Wednesday, September 21, 2011

பூமியைத் தேடி... (பாகம் 5)





மாதவனிடம் இருந்து சிமுலேசன் கணக்கீடுகள் லாஸ் அலமாஸ் வந்து சேர்ந்தது. எதிர்பார்த்தது போலவே தாக்குதலுக்கு மிக அதிகமான துல்லியம் தேவையாக இருந்தது. கணேஷ், லாஸ் அலமாஸ் இயக்குனர் ஜார்ஜுடன் அதைப் பற்றி விவாதிக்க முடிவு செய்தார்.

”ஜார்ஜ், உங்களுக்கே தெரியும், அவ்வளவு பெரிய ராக்கெட்டை மாதவன் கொடுத்துள்ள லிமிட்டிற்குள் குறிதவறாமல் சென்று தாக்க வைப்பது சாத்தியமல்ல. மேலும் நமது ஸ்பேஸ் ராக்கெட்டுகள் துல்லியமான தாக்குதலுக்காக தயாரிக்கப்பட்டவை கிடையாது”

”கணேஷ், நானும் இதை பற்றி யோசித்தேன், ஆனால் நமக்கு வேறு வழியில்லை. நீங்க ஏதாவது ஒரு திட்டத்துடன் வாங்க”

கணெஷ் சற்றே வருத்தமான தனது அலுவலக அறைக்கு திரும்பினார். அவருக்கு என்ன செய்யலாம் என்று புரியவில்லை. சிறிது நேரம் தீவிர சிந்தனையில் இருந்தவர், வெளியே கிளம்பினார். அவர் மனம் முழுதும் ராக்கெட்டுகளைப் பற்றியே எண்ணங்கள் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தன. அவர் பின் ஏதோ ஒரு எண்ணம் வந்தவராக நேவிகேசன் சிஸ்டம்ஸ் எஞ்சினியர் க்ளுவர்ட்டின் அலுவலக அறைக்குச் சென்றார். நேவிகேசன் சிஸ்டங்களை உருவாக்கி, ராக்கெட்டில் பொருத்தி பரிசோதனைகள் செய்து அவற்றைத் தயார் செய்யும் முக்கிய பணி க்ளூவர்ட்டினுடையதுதான். அவர் உதவியில்லாமல் கணேஷ் நேவிகேசனல் சிஸ்டம் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியாது. எனவே கணேஷ் க்ளூவெர்ட்டையும் கலந்து ஆலோசிக்க முடிவு செய்தார்.

கணேஷ் அனைத்தையும் சொன்னவுடன், க்ளூவெர்ட் சற்று நேரம் நம்பமுடியாமல் அதிர்ச்சியில் மௌனமாக அமர்ந்திருந்தார். பின் மேற்கொண்டு செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி நீண்ட நேரம் விவாதித்தனர். பல்வேறு சாத்தியக்கூறுகளும் அலசப்பட்டன.  தேசிய ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில் (National Missile Defense System - NMDS) பயன்படுத்தப்படும் நேவிகேசன் சிஸ்டத்தை பற்றியும் பேச்சு வந்தது. NMDS-ல் தான் இருப்பதிலேயே   அதிகமான துல்லியம் கொண்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே NMDS நேவிகேசன் சிஸ்டங்களை முயற்சி செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

கணேஷ் இயக்குனர் ஜார்ஜை தொடர்பு கொண்டு NMDS பற்றிச் சொல்லி அவர்களைத் தொடர்பு கொள்ள அனுமதி வாங்கினார். NMDS-ல் செயல் இயக்குனராக வேலை செய்து வரும் ராதிகாவை தொடர்பு கொண்டார்.

ராதிகா அவரது ஆராய்ச்சிக்கால ஆய்வக வகுப்புத் தோழி. NMDS திட்டம் முன்பு லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வகத்தின் கீழ் இருந்த போது சில வருடங்கள் இருவரும் ஒன்றாக பணி புரிந்திருந்தனர். ராதிகாவும் கணேசும் காதலித்து பிரிந்தவர்கள், ஆனால் ஏனோ சேரவில்லை. இருப்பினும் அவர்களைடையே நல்ல நட்பு நிலவியது.

சில விசாரிப்புகளுக்குப் பின்னர், பேச்சு தேசிய ஏவுகணைத்தடுப்பு திட்டத்திற்கான நேவிகேசனல் சிஸ்டம் பற்றி திரும்பியது. கணேஷ் அதுபற்றி மேலதிக விபரங்களைக் கேட்டறிந்தார். அவருக்கு அது நிச்சயம் ராக்கெட்டிற்குத் தேவையான துல்லியத்தை அளிக்கும் என்று பட்டது. உடனே அவர் அது சம்பந்தமாக க்ளூவெர்ட்டையும் சேர்த்துக்கொண்டு சில  கணக்கீடுகளைச் செய்ய ஆரம்பித்தார்

இடைஇடையே ராதிகாவையும் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொண்டபடி வேலையைத் தொடர்ந்தனர். முடிவில் அந்த புதிய நேவிகேசனல் சிஸ்டத்தை ராக்கெட்டில் பொருத்தி முதற்கட்ட ஆய்வக பரிசோதனை நடத்துவது என்று திட்டமிட்டனர். கணேஷ், ஜார்ஜிடம் தனது திட்டத்தைச் சொன்னார், கேட்டவுடன் ஜார்ஜ் மிகுந்த உற்சாகம் அடைந்தார். உடனடியாக NMDS-சில் இருந்து அந்த நேவிகேசனல் சிஸ்டம்சை கொண்டு வந்தனர்.

அவற்றை ராக்கெட் முன்மாதிரியில் ஏற்கனவே செய்த கணக்கீடுகளின் படி பொருத்தினர். NMDS பயன்படுத்தும் ஏவுகணைகள் ட்ராக்கிங் செயற்கோள் மூலமாக பெறப்படும் ஜிபிஎஸ் புள்ளிகளை வைத்தே தன் பாதையை அறிந்து செல்லும், தான் தாக்க வேண்டிய பொருள்களை அது ஜிபிஎஸ், மற்றும் அப்பொருளின் வெப்பத்தை அடிப்படியாக வைத்து மூலமாக தேடிச் செல்லும். முதல் தலைமுறை NMDS  வெப்பத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. பின்பு லேசர் அலைக்கற்றையையும் பயன்படுத்தித் தனது பாதையைத் தேர்ந்தெடுத்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டது. அதில் இருக்கும் வெப்பம் உணரும் (IR-CCD) கேமராவும் பலமடங்கு மேம்படுத்தப்பட்ட ஒன்று. எனவே அது இப்போது மிகத் துல்லியமாக தாக்க முடியும். அது இப்போதைய விண்கல் திட்டத்திற்கு போதுமானதாக இருக்கும்.

இடையிடையே ஜனாதிபதி ராபர்ட்சன், முன்னேற்றங்களைக் கேட்டறிந்தார். ராக்கெட் நேவிகேசன் சிஸ்டத்தை ராகெட்டில் பொருத்தி பரிசோதிக்க ஆர்மபித்தார்கள். முதல் கட்ட பரிசோதனை வெற்றி பெற்றது. கணேஷ் மிகுந்த உற்சாகமாக இருந்தார். இனி அடுத்த கட்ட டெஸ்டிங் பண்ணனும். அங்குதான் பிரச்சனை தொடங்கியது

NMDS சிஸ்டங்கள் நேரடியாக ஒரு செயற்கைக் கோள் கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் வண்ணமாக வடிவமைக்கப் பட்டவை. அவற்றிற்கு செயற்கைக் கோளில் இருந்து தொடர்ந்து வழிகாட்டும் சிக்னல்கள் தரப்பட வேண்டும். அது பூமிக்குள்ளேயே பயன்படுத்தப்படும் ஏவுகணைகளுக்கு போதுனானதாக இருந்தது, ஆனால் இப்போதோ அவற்றை விண்வெளியில் பயன்படுத்த வேண்டி இருப்பதால் அவற்றிற்கு அங்கேயும் தொடர்ந்து வழிகாட்டும் சிக்னல் தரவேண்டுமே? 


(தொடரும்...)

32 comments:

Unknown said...

மாப்ள தொடர் கலக்கலா போகுது தொடருகிறேன் நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி மாப்ள......

MANO நாஞ்சில் மனோ said...

நானும் வந்துட்டேன் ராக்கெட்டில் பயணம் செய்ய...

MANO நாஞ்சில் மனோ said...

புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.

இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்

- பூமியைத் தேடி... (பாகம் 4)
- பூமியைத் தேடி... (பாகம் 3)
- பூமியைத் தேடி... (பாகம் 2)
- பூமியைத் தேடி...
- நண்பேன்டா...!! ( ஹி., ஹி., ஹி..!! )

சன்னலை மூடு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.
//////

ஹஹ்ஹா தமிழ்மணம் டார்ச்சர் தாங்கல...... என்ன பண்றது...!

Mohamed Faaique said...

அந்தரத்துல டவர் அமைக்க முடியாதா??? செயற்கை கோலுல்லு சிக்னல் கிடைக்க...

TERROR-PANDIYAN(VAS) said...

இவனுக்குள்ளையும் என்னமோ இருந்து இருக்கு பாரேன்.. என்னமா பின்றான். சூப்பர் மச்சி...

(அடுத்த பார்ட் சீச்சிரம் போடுடா வெண்னை)

எஸ்.கே said...

இன்னும் எத்தனை பாகம் உள்ளது?

rajamelaiyur said...

Super scientific story . . . Kalakkal

rajamelaiyur said...

Really super story

வெளங்காதவன்™ said...

////எஸ்.கே said...

இன்னும் எத்தனை பாகம் உள்ளது?///

ஹி ஹி ஹி...

ஜூப்பரு.......

#ராதிகாவுக்கு இன்னும் கண்ணாலம் ஆகலியா- by டெரர்...

மொக்கராசா said...

ரெம்ப நல்லா இருக்கு ராம்ஸ் ....

வெளங்காதவன்™ said...

இன்னும் தமிழ்மணம் ரகளை பண்ணுது அண்ணே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அன்புள்ள பன்னிக்குட்டிக்கு,

தீபாவளி அன்று எனக்கு ராக்கெட் தேவைபடுகிறது. ஒரு டஜன் அனுப்பவும்

சக்தி கல்வி மையம் said...

தொடர் சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்...

அனுபவமா? முயற்சியா?

வெளங்காதவன்™ said...

முக்கி மொனகி த.ம. ல மொத ஓட்டு போட்டுட்டேன்....

RAMA RAVI (RAMVI) said...

அருமையாக செல்கிறது கதை.அடுத்த பகுதிகளை உடனடியாக படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாகிறது.

வைகை said...

கதை அருமையான பாதையில் பயணிக்கிறது.... :))

வைகை said...

அன்புள்ள பன்னிக்குட்டிக்கு,

தீபாவளி அன்று எனக்கு ராக்கெட்டில் கட்டி அனுப்ப ரமேஷ் போல ஒரு ஆள் தேவைப்படுகிறது.. முடிந்தால் ரமேஷையே அனுப்பவும்.

நன்றி :))

குறையொன்றுமில்லை. said...

தொடர் நல்லா விறு விறுப்பா போகுது.
அடுத்து என்ன, என்னன்னுன்னு எதிர்பார்க்கவைக்குது.

M.R said...

தொடர் அருமை நண்பரே தொடர்கிறேன்

Madhavan Srinivasagopalan said...

// ராதிகா அவரது ஆராய்ச்சிக்கால ஆய்வக வகுப்புத் தோழி. //

செல்லமான சித்தியா ?

நிரூபன் said...

தாக்குதல் பற்றிய எதிர்பார்ப்பினை மனதிற்குள் தந்து தொடர் நகர்கிறது.
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

K.s.s.Rajh said...

சாரி தலவரே..கொஞ்சம் லேட்டாகிடுச்சி......கலக்கல் தொடர்பாஸ்....ஆர்வமா படிக்கின்றேன்..அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

செல்வா said...

//கதை அருமையான பாதையில் பயணிக்கிறது.... :))//

துல்லியமான இலக்கினைத் தாக்குமாறு அதனை எழுத்தாளர் வடிவமைத்துள்ளார் :))

செங்கோவி said...

ஐய்யா...நான் சொன்ன மாதிரியே பொம்பளை சயிண்டிஸ்ட் வந்துட்டாங்க..

அண்ணே, அப்படியே உங்க மலரும் நினைவுகளை மிக்ஸ் பண்ணுங்கண்ணே!

செங்கோவி said...

ப்யூர் டெக்னிகல் மேட்டரை எங்களுக்கும் புரியற மாதிரி சொல்றதுக்கு நன்றிண்ணே.

Anonymous said...

செங்கோவி நிம்மதியா தூங்கி இருப்பார்...

K said...

ஸாரி, தல, அங்க இங்க அலைஞ்சேனா, இந்தப் பதிவ கவனிக்காம உட்டுட்டேன்! தோ, படிச்சுட்டு வர்ரேன்!

K said...

ஆஹா ஏவுகணைக்குள்ல லைட்டா ஒரு காதல் கணையும் எட்டிப் பார்க்குறமாதிரி கெடக்கு! ( இரும்பிலே ஒரு இருதயம் முழைக்குதோ )அந்தக் காதல அப்படி லைட்டா சொல்லிட்டு விட்டா எப்புடி, கொஞ்சம் எலாபரேட் பண்ணுங்க!

அப்போத்தான் இன்னும் கதை சூடுபிடிக்கு! ( வீ வாண்ட் ஹாட்! )

எனிவே, கதை சூப்பரா போகுது! கீப் கண்டினியூ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி நண்பர்களே....