Friday, September 23, 2011

பூமியைத் தேடி... (பாகம் 6)NMDS சிஸ்டங்கள் நேரடியாக ஒரு செயற்கைக் கோள் கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் வண்ணமாக வடிவமைக்கப் பட்டவை. அவற்றிற்கு செயற்கைக் கோளில் இருந்து தொடர்ந்து வழிகாட்டும் சிக்னல்கள் தரப்பட வேண்டும். அது பூமிக்குள்ளேயே பயன்படுத்தப்படும் ஏவுகணைகளுக்கு போதுனானதாக இருந்தது, ஆனால் இப்போதோ அவற்றை விண்வெளியில் பயன்படுத்த வேண்டி இருப்பதால் அவற்றிற்கு செயற்கோள் சிக்னல் அவசியம்.

கணேஷ் உடனடியாக நாசாவின் செயற்கைக் கோள் தகவல் மையத்தை தொடர்பு கொண்டார். அங்கு அவருக்கு நண்பர்கள் உண்டுஅவர்கள் JPL ஐ (Jet Propulsion Laboratory) தொடர்பு கொள்ளுமாறு கூறினர். JPL – லில் தான் நாசாவின் தொலைதூர செயற்கைக் கோள்களுக்கான சிறப்புக் கட்டுப்பாட்டு மையமும், அவற்றிற்கான நேவிகேசன் சிஸ்டமும் இருந்தன. JPL தொலைதூர செயற்கோள்களை வழிகாட்ட AMMOS (Advanced Multi-Mission Operations System – AMMOS) என்னும் கட்டுப்பாட்டு மையத்தை இயக்கி வருகிறது. 


DNS (Deep Space Network-DNS) என்னும் ரேடியோ அலைக்கற்றைகளால் ஆன நெட்வொர்க்கை பயன்படுத்தி தொலைதூர பயணங்களை வழி நடத்த உதவுகின்றார்கள். இந்த DNS சிஸ்டம் பூமியில் சரிசம தொலைவுகளில் (120 டிகிரி) மூன்று இடங்களில் மிகப்பெரும் டிஷ் ஆண்டென்னாக்கள் அமைத்து அவற்றின் மூலம் செயற்கைக் கோள்களையும் ராக்கெட்டுகளையும் ட்ராக் செய்து அவற்றிற்கு வழிகாட்டும் சிக்னல்களை தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கும். 

கணேஷ் JPL- லிற்கு தகவல் தெரிவித்து அங்கு சம்பந்தப்பட்ட விஞ்ஞானியைத் தொடர்பு கொண்டார். ஆனால் அங்கிருந்து கெட்ட செய்தியே கிடைத்தது. DNS-சின் துல்லியம் 5 மீட்டர்கள்தான் இருக்கும் என்றார்கள். எனவே மும்முனைத்தாக்குதலில் 15 மீட்டர்கள் வரை பிழை ஏற்படக் கூடும். ஆனால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச பிழை அளவு 1 மீட்டர் மட்டுமே.

அமெரிக்காவின் செயற்கைக் கோள்கள், ஸ்பேஸ் ராக்கெட்டுகள் அனைத்தையும் செலுத்துவதில் இருந்து அவற்றின் ஆயுட்காலம் முடியும் வரை அவற்றை ட்ராக் செய்து கட்டுப்படுத்துவது JPL தான். எனவே JPL-ஐ கலந்துகொள்ளாமலேயே இந்த புதிய தாக்குதல் திட்டமிடப்பட்டிருப்பது பற்றி கேள்விப்பட்ட JPL இயக்குனர் பிரையன் வில்சன் அதிர்ச்சியடைந்தார். அவர் இதை உடனடியாக நாசா இயக்குனர் மோர்கனின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். அவர் வில்சனை அடுத்த நாள் ஜனாதிபதியுடன் நடக்கவிருக்கும் மீட்டிங்கில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

முதல் மீட்டிங் நடந்து 15 நாட்கள் ஆகி இருந்தன. நாசா அலுவலகத்தின் மீட்டிங் அறையிலேயே மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட அனைவரும் வந்திருந்தனர். JPL இயக்குனர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். ஜனாதிபதியும் தனது வருத்தங்களை தெரிவித்துக் கொண்டார்.

”மோர்கன், நீங்கள் JPL – ஐ ஏன் இதில் கலந்து கொள்ளவில்லை?”

”மிஸ்டர் ராபர்ட்சன், இது விண்வெளிப் பயணத் திட்டம் இல்லை. அணு ஆயுத தாக்குதல் சம்பந்தப்பட்டது, அது லாஸ் அலமாஸ் ஆய்வகம் தான் செய்ய முடியும். அதுனாலதான் அவங்ககிட்ட பொறுப்பை கொடுத்தோம். அவங்களுக்கு JPL –லின் உதவி தேவைப்பட்டால் JPL- செய்ய வேண்டியதுதானே? இதில் பிரச்சனை ஏன்?”

”சரிதான் மோர்கன், ஆனா நீங்க அவங்களையும் ஆரம்பத்துல இருந்தே சேர்த்து கொண்டிருக்கலாமே? அவங்களோட ஆலோசனைகளும் நமக்கு தேவை அல்லவா?”

”நிச்சயமா தேவைதான், JPL எனது கட்டுப்பாட்டில் வருவதால் நான் அவர்களை தேவையான நேரத்தில் சேர்த்துக் கொள்ளலாம்னு இருந்தேன், ஆனா அதற்கிடையில் மிஸ்டர் கணேஷ் அவர்களை தன்னிச்சையாக தொடர்பு கொண்டதால்தான் இவ்வளவு குழப்பமும்...!”

”சரி அதைவிடுங்க. இப்போது JPL -ன் ஒத்துழைப்பு நமக்கு மிகவும் அவசியம். மிஸ்டர் வில்சன், நீங்க லாஸ் அலமாசிற்கு வேண்டியதைச் செய்து கொடுங்கள. நாம மிக மிக அவசரமா இயங்க வேண்டிய சூழல்ல இருக்கோம்”

”ஆனால் JPL –லால் இப்போது எங்களுக்கு உதவ முடியுமான்னு சந்தேகம் தான். ஏனென்றால் எங்களுக்கு தேவையான துல்லியத்தை அவர்களால் வழங்க இயலாது” என்றார் கணேஷ்.

”ஓ.... அப்போ அடுத்த பிரச்சனை ஆரம்பமாகி விட்டதுன்னு சொல்லுங்க. மோர்கன் இதற்கு என்ன செய்ய போகிறீர்கள்?”

”ஜனாதிபதி அவர்களே எங்களிடம் வேறு ஒரு புது நேவிகேசன் சிஸ்டம்  ஆராய்ச்சியில் உள்ளது. JPL-ம் இந்தியாவின் இஸ்ரோ (Indian Space Research Organization – ISRO) வும் இணைந்து எக்ஸ்ரே நேவிகேசன் (XNAV) என்னும் திட்டத்தை டெவலப் செய்திருக்கிறோம். அது தொலைதூரத்தில் இருக்கும் பல்சார் எனப்படும் நட்சத்திரங்களில் (millisecond pulsar) இருந்து வரும் எக்ஸ்-ரே கதிர்களை பயனபடுத்தி ஸ்பேசில் ஒரு பொருளின் நேரத்தையும் பொசிசனையும், வேகத்தையும் மிக மிக துல்லியமாய் கணக்கிட உதவும். அதை வைத்து பரிசோதனை முயற்சியாக நமது பெரும்பாலான செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ட்ராக் செய்திருக்கிறோம். அதை இந்த திட்டத்திற்கு முயற்சி செய்யலாம்”

”வெரிகுட் மோர்கன், கணேஷ் நீங்க என்ன சொல்றீங்க?”

”சார். இது ரொம்ப நம்பிக்கை தருது. நிச்சயமா எங்களுக்கு உதவியா இருக்கும்”

”மோர்கன், இது சம்பந்தமா வேறு ஏதாவது அப்டேட்ஸ் இருக்கா?

"ஆமா, ரொம்ப முக்கியமான தகவல் ஒண்ணு இருக்கு. ஸ்பேஸ்கார்ட் சிஸ்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஆட்டோகொயரிக்கு இன்று காலை சீனா பதில் அனுப்பி இருக்கு"

”அவங்க என்ன சொல்றாங்க?”

”அந்தக் கல் பூமியில வந்து மோதாதுன்னு சொல்றாங்க”

”என்னது மோதாதா....அது எப்படி? இ.எஸ்.ஏ, இஸ்ரோ எல்லாரும் நம்ம கணிப்பு மாதிரிதான் கணிச்சிருக்காங்க, சீனா மட்டும் வித்தியாசமா சொல்றாங்களே?”

”ஆமா, அந்தக் கல் செவ்வாய் அருகே வரும் போது செவ்வாயோட ஈர்ப்புவிசைனால செவ்வாயோட சுற்றுப்பாதைக்குள்ள இழுக்கப்பட்டு விடும்னு சொல்றாங்க”

இதைக் கேட்டதும் அனைவரும் அதிர்ந்தனர்.

(தொடரும்...)


பின்குறிப்பு: தொடரில் வரும் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் உண்மையில் ஆராய்ச்சியில் இருப்பவையே. கீழே லிங் கொடுத்திருக்கிறேன். கூகிளில் தேடினால் மேலதிக விபரங்கள் கிடைக்கும்.


1. லினியர் (LINEAR- Lincoln Near-Earth Asteroid Research)
2.  வாசிமிர் (VASIMR) ராக்கெட் எஞ்சின்
3. ஸ்பேஸ்கார்ட் (Spaceguard)
4. தேசிய ஏவுகணை பாதுகாப்பு திட்டம் (National Missile Defense Shield - NMDS)
5. AMMOS (Advanced Multi-Mission Operations System – AMMOS)
6. DNS (Deep Space Network - DNS)
7. எக்ஸ்ரே நேவிகேசன் (X-Ray Pulsar Navigation - XNAV)

35 comments:

M.R said...

அரிய விசயங்கள் அறிந்து கொண்டேன் நண்பரே உங்களால் .

பகிர்வுக்கு நன்றி .

வித்தியாசமான உபயோகமான தொடர்

t.m,indli voted

Madhavan Srinivasagopalan said...

படிச்சிட்டு வரேன்.. வெயிட் ப்ளீஸ்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஜயகாந்த் எந்த பார்ட்டுல வருவாரு?

Madhavan Srinivasagopalan said...

// இதைக் கேட்டதும் அனைவரும் அதிர்ந்தனர். //

இதுக்கு மகிழ்ச்சி அல்லவா அடைய வேண்டும்..
-------------------

ஆசிரியருக்கு நன்றிகள். நல்ல தகவல்கள். நல்ல கற்பனை.
உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said...

//விஜயகாந்த் எந்த பார்ட்டுல வருவாரு?//

வணக்கம் போட்டதுக்கப்புறம் தியேட்டர சுத்தம் செய்ய வருவாரு..

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விஜயகாந்த் எந்த பார்ட்டுல வருவாரு?//


எலேய் காலையிலேயே அருவாளை தூக்க வச்சிராத....

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா வித்தியாசமா இருக்கு, டி ராஜேந்தரும் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது ஹி ஹி....

Mohamed Faaique said...

பூமியில் வந்து மோதும் வரை, அந்தக் கல் அதே அளவில் இருக்குமா??? உராய்வின் மூலம் சிறிய துண்டுகளாக சிதறி விடாதா??? பொதுவாக பூமியை நோக்கி வரும் எரி கற்கள் அப்படித்தான் அழிந்து போவதாக படித்திருக்கிறேன்.

Vinodhini said...

Mohamed Faaique said...
பூமியில் வந்து மோதும் வரை, அந்தக் கல் அதே அளவில் இருக்குமா??? உராய்வின் மூலம் சிறிய துண்டுகளாக சிதறி விடாதா??? பொதுவாக பூமியை நோக்கி வரும் எரி கற்கள் அப்படித்தான் அழிந்து போவதாக படித்திருக்கிறேன்.//

எனக்கு வந்த சந்தேகத்தை நீங்க கேட்டுடிங்க..

சார் பதில் ப்ளீஸ்..

Mohamed Faaique said...

///விஜயகாந்த் எந்த பார்ட்டுல வருவாரு?///

பூமியை காப்பாத்தினதும் இந்த சம்பவத்தை படமா எடுப்பாங்க. அதுல வருவாரு.. மொத்த technical வேலைகளையும் விண்டோஸ் மீடியா பிளேயர்'லையே control பண்ணி அமெரிக்கர்களையே வாய் பிளக்க வைப்பாரு..

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

நல்ல fiction கதை அண்ணே போகப்போக சுவாரசியமும் கூடுது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@ Mohamed Faaique
@ Vinodhini

கேள்விக்கு நன்றி, நீங்கள் சொல்வது சிறிய கற்களுக்கு மட்டுமே பொருந்தும். பெரிய கற்களும் எரிந்தபடிதான் வரும், ஆனால் முழுதும் எரிந்து முடியாது, அதற்குள் பூமியைத் தொட்டுவிடும். கடந்த காலத்தில் இது போல பெரிய கற்கள் பல விழுந்துள்ளன. டினோசர்கள் அழிந்ததற்குக்கூட இப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் என்று கூறப்படுகிறது.

ஒரு பெரிய கல் விழுந்ததால் ஏற்பட்ட பூமியில் பள்ளத்தைப் பற்றி தெரிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Barringer_Crater

கோமாளி செல்வா said...

கதை ரொம்ப ரொம்ப வேகமா போகுதுனா :)

சில அறிவியல் பெயர்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது!

எஸ்.கே said...

ரொம்ப நல்லாருக்கு! நிஜ உலகின் ஆய்வுகளை அழகாக கதையில கொண்டு வந்துருக்கீங்க!

மொக்கராசா said...

very nice panni....keep it up .

செங்கோவி said...

ஏற்கனவே வந்த தொழில்நுட்பங்களே நமக்குத் தெரிவதில்லை..அண்ணன் இனி வரப்போகும் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு, இப்படி விளையாடுகிறாரே...

செங்கோவி said...

ராதிகா மேடத்தைக் காணோமே பாஸ்?

செங்கோவி said...

கடைசியில் கல்லு செவாய்கிரகத்துக்குப் போகுதுன்னா சந்தோசப்பட வேண்டியது தானே..ஏன் ‘அதிர்ந்தார்கள்?”

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// செங்கோவி said...
கடைசியில் கல்லு செவாய்கிரகத்துக்குப் போகுதுன்னா சந்தோசப்பட வேண்டியது தானே..ஏன் ‘அதிர்ந்தார்கள்?”////

ஏன்னா தங்கள் கணிப்பு தவறா இருக்காதுன்னு அவ்ளோ நம்பிக்கை...

தினேஷ்குமார் said...

கவுண்டரே கதை சூப்பரா போகுது ஆனா எனக்கு ஒரு டவுட்டு ....

இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையா கதையா ...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தினேஷ்குமார் said...
கவுண்டரே கதை சூப்பரா போகுது ஆனா எனக்கு ஒரு டவுட்டு ....

இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையா கதையா ...?//////

சம்பவங்கள் கற்பனைதான்.. ஆனால் இதுபோல் நடக்க சாத்தியங்கள் இல்லாமல் இல்லை...!

வெளங்காதவன் said...

அய்யயோ பன்னி....

நான் அன்னிக்கே சொன்னேன்ல?

15 நாளா எனக்கு ஒரு கால கூடப் பண்ணாம இருந்திருக்கான் அந்த கணேசு....

எப்புடியும் என்கிட்டத்தானே வரணும் பாத்துக்கிறேன்....

#சூப்பர் ப.கு.

வெளங்காதவன் said...

யோவ் செவ்வாய்ல மோதினா...

டன்ன்டனக்கா..........

எஸ்.கே said...

இந்தக் கதை எதிர்காலத்தில் நடப்பது போலிருந்ததால் செவ்வாயிலும் மனிதர்கள் வாழ்வார்கள் அதனால்தான் அதிர்ந்தார்கள் என நினைத்தேன்!

வெளங்காதவன் said...

இன்னும் எத்தனை பாகம் இருக்குயா?

#ஆகவே மீண்டும் சொல்கிறேன்.. என்னுடைய ப்ரொபைல்லை மீண்டும்..மீண்டும் படித்து மண்டையில் நினைவிருத்திக்கொள்ளவும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// எஸ்.கே said...
இந்தக் கதை எதிர்காலத்தில் நடப்பது போலிருந்ததால் செவ்வாயிலும் மனிதர்கள் வாழ்வார்கள் அதனால்தான் அதிர்ந்தார்கள் என நினைத்தேன்!/////

இல்லை எஸ்கே, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜன்சிகள் அனைத்தும் மோதும்னு சொல்றப்போ சீனா மட்டும் இப்படி சொல்றதாலதான் அந்த அதிர்ச்சி! கணிப்புகள் இவ்ளோ தூரம் மாற்றமாக இருக்க வாய்ப்பில்லை அல்லவா?

K.s.s.Rajh said...

ஆமா, அந்தக் கல் செவ்வாய் அருகே வரும் போது செவ்வாயோட ஈர்ப்புவிசைனால செவ்வாயோட சுற்றுப்பாதைக்குள்ள இழுக்கப்பட்டு விடும்னு சொல்றாங்க”

இதைக் கேட்டதும் அனைவரும் அதிர்ந்தனர்.////

நாங்களும் தான் அதிர்ந்தோம்......ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கு பாஸ்....அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்...

Lakshmi said...

தொடர் மிக சுவாரசியமா போயிகிட்டு இருக்கு இங்க்லீஷ் படம் பார்ப்பதுபோல

வைகை said...

இந்த ராக்கெட்டுக்கு திரி நீளமா இருக்குமா? குட்டையா இருக்குமா? ஆமா..ஊதுபத்தி வாங்கியாச்சா? :))

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விஜயகாந்த் எந்த பார்ட்டுல வருவாரு?//

சென்டர் பார்ட்ல வருவாரு :))

RAMVI said...

அருமையான அறிவியல் தகவல்களுடன் கதை அழகாக போகிறது.தகவல்களை பார்க்கையில் உங்க உழைப்பை புரிந்து கொள்ள முடிகிறது.வாழ்த்துக்கள்.
நன்றி பகிர்வுக்கு.

ரெவெரி said...

நல்லா போயிட்டிருக்கு...
அதிர்ச்சியோட நிப்பாட்டியிருக்கீங்க...
விளக்கம்...லிங்க்...அருமை.

குறைன்னு சொல்லனும்னா அது எங்க கிட்ட தான்... "என்னது மோதாதா...." ன்னு வாசிக்கறப்ப உங்க காமடி சாயல் (பெல்) தெரியாம ஒட்டிக்குது...

தொடர்கிறோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மிக்க நன்றி நண்பர்களே....!

மாய உலகம் said...

அறிவியல் தகவல்களை கதை வழியா சொல்லி வர்றீங்க ... அசத்தல நண்பா

தமிழ்வாசி - Prakash said...

அண்ணே.. இன்னைக்கு தான் உங்க கதை பக்கம் வந்தேன்... செம கதைன்னே