”அந்தக் கல் பூமியில வந்து மோதாதுன்னு சொல்றாங்க”
”என்னது மோதாதா....அது எப்படி? இ.எஸ்.ஏ, இஸ்ரோ எல்லாரும் நம்ம கணிப்பு மாதிரிதான் கணிச்சிருக்காங்க, சீனா மட்டும் வித்தியாசமா சொல்றாங்களே?”
”ஆமா, அந்தக் கல் செவ்வாய் அருகே வரும் போது செவ்வாயோட ஈர்ப்புவிசைனால செவ்வாயோட சுற்றுப்பாதைக்குள்ள இழுக்கப்பட்டு விடும்னு சொல்றாங்க”
இதைக் கேட்டதும் அனைவரும் அதிர்ந்தனர்.
"இது பத்தி உங்க கருத்து என்ன மோர்கன்? அந்த மாதிரி நடக்க வாய்ப்பிருக்கா? அதை ஏன் நம்மால கணிக்க முடியல?"
”அந்த மாதிரி நடக்க வாய்ப்பில்லைனு சொல்லிட முடியாது, ஆனா நம்ம கணிப்புகள் படி அந்த மாதிரி நடக்க குறைந்த அளவே வாய்ப்பிருக்கறதா தெரியுது. இந்த விண்கற்கள் ஆராய்ச்சில சீனாதான் ரொம்பத் தீவிரமா இருக்காங்க. ரெண்டு வருசத்துல மட்டும் 8 செயற்கைக் கோள்களை அஸ்டீராய்டுகள் அதிகமா இருக்கும் விண்கல் படலத்திற்கு அனுப்பி இருக்கிறாங்க. நாம கூட அப்போ எச்சரிக்கை பண்ணோம், அதுல இதுவரை மூன்று செயற்கைக் கோள்களை இழந்திருக்காங்க. அனேகமாக எல்லாம் அக்கற்களில் மோதி இருக்க வேண்டும். சரி, நம் விஷயத்திற்கு வருகிறேன், எனக்கென்னமோ அந்தக் கல் செவ்வாய் கிரகத்தின் ஈர்க்கும் லிமிட்டைத் தாண்டி வரும் வரை நாமும் பொறுத்து பார்க்கலாம்னு தோனுது”
”க்ரெய்ட்டன் நீங்க என்ன சொல்றீங்க?”
”இல்லை அதுவரை காத்திருக்க வேணாம் என்பது எனது கருத்து, ஏன்னா ஒருவேளை அந்தக்கல் தாண்டி வந்துடுச்சுன்னா அதுக்கப்புறம் அதை எதிர் கொள்ள நமக்கு டைம் இருக்காது. அதுனால இப்போதைய திட்டம் தொடர்ந்து நடக்கட்டும். அப்படியே அந்தக் கல் செவ்வாயின் பாதைக்குள்ள போயிட்டாலும் அதுனால நமக்கு ஆபத்து இல்ல. எல்லாரும் என்ன சொல்றீங்க ?”
”ஓகே, நான் க்ரெய்ட்டன் சொல்றத ஏத்துக்கிறேன், மோர்கன் எந்தக் காரணத்தை கொண்டும் நாம இந்த திட்டத்தை நிறுத்த வேணாம்”
"ஆமா மிஸ்டர் ராபர்ட்சன். நமக்கு வேறுவழியில்லை. நாம் திட்டத்தை தொடர வேண்டியதுதான்" என்றார் மோர்கன்.
மீட்டிங் முடிந்தது. லீனியர் ஆய்வகத்தலைவர் க்ரெய்ட்டன், உடனே சிமுலேசன் ஸ்பெசலிஸ்ட் மாதவனை அழைத்து அந்தக் கல் செவ்வாயில் மோத வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டார். மாதவனோ அதற்கு 0.1% வாய்ப்புக் கூட இல்லை என்று கூறிவிட்டார். பின் எப்படி சீனா இந்த மாதிரி ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்று குழம்பினார்.
XNAV நேவிகேசன் சிஸ்டத்தை ராக்கெட்டில் பொருத்தும் வேலை தொடங்கியது. மாதவனின் சிமுலேசன் கணக்கீடுகள் XNAV சிஸ்டத்திற்கேற்ற மாதிரியாக மாற்றப்பட்டு விண்கல்லின் மொத்த பாதையும் மேப்பிங் செய்யப்பட்டது. மூன்று ராக்கெட்டுகளையும் ஏவும் தளங்கள் தயார் செய்யப்பட்டன. ஒவ்வொரு ராக்கெட்டிலும் குண்டுகள் ஒரே நேரத்தில் வெடிக்கும் விதமாக சின்க்ரோனைஸ் செய்யப்பட்டு பொருத்தப்பட்டன. ராக்கெட்டுகள் தனித்தனியே கிளம்பி தங்கள் பாதைகளில் கல்லை நோக்கிச் சென்று கல்லின் குறிப்பிட்ட பகுதிகளை நோக்கி தங்கள் குண்டுகளை செலுத்தும்.
ஒரு ராக்கெட்டில் இருக்கும் அனைத்து குண்டுகளும் மொத்தமாக ஒரே பேலோட் (Payload) ஆக இணைக்கப்பட்டிருப்பதால், அவை அனைத்தும் ஒரே நேரத்தில் ராக்கெட்டில் இருந்து வெளியேற்றப்படும். அவை அந்தக் கல்லைத் தொடுவதற்கு சரியாக 1 வினாடிக்கு முன்பு வெடித்துவிடுமாறு ப்ரோகிராம் செய்யப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடக்குமானால் அந்தக் கல் சிறு சிறு துகள்களாக நொறுங்கிவிட வேண்டும். பின்னர் அத்துகள்கள் ஒருவேளை பூமியில் வந்து விழுந்தாலும் எந்த ஆபத்தும் இருக்காது.
இதற்கிடையில் செவ்வாயில் இயங்கிவரும் மார்ஸ் லேபில் அந்த விண்கல்லின் தன்மை பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. அந்தக் கல் ஒருவகையான உலோகக்கலவைகளால் (M-type) ஆன கிரிஸ்டல் அமைப்பில் இருப்பதை அறிந்தார்கள். 10% விண்கற்களே உலோகக் கலவைகளால் ஆனதாக இருக்கும். அவற்றின் சரியான உலோக விகிதங்களைக் கண்டறிய ஆய்வுகள் தொடர்ந்தன. அதற்கிடையில் ராக்கெட்டுகளின் பாதை, கல்லின் பாதை விபரங்கள் அனைத்தும் பூமியில் இருந்து மார்ஸ் லேபிற்கு வந்து சேர்ந்தது, அந்த விபரங்கள் செவ்வாயைச் சுற்றி வரும் இரண்டு செயற்கைக் கோள்களுக்கும் தரப்பட்டன.
கீழ்மட்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் முழுவிபரங்களும் சொல்லப்படாமல் இது ஒரு புதிய பரிசோதனை என்றே சொல்லப்பட்டது. அனைத்தும் தயாராகி முடிந்தது. ராக்கெட்டுகள் கிளம்பும் நேரமும் வந்தது. எல்லாம் சரியாக இருந்ததால் ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன. குறித்த நேரத்திற்குள் அவை தங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு கல்லை நோக்கி விரைந்தன.
XNAV சிஸ்டம் எதிர்பார்த்தது போல் மிகத்துல்லியமாக வேலை செய்து கொண்டிருந்தது. கல்லை நெருங்கியதும் மூன்று ராக்கெட்டுகளும் தங்கள் பொசிசனுக்கு திட்டமிட்டபடி மிகச்சரியாக சென்று சேர்ந்தன. அனைத்தையும் நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த விஞ்ஞானிகள் சற்றே நிம்மதி அடைந்தார்கள். அடுத்து இனி ராக்கெட்டுகள் குண்டுகளை ரிலீஸ் செய்ய வேண்டும். அனைவரும் பரபரப்போடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதில் பிழை எதுவும் ஏற்படும் சமயத்தில் அவற்றை நேரடியாக இயக்கி வெளியேற்றும் படி மார்ஸ் லேபிற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
குண்டுகளும் ராக்கெட்டில் இருந்து சரியான நொடியில் வெளியேறி கல்லை நோக்கிச் சென்றன. எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது. திடீரென கல் அதன் பாதையிலிருந்து வெகுவேகமாக விலகி வேறு பாதையில் செல்ல துவங்கியது.
(தொடரும்...)
(தொடரும்...)
38 comments:
ஐயய்யோ!
இது என்னய்யா கதையும் வேற பாதைல போகுது?
யோவ்!
இது சீனாவோட சதியா இருக்குமோ?
#@சிரிப்புபோலீஸ்- இந்த கேசையும் நீங்கதான் கண்டுபிடிக்கணும்...
டொட்டடய்ய்ய்ய்ய்ய்ய்ங்...கல்லு வந்திருச்சு டோய்.
இதான்யா இவர்கிட்ட கெட்ட பழக்கம்..நல்ல இடத்துல தொடரும் போட்டுட்டாரே..
கதையில ஒரு டர்னிங் பாயிண்ட் நீங்க அசத்துங்க அண்ணே!!
பேலோடு-ன்னா என்னண்ணே?
எனக்கு ஒரு சந்தேகம்...செவ்வய்ல மோதலைன்னா மட்டும்தானே ராக்கெட் விடறதா ப்ளான்? ஆனா இப்போ அதுக்கு முன்னாடியே விட்டுட்டாங்களே, ஏன்?
///செங்கோவி said...
எனக்கு ஒரு சந்தேகம்...செவ்வய்ல மோதலைன்னா மட்டும்தானே ராக்கெட் விடறதா ப்ளான்? ஆனா இப்போ அதுக்கு முன்னாடியே விட்டுட்டாங்களே, ஏன்?///
செவ்வாய்ல மோதாதுன்னு மாதவன் சொல்லிட்டாருங்க!
மறுக்கா படிங்க....
//// செங்கோவி said...
எனக்கு ஒரு சந்தேகம்...செவ்வய்ல மோதலைன்னா மட்டும்தானே ராக்கெட் விடறதா ப்ளான்? ஆனா இப்போ அதுக்கு முன்னாடியே விட்டுட்டாங்களே, ஏன்?//////
அது மோர்கனின் வாதம், ஆனால் அதுவரை காத்திருக்க வேணாம்னுதான் முடிவு செய்யப்படுது.
/////செங்கோவி said...
பேலோடு-ன்னா என்னண்ணே?//////
ராக்கெட்ல ஏத்துற லோடு எல்லாமே பேலோடுதாண்ணே...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
பேலோடு-ன்னா என்னண்ணே?//////
ராக்கெட்ல ஏத்துற லோடு எல்லாமே பேலோடுதாண்ணே...///
Inclusive of fuel too..........
#thanks to - google
மாப்ள அப்படியே போங்க நான் தொடர்ந்துக்கறேன் நன்றி!
#thanks to - yahoo
திடீரென கல் அதன் பாதையிலிருந்து வெகுவேகமாக விலகி வேறு பாதையில் செல்ல துவங்கியது.// மாம்ஸ் சன் டிவி மெகா தொடர்ல தொடரும் போடற பீலிங் அப்படியே இருக்கு..
எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது. திடீரென கல் அதன் பாதையிலிருந்து வெகுவேகமாக விலகி வேறு பாதையில் செல்ல துவங்கியது.//
ஆஹா சீட் நுனிக்கு டிக்கி வந்துருச்சே.....!!!! ஆச்சர்யம் தொடரட்டும்...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
#thanks to - yahoo//
எலேய் உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா.....
விக்கியுலகம் said...
மாப்ள அப்படியே போங்க நான் தொடர்ந்துக்கறேன் நன்றி!//
இதைவிட நான் பதிவை படிக்கவே இல்லைன்னு நேரடியாவே சொல்லி இருக்கலாம் ராஸ்கல்.....
ச்சே... பதிவு முடியுர நேரம் பார்த்தா, கல்லு விலகிப் போகனும்.... அடுத்த பதிவு வர வெயிட் பண்ணனுமே!!!
மீட்டிங் போட்ரதுலாயே 6 பதிவு எழுதிட்டு. பாம்ப் செட் பண்ரது, ராக்கட் அனுப்புரது, அது கல்லை அடையுரது`னு எல்லாவற்றையும் ஒரே பதிவு சுருக்கமா முடிச்சுட்டீங்களே!!!!
மச்சி... சூப்பரா போகுது....
அடடா கல்லு ஏன் திசை மாறிச்சு ,பிறகு என்ன நடந்தது என்று சுவாரஸ்யத்தை தூண்டி தொடரும் போட்டுட்டீங்களே நண்பரே
அடுத்த பாகம் எதிபார்த்து ....
எம்.ஆர்
/////
குண்டுகளும் ராக்கெட்டில் இருந்து சரியான நொடியில் வெளியேறி கல்லை நோக்கிச் சென்றன. எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது. திடீரென கல் அதன் பாதையிலிருந்து வெகுவேகமாக விலகி வேறு பாதையில் செல்ல துவங்கியது////
என்ன தலைவா..டாகுத்தர் மாதிரி கல்லும் மக்கர் பண்ணிடுச்சி...
மிகவும் பரபரப்பான கட்டம் அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்....
இப்போ கதை ரொம்ப ஸ்பீடாகிருச்சுனா :))
நான் எதிர்பார்த்த ட்விஸ்ட்...:-)
//// எஸ்.கே said...
நான் எதிர்பார்த்த ட்விஸ்ட்...:-)//////
இத எதிர்பார்த்தேன்......
>>தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..
hi hi இந்த மிரட்டல் எதுக்கு?
கதை சூடு பிடிக்குது.. இது எத்தனை அத்தியாயம் வரும்?
விழும் விழும்
இனி ராக்கெட்டுகள் குண்டுகளை ரிலீஸ் செய்ய வேண்டும். அனைவரும் பரபரப்போடு கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
நாங்களும் பரபரப்போடு வாசித்துக்கொண்டு வருகிரோம்.
ஓகே..நன்றி.
அண்ணே... இந்த தொடர் உங்க கற்பனை குதிரையை மீறி செம வேகமா பயனிக்குதே.... சூப்பரு...
ஏற்கனவே அதிர்ச்சியில் முடிச்சீங்க.. மறுபடியுமா? தொடருங்கள்...
அய்யயோ இது என்ன புது கதை??? எனக்கு அந்த கல் மேல டவுட்டா இருக்கு, அது கல்லா இல்லை வேறேதுமா???
அடுத்த பாகம் எங்கேப்பா?
அடுத்த பாகத்தை நாளை எதிர்பார்க்கலாம்...
ஒருவேளை அது வேற எதாச்சும் ஸ்பேஸ்ஷிப்பா இருக்குமோ? ராக்கெட்ட பாத்ததும் ஆக்ஸிலேட்டர திருவிகிட்டு வேற டைரக்ஷன்ல போயிருப்பான்ங்களோ?சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க அண்ணே...
//கீழ்மட்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் முழுவிபரங்களும் சொல்லப்படாமல் இது ஒரு புதிய பரிசோதனை என்றே சொல்லப்பட்டது. //
This has practical reason. Better not to make unwanted propogation..
Post a Comment