

தினேஷ்குமார் said...

தப்பிச்சோம் டா சாமி .....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// யோவ் தொடரும் போட்டிருக்கு
பாக்கலியா? உங்களுக்குலாம் பார்ட்-2 வுலதான்
சீட் கொடுத்திருக்கோம்...... //

ஹி., ஹி., ஹி.. சரியா கவனிக்கலை..

அதுலயும் வரலன்னா.. அப்புறம்
வெட்கத்தை விட்டு, மானத்தை விட்டு
கெஞ்சி கேப்போம்.. Be Careful..!///

மானமெல்லாம் இருக்கா உங்களுக்கு?

வைகை said...

வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// யோவ் தொடரும் போட்டிருக்கு
பாக்கலியா? உங்களுக்குலாம் பார்ட்-2 வுலதான்
சீட் கொடுத்திருக்கோம்...... //

ஹி., ஹி., ஹி.. சரியா கவனிக்கலை..

அதுலயும் வரலன்னா.. அப்புறம்
வெட்கத்தை விட்டு, மானத்தை விட்டு
கெஞ்சி கேப்போம்.. Be Careful..!//


ரமேசுடன் பழகுவதை குறைத்துக்கொள்ளவும்.. இல்லையென்றால் இதுபோல கவனக்குறைவுகள் தொடர வாய்ப்புள்ளது.. :)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தினேஷ்குமார் said...
தப்பிச்சோம் டா சாமி .....//////

தம்பி கீழ பார்க்கலியா? பார்ட்-2 எதுக்கு?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// யோவ் தொடரும் போட்டிருக்கு
பாக்கலியா? உங்களுக்குலாம் பார்ட்-2 வுலதான்
சீட் கொடுத்திருக்கோம்...... //

ஹி., ஹி., ஹி.. சரியா கவனிக்கலை..

அதுலயும் வரலன்னா.. அப்புறம்
வெட்கத்தை விட்டு, மானத்தை விட்டு
கெஞ்சி கேப்போம்.. Be Careful..!///

மானமெல்லாம் இருக்கா உங்களுக்கு?//

ஏன்னா இவருக்கு இல்லையாம் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...
This comment has been removed by the author.
வைகை said...

தினேஷ்குமார் said...
தப்பிச்சோம் டா சாமி .....//

எத்தன நாளைக்கு? அடுத்து உங்களுக்குதான்டியோ :))

வைகை said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// யோவ் தொடரும் போட்டிருக்கு
பாக்கலியா? உங்களுக்குலாம் பார்ட்-2 வுலதான்
சீட் கொடுத்திருக்கோம்...... //

ஹி., ஹி., ஹி.. சரியா கவனிக்கலை..

அதுலயும் வரலன்னா.. அப்புறம்
வெட்கத்தை விட்டு, மானத்தை விட்டு
கெஞ்சி கேப்போம்.. Be Careful..!//


ரமேசுடன் பழகுவதை குறைத்துக்கொள்ளவும்.. இல்லையென்றால் இதுபோல கவனக்குறைவுகள் தொடர வாய்ப்புள்ளது.. :)))
////////

அப்படின்னா ரமேசுக்கு யாரு சேலத்துல வாராவாரம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குறது?

தினேஷ்குமார் said...

சரி சரி கவுண்டரே ஒரு குவாட்டர் கிடைக்குமா ... சைடிஸ் ரெடியா இருக்கு குவாட்டர் மட்டும் ரெடிப்பன்னுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தினேஷ்குமார் said...
சரி சரி கவுண்டரே ஒரு குவாட்டர் கிடைக்குமா ... சைடிஸ் ரெடியா இருக்கு குவாட்டர் மட்டும் ரெடிப்பன்னுங்க
/////////

என்ன சைட்டிஸ்?

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////தினேஷ்குமார் said...
சரி சரி கவுண்டரே ஒரு குவாட்டர் கிடைக்குமா ... சைடிஸ் ரெடியா இருக்கு குவாட்டர் மட்டும் ரெடிப்பன்னுங்க
/////////

என்ன சைட்டிஸ்?

நரி லிவர் ப்ரை வித் லெமன் பிக்கில்

Madhavan Srinivasagopalan said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said..."....
//"ரமேஷ் சொந்த காசில் சாப்பிடும் போராட்டம் ஆரம்பிக்க போகிறார்.."//

"யாரோட சொந்த காசில்?" ////


Good Question, Ramesh.

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரமேசுடன் பழகுவதை குறைத்துக்கொள்ளவும்.. இல்லையென்றால் இதுபோல கவனக்குறைவுகள் தொடர வாய்ப்புள்ளது.. :)))
////////

அப்படின்னா ரமேசுக்கு யாரு சேலத்துல வாராவாரம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குறது//

வாரா வாரம் போற அளவுக்கு என்ன இருக்கு அங்க?.. அதான் பீஸ் போச்சே?

கோமாளி செல்வா said...

இன்னிக்கு போய் மறுபடியும் கதை எழுதிட்டு வரேன்.. ஹி ஹி.. இப்படி சொன்னதுக்கு அப்புறமும் கதை எழுதலைனா நல்லா இருக்காது .:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரமேசுடன் பழகுவதை குறைத்துக்கொள்ளவும்.. இல்லையென்றால் இதுபோல கவனக்குறைவுகள் தொடர வாய்ப்புள்ளது.. :)))
////////

அப்படின்னா ரமேசுக்கு யாரு சேலத்துல வாராவாரம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குறது//

வாரா வாரம் போற அளவுக்கு என்ன இருக்கு அங்க?.. அதான் பீஸ் போச்சே?
//////////

இல்ல டாகுடருக்கு பீஸ் பாக்கி இருக்காம் அதுனால வாரா வாரம் அங்க போய்யி.........

karthikkumar said...

விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள் :) குறிப்பா எஸ்கே அவர்களுக்கு, இத்தனை பொறுக்கிகளுக்கு நடுவில் அசராமல் இருப்பதால் :)

karthikkumar said...

கார்த்திக் அவர்கள் இந்த பதிவுலகத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். தான் பதிவு போடாவிட்டாலும் பஸ் போடாவிட்டாலும் மற்றவர்களை ஊக்கபடுத்தி அவர்களை மெருகேற செய்வதில் வல்லவர். கார்த்திக் அவர்களுக்கு ஸ்பெசலா ஒரு வாழ்த்துகள் :)

karthikkumar said...

ஒண்ணுமே இல்ல ஒலகநாதாஅஞ்சு அன்லிமிடெட் மீல்ஸ ஒண்ணா சாப்டர அளவுக்கு உடம்ப வச்சுகிட்டு பேரு மட்டும் வெறும்பயன்னு வச்சு சுத்திகிட்டு திரியும் வெரும்பயளுக்கு இந்த விருது கணமாக செல்கிறது!///

@ VAIGAI ROFL:)

TERROR-PANDIYAN(VAS) said...

இவனுங்களே அவர்டு கொடுத்து இவனுங்களே கமெண்ட், ஓட்டு போட்டுகரானுங்க.. தூ... :)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கக்கூஸ் காட்டு இதிகாசம்இவருடைய பதிவுகளில் யாருமே சொல்லதயங்கும் கக்கூசின் மறுபக்கங்களை மக்கள் மனதுகளில் பதிய வைக்கும் முயற்சிகளுக்காக இவருடைய பதிவுகளுக்கு இந்த விருது வழங்க படுகிறது.. பலத்த கைதட்டல்களுக்கு இடையே நம் பன்னிகுட்டியை விருது வாங்க அழைக்கிறேன்!////////

பின்ன கக்கூச சும்மா விட்ர முடியுமா? ஓகே அமைதி அமைதி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// TERROR-PANDIYAN(VAS) said...
இவனுங்களே அவர்டு கொடுத்து இவனுங்களே கமெண்ட், ஓட்டு போட்டுகரானுங்க.. தூ... :)))
/////////

வந்துட்டாருய்யா பெரிய சண்டியரு....... இப்போ அவரே அவர காறி துப்பிக்க போறாரு..எல்லாரும் தள்ளி நின்னு வேடிக்க பாருங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////போன் பண்ணு நம்பர் கேளுபோலிசுக்கு அடிக்கடி போன் பண்ணி என் போன் நம்பர் எனக்கே மறந்துபோச்சு.. என் நம்பர் எனக்கு வேணும்னு போலிசை டரியல் ஆக்கும் பனங்காட்டு நரிக்கு இந்த விருதை போனிலே கொடுக்கிறோம்!////////

இப்பல்லாம் டெய்லி ஒரு சிம்கார்ட் வாங்குறானாமே?

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
இவனுங்களே அவர்டு கொடுத்து இவனுங்களே கமெண்ட், ஓட்டு போட்டுகரானுங்க.. தூ... :)))///

ha.ha.ha.....adappaavikalaa terrar kummi pasanga nilaimai intha alavukku vanthiruchchaa ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பேரு வைய்யி பேதி ஆய்ருவாய்ங்கதெனாலி கமல் மாதிரி அம்மாஞ்சியா இருந்துகிட்டு..பேரு என்னமோ இந்தியன் தாத்தா ரேஞ்சுக்கு டெரரா வச்சிக்கிட்டு பல பேர்கள திகில் ஆக்கி வைத்திருக்கும் டெரர் பாண்டியனுக்கு இந்த விருதை டெரரா கொடுக்கிறோம்!////////

ஒரு பச்சபுள்ளைய போட்டு இப்பிடி கலாய்க்கிறீங்களேப்பா........?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

சூப்பர் award

இம்சைஅரசன் பாபு.. said...

டேய் என்னடா நடக்குது ..ஒரு எழவும் புரியலை .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
டேய் என்னடா நடக்குது ..ஒரு எழவும் புரியலை .////////

யோவ் இப்ப புதுசா ஏன்யா கவலப்படுறே, உனக்கு என்னிக்குத்தான்யா புரிஞ்சிருக்கு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த அவார்ட் எல்லாம் எங்க வைக்கணும். கக்கூஸ்லையா இல்ல அடுப்படியிலையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த அவார்ட் எல்லாம் எங்க வைக்கணும். கக்கூஸ்லையா இல்ல அடுப்படியிலையா?////////

ம்ம்ம்........ செப்டிக் டேங்ல போய் வைய்யி......!

கிருபா said...

டும்கி டும்கி அவார்டு குடுக்கலையா
அதாம்பா அவார்டு குடுக்கறவளுக்கு அவார்டு

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க கமண்டு தப்பே இல்ல

விக்கியுலகம் said...

மாப்ள என்னைய விட்டுட்டியே...
அழுவாச்சியா வருதுய்யா ஹூம் ஹூம்!

cho visiri said...

//கக்கூஸ்லையா இல்ல அடுப்படியிலையா?//

In the kichen near Tiolet or vice versa......
[In in most of Flats that I have visited (including the one I am residing at present) there is no more than three metre distance.

Jey said...

விருது பெற்ற அனைவருக்கும் பட்டாபட்டியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.