Monday, September 12, 2011

பூமியைத் தேடி...

இப்போதெல்லாம் ஏனோ பதிவுகள் எழுதவே தோன்றுவதில்லை. கிடைத்த இடைவெளியில் ஏதாவது வித்தியாசமாக முயற்சிக்கலாம் என்று ஒரு எண்ணம். உடனே அறிவியல் கலந்த தொடர்கதை ஒன்றை எழுதும் முயற்சியில் இறங்கிவிட்டேன். இப்போதுதான் முதல்முறையாக இவ்வளவு தூரம் சீரியசாக எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். வானியல் சம்பந்தப்பட்ட விஷயங்களுடன் கொஞ்சம் கற்பனையையும் கலந்து எழுதி இருக்கிறேன்.  கதை எந்த காலகட்டத்தில் நடக்கிறது என்று தனியாக குறிப்பிடவில்லை. ஆங்காங்கே அதுபற்றி சில குறிப்புகள் உள்ளன. டெக்னிகல் விஷயங்கள் புரியவில்லை என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி!

********

அமெரிக்காவின் லினியர் (LINEAR- Lincoln Near-Earth Asteroid Research) ஆய்வகத்தின் உயர்மட்ட மீட்டிங் அறை. அதன் இயக்குனர் மைக்கேல் க்ரெய்ட்டன் மீட்டிங்கிற்குத் தயாராக அமர்ந்திருந்தார். அருகில் அவரது உதவியாளரும், இரு சைன்டிஸ்ட்டுகளும் மீட்டிங் ஆரம்பிப்பதற்காக காத்திருந்தனர். அனைவர் முகத்திலும் ஒருவிதப் பதற்றம் தெரிந்தது. சரியாக மாலை ஐந்து மணி ஆனதும் த்ரீ டைமன்சனல் ஹோலோகிராம் ப்ரொஜெக்சன் மூலமாக அமெரிக்க ஜனாதிபதி ராபர்ட்சன் மீட்டிங் அறையில் வந்தமர்ந்தார். அதிமுக்கியத்துவம் வாய்ந்த ரகசிய மீட்டிங்குகள் இந்த முறையிலேயே நடத்தப்பட்டு வந்தன. பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த போது நடத்தப்பட்ட ஸ்டார் வார்ஸ் திட்டத்திற்குப் பின் இப்போதுதான் இந்த மீட்டிங் கூட்டப்பட்டிருந்தது

TF5 என்ற விண்கல் ஒன்று திடீரென பூமியை நோக்கி படுவேகமாக வருவதாக லினியர் ஆய்வகத்தின் விண்கல் ஆராய்ச்சித்துறையினரால் கண்டறியப்பட்டு அமெரிக்க ஜனாதிபதி அலுவலகத்திற்கு அதிஅவசர அறிக்கை அனுப்பட்டதன் விளைவே இந்த உடனடி ரகசிய மீட்டிங். சுருக்கமான சம்பிரதாய விசாரிப்புகளுக்கு பின்னர் மீட்டிங் ஆரம்பித்தது.

மிஸ்டர் க்ரெய்ட்டன், TF5 விண்கல் பற்றிய தகவலை கூறுங்கள், நாம் சீக்கிரமே முடிவு எடுக்க வேண்டும் என்று  ராபர்ட்சன் பரபரத்தார்.

இயக்குனர் க்ரெய்ட்டன், மெல்ல செருமியபடி மெதுவாக பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஜனாதிபதி அவர்களே முதலிலேயே கெட்ட செய்தி ஒன்றைக் கூறுவதற்கு வருந்துகிறேன். அந்த எரிகல்லை நம்மால் அழிக்க இயலாது என்று எங்கள் ஆய்வுகள் கூறுகின்றன.

ஹைட்ரஜன் குண்டுகளை வைத்து அந்த எரிகல்லை திசை திருப்பிவிடலாம் என்று கூறினீர்களே..?

ஆம் கூறினேன், ஆனால் நமது அட்வான்ஸ்டு ஸ்பேஸ் கொலிசன் சிமுலேசன் ப்ரோகிராம் (Advanced Space Collision Simulation Program) வேறுவிதமாகச் சொல்கிறது. நம்மால் ஹைட்ரஜன் குண்டுகளை வீசி அந்தக் கல்லை உடைத்துவிட முடியும். அந்தக் கல்லின் அதிக பட்ச விட்டம் 34 கிலோ மீட்டர்கள், அதன் வடிவம், வேகத்தை வைத்து கணக்கிடும் போது, அது 10 கிமீ, 8 கிமீ மற்றும் 16 கிமீ விட்டமுள்ள  மூன்று துண்டுகளாக உடையக் கூடும்,   அவற்றில் 10 மற்றும் 8 கிமீ கற்கள் பூமியை விட்டு விலகிச் சென்றுவிடும். ஆனால்,

ஆனால் என்ன மிஸ்டர் க்ரெய்ட்டன்...?

ஆனால், அந்த 16 கிமீ கல், சந்திரனில் சென்று மோதக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. நமது சிமுலேட்டர் அதற்கான வாய்ப்பு 80% மேல் இருப்பதாகக் கணித்திருக்கிறது.

நல்லதுதானே, அந்தக்கல் சந்திரனில் மோதினால் நமக்கென்ன வந்துவிடப்போகிறது?

அப்படி இல்லை ஜனாதிபதி அவர்களே, அந்தக் கல் சந்திரனில் மோதினால் சந்திரன் தன் பாதையில் இருந்து விலகி ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் பூமிக்கருகில் வந்துவிடக்கூடும். அதன் பின்னர் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது....

க்ரெய்ட்டன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜனாதிபதி ராபர்ட்சன்இப்போ என்ன செய்வது, வேறு எதுவும் செய்ய முடியாதா என்றார்.

ஒரு வழி இருக்கு சார். அது அந்த 16 கிமீ கல் மேல் இன்னொரு தாக்குதல் நடத்தி உடைக்கலாம். ஆனால் அதில் ரிஸ்க் அதிகம், அதற்கான சிமுலேசன் அனாலிசிஸ் இன்னும் தயாராகவில்லை.

மிஸ்டர் க்ரெய்ட்டன், அங்கே மாதவன் தானே சிமுலேசனில் வேலை செய்றார்? சென்ற முறை அவரை லாஸ் அலமாசில் சந்தித்த நினைவிருக்கிறது...

ஆமா, அவர்தான் இப்போ எங்க சிமுலேசன் துறைத்தலைவர்!

ஓகே, அவரையும் இந்த மீட்டிங்கிற்கு அழையுங்கள், நாம் இன்னும் 15 நிமிடத்தில் மறுபடி சந்திப்போம்.

மீட்டிங் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அனைவரும் இயல்பு நிலைக்கு வந்தார்கள். க்ரெய்ட்டன் இண்டர்காமில் மாதவனை உடனே வரும்படி அழைத்தார்.

மாதவன் மூன்றாம் தலைமுறை அமெரிக்க வாழ் இந்தியர். சிமுலேசன் ஸ்பெசலிஸ்ட். லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வகத்தில் (Los Alamos National Lab) இருந்த போது அட்வான்ஸ்டு நேசனல் மிசைல் டிஃபன்ஸ் திட்டத்தில் அவரது பங்களிப்பு கணிசமானது. சமீபத்தில்தான் லீனியர் ஆய்வகத்தில் இணைந்திருந்தார்.

மாதவன் வந்ததும் மறுபடி மீட்டிங் தொடங்கியது.

வாருங்கள் மாதவன், உங்கள் சிமுலேசன் எந்தளவு ஆகி இருக்கு? அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க..

சார், நாம அந்த 16 கிமீ கல்லையும் உடைத்துவிடலாம். முதல் கட்ட சிமுலேசன்ல 90% வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்குன்னு தெரியுது, இன்னும் கன்பர்ம் பண்ணல, ஆனா....

தொடரும்...

146 comments:

வைகை said...

தேடறதுக்கு சிரிப்பு போலிச கூப்புடுவோமா? :)

வைகை said...

கிடைத்த இடைவெளியில் ஏதாவது வித்தியாசமாக முயற்சிக்கலாம் //

இடைவெளின்னா? தமன்னா? :)

வைகை said...

உடனே அறிவியல் கலந்த தொடர்கதை ஒன்றை எழுதும் முயற்சியில் இறங்கிவிட்டேன்//

எவ்ளோ ஆழம் இருக்கும்? :))

வைகை said...

ஆனால், அந்த 16 கிமீ கல், சந்திரனில் சென்று மோதக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.//

பூமிக்கு அருகிலே வேறு இன்னும் பல கோள்கள் உள்ளதாக இருக்கிறேதே.. அதையும் தாண்டி சந்திரனில் விழுவதற்கு வேறு காரணங்கள் உள்ளதா? சந்திரனில் ஈர்ப்பு சக்தி இல்லையென்றாலும் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வைகை said...
ஆனால், அந்த 16 கிமீ கல், சந்திரனில் சென்று மோதக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.//

பூமிக்கு அருகிலே வேறு இன்னும் பல கோள்கள் உள்ளதாக இருக்கிறேதே.. அதையும் தாண்டி சந்திரனில் விழுவதற்கு வேறு காரணங்கள் உள்ளதா? சந்திரனில் ஈர்ப்பு சக்தி இல்லையென்றாலும் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளதா?///////

கல் பூமியை நோக்கித்தான் வருகிறது, ஆனால், வெடித்துச் சிதறும் போது அது சந்திரனை நோக்கி திரும்பி விடுவதாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது அது சந்திரனின் ஈர்ப்பு விசையால் அதை நோக்கிச் செல்லவில்லை, வெடிக்கும் இம்பாக்ட்டில் செல்கிறது. அல்லது அந்த நேரத்தில் சந்திரன் பூமிக்கும் கல்லுக்கும் இடையில் வந்துவிடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.........

TERROR-PANDIYAN(VAS) said...

//சந்திரன் தன் பாதையில் இருந்து விலகி ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் பூமிக்கருகில் வந்துவிடக்கூடும். அதன் பின்னர் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது....//

என்ன நடக்கும்?

வைகை said...

ஹைட்ரஜன் குண்டுகளை வீசி அந்தக் கல்லை உடைத்துவிட முடியும். அந்தக் கல்லின் அதிக பட்ச விட்டம் 34 கிலோ மீட்டர்கள், அதன் வடிவம், வேகத்தை வைத்து கணக்கிடும் போது, அது 10 கிமீ, 8 கிமீ மற்றும் 16 கிமீ விட்டமுள்ள மூன்று துண்டுகளாக உடையக் கூடும்,//

ஹைட்ரஜன் குண்டுகளை வீசி உடைக்க முடியும் என்றால்.. மூன்று துண்டுகளாக உடைய எத்தனை குண்டுகள் தேவை? குண்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் இன்னும் அதிக சிறிய துண்டுகளாக ஆக்கமுடியாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
//சந்திரன் தன் பாதையில் இருந்து விலகி ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் பூமிக்கருகில் வந்துவிடக்கூடும். அதன் பின்னர் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது....//

என்ன நடக்கும்?
//////

இரண்டும் மோதிக் கொள்ளும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
ஹைட்ரஜன் குண்டுகளை வீசி அந்தக் கல்லை உடைத்துவிட முடியும். அந்தக் கல்லின் அதிக பட்ச விட்டம் 34 கிலோ மீட்டர்கள், அதன் வடிவம், வேகத்தை வைத்து கணக்கிடும் போது, அது 10 கிமீ, 8 கிமீ மற்றும் 16 கிமீ விட்டமுள்ள மூன்று துண்டுகளாக உடையக் கூடும்,//

ஹைட்ரஜன் குண்டுகளை வீசி உடைக்க முடியும் என்றால்.. மூன்று துண்டுகளாக உடைய எத்தனை குண்டுகள் தேவை? குண்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் இன்னும் அதிக சிறிய துண்டுகளாக ஆக்கமுடியாதா?//////

அடுத்த பாகத்தில் உங்களுக்கு விடை கிடைக்கும்......

வெளங்காதவன்™ said...

வாழ்த்துக்கள் அண்ணே!

#சம்பாசனையின் ஊடே கொஞ்சம் குறியீடுகளைப் பயன்படுத்துங்கோ.....

அப்போத்தான் அது கதையாகவும் ஏற்றுக் கொள்ளப்படும்...

ஹி ஹி ஹி

வெளங்காதவன்™ said...

Trans Code-
FF1004AA

Acknowledge the receipt code ASAP.

#நாங்களும் விஞ்ஞானி

ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
வாழ்த்துக்கள் அண்ணே!

#சம்பாசனையின் ஊடே கொஞ்சம் குறியீடுகளைப் பயன்படுத்துங்கோ.....

அப்போத்தான் அது கதையாகவும் ஏற்றுக் கொள்ளப்படும்...

ஹி ஹி ஹி
//////

நன்றி வெளங்காதவரே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வெளங்காதவன் said...
Trans Code-
FF1004AA

Acknowledge the receipt code ASAP.

#நாங்களும் விஞ்ஞானி

ஹி ஹி ஹி///////

பார்ரா...........?

வெளங்காதவன்™ said...

கும்மி அடிக்க ஆட்கள் தேவை....

வொர்க் அலகேட் செய்து விட்டு பஸ் விடும் டேமேஜர்கள், மற்றும் கொடுத்த வேலையை செய்யாமல் பக்கத்திலிருக்கும் பிகர்களுடன் கடலை போடும் ஆசாமிகள், உடனடியாக கலந்து கொள்ளவும்...

இடம்- இங்கதான்...
நேரம்- எப்ப வேணும்னாலும்...

#ஹி ஹி ஹி ஹி..

வெளங்காதவன்™ said...

//வைகை said...

உடனே அறிவியல் கலந்த தொடர்கதை ஒன்றை எழுதும் முயற்சியில் இறங்கிவிட்டேன்//

எவ்ளோ ஆழம் இருக்கும்? :))
///

ஒரு, ஏழு எட்டு இன்ச்.....
ச்சீ... போங்கய்யா...
வெக்கவெக்கமா வருது...

மாணவன் said...

//"பூமியைத் தேடி..."//

தலைப்பே கலக்கலான ஆரம்பம்...

விஞ்ஞானி பன்னிக்குட்டியார் வாழ்க! :)

வெளங்காதவன்™ said...

///மாணவன் said...

//"பூமியைத் தேடி..."//

தலைப்பே கலக்கலான ஆரம்பம்...
///

அப்போ நீங்க தலைப்ப மட்டும்தான் படிச்சீங்களா சிம்பு?

Madhavan Srinivasagopalan said...

// அங்கே மாதவன் தானே சிமுலேசனில் வேலை செய்றார்? //

வெளங்கிடும்..
இருந்தாலும் தகவலுக்கு நன்றி..

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,
தாங்கள் நலம் தானே?
இருங்க படிச்சிட்டு வாரேன்..

இன்னைக்குப் பதிவு போட்டிருக்கிறீங்க பாருங்க..
இது டைம்மிங்.

நிரூபன் said...

இப்போதெல்லாம் ஏனோ பதிவுகள் எழுதவே தோன்றுவதில்லை. கிடைத்த இடைவெளியில் ஏதாவது வித்தியாசமாக முயற்சிக்கலாம் என்று ஒரு எண்ணம். உடனே அறிவியல் கலந்த தொடர்கதை ஒன்றை எழுதும் முயற்சியில் இறங்கிவிட்டேன்.//

அவ்...இது நல்ல முயற்சியாக இருக்கே அண்ணாச்சி..

அடிச்சு ஜமாயுங்க.
இப்போ தான் பீல்ட்டுக்கு வந்திருக்கிறீங்க போல இருக்கே.

நிரூபன் said...

இப்போதுதான் முதல்முறையாக இவ்வளவு தூரம் சீரியசாக எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். வானியல் சம்பந்தப்பட்ட விஷயங்களுடன் கொஞ்சம் கற்பனையையும் கலந்து எழுதி இருக்கிறேன்.//

ஆகா...அப்படீன்னா சூப்பரான ஒரு அறிவியற் தொடர் வருகிறது போல இருக்கே...

அண்ணே,
காசில்லாமல் நம்மளையும் ஓசியில நிலவுக்கு கூட்டிப் போக முடியுமா?

நிரூபன் said...

அனைவர் முகத்திலும் ஒருவிதப் பதற்றம் தெரிந்தத//

ஏன் நம்ம பன்னிக்குட்டியார், அவங்க இந்த மேட்டரை ரகசியமா ஒளிஞ்சிருந்து பார்க்கிறார் என்றா?

நிரூபன் said...

நல்லதுதானே, அந்தக்கல் சந்திரனில் மோதினால் நமக்கென்ன வந்துவிடப்போகிறது?//

அடப் பாவிங்களா...இப்படியும் யோசித்திருக்காங்களா..

நிரூபன் said...

மிஸ்டர் க்ரெய்ட்டன், அங்கே மாதவன் தானே சிமுலேசனில் வேலை செய்றார்? சென்ற முறை அவரை லாஸ் அலமாசில் சந்தித்த நினைவிருக்கிறது...//

ஆமா...யார் அந்த மாதவன்?
நம்ம ப...........கு...ரா....தானே?

மாணவன் said...

/////மாணவன் said...

//"பூமியைத் தேடி..."//

தலைப்பே கலக்கலான ஆரம்பம்...
///

அப்போ நீங்க தலைப்ப மட்டும்தான் படிச்சீங்களா சிம்பு?///

நாசமாப்போச்சு..... தலைப்பயாவது படிச்சனே!! :))

நிரூபன் said...

சார், நாம அந்த 16 கிமீ கல்லையும் உடைத்துவிடலாம். முதல் கட்ட சிமுலேசன்ல 90% வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்குன்னு தெரியுது, இன்னும் கன்பர்ம் பண்ணல, ஆனா....//

யோ....மாஸ்டரு,
என்னய்யா...கதையைச் சுவாரஸ்யமான இடத்தில ஸ்டாப் பண்ணிட்டீங்க?

நிரூபன் said...

அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

செல்வா said...

பஸ்ல படிக்கும்போதே ரொம்ப நல்லா இருந்துச்சுனா :))

நிரூபன் said...

ஆமா, பதிவின் ஆதர் எங்கே போயிட்டார்?

மாணவன் said...

//ஆமா, பதிவின் ஆதர் எங்கே போயிட்டார்?//

தலைப்பை ஒருமுறை மீண்டும் படிக்கவும் நண்பரே :)

இந்திரா said...

//இன்னும் கன்பர்ம் பண்ணல, ஆனா....//

ஆனா என்ன?
சீக்கிரம் சொல்லுங்க..

நிரூபன் said...

மாணவன் said...
//ஆமா, பதிவின் ஆதர் எங்கே போயிட்டார்?//

தலைப்பை ஒருமுறை மீண்டும் படிக்கவும் நண்பரே :)//

ஹா...ஹா...ஆமா பூமியைத் தேடிப் போயிட்டாரா...

அவ்........

ஹா...ஹா...

M.R said...

அருமையான தொடர் ஆரம்பித்து இருக்கீங்க ,தொடர்ந்து வருகிறேன் வாசிக்க ,பகிர்வுக்கு நன்றி

வெளங்காதவன்™ said...

//அப்போ நீங்க தலைப்ப மட்டும்தான் படிச்சீங்களா சிம்பு?///

நாசமாப்போச்சு..... தலைப்பயாவது படிச்சனே!! :))//
ஹி ஹி ஹி....

வெளங்காதவன்™ said...

///கும்மி அடிக்க ஆட்கள் தேவை....

வொர்க் அலகேட் செய்து விட்டு பஸ் விடும் டேமேஜர்கள், மற்றும் கொடுத்த வேலையை செய்யாமல் பக்கத்திலிருக்கும் பிகர்களுடன் கடலை போடும் ஆசாமிகள், உடனடியாக கலந்து கொள்ளவும்...

இடம்- இங்கதான்...
நேரம்- எப்ப வேணும்னாலும்...///

சிப்பு போலீசு& டெர்ரர்...

எங்கய்யா போனீங்க?

#பஸ்சில் கும்மி அடிப்பதாகக் கேள்விப்பட்டேன்...
அப்புடியா?

Mohamed Faaique said...

16 கி. மீ கல் மோதுவதால், 100 000 கி.மீ தூரம் சந்திரன் நகருமா??? இது சாத்தியமா??

வெளங்காதவன்™ said...

///16 கி. மீ கல் மோதுவதால், 100 000 கி.மீ தூரம் சந்திரன் நகருமா???///

வேகத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும்....

விசையாலும் மற்றும் உராய்வினால் ஏற்படும் வெப்ப ஆற்றலாலும், ஈர்ப்பு விசையற்ற தன்மையாலும், நகரலாம்...

மற்றவை, ஆசிரியரின் விளக்கத்திற்கு....

#ம்க்கும்....
அதுதான் கதைன்னு சொல்லிப்புட்டார்ல...
அப்புறம் ஏனுங்க?

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே அதென்ன கல்லுன்னே...?

MANO நாஞ்சில் மனோ said...

மொத்தமா பூமாதேவி பூமியை குலுக்கப் போறா நாமெல்லாம் செத்துபோவோம் ஹி ஹி...

வெளங்காதவன்™ said...

Pls accelerate the Palm wings....

Simulation still not completed...
‌‍‍‌‍

கும்மாச்சி said...

இன்னது சயின்ஸ் பிக்சனா, பண்ணிகுட்டி ஸார் வேணாம் ரிஸ்க்.

பஞ்சுமிட்டாய் விக்கறவன், கூடை வச்சுகிறவங்க, ஓசி பீடி எல்லாம் கதைல வருவாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Madhavan Srinivasagopalan said...
// அங்கே மாதவன் தானே சிமுலேசனில் வேலை செய்றார்? //

வெளங்கிடும்..
இருந்தாலும் தகவலுக்கு நன்றி..
///////

வெளங்கட்டும் வெளங்கட்டும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நிரூபன் said...
வணக்கம் அண்ணாச்சி,
தாங்கள் நலம் தானே?
இருங்க படிச்சிட்டு வாரேன்..

இன்னைக்குப் பதிவு போட்டிருக்கிறீங்க பாருங்க..
இது டைம்மிங்.
//////

அப்போ இதையே மெயிண்டெயின் பண்ணிடுவோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// நிரூபன் said...
இப்போதெல்லாம் ஏனோ பதிவுகள் எழுதவே தோன்றுவதில்லை. கிடைத்த இடைவெளியில் ஏதாவது வித்தியாசமாக முயற்சிக்கலாம் என்று ஒரு எண்ணம். உடனே அறிவியல் கலந்த தொடர்கதை ஒன்றை எழுதும் முயற்சியில் இறங்கிவிட்டேன்.//

அவ்...இது நல்ல முயற்சியாக இருக்கே அண்ணாச்சி..

அடிச்சு ஜமாயுங்க.
இப்போ தான் பீல்ட்டுக்கு வந்திருக்கிறீங்க போல இருக்கே.
////////

சும்மா ஒரு சேஞ்சுக்குத்தான்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
இப்போதுதான் முதல்முறையாக இவ்வளவு தூரம் சீரியசாக எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். வானியல் சம்பந்தப்பட்ட விஷயங்களுடன் கொஞ்சம் கற்பனையையும் கலந்து எழுதி இருக்கிறேன்.//

ஆகா...அப்படீன்னா சூப்பரான ஒரு அறிவியற் தொடர் வருகிறது போல இருக்கே...

அண்ணே,
காசில்லாமல் நம்மளையும் ஓசியில நிலவுக்கு கூட்டிப் போக முடியுமா?
///////

நிலவென்ன நிலவு, அதை தாண்டி போக போறோம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
அனைவர் முகத்திலும் ஒருவிதப் பதற்றம் தெரிந்தத//

ஏன் நம்ம பன்னிக்குட்டியார், அவங்க இந்த மேட்டரை ரகசியமா ஒளிஞ்சிருந்து பார்க்கிறார் என்றா?
///////

அப்படியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நிரூபன் said...
நல்லதுதானே, அந்தக்கல் சந்திரனில் மோதினால் நமக்கென்ன வந்துவிடப்போகிறது?//

அடப் பாவிங்களா...இப்படியும் யோசித்திருக்காங்களா..//////

ஹி..ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
மிஸ்டர் க்ரெய்ட்டன், அங்கே மாதவன் தானே சிமுலேசனில் வேலை செய்றார்? சென்ற முறை அவரை லாஸ் அலமாசில் சந்தித்த நினைவிருக்கிறது...//

ஆமா...யார் அந்த மாதவன்?
நம்ம ப...........கு...ரா....தானே?
/////

ஹஹஹா நம்ம வேல எட்ட நின்னு பாத்ததோட சரி......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
/////மாணவன் said...

//"பூமியைத் தேடி..."//

தலைப்பே கலக்கலான ஆரம்பம்...
///

அப்போ நீங்க தலைப்ப மட்டும்தான் படிச்சீங்களா சிம்பு?///

நாசமாப்போச்சு..... தலைப்பயாவது படிச்சனே!! :))//////

சரி சரி சங்கத்துல ஃபைன் கட்டிட்டு போ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
சார், நாம அந்த 16 கிமீ கல்லையும் உடைத்துவிடலாம். முதல் கட்ட சிமுலேசன்ல 90% வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்குன்னு தெரியுது, இன்னும் கன்பர்ம் பண்ணல, ஆனா....//

யோ....மாஸ்டரு,
என்னய்யா...கதையைச் சுவாரஸ்யமான இடத்தில ஸ்டாப் பண்ணிட்டீங்க?
////////

தொடர்கதைன்னா அப்படித்தான் பண்ணனுமாமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நிரூபன் said...
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்./////

சீக்கிரமே போட்டுடுவோம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
பஸ்ல படிக்கும்போதே ரொம்ப நல்லா இருந்துச்சுனா :))
////////

அப்ப சரி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இந்திரா said...
//இன்னும் கன்பர்ம் பண்ணல, ஆனா....//

ஆனா என்ன?
சீக்கிரம் சொல்லுங்க..//////

ஆனா என்ன? சொல்லிட்டேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////M.R said...
அருமையான தொடர் ஆரம்பித்து இருக்கீங்க ,தொடர்ந்து வருகிறேன் வாசிக்க ,பகிர்வுக்கு நன்றி//////

நன்றி MR!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Mohamed Faaique said...
16 கி. மீ கல் மோதுவதால், 100 000 கி.மீ தூரம் சந்திரன் நகருமா??? இது சாத்தியமா??///////

100 000 கிமீ என்பதில் வேண்டுமென்றால் வித்தியாசம் இருக்கலாம் ஆனால் நகர்வது சாத்தியமே! கடுமையான நிலநடுக்கத்தின் போது கூட பூமி சில மி.மீ.கள் நகர்கிறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
அண்ணே அதென்ன கல்லுன்னே...?////

கருங்கல்லுண்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
மொத்தமா பூமாதேவி பூமியை குலுக்கப் போறா நாமெல்லாம் செத்துபோவோம் ஹி ஹி...//////

வெளங்கிரும்யா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வெளங்காதவன் said...
Pls accelerate the Palm wings....

Simulation still not completed...
‌‍‍‌‍///////

பீட்டரு...? இருக்கட்டும் இருக்கட்டும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கும்மாச்சி said...
இன்னது சயின்ஸ் பிக்சனா, பண்ணிகுட்டி ஸார் வேணாம் ரிஸ்க்.

பஞ்சுமிட்டாய் விக்கறவன், கூடை வச்சுகிறவங்க, ஓசி பீடி எல்லாம் கதைல வருவாங்களா?//////

அல்ரெடி வந்துட்டாங்க பார்க்கலியா?

சக்தி கல்வி மையம் said...

சிமுலேசன் ?

இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சிமுலேசன் ?

இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.//////

வாங்க நண்பா, அருமையான கேள்வி, நன்றி.

சிமுலேசன் என்பது நிஜத்தில் நடப்பது போல கம்ப்யூட்டரில் செய்து பார்ப்பது. அதற்கென கம்ப்யூட்டர் ப்ரோகிராம்கள் பயன்படுத்தி செய்யப்படுகிறது.

வீடியோ கேம் செண்டர்களில் பைக், கார் ஓட்டுவது போல கேம் இருக்கிறதே, அது ஒருவகை சிமுலேசன் தான்.

கம்ப்யூட்டர் ப்ரோகிராமில், ஒவ்வொரு பொருளுக்கும் அதன் தன்மையை விளக்கி விட்டு, பின் கம்ப்யூட்டரிலேயே அவற்றை மோத விட்டு, அதனால் என்ன ஆகும் என்று கணிக்கலாம்.

சில பரிசோதனைகள் செய்யும் முன் சிறிய அளவில் ட்ரை பண்ணி பார்ப்பாங்க, ஆனால் அப்படி செய்ய முடியாத நிலையில் கம்ப்யூட்டரில் செஞ்சு பார்க்கலாம். அதற்கு இந்த சிமுலேசன் ப்ரோகிரம் பயன்படும்.

அணுகுண்டு வெடிப்பதை கூட கம்ப்யூட்டரில் செய்து பார்க்கலாம், ஆனால் அதற்கு சூப்பர் கம்ப்யூட்டர் தேவைப்படும். அதனால்தான் இந்தியாவிற்கு சூப்பர் கம்ப்யூட்டரை தர மறுத்தார்கள்!

எஸ்.கே said...

இந்தியாவிற்கு சூப்பர் கம்ப்யூட்டரை தர மறுத்தார்கள்!// இது எப்போ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா எஸ்கே, 80-களில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து சூப்பர் கம்ப்யூட்டர் வாங்க முயற்சித்தது. ஆனால் அதைவைத்து அணுகுண்டு சோதனை செய்ய முடியும் என்பதால் மறுக்கப்பட்டது.
http://en.wikipedia.org/wiki/Supercomputing_in_India

எஸ்.கே said...

கதை எந்த வருசம் நடக்குது சொல்லவே இல்லையே? சஸ்பென்ஸ்?

எஸ்.கே said...

ஹைட்ரஜன் பாமை நாம் விண்வெளியில வச்சு வெடிக்க வைக்கிறப்ப அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத்தினால்/அல்லது வேறு ஏதாவதால் பூமிக்கு பாதிப்பு வரும் வாய்ப்புள்ளதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// எஸ்.கே said...
ஹைட்ரஜன் பாமை நாம் விண்வெளியில வச்சு வெடிக்க வைக்கிறப்ப அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத்தினால்/அல்லது வேறு ஏதாவதால் பூமிக்கு பாதிப்பு வரும் வாய்ப்புள்ளதா?//////

அதிலிருந்து துகள்கள் எதுவும் வந்து விழாமல் இருந்தால் சரி. மற்றபடி ஒன்றும் ஆக வாய்ப்பில்லை. சூரியனே ஒரு பெரிய ஹைட்ரஜன் குண்டுதானே?

எஸ்.கே said...

அணுகுண்டு, ஹைட்ரஜன் பாம் எல்லாம் ஏற்படுத்தும் விளைவுகள் கிட்டதட்ட ஒன்றுதானே? பூமிக்கு கொஞ்சம் அருகில் கல்லை வெடிக்கச் செய்வதால் அதிலிருந்து வெளியேறும் புகை, கதிரியக்கம் போன்றவற்றால் நம் காற்று மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என அறிய கேட்டேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// எஸ்.கே said...

பூமிக்கருகில் வெடிக்கச் செய்தால் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். அந்த கல் உடைந்த துகள்களும் பூமியிலேயெ வந்து விழவும் வாய்ப்புண்டு!

Vinodhini said...

34km விட்டமுள்ள கல் ஒன்று பூமியின் மீது மோதினால் பூமிக்கு என்ன அழிவு வரும்???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Vinodhini said...
34km விட்டமுள்ள கல் ஒன்று பூமியின் மீது மோதினால் பூமிக்கு என்ன அழிவு வரும்???///////

கடுமையான நில அதிர்ச்சி ஏற்படும், சுனாமிகள் வரும், காற்றில் தூசி மண்டலம் பரவி, சூரிய ஒளியை மறைத்துவிடும், இதனால் தாவரங்கள் உயிரினங்கள் பாதிக்கப்படும். இன்னிலை மாற 20 வருடங்களுக்கும் மேலாகலாம், அதனால் கடும் உணவுப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் அதற்கு முன்பே நில அதிர்சிகளிலும், சுனாமிகளிலும், மொத்த உயிரினங்களும் அழிந்தும் விடலாம்!

Vinodhini said...

12 756.2Km பூமியின் மீது 34km கல் மோதினால் அப்படி என்ன நடக்கப்போகுது என்று யோசித்தேன்.. இவ்வளவு விஷயம் இருக்கா.. மிக்க நன்றி.. நல்ல பதிவு, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Vinodhini said...
12 756.2Km பூமியின் மீது 34km கல் மோதினால் அப்படி என்ன நடக்கப்போகுது என்று யோசித்தேன்.. இவ்வளவு விஷயம் இருக்கா.. மிக்க நன்றி.. நல்ல பதிவு, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
////////

அது கிட்டத்தட்ட ஒரு மண்பானையில் கல்வந்து மோதுவது போல்தான். நன்றி!

வெளங்காதவன்™ said...

I'm back!

#Please read in Ultimate star Ajith's Style.

செங்கோவி said...

அண்ணே,

அந்த கல் பூமிப் பக்கத்துல வந்தா, மனிதர்களுக்கு கிட்னி ஸ்டோன் பிரச்சினை ஏற்படுமா?

செங்கோவி said...

வந்தாரை வாழ வைக்கும் பூமி தானே இது..அப்புறம் ஏன் கல்லை உடைக்க புறப்படுறீங்க? ஏன் நம் பண்பாட்டை கெடுக்கிறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
அண்ணே,

அந்த கல் பூமிப் பக்கத்துல வந்தா, மனிதர்களுக்கு கிட்னி ஸ்டோன் பிரச்சினை ஏற்படுமா?
///////

அந்த கல்லு பூமிக்கு பக்கத்துல வந்தா கிட்னியெல்லாம் சட்னியாகிடும்ணே....

செங்கோவி said...

சிரிப்பு போலீசை சிவகாசி ராக்கெட்ல கட்டி அனுப்பி, கல்லு மேல மோத வைக்கலாம்னு எனக்குத் தோணுது..அண்ணன் அபிப்ராயம் என்ன?

செங்கோவி said...

ஏதோ கல்லு உங்க மண்டைல விழுந்திருச்சுன்னும் அதனால தான், இப்படி சீரியஸா ஆகிட்டீங்கன்னும் பதிவுலக கிசுகிசு சொல்லுதே, உண்மையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// செங்கோவி said...
வந்தாரை வாழ வைக்கும் பூமி தானே இது..அப்புறம் ஏன் கல்லை உடைக்க புறப்படுறீங்க? ஏன் நம் பண்பாட்டை கெடுக்கிறீங்க?
///////

கல்லு உடைக்கிறது ஒரு குத்தமாய்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
சிரிப்பு போலீசை சிவகாசி ராக்கெட்ல கட்டி அனுப்பி, கல்லு மேல மோத வைக்கலாம்னு எனக்குத் தோணுது..அண்ணன் அபிப்ராயம் என்ன?
////////

அவரவிட்டா ராக்கெட்டுக்கு வெச்சிருக்க ஆயில எடுத்து குடிச்சிடுவாரே?

செங்கோவி said...

அண்ணே, நான் பஸ்ல படிச்சதை வச்சுத்தான் கமெண்ட் போட்டிருக்கேன்..ஏதாவது அடுத்த பகுதி ரகசியத்தை லீக் பண்ணி இருந்தால், மன்னிக்கவும்.

வெளங்காதவன்™ said...

ஆமாண்ணே.....

இந்த சிமுலேசன்ல தர்ற அவுட்புட்டுக்கு, எதிர்மாறான விளைவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதல்லவா?

*உதாரணத்துக்கு, உங்க சிமுலேசன்ல இன்புட் புராபர்டீஸ்ல தரும் தகவல்கள் உறுதிப்படுத்தப் பட்டே தருகிறீர்கள். ஆனா, உறுதிப்படுத்தாத புராபர்டீஸ் இன் ஸ்பேஸ்,(கோள்களின், துணைக் கோள்களின் நிலை, தூசுகள், அதனதன் வேகத்துள் பயணிக்கும் மூலக்கூறுகள்) இதெல்லாம் நம்முடைய சிமுலேஷன் அவுட்புட்ட பாதிக்கும் இல்லியா?

இதுக்கு ஏதேனும் டோலரேன்ஸ் உண்டா?

#சத்தியமா டவுட்டுதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
ஏதோ கல்லு உங்க மண்டைல விழுந்திருச்சுன்னும் அதனால தான், இப்படி சீரியஸா ஆகிட்டீங்கன்னும் பதிவுலக கிசுகிசு சொல்லுதே, உண்மையா?////////

இப்படியெல்லாம் கிசு கிசு வந்துடக்கூடாதுன்னுதான் என் ப்ளாக்ல இத போடலை........ ஆனாலும் அடங்க மாட்டேங்கிறாங்களே.... அடுத்து ஒரு உள்குத்து பதிவு போட்ர வேண்டியதுதான்.......

செங்கோவி said...

பொதுவாவே கும்மி குரூப்புன்னா ஒன்னும் தெரியாத ஆளுகன்னு சிலருக்கு நினைப்பு இருக்கு. அந்த நினைப்பை உங்க கல்லு சுக்கல் சுக்கலாக்கும்னு நம்புறேன்.

நீங்க வெளில கிக்கிலிபிக்கிலியா திரிஞ்சாலும், நல்ல இலக்கிய ஆர்வம் உள்ள ஆளுன்னு எனக்குத் தெரியும்..அது இப்போ ஊருக்கே தெரியப் போகுது..

உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய கல்லை எதிர்பார்க்கிறோம்...

வெளங்காதவன்™ said...

///செங்கோவி said...

உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய கல்லை எதிர்பார்க்கிறோம்...////

ஹி ஹி ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வெளங்காதவன் said...
ஆமாண்ணே.....

இந்த சிமுலேசன்ல தர்ற அவுட்புட்டுக்கு, எதிர்மாறான விளைவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதல்லவா?

*உதாரணத்துக்கு, உங்க சிமுலேசன்ல இன்புட் புராபர்டீஸ்ல தரும் தகவல்கள் உறுதிப்படுத்தப் பட்டே தருகிறீர்கள். ஆனா, உறுதிப்படுத்தாத புராபர்டீஸ் இன் ஸ்பேஸ்,(கோள்களின், துணைக் கோள்களின் நிலை, தூசுகள், அதனதன் வேகத்துள் பயணிக்கும் மூலக்கூறுகள்) இதெல்லாம் நம்முடைய சிமுலேஷன் அவுட்புட்ட பாதிக்கும் இல்லியா?

இதுக்கு ஏதேனும் டோலரேன்ஸ் உண்டா?

#சத்தியமா டவுட்டுதான்...////////

நிச்சயமா உண்டு. அதுனாலதான் சக்சஸ் ரேட் 100% இல்ல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
அண்ணே, நான் பஸ்ல படிச்சதை வச்சுத்தான் கமெண்ட் போட்டிருக்கேன்..ஏதாவது அடுத்த பகுதி ரகசியத்தை லீக் பண்ணி இருந்தால், மன்னிக்கவும்.//////

பாருங்கய்யா இந்த அநியாயத்த...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
பொதுவாவே கும்மி குரூப்புன்னா ஒன்னும் தெரியாத ஆளுகன்னு சிலருக்கு நினைப்பு இருக்கு. அந்த நினைப்பை உங்க கல்லு சுக்கல் சுக்கலாக்கும்னு நம்புறேன்.

நீங்க வெளில கிக்கிலிபிக்கிலியா திரிஞ்சாலும், நல்ல இலக்கிய ஆர்வம் உள்ள ஆளுன்னு எனக்குத் தெரியும்..அது இப்போ ஊருக்கே தெரியப் போகுது..

உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய கல்லை எதிர்பார்க்கிறோம்...
///////

ஆஹா.......... நம்பிட்டாய்ங்களோ....?

செங்கோவி said...

சிமுலேசன் பத்தின உங்க விளக்கம் அருமைண்ணே!

வெளங்காதவன்™ said...

///இதுக்கு ஏதேனும் டோலரேன்ஸ் உண்டா?

#சத்தியமா டவுட்டுதான்...////////

நிச்சயமா உண்டு. அதுனாலதான் சக்சஸ் ரேட் 100% இல்ல!///

ஓ!
ரைட்.. ரைட்...

செங்கோவி said...

////வைகை said...

உடனே அறிவியல் கலந்த தொடர்கதை ஒன்றை எழுதும் முயற்சியில் இறங்கிவிட்டேன்//

எவ்ளோ ஆழம் இருக்கும்? :))
//

இதுக்குத் தான் ஏதாவது பொருத்தமான நடிகை படம் போட்டுடணும்..இல்லேன்னா இப்படித்தான் சந்தேகம் வரும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
சிமுலேசன் பத்தின உங்க விளக்கம் அருமைண்ணே!
///////

நன்றிண்ணே.....

மாணவன் said...

"பூமியைத் தேடி..." இதுவரை கதையைப்பற்றி பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் மற்றும் விமர்சனத்திற்கும், உங்களது சந்தேகங்களை கேள்விக்கனைகளாக தொடுத்து விளக்கங்களை பெற உதவி, இந்த அறிவியல் தொடரை இன்னும் சுவாரசியமாக மாற்றிய அனைத்து நண்பர்களுக்கும் டெரர் கும்மி சார்பாக நன்றி! நன்றி! நன்றி!

உங்கள் எதிர்பார்ப்புகளோடு அடுத்த பாகம் விரைவில்........ :)

rajamelaiyur said...

இதே தலைப்பில் கல்கியில் ஒரு தொடர் வந்ததாக நாபகம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// "என் ராஜபாட்டை"- ராஜா said...
இதே தலைப்பில் கல்கியில் ஒரு தொடர் வந்ததாக நாபகம்//////

அப்படியா.....? தலைப்பு சிம்பிளா வைக்கனும்னுதான் இப்படி வெச்சேன். கதை எப்படின்னு சொல்லலையே பாஸ்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Rathnavel said...
வாழ்த்துக்கள்.////

நன்றி சார்!

Anonymous said...

நிலாவுல சாயா விக்கிற நாயர பதிவுல தேடினேன்...-:)
தொடருங்க...நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்...அறிவியல் அகராதி துணையோடு...

சுஜாதா மறுபடி பிறந்திருக்கிறார்..வாழ்த்துக்கள்..

நடுவுல வழக்கம் போல் கலக்குறத விட்டுறாதீங்க பன்னியாரே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரெவெரி said...
நிலாவுல சாயா விக்கிற நாயர பதிவுல தேடினேன்...-:)
தொடருங்க...நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்...அறிவியல் அகராதி துணையோடு...

சுஜாதா மறுபடி பிறந்திருக்கிறார்..வாழ்த்துக்கள்..

நடுவுல வழக்கம் போல் கலக்குறத விட்டுறாதீங்க பன்னியாரே.../////

ஏதாவது புரியலைன்னா கேட்க தயங்காதீங்க நண்பா.....! அப்புறம் சுஜாதா அளவெல்லாம் நாம என்னிக்கும் நெருங்க முடியாத ஏரியா பாஸ், இது சும்மா சின்ன முயற்சி அவ்வளவுதான், ப்ளாக் ஃப்ரீயா கிடைக்கறதால எழுதுறது!
நம்ம காமெடீஸ் வழக்கம் போல தொடரும்! நன்றி!

வைகை said...

100 :))

மாணவன் said...

101... :)

மாணவன் said...

//
வைகை said...
100 :))//

அண்ணே இது செல்லாது...

101 க்குதான் மதிப்பு அதிகம்.. :)

ஏதாவது விஷேசங்களுக்குகூட 101, 501,1001 இப்படித்தான் மொய் எழுதுவாங்க யாரும் 100,500 எழுத மாட்டாங்க அதனால 101 தான் ஏற்றுக்கொள்ளப்படும் :))

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகில் இது புது முயற்சி.. அமரர் சுஜாதா போல் கலக்க வாழ்த்துக்கள்.. கான்வர்சேஷனுக்கு கொட்டேஷன்ஸ் பயன் படுத்தவும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
பதிவுலகில் இது புது முயற்சி.. அமரர் சுஜாதா போல் கலக்க வாழ்த்துக்கள்.. கான்வர்சேஷனுக்கு கொட்டேஷன்ஸ் பயன் படுத்தவும்
//////

நன்றி சிபி, எனக்கும் ஏதோ வித்தியாசமா தெரிஞ்சது, ஆனா டக்குன்னு ஞாபகம் வர்ல..... இனி அப்படியே போட்டுடுவோம்...

K said...

இப்போதெல்லாம் ஏனோ பதிவுகள் எழுதவே தோன்றுவதில்லை.:////

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! ஏன் சார் அப்படித் தோணறது? தொடர்ந்து எழுதுங்க சார்!

K said...

கிடைத்த இடைவெளியில் ஏதாவது வித்தியாசமாக முயற்சிக்கலாம் என்று ஒரு எண்ணம். உடனே அறிவியல் கலந்த தொடர்கதை ஒன்றை எழுதும் முயற்சியில் இறங்கிவிட்டேன். ////

இல்ல இதுக்கு முன்னாடியும் நீங்க ஒரு சூப்பர் பதிவு போட்டிருக்கீங்க!

” கிபி மூவாயிரத்தில்....” ஆம் ஐ ரைட் சார்?

K said...

இப்போதுதான் முதல்முறையாக இவ்வளவு தூரம் சீரியசாக எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். ////

இல்லை, இதற்கு முன்னாடி ஆயில் பத்திகூட ஒரு அழகான பதிவு போட்டிருக்கீங்க சார்!

K said...

வானியல் சம்பந்தப்பட்ட விஷயங்களுடன் கொஞ்சம் கற்பனையையும் கலந்து எழுதி இருக்கிறேன். ////

அட, சூப்பரா இருக்கே!

K said...

கதை எந்த காலகட்டத்தில் நடக்கிறது என்று தனியாக குறிப்பிடவில்லை. ஆங்காங்கே அதுபற்றி சில குறிப்புகள் உள்ளன. டெக்னிகல் விஷயங்கள் புரியவில்லை என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி!////

கண்டிப்பாக கேக்குறேன் சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
இப்போதெல்லாம் ஏனோ பதிவுகள் எழுதவே தோன்றுவதில்லை.:////

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! ஏன் சார் அப்படித் தோணறது? தொடர்ந்து எழுதுங்க சார்!//////

வாங்க மணியண்ணே..... முயற்சி பண்ணுவோம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
கிடைத்த இடைவெளியில் ஏதாவது வித்தியாசமாக முயற்சிக்கலாம் என்று ஒரு எண்ணம். உடனே அறிவியல் கலந்த தொடர்கதை ஒன்றை எழுதும் முயற்சியில் இறங்கிவிட்டேன். ////

இல்ல இதுக்கு முன்னாடியும் நீங்க ஒரு சூப்பர் பதிவு போட்டிருக்கீங்க!

” கிபி மூவாயிரத்தில்....” ஆம் ஐ ரைட் சார்?
//////

அது மெயில்ல வந்த மேட்டரை வெச்சு அப்படியே சேர்த்து எழுதினது....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
இப்போதுதான் முதல்முறையாக இவ்வளவு தூரம் சீரியசாக எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். ////

இல்லை, இதற்கு முன்னாடி ஆயில் பத்திகூட ஒரு அழகான பதிவு போட்டிருக்கீங்க சார்!
////////

அட, என்னோட பழைய பதிவுகள்லாம் கூட படிச்சிருக்கீங்க.....! நன்றிங்க, அதுகள்லாம் தனிப்பதிவுகள், ஆனா இது தொடரா வரப்போகுது.... அதான் அப்படி சொன்னேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வானியல் சம்பந்தப்பட்ட விஷயங்களுடன் கொஞ்சம் கற்பனையையும் கலந்து எழுதி இருக்கிறேன். ////

அட, சூப்பரா இருக்கே!
//////

ஹஹா, வானியல் வெச்சு எழுதுறதுதான் சுலபம்.....

K said...

ஜனாதிபதி அவர்களே முதலிலேயே கெட்ட செய்தி ஒன்றைக் கூறுவதற்கு வருந்துகிறேன். அந்த எரிகல்லை நம்மால் அழிக்க இயலாது என்று எங்கள் ஆய்வுகள் கூறுகின்றன.///

இந்த இடத்துல உங்க உரைநடையைப் பாராட்டுறேன் சார்! ஏன்னா, அவங்க இங்கிலீசுல என்ன பேசுவாங்க அப்டீங்கறத கற்பனை பண்ணி, அப்ப்டியே தமிழில் தந்திருக்கீங்க!

இங்கிலீஸ் டப்பிங்க் படங்கள்ள இந்த மாதிரி ஒரு ஸ்டைலில்தான் சார் பேசுவாய்ங்க!

கலக்கலா இருக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
கதை எந்த காலகட்டத்தில் நடக்கிறது என்று தனியாக குறிப்பிடவில்லை. ஆங்காங்கே அதுபற்றி சில குறிப்புகள் உள்ளன. டெக்னிகல் விஷயங்கள் புரியவில்லை என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி!////

கண்டிப்பாக கேக்குறேன் சார்!
///////

கேளுங்க.....

K said...

அந்தக் கல்லின் அதிக பட்ச விட்டம் 34 கிலோ மீட்டர்கள், அதன் வடிவம், வேகத்தை வைத்து கணக்கிடும் போது, அது 10 கிமீ, 8 கிமீ மற்றும் 16 கிமீ விட்டமுள்ள மூன்று துண்டுகளாக உடையக் கூடும், அவற்றில் 10 மற்றும் 8 கிமீ கற்கள் பூமியை விட்டு விலகிச் சென்றுவிடும்.////

வாவ்!

K said...

சந்திரன் தன் பாதையில் இருந்து விலகி ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் பூமிக்கருகில் வந்துவிடக்கூடும். அதன் பின்னர் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது....////

எமக்கும்!

K said...

மிஸ்டர் க்ரெய்ட்டன், அங்கே மாதவன் தானே சிமுலேசனில் வேலை செய்றார்? ////

இது இன்னொரு அழகிய யதார்த்தம்! காரணம் அமெரிக்காவின் பெரிய பெரிய துறைகளில் நமது தமிழர்கள்தானே இருக்கிறார்கள்!

இது எமக்கெல்லம் பெருமை இல்லையா?

இதனையும் கதையில் சேர்த்தமைக்கு ரொம்ப நன்றி சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
மிஸ்டர் க்ரெய்ட்டன், அங்கே மாதவன் தானே சிமுலேசனில் வேலை செய்றார்? ////

இது இன்னொரு அழகிய யதார்த்தம்! காரணம் அமெரிக்காவின் பெரிய பெரிய துறைகளில் நமது தமிழர்கள்தானே இருக்கிறார்கள்!

இது எமக்கெல்லம் பெருமை இல்லையா?

இதனையும் கதையில் சேர்த்தமைக்கு ரொம்ப நன்றி சார்!
//////

ஆமா இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமா இருக்கும்!

K said...

சார், ஒரு கேள்வி!

எனக்கு சந்திரனின் விட்டம் எவ்வளவுன்னு தெரியல! ஏன்னா, 16 கிமீ விட்டமுள்ள ஒரு கல் மோதி, ஒருலட்சம் கிலோமீட்டருக்கு சந்திரன் நகரும் அப்டீங்கறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு!

சந்திரனின் விட்டம் எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா, ஒப்பிட்டுப் பார்த்துடுவேன்!

சார், இதுக்கு முன்னாடி சந்திரனதோ, பூமியினதோ சுற்றுப்பாதைகள் விலகி இருக்கா?

இவைதான் சார் எனது டவுட்டுகள்!

மத்தபடி கதை விறுவிறுப்பாவும், சுவாரசியமாவும் செல்கிறது!

வாழ்த்துக்கள் சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
சார், ஒரு கேள்வி!

எனக்கு சந்திரனின் விட்டம் எவ்வளவுன்னு தெரியல! ஏன்னா, 16 கிமீ விட்டமுள்ள ஒரு கல் மோதி, ஒருலட்சம் கிலோமீட்டருக்கு சந்திரன் நகரும் அப்டீங்கறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு!

சந்திரனின் விட்டம் எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா, ஒப்பிட்டுப் பார்த்துடுவேன்!

சார், இதுக்கு முன்னாடி சந்திரனதோ, பூமியினதோ சுற்றுப்பாதைகள் விலகி இருக்கா?

இவைதான் சார் எனது டவுட்டுகள்!

மத்தபடி கதை விறுவிறுப்பாவும், சுவாரசியமாவும் செல்கிறது!

வாழ்த்துக்கள் சார்!//////

நன்றி மணியண்ணே!
சந்திரனின் விட்டம் சுமார் 3500 கிமீ. ஆனா இதை வெறும் சைஸ் மட்டுமே வெச்சு ஒப்பிட முடியாது. அந்தக் கல்லின் வேகம் தான் அதை நிகழ்த்தும். 5 மீட்டர் அளவுள்ள ஒரு கல் மோதும் போது ஒரு அணுகுண்டின் ஆற்றலை வெளிப்படுத்தும். அதை வைத்து நீங்கள் கணித்துக் கொள்ளலாம். மேலும் சந்திரன் ஏற்கனவே பூமியின் ஈர்ப்பில் இருப்பதால் அதுவும் இணைந்து கொள்ளும்..

ஒவ்வொரு நில அதிர்ச்சியின் போதும் பூமி சில மி.மீட்டர்கள் நகரத்தான் செய்கின்றது. ஆனால் சுற்றுப்பாதையில் இருந்து முழுமையாக நகர்ந்ததாக இதுவரை தெரியவில்லை!

Yaathoramani.blogspot.com said...

ஆரம்பமே சும்மா ஜிவ்வினு இருக்கு
ரொம்ப சுவாரஸ்யமான தொடராக இருக்கும் எனத் தெரிகிறது
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Ramani said...
ஆரம்பமே சும்மா ஜிவ்வினு இருக்கு
ரொம்ப சுவாரஸ்யமான தொடராக இருக்கும் எனத் தெரிகிறது
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
///////

நன்றி சார்!

RAMA RAVI (RAMVI) said...

நல்ல இடத்தில் தொடரும் போட்டு விட்டீங்க.Armageddon போன்ற sci-fic படம் பார்க்கிற உணர்வு இதை படிக்கும் போது.
வானியல் சம்பந்தப்பட்ட விவரங்கள் அருமை.

ப.கந்தசாமி said...

வருங்கால H.G.Wells வாழ்க, வாழ்க, வாழ்கவே!!!!

குறைஞ்சது ஐந்து முறையாவது வாழ்த்தவேண்டும். அதுக்காகத்தான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செங்கோவி said...

சிரிப்பு போலீசை சிவகாசி ராக்கெட்ல கட்டி அனுப்பி, கல்லு மேல மோத வைக்கலாம்னு எனக்குத் தோணுது..அண்ணன் அபிப்ராயம் என்ன?
//

y y y murder very?

குறையொன்றுமில்லை. said...

இதுபோலத்தொடர்படிக்க இப்பத்தான் சான்ஸ் கிடைச்சிருக்கு உங்க மூலமா நன்றிகள். தொடர்ந்து வ்ருவேன்.
அறிவியல் தொடர் பதிஉலகத்துக்கே புதுசு இல்லியா?ஆரம்பம் நல்லா சுவாரசியமா இருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// RAMVI said...
நல்ல இடத்தில் தொடரும் போட்டு விட்டீங்க.Armageddon போன்ற sci-fic படம் பார்க்கிற உணர்வு இதை படிக்கும் போது.
வானியல் சம்பந்தப்பட்ட விவரங்கள் அருமை.
///////

ரொம்ப நன்றீங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Lakshmi said...
இதுபோலத்தொடர்படிக்க இப்பத்தான் சான்ஸ் கிடைச்சிருக்கு உங்க மூலமா நன்றிகள். தொடர்ந்து வ்ருவேன்.
அறிவியல் தொடர் பதிஉலகத்துக்கே புதுசு இல்லியா?ஆரம்பம் நல்லா சுவாரசியமா இருக்கு.////

தொடர்ந்து வாங்க.....
ரொம்ப நன்றிங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////DrPKandaswamyPhD said...
வருங்கால H.G.Wells வாழ்க, வாழ்க, வாழ்கவே!!!!
//////

சார்.... அந்தளவுக்குலாம் இல்ல சார்... ரொம்ப நன்றி சார், தொடர்ந்து வாங்க சார்!

ஜோதிஜி said...

அற்புதம். இப்படியொரு தளம் இருக்கிறதென்பது இந்த அளவுக்கு எழுதுவீங்க என்பதும், இது போன்ற துறை உங்களுக்கு ஆர்வமானது என்பதும் போன்ற ஆச்சரியங்களே இன்று தான் தெரிந்தது.

பின்னூட்டங்களில் கவனம் தேவை. நோ கும்மி. விசயத்திற்கு தகுந்தவாறு பதில் அளிங்க. பலரும் கவனித்துக் கொண்டு இருக்காங்க. கட்டுரையை படித்து விட்டு பின்னூட்டங்களுக்கு வந்தால் வேறு விதமாக நினைத்துக் கொள்ளக்கூடும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////JOTHIG ஜோதிஜி said...

வாங்க சார். உங்க வார்த்தைகள் எனக்கு ஆயிரம் பூஸ்ட்! ரொம்ப நன்றி சார், இனி கவனமாக இருப்போம்!

Unknown said...

அர்மகெடன் என்னும் ஆங்கிலப்படத்தில் இது போன்று பூமியை மோத வரும் விண்கல்லை, பூமிக்கு வரும் வழியில் உடைப்பதை அடிப்படையாக கொண்டு களம் அமைத்து இருப்பார்கள். அது போன்ற கதை களம் உங்கள் தொடரில் இருப்பது சுறுசுறுப்பை கூட்டுகிறது.
மேற்கொண்டு எப்படி கதை நகரும் ஆர்வம் உண்டாகிறது.

Unknown said...

இந்த கதை சார்ந்து நீங்கள் சேகரிக்கும் கூடுதல் அறிவியல் தகவல்களையும் டிஸ்கி என்று பெயர் போட்டாவது தாருங்கள்.

Unknown said...

மாதவன் என்னும் இந்தியப்பெயர் சந்தோஷம் கூட்டுகிறது.

Unknown said...

சிமுலேசன் என்பது தூண்டுதல் என்ற பொருளிலா இங்கு பயன்படுத்தபடுகிறது?
உரையாடல்களில் "மேற்குறி" போடலாமே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// பாரத்... பாரதி... said...
அர்மகெடன் என்னும் ஆங்கிலப்படத்தில் இது போன்று பூமியை மோத வரும் விண்கல்லை, பூமிக்கு வரும் வழியில் உடைப்பதை அடிப்படையாக கொண்டு களம் அமைத்து இருப்பார்கள். அது போன்ற கதை களம் உங்கள் தொடரில் இருப்பது சுறுசுறுப்பை கூட்டுகிறது.
மேற்கொண்டு எப்படி கதை நகரும் ஆர்வம் உண்டாகிறது./////

கிட்டத்தட்ட அதே போன்ற கதைக்களம் தான்.... அஸ்ட்டீராய்டு மோதல் என்ற ஏரியாவை எடுத்துக் கொண்டதால் அதை தவிர்க்க முடியாது. கதையின் அடுத்தடுத்த பாகங்கள் வந்துவிட்டன. அதையும் பாருங்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாரத்... பாரதி... said...
இந்த கதை சார்ந்து நீங்கள் சேகரிக்கும் கூடுதல் அறிவியல் தகவல்களையும் டிஸ்கி என்று பெயர் போட்டாவது தாருங்கள்.
//////

போடலாம்தான்... பார்ப்போம், படிப்பவர்களை குழப்பி விடக்கூடாது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாரத்... பாரதி... said...
மாதவன் என்னும் இந்தியப்பெயர் சந்தோஷம் கூட்டுகிறது.
///////

இனிவரும் காலங்களில் அப்படித்தான் இருக்க போகிறது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// பாரத்... பாரதி... said...
சிமுலேசன் என்பது தூண்டுதல் என்ற பொருளிலா இங்கு பயன்படுத்தபடுகிறது?
உரையாடல்களில் "மேற்குறி" போடலாமே..
///////

சிமுலேசன் எனது வேறு. ஸ்டிமுலேசன் என்றால் தான் தூண்டுதல் என்று பொருள் வரும். சிமுலேசனிற்கு வேடந்தாங்கல் கருனிற்கு அளித்த பதிலையே இங்கே தருகின்றேன்.

முலேசன் என்பது நிஜத்தில் நடப்பது போல கம்ப்யூட்டரில் செய்து பார்ப்பது. அதற்கென கம்ப்யூட்டர் ப்ரோகிராம்கள் பயன்படுத்தி செய்யப்படுகிறது.

வீடியோ கேம் செண்டர்களில் பைக், கார் ஓட்டுவது போல கேம் இருக்கிறதே, அது ஒருவகை சிமுலேசன் தான்.

கம்ப்யூட்டர் ப்ரோகிராமில், ஒவ்வொரு பொருளுக்கும் அதன் தன்மையை விளக்கி விட்டு, பின் கம்ப்யூட்டரிலேயே அவற்றை மோத விட்டு, அதனால் என்ன ஆகும் என்று கணிக்கலாம்.

சில பரிசோதனைகள் செய்யும் முன் சிறிய அளவில் ட்ரை பண்ணி பார்ப்பாங்க, ஆனால் அப்படி செய்ய முடியாத நிலையில் கம்ப்யூட்டரில் செஞ்சு பார்க்கலாம். அதற்கு இந்த சிமுலேசன் ப்ரோகிரம் பயன்படும்.

கோகுல் said...

அநாயாசமான நடையில் அறிவியலை உணர்த்தும் தொடர் வாழ்த்துக்கள் தொடருங்கள்!

உணவு உலகம் said...

உங்கள் லேட்டஸ்ட் முயற்சியை, லேட்டாத்தான் வந்து படிக்க முடிந்தது.அருமையான முயற்சி.முதல் பாகத்தை மிக விறு விறுப்பாக கொண்டு சென்று, அதில் ஒரு தமிழரையும் தலைகாட்ட வைத்துள்ளீர்கள்.தொடரட்டும் உங்கள் நல்ல துவக்கம்.