Friday, September 2, 2011

Hunt For Hint - விடைகள் (16 - 25)

Hunt For Hint - போட்டியின் முதல் 15 கேள்விகளுக்கான விடைகளை ஏற்கனவே பார்த்தோம். இப்போ மீதி 10 கேள்விகளுக்கான விடைகள்.


Level 16:
இது கிரிக்கெட் சம்பந்தமான கேள்வினு எல்லோருக்குமே தெரியும். ஆனா, Sachin = 1, Afridi = 43, Jayasuriya = 31, Ponting = ? இது என்ன Statistics. இந்த நம்பர் எல்லாம் அவங்க் விளையாடின Twenty Twenty International matches. இதறகான விடை 17. சும்மா 1ல இருந்து தொடர்ந்து நம்பர் போட்டு ட்ரை பண்ணி இருந்தீங்கனா விடைய கண்டுபிடிச்சி இருக்கலாம் (குறுக்கு வழி).
இது வரை சச்சின் ஒரே ஒரு T20I தான் விளையாடி இருக்காரு. அதுவும் அது இந்தியா விளையாடிய முதல் T20I.

Level 17:
இது ஒரு இண்ட்ரஸ்டிங் லெவல். இது Letter Frequency சம்பந்தமானது. ஒவ்வொரு பாஷையிலும் ஒரு குறிப்பிட்ட ஆங்கில எழுத்தை எவ்வளோ oftenஆ பயன்படுத்தறோம்னு ஒரு கணக்கு இருக்கு. இதை வெச்சி உருவான லெவல் இது. Letter Frequency பற்றி மேலும் தகவல்களுக்கு இங்க போய் பாருங்க.

இந்த கேள்வி கடினம்னு தெரியும் அதனால பல க்ளூகளை வெச்சி இருந்தோம். டைட்டில் Linguistics அதாவது Language. இமேஜ் பேரு Letter. அதுல இருக்கற Hertz ஒரு மறைமுக க்ளூ. அதுக்கு frequecny. இந்த மூண்றையும் கூகுள் சர்ச் செய்தா உங்களை Letter frequency wikipedia page க்கு சுலபமா கொண்டு போயிருக்கும்.

அடுத்து அந்த google extension. சும்மா அதை ஒரு Browserல போட்டு இருந்தா நாடு பேரு கிடைச்சி இருக்கும் அப்புறம் என்ன? அந்த datasஐ அந்த நாட்டு பேரோட கொடுத்த விக்கிபீடியா பேஜ்ல மேட்செய்தால் விடை கிடைச்சிடும்.

கொஞ்சம் பெரிய வேலைதான் ஆனாலும் சுவாரசியம்ல. எங்கள் கேள்வி வடிவமைத்த குழுவுக்கே மிகவும் பிடித்த லெவல் இதுதான். விடை : England

Level 18:
இந்த லெவல்ல கொடுத்த படத்தை கூகுள் சர்ச் செய்தா நேரா விடைக்கான லீட் கிடைச்சிடும். ஆனா கொடுக்க வேண்டிய வார்த்தைதான் முக்கியம். Fried Chicken ல சிக்கன் எடுத்துடுங்க Fried + பணத்தோட இருக்க ஆளுக்கு Rich + mise ல கடசி 2 எழுத்த மாத்தி போட்டா mies + cherry ல கடைசி 2 எழுத்து எடுத்தா cher. Friedrich miescher கிடைக்கும். இவர் DNA வை கண்டுபிடிச்சவர். Urlல இருக்கற Discoverக்கு பதிலா DNA போட்டா அந்த லெவல் முடிஞ்சது.

Level 19:
இந்த படத்துல இருக்கற Life, Box  of Choclate இதை கூகுள் செய்தால் Life is a box of chocolate கிடைக்கும். இது ஒரு பேமஸ் டயலாக். Forrest Gump என்ற அருமையான உலக படத்துல வரும். படத்தின் பேருதான் விடை

Level 20:
இந்த லெவல் பலரை குழப்பிடுச்சி. ஒரு யானை + பார்வையற்றவர்கள்... என்ன செய்வாங்க? தடவுவாங்க. பார்வையற்றவர்கள் தடவுறது தான் க்ளூ படத்தை நல்லா பார்த்தீங்கனா யானையை சுற்றி நட்சத்திரங்கள் இருக்கும் கூடவே யானைக்கு கீழ சில புள்ளிகள் இருக்கும். அது புள்ளிகள் கிடையாது, பார்வையற்றவர்கள் படிக்க உபயோகிக்கும் Braille code. அதை convert செய்தால் கிடைக்கும் விடை Good Job.

Level 21:
இந்த லெவலில் இருக்கும் படத்தை கண்டுபிடிக்கனும். விடை சொன்னா ஆச்சர்யப்படுவீங்க, Windows XP ல வரும் Default Desktop Wallpaper image ஆன Bliss.jpg தான் இந்த இடம். ஆனால் நாங்கள் கொடுத்த படம் 2006ல் எடுக்கப்பட்டது. ஒரே இடம், 10 வருட மாற்றம். மேலும் விவரங்களுக்கு இங்க போய் பாருங்க.


Level 22:
வேகமாக முன்னேறி வந்த பலருக்கு பிரேக் போட்ட லெவல் இது. ஒரு Baker, Devil, Measuring tape இந்த படங்களை கொடுத்து இருந்தோம். Baker, Devil இந்த பெயர்களை அப்படியேவும் measuring tapeக்கு பதில் Measurementனும் கூகுள் செய்து இருந்தால் விடையை கண்டுபிடிக்கலாம். விடை: Baker's Dozen. இது பற்றிய சுவாரசியகதை இருக்கு. விருப்பம் உள்ளவர்கள் இங்கு சென்று படித்துக்கொள்ளவும்.

Level 23a:
இந்த லெவல் ஏறக்குறைய Level 19 போலவே தான். இதுவும் ஒரு உலகப்படத்தின் ஃபேமஸ் டயலாக். கொடுத்த Fish, Friends, not food இந்த வார்த்தைகளை கூகுள் செய்தால் “Fish are Friends, Not Food” என்ற Finding Nemo படத்தின் பெயர் வரும். அதுதான் விடையும்

Level 23b:
இந்த லெவல் 23a வின் தொடர்ச்சி. ஒரு மீன் படம் போட்டு “Speak For Me” என்று கொடுத்து இருந்தோம். அதாவது மீனுக்காக பேசுங்கள். Finding nemo படத்தில் Nemo மீனுக்காக பேசியவர் “Alexander Gould”. இதுதான் விடை

Level 24:
இந்த லெவலில் அந்த படம் பாபிலோனின் தொங்கும் தோட்டம்னு பலர் கண்டுபிடிச்சாச்சு. ஆனா அந்த பறவை மாதிரி இருக்கறது என்னன்னு நல்லா குழப்பிக்கிட்டாங்க. Babylon symbolsனு கூகுள் செய்தால் கண்டுபிடிக்கலாம். அது ஒரு பாபிலோனிய எண். 40 என்பதை அப்படிதான் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.  
விடை : 40
Level 25:
முழுகிணத்தை தாண்டிட்டு பலர் இந்த லெவல்ல மாட்டிகிட்டாங்க. இது உங்க பொறுமையை சோதிச்ச லெவல். கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒவ்வொரு pixelஆ தேடனும். ஒரு புள்ளி கீழே இடது பக்கத்துல இருக்கும் அதை டபுள் கிளிக் செய்தால் நீங்க ஹால் ஆப் ஃபேம்ல நுழைஞ்சிடலாம்.
இவ்வளவு நேரம் மூளைக்கு வேலை கொடுத்துட்டு, இப்படி ஒரு மொக்கையான லெவல் வெச்சி இருக்கீங்கனு பலர் கம்பிளைண்ட் செய்தாலும் இதுவும் ஒரு வித லெவலே, இதையும் கடந்தால் தான் ஹால் ஆப் பேம் என்பது தான் நடுவர்களின் முடிவாக இருந்தது.

இத்துடன் கேம் அஃபிஷியலாக நிறைவு செய்யபடுகிறது. கேம் சைட் தொடர்ந்து செயல்படும். விளையாட விருப்பமுள்ளவர்கள் தொடர்ந்து விளையாடலாம். ஆதரவு வழங்கி அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

மீண்டும் விரைவில் புதிய கேள்விகளுடன் சந்திப்போம்.


14 comments:

ravi said...

enna boss bloopers kaanum..

Prabu Krishna (பலே பிரபு) said...

அருமையான விளையாட்டு. ஒவ்வொன்றையும் சோதிக்கும் போதுதான் எனக்குள்ளும் எதோ இருக்குன்னு தெரிஞ்சது ஹி ஹி ஹி

ரொம்ப நன்றி டெர்ரர் கும்பல்ஸ்

Abdul Basith said...

லெவல் 22, 24, 25 மாதிரி ஈசியான கேள்விகளெல்லாம் அடுத்த தடவை கேட்கக்கூடாது. வேணும்னா லெவல் ஒன்னு மாதிரி கஷ்டமான கேள்வியா கேளுங்க!

:) :) :)

அடுத்த போட்டிக்காக நாங்க ரெடி! நீங்க ரெடியா?

:) :) :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:))

எஸ்.கே said...

இந்த கேமிற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வரவேற்பு கிடைத்தது. அதனை அளித்த அனைவருக்கும் மிகுந்த நன்றிகள்! அடுத்த முறை இன்னும் சிறப்பாக இந்த விளையாட்டை அளிக்க முயல்கிறோம். மிக்க மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறோம்! நன்றி!

மாரி-முத்து said...

For level 25: Instead of searching pixel by pixel, you can press tab key. This will show you where to double click. I mentioned this clue in forum.

செங்கோவி said...

விடையே இத்தனை பார்ட்டா வருதே..கண்டிப்பா இதைப் பண்ண நீங்க புத்திசாலிங்க தான்.

ரசிகன் said...

// Baker, Devil இந்த பெயர்களை அப்படியேவும் measuring tapeக்கு பதில் Measurementனும் கூகுள் செய்து இருந்தால் விடையை கண்டுபிடிக்கலாம். விடை: Baker's Dozen.//

ரொம்ப ஈசியா சொல்லிட்டீங்க.. மண்ட உடஞ்சி எத்தன தையல் போட்டுகிட்டோம்னு எங்களுக்கு தான் தெரியும். :)

கோமாளி செல்வா said...

ரொம்ப ஈசியா சொல்லிட்டீங்க.. மண்ட உடஞ்சி எத்தன தையல் போட்டுகிட்டோம்னு எங்களுக்கு தான் தெரியும். :)//

அட அட , விடுங்க அடுத்த தடவ ஒரு டாக்டர் ஏற்பாடு பண்ணிடறோம் :))

கலாநேசன் said...

Thanks for fantastic experience. Proud to be in hall of fame list. Eagerly waiting for the next game.

சதீஷ் மாஸ் said...

என்ன கொடுமடா இது... ஆனா ரொம்ப இன்டரஸ்டா இருக்கு... அடுத்த போட்டிக்கு நானும் வரேன்....

raamaarun (இராம அருண் ) said...

Lvl 16 - I used that shortcut only, since i cant find the relations among the number,
Lvl 17 - Tricky but ok
lvl 18 - Good one
Lvl 19 - I struggled to find what to put in the text box
Lvl 20 - Took Time but finally done
Lvl 21 - Clues helped a lot
Lvl 22 - Again clues helped
Lvl 23a - With Clues it was easy
Lvl 23b - Not enough clues in the beginning, later few helped me getting the correct clue
Lvl 24 - Good one Clues helped to the most
Lvl 25 - Clues & Search helped me

raamaarun (இராம அருண் ) said...

I would like to thank entire Terror Kummi Team for organizing such an treat to the brain, Long live team, keep doing this regularly

Hari said...

level 18 ku iniku dhan answer kandupidichan. yella kelvium padatha vechi iruku.aana romba interesting ah iruku.

Thanks to Terror kummi Team.