”வாங்க மாதவன், உங்க சிமுலேசன் எந்தளவு ஆகி இருக்கு? அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க..”
”சார், நாம அந்த 16 கிமீ கல்லையும் உடைத்துவிடலாம். முதல் கட்ட சிமுலேசன்ல 90% வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்குன்னு தெரியுது, இன்னும் கன்பர்ம் பண்ணல, ஆனா..... அதில் வேறு சில சிக்கல்கள் இருக்கு”
”அது என்ன...?”
”முதல் தாக்குதல் நடந்து சிறிது நேரத்திற்குள்ளேயே அடுத்த தாக்குதல் நடத்தப்பட வேண்டும். அது விண்ணிலேயே இரண்டாம் ராக்கெட்டும் தயாராக இருந்தால் தான் முடியும். இரண்டிற்கும் சேர்த்து நமக்கு 5 டன் எடையுள்ள 200 குண்டுகள் தேவைப்படலாம்”
”என்ன சொல்றீங்க மாதவன், நம்ம கிட்ட அவ்வளவு குண்டுகள் கைவசம் இருக்காதே, அணு ஆயுத நீக்க திட்டத்தை தீவிரமா உலகம் முழுக்க கொண்டு வந்து 15 வருசம் ஆகியாச்சு. அதுனால எல்லா அணு ஆயுதங்களையும் அழிச்சுட்டோம். நம்மிடம் இப்போ ரகசியமா வைக்கப்பட்டிருக்கும் 50 குண்டுகள்தான் கைவசம் இருக்கு. மிஸ்டர் க்ரெய்ட்டன், இப்போ அந்த விண்கல் எவ்வளவு தொலைவில் இருக்கு?”
”அது அஸ்டிராய்ட் பெல்ட்டில் இருக்கிறது, இன்னும் 173 நாட்கள், 7 மணி, 24 நிமிடத்தில் பூமியில் வந்து மோதிவிடும்”
”அப்போ இன்னும் ஆறு மாதம் இருக்கே, அதுக்குள்ள 150 குண்டுகளை தயாரித்துவிட முடியாதா?”
”இல்ல சார். நம்மகிட்ட இப்போ என்ரிச்டு ஃப்யூயல் (Enriched fuel) ஸ்டாக் கிடையாது, ஆக்டிவ் நியூகிளியர் ரியாக்டர்சும் (Active nuclear reactors) எதுவும் இல்ல. இனிமே புதுசா ரியாக்டர்ஸ் உருவாக்கித்தான் தொடங்கனும். இந்த நிமிசமே ஆரம்பிச்சாலும் முதல் குண்டு ரெடியாக குறைஞ்சது 6 மாசம் ஆகலாம். அதுவுமில்லாம தெர்மோநியூக்ளியர் வெப்பன்ஸ்ல (Thermonuclear weapons) வேலை செஞ்ச விஞ்ஞானிகள் பெரும்பாலனவங்க அல்ரெடி ரிட்டையர் ஆகிட்டாங்க. அதுனால் இன்னும் தாமதமாகலாம்.”
”நிலைமை சிக்கலாகிட்டே போகுதே... என்னதான் வழி இதுக்கு?”
அங்கே சற்று நேரம் மௌனம் நிலவியது...
ராபர்ட்சன் மறுபடியும் பேச ஆரம்பித்தார்.
”இன்று நாம் எப்படியும் ஒரு முடிவெடுத்தாக வேண்டும். அதிக அவகாசம் இல்லை. நாசா டைரக்டரையும் உடனே மீட்டிங்கில் இணையுங்கள், மிக அவசரம்”
அடுத்த 5 நிமிடத்தில் நாசா டைரக்டர் மோர்கன் மீட்டிங்கில் இணைந்தார். மோர்கன் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பிய திட்டத்தில் முதன்மை விஞ்ஞானியாக இருந்து, இப்போது நாசா டைரக்டர் ஆகி இருப்பவர். வாசிமிர் (VASIMR) ராக்கெட் எஞ்சின் உருவாக்கத்தில் வாழ்நாளின் பெரும்பங்கை செலவழித்தவர். அவரிடம் சுருக்கமாக மீட்டிங் விபரங்கள் பகிரப்பட்டன. அனைத்தையும் பொறுமையாய் கேட்டவர் சிறிது நேரம் தீவிரமாக யோசித்துவிட்டு,
”நிலைமைய பார்க்கும் போது எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது” என்றார்.
”சொல்லுங்கள் மோர்கன்....”
”நாசாவில் மினி எர்த் என்னும் ஒரு ப்ராஜக்ட் நடந்துகொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அதில் முழுக்க முழுக்க சுயமாக இயங்கும் தன்மை வாய்ந்த ஒரு மிகப் பெரும் ஸ்பேஸ் ஷட்டில் ஒன்றின் ப்ரோட்டோடைப்பை வெற்றிகரமாக டிசைன் செய்திருக்கிறோம். இன்னும் டெஸ்டிங் நிறைவடையவில்லை”
”இது நமது பிரச்சனையை தீர்க்க எப்படி உதவும் மோர்கன்? இதை நாம் எப்படி பயன்ப்டுத்தப் போகிறோம்....?”
"அந்த மினி எர்த் ஷட்டிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை அனுப்பி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி அங்கேயே தங்க வைத்துவிடலாம். பூமியில் அந்தக் கல் மோதினால், கிட்டத்தட்ட உலகம் முழுதும் அழிந்துவிடும், யாரும் தப்ப முடியாது, பூமியின் வானிலையும் மிகமோசமாக பாதிக்கப்பட்டு விடும். அது சரியாக 20-50 ஆண்டுகள் வரை ஆகலாம். அதுவரை அவர்கள் ஷட்டிலுக்குள்ளேயே செவ்வாயின் மேற்பரப்பில் தங்கி இருப்பார்கள். சரியானதும், திரும்ப பூமிக்கு வந்து மனித இனத்தை மீண்டும் தழைக்க வைக்கலாம்"
"மோர்கன், நீங்கள் சொல்வது கடைசிக்கட்ட நடவடிக்கை. பூமியைக் காக்க என்ன செய்யலாம் என்று வேறு ஏதாவது யோசனை சொல்லுங்கள்"
"ஆமா மிஸ்டர் ராபர்ட்சன், அது கடைசிக்கட்ட நடவடிக்கைதான், ஆனால் வேறு வழி இல்லைனுதான் தோனுது"
"இல்லை மோர்கன், வேறு என்னென்ன சாத்தியங்கள் இருக்குன்னு முழுமையா அலசி விரைவா ஒரு முடிவெடுப்போம். நாசாதானே பூமிக்கருகே வரக் கூடிய ஆபத்தான பொருள்களை ட்ராக் செய்து வருகிறது? ஆனா இந்தக் கல் திடீரென்று வந்திருக்கே....எப்படி..? உங்கள் ட்ராக்கிங்கில் வரவில்லையா..... என்ன பிரச்சனை....?”
(தொடரும்...)
102 comments:
வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ! இனிய புதன்கிழமை வாழ்த்துக்கள்!
இருங்க கதையைப் படிச்சுட்டு வர்ரேன்!
”என்ன சொல்றீங்க மாதவன், நம்ம கிட்ட அவ்வளவு குண்டுகள் கைவசம் இருக்காதே, அணு ஆயுத நீக்க திட்டத்தை தீவிரமா உலகம் முழுக்க கொண்டு வந்து 15 வருசம் ஆகியாச்சு. /////
கதை நிகழும் காலத்தை ஓரளவு கணிக்க முடியுது சார்! ஆனா இன்னும் சில நாடுகள், அணுசக்திப் பாவனையை நிறுத்தமாட்டோம் என்கின்றன!
வாங்க மணியண்ணே...
///// ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
”என்ன சொல்றீங்க மாதவன், நம்ம கிட்ட அவ்வளவு குண்டுகள் கைவசம் இருக்காதே, அணு ஆயுத நீக்க திட்டத்தை தீவிரமா உலகம் முழுக்க கொண்டு வந்து 15 வருசம் ஆகியாச்சு. /////
கதை நிகழும் காலத்தை ஓரளவு கணிக்க முடியுது சார்! ஆனா இன்னும் சில நாடுகள், அணுசக்திப் பாவனையை நிறுத்தமாட்டோம் என்கின்றன!
/////
எதிர்காலத்தில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கைல கதையை அப்படி போட்டிருக்கேன்...... பார்க்கலாம்....!
”நாசாவில் மினி எர்த் என்னும் ஒரு ப்ராஜக்ட் நடந்துகொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அதில் முழுக்க முழுக்க சுயமாக இயங்கும் தன்மை வாய்ந்த ஒரு மிகப் பெரும் ஸ்பேஸ் ஷட்டில் ஒன்றின் ப்ரோட்டோடைப்பை வெற்றிகரமாக டிசைன் செய்திருக்கிறோம். இன்னும் டெஸ்டிங் நிறைவடையவில்லை”/////
கதையின் டர்னிங்க் பாயிண்ட் என்று நினைக்கிறேன்!
அது சரியாக 20-50 ஆண்டுகள் வரை ஆகலாம். அதுவரை அவர்கள் ஷட்டிலுக்குள்ளேயே செவ்வாயின் மேற்பரப்பில் தங்கி இருப்பார்கள். சரியானதும், திரும்ப பூமிக்கு வந்து மனித இனத்தை மீண்டும் தழைக்க வைக்கலாம்"/////
வாவ்! உங்க கற்பனா சக்தியையும், சிந்தனையையும் மனம் திறந்து பாராட்டுகிறேன்!
/////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
”நாசாவில் மினி எர்த் என்னும் ஒரு ப்ராஜக்ட் நடந்துகொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அதில் முழுக்க முழுக்க சுயமாக இயங்கும் தன்மை வாய்ந்த ஒரு மிகப் பெரும் ஸ்பேஸ் ஷட்டில் ஒன்றின் ப்ரோட்டோடைப்பை வெற்றிகரமாக டிசைன் செய்திருக்கிறோம். இன்னும் டெஸ்டிங் நிறைவடையவில்லை”/////
கதையின் டர்னிங்க் பாயிண்ட் என்று நினைக்கிறேன்!
//////
இந்த தொடர்ல எல்லாமே டர்னிங் பாய்ண்ட்ஸ்தான் பாஸ்.......
/////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
அது சரியாக 20-50 ஆண்டுகள் வரை ஆகலாம். அதுவரை அவர்கள் ஷட்டிலுக்குள்ளேயே செவ்வாயின் மேற்பரப்பில் தங்கி இருப்பார்கள். சரியானதும், திரும்ப பூமிக்கு வந்து மனித இனத்தை மீண்டும் தழைக்க வைக்கலாம்"/////
வாவ்! உங்க கற்பனா சக்தியையும், சிந்தனையையும் மனம் திறந்து பாராட்டுகிறேன்!//////
நன்றி மணியண்ணே.. தொடர்ந்து வாங்க.....!
சார், இந்தப் பார்ட்டும் மிகவும் விறுவிறுப்பாகவும், த்ரில்லாகவும் இருந்திச்சு! அடுத்த பகுதிக்கு ஆவலோடு வெயிட்டிங்க!
இதுமாதிரி நிறைய விஷயங்களை நீங்க எழுதணும் சார்! கண்டிப்பா என்னோட சப்போர்ட் இருக்கும்!
அண்ட், உங்ககிட்ட ஒரு துறையைப் பத்தின சில தகவல்களை அறிய ஆவல்! ஆனால், எங்க கேட்டா நீங்க கோவிச்சிடுவீங்களோன்னு பயமா இருக்கு சார்!
எனிவே, இதுமாதிரி இன்னும் நிறைய எழுதுங்க!வாழ்த்துக்கள்!
/////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
சார், இந்தப் பார்ட்டும் மிகவும் விறுவிறுப்பாகவும், த்ரில்லாகவும் இருந்திச்சு! அடுத்த பகுதிக்கு ஆவலோடு வெயிட்டிங்க!
இதுமாதிரி நிறைய விஷயங்களை நீங்க எழுதணும் சார்! கண்டிப்பா என்னோட சப்போர்ட் இருக்கும்!
அண்ட், உங்ககிட்ட ஒரு துறையைப் பத்தின சில தகவல்களை அறிய ஆவல்! ஆனால், எங்க கேட்டா நீங்க கோவிச்சிடுவீங்களோன்னு பயமா இருக்கு சார்!
எனிவே, இதுமாதிரி இன்னும் நிறைய எழுதுங்க!வாழ்த்துக்கள்!///////
நன்றி பாஸ், கேளுங்க..!
பூமியில் அந்தக் கல் மோதினால், கிட்டத்தட்ட உலகம் முழுதும் அழிந்துவிடும், யாரும் தப்ப முடியாது,///
இப்படி ஒரு நிலைமையில்...ஏன் அவர்கள் நேச நாடுகளிடம் உதவி கோர வில்லை? உதாரணமாக இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் கூட அந்த நியூக்ளியர் பாம் உள்ளதே? உலகமே அழியும் பட்சத்தில் இவர்கள் கொடுக்க மாட்டேன் என்றா சொல்லுவார்கள்?
//////வைகை said...

///////
அந்த காலகட்டத்தில் உலகெங்கும் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கதை செல்கிறது!
அந்த கல்லு வரும்போது நம்ம சின்ன டாகூடர் இளைய தலைவலிகிட்ட சொல்லி பூமிய கொஞ்சம் தள்ளி புடிச்சிக்க சொல்லலாம்ல? :))
பன்னிக்குட்டி ராம்சாமி said...
?
///////
அந்த காலகட்டத்தில் உலகெங்கும் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கதை செல்கிறது//
அப்ப ஓக்கே :)
முதல் பாகத்துல போட்ட மாதிரியே சில டெக்னிக்கல் ஆங்கில வார்த்தைகளை பிராக்கெட்டில் ஆங்கிலத்தில் உபரியாக தரலாமே?
இதே போஸ்ட்டை உங்க பிளாக்கிலும் போடலாம். அதிக வாசகர்களை சென்று சேரும்.. ( அதுக்காக டெரர் கும்மி யை குறை கூறும் நோக்கம் அல்ல)
//////சி.பி.செந்தில்குமார் said...
முதல் பாகத்துல போட்ட மாதிரியே சில டெக்னிக்கல் ஆங்கில வார்த்தைகளை பிராக்கெட்டில் ஆங்கிலத்தில் உபரியாக தரலாமே?
///////
ம்ம் அப்படித்தான் நினைச்சேன், இந்த பாகத்துல எல்லா வார்த்தைகளும் அதிகமா மீடியாக்கள்ல பயன்படுத்துற வார்த்தைகள்னு விட்டுடேன், எப்படியும் போட்டுடுறேன்....
////// சி.பி.செந்தில்குமார் said...
இதே போஸ்ட்டை உங்க பிளாக்கிலும் போடலாம். அதிக வாசகர்களை சென்று சேரும்.. ( அதுக்காக டெரர் கும்மி யை குறை கூறும் நோக்கம் அல்ல)/////
ஓகே சிபி, அங்க லிங் கொடுத்து போஸ்ட் போட்டுடலாம்னு இருக்கேன்.......
டேய் ..,என்ரா இது ,.,
இந்தக்கதையில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் வருவதை தவிர்க்க இயலாது, ஆனால் அதையும் மீறி வாசகனை படிக்கவைப்பதில் உங்களுக்கு வெற்றி தான் .
/////சி.பி.செந்தில்குமார் said...
இந்தக்கதையில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் வருவதை தவிர்க்க இயலாது, ஆனால் அதையும் மீறி வாசகனை படிக்கவைப்பதில் உங்களுக்கு வெற்றி தான் ./////
ஆமா சிபி, டெக்னிகல் மேட்டரை முடிந்தவரை எளிமையாக்க முயற்சிக்கிறேன்......
சி.பி.செந்தில்குமார் said...
இதே போஸ்ட்டை உங்க பிளாக்கிலும் போடலாம். அதிக வாசகர்களை சென்று சேரும்.. ( அதுக்காக டெரர் கும்மி யை குறை கூறும் நோக்கம் அல்ல)//
எங்கப்பன் குதிருக்குள் இல்லை..
"பூமியைத் தேடி... (பாகம் 2)"
பூமிங்கிறது காவலன் படத்துல சின்ன டாக்டர் பேறுதான? அவரை ஏன் தேடுறீங்க?
// வாங்க மாதவன் //
சாரி ரொம்ப லேட் ஆகிடிச்சு..
\\"மோர்கன், நீங்கள் சொல்வது கடைசிக்கட்ட நடவடிக்கை. பூமியைக் காக்க என்ன செய்யலாம் என்று வேறு ஏதாவது யோசனை சொல்லுங்கள்"
"ஆமா மிஸ்டர் ராபர்ட்சன், அது கடைசிக்கட்ட நடவடிக்கைதான், ஆனால் வேறு வழி இல்லைனுதான் தோனுது"//
இன்ன பண்ணிகுட்டி ஸார் வேறுவழியில்லை நொள்ளைனு சீக்கிரம் ஏதாவது பண்ண சொல்லுங்க ஸார், பயமாகீது.
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
"பூமியைத் தேடி... (பாகம் 2)"
பூமிங்கிறது காவலன் படத்துல சின்ன டாக்டர் பேறுதான? அவரை ஏன் தேடுறீங்க?//////
கரடிகிட்ட புடிச்சிகுடுக்கத்தான்
//////Madhavan Srinivasagopalan said...
// வாங்க மாதவன் //
சாரி ரொம்ப லேட் ஆகிடிச்சு..
//////
வாங்க மாதவன், பரவால்ல.....!
//////கும்மாச்சி said...
\\"மோர்கன், நீங்கள் சொல்வது கடைசிக்கட்ட நடவடிக்கை. பூமியைக் காக்க என்ன செய்யலாம் என்று வேறு ஏதாவது யோசனை சொல்லுங்கள்"
"ஆமா மிஸ்டர் ராபர்ட்சன், அது கடைசிக்கட்ட நடவடிக்கைதான், ஆனால் வேறு வழி இல்லைனுதான் தோனுது"//
இன்ன பண்ணிகுட்டி ஸார் வேறுவழியில்லை நொள்ளைனு சீக்கிரம் ஏதாவது பண்ண சொல்லுங்க ஸார், பயமாகீது.
///////
பார்ப்போம் அவங்க என்ன பண்ண போறாங்கன்னு......
கதை நல்லா போகுது..
வித்தியாசமா இருக்கு..
தொடர்ந்து எழுதவும்..
Nice
அப்போ நாமெல்லாம் என்ன பண்ணிட்டு இருப்போம் ?
/////Madhavan Srinivasagopalan said...
கதை நல்லா போகுது..
வித்தியாசமா இருக்கு..
தொடர்ந்து எழுதவும்..//////
நன்றி மாதவன்....
///மதியின் வலையில் said...
Nice///
நன்றி சார்!
////கோமாளி செல்வா said...
அப்போ நாமெல்லாம் என்ன பண்ணிட்டு இருப்போம் ?/////
எது எந்த காலகட்டம்னே நான் சொல்லலியே?
ஆய்...
நான் இங்கே வந்துட்டேன்..
மீண்டும் வணக்கம் பாஸ்.
இன்னைக்கும் டைம்மிங் ஓக்கே.
டபுள் ஓக்கே
இவ்வளவு விஷயம் இருக்கே உங்ககிட்ட, அப்புறம் ஏன் இவ்வளவு நாள் மொக்கயா போட்டுகிட்டு இருந்தீங்க?
”என்ன சொல்றீங்க மாதவன், நம்ம கிட்ட அவ்வளவு குண்டுகள் கைவசம் இருக்காதே, அணு ஆயுத நீக்க திட்டத்தை தீவிரமா உலகம் முழுக்க கொண்டு வந்து 15 வருசம் ஆகியாச்சு. அதுனால எல்லா அணு ஆயுதங்களையும் அழிச்சுட்டோம். நம்மிடம் இப்போ ரகசியமா வைக்கப்பட்டிருக்கும் 50 குண்டுகள்தான் கைவசம் இருக்கு. மிஸ்டர் க்ரெய்ட்டன், இப்போ அந்த விண்கல் எவ்வளவு தொலைவில் இருக்கு//
ஆகா...கதை இங்கிருந்து வேறு எங்கேயோ திரும்புதே சார்...
ஆகா...திரிலிங்கா கதை நகர்கிறது பாஸ்..
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்,
.எப்படி..? உங்கள் ட்ராக்கிங்கில் வரவில்லையா..... என்ன பிரச்சனை....?”//
ஆமா...ராபட்சனுக்கு எப்படி இது மட்டும் தெரிய்மாப் போச்சு..
அது தான் சஸ்பென்ஸா...
////// நிரூபன் said...
ஆய்...
நான் இங்கே வந்துட்டேன்..
மீண்டும் வணக்கம் பாஸ்.
இன்னைக்கும் டைம்மிங் ஓக்கே.
டபுள் ஓக்கே
//////
அப்ப எங்களுக்கும் ஓகே......
//////தயாளன் said...
இவ்வளவு விஷயம் இருக்கே உங்ககிட்ட, அப்புறம் ஏன் இவ்வளவு நாள் மொக்கயா போட்டுகிட்டு இருந்தீங்க?
//////
எல்லாம் கொஞ்சம் டென்சன் ஃப்ரீயா இருக்கத்தான்.......
//////நிரூபன் said...
”என்ன சொல்றீங்க மாதவன், நம்ம கிட்ட அவ்வளவு குண்டுகள் கைவசம் இருக்காதே, அணு ஆயுத நீக்க திட்டத்தை தீவிரமா உலகம் முழுக்க கொண்டு வந்து 15 வருசம் ஆகியாச்சு. அதுனால எல்லா அணு ஆயுதங்களையும் அழிச்சுட்டோம். நம்மிடம் இப்போ ரகசியமா வைக்கப்பட்டிருக்கும் 50 குண்டுகள்தான் கைவசம் இருக்கு. மிஸ்டர் க்ரெய்ட்டன், இப்போ அந்த விண்கல் எவ்வளவு தொலைவில் இருக்கு//
ஆகா...கதை இங்கிருந்து வேறு எங்கேயோ திரும்புதே சார்...
///////
ஹஹா இன்னும் திரும்பும்.....
/////நிரூபன் said...
ஆகா...திரிலிங்கா கதை நகர்கிறது பாஸ்..
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்,
//////
சீக்கிரமே போட்டுடுவோம்.....
//////நிரூபன் said...
.எப்படி..? உங்கள் ட்ராக்கிங்கில் வரவில்லையா..... என்ன பிரச்சனை....?”//
ஆமா...ராபட்சனுக்கு எப்படி இது மட்டும் தெரிய்மாப் போச்சு..
அது தான் சஸ்பென்ஸா...
////////
ஒவ்வொரு பாகமும் முடியும் போது அப்படித்தான்.......
நல்ல கதை!!
தொடருங்கள் தொடக்கமே விறுவிறுப்பை கூட்டுகிறது
சற்றும் எதிர்பார்க்கவில்லை...டெரர் அல்லது வெங்கட் அல்லது பெ.சொ.வி எழுதி இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். கலக்கறீங்க கோலவராக ராமு ! :-)
நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
///////ஜ.ரா.ரமேஷ் பாபு said...
நல்ல கதை!!
தொடருங்கள் தொடக்கமே விறுவிறுப்பை கூட்டுகிறது
//////
நன்றி ரமேஷ்..........
//////Radha said...
சற்றும் எதிர்பார்க்கவில்லை...டெரர் அல்லது வெங்கட் அல்லது பெ.சொ.வி எழுதி இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். கலக்கறீங்க கோலவராக ராமு ! :-)//////
நன்றிங்க......
//////Rathnavel said...
நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்./////
வாங்க சார், நன்றி!
எலேய் இங்கே என்னலேய் கொலைகொலையா முந்திரிகாயா விளையாடுறீங்க, பூமாதேவி சிரிக்கப்போறா மொத்தமா சாவப்போறீங்க என்னையும் அமலா பாலையும் தவிர....
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
"பூமியைத் தேடி... (பாகம் 2)"
பூமிங்கிறது காவலன் படத்துல சின்ன டாக்டர் பேறுதான? அவரை ஏன் தேடுறீங்க?//
பன்னியை கடுப்பெத்துரதுக்குன்னே விஜய் பேரை சொல்றான்ய்யா...
கோமாளி செல்வா said...
அப்போ நாமெல்லாம் என்ன பண்ணிட்டு இருப்போம் ?//
உன்னை தூக்கிபோட்டு மிதிச்சிட்டு இருப்போம்....
ஆஹா.. அணு ஆயுதமே இல்லாத காலமா? கேட்கிறத்துக்கு நன்றாகத்தான் இருக்கு!கதை நன்றாக போகிறது.பூமியை எப்படி காப்பாத்த போரீங்கன்னு பார்க்கலாம்.
ஆஃபீஸ்ல இருக்கேன்.தூக்கமா வருது..அப்புறமா படிக்கிறேன்..
பூமி காப்பாற்ற படுமா?
ஓ.. இது தான் எதிர்ப்பார்ப்போ?
///அது சரியாக 20-50 ஆண்டுகள் வரை ஆகலாம். அதுவரை அவர்கள் ஷட்டிலுக்குள்ளேயே செவ்வாயின் மேற்பரப்பில் தங்கி இருப்பார்கள். சரியானதும், திரும்ப பூமிக்கு வந்து மனித இனத்தை மீண்டும் தழைக்க வைக்கலாம்////
விண்வெளிக்கு அனுப்பப்ப்டௌபவர்கள், 20-50 வருடத்திற்கு பின் வந்து மனித இனத்தை உருவாக்குவது சாத்தியமா???
கதை அருமையாக சென்று கொண்டிருக்கிறது.. வாழ்த்துக்கள்
அழகு தமிழில் ஒரு அருமையான கதை
என்று என் வலையில்
உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..
///// MANO நாஞ்சில் மனோ said...
எலேய் இங்கே என்னலேய் கொலைகொலையா முந்திரிகாயா விளையாடுறீங்க, பூமாதேவி சிரிக்கப்போறா மொத்தமா சாவப்போறீங்க என்னையும் அமலா பாலையும் தவிர....///////
அண்ணே அமலா பால்லாம் அல்ரெடி ரிசர்வ்டுண்ணே...
////// MANO நாஞ்சில் மனோ said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
"பூமியைத் தேடி... (பாகம் 2)"
பூமிங்கிறது காவலன் படத்துல சின்ன டாக்டர் பேறுதான? அவரை ஏன் தேடுறீங்க?//
பன்னியை கடுப்பெத்துரதுக்குன்னே விஜய் பேரை சொல்றான்ய்யா...
////////
ஆமாங்கோ..... தூக்கி போட்டு மிதிச்சிடலாங்கோ....
////RAMVI said...
ஆஹா.. அணு ஆயுதமே இல்லாத காலமா? கேட்கிறத்துக்கு நன்றாகத்தான் இருக்கு!கதை நன்றாக போகிறது.பூமியை எப்படி காப்பாத்த போரீங்கன்னு பார்க்கலாம்.///////
வாங்க.... தொடர்ந்து படிங்க...நன்றி!
/////செங்கோவி said...
ஆஃபீஸ்ல இருக்கேன்.தூக்கமா வருது..அப்புறமா படிக்கிறேன்../////
யோவ் பகல் பூரா ஆபீஸ்ல தூங்கிட்டு நைட்டு பதிவ போட்டு கும்மியா?
////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
பூமி காப்பாற்ற படுமா?
ஓ.. இது தான் எதிர்ப்பார்ப்போ?
///////
ஆமா பாஸ்.......
///// Mohamed Faaique said...
///அது சரியாக 20-50 ஆண்டுகள் வரை ஆகலாம். அதுவரை அவர்கள் ஷட்டிலுக்குள்ளேயே செவ்வாயின் மேற்பரப்பில் தங்கி இருப்பார்கள். சரியானதும், திரும்ப பூமிக்கு வந்து மனித இனத்தை மீண்டும் தழைக்க வைக்கலாம்////
விண்வெளிக்கு அனுப்பப்ப்டௌபவர்கள், 20-50 வருடத்திற்கு பின் வந்து மனித இனத்தை உருவாக்குவது சாத்தியமா???
கதை அருமையாக சென்று கொண்டிருக்கிறது.. வாழ்த்துக்கள்
/////
வாங்க பாஸ், நன்றி!
அதுக்குத்தான் ஒரு முழுக்க முழுக்க self-sustaining ஸ்பேஸ்கிராஃப்ட் அதாவது காற்று,தண்ணி, உணவுகளை recycle பண்ண கூடிய வசதி உள்ள ஸ்பேஸ்கிராஃப்ட் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். இதெல்லாம் கூட செய்துவிடலாம், ஆனால் நீண்டநாள் விண்வெளியில் இருப்பதில் மிகப்பெரிய பிரச்சனை, கிராவிட்டி தான். கிராவிட்டி இல்லையென்றால் எலும்புகளில் இருந்து கால்சியம் வெளியேறி அவை மிருதுவாக ஆகிவிடும். இது குறுகிய கால விளைவே, நீண்டகால விண்வெளி பயணங்கள் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே 20-50 ஆண்டுகள் இருக்க வேண்டுமென்றால் கிராவிட்டி மிக மிக அவசியம். செவ்வாயில் சென்று தங்குவதால் கிராவிட்டி பிரச்சனையை சமாளித்து விடலாம்.
///// "என் ராஜபாட்டை"- ராஜா said...
அழகு தமிழில் ஒரு அருமையான கதை
//////
நன்றி சார்.
நன்றாக நகர்த்துகிறீர்கள்...ஸ்டார்ட்ரெக் பார்த்தமாதிரி அனுபவம்...கலக்குங்க..
/////ரெவெரி said...
நன்றாக நகர்த்துகிறீர்கள்...ஸ்டார்ட்ரெக் பார்த்தமாதிரி அனுபவம்...கலக்குங்க..
/////
நன்றி ரெவெரி....
நானும் காலையில் இருந்து பாக்கரேன் ஒரே கமெண்ட்ஸா வருதுப்பா.. சரி அப்படி என்னதான் இந்த நாய் எழுதி இருக்கு அப்படினு கடைசியில் வேற வழி இல்லாம நானும் திருட்டுதனமா வந்து படிச்சிட்டேன்... :)))
/////TERROR-PANDIYAN(VAS) said...
நானும் காலையில் இருந்து பாக்கரேன் ஒரே கமெண்ட்ஸா வருதுப்பா.. சரி அப்படி என்னதான் இந்த நாய் எழுதி இருக்கு அப்படினு கடைசியில் வேற வழி இல்லாம நானும் திருட்டுதனமா வந்து படிச்சிட்டேன்... :)))
///////
அடிங்..... இது ரெண்டாவது பார்ட்டு, போய் ஃபர்ஸ்ட் பார்ட் படிச்சிட்டு வா....
//அடிங்..... இது ரெண்டாவது பார்ட்டு, போய் ஃபர்ஸ்ட் பார்ட் படிச்சிட்டு வா....//
நாங்க எல்லாம் மூனாவது பார்ட்டே படிச்சவங்க... :)
(எழுதி கொடுத்தவன் கிட்டே எகத்தாளம் பேசர நீ)
//////TERROR-PANDIYAN(VAS) said...
//அடிங்..... இது ரெண்டாவது பார்ட்டு, போய் ஃபர்ஸ்ட் பார்ட் படிச்சிட்டு வா....//
நாங்க எல்லாம் மூனாவது பார்ட்டே படிச்சவங்க... :)
(எழுதி கொடுத்தவன் கிட்டே எகத்தாளம் பேசர நீ)////////
மச்சி இது டைப் பண்ணது.....
@பன்னிகுட்டி
//மச்சி இது டைப் பண்ணது.....//
நீ இங்கிலிஷ்ல சொல்ற நான் தமிழ்ல சொன்னேன்.. :))
போடா போய் கதையோட ஆரம்பத்துல முதல் பார்ட் லிங்க கொடு... அதே மாதிரி முன்னாடி பார்ட்ல இந்த லிங்க கொடு... அய்யய்யய காலம்பூர இவனுங்களுக்கு தொழில் சொல்லி கொடுத்தே டைம் போகுது... :))
74
75
/////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி
//மச்சி இது டைப் பண்ணது.....//
நீ இங்கிலிஷ்ல சொல்ற நான் தமிழ்ல சொன்னேன்.. :))
போடா போய் கதையோட ஆரம்பத்துல முதல் பார்ட் லிங்க கொடு... அதே மாதிரி முன்னாடி பார்ட்ல இந்த லிங்க கொடு... அய்யய்யய காலம்பூர இவனுங்களுக்கு தொழில் சொல்லி கொடுத்தே டைம் போகுது... :))////////
அட ஆமால்ல..... இருந்தாலும் பாகம் 2 னு போடுறோம்ல,அப்போ பாகம் ஒண்ண படிச்சிட்டு வரமாட்டாங்களா?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
ஆஃபீஸ்ல இருக்கேன்.தூக்கமா வருது..அப்புறமா படிக்கிறேன்../////
யோவ் பகல் பூரா ஆபீஸ்ல தூங்கிட்டு நைட்டு பதிவ போட்டு கும்மியா?//
ஹி..ஹி.
ஜயா வணக்கமுங்க...அம்மா வணக்கமுங்க.......நான் தாங்க ஸ்டையில் நாராயணன் கஞ்சிபஜார் வலைப்பதிவின் உரிமையாளர்.இன்றைக்குதானுங்க வலைப்பதிவு எழுதவந்து இருக்கேன்.
என்னையும் இந்த வலையுலகில் ஏற்றுக்கொள்ளுங்கள் பிரபல பதிவர் பெருமக்களே..நீங்களை எல்லாம் வந்து விடுவீங்கனு நினைக்கிறன்.....எனவே எல்லா பிரபல பதிவரும் வாருங்க உங்க ஆதரவை அள்ளிதாருங்க.
அருமையா இருக்கு சார்..அப்பறம்..பூமிகாவைத்தேடினு ஒரு பதிவு போடுங்க...ஜ ஆம் வெயிட்டிங்..ஹி.ஹி
அவங்க மீட்டிங்க் ரூம்ல நாமளும் ஒரு ஓரமா உக்காந்து இருப்பதுபோல இருக்கு.
ஹி ஹி ஹி ....
ஜூப்பரு அண்ணே!
#35 KM Dia of Stone....
எம்மாம் பெருசு?!
///இரண்டிற்கும் சேர்த்து நமக்கு 5 டன் எடையுள்ள 200 குண்டுகள் தேவைப்படலாம்”////
ஏன்?
கொஞ்சம் வெளக்கவும்....
///அது அஸ்டிராய்ட் பெல்ட்டில் இருக்கிறது, இன்னும் 173 நாட்கள், 7 மணி, 24 நிமிடத்தில் பூமியில் வந்து மோதிவிடு///
Why don't we try artificial gravity methods?
#Practically possible while you define the speed of the stone, as you defined the diameter.
///எவ்வளவு தொலைவில் இருக்கு?”
”அது அஸ்டிராய்ட் பெல்ட்டில் இருக்கிறது, இன்னும் 173 நாட்கள், 7 மணி, 24 நிமிடத்தில் பூமியில் வந்து மோதிவிடும்”///
Our attack might be done after crossing Asteroid belt., i.e. after crossing mars....
ஆனா, மார்ஸ் மேல மோதிட்டா பிராப்ளம் சால்வ் ஆகாம, ரொம்பப் பெரிய பிரச்சனைல கொண்டு போயிவிடுமே?
///இல்ல சார். நம்மகிட்ட இப்போ என்ரிச்டு ஃப்யூயல் (Enriched fuel) ஸ்டாக் கிடையாது, ஆக்டிவ் நியூகிளியர் ரியாக்டர்சும் (Active nuclear reactors) எதுவும் இல்ல///
யோவ்.... உசேன தூக்குல போடப்பட்டபோது ஆட்டையப் போட்டதெல்லாம் எங்க போச்சு?
///சரியானதும், திரும்ப பூமிக்கு வந்து மனித இனத்தை மீண்டும் தழைக்க வைக்கலாம்"////
ஹி ஹி ஹி ஹி.....
///நாசாதானே பூமிக்கருகே வரக் கூடிய ஆபத்தான பொருள்களை ட்ராக் செய்து வருகிறது? ஆனா இந்தக் கல் திடீரென்று வந்திருக்கே....எப்படி..? உங்கள் ட்ராக்கிங்கில் வரவில்லையா..... என்ன பிரச்சனை....?”////
ஆமாங்கோ...
எப்பூடி மிஸ் ஆச்சு?
எல்லாம் மப்பப் போட்டுட்டு கோட்டை விட்டுடாங்களா?
//Our attack might be done after crossing Asteroid belt., i.e. after crossing mars....
ஆனா, மார்ஸ் மேல மோதிட்டா பிராப்ளம் சால்வ் ஆகாம, ரொம்பப் பெரிய பிரச்சனைல கொண்டு போயிவிடுமே?///
Asteroid belt' ல ஏற்கனவே நடக்குற, கொலிசன்ல(Collision) இந்தக் கல்லையும் சேத்துட்டா?
#ஆனா, அவ்வளவு குறுகிய காலத்துல அங்க போக சான்ஸே இல்ல.... அவ்வ்வ்வ்வ்வ்.....
கமண்ட்ஸ் கையிருப்பு இல்லை...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
யாராவது வாங்களேன்...
இந்த பூமியைக் காப்பாத்துங்களேன்...
இது 91
92
94
95
96
97
98
99
பிம்பிளிக்கி பியாப்பி!
#வடை, வடை....
நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள்
இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5
தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5
//////வெளங்காதவன் said...
///இரண்டிற்கும் சேர்த்து நமக்கு 5 டன் எடையுள்ள 200 குண்டுகள் தேவைப்படலாம்”////
ஏன்?
கொஞ்சம் வெளக்கவும்....////////
இது அந்த கல்லின் எடை, அடர்த்தி, வேகத்தை வைத்து கணக்கிடலாம்.
//////வெளங்காதவன் said...
///அது அஸ்டிராய்ட் பெல்ட்டில் இருக்கிறது, இன்னும் 173 நாட்கள், 7 மணி, 24 நிமிடத்தில் பூமியில் வந்து மோதிவிடு///
Why don't we try artificial gravity methods?
#Practically possible while you define the speed of the stone, as you defined the diameter.
///////
Artificial gravity might not be helpful to deflect an object.
Post a Comment